Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
மீண்டும் உயிர்பெற்ற நூற்புழுக்கள்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

ஐந்தாண்டுகளுக்கு முன், சைபீரியாவின் உறைபனி பகுதியில் இவ்வகை நூற்புழுக்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

2 மணி நேரங்களுக்கு முன்னர்

கிட்டத்தட்ட 46 ஆயிரம் ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்த ஒரு ஜோடி புழுக்களை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு மீண்டும் உயிர்ப்பிக்க செய்துள்ள வியக்கத்தக்க சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உலகின் மிகவும் குளிரான பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் சைபீரியாவில், எப்போதும் பனிப்படலம் மூடிய நிலையில் காணப்படும் உறை மண் படுகையில் சுமார் 40 மீட்டர் ஆழத்தில் இருந்து இந்த நூற்புழுக்கள் கண்டெடுக்கப்பட்டன.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த அதிசய கண்டுபிடிப்புக்கு பிறகு, நூற்புழுக்கள் தண்ணீரில் மறுநீரேற்றம் செய்யப்பட்டபோது அவை மீண்டும் உயிர்ப்பித்தன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நூற்புழு வகையைச் சேர்ந்த இந்தப் புழுக்கள் கிரிப்டோ பயாசிஸ் நிலையில் பராமரிக்கப்பட்டன. தண்ணீர் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையையும், தீவிர வெப்பநிலையையும் பொறுத்துக் கொள்ள புழுக்களை இந்த நிலை அனுமதிக்கிறது.

இது முதல்முறை அல்ல

செயலற்ற நிலையில் இருக்கும் நூற்புழுக்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. ஆனால் இந்த முறை உயிர்ப்பிக்கப்பட்ட புழுக்களை போன்று, இதற்கு முன் அவற்றின் செயலற்ற காலம் இவ்வளவு ஆயிரம் ஆண்டுகள் நீண்டதாக இருந்ததில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் வியப்புடன் தெரிவிக்கின்றனர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அதாவது 40 ஆயிரம் அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு பிறகு, புழுக்கள் உயிர்ப்பிக்கப்பட்ட இந்த செயல்முறை மேற்கொள்ளப்படலாம் என்று யாரும் நினைக்கவில்லை” என்று PLOS Genetics எனும் அறிவியல் இதழில் அண்மையில் வெளியிட்ட இதுதொடர்பான ஆய்வு கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரும், ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழக விலங்கியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு தலைவருமான பிலிப் ஷிஃபர் கூறினார்.

“இவ்வளவு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, இந்தப் புழுக்களின் வாழ்க்கை மீண்டும் தொடங்குவது வியப்பளிப்பதாக உள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

மீண்டும் உயிர்பெற்ற நூற்புழுக்கள்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

ஆய்வகத்தில் மறுநீரேற்றம் செய்யப்பட்டபோது நூற்புழுக்கள் உயிர்ப்பித்தன

ஒத்த மரபணுக்கள்

45,839 முதல் 47,769 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட முந்தைய காலகட்டத்தில், இந்த வகை நூற்புழுக்கள் செயலற்ற நிலைக்கு சென்றதாக, கார்பன் டேட்டிங் கால அளவை முறை மூலம் விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர்.

இந்த உயிரினங்களை செயலற்ற நிலைக்கு செல்ல அனுமதிக்கும் முக்கிய மரபணுக்களை பகுப்பாய்வின் மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

கேனோர்ஹப்டிடிஸ் எலிகன்ஸ் எனப்படும் சமகால நூற்புழுக்களில் காணப்படும் அதே மரபணுக்கள், இவற்றிலும் இருப்பதாக விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்தது. கோனோர்ஹர்டிடிஸ் எலிகன்ஸ் வகை நூற்புழுக்களிலும் ‘கிரிப்டோபயோசிஸ்’ நிலையை அனுமதிக்கும் மரபணுக்களை காண முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

சர்க்கரை சத்து உற்பத்தி

இந்த இருவகை நூற்புழுக்களையும் ஆய்வகத்தில் வைத்து லேசாக நீரிழப்பு செய்தபோது, ‘ட்ரெஹலோஸ்’ எனப்படும் சர்க்கரை சத்தை அவை உற்பத்தி செய்கின்றன. இந்த உற்பத்தித் திறனே உறைபனி மற்றும் கடுமையான நீரிழப்பை தாங்குவதற்கு இவற்றை அனுமதிக்கலாம் என்று ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றனர்.

புறத்தோற்றம் மற்றும் ஆயுட்காலம்

தோராயமாக ஒரு மில்லி மீட்டர் நீளமுள்ள இந்த வகை புழுக்கள், சில நாட்களே வாழும் தன்மை கொண்டவையாக இருப்பது ஆய்வகத்தில் கண்டறியப்பட்டது. ஆனால் இவை இறப்பதற்கு முன், தங்களின் குறுகிய கால வாழ்நாளில் பல தலைமுறைகளை உருவாக்கும் விதத்தில் இனப்பெருக்கம் செய்யும் திறனை பெற்றுள்ளதையும் விஞ்ஞானிகள் கண்டுணர்ந்தனர்.

46 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்ட நூற்புழுக்களின் சந்ததிகளில் உள்ள உயிர் வாழ்வதற்கான தகவமைப்பு செயல்முறை குறித்த தங்களது தீவிர ஆராய்ச்சியை தொடர உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/cjrlzgyd0xno

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இதில என்ன வியப்பு?

விந்து வங்கியில் சேமிக்கப்படும் விந்தணுக்கள் பாவிக்கப்படும் வரை உறைநிலையில் தானே இருக்கின்றன.

விபரம் தெரிந்தவர்கள், இதுக்கு விளக்கம் சொல்லுங்கோ!

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Nathamuni said:

இதில என்ன வியப்பு?

விந்து வங்கியில் சேமிக்கப்படும் விந்தணுக்கள் பாவிக்கப்படும் வரை உறைநிலையில் தானே இருக்கின்றன.

விபரம் தெரிந்தவர்கள், இதுக்கு விளக்கம் சொல்லுங்கோ!

விந்துகளை மட்டுமல்ல, எந்த விலங்கின், உயிரினத்தின் கலத்தையும் (cells) ஒரு விசேட போசணைத் திரவத்தில் போட்டு, - 140 டிகிரி செல்சியசுக்குக் கீழே உறைய வைத்தால் சில வருடங்களில் மீள எடுத்து உயிர்ப்பிக்கலாம்.

இங்கே புழுக்கள் உயிர் பெறுவது ஏன் அதிசயமெனில், இவை பல ஆயிரம் வித்தியாசமான கலங்களால் ஆன முழு உயிரினங்கள். இப்படி ஒரு பல்கல (multicellular) உயிரினத்தை 46,000 வருடங்கள் கழித்து உயிர்ப்பிக்க முடிவது அதிசயம் தான் - இது முதல் முறையாக அவதானிக்கப் பட்டிருக்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Justin said:

நன்றி.

எனது கேள்வி: 

நீங்கள் சில வருடங்களின் பின்னர் மீள எடுத்து உயிர்ப்பிக்கலாம் என்கிறீர்கள்.

அந்த சிலவருடங்கள் 46,000 வருடங்களா இருக்க முடியாதா?

அதாவது, இரண்டு விடயங்களிலும், உறைநிலை, உயிரை மடக்கி வைத்துக்கிறது என்பது சரியானதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Nathamuni said:

நன்றி.

எனது கேள்வி: 

நீங்கள் சில வருடங்களின் பின்னர் மீள எடுத்து உயிர்ப்பிக்கலாம் என்கிறீர்கள்.

அந்த சிலவருடங்கள் 46,000 வருடங்களா இருக்க முடியாதா?

அதாவது, இரண்டு விடயங்களிலும், உறைநிலை, உயிரை மடக்கி வைத்துக்கிறது என்பது சரியானதா?

செயற்கை முறையில் உறைய வைத்த தனியான கலங்களை 46,000 வருடங்கள் கழித்து உயிர்ப்பிக்க முடியுமாவென யாரும் பரிசோதித்துப் பார்க்கவில்லை. "சில வருடங்கள்" என்று நாம் பேசுவது 5 முதல் 20 வருடங்கள் (கலத்தின் வகையைப் பொறுத்து).

உறைநிலை அனுசேபத்தை மாற்றி, உயிரைத் தக்க வைக்கிறது என்பது சரி. புழுவில் இது இயற்கையாகவே நடப்பது தான் புதுமை. ஆய்வு கூடங்களில் நாம் செயற்கையாக சில போசணைகளை சேர்க்க வேண்டும், இயற்கையில் இந்தப் புழுக்களுக்கு அந்த  இயலுமை இருக்கிறது - அதுவே அரிய கண்டு பிடிப்பு!

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, Justin said:

அதாவது நீங்கள் சொன்ன போசணைகளை, புழுக்கள் தாமாகவே உருவாக்கி, 46,000 வருடங்கள் உறைநிலையில் இருந்திருக்கின்றன.

ஆனாலும் என்னைப் பொறுத்தவகையில், இந்த போசணைகளை உருவாக்கி, விலங்கு விந்தணுக்களை, முட்டைகளை உறைநிலையில் வைத்திருந்திருக்கலாம் என்பதே அரிய கண்டுபிடிப்பு. சரிதானா?

இந்த கண்டுபிடிப்பு இப்போது, புழுக்களால் இயல்பாக செய்யக்கூடியதாக இருந்ததை கண்டறிந்திருக்கிறார்கள். அப்படித்தானே?

விளக்கத்துக்கு மிக்க நன்றி. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாமரை விதைகள் 10,000  ஆண்டுகள் வரை உயிர்ப்போடு வாழும் என்கிறார்கள்.  கனடாவைச் சேர்ந்த பீல் என்னும் விஞ்ஞானி பல தாவர விதைகளைப் பெட்டிகளிலடைத்து அவற்றைப் பலவருடங்களின் பின் திறந்தெடுத்து முளைப்பரிசோதனை செய்து பார்த்த போது அவற்றிற்பல முளைத்திருக்கின்றன.  இன்னும் அந்தப் பரிசோதனை தொடர்கிறது.  திரவ நைதரசனில் வைத்த விந்தணுக்களை மீண்டும் எடுத்து செயற்கைமுறைச் சினைப்படுத்தலில் பயன்படுத்துகிறார்கள்.  கருக்கட்டிய முளையங்களையும் இவ்வாறு உயிர்ப்பிக்கிறார்கள்.  மனிதரும் இவ்வாறு தம் கருக்களைப் பலகாலம் வைத்திருந்து உயிர்ப்பிக்கிறார்கள்.  46,000  வருடங்களென்பது இத்தகைய ஆராய்ச்சியில் மிக நீண்டகாலப் பகுதியே.   பணமிருந்தால் நமது சந்ததிகளையும் இவ்வாறு நீண்டகாலம் வாழவைத்து உயிர் கொடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதென்ன பிரமாதம்.. இதை விட ஸ்பெசல் ஐட்டம் ஒன்று இருக்குது.. மனுசனை உறைபனி நிலையில் வைச்சு செவ்வாய்க்கு அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.