Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மூடப்படுகிறது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மூடப்படுகிறது!

31 AUG, 2023 | 03:08 PM
image
 

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடி புராதன நூதனசாலை தற்போது உரிய பராமரிப்பின்றி, குப்பைகள் தேங்கிய நிலையில் காணப்படுகிறது. 

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை, வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இந்த பூர்வீக நூதனசாலைக்கு நாடெங்கிலும் இருந்து பெருமளவினர் அன்றாடம் சென்று பார்வையிடுகின்றனர். 

இந்த நூதனசாலையை பார்வையிடுபவர்களுக்கான  நுழைவுச்சீட்டுகளும் அங்கே வழங்கப்படுகின்றன. 

kky__1_.jpg

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் இலங்கை முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட ஆன்மிகம், அறிவியல், வர்த்தகம், வழிபாடு, அரசியல் உட்பட பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் இந்த நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

பராக்கிரமபாகு மன்னரின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த முஸ்லிம்களின் உருவங்களும் இந்த நூதனசாலையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

KKY_L__45_.jpeg

KKY_L__24_.jpeg

முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள், உணவுப் பழக்கவழக்கங்கள், வியாபார  முறைகள், புராதன பள்ளிவாசல்கள், முதலாவது 'வுளு' செய்த இடம் உட்பட பல நூறு இஸ்லாமிய கலாசாரங்கள் தொடர்பான பூர்வீக அடையாளங்களும் இங்கு காணப்படுகின்றன. 

KKY_L__36_.jpeg

KKY_L__43_.jpeg

பல பழைமையான பொருட்களையும் சில செயற்கையாக உருவாக்கப்பட்ட மாதிரி உருவமைப்புகளையும் காணக்கூடிய இந்த நூதனசாலையின் அறிவித்தல் பலகைகள் தற்போது சேதமடைந்துள்ளன. 

நூதனசாலைக்கு வருகை தரும் பார்வையாளர்கள் கூட எந்தவொரு வழிகாட்டலுமின்றி தான்தோன்றித்தனமாக செயற்படுவதாக கூறப்படுகிறது. 

சில காட்சியறைகளில் ஒட்டடைகள் காணப்படுகின்றன. சில பொருட்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

குறித்த நிலையத்தில் அதிகளவான குப்பைகள் சிதறி காணப்படுவதோடு, அங்கு வருகை தரும் பார்வையாளர்களை வழிநடத்துவதற்கான உத்தியோகத்தர்கள் குறைவாக உள்ளனர்.

அவ்வாறு வழிநடத்துநர்கள் இல்லாத காரணத்தால் சில பார்வையாளர்கள் செல்பி எடுப்பதற்காக அரிதான சில பொருட்களை தொடுவதாலும், விலைமதிப்பற்ற அச்சான்றுப் பொருட்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. 

KKY_L__46_.jpeg

KKY_L__32_.jpeg

இந்நிலையில், தற்போது காத்தான்குடி நகர சபையின் பராமரிப்பில் உள்ள இந்த நூதனசாலையை சில தினங்களுக்கு மூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, தூய்மையின்றி, சேதமடைந்து காணப்படும் நூதனசாலையின் பகுதிகளை திருத்தியமைக்கும் பணிகள் இடம்பெறவுள்ளதால் எதிர்வரும் செப்டம்பர் 4ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நூதனசாலை மூடப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக வரலாற்றைக் கூறும் வகையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் கலாசார மரபுரிமைகள் அமைச்சின் அனுசரணையுடன், தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்கள வழிகாட்டலில், பல மில்லியன் ரூபா செலவில் 4 மாடிகள் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த பூர்வீக நூதனசாலை கடந்த 2015 ஏப்ரல் 15ஆம் திகதி காத்தான்குடியில் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

KKY_L__26_.jpeg

KKY_L__25_.jpeg

KKY_L__18_.jpeg

KKY_L__14_.jpeg

KKY_L__4_.jpeg

KKY_L__12_.jpeg

KKY_L__8_.jpeg

KKY_L__9_.jpeg

காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மூடப்படுகிறது! | Virakesari.lk

செய்தியின் தலைப்பினைக் கவனிக்கவும்
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nochchi said:

காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மூடப்படுகிறது!

 

செய்தியின் தலைப்பினைக் கவனிக்கவும்
நன்றி

அவர்களும் இலங்கையின் பூர்விக குடிகளென காவிகளிடம் சொல்ல வேண்டும்🤣

  • கருத்துக்கள உறவுகள்

10 நாட்கள் மூடுவதற்கு வீரகேசரி இந்த இழுவை இழுக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கையோடு நல்ல தமிழ் பெயருடன் புதிய பெயர்பலகை ஒன்றையும் பொருத்திவிடுங்கள்.

இதுபோன்ற ஒரு இடத்தை பூர்வீக நூதனசாலை என்று அழைப்பது எந்தளவில் பொருந்தும் என்பது தெரியவில்லை. பொருட்காட்சி, அருங்காட்சியகம் அல்லது அருங்காட்சி நிலையம் என்று அழைப்பதுதான் சிறப்பாக பொருந்தும்.

இலங்கை இஸ்லாமிய வரலாற்று அருங்காட்சியகம், காத்தான்குடி

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இருந்த ராவான் (சிலர் இராவணன் என்பார்கள்) என்ற நபியின் பாடம் பண்ண பட்ட மம்மிக்கு என்னவானது? படத்தில் காணவில்லை?

பிகு

முஸ்லிம்கள் அரபு வியாபாரிகள்+ தமிழ் பெண்கள் கலப்பு என்றால் அவர்களின் பூர்வீகத்தில் பாதியாவது இலங்கையில்தான்.

நாங்களும் மோடவன்சாக்கள் மாரி மொக்கு கதை கதைக்க வேண்டாமே?

  • கருத்துக்கள உறவுகள்+

செய்தியில சோனிகளின் பல்லாயிரம் ஆண்டுகள் வரலாறு  என்று உள்ளது....💀

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நன்னிச் சோழன் said:

செய்தியில சோனிகளின் பல்லாயிரம் ஆண்டுகள் வரலாறு  என்று உள்ளது....💀

அந்த சோனியின் பல்லாண்டு வரலாறு மக்காவிலேதான் இருக்குது. அதைத்தான் இங்கு குறிப்பிடுகிறார்கள் என நினைக்கிறேன்.

இந்த படங்களுடன் முஸ்லிம்களின் வரலாறாக சஹ்ரானின் குண்டு வெடிப்புகளையும் வைத்தால் நல்லது. அப்பபோதுதான் முஸ்லிம்களின் சரித்திரம்  முழுமை பெறும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

முஸ்லிம்கள் அரபு வியாபாரிகள்+ தமிழ் பெண்கள் கலப்பு என்றால் அவர்களின் பூர்வீகத்தில் பாதியாவது இலங்கையில்தான்.

அண்மையில் ஒரு சிங்கள அரசியவாதி கூறியிருந்தார், அவர்கள் சிங்களப்பெண்களைத்தானாம் மணந்தனர். இனி இவர்களின் வரலாறு மாற்றப்படும், அப்போ பாத்துக்கொள்வோம். 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

அண்மையில் ஒரு சிங்கள அரசியவாதி கூறியிருந்தார், அவர்கள் சிங்களப்பெண்களைத்தானாம் மணந்தனர். இனி இவர்களின் வரலாறு மாற்றப்படும், அப்போ பாத்துக்கொள்வோம். 

இதுதான் சிங்களவனின் வட்டத்தை பெருப்பிக்கும் அணுகுமுறை (ஆனால் மதம் சம்பந்தபடுவாதல் முஸ்லீம்களை வட்டத்துள் இழுக்க முடியாது).

நமது நேர் எதிரானது.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தான், நம்மவரின் உயர்வில் பொறாமையும், நம்மை நாமே எதிரிக்கு காட்டிக்கொடுத்து சன்மானம் பெறுவதில் பெருமையும், அதில் நாமும் உள்ளடக்கப்பட்டுள்ளோம் என்பதை உணராத மடைமையாலும் நிறைந்திருக்கிறோம். அவர்களோ; வெறுப்பும் பொறாமையும் தம்பக்கம் திருமபும் சந்தர்ப்பங்களில் அதை தமிழர் பக்கம் திசை திருப்பி விட்டு தம்மையும் தமது இருப்பையும் பாதுகாத்து பெருப்பித்துக்கொள்வார்கள். மடையன் தமிழன்! இவர்களுக்காக குரல் கொடுக்கப்போய், தன்னை மறந்து, அவர்களின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, தமது பிரச்சனைகளை மறுத்தும், மறைத்தும் ஏமாளியாகி விடுகிறான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.