Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆப்கானிஸ்தானில் 3 பூகம்பங்கள் பதிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

07 OCT, 2023 | 06:22 PM
image
 
ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் சனிக்கிழமையன்று ரிச்டர் அளவுகோலில் 6.2, 6.1 மற்றும் 5.9  ஆக மூன்று பூகம்பங்கள் பதிவாகியுள்ளன.

அரை மணி நேரத்தில் மூன்று சக்திவாய்ந்த பூகம்பங்கள் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

மதியம் 12:19 மணிக்கு 5.6 ஆகவும், மதியம் 12:11 மணிக்கு 6.1 ஆகவும் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 6.2 ரிக்டர் அளவுகோலில் சமீபத்திய பூகம்பம் மதியம் 12:42 மணிக்கு பதிவாகியுள்ளது.

ஹெராட் நகருக்கு வடமேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் நில அதிர்வு நடவடிக்கையின் மையம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாயன்று நேபாளத்தில் 6.2 அளவில் நான்கு பூகம்பங்கள் அடுத்தடுத்து உலுக்கியது. இது இந்தியாவின் டெல்லி உட்பட வட பகுதிகளில்  வரை உணரப்பட்டன.

வலுவான நிலநடுக்கத்தின் மையம், மேற்கு நேபாளத்தில் உள்ள திபயல் மாவட்டத்தில், உத்தரகாண்டில் உள்ள புனித யாத்திரை நகரமான ஜோஷிமத்தில் இருந்து தென்கிழக்கே 206 கிமீ தொலைவிலும், உத்தரபிரதேச தலைநகர் லக்னோவிற்கு வடக்கே 284 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

செப்டம்பர் 4 ஆம் திகதி, ஆப்கானிஸ்தானின் ஃபைசபாத்தில் 4.4 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 28 அன்று,  சில பகுதிகளிலும் 4.8 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது.

https://www.virakesari.lk/article/166334

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – 120 பேர் உயிரிழப்பு!

மேற்கு ஆப்கானிஸ்தானில், ஈரானுக்கு அருகே ஏற்பட்ட நிலஅதிர்வை அடுத்து அங்கு நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரையில் 120 பேரின் உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

62b3d4b1c812e-300x180.jpg  1696687096-AFGHAN-EARTHQUAKES-6-300x210.jpg

download-1-300x169.jpgRepresentative-Image-Photo_Unsplash-1-300x225.jpg

மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராட் பகுதியில் நேற்று காலை 11 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவாகியுள்ளது இதனையடுத்து மூன்று பின்னதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

https://thinakkural.lk/article/276094

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நாமும் போரில் பங்கெடுக்க தயார். இன்று பூகம்பம்??

திட்டமிட்ட படி தான் எல்லாம் நடக்கிறதா,???

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

நேற்று நாமும் போரில் பங்கெடுக்க தயார். இன்று பூகம்பம்??

திட்டமிட்ட படி தான் எல்லாம் நடக்கிறதா,???

இதை எழுத முதல் எங்கட தமிழ் உறவுகளை நினைத்து பாத்திருக்கலாம் 
 
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

நேற்று நாமும் போரில் பங்கெடுக்க தயார். இன்று பூகம்பம்??

திட்டமிட்ட படி தான் எல்லாம் நடக்கிறதா,???

https://en.m.wikipedia.org/wiki/Tectonic_weapon#:~:text=A tectonic weapon is a,the Earth's natural geological processes.
 
ஏதோ என் பங்குக்கு ஒரு சதிக்கோட்பாடு🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000-ஆக உயர்வு: தலிபான் அதிகாரிகள்

மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,000 என மதிப்பிடப்பட்டுள்ளது, இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது

கத்தாரை தளமாகக் கொண்ட தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் அல் ஜசீராவிடம், ஹெராத் மாகாணத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை அடுத்து, இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களைக் காப்பாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பலரை காணவில்லை என்றும் கூறியுள்ளார்.

பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடாரங்கள், மருத்துவம் மற்றும் உணவுப் பொருட்கள் அவசரத் தேவை என்று தெரிவித்துள்ள உள்ளூர் வணிகர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தேவைப்படும் மக்களுக்கு உதவ முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னதாக, தகவல் மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் வாஹித் ராயன், தி அசோசியேட்டட் பிரஸ்ஸிடம், நிலநடுக்கம் மற்றும் வலுவான அதிர்வுகளால் களில் 2,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்றும் சுமார் ஆறு கிராமங்கள் அழிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளனர், அவசர உதவி தேவை என்றும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/276144

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் பூகம்பத்தில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி

Published By: DIGITAL DESK 3

10 OCT, 2023 | 11:56 AM
image
 
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட  சக்திவாய்ந்த பூகம்பத்தில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உயிர்ப்பிழைத்தவர்களை மீட்கும் பணிகள் தொடந்து நடைபெற்று வருகின்றன.

கடந்த சனிக்கிழமை அன்று ஹெராத் மாகாணத்தில்  6.3 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது.

காணாமல் போன 500 க்கும் மேற்பட்டவர்களைத் தேடும் பணியில் கிராம மக்கள் ஈடுப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

வீதிகள் தடைப்பட்டமை மற்றும்  தகவல் தொடர்பு இணைப்புகள் செயலிழந்தமை ஆகிய காரணங்களால் உதவி குழுக்கள் தாமதமாக திங்கட்கிழமை அன்றே குறித்த பகுதிக்கு செல்லக் கூடியதாக இருந்துள்ளது.

Photo_MOHSEN_KARIMI.jpgPhoto MOHSEN KARIMI

உயிரிழந்தோரின்  எண்ணிக்கை மேலும்  அதிகரிக்கலாம்  இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஹெராத் நகரத்திலிருந்து 40 கிமீ (25 மைல்) தொலைவில் உள்ள ஜிந்தஜான் என்ற கிராமப்புற மாவட்டத்தை இந்த பூகம்பம் தாக்கியது.அங்கு "100% வீடுகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது" என்று மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐநா அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது.

பூகம்பத்தில் உயிர் பிழைத்தவர்களுக்கு உணவு, குடிநீர், மருந்து, உடைகள் மற்றும் தங்குமிடத்திற்கான கூடாரங்கள் அவசரமாகத்  தேவைப்படுவதாக தலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் செஞ்சிலுவை சங்கம், மருத்துவ மனிதாபிமான அமைப்பு, உலக உணவு திட்டம் மற்றும் யுனிசெப் உட்பட பல தொண்டு நிறுவனங்கள் உதவியை அனுப்பியுள்ளன. 

ஆனால், நிதிநெருக்கடிக்குள்ளாகி உள்ள நாட்டிற்கு அதிகளவில் உதவி தேவை என்று தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2021 ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய இருந்து ஆப்கானிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது.

அரசாங்கத்திற்கு நேரடியாக வழங்கப்பட்ட உதவி நிறுத்தப்பட்டது.

Mohsen_KARIMI__AFP.jpgMohsen KARIMI  AFP

இந்நிலையில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளமையினால் சில நாடுகள் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளன.

சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம் 200,000 அமெரிக்க டொலர்களை (£164,220) அவசர நிதி உதவியாக வழங்கியதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், "மீட்பு முயற்சிக்கான அனைத்து உதவிகளையும் வழங்கும்" என தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அடிக்கடி பூகம்பம் ஏற்படுகிறது. குறிப்பாக இந்து குஷ் மலைத்தொடரில் அது யூரேசிய மற்றும் இந்திய கவசத்தகடுகளின் சந்திப்பிற்கு அருகில் உள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், பாக்டிகா மாகாணத்தில் 5.9 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது. அதில் 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன்,  பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாக ஆனார்கள்.

https://www.virakesari.lk/article/166533

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்!

breaking.jpg

ஆப்கானிஸ்தானின் ஹெராட் நகரில் இருந்து 28 கிலோமீற்றர் தொலைவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிச்டர் அளவுகோலில் 6.3 மெக்னிடியுட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தால்  ஹெராட் பகுதியில் உள்ள 12 கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,சுமார் 1000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

https://thinakkural.lk/article/276507

  • கருத்துக்கள உறவுகள்
On 8/10/2023 at 15:24, விசுகு said:

நேற்று நாமும் போரில் பங்கெடுக்க தயார். இன்று பூகம்பம்??

திட்டமிட்ட படி தான் எல்லாம் நடக்கிறதா,???

அது என்னமோ போருக்கு புறப்பட தயார் என்று சொன்னவுடனேயே பூகம்பம். இவர்கள்தான் முதன் முதலில் இராக்கை , சிரியாவை கடந்து போய் இஸ்ரயேலை தாக்கப்போவதாக முதலில் அறிக்கை விடடார்கள். சொல்லி முடிப்பதட்குள் பயங்கர அழிவு. பாவம் ஆபிகானியர்கள். இப்போது மடிந்தவர்களை அடக்கம் பண்ணுவதெக்கே ஆட்களை தேடி கொண்டு திரிகிறார்கள். சாப்பிட வழி இல்லை. இதெல்லாம் தேவையா? 

  • கருத்துக்கள உறவுகள்

பட்ட இடத்தில படும் என்பார் 
அழிவின் மேல் அழிவாக ஆப்கான் மக்களை இயற்கையும் அழிகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/10/2023 at 07:23, Maruthankerny said:

பட்ட இடத்தில படும் என்பார் 
அழிவின் மேல் அழிவாக ஆப்கான் மக்களை இயற்கையும் அழிகிறது 

மத தீவிர வாதிகள் நாடடை ஆண்டால் இப்படித்தான் அழிவின்மேல் அழிவு வரும்.

இலங்கையில் நடந்ததும் அதுதான். மத தீவிரவாதிகள் ஆட்சி செய்யவிடடாலும் , அவர்களின் அனுமதி இன்றி அணுவும் அசையாது. கடைசியில் நாட்டில் அழிவும் வங்குரோத்து நிலமையும்தான் மிச்சம்.

இருந்தாலும், திருந்தினார்களா என்றால், இல்லை என்பதே பதில். எனவே இன்னுமோர் அழிவை இலங்கையில் எதிர்பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 14/10/2023 at 00:42, Cruso said:

மத தீவிர வாதிகள் நாடடை ஆண்டால் இப்படித்தான் அழிவின்மேல் அழிவு வரும்.

இலங்கையில் நடந்ததும் அதுதான். மத தீவிரவாதிகள் ஆட்சி செய்யவிடடாலும் , அவர்களின் அனுமதி இன்றி அணுவும் அசையாது. கடைசியில் நாட்டில் அழிவும் வங்குரோத்து நிலமையும்தான் மிச்சம்.

இருந்தாலும், திருந்தினார்களா என்றால், இல்லை என்பதே பதில். எனவே இன்னுமோர் அழிவை இலங்கையில் எதிர்பார்க்கலாம். 

மத தீவிரவாதம் எங்கு இல்லை ?
பெண்களை அடிமை ஆக்குவதை முதலில் இந்த உலகுக்கு அறிமுக படுத்தியதே கிறிஸ்தவம்தான்.

இன்று 24 மணித்தியாலத்தில் இஸ்திரேல் 4 நாடுகள் மீது பொஸ்பரஸ் குண்டுகளை வீசுகிறது 
பைபிளை தூக்கிவைத்துக்கொண்டு ஐ நா முதல் அமெரிக்க ஐரோப்பிய யூனியன் வரை 
இஸ்திரேலைதான் பாவிகள் போல காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். தானும் தன்பாடும் என்று இருந்த 
நாடுகள் மீதும் குண்டுகளை வீசி அப்பாவி மக்களை கொன்று கொண்டு இருக்கிறது இஸ்திரேல் 
தீவிரவாத சியோனிஸ்ட்டுகளால் உலகின் ஒரு பகுதியே அழித்துக்கொண்டு இருக்கிறது 

ஆப்கானிஸ்தானிகளை மதவாதிகள் ஆகியவர்கள்தான் இப்போ குற்றம் கண்டுபிடித்து உலகிற்கு வேதம் ஓதிக்கொண்டு இருக்கிறார்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் ஹெராட் நகரின் வடமேற்கில் இன்று (15) காலை ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது பூமிக்கடியில் சுமார் 6 கிமீ ஆழத்தில் நடந்துள்ளது, இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை.

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், இன்று ஏற்பட்டுள்ள சமீபத்திய அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

https://thinakkural.lk/article/277071

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Maruthankerny said:

முதலில் இந்த உலகுக்கு அறிமுக படுத்தியதே கிறிஸ்தவம்தான்.

அந்த காலத்திலேயே இந்து சமயம் பெண்களை “சதி” செய்து உயிருடன் சிதை ஏற்றியது, தேவதாசி என பாலியல் தொழிலில் தள்ளியது. லிஸ்ட் இன்னும் போடலாம்.

கிறிஸ்தவமும் பெண்ணடிமை செய்தது என சொல்லலாம். உலகுக்கு அறிமுகபடுத்தியது என. சொல்ல முடியுமா என தெரியவில்லை.

அநேக கிறிஸ்தவ காற்று படாத சீனாவில் மா ஓ வரும் வரை பெண்கள் நிலை மிக மோசமாக இருந்தது. 

16 hours ago, Maruthankerny said:

இன்று 24 மணித்தியாலத்தில் இஸ்திரேல் 4 நாடுகள் மீது பொஸ்பரஸ் குண்டுகளை வீசுகிறது 

பொஸ்பரஸ் குண்டுகளை வீசியதாக இதுவரை கூறப்பட்டது காஸாவில் மட்டுமே. சிரியா, லெபனானில் பாரம்பரிய வகை குண்டுகளே பாவிக்கப்பட்டதாக இதுவரை அறிய வந்துள்ளது என நினைக்கிறேன்.

4வதாய் இஸ்ரேல் குண்டு போட்ட நாடு எது?

16 hours ago, Maruthankerny said:

தானும் தன்பாடும் என்று இருந்த 
நாடுகள்

சிரியாவும், ஹிஸ்புலாவும் - தாமும் தன் பாடும் என இருந்தன? ஹமாசுக்கு உதவாமல்? ஜோக் தானே🤣

———-

நில நடுக்கம் மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இப்போ ஈரான் அருகில் உள்ள ஹேரட் நகரில் 6.4 பதிவாகியுள்ளது.

@விசுகு அடுத்து டெஹ்ரான்?🤣

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Maruthankerny said:

மத தீவிரவாதம் எங்கு இல்லை ?
பெண்களை அடிமை ஆக்குவதை முதலில் இந்த உலகுக்கு அறிமுக படுத்தியதே கிறிஸ்தவம்தான்.

இன்று 24 மணித்தியாலத்தில் இஸ்திரேல் 4 நாடுகள் மீது பொஸ்பரஸ் குண்டுகளை வீசுகிறது 
பைபிளை தூக்கிவைத்துக்கொண்டு ஐ நா முதல் அமெரிக்க ஐரோப்பிய யூனியன் வரை 
இஸ்திரேலைதான் பாவிகள் போல காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். தானும் தன்பாடும் என்று இருந்த 
நாடுகள் மீதும் குண்டுகளை வீசி அப்பாவி மக்களை கொன்று கொண்டு இருக்கிறது இஸ்திரேல் 
தீவிரவாத சியோனிஸ்ட்டுகளால் உலகின் ஒரு பகுதியே அழித்துக்கொண்டு இருக்கிறது 

ஆப்கானிஸ்தானிகளை மதவாதிகள் ஆகியவர்கள்தான் இப்போ குற்றம் கண்டுபிடித்து உலகிற்கு வேதம் ஓதிக்கொண்டு இருக்கிறார்கள் 

ஆபிகானிஸ்தானில் மீண்டும் பெரும் பூகம்பம் . பேரழிவு. இதட்கும் கிறிஸ்தவர்களை குற்றம் சாடட மாடடீர்கள் என்று நினைக்கிறேன்.

இந்தியாவில் பெண்களின் நிலைமை, முஸ்லீம் நாடுகளின் முஸ்லீம் பெண்களின் நிலைமையை சரியாக கணிப்பீர்கள் என்றால் கிறிஸ்தவர்களை குற்றம் சாடட மாடடீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

நில நடுக்கம் மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இப்போ ஈரான் அருகில் உள்ள ஹேரட் நகரில் 6.4 பதிவாகியுள்ளது.

@விசுகு அடுத்து டெஹ்ரான்?🤣

நான் மேலே எழுதியதை பலரும் தவறாக வியாக்கியானம் செய்தார்கள். நீங்கள் புரிந்துள்ளீர்கள்? மகிழ்ச்சி. ( மீண்டும் கோர்த்து விடவில்லை தானே?)🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

நான் மேலே எழுதியதை பலரும் தவறாக வியாக்கியானம் செய்தார்கள். நீங்கள் புரிந்துள்ளீர்கள்? மகிழ்ச்சி. ( மீண்டும் கோர்த்து விடவில்லை தானே?)🤣

🤣 யாழ்களத்தில் நான் துரியோதனன்.

#எடுக்கவா, கோர்க்கவா🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

அந்த காலத்திலேயே இந்து சமயம் பெண்களை “சதி” செய்து உயிருடன் சிதை ஏற்றியது, தேவதாசி என பாலியல் தொழிலில் தள்ளியது. லிஸ்ட் இன்னும் போடலாம்.

கிறிஸ்தவமும் பெண்ணடிமை செய்தது என சொல்லலாம். உலகுக்கு அறிமுகபடுத்தியது என. சொல்ல முடியுமா என தெரியவில்லை.

தேவையற்ற விரண்டா வாதங்களை தவிர்த்து வருகிறேன் 
இவைகள் நடந்த கால பகுதிகளை சரியாக சரிபார்த்து கொள்ளுங்கள் 
மதம் என்பதே ஒரு பூச்சாண்டி காட்டி ஒரு குறிப்பிடட மனித குழுமம் இன்னொரு மனித குழுமத்தை 
அடிமை படுத்தும் அடிப்படை எண்ணம் சார்ந்ததுதான். அதில் அது பெரிது இது பெரிது என்று வாதாட நான் வரவில்லை. "பாவம்' "கற்பு' போன்ற சொற்களை உருவாக்கி பெண்களை குறிப்பிட்டு அடிமைதானம் செய்தது என்பது மனித குலத்தில் கிறிஸ்தவத்தின் தோண்றுதலில் உருவானது.

நீங்கள் கூறுவதுதான் உண்மை என்று நீங்கள் அடம்பிடித்தால் எந்த ஆடசேபனையும் எனக்கில்லை 
அப்படியே அதுதான் உண்மை என்று நானும் ஒத்துக்கொண்டுவிடுகிறேன். 
மேலே நான் எதோ எழுத இன்னொருவர் எதோ எழுதியிருப்பது போல அதற்கெல்லாம் பதில் எழுதி என்ன பிரயோசனம்?  

(பைபிள் பழைய ஏற்பாட்டில் முதலிரவில் பெண் கற்போடு இல்லை என்றால்  அவளை இழுத்துச்சென்று அவள் வீட்டு வாசலில் விடுங்கள் மற்ற ஆண்கள் அவளை கல்லால் எறிந்து கொல்லுங்கள் என்று இருக்கிறது) 

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின் என்ற பெயரில் எழுதுவதால் ஆட்சேபனை வரலாம் சில உறுப்பினர்களுக்கு, ஆனால் தகவல் பிழையை சுட்டிக் காட்ட வேண்டும். 

பெண் அடிமைத்தனத்தை கிறிஸ்தவம் தான் முதலில் அறிமுகம் செய்தது (அதில் இருந்து ஏனைய உலக மதங்களும் கலாச்சாரங்களும் பால்குடிகளாகக் கற்றுக் கொண்டன😎?) என்பது உலக வரலாற்றின் ரைம் லைன் தெரியாதவர்களின் கருத்து!

கிறிஸ்தவம் உருவானது முதல் நூற்றாண்டில் (கி.பி 1, அதாவது இயேசு மரணமான பிறகு!). மேலே கோசான் ஏற்கனவே  சுட்டிக் காட்டியிருப்பது போல, ஜப்பான், சீனா கிறிஸ்தவம் உருவாக முன்னரே 3000, 4000 ஆண்டுகள் வரலாறுடையவை. இந்தியாவின் அரசுகளும் கிறிஸ்தவத்திற்கு முந்தியவை. இந்த பண்டைய அரசுகளில் பெண்களை அடிமைகளாக நடத்த யார் கற்றுக் கொடுத்திருப்பார்கள்? அல்லது இன்றும் இந்த நாடுகளில் இருக்கும் traditional misogyny இற்கு யார் பொறுப்பு?

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Maruthankerny said:

தேவையற்ற விரண்டா வாதங்களை தவிர்த்து வருகிறேன் 
இவைகள் நடந்த கால பகுதிகளை சரியாக சரிபார்த்து கொள்ளுங்கள் 
மதம் என்பதே ஒரு பூச்சாண்டி காட்டி ஒரு குறிப்பிடட மனித குழுமம் இன்னொரு மனித குழுமத்தை 
அடிமை படுத்தும் அடிப்படை எண்ணம் சார்ந்ததுதான். அதில் அது பெரிது இது பெரிது என்று வாதாட நான் வரவில்லை. "பாவம்' "கற்பு' போன்ற சொற்களை உருவாக்கி பெண்களை குறிப்பிட்டு அடிமைதானம் செய்தது என்பது மனித குலத்தில் கிறிஸ்தவத்தின் தோண்றுதலில் உருவானது.

நீங்கள் கூறுவதுதான் உண்மை என்று நீங்கள் அடம்பிடித்தால் எந்த ஆடசேபனையும் எனக்கில்லை 
அப்படியே அதுதான் உண்மை என்று நானும் ஒத்துக்கொண்டுவிடுகிறேன். 
மேலே நான் எதோ எழுத இன்னொருவர் எதோ எழுதியிருப்பது போல அதற்கெல்லாம் பதில் எழுதி என்ன பிரயோசனம்?  

(பைபிள் பழைய ஏற்பாட்டில் முதலிரவில் பெண் கற்போடு இல்லை என்றால்  அவளை இழுத்துச்சென்று அவள் வீட்டு வாசலில் விடுங்கள் மற்ற ஆண்கள் அவளை கல்லால் எறிந்து கொல்லுங்கள் என்று இருக்கிறது) 

நானும் விதண்டாவாதம் பண்ணவில்லை. ஆனால் கிறிஸ்தவம் பெண்ணடிமைத்தனத்தை அறிமுகபடுத்தியது என்பது தவறு.

மற்றும் படி எல்லா மதங்களும் தேவையில்லாத ஆணி என்பதில் எனக்கும் பூரண உடன்பாடே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.