Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இத்தாலியில்  இருந்த  முதியோர் இல்லம் ஒன்று 29 யூலையில் பரபரப்பாக இருந்தது.

இத்தாலியில் மோரி என்ற நகரத்தில் இருந்த  முதியோர் இல்லத்துக்கு வைகாசியில்,புதிதாக வந்த முதியவர் பெப்பின் Bepìn(92) அமைதி இல்லாமல் இருந்தார். அவரது பார்வையிலேயே அவர் அந்த இல்லத்தில் இருக்க விரும்பவில்லை என்பது தெரிந்தது. ஆனாலும், தன்னுடைய குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்த்துப் பேசவோ தனது எண்ணத்தைச் சொல்லவோ அவர் விரும்பவில்லை.

அவருக்காக ஒதுக்கப்பட்ட அறையில் இருந்த கட்டிலில் போய் அமர்ந்து கொண்டார். முதியோர் இல்லத்தில் அவர் யாருடனும் பேசிக் கொள்வதில்லை. தனியாக இருந்து பழையதை அசை போட்டுக் கொண்டிருந்தார். அவரது நடையைப் போலவே நாட்களும் மெதுவாக போய்க் கொண்டிருந்தன.

ஆடி 29ந் திகதி முதியோர் இல்லம் அமைதியாக இருந்தது. போர்வையால் முழுமையாகத் தன்னை மூடியபடி பெப்பின் கட்டிலில் படுத்திருந்தார். பராமரிப்பாளர்கள் அவரின் அறைக்குள் வந்து பார்த்து, ஆழ்ந்து உறங்கும் பெப்பினை தொந்தரவு செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்கள். இரவு பத்து மணியாகி விட்டது. அன்றாடம் மாலையில் அவருக்குக் கொடுக்கப்படும் மருந்து மாத்திரைகள் இன்னமும் தரப்படவில்லை. இனியும் பொறுப்பதில் பயனில்லை அவரை எழுப்பி விடலாம் என பராமரிப்பாளர் ஒருவர் அவரை கையால் தட்டிய போது அவரது உடல் மெதுமையாக இருப்பதைப் பார்த்து பயந்து போய் போர்வையை விலக்கிப் பார்த்தால் பெப்பின் படுக்கையில் இல்லை. ஒரு உடல் அமைப்புக்கு ஏற்றவாறு தலையணைகள்தான் அந்தக் கட்டிலில் அடுக்கப்பட்டிருந்தன.

பெப்பின் அந்த முதியோர் இல்லத்தில் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. சில மாதங்களுக்கு முன்னர் அந்த முதியோர் இல்லத்தில் இருந்து காணாமல் போன முதியவர் ஒருவர் இரண்டு மாதங்களின் பின்னர் ஒரு ஓடையின் கரையில் இறந்தபடி கண்டெடுக்கப்பட்டிருந்தார். பெப்பினைக் காணவில்லை அதுவும் இரவு நேரத்தில் என எல்லோருக்கும் பயம் பிடித்துக் கொண்டது. பொலிஸாருக்கும் உறவினர்களுக்கும் உடனடியாகவே தகவல் அனுப்பப்பட்டன.

பெப்பினைத் தேடத் தொடங்கினார்கள். அதில் ஒரு பொலிஸ் குழு அவர் முன்னர் வாழ்ந்த வீட்டுக்குச் சென்று பார்த்த போது, தனது வீட்டில் அமைதியாக இருந்தார் பெப்பின்.

“இந்த வீட்டை நான்தான் கட்டினேன். என் கைகளால் கட்டப்பட்ட இந்த வீட்டை விட்டு நான் வேறு எங்கும் போகப் போவதில்லைஎன பொலிஸாருக்கு உறுதியாகச் சொன்னார் பெப்பின்.

முதியோர் இல்லத்தில் இருந்து தனது வீட்டிற்கான 10கிலோ மீற்றர் தூரத்தை எப்படி பெப்பின் கடந்து வந்தார் என்பதைப் பற்றி அவர் யாருக்குமே சொல்லவில்லை.

  • Like 7
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kavi arunasalam said:

கவலையளிக்கிறது  நான் பார்த்த அளவில்  திருமணமாகி பிள்ளைகளுடனிருப்பவார்கள்.  பெற்றோரை பரப்பதில்லை  காரணம் வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகள்...10 வயது தொடங்கி 18 வயது வரை வைத்து பார்ப்பதுண்டு    என்ன செய்யலாம்  பிள்ளை ஒன்றை பெற்று வளர்க்கவா?? 🤣

Just now, Kandiah57 said:

கவலையளிக்கிறது  நான் பார்த்த அளவில்  திருமணமாகி பிள்ளைகளுடனிருப்பவார்கள்.  பெற்றோரை பரப்பதில்லை  காரணம் வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகள்...10 வயது தொடங்கி 18 வயது வரை வைத்து பார்ப்பதுண்டு    என்ன செய்யலாம்  பிள்ளை ஒன்றை பெற்று வளர்க்கவா?? 🤣

10....18 வயது வரை உள்ளோர்   திருமணம் ஆகமால் இருக்கும் போது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 இது தான் சொல்றது காசை சேர்த்துவையுங்கோ   என்று  காசை வீசினால் எல்லாம் காலடியில். வேலைக்கு ஆள்  வைப்பதிலிருந்து  .கழுவி துடைப்பது வரை எல்லாம் நடக்கும்.   தனக்கு கண்டு  தான் தானம். ஆனால்முடிவதில்லையே ? .(பிள்ளை கஷ்ட பட பெற்றவர் மனம் இரங்கும்) முதியவர்களுக்கு தாம் வாழ்ந்த பழகிய இடங்களை விட பிரிய மனம் வராது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இறுதிக்காலம் வரை மற்றவர்களில் தங்காமல் இறப்புவரை எமது சொந்தக்காலில் நாம் நிற்கும் வாய்ப்பு கிடைப்பது ஒரு பேறு. 

காசை குறிவைத்து இயங்கும் உலகில் அந்திம காலத்தில் தகுந்த சேவை கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. 

6 hours ago, Kavi arunasalam said:

இத்தாலியில்  இருந்த  முதியோர் இல்லம் ஒன்று 29 யூலையில் பரபரப்பாக இருந்தது.

இத்தாலியில் மோரி என்ற நகரத்தில் இருந்த  முதியோர் இல்லத்துக்கு வைகாசியில்,புதிதாக வந்த முதியவர் பெப்பின் Bepìn(92) அமைதி இல்லாமல் இருந்தார். அவரது பார்வையிலேயே அவர் அந்த இல்லத்தில் இருக்க விரும்பவில்லை என்பது தெரிந்தது. ஆனாலும், தன்னுடைய குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்த்துப் பேசவோ தனது எண்ணத்தைச் சொல்லவோ அவர் விரும்பவில்லை.

அவருக்காக ஒதுக்கப்பட்ட அறையில் இருந்த கட்டிலில் போய் அமர்ந்து கொண்டார். முதியோர் இல்லத்தில் அவர் யாருடனும் பேசிக் கொள்வதில்லை. தனியாக இருந்து பழையதை அசை போட்டுக் கொண்டிருந்தார். அவரது நடையைப் போலவே நாட்களும் மெதுவாக போய்க் கொண்டிருந்தன.

ஆடி 29ந் திகதி முதியோர் இல்லம் அமைதியாக இருந்தது. போர்வையால் முழுமையாகத் தன்னை மூடியபடி பெப்பின் கட்டிலில் படுத்திருந்தார். பராமரிப்பாளர்கள் அவரின் அறைக்குள் வந்து பார்த்து, ஆழ்ந்து உறங்கும் பெப்பினை தொந்தரவு செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்கள். இரவு பத்து மணியாகி விட்டது. அன்றாடம் மாலையில் அவருக்குக் கொடுக்கப்படும் மருந்து மாத்திரைகள் இன்னமும் தரப்படவில்லை. இனியும் பொறுப்பதில் பயனில்லை அவரை எழுப்பி விடலாம் என பராமரிப்பாளர் ஒருவர் அவரை கையால் தட்டிய போது அவரது உடல் மெதுமையாக இருப்பதைப் பார்த்து பயந்து போய் போர்வையை விலக்கிப் பார்த்தால் பெப்பின் படுக்கையில் இல்லை. ஒரு உடல் அமைப்புக்கு ஏற்றவாறு தலையணைகள்தான் அந்தக் கட்டிலில் அடுக்கப்பட்டிருந்தன.

பெப்பின் அந்த முதியோர் இல்லத்தில் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. சில மாதங்களுக்கு முன்னர் அந்த முதியோர் இல்லத்தில் இருந்து காணாமல் போன முதியவர் ஒருவர் இரண்டு மாதங்களின் பின்னர் ஒரு ஓடையின் கரையில் இறந்தபடி கண்டெடுக்கப்பட்டிருந்தார். பெப்பினைக் காணவில்லை அதுவும் இரவு நேரத்தில் என எல்லோருக்கும் பயம் பிடித்துக் கொண்டது. பொலிஸாருக்கும் உறவினர்களுக்கும் உடனடியாகவே தகவல் அனுப்பப்பட்டன.

பெப்பினைத் தேடத் தொடங்கினார்கள். அதில் ஒரு பொலிஸ் குழு அவர் முன்னர் வாழ்ந்த வீட்டுக்குச் சென்று பார்த்த போது, தனது வீட்டில் அமைதியாக இருந்தார் பெப்பின்.

“இந்த வீட்டை நான்தான் கட்டினேன். என் கைகளால் கட்டப்பட்ட இந்த வீட்டை விட்டு நான் வேறு எங்கும் போகப் போவதில்லைஎன பொலிஸாருக்கு உறுதியாகச் சொன்னார் பெப்பின்.

முதியோர் இல்லத்தில் இருந்து தனது வீட்டிற்கான 10கிலோ மீற்றர் தூரத்தை எப்படி பெப்பின் கடந்து வந்தார் என்பதைப் பற்றி அவர் யாருக்குமே சொல்லவில்லை.

பகிர்வுக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எந்த வயதானாலும் தன் வேலையை தான் செய்யும் மட்டும் எங்கு வேண்டுமானாலும் வாழலாம்.அது முதியோர் இல்லமாக இருந்தாலும் சரி. 
முதுமை ஒரு பொருட்டல்ல 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதுமையில் கணவனுக்கு மென்மையான எதிரியாக மாறி வருபவள் அவனது மனைவியே.......பிள்ளைகளை முற்று முழுதாக நம்பி தன்னிலை தாழ்ந்தபோதும் அவர்களை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து கொள்வாள்.....இதைத்தான் விசு அவர்கள் "சம்சாரம் ஒரு மின்சாரம்" என்று அப்பவே பதிவு செய்து விட்டார்.......கணவன்தான் கௌரவம் என்னும் கிரீடத்தை சுமக்கவும் முடியாமல் இறக்கவும் முடியாமல் தவிப்பது வழமைதான்......!   

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.