Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 16/7/2024 at 20:02, பெருமாள் said:

நன்றி இணைப்புக்கு  நன்னி சோழன் இவ்வளவு தமிழர் களை சிங்களவனை விட கூடியளவில் கொன்று தள்ளியிருக்கிறார்கள் இதை எங்கள் அரசியல் வாதிகளும் தட்டி கேட்ட்க முது கெலும்பு கிடையாது அவர்களின் அரசியல்வாதிகளுக்கு இவ்வளவு விடயங்கள் தெரிந்தாலும் தெரியாதது போல் யாழில் முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றித்தான் இன்னும் அழுகிறார்கள் .இனியாவது யாழ் வரலாம்தானே ஆனால் இன்னமும் பிச்சைகாரன் புண் சொறிவது போல் சொறிந்து கொண்டு இருக்கிறார்கள்  ஏதாவது தங்கள் பிச்சை சட்டியில் பணம் விழுமா என்று ?

எங்களை நாங்களே பலவீனப்படுத்திக்கொண்டதன் விளைவு. இதை நாம் எப்போது உணரப்போகிறோம்? 

  • Replies 168
  • Views 13.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    முன்னுரை     தமிழீழத்தின் சுதந்திரத்திற்கான விடுதலைப் போராட்டத்தில் சிங்கள அரசின் படைத்துறை இயந்திரத்தின் கைகளால் தென் தமிழீழ தமிழ் மக்கள் பட்ட துன்பங்களும் துயரங்களும் சொல்லொணாதவை. 

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இலங்கை  முஸ்லீம்கள்… ஈழத்தமிழர் மீது கட்டவிழ்த்து விட்ட அட்டூழியங்களை ஆவணப் படுத்தும் உங்கள் செயலுக்கு மிக்க நன்றி  நன்னிச்சோழன். 🥰 👍🏽 🙏

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    நிகழ்படங்கள் படுகொலை சாட்சிகள்    முஸ்லிம்களாலும் சிங்களப் படையினராலும் வீரமுனையில் நடைபெற்ற படுகொலைகள் தொடர்பான கண்கண்ட மற்றும் பிற சாட்சிகளின் வாக்குமூலப் பதிவு: இதில் தோன்றி நல்லவர் வேடமிட்டு முஸ்

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

எங்களை நாங்களே பலவீனப்படுத்திக்கொண்டதன் விளைவு. இதை நாம் எப்போது உணரப்போகிறோம்? 

மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்பும் வேலையை நிறுத்தும் நேரம் உணர்ந்து கொள்வோம் .

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்பும் வேலையை நிறுத்தும் நேரம் உணர்ந்து கொள்வோம் .

இருவரின்  பார்வையும் வேறு,..

நான் தவறுகளை இனம்காணுவதன் ஊடாக எம்மைப் பலப்படுத்த வேண்டும் என்கிறேன். 

(அதாவது, முஸ்லிம்களை எம்முடன் போராட்டத்தில்  கூடச் சேர்க்காவிட்டலும் பறவாயில்லை. எதிரிகளாக ஆக்காமல் தடுத்திருக்க வேண்டும். தற்போது தமிழ்க்  கிறீஸ்தவர்களை எதிரிகளாகக் காட்டும் வேலை நடைபெறுகிறது)

தாங்களோ,.

மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்பும் வேலை என்கிறீர்கள். 

☹️

Edited by Kapithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

படுகொலை விரிப்புகள்

 

  • புத்தகம்: தமிழினப் படுகொலைகள் 1956-2008

  • எழுத்துருவாக்கம்: வட கிழக்கு மனித உரிமைகள் செயலகம்

  • பக்கம்: -

  • நூல் வெளியீட்டு ஆண்டு: 2005

 

திராய்க்கேணி படுகொலை, 6 ஆகஸ்ட் 1990

Thiraykeni massacre by muslim ordinary civilians.jpg

படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I

1954ஆம் ஆண்டு அமரர் தர்மரட்ணம் என்பவரின் தென்னந்தோட்டத்தில் அமைக்கப்பட்ட குடியேற்றக் கிராமம் திராய்க்கேணியாகும். திராய்க்கேணிக்கு கிழக்குப் பக்கத்தில் ஒலுவில் கிராமமும் தெற்குப் பக்கத்தில் பாலமுனையும் அமைந்துள்ளது. இக்கிராமம் அட்டாளைச்சேனை உதவிஅரசாங்க அதிபர் பிரிவின் கீழும் அக்கரைப்பற்று நீதிமன்று நியாதிக்கத்தின் கீழும் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் முன்நூற்றெழுபதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் முன்நூற்றைம்பது வீடுகளில் வாழ்ந்து வந்தார்கள். இவர்களின் பிரதான தொழில் விவசாயமாகும்.

05.08.1990அன்று திரியாய்க்கேணியில் வசித்து வந்த முசுலிம்களில் ஒருவர் காட்டுக்குச் சென்றவேளை மர்மமான முறையில் உயிரிழந்ததனைத் தொடர்ந்து 06.08.1990அன்று அக்கிராமத்திலிருந்த நூறு-நூற்றைம்பது பேர் கொணட் முசுலிம் குழு திரியாய்க்கேணியிலிருந்த தமிழர்களைத் தாக்கினார்கள்.

தாக்கக் கத்தி, வாள், பொல்லு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தியதுடன், வீடுகளையும் அவர்களின் உடைமைகளையும் தீயிட்டு எரித்தார்கள். முசுலிம்களின் தாக்குதல் தீவிரமடைய கிராமமக்கள் அருகிலிருந்த பிள்ளையார் கோயிலில் அடைக்கலம் புகுந்தார்கள். கோயிலுக்குள் நுழைந்த முசுலிம் குழுக்கள் அடைக்கலம் புகுந்த மக்களை வாள்களால் வெட்டியும் கத்தியாற் குத்தியும் தாக்கினார்கள். இவர்களின் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு முசுலிம்கள் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் போது கோயிலுக்கு வெளியில் சிறீலங்கா இராணுவத்தினர் பவள் கவச வாகனத்தில் தாக்குதல் நடத்துபவர்களிக்குப் பாதுகாப்பினை வழங்கிக்கொண்டிருந்தார்கள். எஞ்சியிருந்த நூற்றிஐம்பது குடும்பத்தினர் அகதி முகாமுக்குச் சென்றனர்.

தாக்குதலில் தொண்ணூறிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். நாற்பதிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். முன்நூற்றுநாற்பதிற்கும் மேற்பட்ட வீடுகளும், எழுபது மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதியான சொத்துக்களும் எரிக்கப்பட்டன.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டோர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)

  1. இளையதம்பி மயிலாப்போடி

  2. இராமக்குட்டி மயில்வாகனம் - தொழிலாளி 18

  3. இராசதுரை பிரகலா -

  4. நாகலிங்கம் தம்பிராசா -

  5. நல்லதம்பி புலேந்திரன் தொழிலாளி 27

  6. கனகரத்தினம் அழகையா ஊழியர் 35

  7. கனகரட்ணம் சுப்ரமணியம்

  8. கந்தக்குட்டி பூபாலப்பிள்ளை - தொழிலாளி 19

  9. கந்தக்குட்டி வேலாயுதம்

  10. கா.பாஸ்கரலிங்கம் தொழிலாளி 39

  11. கா.சாமித்தம்பி - விவசாயம்  - 43

  12. காந்தன் நவரட்ணம் -

  13. காளிக்குட்டி பாக்கியராசா

  14. காளிக்குட்டி தம்பிப்பிள்ளை

  15. கதிரன் கணபதி

  16. கதிரன் பாக்கியராசா தொழிலாளி 34

  17. கணபதி காளிக்குட்டி ஊழியர் 50

  18. கணபதி காளிமுத்து வைத்தியர் 45

  19. கணபதிப்பிள்ளை கிருஸ்ணன்.

  20. கணபதிப்பிள்ளை அமிர்தலிங்கம்

  21. பூபாலப்பிள்ளை புலேந்திரன் தொழிலாளி 30

  22. பூபாலப்பிள்ளை ஏகாம்பரம் தொழிலாளி 24

  23. தம்பியப்பா கோபால் தொழிலாளி 50

  24. தம்பிமுத்து ஆனந்தராசா

  25. மு.கணபதி தொழிலாளி 76

  26. மா.குஞ்சித்தம்பி தொழிலாளி 50

  27. மா.ஜெயசீலன் தொழிலாளி 24

  28. மார்க்கண்டு கிருபை தொழிலாளி 30

  29. மார்க்கண்டு மயில்வாகனம்

  30. மார்க்கண்டு ஜெயக்குமார் -

  31. முருகன் இளையதம்பி தொழிலாளி 39

  32. முருகேசு நாகேந்திரன் தொழிலாளி 28

  33. பொன்னன் அழகையா தொழிலாளி 29

  34. செல்லையா பாக்கியராசா தொழிலாளி 26

  35. செல்வம் சீனித்தம்பி

  36. செல்லத்துரை கிருஸ்டியன் -

  37. செல்லத்துரை பாலச்சந்திரன் --

  38. செல்லத்துரை அமிர்தலிங்கம்

  39. வேலன் கதிரேசப்பிள்ளை தொழிலாளி 44

  40. வேலுப்பிள்ளை குணராசா

  41. வேலுப்பிள்ளை பாஸ்கரலிங்கம் தொழிலாளி 35

  42. சாமித்தம்பி நாகராசா

  43. சாமித்தம்பி சௌந்தராஜன் -

  44. சின்னத்தம்பி கன்னி

  45. சின்னத்தம்பி தம்பிப்பிள்ளை

  46. சின்னத்தம்பி சிவசிதம்பரம் -

  47. சற்குணம் இளையதம்பி -

  48. சற்குணம் விஜயலட்சுமி

  49. வ.பாக்கியராசா தொழிலாளி 26

  50. விஸ்வலிங்கம் அழகை

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

படுகொலை விரிப்புகள்

 

  • புத்தகம்: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I
  • பக்கம்: 134-137
  • மொழிபெயர்ப்பு: நன்னிச் சோழன்
  • நூல் வெளியீட்டு ஆண்டு: 2007 

 

திராய்க்கேணி படுகொலை, 6 ஆகஸ்ட் 1990

Thiraykeni massacre by muslim ordinary civilians.jpg

படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I

திராய்க்கேணி முதலில் அம்பாறையின் மிகவும் இதமான கோட்டத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் தென்னை பெருந்தோட்டமாக இருந்தது. ஒலுவில், மீனோடைக்கட்டு மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய இடங்களில் காணியற்ற முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் ஆகிய இருதரப்பு மக்களினதும் இன்னல்களைக் கண்டு இரக்கப்பட்ட முதலாளியால் அந்தத் தோட்டம் ஒரு ஏக்கருக்கு 200/- என்ற மிகக் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டது. காரைதீவைச் சேர்ந்த நாகப்பர் சுப்ரமணியம், பெரிய கணபதிப்பிள்ளை உபாத்தியார் போன்ற பல்வேறு குமுகாய தலைவர்கள் இவ்வூரை வெற்றிகரமான கமக் கோட்டமாக வளர்ச்சியடைய கடுமையாக உழைத்தனர்.

06.08.1990 அன்று ஊர் மக்களின் அமைதியும் கடும் உழைப்பும் அழிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் ஊரிற்குள் நுழைந்து தமிழர்களின் வீடுகளுக்கு தீ வைத்து, தமிழ் ஊர் மக்களைத் தாக்கியதோடு அவர்களின் சிதைந்த சடலங்களை அருகிலுள்ள இந்து கோவிலில் வீசினர். இந்த கொடூரமான குற்றத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளிடமிருந்து பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள், அத்தகைய தாக்குதலுக்கு தமிழர்களிடமிருந்து எந்த தூண்டுதலும் இல்லை என்பதை வெளிப்படுத்துகின்றன.

நிகழ்வுகளின் பின்னணி, தாக்குதலுக்கு வழிவகுத்த நோக்கங்களும் முன்னங்களும் (intension) மற்றும் அது எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பவற்றை ஒரு பெண் சாட்சி வெளிப்படுத்தினார்.

afsa.jpg

சாட்சி | படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I

"எனக்கு 1976 இல் திருமணமாகி மூன்று குழந்தைகள் - இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள். ஆகஸ்ட் 6, 1990 அன்று காலை 6 மணியளவில்; எனது பக்கத்து முஸ்லீம் வீட்டின் திசையில் இருந்து பெண்களின் ஓலம் கேட்டது. நாங்கள் எங்கள் அயலவர்களான முஸ்லிம்களுடன் நட்புறவைப் பேணி வந்ததால், முஸ்லிம் பெண்கள் கதறி அழுத வீட்டிற்கு விரைந்தேன். 

"நான் அந்த வீட்டில் பல பெண்களைக் கண்டேன், குடும்பத்தைச் சேர்ந்த சிலரின் சாவால் அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர். அலிமடக்காடு நெல் வயலுக்குச் சென்ற தமது ஆண்கள் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக பெண்கள் தெரிவித்தனர். கொலையாளிகள் யார் என்று எவருக்கும் தெரியவில்லை.

"துக்கமடைந்த குடும்பத்தினருடன் சுமார் அரை மணி நேரம் செலவிட்டேன், அவர்களின் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டேன், ஆனால் குழந்தைகள் பாடசாலைக்கு செல்வதற்கு முன்பு அவர்களுக்கான வீட்டு வேலைகளைச் செய்ய வீடு திரும்பினேன். நான் வீடு திரும்பிய சில நிமிடங்களில், என் வேலையில் மும்முரமாக இருந்தபோது, மக்கள் கத்துவதைக் கேட்டேன். என் கணவருடன் சேர்ந்து, என்ன தவறு நடந்தது என்று பார்க்க நுழைவாயிலுக்கு விரைந்தேன். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் தங்கள் வீடுகளை விட்டு கொந்தளிப்புடன் நகர்வதைக் கண்டோம். அவர்கள் பெரும் குழப்ப நிலையில், அச்சத்துடனும் கவலையுடனும் கலக்கத்திலிருந்தனர். திராய்க்கேணியை அழிப்பதென்று உறுதிபூண்ட முஸ்லிம்களைக் கொண்ட சினமான கும்பலிடம் இருந்து தாங்கள் ஓடுவதாக எங்களிடம் கூறினார்கள். வீடுகளில் இருப்பது ஊறானது என்பதால் பிள்ளையார் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். ஓடிக்கொண்டிருந்த தமிழர்கள், “இங்கே தங்கியிருக்காதே; நட்பு முஸ்லீம்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி கும்பல் கனமான ஆயுதங்களைக் பூண்டுள்ளது" என்று எழுதருகையிட்டனர்.

"இந்த செய்தியால் என் கணவர் அதிர்ச்சியடைந்தார். ஊரில் உள்ள மொத்த மக்களும் வெளியேறும் போது, நாங்கள் வீட்டில் தங்கியிருப்பதில் ஞானமில்லை. எங்கள் சொத்துக்களை எல்லாம் வீட்டிற்குள் வைத்து, கதவுகளைத் திறந்து வைத்துவிட்டு, குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி, பிள்ளையார் கோயிலில் தஞ்சம் அடைந்தோம். சிறிது நேரத்தில் முஸ்லிம்கள் தொலைவில் சாலையில் தோன்றினர்.

"கத்தி, வாள், அரிவாள், குண்டாந்தடி என ஆயுதம் ஏந்திய 150க்கும் மேற்பட்ட ஆட்களைக் கொண்ட கலகக் கும்பல், காட்டுத்தனமானதும் வன்முறையானதுமான சினத்தால் ஆட்கொள்ளப்பட்டவர்களாகத் தோற்றமளித்ததோடு, தமிழர்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, தமிழர்களை எதிர்த்துப் போராட முஸ்லிம்களை ஒன்றுபடுமாறும் அழைப்பு விடுத்தனர். நாங்கள் திகைப்பில் இருந்தோம், ஒவ்வொரு நிமிடமும் அச்சத்தில் கழித்தோம். வெளிப்படையான ஊறிலிருந்து மக்களை காப்பாற்ற தெய்வீக தலையீட்டிற்காக மக்கள் வழிபாடு செய்தனர். நாங்கள் மேலே பார்த்தபோது வானத்தில் புகை மேகங்கள் எழுவதைக் கண்டோம். எரிக்கப்பட்ட தமிழர்களின் வீடுகளில் இருந்து புகையெழும்பினது. காடையர்கள் கோவிலை நெருங்கியதும், மக்கள் பெரியதம்பிரான் கோயிலை நோக்கி ஓடினார்கள், கும்பல் பின்தொடர்ந்தது. மக்கள் தங்கள் தலைவிதியை ஏற்று, தாக்குதலாளிகளின் அமட்டுக் கூட்டத்தின் ஒவ்வொரு அசைவையும் அச்சத்துடன் கண்ணுற்றிருந்தனர். ஒரு நொடியில் - கும்பல் கோயில் வளாகத்தை அடைந்த உடனேயே, ஒரு கவச சகடம் (car) கோயில் வளாகத்திற்குள் வந்தது. 6 படைவீரர்கள் ஊர்தியில் சீருடையில் இருந்தனர்.

"படையினர் வேறுபாடாக நடந்து கொண்டனர். அவர்கள் தாங்களாகவே தாக்குதலில் பங்கேற்கவில்லை. படையினரின் நடத்தை தமிழ் இளைஞர்களுக்கு கவச வண்டியை நெருங்குவதற்கு சற்று தைரியத்தையளித்தது. தலைக்கு மேல் கைகளை உயர்த்தி, படையினரிடம் நடந்து சென்று, கோவிலில் தஞ்சம் புகுந்த ஏழை அப்பாவித் தமிழர்கள் மீது எந்தத் தாக்குதலும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முஸ்லிம்கள் மீது மேலோங்க வேண்டும் என்று படைவீரர்களிடம் கெஞ்ச முயன்றனர். படையினர், என்னிடம் கூறப்பட்டோர், முஸ்லிம்களை நிறுத்த வேண்டும். ஆனால், தமிழர்கள் முஸ்லீம்களை கொன்று விட்டதாகவும் அதனால் படைவீரர்கள் தலையிட முடியாது என்றும் அந்த இளைஞர்களிடம் படையினர் கூறியதாக குற்றம் சாட்டப்படுகிறது.

"படைவீரர்கள் கைகளை அசைத்து, தமிழ் இளைஞர்களை தங்களிடமிருந்து விலகிச் செல்லுமாறு கூறினர், மேலும் அவர்களின் கைகள் அசைப்பு தாக்குதலாளிகள் தங்கள் தாக்குதலைத் தொடங்குவதற்கான குறிகையாகவும் எடுத்துக் கொள்ளப்பட்டது. முதலில் கோவிலை அவமதிக்க தொடங்கினார்கள். சிலர் சுவரை சேதப்படுத்த சென்ற அதே வேளை மற்றவர்கள் கதவை உடைத்தனர். ஆயினும் தமிழர்கள் தாக்குதல் நடத்தியவர்களிடம் ஒரு சொல் கூட பேசவில்லை. சில முஸ்லிம்கள் கருவறைக்குள் நுழைந்து புனித திரிசூலத்தையும் தரையில் உறுதியாகப் பதித்த ஈட்டியையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர். கோவிலில் பூசாரிகள் பாவித்த கத்தி, கோடாரி, அலவாங்கு போன்ற கருவிகளை சிலர் எடுத்துச் சென்றனர். பின்னர் கோயிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட திரிசூலம், ஈட்டி மற்றும் கருவிகளால் தமிழர்கள் தாக்கப்பட்டனர்.

"முதலில் தரையில் அமர்ந்திருந்த ஆண்களை தாக்குதலாளிகள் கத்திகளைக் கொண்டு தாக்கினர். பின்னிற்கு இருந்தவர்கள் தப்பினர். தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில், காயமடைந்தவர்களில் சிலர் கூட ஓடிவிட்டனர், ஆனால் உயிருடன் திரும்பவில்லை. எனது கணவர் கத்தியால் தாக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். தரைப்படையினரும் முஸ்லிம்களும் இணைந்து நடத்திய தாக்குதலா என்று மக்கள் வியந்தனர் - இதற்கு முன்னரும் தமிழ்ப் பரப்புகளில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்து ஆலய வளாகத்தில் படையினரின் வருகை தாக்கத்தை ஏற்படுத்தியது. காடையர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் தோன்றியதோடு அவர்கள் வெற்றிக்களிப்பில் கூச்சலிட்டனர்.

"தாக்குதலாளிகள் அப்பாவிகளை அடித்து நொறுக்குவதில் மும்முரமாக இருந்த போது, முதன்மை நெடுஞ்சாலையில் இருந்து வேட்டெஃகங்களின் வேட்டுகள் கேட்டன. தமிழர்களின் அழித்தொழிப்பைக் காண திராய்க்கேணிக்கு வந்த படைவீரர்கள் கவச சகடத்தில் தப்பியோடினர்.

"கவசவூர்தி சென்றதும், 'புலிகள் எங்களைத் தாக்க வருகிறார்கள்' என்று அலறியடித்துக்கொண்டு தாக்குதலாளிகளும் ஓடிவிட்டனர். அவர்கள் அனைவரும் ஓடிப்போன பிறகு, நான் சுற்றிப் பார்த்தேன், எனது மக்களில் பலர் இறந்துவிட்டதைக் கண்டேன், கொல்லப்பட்டிருந்தவர்களில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் குழந்தைகளும் அடங்கியிருந்தனர். விஜயலட்சுமி என்று அழைக்கப்படும் மிகவும் இளம் தாயும் அவரின் கைக்குழந்தையும் கொல்லப்பட்டிருந்தது.

"காவல்துறையின் ஒரு சேர்படையினர் - சிறப்பு அதிரடிப்படை பல ஊர்திகளில் வந்தனர். வழியெங்கும் சுடுகலச் சூடு நடத்திக் கொண்டே அங்கு வந்திருந்தனர். அவர்களின் சுடுகலச் சூடு படையினரையும் தாக்குதலாளிகளையும் விரட்டியடித்ததை நாங்கள் உணர்ந்தோம். ஏராளமானோர் கொல்லப்பட்டு காயமுற்றிருப்பதைக் கண்டனர். அதிர்ச்சியிலும் அச்சத்திலும் உறைந்திருந்த பெண்கள் பேச முடியாமல் தவித்தனர். சுற்றிலும் அரத்தமும் சதையும் சிதறிக் கிடந்தன. காயமடைந்தவர்களின் வீறிட்ட ஓலங்களுக்கும் அலறல்களுக்கு நடுவணில், சிறப்பு அதிரடிப்படையின் முதல்வர் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் காப்பையும் உதவியையும் உறுதியளித்தார்."

** சான்றுரைக்கப்பட்ட அறிக்கையின்படி, ஒரு சிறுமி பிடிபட்டு வன்புணரப்பட்டு, அதன் பிறகு, நெருப்பில் வீசப்பட்டார். பாதி எரிந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்பாளர்கள் மீட்டு புதைத்தனர்.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

படுகொலை விரிப்புகள்

 

  • புத்தகம்: தமிழினப் படுகொலைகள் 1956-2008
  • எழுத்துருவாக்கம்: வட கிழக்கு மனித உரிமைகள் செயலகம்
  • பக்கம்: -
  • நூல் வெளியீட்டு ஆண்டு: 2005   

 

சேவியர்புரம் படுகொலை, 7 ஆகஸ்ட் 1990

xavierpuram massacre by sri lankan muslims.jpg

படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I

குறவர் பழங்குடியினர் 1950ல் குடியமர்த்தப்பட்ட இடத்தின் பெயர்தான் அம்பாறையில் உள்ள சேவியர்புரம்.

7ம் தேதி ஆகஸ்ட் மாதம், 1990 குறவர் பழங்குடியினரின் வீடுகள் கொழுத்தப்பட்டு, அந்த சமூகத்தைச் சேர்ந்த கொல்லப்பட்டனர்.இவர்களது இளைஞர்களும் கோயில்கள், பாடசாலைகள் சமூகப் பொதுமண்டபங்கள் யாவும் இடிக்கப்பட்டதோடு, இச்சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என அனைவரையும் மனிதவதைக்கு இந்த நாளில் உள்ளாக்கப்பட்டனர். குறவர் சமூகத்தின் மீது எவ்வித காரணங்களுமின்றி வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இச்சமூகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இஸ்லாமிய ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர்கள் என பின்னர் தெரியவந்தது. விடுதலைப்புலிகள் இச்சமூகத்தோடு உறவு வைத்திருந்தார்கள் என்னும் குற்றச்சாட்டோடு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. மினியக்கா என்ற பெண்மணி சேவியர்புரம் தாக்குதல் குறித்து சொல்லிய போது,

"1990 ஆகஸட் 7ம் தேதி முற்பகல் 11 மணிக்கு அன்றைய முதல்வேளை உணவை சிலர் உட்கொண்டும், வேறு சிலர் சமைத்துக் கொண்டும் இருந்த சமயத்தில், வன்முறையாளர்கள் அங்கு வந்தனர். நீதை சாலை வழியாக 18 டிராக்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாய் வந்தது. வந்தவர்களிடம் கத்தி, குண்டாந்தடிகள், அரிவாள், துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இருந்தன. வன்முறையாளர்கள் எங்களது கிராமத்தின் நடுவில் நின்று கொண்டு, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரையும் ஒன்றாய் கூடும்படி கட்டளையிட்டனர். வன்முறையாளர்கள் கொண்டு வந்த ஆயுதங்களை பார்க்கும் போது ஏதோ இராணுவ படை போன்று தெரிந்தது. வன்முறையாளர்கள் எங்களிடம் நடந்து கொண்ட முறையும் பயத்தை வரவழைத்தது. சேவியர்புரம் மக்கள் அனைவரும் இந்த நடவடிக்கையை பார்த்து திகைத்துப் போய் செய்வதறியாது நின்றனர். சாப்பிட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும், அவசரமாய் கைகளை கழிவிக் கொண்டு, வன்முறையாளர்களின் முன் கூடினர். நானும், எனது கணவர் மற்றும் என்னுடைய மகன், மகள் எல்லோரும் அங்கு நின்றோம். சீருடையணிந்த வன்முறையாளர்களை இஸ்லாமிய ஊர் காவல் படையினர் என்றும் அவர்களுடன் வந்த ஏனையோர் அக்கரைப்பத்து பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் எங்களால் அடையாளம் காண முடிந்தது.”

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார்,

“வந்திருந்த இஸ்லாமிய ஊர்காவல் படையினர் மற்றும் வன்முறையாளர்களின் முன் நாங்கள் கூடியிருந்த போது, என்னுடைய ஒரே மகனை எங்கள் முன்னேயே மனித வதைக்கு உட்படுத்தி, கொடுமைப் படுத்தினர். அதேபோல், ஜெயராஜ் என்ற எங்களது சமூகத்தைச் சேர்ந்த வேறோரு இளைஞரையும் தொடர்ந்து மனிதவதைக்குட்படுத்தினர்.

"எனது கணவரால் எங்களது கண் முன்னே எங்களது ஒரே மகனை கொடுமைப்படுத்தியது பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனது கணவர். துள்ளியெழுந்து தனது எதிர்ப்பை தெரியப்படுத்தினர். நானும் சத்தமிட்டுக் அழுதேன். வன்முறையாளர்களில் ஒருவன், ஒரு மரக்கட்டையை எடுத்து எனது கணவரது நெஞ்சை நோக்கி கொடுத்த அடியினால், அவர் சுயநினைவை இழந்து கீழே விழுந்தார். அவர் கீழே விழுந்தது. ஏதோ ஒரு பெரிய மரம் சாய்ந்தது தோன்றியது. நான் அவசர அவரசமாய் அங்கு ஒடிச் சென்ற எனது கணவரின் தலையை தூக்கி பார்த்தேன். அப்போது, மற்றொரு வன்முறையாளன். ஆயுதத்தைக் கொண்டு எனது தலையில் பலமாய் அடித்தான். இதனால், எனது தலையிலிருந்து இரத்தம் கொட்டியது மட்டும் உணர்ந்து கொண்டிருக்கும் போதே மயக்கமுற்றேன்.

"இத்தாக்குதலிருந்து தப்பிய அனைவரும் காயம்பட்டோரையும் தூக்கிக்கொணடு திருக்கோயிலுக்கு ஓடினோம். அவர்கள் அனைவரும் தங்களது முதுகில் உடுத்த துணி மட்டும் எடுத்துக் கொண்டு ஒடினர். இதில் சிலர் முந்திய நாள் உணவு கூட உண்ணாதிருந்தனர். 

"நான் கண் திறந்து பார்த்தபோதுதான், ஒரு மருத்துவமனை படுக்கையில் இருப்பதை உணர்ந்தேன். அங்கு என்னுடன் கிராமத்தைச் சேர்ந்த பலரும் இருந்தனர். அப்போது மாலை சுமார் 4 மணி இருக்கும். நான் என்ன நடந்தது என யூகிக்க முயற்சித்த போதும், முடியாமல் போனது. கவலையும் அதிர்ச்சியும் அடைந்த உறவினர்கள் எனது குடும்பத்தாரை பார்க்க வந்திருந்தனர். இஸ்லாமிய ஊர் காவல் படையினர் பெட்ரோலையும், மண்ணெண்ணையையும் ஊற்றி எனது கிராம வீடுகளை எரியூட்டியதையும். அங்கு பலர் கொல்லப்பட்டதையும் சொன்னார்கள். எல்லா மக்களும், கிராமத்திலிருந்து ஓடிவிட்ட போதும், சிலர் மட்டும். இறந்தவர்களுக்கு கடைசி மத சடங்குகளை செய்ய சேவியர்புரம் சென்றனர்.

"என்னையும் ஏதோ ஒன்று அவர்களுடன் சேவியர்புரம் செல்ல தூண்டியது. என்னுடைய உடல்நிலை மிக மோசமாய் இருந்தபோதும், என்னைப் போல வலியால் துடித்துக் கொண்டிருந்த எனது கணவரையும் கண்டுபிடித்து, எங்களது கிராமத்தை சேர்ந்த ஒருவருடைய டிராக்டர் வண்டியில் சுமார் 20 பேர்களை ஏற்றிக் கொண்டு எனது கிராமத்தை நோக்கி சென்றோம். அங்கு என்னுடைய மகன் துப்பாக்கி குண்டுகளால் சிதைந்து கிடந்ததைப் பார்த்து கல்லானேன். அருகே மேலும் இருவரது உடல்கள் கிடந்தது.

"அழித்து ஒழிக்கப்பட்ட அந்த கிராமத்தின் மயான அமைதி என்னுள் ஒரு அச்சத்தை உண்டு செய்தது. சிதைந்து கிடந்த வீடுகள் பேயகளை நிளைவுபடுத்தியது. நாங்கள் உடனடியாக திருக்கோவில் ஊருக்கு திரும்பினோம்.”

மாசன்னா என்ற வயதான பெண்மணி குறவர் பழங்குடியினர் வாழ்ந்து வந்த சேவியர் புரத்திலிருந்த மற்றொரு பாதிக்கப்பட்ட நபராவார். அந்த வயதான பெண்மணி தாக்குதல் நடத்தியவர்கள் எல்லோரையும் தனக்கு தெரியும் என்று கூறினார். இப்பெண்மணி வாழ்ந்து வரும் இடத்தின் அருகிலே இருந்த நெல் உற்பத்தியாளர்கள்தான் அன்று தாக்குதல் நடத்திய வன்முறையாளர்கள். அந்த இஸ்லாமிய நெல் உற்பத்தியாளர்களின் வயல்களிலேயே அந்த குறவர் சமூகத்தினர் வேலை செய்து வந்தனர். அம்மாதிரியான உறவுள்ள மக்களின் கிருத்துவகோயில், பாடசாலை, வீடுகள் என அனைத்தையும் நிர்மூலம் ஆக்கினது மட்டுமல்லாது அம்மக்களையும் அன்று கொன்று குவித்தனர்.

வீடுகளை இழந்து தமது வாழ்வாதரங்களை தொலைத்து அன்று கண்ட கொடுமைகளை தாங்க முடியாத அம்மக்களில் சிலர் பின்னர் தற்கொலை செய்து மாண்டனர்.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

படுகொலை விரிப்புகள்

 

  • புத்தகம்: தமிழினப் படுகொலைகள் 1956-2008
  • பக்கம்: -
  • மொழிபெயர்ப்பு: நன்னிச் சோழன்
  • நூல் வெளியீட்டு ஆண்டு: 2005

 

ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, 12 ஆகஸ்ட் 1990

kalmunai massacre by sri lankan muslims.jpg

படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I

11.08.1990 அன்று இராணுவத்தினர் செங்கலடி, கிரான் போன்ற கிராமங்களைச் சுற்றிவளைத்து மக்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். இராணுவத்தினரின் துப்பாக்கி பிரயோகத்தினால் காயமடைந்தவர்களில் பத்துப் பேரிற்கும் மேற்பட்டவர்கள் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்கள்.

12.08.1990 அன்று இரவு 11.00 மணிக்கும் 12.00 மணிக்கும் இடையில் இராணுவத்தினரும் முசுலிம் குழுக்களும் இணைந்து வைத்தியசாலையிற் சிகிச்சைபெற்று பொதுமக்கள் பத்துப் வைத்தியசாலையினுள் வைத்தே வெட்டியும் சுட்டும் படுகொலை செய்தார்கள். ஏறாவூர் வந்த பேரையும்

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை  முஸ்லீம்கள்… ஈழத்தமிழர் மீது கட்டவிழ்த்து விட்ட அட்டூழியங்களை ஆவணப் படுத்தும் உங்கள் செயலுக்கு மிக்க நன்றி  நன்னிச்சோழன். 🥰 👍🏽 🙏

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள்மீது இலங்கை இராணுவத்தினராலும், இஸ்லாமிய மதவெறியர்களாலும் நிகழ்த்தப்பட்ட  இனவன்முறைகளை  ஆவணப்படுத்தும் திரு நன்னிச் சோழன் அவர்களின் செயற்பாட்டுக்கு மிகுந்த நன்றிகளை நானும் தெரிவிக்கிறேன்.  தொடர்க உங்கள் பணி.  வரலாற்றிலிருந்து நீக்கப்படமுடியாத, மன்னிக்கப்பட முடியாத கொடியவர்களின் வன்மத்துக்கு என்ன பிராயச்சித்தமுள்ளது.  என்றும் இவர்கள் எதிரிகளே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

படுகொலை விரிப்புகள்

 

  • புத்தகம்: 
    • தமிழினப் படுகொலைகள் 1956-2008
    • Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I
  • எழுத்துருவாக்கம்: வட கிழக்கு மனித உரிமைகள் செயலகம்
  • பக்கம்: -
  • மொழிபெயர்ப்பு (சாட்சிகள் மட்டும்) நன்னிச் சோழன்
  • நூல் வெளியீட்டு ஆண்டு:
    • 2005
    • 2007 

 

சத்துருக்கொண்டான் படுகொலை, 09 செப்ரெம்பர் 1990

sathhturukkondan massacre by muslims and sinhalese.png

படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I

மட்டக்களப்பு நகரிலிருந்து இரண்டு கி.மீ. தூரத்தில் வடக்குத் திசையில் சத்துருக்கொண்டான் கிராமம் அமைந்துள்ளது. சத்துருக்கொண்டான் எல்லைக் கிராமங்களாக திராய்மடு, அரசையடி போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன. சிறிய குளத்தின் கீழ் வயல் நிலங்களை உள்ளடக்கி இக்கிராமம் அமைந்துள்ளது.

1990களின் ஆரம்பத்தில் உள்நாட்டு யுத்தம் மீண்டும் தீவிரமடைந்ததனைத் தொடர்ந்து சத்துருக்கொண்டானில் பாரிய இராணுவ முகாமினை சிறீலங்கா இராணுவத்தினர் அமைத்தார்கள். இடம்பெயர்ந்து கோயில்களிலும் இதனால் மக்கள் பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் தஞ்சமடைந்தார்கள். இவ்வாறு தஞ்சமடைந்த மக்களை மீண்டும் அவர்களின் வீடுகளில் சென்று குடியமருமாறு இராணுவத்தினர் கூறியதனைத் தொடர்ந்து, மக்கள் தங்களின் வீடுகளில் குடியமர்ந்தார்கள். இராணுவத்தின் கூற்றை நம்பிய தத்தமது வீடுகளில் வசிக்க வந்த மக்களனைவரும் கைதுசெய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்களில் எண்பத்தைந்து பேர் பெண்கள். 

இவர்களை முகாமிலிருந்த நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் பாலியல் வல்லுறவிற்குற்படுத்திபின், அவர்களின் மார்பகங்கள், கை, கால் போன்றவற்றினை வெட்டி மிக மோசமான முறையிற் சித்திரவதை செய்து படுகொலை செய்தார்கள். கைது செய்யப்பட்ட ஐந்து குழந்தைகள் உட்பட அறுபத்தெட்டுச் சிறுவர்களையும் மோசமான சித்திரவதைகளின் பின் சுட்டுக்கொலை செய்ததுடன், பதினேழு பேரளவிலான ஆண்களின் அங்கங்களை வெட்டிச் சித்திரவதை செய்து படுகொலை செய்தார்கள். மொத்தமாக இருநூற்றைந்து பேர் இச்சத்துருக்கொண்டான் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்களில் இருபத்தொரு வயதான கந்தசாமி கிருஸ்ணகுமார் மட்டுமே காயங்களுடன் தப்பி வந்து சம்பவத்தினை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மக்கள் அமைப்பு சம்பவத்தினை வெளிப்படுத்தியது.

இந்த படுகொலை தொடர்பான உசாவலில், முகாமின் பொறுப்பதிகாரி கப்டன் காமினி வர்ணகுல சூரிய, “அன்றைய நாள் எங்களால் தேடுதலோ கைதோ மேற்கொள்ளப்படவில்லை” என்றார். படுகொலைகள் நடந்த அன்று தம்முடைய ஆட்கள் யாரும் முகாமை விட்டு வெளியே வரவில்லை என்பதையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். அத்துடன் மக்கள் அமைப்பின் தலைவரான அருணகிரிநாதன் அவர்களை மிரட்டி இவ்வாறான சம்பவம் ஒன்று நடைபெறவில்லை என எழுத்து மூலம் பொய் அறிக்கையினைத் தருமாறு ராணுவத்தினர் வற்புறுத்தினர். இதனையடுத்து மக்கள் அமைப்பின் தலைவர் தனது பதவியினைத் துறந்தார்.

திருமதி எஸ்.எஸ். அவர்கள் 35 அரத்த உறவுகளை, கிட்டத்தட்ட அவரது முழு குடும்பத்தையும், இழந்தார். படுகொலை பற்றிய அவரது வாக்குமூலம் பின்வருமாறு:

"ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை, தரைப்படையினரும் முஸ்லீம் குண்டர்களும் எங்கள் ஊரை சுற்றி வளைத்து, மூன்று ஊனமுற்ற இளைஞர்கள் உட்பட முப்பத்தைந்து பேரை அழைத்துச் சென்றனர். முஸ்லிம் குண்டர்கள் மக்களைத் தாக்கத் தொடங்கினர்.

"பன்னிச்சையாட்டியையும் பிள்ளையாரட்டியையும் தரைப்படையினர் சுற்றி வளைக்கப் போவதாக முந்தின நாள் எம்மவர்களில் சிலர் அறிந்திருந்தனர். இந்த சுற்றி வளைப்பில் இருந்து தப்பிக்க பலர் 'குடியிருப்பு'க்கு சென்றனர். அப்போது குடியிருப்பில் இருந்து 10 பேரை படைவீரர்கள் அழைத்துச் சென்றனர்.

"பிள்ளையாரட்டி அருகே அனைவரையும் அழைத்து வந்தனர். அங்கு சுமார் 185 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரையும் வின்சென்ட் டிப்போவில் மூடப்பட்ட பரப்புக்கு அழைத்துச் சென்றனர். பிறகு எங்களால் எதையும் பார்க்க முடியவில்லை. ஆனால் இடையில் வேட்டொலியுடன் மக்கள் கூச்சலிடுவதையும் அலறுவதையும் நாங்கள் செவிமடுத்தோம். சில நிமிடங்களுக்குப் பிறகு, தீ கொழுந்துவிட்டு எரிவதைக் கண்டோம். காலை வரை உடல்கள் எரிந்து கொண்டிருந்தன. அவர்கள் 184 பேரை சுட்டுக் கொன்றனர். உசாவலுக்குப் பிறகு விடுவிப்பதாகக் கூறி அழைத்துச் சென்றவர்கள் தீயிலிடப்படனர்.

"சில நாட்களாக டிப்போ அருகே யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஒரு வாரத்துக்குப் பிறகு படைமுகாமுக்குச் சென்று எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே என்று உசாவினோம். அவர்கள் எங்கள் ஊரிற்கு வரவில்லை என்றும் யாரையும் அழைத்துச் சென்றதில்லை என்றும் கூறினர். தரைப்படையினரிடம் கேட்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? இனி இப்படி நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே எனது ஓம்பத்திற்காக கரடியனாற்றிற்கு செல்ல முடிவு செய்தேன்.

"உயிர் பிழைத்தவர் ஒருவரே - கந்தசாமி கிருஷ்ணகுமார். எல்லோரும் பெரிய கத்திகளால் வெட்டப்பட்டு நெருப்பில் வீசப்படுவதைக் கண்டார். படைவீரர் ஒருவரால் கத்தியால் வெட்டப்பட்டபோது, கீழே விழுந்து செத்தவர் போல நடித்தார். ஆனால் நெருப்பில் வீசப்படுவதற்கு முன்பே, அவர் எழுந்து ஓடிவிட்டார். அவர்களால் அவரைப் பிடிக்க முடியவில்லை."

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டோர்களின் கிடைக்கப்பெற்ற விபரம்:

(பெயர்-தொழில்-வயது)

  1. இ.நாகம்மா- வீட்டுப்பணி 26
  2. இ.தீபா - 10
  3. இ.ஜெகதீசன் -10
  4. ஜி.குமுதினி 12
  5. ஜி.நேசம்மா 25
  6. ஜி.தேவராசி 27
  7. ஜி.சந்திரியா - 19
  8. ஜி.சீனித்தம்பி -70
  9. ஜி.வனிதா - 12
  10. ஈ.ஜீவநாதன் 30
  11. யு.மரியமுத்து- வீட்டுப்பணி 33
  12. யு.கோபிக்கண்ணன் 12
  13. J.சீனித்தம்பி
  14. உ.காளிமுத்து சுயதொழில் 55
  15. உமைத்தம்பி 70
  16. நல்லையா ரமச்சந்திரன் சுயதொழில் 44
  17. க.நல்லையா சுயதொழில் 72
  18. க.சுரேஸ்கரன் 11
  19. கந்தன் இளையதம்பி - 55
  20. கமலா 09
  21. கணபதிப்பிள்ளை தங்கமுத்து சுயதொழில் 46
  22. பி.கந்தசாமி 29
  23. பி.கமலநாதன் - 09
  24. பி.கவிதா 12
  25. பி.தமேந்தினி 04
  26. பி.ஆச்சிமுத்து 76
  27. பி.பொன்னம்மா - 70
  28. பி.சந்தனம் 37
  29. பி.சிறிலட்சுமி - 18
  30. பி.வினோதினி 12
  31. பி.வசந்தி 23
  32. பிரபா 02
  33. ரி.டிலானி - 05
  34. ரி.நந்தினி - 16
  35. ரி.நாதன் 12
  36. ரி.நாகேஸ்வரி 37
  37. ரி.நிதர்சினி -12
  38. ரி.குகன் - 10
  39. கே.கிருபாகரன் -03
  40. ரி.கண்மணி 32
  41. ரி.கண்ணன் 25
  42. ரி.பூபாலப்பிள்ளை 65
  43. ரி.பரம்சோதி -37
  44. ரி.பிரதீபன் -05
  45. ரி.தில்லையம்மா 63
  46. ரி.மகாலட்சுமி 31
  47. ரி.மலை - 55
  48. கே.ஜெயக்காந்தன் 10
  49. ரி.ஜெகன் 09
  50. ரி.மோகனச்சந்திரன் 27
  51. ரி.செல்வா -07
  52. கே.சிறி -28
  53. ரி.விஜயகுமார் (குமரன்) 08
  54. ரி.விஜயலட்சுமி 29
  55. ரி.வசந்தி -01
  56. ரி.ராசேந்திரன் -04
  57. ஐ.முருகன் 65
  58. வை.தங்கம்மா 38
  59. வைரமுத்து அற்புதவடிவேல் சுயதொழில் 46
  60. த.கணபதிப்பிள்ளை -50
  61. தம்பிப்பிள்ளை 72
  62. தம்பிஐயா கிருபைரத்தினம் சுயதொழில் 50
  63. ம.செல்வநாயகம் 55
  64. மு.ராமையா 70
  65. ஆர்.கமலராஜ் -11
  66. ஆர்.நேசம்மா -62
  67. ஆர்.சுதாகரன் 10
  68. ஆர்.விஜி -08
  69. ஆர்.வசந்தி 15
  70. அழகையா நாகரெட்ணம் வீட்டுப்பணி 16
  71. அழகையா மஞ்சுளா வீட்டுப்பணி 14
  72. அழகையா சௌந்திரராஜன் மாணவர் 12
  73. ஜெ.விஜயலட்சுமி 10
  74. ஜெரமணி - 02
  75. கே.மூத்ததம்பி - 79
  76. கே.இளையதம்பி 55
  77. கே.ஈழன் 15
  78. கே.நாகரட்ணம் 40
  79. கே.நல்லையா -72
  80. கே.நல்லம்மா 66
  81. கே.கரிகரன் 08
  82. கே.கதிர்காமத்தம்பி 75
  83. கே.கதிர்காமத்தம்பி - 68
  84. கே.குமுதா -23
  85. கே.கமலன் - 06
  86. கே.கீதா 12
  87. கே.கிருஸ்ணபிள்ளை - 14
  88. கே.கண்ணன் 10
  89. கே.பாக்கியம் 46
  90. கே.தாரணி 04
  91. கே.தம்பையா 65
  92. கே.தங்கம்மா வீட்டுப்பணி 75
  93. கே.தங்கவேல் 26
  94. கே.அரசம்மா -60
  95. கே.நேசம்மா 48
  96. கே.சதீஸ் 04
  97. கே.சியாமளா 13
  98. கே.சின்னமுத்து 66
  99. கே.சிவதர்சன் 05
  100. கே.சவுந்தரம் 38
  101. கே.விமலா 02
  102. கே.வசிகலா - 13
  103. கே.ராசாத்தி - 12
  104. கே.ரமேஸ்கரன் - 07
  105. பெரியதம்பி சுயதொழில் 75
  106. தேவி 32
  107. செபஸ்லின் செல்வநாயகம் கூலித்தொழில் 45
  108. வேணுராஜ் - 25
  109. லெட்சுமி சுயதொழில் 48
  110. ஞா.சௌந்தரராயன் 26
  111. சாந்திமதி தனியார்தொழில் 20
  112. சாமித்தம்பி அழகையா கூலித்தொழில் 34
  113. சின்னத்தம்பி வேலுப்பிள்ளை சுயதொழில் 68
  114. சீனி கோபால் 57
  115. சித்திராதேவி 29
  116. சிவதர்சினி 04
  117. வி.நல்லையா 27
  118. வி.பூமணி 45
  119. வி.யோதிவடிவேல் மாணவர் 06
  120. வி.சர்மிளா மாணவர் 08
  121. வி.சாந்திமதி -20
  122. வி.லட்சுமி 48
  123. இரட்ணராஜா ருக்தி 06
  124. ஏ.ஜீவா 15
  125. எ.உமைத்தம்பி 70
  126. ஏ.நவரட்ணம் 45
  127. ஏ.மஞ்சுளா - 18
  128. ஏ.ஆத்தப்பிள்ளை 72
  129. ஏ.அழகையா 10
  130. ஏ.அருள் 09
  131. ஏ.பொன்னுத்துரை 62
  132. ஏ.சுதா 09
  133. ஏ.சீத்தா 18
  134. எஸ்.இந்திராணி 10
  135. எஸ்.ஜீவமலர் -25
  136. எஸ்.நாகதேசி 12
  137. எஸ்.நிர்மலா - 13
  138. எஸ்.நல்லையா 45
  139. எஸ்.கந்தசாமி 29
  140. எஸ்.காசிபதியர் - 60
  141. எஸ்.கஜேந்தினி -02
  142. எஸ்.கவிதா 09
  143. எஸ்.குணரட்ணம் -33
  144. எஸ்.பாலிப்போடி 62
  145. எஸ்.பிரியா - 03 மாதம்
  146. எஸ்.புண்ணியமூர்த்தி - 13
  147. எஸ்.தங்கம்மா -57
  148. எஸ்.தங்கேஸ்வரி - 24
  149. எஸ்.தவகுணேஸ்வரன் 25
  150. எஸ்.மகேஸ்வரி 28
  151. எஸ்.மலர் 09
  152. எஸ்.அழகையா 50
  153. எஸ்.யோகராசா 14
  154. எஸ்.நேசம் 52
  155. எஸ்.பொன்னம்பலம் 55
  156. எஸ்.பொன்னம்மா - 24
  157. எஸ்.தெய்வானை 45
  158. எஸ்.செல்வராசா 31
  159. எஸ்.ஞானேஸ்வரி - 38
  160. எஸ்.சபாபதிப்பிள்ளை -70
  161. எஸ்.சுரேஸ் - 02
  162. எஸ்.சறோசாதேவி 28
  163. எஸ்.சின்னப்பிள்ளை -35
  164. எஸ்.சின்னத்தம்பி 27
  165. எஸ்.சீவரத்தினம் -12
  166. எஸ்.வடிவேல் 65
  167. எஸ்.விஜயன் 01
  168. எஸ்.வினோதரன் 05
  169. எஸ்.வள்ளிப்பிள்ளை 75
  170. எஸ்.ராசலிங்கம் 58
  171. எஸ்.ரவீந்திரன் 21
  172. எய்.நாகரெட்ணம் சுயதொழில் 45
  173. எய்.சுதா மாணவர் 09
  174. என்.இராசம்மா -70
  175. என்.குமுதினி - 18
  176. என்.பாக்கியம் 66
  177. என்.பாலாத்தை 70
  178. என்.பிரேமா -18
  179. என்.பிரதீபன் - 05
  180. என்.தர்சினி 06
  181. என்.தீபன் 09
  182. என்.ஜெகன் 12
  183. என்.சொர்ணம்மா - 44
  184. என்.வேணுதாஸ் 03 மாதம்
  185. என்.வேணுராஜ் 04 மாதம்
  186. என்.ஞானரத்தினம் 32
  187. என்.சித்திராதேவி 22
  188. என்.சிவதர்சன் 25
  189. எம்.பாக்கியம் வீட்டுப்பணி 53
  190. எம்.பரமேஸ்வரி 32
  191. எம்.சைலயா 07
  192. எம்.வைரமுத்து 55
  193. எம்.துளசி 04
  194. எம்.பெரியதம்பி 75
  195. எம்.தேவகி 25
  196. எம்.சுபோசினி 12
  197. எம்.சிவஞானம் 35
  198. எம்.விஜயன் - 19
  199. எம்.ராசா 24

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

படுகொலை விரிப்புகள்

 

  • புத்தகம்: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I
  • எழுத்துருவாக்கம்: வட கிழக்கு மனித உரிமைகள் செயலகம்
  • பக்கம்: 152-156
  • நூல் வெளியீட்டு ஆண்டு: 2007
  • மொழிபெயர்ப்பு: நன்னிச் சோழன்

 

வந்தாறுமூலை படுகொலை - 05, 23/09/1990

vantharumuulai massacre by Sinhala military and muslims.jpg

படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I

வந்தாறுமூலை படுகொலை தொடர்பாக மட்டு. வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தின் விடுதிக்குப் பொறுப்பாகவிருந்த திரு. வர்ணகுலசிங்கம் என்ற பேராசிரியரின் கண்கண்ட சாட்சியாக கீழ்வருபவை பதிவிடப்படுகின்றன. 

  • "............ பல்கலைக்கழக புகலிட இடத்திற்குள் படைத்துறை உள்நுழைய வேண்டாம் என்று ஏற்கனவே சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பலகைகளை வைத்திருந்தோம். உள்ளே இருந்தவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்று படைத்துறைக் கட்டளையாளர் எங்களிடம் வினவினார். வாழைச்சேனை முதல் ஆறுமுகத்தான் குடியிருப்பு வரையிலான 6 ஊர்களிலிருந்து மக்கள் இருந்தனர். இப்படி நடந்து கொண்டிருக்கும் போது இரண்டு பேருந்துகள் வந்தன. உள்ளே இருந்த அனைவரையும் வரிசையில் நிற்கச் சொன்னார்கள். அப்போது என்னுடன் வாழைச்சேனைச் சேர்ந்த தங்கமணி செட்டியார் இருந்தார். அவர் நல்ல மனிதர். முத்தலி, கலீல் என்ற இரு முஸ்லிம்கள் தரைப்படையினருடன் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் என்னையும் செட்டியாரையும் நன்றாகத் தெரியும். செட்டியாரின் ஊர்தியை கடன் வாங்கி அடிக்கடி ஓட்டி வந்தனர். அவர் தனது இரு கைகளாலும் அவர்களிடம் மன்றாடினார். வரிசையில் நின்றவர்களிடமிருந்து 138 சிறுவர்களை அழைத்து வந்து பேருந்தில் ஏறச் செய்தனர். இரண்டு பேருந்துகளும் புறப்பட்டன. அவர்கள் வாழைச்சேனை நோக்கி செல்வதாக அறிந்தோம், ஆனால் வேறு எதுவும் இல்லை. தாய், தந்தையர் அனைவரும் அலறினர். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. செட்டியார், டொக்டர் ஜெயசிங்கம், தலைமை விரிவுரையாளர் மனோசபாரத்தினம் மற்றும் நானும் 138 சிறுவர்களின் பெயர்களை எடுத்தோம். எங்களிடம் அவர்களின் பெயர்கள் இருந்தபோதிலும், அவர்கள் எங்கு சென்றார்கள் என்பதைக் கண்டுபிடிக்க யாரைக் கேட்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் கேட்ட ஒவ்வொரு படைமுகாமிலும் சிறுவர்கள் இல்லை என்று மறுத்தனர்......."

 

  • இந்நிகழ்வு நடந்து நான்கு நாட்களில் பேராசிரியரை வாழைச்சேனையிலிருந்த அவருடைய வீட்டிலிருந்து நாவலடி படைமுகாமிற்கு படைத்துறையினர் பிடித்துச் சென்றனர். ஒன்பது நாட்களின் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்:  "......அந்த முகாமில் தங்கியிருந்த காலத்தில், சில முஸ்லிம்கள் அந்த முகாமுக்குள் தொப்பியுடன் வருவதை பார்த்திருக்கிறேன். பின்னர் அந்த பரப்புகளில் தமிழர்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளுக்காக தொப்பிகளை கழற்றி வைத்துவிட்டு தரைப்படையுடன் சென்றனர்....."

 

  • ".....ஓட்டமாவடி பாலத்தில் சில முஸ்லிம்களின் உதவியுடன் படையினரால் பலர் வெட்டிக் கொல்லப்பட்டனர். ஓட்டமாவடியிலுள்ள முஸ்லிம்களை யாராவது பிடித்தால், இந்தப் படுகொலைகளின் முழு உண்மையையும் தெரிந்துகொள்ள முடியும். இந்த குற்றவாளிகளின் பெயர்கள், பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் எண்ணிக்கை, குற்றங்கள் செய்யப்பட்ட இடங்கள் போன்றவை......"

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

படுகொலை விரிப்புகள்

 

  • புத்தகம்: தமிழினப் படுகொலைகள் 1956-2008
  • எழுத்துருவாக்கம்: வட கிழக்கு மனித உரிமைகள் செயலகம்
  • பக்கம்: -
  • நூல் வெளியீட்டு ஆண்டு: 2005

 

கரப்பொழை, முத்துக்கல் படுகொலை - 29 ஏப்பிரல் 1992 karapola massacre by Sri Lankan Muslims.jpg

படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I

கரப்பொழை, முத்துக்கல் கிராமங்கள் பொலநறுவை மாவட்டத்தில் அமைந்துள்ளன. இக்கிராமங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களாகும். இக்கிராம மக்களின் பிரதான தொழில் கூலிவேலை செய்தல், மந்தை வளர்த்தல், காடுகளிற் தேனெடுத்தல் என்பனவாகும்.

29.04.1992 அன்று நள்ளிரவு இராணுவத்தினரும் முசுலிம் குழுக்களும் இணைந்து பகல் முழுவதும் வேலை செய்த களைப்பில் இரவு நல்ல உறக்கத்திலிருந்த கரப்பொழை, முத்துக்கல் கிராமமக்களை, அவர்களின் வீடுகளினுட் புகுந்து வெட்டிப் படுகொலை செய்தனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகளென தொண்ணூற்றேழிற்கும் மேற்பட்டவர்கள் இராணுவத்தினராலும் முசுலிம் குழுக்களினாலும் படுகொலை செய்யப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து இரண்டு கிராம மக்களும் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றார்கள்.

 

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கட்டுரைகள்

திருமலையில் பா.உவின் அடாவடித்தனம்

 

மூலம்: சரிநிகர்
வெளியிடப்பட்ட திகதி: ஓகஸ் 10 - ஓகஸ்ட் 23, 1995
எழுத்தாளர்: வி .
பக்கம்: 02

 

முஸ்லீம் காங்கிரஸ் பா.உ அப்துல் மஜித் நஜிப் தலைமையில் ஒரு அடாவடி நாடகம் நடந்தேறியுள்ளது, திருமலை ஆஸ்பத்திரியில். 

இந்த நாடகம் ஜூலை 31 அன்று பிற்பகலில் நடந்தேறியுள்ளது. பெண் நோயாளர்கள் தங்கிச் சிகிச்சை பெறும் எட்டாம் வாட் நேரம் ஒன்றரை இருக்கும். திடுதிடுப்பென்று சுமார் பதினைந்து இளமட்ட ஆண்கள் வாட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள். கடமையிலிருந்த பொறுப்புத்தாதி சத்தம் கேட்டு நிமிர்ந்து விசாரிக்கச் சென்றிருக்கிறார். அப்போது மேலும் மூன்று ஆண்கள் தூக்கிக் கட்டிய சாரத்துடன் ஹெல்மெட்களையும் கைகளில் இடுக்கிக் கொண்டு நுழைந்திருக்கிறார்கள். அவர்களை மறித்த தாதி இந்த நேரத்தில் எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டதும் பிரச்சினை வெடித்து விட்டது.

"நாங்கள் எம்.பியைப் பார்க்கப் போகிறோம்" என்றார்கள் வந்தவர்கள். "இது பெண்கள் வாட் அனுமதியின்றி நுழைத்திருக்கிறீர்கள். ஏதாவது தேவையென்றால் என்னைக் கேட்டால் செய்திருப்பேன். வீண்கதை பேச வேண்டாம்!" என்று தாதி பதிலளித்தார்.

தாதிக்கு எம்.பியைத் தெரியாது. முதலில் வந்த கோஷ்டியில் எம்.பியும் அடக்கம் என்பது அவருக்குத் தெரியாது. ஒரு நோயாளியைப் பார்வையிட எம்.பியும் அவரது கோஷ்டியும் தாதியை நோக்கி வந்திருக்கிறார்கள். இந்தக் கோஷ்டியில் எம்.பியும் இருக்கிறார் என்ற விடயம் தாதிக்கு மெல்லப் புரிந்தது.

எம்.பியோடு நடைபயின்ற ஒருவர் தாதிக்கு அருகில் வந்தார். "எந்த நேரத்திலும் எங்கேயும் எங்கள் எம்.பியைச் சந்திக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது தெரியுமா?" என்று உரியைப் பிரச்சினையைக் கிளப்பினார். வெலவெலத்துப் போனார் தாதி.

மேசையிலிருந்த பைல்கள் வீசப்பட்டன. சிற்றூழியர்கள் திகைத்துப் போனார்கள். எம்.பியில் முன்னால் அவரது ஆட்கள் இப்படி நடக்கிறார்களே என்ற பயம் கலந்த திகைப்பு அவர்களுக்கு.

ஒருவர் துஷணை வார்த்தைகளால் தாதியைத் திட்டினார். நான் நினைத்தேன் என்றால் உனது உடுப்புக்களை (நிர்வாணமாக்குவதா அல்லது உத்தியோகத்தைப் பறிப்பதா... சொன்னவருக்குத்தான் வெளிச்சம்) கழற்றி யாழ்ப்பாணம் அனுப்புவேன் என்றார்.

"புலிகள் மேல் உள்ள கோபத்தை இந்தப் பெண்மீது காட்டுகிறார்களே; பாவம்" என்ற நினைப்புடன் சிற்றூழியர்கள் பார்த்துக் கொண்டிருக்க அத்த நபர் பற்களை நறநறவென்று கடித்தபடி அந்தத் தாதியைத் தாக்கக் கை ஒங்கியிருக்கிறார். உடளே சிற்றூழியர்கள் அவரைத் தடுத்துள்ளனர்.

இத்தனைக்கும் கௌரவ.பா.உவும் கூடயே நின்று ஒவ்வொரு காட்சியாக ரசித்திருக்கிறார். தனது கையாளைக் கட்டுப்படுத்தவோ, பெண் என்ற வகையிலாவது அந்தத் தாதியை விடுவிக்கவோ முயலவில்லை.

விஷயம் ஆஸ்பத்திரி பூராகப் பரவியது. அடுத்த நாள் முதலாம் திகதி எவரும் வேலைக்குச் செல்லவில்லை. டாக்டர்கள் உட்பட சிற்றூழியர்கள் வரையில் சகலரும் ஒன்றுபட்டு வேலைக்குச் செல்ல மறுத்து விட்டனர்.

இந்தளவு தூரம் வளர்ந்ததைக் கண்ட கௌரவ. பா.உ. சடையல் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். ஆஸ்பத்திரி நிர்வாகமோ சம்பந்தப்பட்டவர் நேரில் வந்து மன்னிப்புக் கேட்காதவரை வேலைக்குத் திரும்பப் போவதில்லை என்று உறுதியாகக் கூறிவிட்டது.

நகரசபைத் தலைவரும் தலையிட்டார். விடயம் சுகாதார அமைச்சுவரை சென்று விட்டது. சம்பந்தப்பட்ட நபர் கொழும்புக்குப் போய்விட்டார் என்றொரு கதை அவிழ்ந்து விடப்பட்டது. ஊழியர்கள் மசியவில்லை.

பகல் ஒருமணியளவில் பா.உ தோழர்கள் புடைசூழ வந்தார். தோழர்கள் ஆஸ்பத்திரி ஊழியர்களைக் கண்களால் சுட்டுக் கொண்டிருந்தனர். அறையில் வைத்து மன்னிப்புக் கேட்பதாகப் பேரம் பேசப்பட்டது. ஊழியர்களோ விடவில்லை. இங்கேயே வைத்து மன்னிப்புக் கேட்கலாம் என்றனர்.

வேறு வழியில்லை, கௌரவ. பா.உ. தலைகளிழ்ந்திருக்க பொலிஸார், பொதுமக்கள் புடைசூழ்ந்திருக்க அந்தச் "சண்டியர்" பகிரங்க மன்னிப்புக் கோரினார். "எங்கள் ஊழியர்கள் எவருக்காவது எதிர்காலத்தில் விபரீதம் நேர்ந்தால் அதற்கு நீங்களே பொறுப்பு. உங்கள் சகாக்களின் பார்வை சரியாக இல்லை..." என்று கூறியபடியே ஊழியர்கள் கடமைக்குத் திரும்பியுள்ளார்.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கட்டுரை

முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்ட தமிழரின் கிழக்கு மாகாண நிலங்கள் | பாகம் - 1, 2, 3

 

 

மூலம்: http://www.arayampathy.com/news.php?id=1664#
வெளியிடப்பட்ட ஆண்டு: 2013
எழுத்தாசிரியர்: மார்க்கண்டு தேவராஜா (LLB)

 

இலங்கையின் தமிழர் தாயகப் பகுதியான வடக்குகிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாணம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதொன்றாகும். மிகவும் செழிப்பு மிக்க இம்மாகாணத்தில் கடல் மற்றும் தரை வளங்கள் அதன் முதுகெலும்பாகக் காணப்படுகின்றது. “என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்” என்ற வாசகம் கிழக்கு மாகாணத்திற்கும் பொருந்தும். அந்தளவுக்கு சகல வளங்களும் நிறைந்த மாகாணமாகவே அது விளங்குகிறது . இந்த மாகாணம் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக உள்ளது

கிழக்கு மாகாணத்தின் பூர்வீகக் குடிகளான தமிழர் பண்டைய மன்னராட்சியின் கீழ் சிற்றரசுகளை அமைத்து ஆண்டு வந்தனர். ஆனால் இந்த தமிழர்களுடைய பாரம்பரியமான நிலங்கள் சுதந்திரத்திற்குப் பின்னர் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு சின்னா பின்னமாக்கப் பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள அதேவேளையில் இஸ்லாமியர்களும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலமாகவும் தமிழர்களுடைய நிலங்களை தமதுடைமையாக்கியுள்ளனர் என்பதும் கசப்பான வரலாறாகும்.

கிழக்கு மாகாணத்திற்கு வியாபார நடவடிக்கைக்காகச் சென்ற முஸ்லிம்கள் அப்பகுதியில் தற்காலிகமாகத் தங்கி வியாபாரத்தில் ஈடுபட்டனர். சிலர் நிலச்சுவாந்திரர்களான தமிழர்களிடம் அவர்களின் விவசாய செய்கைக்கு கூலிகளாகவும் இருந்து தொழில் செய்து வந்தனர். ஆனால் பின்னர் வியாபாரத்திற்குச் சென்றவர்களும் விவசாயத்திற்கு கூலிகளாக இருந்தவர்களும் எவ்வாறு அங்கு தமது இருப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்பதும் காணி நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாகி அப்பகுதி தமது தாயகப் பகுதி என எவ்வாறு மாற்றிக் கொண்டார்கள் என்பதும் இன்று மறைக்கப்பட்ட வரலாறாகவே உள்ளது. இன்று முஸ்லிம் புத்தி ஜீவிகளும் அரசியல் வாதிகளும் இந்த வரலாற்றைத் திரித்துக் கூறி கிழக்கை மட்டுமல்ல வடக்கையும் தமது தாயகப் பகுதியாக உரிமை கொண்டாடி வருகின்றனர்.

முஸ்லிம்களின் வரலாறு இவ்வாறு இருக்கும்போது இன்று வடமாகாணத்தில் தமது பூர்வீக நிலத்தில் இருந்து குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். கிழக்கில் இருந்து முஸ்லிம்களின் நிலங்கள் தமிழர்களால் பறிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர் என்றெல்லாம் புதுக்கதை சொல்லுகின்றனர்.

இந்த முஸ்லிம் இனத்தவர்கள் தமிழ் மக்களின் பூர்வீக நிலத்தில் இருந்துவிட்டார்கள் அதுவும் சில பகுதிகளில் செறிவாகவும் சில பகுதிகளில் பரந்துபட்டும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இஸ்லாமியத் தமிழர்களாக இருப்பதால் குறிப்பிட்ட பகுதியில் அவர்கள்வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்ற நிலையே தமிழ் மக்களிடமும் தமிழ் அரசியல் தலைவர்களிடமும் இருந்து வந்தது. ஆனால் பிற்பட்ட காலத்தில் குறிப்பாக எண்பதுக்கு பின்னரான காலத்தில் அவர்கள் வடக்குக் கிழக்கு தமது தாயகம் என்று கூறும் அளவிற்கும் வந்துவிட்டதுடன் அத்தமீறிய குடியேற்றங்கள் மூலமாகவும் மிரட்டல்கள் மூலமாக தமிழர்களின் காணிகளை குறைந்த விலையில் சுரண்டியெடுத்தல் மூலமாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தனர். இதனால் தமிழர்கள் படிப்படியாக தமது நிலங்களை முஸ்லிம்களிடம் இழந்தனர்.

முஸ்லிம்களின் இந்த வரலாறு தெரியாமல் தற்போதைய காலகட்டத்தில் சில ஊடகங்களும் சில அறிவாளர்களும் தமிழர்களால் முஸ்லிம்கள் வடக்குக் கிழக்கில் விரட்டியடிக்கப்பட்டனர் என கூறிவருவது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது மாத்திரமல்ல மனக்கிலேசத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்பதுஉண்மை.

கிழக்கில் எவ்வாறு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றதோ அதேபோன்று தாமும் சளைத்தவர்களல்ல என்ற வகையில் முஸ்லிம் குடியேற்றங்களும் தமிழர் நிலப்பறிப்புகளும் இடம் பெற்றுள்ளன என்பதை குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை மையப்படுத்தி எழுதியுள்ள “அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள்” என்ற நூலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள எஸ்.ஜயானந்தமூர்த்தி அவர்கள் இதை எழுதியுள்ளார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 2004 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் ஒரு ஊடகவியலாளராகவும் இருந்தார்.

அந்த வேளையில் அவர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்றும் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாகச் சந்தித்தும் தொடர் கட்டுரையாக இலங்கையில் இருந்து வெளியாகும் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு எழுதியிருந்தார். கடந்த வருடம் முற்பகுதியில் இதை ஒரு ஆவணப்பதிப்பாக நூலுருவில் வெளியிட்டுள்ளார். இந்த நூலே கிழக்கில் முஸ்லிம்களின் அத்துமீறிய குடியேற்றங்களுக்குச் சிறந்த ஆதாரமாக உள்ளது. இந்த நூலில் எழுதப்படாத இன்னும் சில தமிழ் கிராமங்கள் பற்றியும் திருகோணமலையில் தமிழ் கிராமங்கள் எவ்வாறு அழிக்கப்பட்டன என்பன பற்றியும் அவரின் மற்றொரு புத்தகத்தில் வெளிவரவுள்ளதாக நூலாசிரியரான எஸ்.ஜயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். எனினும் இக்கட்டுரையில் திருகோணமலையில் முஸ்லிம்களின் அத்துமீறிய குடியேற்றங்கள் பற்றியும் தொட்டுச் செல்லப்படுகின்றது.

சரி இனி கிழக்கின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் நடந்த அத்துமீறிய குடியேற்றங்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம். முதலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த குடியேற்றங்கள் தமிழ் மக்களின் வெறியேற்றம் என்பன பற்றி ஆராய்வோம்.

 

மட்டக்களப்பு மாவட்டம்

வடக்காக வெருகல் வாவி தொடக்கம் தெற்காக நீலாவணை வரை நீண்டுள்ளது. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் பரந்து கிடக்கின்றது. மேற்கு எல்லையாக பொலனறுவை மற்றம் பதுளை மாவட்டங்களின் சிங்கள கிராமங்கள் அமைந்துள்ளன.

  • மீராவோடை (தமிழ்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் (கோறளைப்பற்று) அமைந்துள்ள அழகிய தமிழ் கிராமம் மீராவோடை தமிழ் கிராமம். இது மிகவும் பழமை வாய்ந்த கிராமம். இங்கு சுமார் 460 குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. பாடசாலை, பிள்ளையார். காளி அம்மன், முருகன் ஆலயங்களும் இருந்தன. இந்த தமிழ் கிராமத்திற்கு அருகில் மீராவோடை (முஸ்லிம்) மற்றும் மாஞ்சோலை ஆகிய முஸ்லிம் கிராமங்கள் இருந்தன.

இந்த முஸ்லிம் கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு அருகில் இருந்த மீராவோடை தமிழ் கிராமத்தின் மீது ஒரு கண் இருந்துகொண்டே வந்தது. அங்கிருந்து தமிழ் மக்களை விரட்டியடித்துவிட்டு அதை அபகரிக்க வேண்டுமென்பதே இதற்குக் காரணம். அதனால் அக்கிராம மக்கள் மீது முஸ்லிம்கள் தொடர்ந்து முறுகல் நிலையை ஏற்படுத்தி வந்தனர். இந்த முறுகல் நிலை மெல்ல மெல்ல அதிகரித்து முதல் தடவையாக 1985 இல் காணித்தகராறு ஒன்று காரணமாக தமிழர்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதலை நடத்தினார்கள். இது பின்னர் இனக்கலவரமாக மாறியது. முஸ்லிம்களுக்கு ஆதரவாக இராணுவத்தினர் பலமாக இருந்தனர் இராணுவத்தினரின் உதவியுடன் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன கொள்ளையடிக்கப்பட்டன. இதனால் அக்கிராம மக்கள் அச்சம் காரணமாக முதல் தடவையாக கிராமத்தைவிட்டு வெளியேறினர்.

சில மாதங்களின் பின்னர் சுமுகநிலை வந்ததை அடுத்து தமிழ் மக்கள் மீண்டும் தமது சொந்தக் கிராமத்திற்குத் திரும்பியிருந்தனர். எனினும் அச்சநிலையும் இரு இனங்களுக்கிடையே முறுகல் நிலையும் இருந்து கொண்டே வந்தன. சில வருடங்கள் இந்த நிலை இருந்தாலும் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமான 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல முஸ்லிம் இளைஞர்கள் இலங்கை படையின் ஒரு பிரிவான ஊர்காவல் படையிலும் பொலிசிலும் இணைந்தனர். இதன் பின்னர் நிலமை மிகவும் மோசமானது. இரண்டாவது தடவையாக முஸ்லிம்களும் ஊர்காவல் படையினரும் இணைந்து மேற்படி தமிழ் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் பெரும் வன்முறையை முஸ்லிம்கள் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்டனர். இந்த வன்முறை இக்கிராமத்து தமிழர்கள் மாத்திரமின்றி மாவட்டத்தில் இருந்த முஸ்லிம் கிராமங்களுக்கு அருகில் இருந்த அனேகமான தமிழ் கிராமங்களில் நடந்தேறின. இவ்வன்முறையினால் மிறாவோடை தமிழ் கிராமம் ஏறக்குறைய முற்றாக அழிக்கப்பட்டது. மக்கள் நிரந்தரமாக இடம் பெயர்ந்து அயலில் இருந்த தமிழ் கிராமங்களான கிண்ணையடி, சுங்கான்கேணி, வாழைச்சேனை, வினாயகபுரம் ஆகிய கிராமங்களுக்குச் சென்றனர். அதன் பின்னர் முஸ்லிம்கள் திட்டமிட்டவாறு பல நூறு ஏக்கர் காணிகளைச் சுவீகரித்துக் கொண்டனர். இதனால் அக்கிராமத்தின் அரைவாசி பகுதிக்கு மேல் அத்துமீறிய குடியேற்றங்களைச் செய்தும் பெரும் பகுதியை அபகரித்துக் கொண்டனர். பாடசாலை கோயில்கள் பொதுக் கட்டிடங்கள் அனைத்துமே அழிக்கப்பட்டன.

  • தியாவட்டவான்

வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்திருந்த மற்றொரு தமிழ் கிராமம் தியாவட்டவான். இக்கிராமமும் மிகவும் பழமைவாய்ந்த தமிழ் கிராமம். ஆனால் அது தற்போது முஸ்லிம்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு முஸ்லிம் கிராமமாக மாற்றப்பட்டுள்ளது. இக்கிராமம் கொழும்பு- மட்டக்களப்பு வீதியில் உள்ளது. இக்கிராமத்திற்கு அருகில் காவத்தமுனை முஸ்லிம் கிராமமும் ஓட்டமாவடி முஸ்லிம் பகுதியின் எல்லையும் அமைந்திருந்தன.

தியாவட்டவான் கிராமத்தில் நீண்டகால வரலாற்றைக் கொண்ட தமிழ் கலவன் பாடசாலை மற்றும் ஆலயங்கள் என்பனவும் இருந்தன. அருகில் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை இருந்ததால் இக்கிராமம் மிகவும் வளர்ச்சி கண்டிருந்தது. இதனால் இக்கிராமத்தை அபகரிக்க வேண்டுமென்ற எண்ணம் முஸ்லிம்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்தது.

இந்த கடதாசி தொழிச்சாலையைப் பற்றிக் கூறுவதானால் இலங்கையில் ஒரேயொரு கடதாசித் தொழிச்சாலையாக இது இருந்தது. கொழும்பு நாரகென்பிட்டியவில் இதன் உபநிலையம் உள்ளது. எண்பது காலகட்டத்தில் இக்கடதாசி தொழிச்சாலையில் சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வேலை செய்தனர். அதில் சுமார் பத்து வீதத்திற்கும் குறைந்தவர்களே முஸ்லிம் தொழிலாளர்கள். அதிலும் உயர் பதவிகளில் இருந்தவர்கள் அனைவரும் தமிழர்கள். முஸ்லிம்கள் சாதாரண தொழிலாளர்களாகவே இருந்தனர். இக்கடதாசித் தொழிச்சாலையும் தற்போது முஸ்லிம்களின் கைகளுக்குச் சென்று விட்டது.

தியாவட்டவான் கிராமத்தில் முதற்தடவையாக 1983 ஆகஸ்ட் மாதத்தில் முஸ்லிம் காடையர்களால் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் பின்னர் 1985 மற்றொரு தாக்குதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது. இத்தாக்குதல்கள் காரணமாக பல வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. சிலர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் காரணமாக தமிழ் மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர். இத் தாக்குதல்களுக்குப் பின்னாலும் இலங்கை படையினரின் உதவி இருந்தது. இலங்கை இராணுவத்தில் முஸ்லிம் இளைஞர்களும் இருந்தது மாத்திரமின்றி முஸ்லிம்கள் தமது வியாபாரம், மரக்கடத்தல் கஞ்சாக் கடத்தல் போன்ற சுயநலத்திற்காக இராணுவத்தினருக்கு உதவிகளை செய்வதும் வழக்கமாக இருந்தது. தியாவட்டவான் கிராமத்தை விட்டு வெளியேறியவர்கள் அயற்கிராமங்களிலேயே நீண்டகாலம் அகதிகளாக இருந்தனர். அவர்கள் 1988 ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தினரின் வருகைக்குப் பின்னர் சொந்த கிராமத்திற்குச் சென்றனர். ஆனால் அங்கு தமது பெரும்பாலான காணிகளிலும் வீடுகளிலும் முஸ்லிம்கள் அத்து மீறிக் குடியேறியிருந்தனர். தமிழ் கலவன் பாடசாலை அரபா முஸ்லிம் பாடசாலையாக பெயர்மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

ஆலயத்தின் அடையாளமே தெரியாமல் குடியேற்றம் இடம்பெற்றிருந்தது. மக்கள் எங்கு முறையிட்டாலும் உரிய பலன் கிடைக்கவில்லை. சில தமிழ் வீடுகள் எஞ்சியிருந்தன. அதில் குறைந்த குடும்பங்கள் குடியேறினர். மீண்டும் அவர்கள் மீதும் 1990 யூன் மாதத்தில் தாக்குதல் நடத்தப்பட்டன. இதனால் அவர்களும் முற்று முழுமாக வெளியேற்றி விட்டனர். இதனால் தற்போது இத்தமிழ்கிராமம் முற்று முழுதாக முஸ்லிம் கிராமமாக மாறியுள்ளது. தற்போது கடதாசி தொழிச்சாலை குறைந்த ஊழியர்களுடன் இயங்கினாலும் 90 சதவீதமானவர்கள் முஸ்லிம்களே!

  • ஓட்டமாவடி

ஓட்டமாவடி கிராமம் பற்றியும் கூறவேண்டும். ஓட்டமாவடி கிராமம் ஒரு கலப்புக் கிராமம்தான். ஆனால் கிராமத்தின் அதிகாரமும் அதன்மையப்பகுதியும் தமிழர்களுடையது. ஓட்டமாவடியில் 60 வீதமானவர்கள் முஸ்லிம்களாகவும் ஏனையவர்கள் தமிழர்களும் வாழ்ந்தனர். ஓட்டமாவடி கிட்டத்தட்ட ஒரு உபநகரமாகவே இருந்தது. பல கடைகளும் பெரும் கல்வீடுகளும் நகரின் மையப்பகுதியில் தமிழர்களுடையதாகவே இருந்தன. தமிழர்களின் வழிநடத்தலிலே இக்கிராமம் இயங்கியது. இதன் மையப்பகுதியில் பிள்ளையார் ஆலயம் இருந்தது. அது தமிழர்களின் வழிபாட்டுத் தலம். முஸ்லிம்களுக்குச் சற்றுத் தொலைவில் பள்ளிவாசல் இருந்தது. தமிழர்களின் மயானமும் மையப்பகுதியில் ஒரு புறத்தில் அமைந்திருந்தது. இக்கிராமத்தில் இரு இனத்தினரும் ஆரம்பகாலத்தில் ஒற்றுமையாகவே வாழ்ந்தனர். ஆனால் 83 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கு இருந்த தமிழர்கள் மீதும் தாக்குதல்கள் ஆரம்பமாகின.

இத்தாக்குதல்கள் மெல்ல மெல்ல அதிகரித்து 85, 90 ஆம் ஆண்டுப்பகுதியில் அங்காங்கு நடந்த தமிழர் மீதான தாக்குதல்கள் போன்றே ஓட்டமாவடி தமிழ் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. பெரும் கடைகள் வீடுகள் என்பன அடித்து நொருக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. இதனால் தமிழர்களுக்கு முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தமுடியாமல் அப்பகுதியை விட்டு வெளியேறினர். வெளியேறிய தமிழர்கள் கறுவாக்கேணி கிராமத்தில் தற்போது நிரந்தரமாக வாழுகின்றனர். ஓட்டமாவடியில் இருந்த தமிழர்களின் பல காணிகள் வீடுகள் என்பன முஸ்லிம்களினால் அத்துமீறிப் பிடிக்கப்பட்டன. சில காணிகளை மனச்சாட்சியுள்ள சில முஸ்லிம்கள் தமிழர்களிடம் காசு கொடுத்து வாங்கிக் கொண்டனர்.அங்கிருந்த பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டு தற்போது அதில் மீன்சந்தை கட்டப்பட்டுள்ளது. மயானம் அழிக்கப்பட்டு தபாலகம், பிரதேச செயலகம் என்பன கட்டப்பட்டுள்ளன.

ஓட்டமாவடி பகுதி 1990 ஆம் ஆண்டுக்குமுன்னர் வாழைச்சேனை தமிழ் பிரதேச செயலகப் பிரிவுக்குள்ளேயே இருந்தது. 90 ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழல் இனவன்முறைகள் காரணமாக அரசாங்கம் தற்காலிகமாக இந்த பகுதியை நிருவாக ரீதியாக ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவாக மாற்றப்பட்டு முழுமையான முஸ்லிம் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வன்முறைகள் மற்றும் தனியான செயலக நிருவாக பிரிவுகள் என்பனவற்றை ஏற்படுத்துவதில் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு நிறையவே பங்கிருந்தது. அத்துமீறிய குடியேற்றங்களையும் இவர்களே அதிகம் தூண்டி விட்டனர். முஸ்லிம் ஊர்காவல் படை மற்றும் முஸ்லிம் இளைஞர்களை பொலிஸ் சேவையில் இணைத்தல் போன்றவற்றையும் இந்த அரசியல்வாதிகளே திட்டமிட்டும் செய்தனர்.

இதன் மூலம் தமிழர்களின் பலத்தை அழிப்பது மாத்திரமின்றி போராட்டத்தையும் சிதைப்பதும் கிழக்கில் முஸ்லிம்களுக்கென தனியானமாகாண அலகுகளை ஏற்படுத்துவதும் நோக்கமாக இருந்தது. இந்த வகையில் இந்த அரசியல்வாதிகளினதும் முஸ்லிம் காடையர்களின் நோக்கங்களில் தனியான பிரதேச செயலகம் அமைத்தது முதற்படியாக வெற்றி பெற்றது.

இந்த திட்டமிட்ட நடவடிக்கைகளின் பின்னணியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான எம்.எச்.எம்.அஸ்ரப், தற்போதைய கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம், பசீர் சேகுதாவூத், எம்.எல்.ஏ.எம்.கிஸ்புல்லா உட்பட பலர் செயற் பட்டனர். உண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் 85 ஆம் ஆண்டுக்கு முன்னர் முஸ்லிம்கள் பரந்துபட்டோ அல்லது பலஇடங்களிலோ வாழவில்லை. அவர்கள் பிரதானநெடுஞ்சாலையை அண்டியதாக கொழும்பு-மட்டக்களப்பு வீதியில் ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய மூன்று இடங்களிலுமே வாழ்ந்தனர். இந்த இடங்களை ஒட்டியதாக ஒருசில கிராமங்களும் இருந்தன. ஆனால் தற்போது நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம் போன்றனவற்றால் குறைந்தது ஐம்பது கிராமங்கள் வரை அமைத்துள்ளனர்.

  • ஏறாவூர்

ஓட்டமாவடியில் தமிழர்களை விரட்டியடித்தது போலவே ஏறாவூர் தமிழ் கிராமத்தில் இருந்தும் தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். இந்த சம்பவங்களும் 83, 85, மற்றும் 90 ஜுன் மாதத்திலும் இடம்பெற்றன. ஏறாவூர் தமிழ்கிராமம் மிகவும் செழிப்பான கிராமம். அங்குள்ளவர்களில் அதிகமானோர் பொற்கொல்லர்களாகவும் பெரும் வியாபாரிகளாகவும் இருந்தனர். இதனால் ஏறாவூர் நகர் மிகவும் பரபரப்பாகவே எப்போதும் இருக்கும். அது மாத்திரமின்றி அங்கு வாரச்சந்தை நடப்பதும் வழக்கம். இத்தமிழ் கிராமத்திற்கு அருகில் இருந்தது ஏறாவூர் முஸ்லிம் பகுதி. அது அப்போது பெரியளவில் அபிவிருத்தியடைந்து இருக்கவில்லை.

இதனால் தமிழ் பகுதியைப் பார்த்து ஆத்திரமும் வெறுப்பும் அடைந்திருந்த முஸ்லிம்கள் சந்தர்ப்பம் பார்த்திருந்து தாக்குதல்களை நடத்தினர். இத்தாக்குதல்களில் 90 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் நடந்த தாக்குதலே மிகவும் மோசமானதாக அமைந்திருந்தன. இத்தாக்குதலால் ஏறாவூர் தமிழ் கிராமம் முற்றாக அழிக்கப்பட்டன. தற்போதும் அந்த அழிவுகள் அப்படியே கிடப்பதைக் காணலாம். இந்த மக்கள் இன்னமும் மீளக் குடியமரவில்லை. ஆனால் இக்கிராமத்தின் எல்லைப்பகுதிகள் மற்றும் சில பகுதிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமத்துள்ளனர். இதுதவிர அப்பகுதியில் இருந்த தமிழ் மக்களுக்கான பல ஏக்கர் கணக்கான தோட்டக்காணிகள் அரச நிலம் என்பனவற்றை ஆக்கிரமித்து ஜின்னாநகர், மிச்நகர் என்று பல கிராமங்களை புதிதாக அமைத்துள்ளனர்.

முஸ்லிம்கள் பல தமிழ் கிராமங்களை அபகரித்தது மாத்திரமின்றி பல புதிய கிராமங்களையும் அத்துமீறி அமைத்துள்ளனர். அது மாத்திரமின்றி இன்னும் சில தமிழ் கிராமங்களை அரைகுறையாக அத்துமீறி அபகரித்துள்ளதுடன் மேலும் பல கிராமங்களை குற்றுயிராக்கியுமுள்ளனர்.

கொழும்பு வீதியில் புனாணை கிராமத்திற்கு எதிராக இருந்த தமிழர்களின் காணிகள் மற்றும் வன இலாகாவுக்கான காணிகளில் திட்டமிட்ட முஸ்லிம் குடியேற்றத்தை கிஸ்புல்லா 94 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைச்சராக இருந்தபோது ஏற்படுத்தினார். தற்போது அது பெரும் நகரமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் இந்த பகுதியிலும் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புனாணை கிழக்கு பகுதியிலும் தமிழர்களின் பூர்வீகக் காணிகளைச் சுவீகரித்து அத்துமீறிய குடியேற்றங்களை முஸ்லிம்கள் செய்து வருகின்றனர்.

இதுதவிர முஸ்லிம்களால் சிதைக்கப்பட்ட பல தமிழ் கிராமங்கள் உள்ளன. ஆறுமுகத்தான்குடியிருப்பு, வாழைச்சேனை தமிழ் கிராமம், நாவலடிச்சந்தி, ஆரையம்பதி எல்லைக்கிராமம், புதுக்குடியிருப்பு, செல்வாநகர் என கிராமங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லுகின்றது.

 

அம்பாறை மாவட்டம்

அம்பாறை மாவட்டம் முற்றுமுழுதாக தமிழ் பாரம்பரிய கிராமங்களைக் கொண்டதாகவும் அவர்களே பெரும்பான்மை இனத்தவராகவும் இருந்ததுடன் ஆங்காங்கே முஸ்லிம்களும் சிங்களவர்களும் திட்டுத்திட்டாக வாழ்ந்தனர். ஆனால் 1956 ஆம் ஆண்டு அப்போதைய இலங்கையின் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவினால் கல்லோயாத் திட்டம் என்ற பெயரில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக தமிழர்கள் சிங்களவர்களால் விரட்டியடிக்கப்பட்டு பல குடியேற்றங்களை செய்தனர்.

இதே காலப்பகுதியில் முஸ்லிம்களும் பல இடங்களில் குடியேறியும் தமிழர்களின் நிலங்களை கொள்ளையடித்தும் அத்துமீறியும் தமது இருப்பைப் பலப்படுத்திக் கொண்டனர். எனினும் முஸ்லிம்கள் அம்பாறை மாவட்டத்தில் கண்மூடித்தனமாகக் குடியேற்றங்களைச் செய்தனர். இன்று அந்த மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் அடுத்த படியாக சிங்களவர்களும் அதற்கடுத்ததாகவே தமிழர்களும் உள்ளனர்.

  • மீனோடைக்கட்டு

மீனோடைக்கட்டு கிராமம் மிக நீண்டகாலத் தமிழ் கிராமம். ஆனால், தற்போது அது ஒருமுஸ்லிம் கிராமமாக மாறியுள்ளது. இக்கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்தன. இக்கிராமத்திற்கு அயற்கிராமங்களாக முஸ்லிம் கிராமங்கள் இருந்தன. ஆனால், 1978 ஆம் ஆண்டு தொடக்கமே இத்தமிழ்க் கிராமம் மீது முஸ்லிம்கள் தாக்குதல்களை நடத்தினர். இதனால் எல்லைப்பகுதியில் இருந்த மக்கள் படிப்படியாகத் தமது இடங்களை விட்டு வெளியேறத் தொடங்கினர்.

அதன் பின்னர் 1985.07.12 ஆம் திகதி இக்கிராமத்தின் மீது முஸ்லிம்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தினர். அரசினர் தமிழ்கலவன் பாடசாலை, கோயில்கள், வீடுகள் என்பன முற்றாக அழிக்கப்பட்டன. இதையடுத்து அப்பகுதி மக்கள் முற்றாக வெளியேறிவிட்டனர். அதன் பின்னர் அக்கிராமம் முழுமையான முஸ்லிம் கிராமமாக மாறியது.

தற்போது அங்கு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை உள்ளது. மீனோடைக்கட்டு என்று கூறினால் தற்போது அது எல்லோருக்கும் முஸ்லிம் கிராமமாகவே தெரியும். அவ்வாறு அதன் வரலாறே மாற்றப்பட்டுள்ளது.

  • திராய்க்கேணி

மீனோடைக்கட்டைப் போன்றே ஒலுவில், பாலமுனை ஆகிய இரு முஸ்லிம் கிராமங்களை எல்லையாகக் கொண்ட கிராமம் திராய்க்கேணி கிராமம். இக்கிராமத்தையும் அழிக்கும் வகையிலும் அதை முஸ்லிம் கிராமமாக்கும் வகையிலும் பல முயற்சிகள் நடந்தன.

இக்கிராமத்தில் 360 குடும்பங்கள் இருந்தன. இங்கு வாழ்ந்தத் தமிழர்கள் மீது முதல் தடவையாக 1985 இல் தான் தாக்குதல் நடந்தது. இதனால் வழக்கம் போல் மக்கள் இடம் பெயர்ந்தனர். பின்னர் ஒரிரு ஆண்டில் மீண்டும் மீளக்குடியமர்ந்தனர்.

ஆனால், திராய்கேணியின் சில பகுதிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமித்து குடியேறியிருந்தனர். ஆனால், இவர்களை எழுப்புவதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தடைப்பட்டன. இதற்குக் காரணமாக இருந்தவர் காலஞ்சென்ற அமைச்சர் அஸ்ரப்.

அவரின் நோக்கமே மீனோடைக்கட்டு கிராமம் போன்று திராய்க்கேணி கிராமத்தையும் முஸ்லிம் கிராமமாக மாற்ற வேண்டும் என்பதே.

இதற்குப் பின்னர் 06.08.90 இல் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மற்றும் முஸ்லிம் காடையர்கள் இணைந்து இக்கிராமத்தைத் தாக்கினார்கள். இத்தாக்குதலின்போது 46 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு பெரியதம்பிரான் ஆலயவளவுக்குள் புதைக்கப்பட்டனர்.

வீடுகள், ஆலயம், பாடசாலை என்பன முற்றாக அழிக்கப்பட்டன. தற்போது இக்கிராமத்தின் பெரும் பகுதியில் முஸ்லிம்களே வாழ்கின்றனர்.

  • கரவாகு

கரவாகு கிராமம் மிகவும் தொன்மைமிக்கது. இதைச் சாய்ந்தமருது தமிழ்ப் பிரிவு என்றும் அழைப்பதுண்டு. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்ட தமிழ் கிராமங்களில் இதுவும் ஒன்று. ஆனால், இக்கிராமம் 1967 ஆம் ஆண்டுக்கு முன்னரே பறிபோய்விட்டது.

இக்கிராமத்தில் 660 குடும்பங்களைச் சேர்ந்த தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். இங்கு கரவாகு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கதிரேசபிள்ளையார் ஆலயம், விஸ்ணு ஆலயம் மற்றும் ஐயனார் ஆலயம் என்பனவும் தொன்று தொண்டு இருந்து வந்தன.

அவை மாத்திரமின்றி இங்கு வாழ்ந்த மக்கள்விவசாயிகளாக இருந்ததுடன் கரவாகு வட்டை என்ற பகுதியில் ஆயிரக்காணக்கான பொன்கொழிக்கும் நெல்வயல்கள் இவர்களிடம் இருந்தது. ஆனால், இக்கிராமத்தை 1967 ஆம் ஆண்டு முஸ்லிம் காடையர்கள் தாக்கியதில் அதற்கு ஈடுகொடுக்க முடியாது கிராம மக்கள் வெளியேறினர். அதன் பின்னர் இக்கிராமம் தனி முஸ்லிம் கிராமமாக மாறியது. இதற்கு அப்போது அங்கு அரசியல்வாதியாக இருந்த எம்.எஸ்.காரியப்பர் பின்னணியில் இருந்தார்.

தமிழ்ப் பாடசாலை 70 ஆம் ஆண்டில் அல்.அமீன் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டது. கோயில்கள் இருந்த இடத்தில் பள்ளிவாசல்களும் அமைக்கப்பட்டன. அவர்களின் வயல்காணிகள் அனைத்தும் முஸ்லிம்களின் உடமையானது.

  • வீரமுனை

வீரமுனைக் கிராமத்தையும் பல தடவைகள் முஸ்லிம்கள் இராணுவத்தினரின் உதவியுடன் அழித்தனர். அக்கிராமத்தின் பெரும் பகுதியில் அத்துமீறிக் குடியேறினார்கள். தற்போதும் முஸ்லிம்கள் தமிழர்களின் காணிகளில் சுதந்திரமாக வாழ்ந்து அனுபவித்து வருகின்றனர்.

இங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மீது முதன் முதலில் 1954 இல் தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் 1958 இல் தாக்குதல் நடந்தது. இவையனைத்தும் முஸ்லிம்களினாலேயே நடத்தப்பட்டன. பின்னர் 12.08.1990 இல்தாக்கப்பட்டு பின்னர் முழுமையாக அழிக்கப்பட்டது. இத்தாக்குதலை விசேட அதிரடிப்படையினரும் முஸ்லிம்களுமே செய்தனர்.

850 குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வந்தன. ஆரம்பம் முதல் இறுதிவரையான இத்தாக்குதல்களின் போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். வீரமுனை கிராமம் தற்போதுவரை அதன் பழைய நிலையை அடையவில்லை.

இக்கிராமம் மாத்திரமின்றி அருகில் இருந்த தமிழர்களின் பாரம்பரிய கிராமங்களான

  1. சம்மாந்துறை தமிழ்ப் பிரிவு,
  2. கோரக்கர்கோயில் கிராமம்,
  3. மல்வத்தை புதுநகரம்,
  4. கணபதிபுரம்,
  5. வளத்தாப்பிட்டி,
  6. மல்லிகைத்தீவு,
  7. வீரன்சோலை

ஆகிய கிராமங்களும் அழிக்கப்பட்டதுடன் முஸ்லிம் குடியேற்றங்கள் செய்யப்பட்டன.

 

திருகோணமலை மாவட்டம்

இயற்கைத் துறைமுகமும் பல வளங்களும் கொண்ட திருகோணமலை மாவட்டம் தமிழர்களின் தலைநகராக உள்ளது.

இங்குள்ள வளங்கள் மற்றும் புவிசார் அமைப்பைக் காரணங்களாகக் கொண்டு சிங்களக் குடியேற்றங்கள்மிகவும் துரித கதியில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன மாத்திரமின்றி, உலக நாடுகளும் இங்குத் தமது தளங்களை அமைத்துள்ளன. இந்த வகையில் முஸ்லிம்களும் தங்கள் இருப்பைப் பலப்படுத்தும் வகையில் பல அத்துமீறிய குடியேற்றங்களைத் தமிழ் பகுதிகளில் செய்துள்ளன.

  • பள்ளிக்குடியிருப்பு

பள்ளிக்குடியிருப்புக் கிராமம் மிகவும் செழிப்பான தமிழர்களின் ஆதிக்கிராமம். இதற்கு அருகில் தோப்பூர் கலப்புக் கிராமம் உள்ளது. ஆனால், 1990 ஆம் ஆண்டு முதல் பள்ளிக்குடியிருப்புக் கிராமத்தின் மீது முஸ்லிம்கள் தாக்குதலை நடத்தத் தொடங்கினர். இதனால் அங்கிருந்த மக்கள் அச்சம் காரணமாக வெளியேறத் தொடங்கினர். எனினும், பல குடும்பங்கள் அச்சத்திற்கு மத்தியிலும் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்குடியிருப்பு கிராமத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக இக்பாலநகர் என்ற புதிய கிராமத்தை முஸ்லிம்கள் உருவாக்கியுள்ளனர். இக்கிராமம் தற்போது பரபரப்பான வளமுடையகிராமமாக மாறியுள்ளது. ஆனால், ஆதிக்கிராமமான பள்ளிக்குடியிருப்பு தற்போது பின்தள்ளப்பட்டுத் தேய்ந்து போய்விட்டது.

  • உப்பாறு

உப்பாறு கிராமம் பல தடவைகளில் முஸ்லிம்களின் தாக்குதலுக்கு இலக்கானது. இக்கிராமம் கிண்ணியாவுக்கு அருகில் உள்ளது. கிண்ணியாவில் இரு இனத்தவரும் இரு வேறுபகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இங்கும் அடிக்கடி கலவரங்களை முஸ்லிம்கள் ஏற்படுத்தினாலும், தமிழ் மக்கள் அந்நேரத்தில் இடம் பெயர்ந்தாலும், பின்னர் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பி விடுவது வழக்கம். ஆதலால் உப்பாறு மக்கள் 1983, 1985 ஆண்டுகளில் ஏற்பட்ட கலவரங்களின்போது இடம்பெயர்ந்த போதிலும் பின்னர் நிலமை சீரானதும் மீளக்குடியேறினர். எனினும், முஸ்லிம் காடையர்களும் ஊர்காவல் படையினரும் தொடர்ந்து இக்கிராம மக்கள் மீது தாக்குதலை நடத்தியே வந்தனர். இறுதியில் 90 ஆம் ஆண்டு இக்கிராமத்தின் மீது பாரிய அளவு தாக்குதல் நடத்தியதால் தமிழர்களின் வீடுகள், பாடசாலை, ஆலயங்கள் சேதமாக்கப்பட்டன.

இந்நடவடிக்கைகளுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் மற்றும் அப்துல் மஜீத் போன்றோர் பின்னணியில் இருந்தனர். தற்போது உப்பாறு கிராமம் முஸ்லிம் கிராமமாக மாறியுள்ளது. அங்கிருந்த றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை தற்போது முஸ்லிம் வித்தியாலயமாக மாற்றப்பட்டுள்ளது.

சிவன்கோயில், பிள்ளையார் கோயில்கள் இருந்த இடங்களில் பள்ளிவாசல்களும் பொதுக்கட்டிடங்களும் அமைக்கப்பட்டுச் செறிவான குடியேற்றம் நடத்தப்பட்டுள்ளது. தமிழ் மாணவர்கள் கற்று வந்த றோமன் கத்தோலிக்கத் தமிழ் கலவன் பாடசாலை அயற்கிராமத்திற்கு இடம் பெயர்ந்து இயங்கி வருகின்றது.

  • குரங்குபாஞ்சான்

குரங்குபாஞ்சான் கிராமமும் அப்பகுதி நிலங்களும் தமிழர்களின் சொத்து. ஆனால், 90 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் இக்கிராமத்தின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்த முஸ்லிம்கள் தற்போது குடியேற்றத்தைச் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

  • இறக்கக்கண்டி

இறக்கக்கண்டி கிராமத்தின் பெரும் பகுதியும் தற்போது தமிழர்களிடமிருந்து பறிபோயுள்ளது. இங்கிருந்தும் தமிழர்களை விரட்டியடிப்பதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் காரணமாக இருந்தார். இவரின் பின்னணியில் முஸ்லிம்கள் மக்களை விரட்டியடித்தனர். இதனால் அங்கும் முஸ்லிம் குடியேற்றம் நடைபெற்றுள்ளது. தமிழர்கள் தற்போது சிறுபான்மையாகவே இக்கிராமத்தில் வாழுகின்றனர்.

  • மூதூர்

மூதூர் திருகோணமலை மாவட்டத்தின் ஒரு உபநகரமாகவே இருந்தது. நீண்ட காலமாகத் தமிழர்கள் அங்கு வாழ்ந்து வந்தனர். சில முஸ்லிம்களும் வாழ்ந்தனர். நகரின் பெரும் வியாபாரநிலையங்கள் அனைத்தும் தமிழர்களுடையதாகவே இருந்தன. ஆனால், இந்த நகரைத் தமது கையில் கொண்டுவர வேண்டுமென முஸ்லிம்கள் திட்டமிட்டனர். இந்த நிலையில் பல தடவைகளில் மூதூர் நகரமும் தமிழர்களின்சொத்துக்களும் எரிக்கப்பட்டன. இந்தக் காலகட்டங்களில் மூதூர் மக்கள் அயற்கிராமங்களுக்குப் பாதுகாப்புத்தேடிச் செல்வது வழக்கம். எனினும், தொடர்ந்து இத்தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது இடங்களை முழுமையாக விட்டுவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், தற்போது அங்கு முஸ்லிம்களே அதிகம் வாழுகின்றனர். நகரின் பெரும் வியாபார நிலையங்களின் உரிமையாளர்களாக முஸ்லிம்களே உள்ளனர். தற்போது 40 சதவீதத்திற்கும் குறைவான தமிழர்களே மூதூரில் நிரந்தரமாக வாழுகின்றனர்.

இதுபோன்று இன்னும் பல தமிழ் கிராமங்களின் சோக வரலாறும் கறைபடிந்த சம்பவங்களும் உள்ளன. குறிப்பாகப் பார்க்கப்போனால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் கிராமங்களே அழிக்கப்பட்டன அத்துமீறிக் குடியேற்றங்கள் திட்டமிட்ட முறையில் செய்யப்பட்டன. இது பெரும்பான்மை சிங்களவர்களாலும் சிறுபான்மை முஸ்லிம்களினாலுமே இடம் பெற்றன.

போர் நடைபெற்ற வேளைகளில் சில சிங்களமுஸ்லிம் கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகின என்பது உண்மை. ஆனால், திட்டமிட்ட முறையில் எந்த இனத்தவருடைய கிராமங்களும் தமிழர்களினால் அழிக்கப்படவோ அல்லது ஆக்கிரமிக்கப்படவோ இல்லை. சிங்கள, முஸ்லிம் இனத்தவரின் வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள் என்பன அழிக்கப்படவோ அல்லது மாற்றப்படவோ இல்லை. ஆனால் தமிழர்களின் பல வணக்கத்தலங்கள், பாடசாலைகள் என்பன முஸ்லிம்களினால் அழிக்கப்பட்டும் பின் தங்களின் இனத்திற்கென மாற்றப்பட்ட சம்பவங்களே வரலாறாக உள்ளன.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

80, 90களில் நடந்த தென் தமிழீழக் கரூரங்கள் தொடர்பான போர்க்கால இலக்கியப் பாடல்கள்

 

large.vellumvaraiselvom.jpg.025cfb309d93

 

  • பாடல்: காற்றில் ஏறிவரும்

  • இறுவட்டு: வெல்லும் வரை செல்வோம்

  • இசை: இசைப்பிரியன்

  • பாடலாசிரியர்: உதயலட்சுமி

  • பாடியவர்: மேரி

  • வெளியீடு: ஜெயந்தன் படையணி, தமிழீழ விடுதலைப்புலிகள்

  • பாடல் வரிகள்:

காற்றில் ஏறிவரும் எங்கள் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்.
கண்ணீர்க் கடலோடும் வாழ்க்கைப் படகைப் பாருங்கள்.
படுவான்கரையின் சிவப்பு நிறம் - அதுவே எங்கள் வாழ்வின் நிறம்.
எழுவான் கதிர்கள் மேனி தொடும் - இனியெம் வாழ்வு மேலுயரும்.

வாவியில் பாடும் மீன்களுக்கு எங்கள் மேனியை தீனாய்ப் போட்டனர்!
கூப்பிய கைகளை வெட்டி எறிந்து பிள்ளைகள் உயிரைக் குடித்தனர்!
மகிழடித்தீவின் மரங்களைக் கேளும் - உயிர் விலை என்ன, கூறிவிடும்!
கொக்கட்டிச்சோலை மணல் வெளி எங்கும் குருதியே கோலம் கீறியது.

இருவிழி நிறையக் கனவுகளோடு எழுவாய் எழுவாயம்மா நீ!
பூபதித் தாயின் பூமியில் பிறந்தாய், புயல்களின் வடிவம் அன்றோ நீ!
மலைகளைத் தாவும் காற்றின் வேகம் மனங்களுக்குண்டு கொண்டு எழுவாய் நீ!
எவரோ எழுதும் சிலை நீ இல்லை, அலைகடல் போல எழுவாய் நீ!

கோவில்களோடு தெய்வங்கள் சாக வைத்த நெருப்பு எரியுது!
தேவியர் பாட்டில் தென்றல்கள் மாறி தேய்பிறை வானம் அழுகுது!
வயல்வெளி எங்கும் பயிர்களின் நாற்று வன்முறைத் தீயில் அவிகிறது!
அதிரடிக்காரன் எழுதிய தீர்ப்பே எங்களின் விதியாய் மாறியது!

 

--> எழுத்துணரியாக்கம்: இனந்தெரியா யாழ் கள உறுப்பினர்

 

 

++++++++++++++++++++++++++++

 

 

தென் தமிழீழம் தேய்ந்தழிந்து போகுதே!
தென் தமிழ் மக்கள் தினமும் நூறு சாகிறார்!

தீயில் அவர் வேகுகிறார்,
பசியில் அவர் மாள்கிறார்!
தீராத கொடுமைகளை எதிரி அங்கு இழைக்கிறான்!

மீன்பாடும் மட்டு. நகர், அம்பாறை, திருமலையும்
மிருகவெறிச் சிங்களவர் குடிமனையாய் மாறுதே!
இனமழிக்கும் ராணுவத்தின் வதைமுகாம்கள் வளருதே!
இன்னல் செய்யும் துரோகக் கும்பல் பெருகி அங்கு வளருதே!

நெய்தல் நிலம், வயல்வெளிகள், நதியோரம், காட்டுநிலம்
ஐயகோ எம் தமிழர் ஆண்ட நிலம் யாவுமே!  
அன்னியனின் குடிமனைகள் அங்கு நிதம் வளருதே!

இழந்த மண்ணை மீட்பதற்கும் இன்னலுறும் எம்மினத்தைக் காப்பதற்கும்
ஈழமே எழுச்சிகொள்! எழுந்திடு! எழுந்திடு!
இனமழிப்பு நடக்குதே வேங்கையாய் விரைந்திடு!


--> எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன்

 

*****

 

Edited by நன்னிச் சோழன்

  • 8 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நிழற்படங்கள்

 சிறிலங்கா படைத்துறையில் உறுப்பினராகயிருந்த முஸ்லிம்களின் படிமங்கள்

  

 

(2023 செப்டெம்பரில் முதற்பக்கத்தில் பதிந்திருந்ததை இங்கு மாற்றுகிறேன்) 

தமிழ்நெற்றில் சூலை 5, 2009 அன்று "Eastern armed Muslim groups surrender weapons" என்ற தலைப்பில் வெளியான செய்தியிலிருந்து:

2009 ஜூலை 4 பிற்பகல் 3:00 மணியுடன் முடிவடைந்த சிறிலங்காக் காவல்துறையினரால் விடுக்கப்பட்ட பொது மன்னிப்பின் வழிவகையில் காத்தான்குடி ஜும்மா மீரா மசூதியில் அன்றைய நாள் பிற்பகலில் சில முஸ்லிம் ஆயுததாரிகளால் (ஜிகாதிகள் மற்றும் ஊர்காவல் படையினர்) தம்மிடம் உள்ள சில ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன. அவற்றின் காட்சிகள் சிலவற்றை கீழே இணைத்துள்ளேன். இந்நிகழ்வானது கிழக்கு துணைக் காவல்துறை மா அதிபர் எடிசன் குணதிலக மற்றும் மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. அன்றைய நாள் 16 வகை- 56 தாக்குதல் துமுக்கிகள், ஒரு வக்- 81 துணை இயந்திரச் சுடுகலன், நான்கு .303 துமுக்கிகள், இரண்டு துணை இயந்திரச் சுடுகலன்கள், ஒரு வேட்டைச்சுடுகலன், ஒரு 9 மிமீ கரச்சுடுகலன், 16 கைக்குண்டுகள் மற்றும் பெருமளவு கணைகள் என்பன ஒப்படைக்கப்பட்டன.

முஸ்லிம் ஜிஹாதிகள் சுமார் 250 வகை- 56 தாக்குதல் துமுக்கிகளை வைத்திருப்பதாக புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன, அவற்றுள் ஒரு பகுதியே காலக்கெடு முடிவடைந்த நிலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குணதிலக கூறினார். 

 

05_07_09_batticaloa_01.jpg

படிமப்புரவு: தமிழ்நெற், சூலை 5, 2009 

 

Kattankudy-weapons - Sri Lankan Muslim jihadi or Home Guard handing over weapon (1).jpg

Kattankudy-weapons - Sri Lankan Muslim jihadi or Home Guard handing over weapon (2).jpg

Kattankudy-weapons - Sri Lankan Muslim jihadi or Home Guard handing over weapon (3).jpg

Kattankudy-weapons - Sri Lankan Muslim jihadi or Home Guard handing over weapon (4).jpg

Kattankudy-weapons - Sri Lankan Muslim jihadi or Home Guard handing over weapon (5).jpg

படிமப்புரவு: army.lk, சூலை 5, 2009 | இவ்வலைத்தளத்திலிருந்து கிடைத்த படிமங்களை "படிம ஆதாரம்" என்ற வகையின் அடிப்படையில் சேர்த்திருக்கிறேனே ஒழிய பரப்புரைக்காகப் பாவிக்கப்படும் சிங்களத் தரைப்படையின் அலுவலசார் வலைத்தளத்தை எவ்வகையிலும் ஒழுங்குமுறையானது என்றெண்ணி அல்ல.

 

Kattankudy-weapons - Sri Lankan Muslim jihadi or Home Guard handing over weapon.jpg

முஸ்லிம் ஆயுததாரி ஒருவன் தனது துமுக்கியை ஒப்படைக்கிறான். படிமப்புரவு: சண்டே ரைம்ஸ், சூலை 5, 2009 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நிழற்படங்கள்

 சிறிலங்கா படைத்துறையில் உறுப்பினராகயிருந்த முஸ்லிம்களின் படிமங்கள்

 

(2023 செப்டெம்பரில் முதற்பக்கத்தில் பதிந்திருந்ததை இங்கு மாற்றுகிறேன்) 

இதற்குள் ஊர்காவல் படையிலும் சிறப்பு பணிக்கடப் படை (Special Task Force) என்ற சிறப்பு அதிரடிப்படையிலும் உறுப்பினர்களாக இருந்த முஸ்லிம்களில் எனக்குக் கிடைத்த சிலரினது படிமங்களைப் பதிவேற்றியுள்ளேன். 

 

F3kEtRSXwAEqntr.jpg

F3kEtefWcAEhucm.jpg

F3kEuZ8WUAA3llA.jpg

F3kEuQhXIAAjtZU.jpg

 F3kEuiqWgAIkOoP.jpg

F3kEtwdWwAAQty7.jpg

Untitled.jpg

சிறப்பு பணிக்கடப் படை என்ற சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த நவாஸ். இவன் புலிகளுடனான சமர் ஒன்றில் கொல்லப்பட்டான்.

 

றசாக்.jpg

'இவனது பெயர் றசாக் என்பதாகும். போர்க்காலத்தில் இவன் ஒரு ஊர்காவல்படையினன் ஆவான்.'

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நிழற்படங்கள்

 சிறிலங்கா படைத்துறையில் உறுப்பினராகயிருந்த முஸ்லிம்களின் படிமங்கள்

இதில் உள்ளவர்கள் தரைப்படை, காவல்துறை, ஊர்காவல்படை என்று பற்பல படைத்துறைக் கிளைகளில் பணியாற்றி புலிகளுடனான பல்வேறு காலகட்ட மோதல்களில் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் திருமலை மூதூரைச் சேர்ந்தோராவர்.

இவற்றின் படிமப்புரவு மூதூரைச் சேர்ந்த திரு. இஹ்ஷான் ஜே.எம்.ஐ முகமது என்பவருக்கே சொந்தமானதாகும்.

large.SriLankanMuslimmilitarysoldiersandlarge.SriLankanMuslimmilitarysoldiersandlarge.SriLankanMuslimmilitarysoldiersandlarge.SriLankanMuslimmilitarysoldiersand large.SriLankanMuslimmilitarysoldiersandlarge.SriLankanMuslimmilitarysoldiersandlarge.SriLankanMuslimmilitarysoldiersandlarge.SriLankanMuslimmilitarysoldiersand large.SriLankanMuslimmilitarysoldiersand large.SriLankanMuslimmilitarysoldiersand large.SriLankanMuslimmilitarysoldiersand large.SriLankanMuslimmilitarysoldiersand large.SriLankanMuslimmilitarysoldiersandlarge.SriLankanMuslimmilitarysoldiersandlarge.SriLankanMuslimmilitarysoldiersandlarge.SriLankanMuslimmilitarysoldiersandlarge.SriLankanMuslimmilitarysoldiersandlarge.SriLankanMuslimmilitarysoldiersandlarge.SriLankanMuslimmilitarysoldiersand

Edited by நன்னிச் சோழன்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நிகழ்படங்கள்

சிங்களவர் மற்றும் முஸ்லிம்களின் வாக்குமூலங்கள்

  

இலங்கை சோனகர்கள் எவ்வாறு தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையில் சிங்களவருக்கு ஆதரவாக புலனாய்வு சேவை உட்பட்ட பணிகள் செய்தனர் என்று சிறிலங்காக் கடற்படையின் கலக்கூட்டக் சேர்ப்பர் (Admiral of the Fleet) வசந்த குமார் ஜயதேவ கரண்ணகொட விளக்குகிறார்

 

 

 

 

 

 

 

 

நெறியற்ற முறையில் தமிழருக்கு எதிராக நீதியரசரை மாற்றிய ஹிஸ்புல்லா:   https://eelam.tv/watch/_wZrFz5e44nxn1BY.html

 

 

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.