Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 நாணயம் 

சில வருடங்களுக்கு முன் நண்பரொருவர் மூலம் அறிமுகமான  சுந்தரம் பத்தர் அயல் ஊரில் வசிப்பவர் . அந்த குடும்பத்தில் இருந்த மாப்பிள்ளைக்கு   பெண் பார்க்க ஆரம்பித்த பொது ..அயல் ஊரில்  பெண் கிடைக்கவே ...திருமணம் நிச்சயமாகி  கலியாணத்துக்கு நாள் குறித்தார்கள்.  மாப்பிள்ளை   வீடடார் நகைகள் செய்வது சுந்தரம் பத்தரிடம்.   பெண் வீட்ட்ருக்கும் அறிமுகமாகி அவர்களும் அங்கு ஓடர் கொடுத்தனர்.  திருமணம் இனிதே நடந்தது . வாழ்க்கையும் ஆரம்பமாகியது . காலம் உருண்டோடியது . நாட்டில் ஏற்படட இன அழிப்பின் போது  பல் கஷ்டங்களை தாண்டி .வெளிநாட்டுக்கு அகதியானார்கள்   இந்த மாப்பிள்ளையும்   பெண்ணும். அங்கம் காலங்கள் உருண்டோடின ஆணும்பெண்ணுமாய் இரு குழந்தைகளும் அவர்களுக்கு கிடைத்தனர். மிகுந்த கஷ்ட பட்டு வாழ்கை ஓடியது

.பெண் குழந்தை  வயதுக்கு வந்தாள் .அதைக் குடும்பத்துடன்  கொண்டாட நாள் பார்த்து  ஆயத்தங்களை செய்தார்கள்.  சிறுமிக்கு நகை செய்ய எண்ணி வங்கியில் வைத்திருந்த நகைகளில்  தந்தையின் ஏழு பவுன் சங்கிலியை எடுத்து அழித்து
சங்கிலி காப்பு  செய்ய கனடாவில் உள்ள நகை கடை ஒன்றை அணுகினர். அவரும் நிறுத்து பார்த்து எடை சரிபார்த்தார்.  அவர்களுமொடர் கொடுத்து வாயிலை விட்டு நீங்கி   சில செக்கன்களில் அந்த நகை கடை முதலாளி 
சங்கிலியை உரைத்துப்பார்த்து.  இவர்களை மீண்டும்  கடை பையனை விட்டு அழைத்து. சொன்னர் இது நிறைய ( கலப்பு )கலப்படம் இருக்கிறது .பெறுமதி இல்லை என.  அவர்களுக்கு இடி விழுந்தது போல ஆனது . ஓடரை கான்சல் செய்து  மீண்டும் வருகிறோம் என சென்று விட்ட்னர்.

வீட்டில் அந்த நகை செய்த்த்வரைப்பற்றி  ஒரே அதிர்ச்சி . கிட்ட தடட பதினைந்து மேற்பட்ட் வருடங்கள் இருக்கும். தங்கள் ஏமாந்து விடடோமே என எண்ணி கவலைப்பட்ட்னர். செய்தவரை எங்கே தேடுவது நியாயம் தான் கிடைக்குமா ? 

சில ர்  பேச்சு வழக்கில் சொல்வார்கள். அவர் ஓர் நல்ல மனிதர் , நாணயமானவர் , என்று .அந்த நாணயம் என்பது ..நா நயம்,  சொல் பிறழாமை. அனுபவப்படடவர் சொன்ன கதை. பெயர்கள் யாவும் கற்பனை.

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலம் தான் பதில் சொல்கிறது 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, நிலாமதி said:

சில ர்  பேச்சு வழக்கில் சொல்வார்கள். அவர் ஓர் நல்ல மனிதர் , நாணயமானவர் , என்று .அந்த நாணயம் என்பது ..நா நயம்,  சொல் பிறழாமை. அனுபவப்படடவர் சொன்ன கதை. பெயர்கள் யாவும் கற்பனை.

நாணயம் தொலைந்து ரொம்ப காலமாச்சக்கா.

சொந்தகாரரிடமிருந்து காணிபூமியை பாதுகாக்கவே ரொம்ப கஸ்டமென்கிறார்கள்

பத்தரிடமிருந்து பவுனை எப்படி காப்பது?

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிலாமதி said:

வீட்டில் அந்த நகை செய்த்த்வரைப்பற்றி  ஒரே அதிர்ச்சி . கிட்ட தடட பதினைந்து மேற்பட்ட் வருடங்கள் இருக்கும். தங்கள் ஏமாந்து விடடோமே என எண்ணி கவலைப்பட்ட்னர். செய்தவரை எங்கே தேடுவது நியாயம் தான் கிடைக்குமா ? 

இன்றைய  காலங்கள்-......... சொந்த பந்த , சகோதர பாசமெல்லாம் போலி வாழ்க்கை காலங்கள்.
போலி நகை அலங்கரிப்பு மிக சிறந்தது. தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பினால் உத்தியோகபூர்வ வியாபார நிறுவனங்களை நாடினால் நல்லது.

கதைக்கு நன்றி சகோதரி.

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.