Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

லைக்காமொபைல் நிறுவனர் அல்லிராஜா பற்றிய சில உண்மைகள்

https://www.buzzfeed.com/heidiblake/the-french-connection

அண்மையில் லைக்கா மொபைல் உரிமையாளரும், பிரபல தொழில் அதிபருமான அல்லிராஜா சுபாஸ்கரன் இலங்கையில் முதலிட முன்வந்தது தொடர்பாகவும், அவர் சிங்களப் பேரினவாதிகளின் கால்களில் வீழ்ந்து ஆசிபெறுவது தொடர்பாகவும் இங்கு பேசப்பட்டது.

அவரது நிறுவனம் மேற்கொண்டதாகக் கருதப்படும் பண மோசடிகள் குறித்து பல விபரங்களுடன் ஆய்வுக்கட்டுரை ஒன்று ஆங்கில இணையப் பதிவான"BuzzFeed" இல் வெளிவந்திருக்கிறது. இவ்வாறான பண மோசடிகளில் ஒன்று இவர் மகிந்த ராஜபக்ஷவின் பெருமளவு கறுப்புப் பணத்தினை மாற்றிக்கொடுத்தார் என்பதும் அடங்கும். மேலும், இவர் அமைச்சர் கெகெலிய ரம்புக்வெல்ல ஊடாக சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நல்லிணக்க அரசாங்கத்திற்கு அன்பளிப்பாக வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முடிந்தவர்கள் படித்துப் பாருங்கள். 

கொசுறுத் தகவல் : அல்லிராஜாவின் காதலி (திருமணத்திற்கு அப்பாற்பட்ட) இப்போது அமைச்சர் கெகெலிய ரம்புக்வல்லவின் காதலியாக இருக்கிறாராம். இந்த விடயம் கீச்சகத்தில் பார்த்தது. 

 

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வதால் உரிமைகள் கிடைக்கும் என்பதனை நான் நம்பவில்லை. அவ்வாறு முதலீடு செய்பவர்களின் உண்மையான நோக்கமும் அவர்களின் செயற்பாடுகளும் எப்படியானவை என்பதைக் காட்டவே இதனை இணைக்கிறேன். 

Edited by ரஞ்சித்
spelling
  • Like 3
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, ரஞ்சித் said:

லைக்காமொபைல் நிறுவனர் அல்லிராஜா பற்றிய சில உண்மைகள்

https://www.buzzfeed.com/heidiblake/the-french-connection

அண்மையில் லைக்கா மொபைல் உரிமையாளரும், பிரபல தொழில் அதிபருமான அல்லிராஜா சுபாஸ்கரன் இலங்கையில் முதலிட முன்வந்தது தொடர்பாகவும், அவர் சிங்களப் பேரினவாதிகளின் கால்களில் வீழ்ந்து ஆசிபெறுவது தொடர்பாகவும் இங்கு பேசப்பட்டது.

அவரது நிறுவனம் மேற்கொண்டதாகக் கருதப்படும் பண மோசடிகள் குறித்து பல விபரங்களுடன் ஆய்வுக்கட்டுரை ஒன்று ஆங்கில இணையப் பதிவான"BuzzFeed" இல் வெளிவந்திருக்கிறது. இவ்வாறான பண மோசடிகளில் ஒன்று இவர் மகிந்த ராஜபக்ஷவின் பெருமளவு கறுப்புப் பணத்தினை மாற்றிக்கொடுத்தார் என்பதும் அடங்கும். மேலும், இவர் அமைச்சர் கெகெலிய ரம்புக்வெல்ல ஊடாக சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நல்லிணக்க அரசாங்கத்திற்கு அன்பளிப்பாக வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முடிந்தவர்கள் படித்துப் பாருங்கள். 

கொசுறுத் தகவல் : அல்லிராஜாவின் காதலி (திருமணத்திற்கு அப்பாற்பட்ட) இப்போது அமைச்சர் கெகெலிய ரம்புக்வல்லவின் காதலியாக இருக்கிறாராம். இந்த விடயம் கீச்சகத்தில் பார்த்தது. 

 

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வதால் உரிமைகள் கிடைக்கும் என்பதனை நான் நம்பவில்லை. அவ்வாறு முதலீடு செய்பவர்களின் உண்மையான நோக்கமும் அவர்களின் செயற்பாடுகளும் எப்படியானவை என்பதைக் காட்டவே இதனை இணைக்கிறேன். 

அல்லி அந்த விசயத்தில கில்லி

ஓணாண்டியார் வாயை கிண்டிணால் கொட்டுவர்

Edited by Nathamuni
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகிர்வுக்கு நன்றி ரஞ்சித் ........!   😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதன்முதலில் கீச்சகத்திலேயே அல்லிராஜாவின் பணமோசடி விடயம் குறித்து அறிந்துகொண்டேன். அதுவும், கெகெலிய,  அல்லிராஜா மற்றும் ஒரு பெண் தொடர்பான கீச்சகப் பதிவின் ஊடாகவே இது எனக்குத் தெரியவந்தது. மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நான் பேச முடியாது. அது அவரவர் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப நடப்பவை. அவர்களின் வாழ்க்கையில் நாம் இருந்தாலன்றி அதனைப் புரிந்துகொள்ளுதல் சாத்தியமமில்லை. ஆகவே, இதனைப் பதிந்ததன் மூலம் எவராவது தக்கப்பட்டிருந்தால் தயவுசெய்து என்னை மன்னித்து விடும்படி கேட்டுக்கொள்கிறேன். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, ரஞ்சித் said:

முதன்முதலில் கீச்சகத்திலேயே அல்லிராஜாவின் பணமோசடி விடயம் குறித்து அறிந்துகொண்டேன். அதுவும், கெகெலிய,  அல்லிராஜா மற்றும் ஒரு பெண் தொடர்பான கீச்சகப் பதிவின் ஊடாகவே இது எனக்குத் தெரியவந்தது. மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நான் பேச முடியாது. அது அவரவர் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப நடப்பவை. அவர்களின் வாழ்க்கையில் நாம் இருந்தாலன்றி அதனைப் புரிந்துகொள்ளுதல் சாத்தியமமில்லை. ஆகவே, இதனைப் பதிந்ததன் மூலம் எவராவது தக்கப்பட்டிருந்தால் தயவுசெய்து என்னை மன்னித்து விடும்படி கேட்டுக்கொள்கிறேன். 

எனெக்கெண்டா இது புரளிச்செய்தி போலவே படுகிறது.

இந்த விசர்க் கெகிளையோட டீல் போட்டு பகிர, அல்லிக்கு என்ன விசரே? ஒரு படம் எடுத்தால் போதுமே.... வந்து நிப்பினமே.

ஆகவே, இது சும்மா பம்மாத்து. ஆனால் வேற பிசினஸ் டீல் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

லைகா மொபைல் பிரான்ஸ் கிளையின் வழக்கு 2016 இல் விசாரணை ஆரம்பித்திருக்கிறது. 2023 ஜூன் மாதம் பெரும்பாலான சந்தேக நபர்கள் மீது VAT வரி மோசடிக் குற்றச்சாட்டு. ஒருவர் மீது பணச்சலவை செய்த குற்றச்சாட்டு.  இதற்கிடையே, பிரிட்டனிலும் லைகா உரிய கார்ப்பரேற் வரியைக் கட்டவில்லை என்று மூன்று விசாரணைகள் - ஒன்று அபராதத்தோடு செற்றிலாகி விட்டது. 2018 இல், பிரான்ஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க பிரிட்டன் மறுத்து விட்டது என்ற ஒரு செய்தியும் ஒரு ஊடகத்தில் வந்திருக்கிறது.

எனவே, இது பழைய கதை மட்டுமல்ல, இன்னும் பல காலம் இழுபடப் போகும் ஒரு கதையாகவும் இருக்கும்.

இதில் ஒரு விடயம் அதிசயமாகத் தான் இருக்கிறது: அமெரிக்காவில் insider trading செய்து இலாபம் பார்த்து தண்டனை பெற்ற ராஜ் ராஜரட்ணம் "தமிழர் வீரம்" பற்றி உரத்துப் பேசுவதால், அவர் "யூத, இந்திய, அமெரிக்க சதியின் பலியாடு😎" என்று போற்றப் படுகிறார். அல்லி பிக்குவின் காலில் விழுந்ததால் அவர் முழுப்பிராடாகத் தான் இருக்க வேண்டுமென, நீதிமன்றத்திற்கு முன்னமே தீர்ப்பு வந்து விடும் போல இருக்கிறது!

  • Like 1
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரியான கருத்து. இந்தத் திரியை நான் ஆரம்பித்ததே பிக்குவின் காலில் விழுந்த அல்லிராஜா மீது சேறு பூசவும், தேசியம் பேசும் ராஜ் ராஜரட்ணத்துக்கு வெள்ளையடிக்கவும் தான். 
 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, Nathamuni said:

ஓணாண்டியார் வாயை கிண்டிணால் கொட்டுவர்

பாவம் அவர்! அவரை ஏன் இதுக்கை இழுத்துவிடுறியள்? லைக்காவுக்கு முதலே அவர் தன் பாட்டில் நாட்டுக்கு வந்து விட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு அல்லி ராஜாவின் தனிப்பட்ட வியாபாரம் பற்றி அதிகம் தெரியாது. ஆனால்  பண்டமாற்று போல் பணச்சலவை செய்ய உகந்த இடம் இந்தியா.

அல்லிராஜா பிக்குகளின் கால்களில் விழுந்த விடயம் தவிர்க்க முடியாதது. பிக்குகளின் சபைக்கு சென்று விட்டு தலை குனிந்து வணக்கம் செய்யாமல் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என யாராவது ஊகித்தீர்களா?

என் கருத்து அல்லிராஜாவிற்கு வக்காளத்து வாங்குவதற்காக அல்ல.....இரு பக்க நியாயங்கள் சந்தர்ப்ப சூழ்நிலை  பற்றியது மட்டுமே...

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஸ்ரீலங்காவில் ஆரம்பத்திலேயே பிக்குகளை சரணடைவதுதான் நல்லது........!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது ஊடகச் செய்தியா.. அல்லது ஊடகம்.. சமூகவலைச் செய்திகளை வைச்சு புனையப்பட்ட ஆக்கமா..???!



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • குத்தரிசிக் கஞ்சியா பச்சையரிசிக் கஞ்சியா?  (Paanch தலையில் கை வக்க்கப் போகிறார்  🤣)
    • கூடுதலான மொழியறிவு எம்மை மேம்படுத்த உதவும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில், இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியை பூர்த்தி செய்த யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன், இன ஐக்கியத்துக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் கற்கும் வகையில் இலவசமாக வகுப்புக்களை நடத்திவரும் சூரிய நிறுவகத்தையும், அதன் நிறுவுனர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் ஆளுநர் பாராட்டியுள்ளார். இரண்டாம் மொழி இங்கு சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்பது இந்த நாட்டில் எங்கும் சென்று சேவையாற்றக் கூடிய வாய்பை உருவாக்கும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.   மேலும், எமது திறன் மற்றும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து! - ஐபிசி தமிழ்
    • படு மோசமான கொலைகளுக்கும் அதை செய்த கொலைகாரர்களுக்கும்   கூட வக்காலத்து  வாங்கி அதை நி யாயப்படுத்துவது தான் அந்த அரிசிக்கஞ்சி. 
    • முடியும்  ஆனால் குள்ளநரிகளால் அது முடியாது. நேர்மையற்றவர்களிலாலும் பிழைகளை  மட்டுமே தேடுபவர்களாலும் அது சாத்தியமே இல்லை..
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.