Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாட்டுக்கு நீதிமன்றத்திடம் கோரிய தடையை நிராகரித்தது நீதிமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

17 AUG, 2023 | 08:03 PM
image
 

குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெறும் பொங்கல் நிகழ்வையும் பௌத்த வழிபாடுகளையும் தடுக்குமாறு கோரி முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (16) அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இதில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்  மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் பீட்டர் இளஞ்செழியன் மற்றும் குருந்தூர் மலை பௌத்த பிக்கு கல்கமூவ சாந்தபோதி, அருண் சித்தார்த் ஆகியோருக்கு எதிராக இந்த இந்த தடை உத்தரவை பிறப்பிக்குமாறு பொலிஸார் மன்றில் AR அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து  குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் பிரிவு 106(1) கீழ் தடை உத்தரவை வழங்குமாறு கோரியிருந்தனர்.

வன்னி  பிராந்திய தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் T .ஜெயதிலக என்பவரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பொங்கல் நிகழ்வுக்கு எதிராக புதன்கிழமை (16) முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கு அமைவாக பொலிஸார் இந்த தடையுத்தரவை கோரியுள்ளனர்.

அதாவது இந்த பொங்கல் நிகழ்வுகள் வழிபாடுகளிடம் இடம்பெற்றால் இனங்களுக்கு இடையிலே முறுகல் நிலை  ஏற்பட்ட வாய்ப்புள்ளதாகவும் சமாதான குலைவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து பொலிஸார் இந்த தடை உத்தரவை மேற்படி நபர்களுக்கு எதிராக  கோரியிருந்தனர்.

அத்தோடு வவுனியா தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் ஜயதிலக பொலிஸ் நிலையத்தில் செய்த  முறைப்பாட்டின் படி இந்த பொங்கல் நிகழ்வு நடைபெற்றால் தொல்லியல் சின்னங்களுக்கு பாத்திப்பு ஏற்படும்  இதற்கு முதல் கடந்த மாதம் 14 ஆம் திகதி அந்த இடத்தில் இந்து மக்களால் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள வந்தபோது, தொல்லியல் பிரதேசத்திற்குள் வெவ்வேறு பூஜை பொருட்களை கொண்டு பாதுகாப்பற்ற உபகரணங்களைக் கொண்டுவந்து அவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதைப்போல் இந்த தினத்திலும் அவ்வாறு நடைபெற வாய்ப்புள்ளது. அத்தோடு இந்த இடத்திற்கு பல்வேறு கட்சிக்காரர்கள் வந்து மத ரீதியான கலவரம் ஏற்படக்கூடியதாக உள்ளது எனவும்

அந்த நேரத்தில் ஏதேனும் உயிராபத்து ஏற்படக்கூடிய நிலை உள்ளதால் அதை தடுப்பதற்காக நீதிமன்றத்தின் முன் நிவாரணமான நீதிமன்றத்தின் தடை உத்தரவை கோரி நிற்கின்றோம். புகைப்படங்களின் அடையாளமிட்டு அணைக்கின்றேன்.

இது தொடர்பில் பொலிஸ்  மேலதிகமாக புலனாய்வு துறையினரின் மூலம் விடயங்களைத் தேடிப்பார்த்தபோது இந்த  தகவல் உறுதிப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் இந்த பொங்கல் நிகழ்வை நடாத்துவதற்கு நாளை (18) தடையுத்தரவு கோரிய சம்பந்தப்பட்ட நபர்கள் குருந்தூர் மலைக்கு  வந்தால் அவர்களோடு  வருகின்ற குழுவினருடன் குருந்தூர் மலைநோக்கி வருகை தருமாறு  பிரச்சாரம் செய்கின்ற மற்றைய தரப்பினர் மற்றும் அவர்களுடன் வரும் குழுவினருக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு, அந்த கருத்து முரண்பாடு உணர்ச்சிகரமான விடயங்கள் என்பதால் மதக்கலவரமாக உருவாகி உயிர் ஆபத்து ஏற்படுத்தக்கூடும். 

மேலும் அந்த இடத்தின் அமைவிடத்தின் அடிப்படையில் அவ்வாறான ஒரு கலவரத்தை தடுப்பதற்கு மிகவும் கடினமாகும். இச்சந்தர்ப்பத்தில் பாரதூரமான காயங்கள் ஏற்பட்டால் மிகவும் கடினமான பாதையூடாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதும் கஸ்ரமாகும்.

ஆகவே கெளரவ மன்று! 2023.08.18ம் திகதி நடைபெறவுள்ள பொங்கல் உற்சவம் மற்றும் அது தொடர்பாக அங்கு வருகின்ற அந்த கட்சிக்காரர்கள் அத்தோடு அதற்காக அங்கு வருவதாக கூறுகின்ற ஏனைய கட்சிக்காரர்களின் வருகையை தடுத்து அன்றைய தினத்திற்கு மாத்திரம் நடைபெறகூடிய மதங்களுக்கு இடையிலான மதக் கலவரத்தை தடுத்துக் கொள்வதற்காக, பாதுகாத்துக் கொள்வதற்காக இந்த மாதவழிபாட்டு நிகழ்வுகளை தடை செய்யுமாறு கோருகின்றோம் என பொலிஸார் தமது அறிக்கையின் ஊடாக மன்றில் கோரியிருந்தனர்.  அத்தோடு  

இதில் தொல்பொருள் நினைக்களத்தினரையும். வனஇலாகா திணைக்களத்தினரையும் முறைப்பாட்டாளர்களாக ஏற்றுக்கொள்ளுமாறும், மன்றில் கோரியிருந்தனர்.

பொலிஸாரின் அறிக்கையை ஆராய்ந்த மன்று போலீசாரின் விண்ணப்பத்தை நிராகரித்து கட்டளை ஒன்றை ஆக்கியுள்ளது. நீதிமன்றம் வழங்கிய இந்த  கட்டளையில் புராதன சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அப்பிரதேச மக்கள் தங்களது மத ரீதியான பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என்ற கட்டளையை மீறுவதற்கு இந்த நீதிமன்றுக்கு இயலுமை இல்லை. 

மேலும் ஒருவருக்கு தமக்கு விரும்பிய மதத்தை பின்பற்றலாம் என்பது இந்த நாட்டின் அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமையாகும். எனவே அது தொடர்பிலான மத அனுட்டானங்களை மேற்கொள்வதும் ஒருவருக்கு உள்ள அடிப்படை உரிமையாகும்.

ஒருவரது மத வழிபாடுகளுக்கு மற்றைய தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பதற்காக ஒருவரது மதவழிபாடுகளை  தடுக்க தடை கட்டளை வழங்க முடியாது. குருந்தூர்மலை பிரதேசத்திலுள்ள தொல்பொருள் சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு, அப்பிரதேச மக்களுக்கு உள்ள உரிமையைத் தடுப்பதற்கு இந்த வழக்கின் கட்சிக்காரர்களாக குறிப்பிடப்படப்படும் விகாரை அதிபதி சாந்தபோதி தேரருக்கோ அல்லது அவருடன்  வரும் குழுவினருக்கோ அருண் சித்தார்த் என்பவருக்கோ அல்லது அவருடன் வரும் குழுவினருக்கோ எந்தவிதமான அதிகாரமும் இல்லை என தெரிவித்துள்ளது.

அத்தோடு ஒரு மதத்தினரின் மத வழிபாடுகளை இன்னும் ஒரு மதத்தினர தடை செய்வதானது ஒரு பாரதூரமான குற்றம் ஆகும். அவ்வாறு ஒரு மதத்தினரின் மத வழிபாடுகளை தடை செய்பவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது.

அதே போல இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள துரைராசா ரவிகரன், பீற்றர் இளஞ்செழியன் மற்றும் அவர்களுடன் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்படவுள்ள பொங்கல்  வழிப்பாட்டின்போது  தொல்லியல்  சின்னங்களுக்கு சேதம்  ஏற்படுத்தப்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு உண்டு என்பதனையும் மன்று தனது கட்டளையில் குறிப்பிட்டுள்ளது.

ஒரு குற்றச்செயல் புரியப்பட்டால்  அந்த குற்றத்தை புரிந்தவர்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடுகள் இருக்கின்றபொழுது குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையின் பிரிவு 106இன் ஏற்பாடுகளை பயன்படுத்தி அதனைத் தடை செய்யும் நடைமுறை தேவையற்றது என மன்று கருதுகின்றது.

அவ்வாறானால் ஒவ்வொரு குற்றச்செயல் நடைபெறும் இடங்களுக்குச் சென்று ஒவ்வொரு குற்றச்செயல் புரிபவர்களுக்கு எதிராகவும் தடை உத்தரவு பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகும். எனவே மேற்படி  காரணங்களின் அடிப்படையில் பொலிஸாரினால் கோரப்பட்ட குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையின் பிரிவு 106(1)இன் கீழான தடைக் கட்டளை மீதான விண்ணப்பத்தை மன்று நிராகரித்து கட்டளை ஆக்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/162594

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் மலையில் பொங்கலை தடுக்க யாருக்கும் உரிமையில்லை நீதிமன்று அதிரடி உத்தரவு : தமிழர் தரப்பு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தொல்பொருள் திணைக்களம் அறிவிப்பு

17 AUG, 2023 | 08:20 PM
image
 

 

குருந்தூர் மலை பிரதேசத்தில் உள்ள தொல்பொருள் சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்  பூசை வழிபாடுகளை மேற்க்கொள்வதற்கு அப்பிரதேச மக்களுக்கு உள்ள உரிமையை  தடுப்பதற்கு வவுனியா சப்புமல்கஸ்கட ரஜமாக விகாரை  விகாராதிபதி  கல்கமுவ சாந்தபோதி  தேரருக்கோ  அல்லது அவருடன் வரும் குழுவினருக்கோ  அல்லது அருண் சித்தார்த் என்பவருக்கோ அல்லது அவருடன் வரும் குழுவினருக்கோ அல்லது இதற்கு பாதகம் செய்யும்  பிரிவினருக்கோ எந்தவிதமான அதிகாரமும் இல்லை என முல்லைத்தீவு நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

இதேவேளை பொங்கல் உற்சவத்தினை மேற்கொள்ளும் தமிழர் தரப்பு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் எழுத்துமூல ஆவணம் ஒன்றினையும் வழங்கியுள்ளது.

2023.08.16 அன்று முல்லைத்தீவு வவுனியா மன்னார் தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர்  ஆர். ரி. ஜெயதிலகவினால் செய்யப்பட்ட  முறைப்பாட்டின் அடிப்படையில் குருந்தூர் மலையில் நாளை (18) பொங்கல் இடம்பெற்றால் அங்கு வரும்  குழுவினருக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு, அந்த கருத்து முரண்பாடு உணர்ச்சிகரமான விடயங்கள் என்பதால் மதக்கலவரமாக உருவாகி உயிர் ஆபத்து ஏற்படுத்தக்கூடும். 

எனவே அந்த இடத்தின் அமைவிடத்தின் அடிப்படையில் அவ்வாறான ஒரு கலவரத்தை தடுப்பதற்கு மிகவும் கடினமாகும் என தெரிவித்து வழக்கு தொடுனர் சார்பில்  முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அமரசிங்கவினால் 2023.08.16 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி. சரவணராஜா முன்னிலையில் AR/1028/23 எனும் வழக்கில் அறிக்கை ஒன்றை நேற்று தாக்கல் செய்து  குற்றவியல் நடைமுறை கோவை பிரிவு 106 (01)கீழ் பொங்கல் வழிபாட்டுக்கு எதிராக தடை உத்தரவை கோரியுள்ளனர்.

இருப்பினும் நாளை(18) குருந்தூர் மலை பிரதேசத்தில் உள்ள தொல்பொருள் சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்  பூசை வழிபாடுகளை மேற்றுக்கொள்வதற்கு அப்பிரதேச மக்களுக்கு உள்ள உரிமையை  தடுப்பதற்கு வவுனியா சப்புமல்கஸ்கட ரஜமாக விகாரை  விகாராதிபதி  கல்கமுவ சாந்தபோதி  தேரருக்கோ  அல்லது அவருடன் வரும் குழுவினருக்கோ  அல்லது அருண் சித்தார்த் என்பவருக்கோ அல்லது அவருடன் வரும் குழுவினருக்கோ அல்லது இதற்கு பாதகம் செய்யும்  பிரிவினவுக்கோ எந்தவிதமான அதிகாரமும் இல்லை என முல்லைத்தீவு நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

இதேவேளை பொங்கல்  உற்சவத்தினை மேற்கொள்ளும் தமிழர் தரப்பு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் எழுத்துமூல ஆவணம் ஒன்றினையும் வழங்கியுள்ளது.

இந்த ஆவணத்தில் ஏழு நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.  

 

1. நிலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு - பாதிப்பு ஏற்படாதவாறு தொல்லியல் துறை அதிகாரிகள் குறிப்பிடும் திறந்தவெளியில் தொல்பொருள் அல்லாத கல், செங்கல், மணல் போன்ற ஆதரவின் மீது இரும்புத் தகடு வைத்து அதன் மீது தொல்பொருள் அல்லாத கற்களைப் பயன்படுத்தி அடுப்பு தயார் செய்து அதில் பொங்கல் சமைப்பதில் தொல்பொருளியல் திணைக்களத்திற்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் குறித்த இடம் தொல்பொருளியல் பாதுகாப்பு காப்பக இடமாக உள்ளதுடன் வன பாதுகாப்பு துறைக்கு சொந்தமான வனப்பகுதியாக காணப்படுவதனால் இந்த இடத்தில் தீ மூட்டும்போது வன பாதுகாப்பு துறையின் சட்டவிதிகள் மற்றும் விதிமுறைகளின்படி செயற்பட வேண்டும்.

 

2. தொல்பொருளியல் எச்சங்கள் மேற்பரப்பில் காணப்படாததும், நிலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும் நினைவுச்சின்னங்களில் இருந்து விலகி தொல்லியல் துறை அதிகாரிகளால் குறிக்கப்பட்டு சுட்டிக்காட்டப்படும் இடத்தை மட்டுமே இதற்காக பயன்படுத்த வேண்டும்.

 

3. அகழ்வு செய்யப்பட்ட எல்லைகளில் உள்ள தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் அபாயகரமான நிலையில் இருப்பதால் அதன் எல்லை, அரண்களில் நடக்கவேண்டாம்.

 

4. அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் மீது உணவு, பழங்கள், திரவப்பொருட்கள், தேங்காய் போன்றவற்றை நேரடியாக வைக்க வேண்டாம்.

 

5.தொல்பொருட்கள் மீது தேங்காய் உடைத்தல் அல்லது பால் போன்ற திரவப்பொருட்களை தெளித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது.

 

6. திருவிழா நடவடிக்கையால் தொல்பொருளியல் இடம், நிலத்திற்கு கீழ் உள்ள தொல்பொருட்கள் மற்றும் அதன் கட்டமைப்புகளிற்கு எவ்விதமான சேதமும் ஏற்படக்கூடாது.

 

7.பொங்கல் பண்டிகைக்காக கூடும் மக்களால் இடத்தை வழிபடவரும் மற்றத் தரப்பினருக்கு இடையூறு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும்.என்பனவாகும்.

https://www.virakesari.lk/article/162604

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

இதில் தொல்பொருள் நினைக்களத்தினரையும். வனஇலாகா திணைக்களத்தினரையும் முறைப்பாட்டாளர்களாக ஏற்றுக்கொள்ளுமாறும், மன்றில் கோரியிருந்தனர்.

முழுக்க முழுக்க சிங்கள பௌத்த திணைக்களம் அது தனக்காகவே பேசும் என்பது நீதிமனறதுக்கு தெரியாது என்று போலீசார் நினைப்பது குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போன்றதே. அதுசரி ...... நாளொன்றுக்கு ஒவ்வொரு புதிய பெயரோடு தமிழரின் தனிப்பட்ட நிலங்களை விழுங்கும் இந்த திணைக்களங்களை தடை செய்யவும் வெளியேற்றவும் நீதிமன்றங்களால் முடியாதோ?  

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி இன்றைக்காவது நீதி மன்றத்தை மதிக்கிறார்களா என்று பார்ப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் பொங்கல் விழாவில் குழப்பம் ஏற்படுத்த பேரூந்துகளில் சென்றுள்ள சிங்களவர்கள் : புகைப்படங்கள் உள்ளே

குருந்தூர் பொங்கல் விழாவில் குழப்பம் ஏற்படுத்த பேரூந்துகளில் சென்றுள்ள சிங்களவர்கள் : புகைப்படங்கள் உள்ளே

20.png?resize=600%2C326&ssl=1

4.png?resize=600%2C319&ssl=1

12-1.png?resize=600%2C336&ssl=1

13.png?resize=600%2C336&ssl=1

15.png?resize=600%2C338&ssl=1

17.png?resize=600%2C322&ssl=1

IMG-20230818-WA0076.jpg?resize=600%2C338&ssl=1

IMG-20230818-WA0079.jpg?resize=600%2C338&ssl=1

IMG-20230818-WA0092.jpg?resize=600%2C338&ssl=1

IMG-20230818-WA0093.jpg?resize=600%2C338&ssl=1

IMG-20230818-WA0098.jpg?resize=600%2C338&ssl=1

https://athavannews.com/2023/1345566

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்பகுதியிலிருந்து சிங்கள மக்கள் சுமார் 5 பேருந்துகளில் குருந்தூர்மலை பயணம் : நூற்றுக்கும் மேற்பட்ட பொலிசார், அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில்!

Published By: VISHNU

18 AUG, 2023 | 09:27 AM
image
 

குருந்தூர் மலையில் இன்றைய தினம் (18) வெள்ளிக்கிழமை பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட இருக்கின்ற நிலையில் தென்பகுதியிலிருந்து சிங்கள மக்கள் சுமார் ஐந்து பேருந்துகளில் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் வருகை தந்து குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரையிலே வழிபாடுகளில், ஈடுபட்டு வருகின்றனர். 

IMG-20230818-WA0116.jpg

முல்லைத்தீவு மாவட்டத்திலே இன்றையதினம் பொங்கல் நிகழ்வுகளில் குழப்பங்கள் ஏற்படலாம் என்ற அடிப்படையில் மூன்று பேருந்துகள் மற்றும் இரண்டு ஹன்ரர்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிசார், அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளுக்காக கொண்டு வரப்பட்டிருக்கின்றார்கள். 

IMG-20230818-WA0113.jpg

இதேவேளையிலே தமிழ் மக்கள் பொங்கல் நிகழ்வுக்காக இன்னும் சற்று நேரத்திலே குறித்த பகுதிக்கு வருகை தர இருக்கின்றார்கள்.

IMG-20230818-WA0115.jpg

மிகவும் ஒரு அபாயகரமான சூழலிலே பொங்கல் நிகழ்வு எவ்வாறு இடம்பெறவுள்ளது என்ற நிலையில் தற்போது பௌத்த விகாரையில் வழிபாடுகளில் பௌத்த மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

IMG-20230818-WA0114.jpg

புராதன சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அப்பிரதேச மக்கள் தங்களது மத ரீதியான பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் ஒருவரது மத வழிபாடுகளுக்கு மற்றைய தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பதற்காக ஒருவரது மதவழிபாடுகளை தடுக்க தடை கட்டளை வழங்க முடியாது என பொலிஸாரின் தடையுத்தரவு கோரிக்கையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG-20230818-WA0111.jpg

IMG-20230818-WA0112.jpg

IMG-20230818-WA0110.jpg

IMG-20230818-WA0109.jpg

IMG-20230818-WA0108.jpg

IMG-20230818-WA0105.jpg

IMG-20230818-WA0107.jpg

IMG-20230818-WA0104.jpg

IMG-20230818-WA0106.jpg

IMG-20230818-WA0102.jpg

IMG-20230818-WA0098.jpg

IMG-20230818-WA0100.jpg

IMG-20230818-WA0095.jpg

IMG-20230818-WA0097.jpg

IMG-20230818-WA0096.jpg

IMG-20230818-WA0092.jpg

IMG-20230818-WA0094.jpg

IMG-20230818-WA0093.jpg

IMG-20230818-WA0088.jpg

IMG-20230818-WA0090.jpg

IMG-20230818-WA0089.jpg

IMG-20230818-WA0085.jpg

IMG-20230818-WA0087.jpg

IMG-20230818-WA0084.jpg

IMG-20230818-WA0086.jpg

IMG-20230818-WA0081.jpg

IMG-20230818-WA0083.jpg

IMG-20230818-WA0082.jpg

IMG-20230818-WA0076.jpg

IMG-20230818-WA0080.jpg

IMG-20230818-WA0079.jpg

IMG-20230818-WA0075.jpg

https://www.virakesari.lk/article/162611

6 hours ago, Cruso said:

சரி சரி இன்றைக்காவது நீதி மன்றத்தை மதிக்கிறார்களா என்று பார்ப்போம். 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலய பொங்கல் தடைகள், அச்சுறுத்தல்களைத் தாண்டி ஆரம்பம்

Published By: VISHNU

18 AUG, 2023 | 11:35 AM
image
 

குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலய முற்றலில் சற்று நேரத்திற்கு முன் தடைகள், அச்சுறுத்தல்களையும் பொலிஸாரின் சோதனைகளையும் தாண்டி ஆலய பொங்கல் நிகழ்வு ஆரம்பமானது.

003.png

குருந்தூர் மலையில்  வெள்ளிக்கிழமை (18) பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் தென்பகுதியிலிருந்து சிங்கள மக்கள் சுமார் ஐந்து பேருந்துகளில் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் வருகை தந்து குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

002.png

பொங்கல் நிகழ்வுகளில் குழப்பங்கள் ஏற்படலாம் என்ற அடிப்படையில் மூன்று பேருந்துகள் மற்றும் இரண்டு ஹன்ரர்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிசார், அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், ஆலய சூழலில் பொங்கல் நிகழ்வு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. 

இதேவேளை, குருந்தூர் மலை பிரதேசத்தில் உள்ள தொல்பொருள் சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்  பூசை வழிபாடுகளை மேற்றுக்கொள்வதற்கு அப்பிரதேச மக்களுக்கு உள்ள உரிமையை தடுப்பதற்கு வவுனியா சப்புமல்கஸ்கட ரஜமாக விகாரை  விகாராதிபதி  கல்கமுவ சாந்தபோதி  தேரருக்கோ  அல்லது அவருடன் வரும் குழுவினருக்கோ அல்லது அருண் சித்தார்த் என்பவருக்கோ அல்லது அவருடன் வரும் குழுவினருக்கோ அல்லது இதற்கு பாதகம் செய்யும்  பிரிவினருக்கோ எந்தவிதமான அதிகாரமும் இல்லை என முல்லைத்தீவு நீதிமன்று நேற்றையதினம் கட்டளை பிறப்பித்திருந்தது.

இதேவேளை பொங்கல் உற்சவத்தினை மேற்கொள்ளும் தமிழர் தரப்பு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் எழுத்துமூல ஆவணம் ஒன்றினையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/162622

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் நடக்கும் இடத்துக்கு, அலம்பறை பண்ண, பிக்கர் வர, போடா அங்கால என்று சொல்ல, பிக்கரை போலீசார் தடுக்க.... அவரும் நிண்டு அலம்பறை பண்ண, மரியாதையுடன் போயிடு... என்று ஆரம்பித்து, பாவப்பட்ட நாயை இழுத்து ஒருவர் சொல்ல, போலீசார், பிக்கரை தள்ளி கொண்டு போய் விட்டார்கள். பிக்கர் எண்டுறாங்கள், ஆள் சண்டித்தனமெல்லோ காட்ட நிக்கிறார்...

பௌத்தத்தினை சொல்லி, காசு சேர்க்கிறது, தண்ணி, பொம்பிளை என்று வசதியா வாழுறது.... கருமம் பிடிச்ச பிறவிகள்...

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் மலையில் பொலிஸ் பாதுகாப்போடு ஆதிசிவன் ஐயனாருக்கு விசேட பொங்கல் : சட்ட விரோத விகாரையிலும் பௌத்தர்கள் வழிபாடு

Published By: NANTHINI

18 AUG, 2023 | 05:38 PM
image
 

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் வழிபாடுகள் இன்று (18) நீதிமன்ற உத்தரவுக்கமைய, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆலய நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டன. 

அதேவேளை குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட குருந்தி விகாரையில் பௌத்த மக்களும் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர். 

received_1018254159523006.jpeg

இந்த வழிபாட்டுக்கு குமுழமுனை, தண்ணிமுறிப்பு வீதியால் சென்ற மக்கள் பொலிஸாரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்த பொங்கல் நிகழ்வினை முன்னிட்டு பொலிஸார் மற்றும் விசேட  அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

received_826663552252472.jpeg

இந்நிலையில், தொல்பொருள் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் தொல்பொருள் திணைக்களத்தின் விதிகளுக்கமைய, ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் நிலத்தில் கல் வைத்து, அதன் மீது தகரம் வைத்து, அதற்கு மேல் கல் வைத்து பொங்கல் பொங்கினர்.

ஒரு இடத்தில் மட்டுமே நெருப்பு மூட்ட அனுமதி வழங்கப்பட்ட அதேவேளை, ஏனைய பக்தர்கள் பொங்கல் பொங்க அனுமதிக்கப்படவில்லை. 

அதன்படி, குறித்த ஓர் இடத்தில் நெருப்பு மூட்டி, இரண்டு தடவைகள் பானையில் பொங்கல் பொங்கி, படைத்து வழிபாடுகளை மேற்கொண்டபோது, அவ்விடத்தில் பௌத்த துறவிகளால் குழப்ப நிலை ஒன்றும் ஏற்பட்டது. எனினும், அதனை பொலிஸார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

received_1577157309485105.jpeg

received_1544144276392425.jpeg

மறுபக்கம், பௌத்த விகாரையில் பௌத்த மக்களாலும் பௌத்த துறவிகளாலும் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு பகுதிகளுக்கும் இடையில் பொலிஸாரின் பாதுகாப்பு பலமாக போடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் பொங்கல் பொங்கி படைத்து, பூசை வழிபாடுகளை மேற்கொண்டு பிரசாதங்களை பரிமாறினார்கள். 

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன், துரைராசா ரவிகரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என சுமார் 500 பேர் கலந்துகொண்டனர். 

இதேவேளை, பௌத்த விகாரையில் இடம்பெற்ற வழிபாடுகளில் வவுனியா சப்புமல்கஸ்கட ரஜமகா விகாரை விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி தேரர் தலைமையில் 29 தேரர்கள் மற்றும் சுமார் 300 பேர் வரையிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

received_182771761481912.jpeg

received_212524861478936.jpeg

received_296382829741234.jpeg

received_302269529125387.jpeg

received_318157890721857.jpeg

received_600218095518341.jpeg

received_800382511792321.jpeg

received_820028662918001.jpeg

received_1660416184448837.jpeg

received_1002569914107756.jpeg

received_679805490339830.jpeg

received_7284591404901079.jpeg

received_519472730344053.jpeg

received_250803287853752.jpeg

received_663733728998135.jpeg

received_1132832647677217.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பிழம்பு said:

வவுனியா சப்புமல்கஸ்கட ரஜமகா விகாரை விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி தேரர் தலைமையில் 29 தேரர்கள் மற்றும் சுமார் 300 பேர் வரையிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

சரத் வீரசேகர, கம்மன்பிலவின் கலகக்கூட்டம், கலகத்தை ஏற்படுத்தி குளிர் காய வந்தவர்கள். அனுப்பி விட்டு, வழிமேல் செவிவைத்து, கலகத்தை ஆரம்பிக்க காத்திருக்கும் கூட்டத்துக்கு செய்தி அனுப்ப, மனநோயாளி போல ஒரு பிக்கு சைவர்களின் வழிபாட்டிடத்துக்கு வந்து வலிந்து இழுத்தும் முடியாமல் பரிதவிப்போடு போகுது. அங்கிருந்து  அவர்களும் நடந்ததை பார்த்து வெக்கியிருப்பார்கள்! 

வசி, ரஞ்சித்.....உங்கள் நாட்டில் பௌத்த பிக்கு ஒன்று சிறுவர் வன்புணர்வு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளாராம். அறிந்தீர்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குகள்தான் பௌத்த, சைவ சிலைகளை உடைத்து மத கலவரங்களை ஏற்படுத்த முயன்றார்கள், யார் உத்தரவின்பேரில் என்பதும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்! 

அதன்பின் பௌத்த சிங்கள மக்களின் மனநிலை என்ன என்பதை அறியலாம். இலங்கையில்  பௌத்தத்தின் முடிவு அவர்களாலேயே எழுதப்படுகிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர்மலை: இலங்கையின் 'அயோத்தியாக' உருவெடுக்கிறதா? இந்து-பௌத்தர் பிரச்னை என்ன?

இலங்கை இந்து-பௌத்தர் பிரச்னை
கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 20 ஆகஸ்ட் 2023, 05:33 GMT
    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

முல்லைத்தீவு - குருந்தூர்மலை பகுதியில் இந்துகளுக்கும், பௌத்தர்களுக்கும் இடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்ன?

குருந்தூர்மலையில் பௌத்த விகாரை மற்றும் இந்து ஆலயம் ஆகியன ஒரே இடத்தில் காணப்படுகின்றன. இந்த பகுதி, பௌத்தர்களுக்கு சொந்தமானது என பௌத்தர்கள் கூறுகின்ற நிலையில், அதே பகுதி தமிழர்களுக்குச் சொந்தமானது எனக் கோரி பல ஆண்டு காலமாக பிரச்னை தொடர்ந்த வண்ணம் காணப்பட்டது.

இந்த நிலையில், குறித்த பகுதி தொடர்பில் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்று வந்த பின்னணியில், வழிபாடுகளில் ஈடுபட இரண்டு தரப்பிற்கும் முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இதன்படி, குருந்தூர்மலையில் உள்ள ஆதிசிவன் ஐய்யனார் ஆலயத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி பொங்கல் பொங்கி, வழிபாடுகளில் ஈடுபட இந்துக்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, அங்கு வருகை தந்த பௌத்த தேரர்கள் தலைமையிலான குழு, பொங்கல் நிகழ்வை நடத்துவதற்கு இடையூறு விளைவித்திருந்தது.

அதையடுத்து, அந்தப் பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக அன்றைய தினம் பொங்கல் பொங்குவதற்கு முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

 

முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடந்த விசாரணை

இலங்கை இந்து-பௌத்தர் பிரச்னை

தொல்பொருள் பெறுமதிமிக்க பகுதி மற்றும் பௌத்த மக்களுக்கு சொந்தமான பகுதி என்பதால், அங்கு தீ மூட்டி பொங்கல் பொங்குவதற்கு அனுமதிக்க முடியாது என பௌத்தர்கள் கூறியிருந்தனர்.

எனினும், தாம் திட்டமிட்டதன் பிரகாரம் பொங்கலை பொங்கி வழிபாடுகளை நடத்த போவதாக தமிழர்கள் கூறிய போதிலும், பாதுகாப்பு பிரிவு அதற்கு அனுமதி வழங்கவில்லை.

இரண்டு பிரிவுகளுக்கு இடையில் அமைதியின்மை ஏற்படும் என்பதைக் காரணம் காட்டி, அன்றைய தினம் பொங்கல் பொங்கி வழிபாடுகளை நடத்த பாதுகாப்பு பிரிவு அனுமதி வழங்கவில்லை.

எனினும், சிவன் ஆலயத்தில் வழிபாடுகளை நடத்துவதற்கு மாத்திரம் தமிழர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதற்கும் பௌத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அன்றைய தினம் வழிபாடுகளை மாத்திரம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து, குருந்தூர்மலை பகுதியில் வழிபாடுகளை நடத்துவது தொடர்பாக மீண்டும் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம் பெற்றதுடன், வழிபாடுகளை நடத்த இரண்டு தரப்பிற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

 

இந்து மக்களுக்கும் பௌத்த மக்களுக்கும் இடையே நடந்த 'வழிபாடு மோதல்'

இலங்கை இந்து-பௌத்தர் பிரச்னை

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி மீண்டும் பொங்கல் பொங்கி வழிபாடுகளை நடத்த இந்து மக்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், குருந்தூர்மலையை பாதுகாக்க அனைத்து பௌத்த மக்களையும் ஒன்றிணையுமாறு கோரி பௌத்தர்கள் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தனர்.

இதன்படி, குருந்தூர்மலைக்கு பல பேருந்துகளில் பெருமளவான பௌத்த மக்கள் அன்று அதிகாலை முதல் வருகை தர ஆரம்பித்திருந்தனர்.

குருந்தூர்மலையிலுள்ள பௌத்த விகாரைக்கு வருகைத் தந்த பௌத்த மக்கள், அங்கு பௌத்த முறைப்படி வழிபாடுகளை நடத்தியிருந்தனர்.

போலீசார், விசேஷ அதிரடிபடை, கலகத்தடுப்பு பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள், குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

பௌத்த வழிபாடுகள் நடந்துகொண்டிருந்த தருணத்தில், இந்து மக்கள் பொங்கல் பொங்கி வழிபாடுகளை நடத்துவதற்கான பொருட்களுடன் அங்கு வருகை தந்தனர்.

இவ்வாறு வருகை தந்த இந்து மக்கள், இந்து ஆலயம் அமைந்துள்ள பகுதிக்குச் சென்று பொங்கல் பொங்கி வழிபாடுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.

 
இலங்கை இந்து-பௌத்தர் பிரச்னை

இதன் பிரகாரம், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் வழிகாட்டலுக்கு அமைய, குறித்த பகுதியில் பொங்கல் பொங்கி வழிபாடுகளை நடத்த ஆரம்பித்த நிலையில், மற்றுமொரு தரப்பு இரண்டு இடங்களில் பொங்கல் பொங்க அனுமதி வழங்குமாறு கோரியிருந்தனர்.

எனினும், தொல்பொருள் பெறுமதிமிக்க பகுதி என்பதால், அங்கு தீ மூட்ட அனுமதி வழங்க முடியாது என தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கூறியிருந்தனர்.

எனினும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரதிநிதிகள் மற்றும் மேலும் பலர் தமக்கும் பொங்கல் பொங்கி வழிபாடுகளை நடத்த அனுமதிக்குமாறு கோரியிருந்தனர்.

இறுதி வரை இரண்டு இடங்களில் பொங்கல் பொங்கி வழிபாடுகளை நடத்த அனுமதிக்க முடியாது என தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இதையடுத்து, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்து மக்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட போதிலும், இரண்டு இடங்களில் பொங்கல் பொங்குவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில், ஒரே இடத்தில் இரண்டு தடவை பொங்கல் பொங்கி இந்துக்கள் வழிபாடுகளை நடத்தியிருந்தனர்.

 

இந்துக்கள் கூடிய இடத்திற்கு வர முயன்ற பௌத்த பிரிவினர்

இலங்கை இந்து-பௌத்தர் பிரச்னை

இவ்வாறு பொங்கல் பொங்கி வழிபாடுகளை நடத்தும் தருணத்தில், அங்கு பௌத்த பிக்கு ஒருவர் வருகைத் தந்து, தமது எதிர்ப்பை வெளியிட்டார்.

தொல்பொருள் பெறுமதிமிக்க இடத்தில், தொல்பொருள் விதிமுறைகளை மீறி இந்துக்கள் வழிபாடுகளை நடத்துவதாக, குறித்த பௌத்த பிக்கு எதிர்ப்பை வெளியிட்டார்.

இதன்போது, அந்த இடத்தில் கூடியிருந்த இந்துக்கள், பௌத்த பிக்குவிற்கு தமது எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், பௌத்த பிக்குவை அந்த இடத்திலிருந்து வெளியேற்ற பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அதையடுத்து, இந்துக்கள் பொங்கல் பொங்கி, ஆலயத்திற்கு முன்பாக கடவுளுக்கு படைத்து தமது வழிபாடுகளை நடத்தியிருந்தனர்.

இந்துக்கள் கூடியிருந்த இடத்திற்கு பௌத்த மக்கள் வருகை தர பல தடவைகள் முயன்ற போதிலும், அதற்கு பாதுகாப்பு பிரிவினர் அனுமதி வழங்கவில்லை.

வழிபாடுகளை நிறைவு செய்துக்கொண்ட இந்துமக்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். இதன்போது யாழ்ப்பாணம் சிவகுரு ஆதினத்தின் ஸ்தாபகர் தவத்திரு வேலன் சுவாமி மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் அங்கு பிரசன்னமாகி வழிபாடுகளை நடத்தினர்.

 
இலங்கை இந்து-பௌத்தர் பிரச்னை

பௌத்த மக்கள் இந்து ஆலயம் அமைந்துள்ள இடத்திற்கு வருகை தந்து, வழிபாடுகளை நடத்த வேண்டும் என பாதுகாப்பு பிரிவிடம் கோரிய நிலையில், அனைத்து இந்து மக்களும் அங்கிருந்து வெளியேறியதை அடுத்தே அனுமதி வழங்க முடியும் எனக் கூறியிருந்தனர்.

எனினும், பௌத்த மக்கள் வழிபாடுகளை நிறுத்த வேண்டும் எனவும், பௌத்த விகாரையை பார்வையிட தமக்கும் அனுமதி வழங்க வேண்டும் எனவும் வேலன் சுவாமி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கோரியிருந்தனர்.

இதன்போது, பாதுகாப்பு பிரிவிற்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டு, பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் அங்கு அமர்ந்தவாறு வழிபாடுகளை நடத்த ஆரம்பித்தனர்.

இதையடுத்து, பௌத்த மக்களை குறித்த பகுதிக்குள் பாதுகாப்பு பிரிவினர் அனுமதித்து, வழிபாடுகளை நடத்த அனுமதி வழங்கியிருந்தனர்.

பௌத்த மக்கள் இந்து ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு வருகைத் தந்து வழிபாடுகளில் ஈடுபட்டு அங்கிருந்து வெளியேறிய பின்னர், வேலன் சுவாமி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பௌத்த விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் சென்று பௌத்த விகாரையை பார்வையிட்ட நிலையில், அங்கும் அமைதியின்மை ஏற்பட்டது.

 

தொடரும் அமைதியின்மை

இலங்கை இந்து-பௌத்தர் பிரச்னை

இந்துக்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு பௌத்த மக்கள் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

இதன் போது, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கும், பௌத்த மக்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டு, பின்னர் நிலைமை வழமைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்துக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறிய போதிலும், பௌத்த மக்கள் குருந்தூர்மலை பகுதிக்கு பிற்பகல் வரை பஸ்களில் வருகைத் தந்ததை காணக்கூடியதாக இருந்தது.

யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் குருந்தூர்மலையில் தொடர்ச்சியாக பொங்கல்பொங்கி வழிபாடுகளை நடத்திய போதிலும், யுத்தம் நிறைவடைந்த 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் தமக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என தமிழர்கள் கூறுகின்றனர்.

எனினும், 14 வருடங்களில் பின்னர் இவ்வாறான சந்தர்ப்பம் கிடைத்தமை தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஆலயத்தை சூழு பல இடங்களில் பொங்கல் பொங்கி வழிபாடுகளை நடத்த அனுமதி வழங்கினால் சிறந்தது எனவும் இந்துக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/cn46jjyrypjo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் மலையில் இந்து மத வழிபாடுகள் பௌத்தர்களின் மனம் பாதிக்கப்பட்டுள்ளது - ஜயந்த சமரவீர

Published By: DIGITAL DESK 3

23 AUG, 2023 | 10:34 AM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

குருந்தூர் மலையில் இந்துக்கள் மத வழிபாடுகளில் ஈடுபடும் சூழலை தொல்பொருள் திணைக்களமே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. பொங்கல் நிகழ்வால் பௌத்தர்களின் மனம் பாதிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கோவிலில் பௌத்தர்கள் பௌத்த மத வழிபாடுகளில் ஈடுபடுவதில்லை. தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கு என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர புத்தசாசனம், மத விவகாரங்கள் மற்றும் கலை கலாசார அமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த  புத்தசாசனம், மத விவகாரங்கள் மற்றும் கலை கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் 2 வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. நான் குறிப்பிடும் கருத்துக்கள் வழக்குக்கு சாதகமாகவும் பாதகமாகவும் அமையலாம். ஆகவே கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்துக் கொள்கிறேன் என்றார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்களின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர குருந்தூர் மலை பௌத்தர்களுக்கு சொந்தமானது என்பதை உறுதிப்படுத்தும் பல சான்று பொருட்கள் கிடைத்துள்ளன.

குருந்தூர் மலையில் இந்துக்கள் வழிபாட்டில் ஈடுபட்டார்கள் என்பதற்கு எவ்வித சான்றுகளும் கிடையாது. இருப்பினும் குருந்தூர் மலை தமிழ் இந்துக்களுக்கு சொந்தமானது என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.

குருந்தூர் மலையில் தமிழர்கள் இந்து மத வழிபாடுகளில் ஈடுபடுவற்கு தொல்பொருள் திணைக்களம் வாய்ப்பளித்துள்ளது. இவ்வாறான நிலையில் தான் அவர்கள் குருந்தூர் மலைக்குச் சென்று பொங்கல் வழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள். தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க வேண்டிய தொல்பொருள் திணைக்களம் தொல்பொருள் கட்டளைச்சட்டங்களுக்கு புறம்பாக செயற்படுகிறது.

குருந்தூர் மலை தொடர்பான வழக்கில் தொல்பொருள் திணைக்களம் சார்பில் நீதிமன்றத்துக்கு முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி 'குருந்தூர் மலையில் இந்து மத வழிபாடுகளில் ஈடுபட தொல்பொருள் திணைக்களம் தடை விதிக்கவில்லை' என மன்றுக்கு அறிவித்துள்ளார். இதன்பின்னரே முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குருந்தூர் மலையில் இந்துக்களின் மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதால் பௌத்தர்களின் மனம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் மதவாத முரண்பாடுகள் தோற்றம் பெறுவதற்கு ஒரு காரணியாக அமையும். நல்லூர் கோவிலுக்குச் சென்று பௌத்தர்கள் வழிபாடுகிறார்கள். ஆனால் எவரும் அங்கு பௌத்த மத வழிபாடுகளில் ஈடுபடுவதில்லை.

குருந்தூர் மலை விவகாரத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் முறையற்ற வகையில் செயற்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு எதிரான என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள்,கலை கலாசார அலுவல்கள் அமைச்சர்  விதுர விக்கிரம நாயக்கவை நோக்கி கேள்வி எழுப்பினார்.

இதற்கு எழுந்து பதிலளித்த புத்தசாசன,மத விவகாரங்கள் மற்றும் கலை கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இந்த விடயத்தை சுற்றி வளைக்காமல் ஓரிரு வார்த்தைகளில் கேட்டிருக்கலாம். இந்த கேள்விக்கு நான் ஓரிரு வார்த்தைகளில் பதிலளிக்கிறேன்.

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் இரண்டு  வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் நான் குறிப்பிடும் கருத்துக்கள் அந்த வழக்கு விசாரணைக்கு  சாதகமாகவும் அமையும் பாதகமாகவும் அமையும் ஆகவே நீங்கள் (ஜயந்த சமரவீர) முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்துக் கொள்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/162976

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.