Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனேடிய உயர்ஸ்தானிகரின் யாழ் வருகையும் முக்கிய பிரமுகர்களுடனான விசேட சந்திப்புகளும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய உயர்ஸ்தானிகருடன் சிறீதரன் விசேட சந்திப்பு!

கனேடிய உயர்ஸ்தானிகருடன் சிறீதரன் விசேட சந்திப்பு!

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸூக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று யாழில் இடம்பெற்றது.

இதன்போது, தமிழர்கள் நலன்சார் செயற்பாடுகளிலும், இன அழிப்புக்கான நீதிகோரல் செயன்முறையிலும் கனடா அரசாங்கம் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருவதற்கு தனது நன்றியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியிட்டார்.

இலங்கையில் நடைபெற்றது இன அழிப்புத்தான் என்பதையும் அதற்குரிய நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி கனேடிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக, அப்பிரேரணைக்கு வலுச்சேர்க்கும் வகையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளையினால் நடத்தப்பட்ட நிகழ்வையும் கனேடிய உயர்ஸ்தானிகர் நினைவுகூர்ந்திருந்தார்.

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு, பல்லின சமூகங்கள் வாழும் கனேடிய நாட்டைப் பின்பற்றி இலங்கையில் சமஸ்டியை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ள யதார்த்தப் புறநிலைகள், வடக்கு – கிழக்கின் 80 வீதமான நிலங்கள் வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கடலோர காவல் திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம் என்பவற்றால் தொடர்ச்சியாக பறிக்கப்படுகின்றமை, இன, மத, மொழி ரீதியான ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

போருக்குப் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள 4374.8 ஏக்கர் காணிகள் தொடர்பான விவரமும், 2009 இக்குப் பின்னர் வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து, அவ்விடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 71 விகாரைகள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால், கனேடிய உயர்ஸ்தானிகரிடம் விரிவான அறிக்கையொன்றும் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1339882

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கில் புதிதாக 71 விகாரைகள் அமைக்கப்பட்டமை தொடர்பான விபரங்களை கனேடிய உயர்ஸ்தானிகரிடம் ஒப்படைத்தார் சிறிதரன்

Published By: VISHNU

17 JUL, 2023 | 04:53 PM
image
 

(எம்.நியூட்டன்)

2009க்குப் பின்னர் வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களை அடாத்தாக அபகரித்து, அவ்விடங்களில் புதிதாக  71 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விவரண அறிக்கை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனால், கனேடிய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

IMG-20230717-WA0042.jpg

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸூக்கும், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை (17) பாராளுமன்ற உறுப்பினரின் யாழ்ப்பாண இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

IMG-20230717-WA0041.jpg

இச்சந்திப்பின் ஆரம்பத்தில், ஈழத்தமிழர்கள் நலன்சார் செயற்பாடுகளிலும், இன அழிப்புக்கான நீதிகோரல் செயன்முறையிலும் கனடா அரசாங்கம் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருவதற்கு தனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

மேலும் ஈழத்தமிழரகளின் அரசியல் உரித்துகளை நிலைநாட்டுதல், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வொன்றின் காலத் தேவை, 13வது திருத்தச் சட்டத்துக்கும் சமஸ்டி முறைமைக்கும் இடையிலான நடைமுறை வேறுபாடுகள், 13வது திருத்தச் சட்டத்தை புறந்தள்ளி சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டியதன் நியாயப்பாடுகள், கனடா, அமெரிக்கா, பெல்ஜியம் போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் சமஸ்டி முறைமையை அடிப்படையாகக் கொண்டு அதிலும் குறிப்பாக பல்லின சமூகங்கள் வாழும் கனேடிய நாட்டைப் பின்பற்றி இலங்கையில் சமஸ்டியை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ள யதார்த்தப் புறநிலைகள், 13வது திருத்தச் சட்டம் நடைமுறையில் இருக்கத்தக்கதாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண அரசுக்கு வழங்கப்பட்டிருந்தும் கூட, வடக்கு கிழக்கின் 80வீதமான நிலங்கள் வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கடலோர காவல் திணைக்களம், கனியவளத் திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை என்பவற்றால் தொடர்ச்சியாக பறிக்கப்படுகின்றமை, இன, மத, மொழி ரீதியான வலிந்த ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இவைதவிர இலங்கையில், அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் பெண்களின் அரசியல் வகிபாகம் மிகக்குறைந்தளவில் காணப்படுவதன் காரணம் குறித்தும், அதன் யதார்த்தநிலைப் பின்னணிகள், குடும்ப மற்றும் சமூகச் சூழல் என்வை குறித்தும் கனேடிய உயர்ஸ்தானிகர், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் கேட்டறிந்து கொண்டார்.

அதேவேளை, போருக்குப் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள 4374.8ஏக்கர் காணிகள் தொடர்பான விவரமும், 2009க்குப் பின்னர் வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களை அடாத்தாக அபகரித்து, அவ்விடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 71 விகாரைகள் குறித்த விவரண அறிக்கையும், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனால், கனேடிய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டது.

இதேவேளை இலங்கையில் நடைபெற்றது இன அழிப்புத்தான் என்பதையும் அதற்குரிய நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனபதையும் வலியுறுத்தி கனேடிய பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக, அப்பிரேரணைக்கு வலுச்சேர்க்கும் வகையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளையினால்  நடாத்தப்பட்ட நிகழ்வையும் கனேடிய உயர்ஸ்தானிகர் நினைவுகூர்ந்திருந்தார்.

https://www.virakesari.lk/article/160230

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ் பொதுசன நூலகத்திற்கு விஜயம்

18 JUL, 2023 | 02:31 PM
image
 

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை (18) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார்.

 

29a898f1-367f-444b-9690-3fb042fbe192.jpg

இதன்போது நூலகத்தில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார்.

84ff97c5-4f39-4c28-a26e-7660a7cec1f6.jpg

குறித்த சந்திப்பில் யாழ் பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட சில உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

a8bde615-01aa-4923-9ade-a9bff9fc4cea.jpg

https://www.virakesari.lk/article/160304

  • இணையவன் changed the title to கனேடிய உயர்ஸ்தானிகரின் யாழ் வருகையும் முக்கிய பிரமுகர்களுடனான விசேட சந்திப்புகளும்!
  • கருத்துக்கள உறவுகள்

சிறிதரன் பிரயோசனமான விடயங்கள் பற்றி பேசியிருக்கிறார்.
நல்லது.சந்தோசம்.

இதே மாதிரி சகல தூதுவர்களுக்கும் போய் கதைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

நிச்சயமாக இது சரத் வீரசேகரா, வீரவன்ச, கம்மம்பில போன்ற இந வாதிகளுக்கு எரிச்சலை உருவாக்கி இருக்கும். 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படவேண்டியதன் அவசியத்தை மீளவலியுறுத்தினார் கனேடிய உயர்ஸ்தானிகர் 

28 JUL, 2023 | 08:43 PM
image
 

(நா.தனுஜா)

கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அந்நாட்டுக்கு வழங்கிவரும் மிகையான பங்களிப்பு குறித்து நினைவுகூர்ந்துள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர், இலங்கையில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படவேண்டியதன் அவசியத்தை மீளவலியுறுத்தியுள்ளார்.

கனேடிய தமிழர் பேரவையினால் தொடர்ந்து 15ஆவது ஆண்டாக இவ்வருடம் நடத்தப்படவுள்ள 'கனேடியத் தமிழர் நிதிசேர் நடை' மற்றும் அதனூடாகத் திரட்டப்படும் நிதியின் மூலம் வழங்கப்படவுள்ள உதவி என்பன பற்றித் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு, மரதா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் மேற்குறிப்பிட்டவாறு வலியுறுத்தினார்.

அதன்படி, முதலில் கனேடியத் தமிழர் பேரவையின் செயற்பாடுகள் பற்றிக் கருத்து வெளியிட்ட அவர், அப்பேரவை தமிழ்மக்களின் நலனை முன்னிறுத்தி உண்மையான அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்றுவதாகக் குறிப்பிட்டார்.

மேலும் கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழ்மக்கள் அந்நாட்டின் மேம்பாட்டுக்கு பெருமளவான பங்களிப்பை வழங்கியிருப்பதாகச் சுட்டிக்காட்டிய உயர்ஸ்தானிகர், அதன் நீட்சியாக கனேடிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் தமிழர் இடம்பிடித்திருப்பது குறித்தும் பிரஸ்தாபித்தார்.

அதேவேளை இலங்கையுடன் கனடா மிகநெருக்கமாகப் பணியாற்றிவருவதாகவும், அனைத்து வழிகளிலும் இலங்கை நன்மையடைவதையே தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி கனேடியப்பாராளுமன்றத்தில் தமிழினப்படுகொலை நினைவுநாள் அங்கீகரிக்கப்பட்டிருப்பது பற்றிக் குறிப்பிட்ட எரிக் வோல்ஷ், இலங்கை நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை நோக்கிப் பயணிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அத்தோடு இலங்கையால் அதனைச் செய்யமுடியும் என்றும், ஏனெனில் இலங்கையிடம் பல்வேறு நேர்மறையான கூறுகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்

https://www.virakesari.lk/article/161171

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரை விசாரித்தும் வருகிறார்கள், சிங்களத்தை விசாரித்தும் வருகிறார்கள், என்னதான் நடக்குதிங்கே? பக்கத்து அண்ணாவுக்கு மூக்காலை புகை வரப்போகுது, சும்மா கத்துறதுகள் பைத்தியம் பிடித்து அலையப்போகுதுகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.