Jump to content

தண்டட்டி – திரைப்பட விமர்சனம்


Recommended Posts

தண்டட்டி – திரைப்பட விமர்சனம்

 
Thandatti 1

அச்சு அசலான கிராமத்து மனிதர்களையும் அவர்கள் வாழ்வியலையும் அப்படியே காட்சிப்படுத்தும் வகையில் அவ்வப்போது சில படங்கள் வரும். அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் தண்டட்டி.

தண்டட்டி என்பது பெண்கள் காதில் அணியக்கூடிய காதணி வகைகளுள்‌ ஒன்று. இது தங்கம் அல்லது வெண்கலத்தினால் செய்யப்பட்ட ஒரு கனமான அணிகலன்.தென் தமிழ்நாட்டிலுள்ள பெண்களிடையே இந்தக் காதணி அணியும் வழக்கம் இருந்தது. தற்போது இந்த அணிகலன்கள் அணியப்படுவதில்லை எனினும் வயதான சிலர் இன்னும் இதை அணிந்து கொண்டிருக்கின்றனர். இதை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பாப்படம் அல்லது பாம்படம் என்று அழைக்கின்றனர். இந்தக் காதணி அணிவதற்காகவே காது வளர்க்க வேண்டியிருக்கும். இதனைக் காது வடித்தல் என்று கூறுவர். இதற்காக அந்தக் காலப் பெண்கள் காது வளர்த்தனர். இவ்வாறு காது வடிக்கும் பழக்கம் தற்போது இல்லை.

இதை அடுத்தடுத்த தலைமுறைக்கும் அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்தப்படம்.

படம் எப்படியிருக்கிறது?

நான்கு மகள்கள், ஒரு மகன் ஆகியோரின் அம்மாவான ரோகிணிக்கு, தென்னையைப் பெத்தா இளநீரு பிள்ளையைப் பெத்தா கண்ணீரு எனும் நிலை. அதனால் தொடக்கத்தில் காணாமல் போகிறார். பிறகு மாண்டுபோகிறார்.

உடனே அவர் காதில் இருக்கும் தண்டட்டிக்காக மொத்தக்குடும்பமும் போட்டி போடுகிறது. அப்போது என்னவெல்லாம் நடக்கிறது? இறுதியில் என்னவாகிறது? என்பதுதான் படம்.

தேனி மாவட்டம் கிடாரிப்பட்டி கிராமத்தை அப்படியே நகலெடுத்து திரையில் உலவவிட்டிருக்கிறார்கள். உண்மையான கிராம மக்களுக்கு ஈடுகொடுத்து ரோகிணி, அவருடைய மகள்கள் தீபாசங்கர், பூவிதா, ஜானகி, செம்மலர் அன்னம், மகனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் தொடக்கத்திலிருந்து காவலர் வேடத்தில் வரும் பசுபதி, படம் கலகலப்பாக நகர பெரிதும் உதவுகிறார். இப்படி ஒரு காவலர் பாத்திரம் காவல்துறையினருக்கே சிரிப்பைக் கொடுக்கும். அந்தளவு அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார் பசுபதி. இறுதித் திருப்பம் நெகிழ்வு.

மகேஷ்முத்துசாமியின் ஒளிப்பதிவில், கிராமத்தில் நிகழ்ந்த ஒரு துக்க வீட்டுக்குப் போய் நாமும் துக்கம் கேட்டுவிட்டு வந்த உணர்வு.

கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பாடல்களில் மண்மணக்கிறது. பின்னணி இசை நன்றாக அமைந்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் ராம் சங்கையா, ஒரு கிராம வாழ்வை அதன் ஏற்றத்தாழ்வுகளுடன் பதிவு செய்திருக்கிறார். மறைந்து கொண்டிருக்கும் ஒரு அணிகலனின் பெயர், கிராமத்தில் நடக்கும் இறப்பு நிகழ்வின் சடங்குகள் ஆகியனவற்றை முன்னிறுத்தி ஓர் ஆழமான காதல்கதையைச் சொல்லி வரவேற்புப் பெறுகிறார்.

https://cinemavalai.com/thandatti-film-review/

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரைப்படம். பசுபதி, ரோகிணி இருவரது நடிப்பும் அருமை

  • Like 1
Link to comment
Share on other sites

3 hours ago, Kavi arunasalam said:

நல்லதொரு திரைப்படம். பசுபதி, ரோகிணி இருவரது நடிப்பும் அருமை

நானும் மிகவும் ரசித்துப் பார்த்தேன். தண்டட்டியை தொலைத்தது மூலம் ஒரு கிராமத்தின் பாரம்பரியங்களை எங்களுக்கு காட்டியிருக்கிறார் இயக்குநர். அதுவும் அந்த வயதான பாட்டிகளின் ஒப்பாரி ஒரு classic.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நிழலி said:

அதுவும் அந்த வயதான பாட்டிகளின் ஒப்பாரி ஒரு classic 

நானும் அதை ரசித்தேன். பாட்டிகள் ஒப்பாரிக்கு இடைவேளை  கேட்க, பசுபதி கடுப்பாக… நன்றாக காட்சிப் படுதப்பட்டிருந்தன. ஆனாலும் முடிவில் சினிமாத்தனம் வந்து எட்டிப் பார்ப்பது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.

பொறுமை இருந்தால் அஸ்வின்ஸ் பாருங்கள். Netflix இல் இருக்கிறது.

Edited by Kavi arunasalam
எழுத்துப் பிழை
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிழலி said:

நானும் மிகவும் ரசித்துப் பார்த்தேன். தண்டட்டியை தொலைத்தது மூலம் ஒரு கிராமத்தின் பாரம்பரியங்களை எங்களுக்கு காட்டியிருக்கிறார் இயக்குநர். அதுவும் அந்த வயதான பாட்டிகளின் ஒப்பாரி ஒரு classic.

அதுவும் அந்த வயதான பாட்டிகளின் ஒப்பாரி ஒரு classic.👍

Link to comment
Share on other sites

19 hours ago, Kavi arunasalam said:

 

பொறுமை இருந்தால் அஸ்வின்ஸ் பாருங்கள். Netflix இல் இருக்கிறது.

கண்டிப்பாக பார்க்கின்றேன். நான் பார்க்க நினைத்தும், பின் பேய்ப்படமாக இருக்கும் என்று நினைத்து பார்க்காமல் விட்டு விட்டேன்.

IPTIV ரிவியில் Sync என்ற ஒரு படம் இருக்கு. ஒரு மணித்தியாலமும் 17 நிமிடங்களும் தான். சின்னப்படமாக இருக்குதே (சின்ன வீடு மாதிரி) நல்லா இருக்கும் என்று நினைத்துப் பார்த்தால். பீசா படக் கதை template டில் எடுத்த ஒரு பேய்ப்படம். இந்த படத்தை பேய்கள் பார்த்தால் தம்மை இப்படி எடுத்து உள்ளனரே என்று நினைத்து கதறி கதறி அழும்.
 

  • Like 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.