Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் 2000 பேருக்கான ஆளணிப் பற்றாக்குறை – த.சத்தியமூர்த்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4.jpg

வடக்கு மாகாணத்தில் சுமார் 2000 பேருக்கான ஆளணிப் பற்றாக்குறை உள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளில் மொத்தமாக 8000 பேர் அனுமதிக்கப்பட்ட ஆளணியாக இருந்தாலும் சுமார் 2000 பேருக்கான ஆளணிப் பற்றாக்குறை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது. அதில் குறிப்பாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சுகாதார உதவியாளர்களாக பணியாற்றுகின்றார்கள். அதேபோல தாதியர்கள், மருத்துவ மாதுக்கள் என பல்வேறுபட்ட நிலைகளிலும் ஆளணிப் பற்றாக்குறை நிலவுகின்றது. தற்போதுள்ள நிலையில் புதிதாக பணியாளர்களை உள்வாங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையால் எதிர்வரும் காலங்களில் சுகாதார அமைச்சின் ஊடாக இந்த நியமனங்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/261417

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கில் இருந்து அரசு உடனடியாக நியமனத்தை அரசு கொடுத்து விடுமே!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nunavilan said:

தெற்கில் இருந்து அரசு உடனடியாக நியமனத்தை அரசு கொடுத்து விடுமே!!!

ஆமாம் மொழி தெரியாததால் மருத்துவமனைக்கு வார்ட்டிற்கு ஒரு தமிழ் தெரிந்தவரையாவது பணிக்கு எடுங்கப்பா! 

ஆனாலும் சிங்கள தாதிகள் நோயாளிகளோடு அன்பாக ஆதரவாக இருக்கிறார்கள்! தமிழ் தாதிகள் சிலர் மிக மோசமாக கொச்சையாக(ஆபாசமாக) பேசி நோயாளர்கள், நிறைமாத கர்ப்பிணிகளை நோகடிக்கிறார்கள்.(யாழ் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவிற்கு சென்று வந்த பெண்களை விசாரித்தால் உண்மை புரியும்)

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் ஒரு தாதியர் பயிற்சிக் கல்லூரி இருக்கிறது. வடக்கு கிழக்கில் இருப்போர், கண்டி, கொழும்பு பகுதிகளில் இருக்கும் தாதியர் பயிற்சிக் கல்லூரிகளுக்குச் செல்லவும் தடையில்லை. ஆனால், தாதியரை உருவாக்கும் பைப்லைன் வடக்கு கிழக்கில் க.பொ.த உயர் தரத்தோடு அடைபட்டு விட்டதென நினைக்கிறேன். க.பொ.த உயிரியலில் பல்கலை செல்லாத 95% மாணவர்களுக்கு இந்த தாதிய உத்தியோகப் பைப்லைனை எப்படித் திறப்பதென யோசிக்க வேண்டும்.  

இன்னொரு திரியில், கனடாவில் என்ன துறைக்கு ஆட்கள் அதிகம் தேவையென்று பேசிக் கொண்டிருக்கும் போது இது மிகவும் அவசியமான திரியாகத் தெரிந்தது. நன்றி ஏராளன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

அண்ணை இப்போது ஊதியம் அதிகம் என்பதால் தாதியத் தொழிலுக்கு ஓரளவு பெண்கள் செல்கிறார்கள். முன்பு திருமணம் பேசும்போது தாதியத் தொழிலில் உள்ள பெண்களை வேண்டாம் என்கிற மனநிலையில் பலர் இருந்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

அண்ணை இப்போது ஊதியம் அதிகம் என்பதால் தாதியத் தொழிலுக்கு ஓரளவு பெண்கள் செல்கிறார்கள். முன்பு திருமணம் பேசும்போது தாதியத் தொழிலில் உள்ள பெண்களை வேண்டாம் என்கிற மனநிலையில் பலர் இருந்துள்ளனர்.

ஓம், இது நல்ல மாற்றம்.

ஆனால், இலங்கையில் தாதி உத்தியோகம் எப்போதும் நல்ல  ஊதியம் தரும் ஒன்றாகத் தான் இருந்திருக்கிறது என நினைக்கிறேன். வேலை கஷ்டம், ஆனால் வேலை வாய்ப்புகள் எப்பவும் இருக்கும். அத்தோடு இலங்கையில் தாதிப் பயிற்சி பெற்றவர்களை பாகிஸ்தான், கென்யா, பொற்ஸ்வானா, மொசாம்பிக் போன்ற நாடுகளில் விரும்பி வேலை வழங்கும் போக்கும் இருந்திருக்கிறது. ஏனெனில், இலங்கையில் எல்லா தாதிப் பயிற்சிக் கல்லூரிகளிலும் வழங்கப் படும் பயிற்சி ஒரே மாதிரியான, தரமான பயிற்சி. இதை இந்தியா போன்ற நாடுகளில் பெற முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ஏராளன் said:

ஆமாம் மொழி தெரியாததால் மருத்துவமனைக்கு வார்ட்டிற்கு ஒரு தமிழ் தெரிந்தவரையாவது பணிக்கு எடுங்கப்பா! 

ஆனாலும் சிங்கள தாதிகள் நோயாளிகளோடு அன்பாக ஆதரவாக இருக்கிறார்கள்! தமிழ் தாதிகள் சிலர் மிக மோசமாக கொச்சையாக(ஆபாசமாக) பேசி நோயாளர்கள், நிறைமாத கர்ப்பிணிகளை நோகடிக்கிறார்கள்.(யாழ் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவிற்கு சென்று வந்த பெண்களை விசாரித்தால் உண்மை புரியும்)

பொதுவாக சிங்கள தாதிகள் அப்படி எனில் நல்லது.
ஆனால் சிங்கள தாதிகளை  சுமே வறுத்தெடுத்தது நினைவில் உண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nunavilan said:

பொதுவாக சிங்கள தாதிகள் அப்படி எனில் நல்லது.
ஆனால் சிங்கள தாதிகளை  சுமே வறுத்தெடுத்தது நினைவில் உண்டு.

ஆனாலும் பலரிடம் பேசும்போது அவர்கள் கூறிய அபிப்பிராயத்தையே எழுதினேன்.
சிங்கள தாதியர் தொடர்ச்சியாக விடுமுறை எடுக்காது(ஓரிரு மாதங்கள்) பணிபுரிவதால் அழுத்தங்கள் இருக்கலாம் தானே? ஊரோடு இருப்போர் வீடு வந்து செல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, nunavilan said:

பொதுவாக சிங்கள தாதிகள் அப்படி எனில் நல்லது.
ஆனால் சிங்கள தாதிகளை  சுமே வறுத்தெடுத்தது நினைவில் உண்டு.

சுமே சிங்கள தாதியைக் கண்டவுடன் ஒரு உள் உறுத்தல் வந்து அவரது அனுபவமும் அப்படியே அமைந்திருக்கலாம்🤐, அல்லது சுமேயின் துரதிர்ஷடமாகவும் இருக்கலாம்.

ஆனால், வவுனியா தள மருத்துவமனையில் என் அனுபவமும், தந்தையோடு அவசர சிகிச்சைப் பிரிவில் நின்ற போது ஏராளன் சொல்வது போலத் தான் இருந்தது. சிங்கள மருத்துவர், ஒரு பெண்,  தலைமை மருத்துவராக இருந்தார். அவருடன் எந்தக் கேள்வியையும் கேட்டு உரையாடக் கூடியதாக இருந்தது. அவரில்லாத நாட்களில் இருந்த தமிழ் பெண் மருத்துவர் "நீ என்ன டொக்ரரா?" என்ற தொனியில் பதில் தந்து கொண்டிருந்தார். இறுதியில், அமெரிக்காவில் என் தொழிலைச் சொன்ன பின்னர் தான் தமிழ் டாக்டர் மரியாதையாகப் பேசவே ஆரம்பித்தார். சிங்களப் பெண் மருத்துவருக்கு நான் இந்த அறிமுகங்கள் எதுவும் தராமலே எனக்கு மரியாதையான பதில்கள் கிடைத்தன. பொதுவாகவே, எங்கள் தமிழ் ஆட்களிடம் இருக்கும் தகுதி பற்றிய பெருமையுணர்வு சிங்களவர்களிடம் குறைவென நான் நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

ஆனால் சிங்கள தாதிகளை  சுமே வறுத்தெடுத்தது நினைவில் உண்டு.

சுமேரியர் தனது கட்டுரை திரியில் தனக்கு கிடைத்த அனுபவம் தான் மற்றவர்களுக்கும் என்று இல்லை என்று  தெரிவித்து இருக்கிறார்.

1 hour ago, Justin said:

எங்கள் தமிழ் ஆட்களிடம் இருக்கும் தகுதி பற்றிய பெருமையுணர்வு

தலைக்கனம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

ஆனாலும் பலரிடம் பேசும்போது அவர்கள் கூறிய அபிப்பிராயத்தையே எழுதினேன்.
சிங்கள தாதியர் தொடர்ச்சியாக விடுமுறை எடுக்காது(ஓரிரு மாதங்கள்) பணிபுரிவதால் அழுத்தங்கள் இருக்கலாம் தானே? ஊரோடு இருப்போர் வீடு வந்து செல்வார்கள்.

2 hours ago, Justin said:

சுமே சிங்கள தாதியைக் கண்டவுடன் ஒரு உள் உறுத்தல் வந்து அவரது அனுபவமும் அப்படியே அமைந்திருக்கலாம்🤐, அல்லது சுமேயின் துரதிர்ஷடமாகவும் இருக்கலாம்.

ஆனால், வவுனியா தள மருத்துவமனையில் என் அனுபவமும், தந்தையோடு அவசர சிகிச்சைப் பிரிவில் நின்ற போது ஏராளன் சொல்வது போலத் தான் இருந்தது. சிங்கள மருத்துவர், ஒரு பெண்,  தலைமை மருத்துவராக இருந்தார். அவருடன் எந்தக் கேள்வியையும் கேட்டு உரையாடக் கூடியதாக இருந்தது. அவரில்லாத நாட்களில் இருந்த தமிழ் பெண் மருத்துவர் "நீ என்ன டொக்ரரா?" என்ற தொனியில் பதில் தந்து கொண்டிருந்தார். இறுதியில், அமெரிக்காவில் என் தொழிலைச் சொன்ன பின்னர் தான் தமிழ் டாக்டர் மரியாதையாகப் பேசவே ஆரம்பித்தார். சிங்களப் பெண் மருத்துவருக்கு நான் இந்த அறிமுகங்கள் எதுவும் தராமலே எனக்கு மரியாதையான பதில்கள் கிடைத்தன. பொதுவாகவே, எங்கள் தமிழ் ஆட்களிடம் இருக்கும் தகுதி பற்றிய பெருமையுணர்வு சிங்களவர்களிடம் குறைவென நான் நினைக்கிறேன். 

32 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சுமேரியர் தனது கட்டுரை திரியில் தனக்கு கிடைத்த அனுபவம் தான் மற்றவர்களுக்கும் என்று இல்லை என்று  தெரிவித்து இருக்கிறார்.

தலைக்கனம்

ஆளாளுக்கு அனுபவம் மாறுபடலாம். அதற்காக ஆகா ஓகோ என புகழ தேவையில்லை. தமிழ் தெரியாமல் எப்படி தமிழ் இடத்தில் வேலை செய்ய முடியும்.இதனை  சுமே தெரிவித்து இருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தெரியாமல் எப்படி தமிழ் இடத்தில் வேலை செய்ய முடியும்.]

பிரான்ஸ் மொழி தெரியாமல் பிரான்ஸ் நாட்டில், சுவிச்லண்ட் மொழி தெரியாமல் சுவிச்லண்டில், நோர்வே மொழி தெரியாமல் நோர்வே நாட்டில் இப்படி தமிழர்கள் வேலை செய்யவில்லையா 🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

ஆளாளுக்கு அனுபவம் மாறுபடலாம். அதற்காக ஆகா ஓகோ என புகழ தேவையில்லை. தமிழ் தெரியாமல் எப்படி தமிழ் இடத்தில் வேலை செய்ய முடியும்.இதனை  சுமே தெரிவித்து இருந்தார்.

மொழியை கற்றுக்கொள்ள முயல்கிறார்கள், எழுதுவதில்லை.

அவர்களின் நோயாளர்களுடனான அணுகுமுறையையும் எமது தாதியர்களின் அணுகுமுறையையுமே குறிப்பிட்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலவச மருத்துவ சேவையை குறைந்த கட்டண சேவையாக மாற்றவேண்டும். இதன் மூலமாகவாவது சில மருத்துவர்கள், தாதியர்களின் அணுகுமுறை மாறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இலவச மருத்துவ சேவையை குறைந்த கட்டண சேவையாக மாற்றவேண்டும். இதன் மூலமாகவாவது சில மருத்துவர்கள், தாதியர்களின் அணுகுமுறை மாறலாம்.

ஆகா ஐஎம் எவ் பேசிக் கொண்டது லேசாக ஏராளன் காதிலும் விழுந்திருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் சிங்கள தாதிமார் பலர் பண்பாக உரையாடுவர்.6 மாதத்துக்கு முன் களிநொச்சியில் நான் அனுபவத்தது.என்ன செய்வது மாற்றான் தோட்டத்து மல்லி மணத்தாலும் ஒத்துக்கொள்ள வேண்டும் தானே.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

இலவச மருத்துவ சேவையை குறைந்த கட்டண சேவையாக மாற்றவேண்டும்.

ஐ எம் எவ்வின் பழம் நழுவி பாலில் விழுந்தது ☹️

பல தமிழ்மருத்துவர்கள் தாதியர்களின் அணுகுமுறைகளில் பழக்க வழக்கங்களில் மாற்றம் வேண்டும்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Justin said:

வடக்கில் ஒரு தாதியர் பயிற்சிக் கல்லூரி இருக்கிறது. வடக்கு கிழக்கில் இருப்போர், கண்டி, கொழும்பு பகுதிகளில் இருக்கும் தாதியர் பயிற்சிக் கல்லூரிகளுக்குச் செல்லவும் தடையில்லை. ஆனால், தாதியரை உருவாக்கும் பைப்லைன் வடக்கு கிழக்கில் க.பொ.த உயர் தரத்தோடு அடைபட்டு விட்டதென நினைக்கிறேன். க.பொ.த உயிரியலில் பல்கலை செல்லாத 95% மாணவர்களுக்கு இந்த தாதிய உத்தியோகப் பைப்லைனை எப்படித் திறப்பதென யோசிக்க வேண்டும்.  

இன்னொரு திரியில், கனடாவில் என்ன துறைக்கு ஆட்கள் அதிகம் தேவையென்று பேசிக் கொண்டிருக்கும் போது இது மிகவும் அவசியமான திரியாகத் தெரிந்தது. நன்றி ஏராளன்!

ஆனால் நான் அறிந்தவரை ஜஸ்டின், இங்கு இந்திய மளையாளி மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்களதான் அதிகமாக தாதியார் தொழிலில் உள்ளார்கள். அதிலும் பிலிபின்ஸ் திறம். இலங்கை பெண்களை காண்பது மிக அபூர்வம். 

எனக்கு இங்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது. சில வருடங்களுக்கு முன்பு எனக்கு கீழ்முதுகு வலி, கால்களுக்கு இரத்த ஓட்டம் குறைவாக இருந்தது. மரத்து  போனால் போல ஒரு உணர்வு. நான் இங்கு ஒரு தனியார் பொலி கிளினிக்க்கு சென்றேன். வைத்தியர் என்னை பிசியோதெரபிஸ்ட் இடம் அனுப்பினார். 

நான் இங்கு சென்றபோது ஒரு மிக அழகிய சிவந்த இளம் பெண் இருந்தார். ஆங்கிலத்தில் கதைத்தார். என் உடைகளை களந்த பின்பு கீழ் இடுப்பை பிடித்து எனக்கு மசாஜ் செய்ய ஆரம்பித்தார். எனக்கு கூச்சமாக இருந்தது. ஆனால் அவருடைய கைவேலை அந்த மாதிரி. ஜெல் போடுவதும், நரம்புகளை அழுத்துவதும், இதமாக‌ ஒத்தடம் கொடுப்பதும் ஆக அந்த மாதிரி professional touch. இரண்டு முறை சென்றேன். guess what..? முடிவில் happy ending... பூரண குணமடைந்து விட்டேன். பிறகு இவரது பெயரை கேட்டபோது எனக்கு வியப்பாக இருந்தது இவர் யாழ்ப்பண பெண். இந்தியாவில் கேரளத்தில் போய் இந்த பிசியோதெரபபி படித்து விட்டு  இங்கு வந்து வேலை செய்கின்றார். இவர்ககுடைய பெற்றோர்களுடன் இங்கு இருக்கின்றார்.

மிக அபூர்வமாக நான் சந்தித்த இலங்கை பெண். பல தமிழ் பெண்கள் விரும்பி எடுக்காத‌ இந்த தொழிலை  இவர் செய்கிறார்.  இவ்வளவு உழைக்கக்கூடிய இந்த தொழிலுக்கு தமிழ் பெண்கல் வருவது குறைவு. இன்னும் தொழிலை வைத்து மக்களை எடைபோடுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ் தெரியாமல் எப்படி தமிழ் இடத்தில் வேலை செய்ய முடியும்.]

பிரான்ஸ் மொழி தெரியாமல் பிரான்ஸ் நாட்டில், சுவிச்லண்ட் மொழி தெரியாமல் சுவிச்லண்டில், நோர்வே மொழி தெரியாமல் நோர்வே நாட்டில் இப்படி தமிழர்கள் வேலை செய்யவில்லையா 🤔

தாதியாகவா? உண்மையை சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

தாதியாகவா? உண்மையை சொல்லுங்கள்.

தமிழ் தெரியாமல் எப்படி தமிழ் இடத்தில் வேலை செய்ய முடியும் என்ற உங்கள் பிரச்சனைக்கு விளக்கம் தான் பிரான்ஸ் மொழி தெரியாமல் பிரான்ஸ் நாட்டில், சுவிச்லண்ட் மொழி தெரியாமல் சுவிச்லண்டில், நோர்வே மொழி தெரியாமல் நோர்வே நாட்டில் இப்படி தமிழர்கள் வேலை செய்யவில்லையா

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ் தெரியாமல் எப்படி தமிழ் இடத்தில் வேலை செய்ய முடியும் என்ற உங்கள் பிரச்சனைக்கு விளக்கம் தான் பிரான்ஸ் மொழி தெரியாமல் பிரான்ஸ் நாட்டில், சுவிச்லண்ட் மொழி தெரியாமல் சுவிச்லண்டில், நோர்வே மொழி தெரியாமல் நோர்வே நாட்டில் இப்படி தமிழர்கள் வேலை செய்யவில்லையா

தமிழர்கள்  மொழி தெரியாமல் தாதியாக மேற்படி நாடுகளில் வேலை செய்கிறார்களா என்பது எனது கேள்வி? 
விடை கிடைக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2023 at 22:13, nunavilan said:

தமிழ் தெரியாமல் எப்படி தமிழ் இடத்தில் வேலை செய்ய முடியும்.

இது தான் உங்கள் கேள்வி ,கோபமாக இருந்தது.  இப்போது கேள்வி மாறிவிட்டதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.