Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, ஏராளன் said:

அண்ணை ரஸ்யாவிற்குள் ஊடுருவும் அளவிற்கு எல்லைப் பாதுகாப்பு பலவீனமாக இருந்திருக்கே!

உதெல்லாம் பெரிய விசயமில்லை. ரஷ்யா தனக்கு தேவையானதை பிடிச்சு வைச்சிருக்கு. அதுவே காணும்.செலென்ஸ்கி இப்ப அடிச்சது சின்ன கிராமம் எண்டால் அடுத்தது உக்ரேன்ர பெரிய சிற்றிகள் கவனம் தம்பி... 🤣

  • Replies 565
  • Views 53.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • எல்லாரும் தான் வரி கட்டுகிறார்கள், இதையெல்லாம் சாதனையாகச் சொல்பவர்கள் எங்கள் ஆசியக் குடிகளாக மட்டும் தான் இருப்பரென நினைக்கிறேன்😂. கட்டின வரிக்கேற்ப விழுந்தால் அம்புலன்ஸ், வேலை போனால் சாப்பிடக் க

  • "ஒரு வாரத்தில் கியேவ் விழுந்து விடும்!"  என்று சொன்னது பலித்தது போலவே, "ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகி விடும்" என்பதும் பலிக்க இன்னும் ஒரு நாள் தான் மிச்சமிருக்குது😎!  இப்படி ஊர் உலக நிலவர

  • இதையும் இராசதந்திரம் என்று யாழ் களத்தினர் கூறுவார்களோ,...🤣 "ஒலிம்பிக்" கும் அரசியலும் 😁 👇 Lavrov calls IOC out for hypocrisy in context of Palestinian-Israeli conflict "Once again

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

உதெல்லாம் பெரிய விசயமில்லை. ரஷ்யா தனக்கு தேவையானதை பிடிச்சு வைச்சிருக்கு. அதுவே காணும்.செலென்ஸ்கி இப்ப அடிச்சது சின்ன கிராமம் எண்டால் அடுத்தது உக்ரேன்ர பெரிய சிற்றிகள் கவனம் தம்பி... 🤣

அண்ணை நான் உக்ரேனிய ஆதரவாளனோ ரஸ்யாவிற்கு எதிர்ப்பாளனோ அல்ல. அப்பாவி மக்களின் சாவினை ஆதரிக்காதவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, ஏராளன் said:

அண்ணை நான் உக்ரேனிய ஆதரவாளனோ ரஸ்யாவிற்கு எதிர்ப்பாளனோ அல்ல. அப்பாவி மக்களின் சாவினை ஆதரிக்காதவன்.

நானும் போர் ஆதரவாளன் இல்லை தான்..ஆனால் உக்ரேனுக்கு வந்தால் இரத்தம் மற்ற நாட்டு போர்கள் நடந்து மக்கள் அழிந்தால் தக்காளி சட்னி என்கிறார்கள் பாருங்கோ அங்கதான் நான் முரண்படுகின்றன் தம்பி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

நானும் போர் ஆதரவாளன் இல்லை தான்..ஆனால் உக்ரேனுக்கு வந்தால் இரத்தம் மற்ற நாட்டு போர்கள் நடந்து மக்கள் அழிந்தால் தக்காளி சட்னி என்கிறார்கள் பாருங்கோ அங்கதான் நான் முரண்படுகின்றன் தம்பி...

புரிந்துகொள்கிறேன் அண்ணை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, விசுகு said:

நாடே அப்படி தான் இருக்கு. 

ம்ம் 

எப்படி இருந்த ரசியா??

ஞாபகம் வருதே....ஞாபகம் வருதே🤣
விசுகர் ஞாபகம் வருதே😂
ஏறோபிளொட்ல ஏறி வந்த ஞாபகம் வருதே😄
மொஸ்கோவில தடக்குப்பட்ட ஞாபகம் வருதே😁
படை படையாய் ஏறோபிளொட்ல ஏறிவந்து..😅
ஜேர்மனிக்கு வந்த ஞாபகம் வருதே😀
விசுகர் ஞாபகம் வருதே😊
நன்றி மறந்ததேனோ விசுகர்?😒

Following Detention Of Aircraft, Russia's Aeroflot Suspends All Flights To Sri  Lanka - News18

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

சும்மா ஏத்தவில்லை. காசு கொடுத்து ரிக்கேற் எடுத்து வந்தேன். அதனால் நன்றி இல்லை. ஆனால் ஜேர்மனிக்கு நன்றி உண்டு. 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, விசுகு said:

சும்மா ஏத்தவில்லை. காசு கொடுத்து ரிக்கேற் எடுத்து வந்தேன். அதனால் நன்றி இல்லை. ஆனால் ஜேர்மனிக்கு நன்றி உண்டு

ஜேர்மனிக்கும் நான் நன்றியுள்ளவன்.கடமைப்பட்டவன்.  👈

நான் வேலை செய்கின்றேன் அதற்கு வரி கட்டுகின்றேன்.ஓய்வூதியத்திற்கு பணம் கட்டுகின்றேன். மருத்துவ காப்புறுதி கட்டுகின்றேன். இந்த நாட்டிலேயே பொருட்கள் வாங்குகின்றேன்.அதற்கு வரி கட்டுகின்றேன். கார் ஓடுகின்றேன். அதற்கு வரி கட்டுகின்றேன். வீதியில் கார் ஓடுகின்றேன் அதற்கும் வரி கட்டுகின்றேன்.பெற்றோல் அடிக்கின்றேன் அதற்கும் வரி கட்டுகின்றேன். வீடு வைத்திருக்கின்றேன். அதற்கும் வரி கட்டுகின்றேன்.மின்சாரம்,காஸ் எல்லாவற்றுக்கும் கட்டணமும் வரியும் கட்டுகின்றேன். தண்ணீருக்கு கட்டணம் செலுத்துகின்றேன்.அது வெளியில் போகவும் கட்டணமும் வரியும் சேர்த்து கட்டுகின்றேன். இரண்டு வேலை செய்கின்றேன். இரண்டாவது வேலைக்கு இரட்டிப்பு வரி கட்டுகின்றேன். கடைக்கு சாப்பிட போனால் வரி கட்டுகின்றேன்.
ஆக...
மொத்தத்தில் எல்லாம் என்பணம்💪. அடைக்கலத்தை தவிர....

அது சரி விசுகர்! கருத்து சுதந்திரம் உள்ள நாடுகளில் தானே வாழ்கின்றோம்.இந்த நாட்டவர்களை போல் எமக்கும் கருத்து சுதந்திரம் உண்டு.இந்த நாடுகளில் பிறந்து வளர்ந்தவர்களை போல்....

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் மட்டுமல்ல நாங்களும் தான்  நீங்கள் மேலே சொன்ன அனைத்தையும் செய்கிறோம்   இவற்றுக்கு எல்லாம் வாய்ப்புகள் சந்தர்பங்களை  வழங்கும் ஜேர்மனிக்கு வாழ் நாள் பூரவும். என்றென்றும் நன்றிகள் பல கோடி 🙏😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, Kandiah57 said:

நீங்கள் மட்டுமல்ல நாங்களும் தான்  நீங்கள் மேலே சொன்ன அனைத்தையும் செய்கிறோம்   இவற்றுக்கு எல்லாம் வாய்ப்புகள் சந்தர்பங்களை  வழங்கும் ஜேர்மனிக்கு வாழ் நாள் பூரவும். என்றென்றும் நன்றிகள் பல கோடி 🙏😂

நன்றியுணர்ச்சி வேறு. இவர்கள் செய்யும் போர் நடவடிக்கைகள் அனைத்திற்கும் கோயில் மாடு போல் தலையாட்டுவது வேறு. சுத்த ஜேர்மனியர்களும் போர் நடவடிக்களுக்கு எதிராகத்தான் நிற்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சும்மா ஏத்தவில்லை. காசு கொடுத்து ரிக்கேற் எடுத்து வந்தேன்.

இது பற்றி ஐரோப்ப அகதி விடுதியில் வசித்த ஒரு பெரியவர் தெரிவித்ததை நான் ஏற்கெவே இங்கே எழுதி இருந்தேன். எங்களை எல்லாம் இலங்கையில் இருந்து அழைத்து வந்து மேற்குலகநாட்டில் உயர்ந்த வாழ்க்கை அமைத்து தந்தது ரஷ்யாவின் விமானம்.  நாம் ரஷ்யாவிற்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று ஈழதமிழ் தோழர்கள் உரை நிகழ்தினார்களாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றியுணர்சியாளர்கள் அரசியல் கதைக்க வெளிக்கிட்டால் முதலில் சிங்கள அரசிற்குத்தான் நன்றி செலுத்த வேண்டும்.ஓசியில படிப்பு தந்து ஓசியில பிஸ்கட்டும் தந்து...ஓசியில அரிசி பருப்பும் தந்து....ஒசியில கூப்பன்மாவும் தந்து படிக்க வைச்சு ஆளாக்கி விட்ட சிங்கள மாத்தயாக்களுக்குத்தான் நன்றி சொல்லணும். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

ஜேர்மனிக்கும் நான் நன்றியுள்ளவன்.கடமைப்பட்டவன்.  👈

நான் வேலை செய்கின்றேன் அதற்கு வரி கட்டுகின்றேன்.ஓய்வூதியத்திற்கு பணம் கட்டுகின்றேன். மருத்துவ காப்புறுதி கட்டுகின்றேன். இந்த நாட்டிலேயே பொருட்கள் வாங்குகின்றேன்.அதற்கு வரி கட்டுகின்றேன். கார் ஓடுகின்றேன். அதற்கு வரி கட்டுகின்றேன். வீதியில் கார் ஓடுகின்றேன் அதற்கும் வரி கட்டுகின்றேன்.பெற்றோல் அடிக்கின்றேன் அதற்கும் வரி கட்டுகின்றேன். வீடு வைத்திருக்கின்றேன். அதற்கும் வரி கட்டுகின்றேன்.மின்சாரம்,காஸ் எல்லாவற்றுக்கும் கட்டணமும் வரியும் கட்டுகின்றேன். தண்ணீருக்கு கட்டணம் செலுத்துகின்றேன்.அது வெளியில் போகவும் கட்டணமும் வரியும் சேர்த்து கட்டுகின்றேன். இரண்டு வேலை செய்கின்றேன். இரண்டாவது வேலைக்கு இரட்டிப்பு வரி கட்டுகின்றேன். கடைக்கு சாப்பிட போனால் வரி கட்டுகின்றேன்.
ஆக...
மொத்தத்தில் எல்லாம் என்பணம்💪. அடைக்கலத்தை தவிர....

அது சரி விசுகர்! கருத்து சுதந்திரம் உள்ள நாடுகளில் தானே வாழ்கின்றோம்.இந்த நாட்டவர்களை போல் எமக்கும் கருத்து சுதந்திரம் உண்டு.இந்த நாடுகளில் பிறந்து வளர்ந்தவர்களை போல்....

எல்லாரும் தான் வரி கட்டுகிறார்கள், இதையெல்லாம் சாதனையாகச் சொல்பவர்கள் எங்கள் ஆசியக் குடிகளாக மட்டும் தான் இருப்பரென நினைக்கிறேன்😂.

கட்டின வரிக்கேற்ப விழுந்தால் அம்புலன்ஸ், வேலை போனால் சாப்பிடக் காசு, பிள்ளைகள் கூடினால் காசு என்று மீளத் தரும் நாடுகளில் இருக்கிறீர்கள். இருந்த படியே, ஜனநாயகம், அகதி அடைக்கலம், அங்கே பிறந்தவனுக்கே உரிமை என்று எதுவும் கொடுக்காத நாட்டைப் பார்த்து எச்சில் ஊறுகிறீர்கள் என நினைக்கிறேன். அதனால் தான் திரும்பத் திரும்ப "ஏன் அங்கே நீங்கள் தங்காமல், ஜேர்மனிக்கு வந்தீர்கள்?" என்று கேட்கிறார்கள் என நினைக்கிறேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

நன்றியுணர்ச்சி வேறு. இவர்கள் செய்யும் போர் நடவடிக்கைகள் அனைத்திற்கும் கோயில் மாடு போல் தலையாட்டுவது வேறு. சுத்த ஜேர்மனியர்களும் போர் நடவடிக்களுக்கு எதிராகத்தான் நிற்கின்றார்கள்.

போரை பெரும்பாலோர். எதிர்க்கிறார்கள்.    நானும் தான்   இரண்டு பக்கத்தையும். எதிர்க்கிறேன்.  ஒரு பக்கத்தை ஆதரிப்பது  போரை ஆதரிப்பது ஆகும்   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, Kandiah57 said:

போரை பெரும்பாலோர். எதிர்க்கிறார்கள்.    நானும் தான்   இரண்டு பக்கத்தையும். எதிர்க்கிறேன்.  ஒரு பக்கத்தை ஆதரிப்பது  போரை ஆதரிப்பது ஆகும்   

இலங்கையில் நடந்த விடுதலை போர் உங்களுக்கு நியாயமாக தெரிந்ததா?

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

நன்றியுணர்சியாளர்கள் அரசியல் கதைக்க வெளிக்கிட்டால் முதலில் சிங்கள அரசிற்குத்தான் நன்றி செலுத்த வேண்டும்.ஓசியில படிப்பு தந்து ஓசியில பிஸ்கட்டும் தந்து...ஓசியில அரிசி பருப்பும் தந்து....ஒசியில கூப்பன்மாவும் தந்து படிக்க வைச்சு ஆளாக்கி விட்ட சிங்கள மாத்தயாக்களுக்குத்தான் நன்றி சொல்லணும். :cool:

இது தான் நாம் புரிந்து கொள்ள முடியாதது. நாம் இங்கே தவறுவோமானால் நமக்கு இன விடுதலை தாயக மண் மற்றும் எமது சொந்த வரலாறு பற்றி எதுவுமே தெரியாது என்று தான் அர்த்தம்.

சிறீலங்கா எனக்கு இலவச கல்வி மருத்துவம் தந்தது தான். ஆனால் எங்கள் மண்ணை விட்டு வெளியே போ  என்ற எமது வேண்டுகோளை மறுத்து அடாத்தாக தனது அதிகாரத்தை எம் மீது பதிவதற்காக இத்தனையும் என் மீது திணித்தது. இப்பொழுதும் தொடர்கிறது. வாழு வாழ விடு என்பவர் நாம். எப்படி நன்றி உள்ளவர்களாக முடியும்???

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

சிறீலங்கா எனக்கு இலவச கல்வி மருத்துவம் தந்தது தான்.

இலங்கை உங்களுக்கு மட்டுமா இலவச கல்வி மருத்துவம் தந்தது??   அது அனைத்து குடிமக்களுக்குமனாது   அது ஒவ்வொரு குடிமக்களுக்குமுரிய உரிமை     ஜேர்மனியில் சட்டத்தரணியை வைத்து  உதவி காணாது கூட்டி தா.  என்று வாதடுகிறார்கள் ...நீதிமன்றம் கொடு. என்று தீர்ப்பு வழங்குகிறது   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
48 minutes ago, Justin said:

அங்கே பிறந்தவனுக்கே உரிமை என்று எதுவும் கொடுக்காத நாட்டைப் பார்த்து எச்சில் ஊறுகிறீர்கள் என நினைக்கிறேன்.

அங்கே பிறந்தவனுக்கு நாட்டின் சட்டங்களுக்கமைய சகல உரிமைகளும் உண்டு. ஆனால் நாட்டை காட்டிக்கொடுப்பவனுக்கும் நாட்டின் இறையாண்மையை விற்பவனுக்கும் எந்த உரிமைகளும் கொடுக்கப்படக்கூடாது என்ற கொள்கையில் நானும் உறுதியானவன்.

அமெரிக்காவில் சொந்த நாட்டிற்கு எதிராக நிற்பவர்களை என்ன செய்வார்கள்? 😋

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

இலங்கையில் நடந்த விடுதலை போர் உங்களுக்கு நியாயமாக தெரிந்ததா?

ஆமாம் நிச்சயமாக   நாங்கள் வலிய போரிடவில்லை   வலும் காட்டாயமாக போரிட வைக்கப்பட்டோம்.  போரட்ட முறைகள் வன்முறைகளாக இருக்கலாம்  காரணம் சரியானது      இதனை   கில்லாறி கிளிட்டன்.    15. ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி உள்ளார்    

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Kandiah57 said:

உக்ரேன் - ரஷ்ய போருக்கும் இதே காரணம் தான் 👈

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

உக்ரேன் - ரஷ்ய போருக்கும் இதே காரணம் தான் 👈

ரஷ்யாவை இலங்கை என்றும்   உக்ரேனை   தமிழர்கள் என்றும்  வைத்து கொள்ளலாமா??  அல்லது எடுத்துக்கொள்ள முடியுமா??   

குறிப்பு,......நீங்கள் ரஷ்யாருடன்.  சேர்ந்து சேர்த்து   100 % வீதம்  ரஷ்யானாக.  மாறி விட்டீர்கள்   🤣😀 சும்மா   கேட்டு பார்த்தேன் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

போரை பெரும்பாலோர். எதிர்க்கிறார்கள்.    நானும் தான்   இரண்டு பக்கத்தையும். எதிர்க்கிறேன்.  ஒரு பக்கத்தை ஆதரிப்பது  போரை ஆதரிப்பது ஆகும்   

போர் ஆக்கிரமிப்பை எதிர்த்து என்றால் அது திணிக்கப்பட்டதாகிவிடும். எனவே மண்ணுக்காக போராடுபவர்கள் எம்மை போல போராளிகளே. அவர்களை கோமாளிகள் என்பவர்களால் மண் மீட்பை ஒருபோதும் உணரமுடியாது ...

3 minutes ago, Kandiah57 said:

ரஷ்யாவை இலங்கை என்றும்   உக்ரேனை   தமிழர்கள் என்றும்  வைத்து கொள்ளலாமா??  அல்லது எடுத்துக்கொள்ள முடியுமா??   

குறிப்பு,......நீங்கள் ரஷ்யாருடன்.  சேர்ந்து சேர்த்து   100 % வீதம்  ரஷ்யானாக.  மாறி விட்டீர்கள்   🤣😀 சும்மா   கேட்டு பார்த்தேன் 

அது தான் நியம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Justin said:

கட்டின வரிக்கேற்ப விழுந்தால் அம்புலன்ஸ், வேலை போனால் சாப்பிடக் காசு, பிள்ளைகள் கூடினால் காசு என்று மீளத் தரும் நாடுகளில் இருக்கிறீர்கள். இருந்த படியே, ஜனநாயகம், அகதி அடைக்கலம், அங்கே பிறந்தவனுக்கே உரிமை என்று எதுவும் கொடுக்காத நாட்டைப் பார்த்து எச்சில் ஊறுகிறீர்கள் என நினைக்கிறேன். அதனால் தான் திரும்பத் திரும்ப "ஏன் அங்கே நீங்கள் தங்காமல், ஜேர்மனிக்கு வந்தீர்கள்?" என்று கேட்கிறார்கள் என நினைக்கிறேன்.  

சொந்த/நியாயமான கருத்தை சொல்லக்கூடாது என்கிறீர்கள்?

26 minutes ago, Kandiah57 said:

ரஷ்யாவை இலங்கை என்றும்   உக்ரேனை   தமிழர்கள் என்றும்  வைத்து கொள்ளலாமா??  அல்லது எடுத்துக்கொள்ள முடியுமா??   

குறிப்பு,......நீங்கள் ரஷ்யாருடன்.  சேர்ந்து சேர்த்து   100 % வீதம்  ரஷ்யானாக.  மாறி விட்டீர்கள்   🤣😀 சும்மா   கேட்டு பார்த்தேன் 

சோவியத் ஒன்றியத்துடன் பிரிந்த உக்ரேன் என்ன உரிமைகள் இல்லாமல் வாழ்ந்தார்கள்? சகல உரிமைகளும் இருந்தது தானே?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அங்கே பிறந்தவனுக்கு நாட்டின் சட்டங்களுக்கமைய சகல உரிமைகளும் உண்டு. ஆனால் நாட்டை காட்டிக்கொடுப்பவனுக்கும் நாட்டின் இறையாண்மையை விற்பவனுக்கும் எந்த உரிமைகளும் கொடுக்கப்படக்கூடாது என்ற கொள்கையில் நானும் உறுதியானவன்.

அமெரிக்காவில் சொந்த நாட்டிற்கு எதிராக நிற்பவர்களை என்ன செய்வார்கள்? 😋

வியற்நாம் போரை எதிர்த்த அமெரிக்கர்களை, ஈராக்கில் அமெரிக்கப் படை செய்த கொலைகளை வெளிக்கொண்டு வந்த அமெரிக்கப் படையினனை, அமெரிக்காவின் தவறான கொள்கைகைளைக் காய்ச்சி ஊத்தும் நியூயோர்க் ரைம்ஸ் எழுத்தாளர்களை, இப்படியானவர்களை என்ன செய்திருக்கிறார்கள் அமெரிக்காவில் என்று தேடிப்பாருங்கள் ஒரு தடவை. நீங்களாகத் தேடியறிந்தால் மனதில் நிற்கும்😎!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

அமெரிக்காவின் தவறான கொள்கைகைளைக் காய்ச்சி ஊத்தும் நியூயோர்க் ரைம்ஸ் எழுத்தாளர்களை, இப்படியானவர்களை என்ன செய்திருக்கிறார்கள் அமெரிக்காவில் என்று தேடிப்பாருங்கள் ஒரு தடவை. நீங்களாகத் தேடியறிந்தால் மனதில் நிற்கும்😎!

நீங்களாகத் தேடியறிந்தால் ]

ரஷ்ய எதிர்கட்சி தலைவர் தேனீரில் நஞ்சூட்டப்பட்டார் இறுதியில் சிறையில் கொல்லபட்டார் இது பிரபலமானவரின் நிலை சாதரணமானவர்களின் நிலை சொல்ல வேண்டியது இல்லை அங்கே. எப்படிபட்ட நாடு அது என்பதை  தாங்களாகவே முன்கூட்டியே தேடியறிந்து  தமக்கான சிறந்த வாழ்க்கையை ஜனநாயகம் உரிமைகள் வழங்குகின்ற சிறந்த நாடுகளில் அமைத்து கொண்டவர்கள் அவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Justin said:

நீங்களாகத் தேடியறிந்தால் மனதில் நிற்கும்😎!

 நான் உங்களைப்போல் அறிவு படைத்தன் அல்ல. தேடித்தாருங்கள் வாசித்து அறிந்து கொள்ளலாம். அத்துடன் ஸ்னோடன் என்ன தவறு செய்தார் என்பதையும் அறியத்தாருங்கள். :cool:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.