Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு - கிழக்கில் எதிர்வரும் 20 ஆம் திகதி பூரண ஹர்த்தால்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3 17 OCT, 2023 | 10:00 AM

image
 

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் மற்றும் கதவடைப்பு போராட்டத்திற்கு மன்னார்  மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்புகளும் ஒத்துழைப்பை வழங்குமாறு தமிழ்த் தேசிய கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (16) மாலை மன்னாரில்  அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் காரியாலத்தில் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய கட்சிகளின் கூட்டமைப்பு அங்கத்துவ கட்சிகள், அகில இலங்கை  மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா மீதான அச்சுறுத்தல் மூலம் நீதித்துறை சுயாதீனமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பல்வேறு சம்பவங்கள் இந்த நாட்டில் இடம் பெற்று வருகின்ற போதும் உரிய தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை.

எனவே எதிர்வரும் வெள்ளிக்கிழமை வட கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள கதவடைப்பு போராட்டத்திற்கு பொதுமக்கள் வர்த்தக சங்கத்தினர், பேருந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் உட்பட அனைத்து பொது அமைப்புக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் வசந், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பாக மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், ஜனநாயக போராளிகள் கட்சி சார்பில்  நேசன், ரெலோ கட்சி சார்பாக மாவட்ட அமைப்பாளர் ஏ.ரி.மோகன் ராஜ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக முன்னாள் பிரதேச சபை தவிசாளர் முஜா ஹீர்,புளொட் சார்பாக ஜேம்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

https://www.virakesari.lk/article/167052

  • கருத்துக்கள உறவுகள்

 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக முன்னாள் பிரதேச சபை தவிசாளர் முஜா ஹீர்,புளொட் சார்பாக ஜேம்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இது தேவையா குமாரு.....

  • கருத்துக்கள உறவுகள்

ஹர்த்தாலுக்கு தமிழரசு கட்சி பூரண ஆதரவு , அனைவரினது ஒத்துழைப்பையும் முழுமையாக எதிர்பார்க்கிறோம் ! சுமந்திரன் MP

 
MA-Sumanthiran.jpg


 வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு தமிழரசுக்கட்சி பூரண ஆதரவு அளிக்கவுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஊடகங்களுக்கு வழங்கியுள்ள அறிவிப்பில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானாகவும் இருந்த திரு சரவணராஜா, தனது நீதித்துறை கடமைகளை செய்த காரணத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பதவியிலிருந்து இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டதை எதிர்த்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் அனைத்து மக்களையும் கேட்டுக் கொள்ளுகிறோம். 

இந்த கடையடைப்பு நடவடிக்கை மூலம் தமிழ் நீதிபதி ஒருவருக்கு நிகழ்ந்த இந்த மிக மோசமான செயற்பாட்டை திரும்ப திரும்ப உலகுக்கு எடுத்தக் காட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம். 

ஆகவே, இது சம்பந்தமாக அனைவரினது ஒத்துழைப்பையும் முழுமையாக எதிர்பார்க்கிறோம் என்றுள்ளது.

 

http://www.battinews.com/2023/10/mp_18.html

  • கருத்துக்கள உறவுகள்

கர்த்தால் இல்லை என்னத்தை போட்டாலும் சிங்கள அரசாங்கம்  அசையாது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்!

Published By: DIGITAL DESK 3   18 OCT, 2023 | 03:26 PM

image

எதிர்வரும் 20 ஆம் திகதி அரசியல் கட்சிகளால் வடக்கு கிழக்கு மாகாணங்களை முடக்கி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் குறித்த ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன்கிழமை (18) தென்மராட்சி பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

இந்த துண்டு பிரசுரங்களானது தென்மராட்சி மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பினால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த துண்டு பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் வடக்கு கிழக்கை முடக்கி ஹர்த்தால் போடுவதன் மூலம் பாதிக்கப்படுவது யார்?

இந்த ஹர்த்தால் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போகும் தீர்வு என்ன?

காலங்காலமாக போடப்பட்ட ஹர்த்தால் மூலம் தமிழ் மக்கள் அடைந்த இலாபம் என்ன?

IMG-20231018-WA0072.jpg

தெற்கை முடக்கினால் வரவேற்கத்தக்கது. ஆனால் வடக்கு கிழக்கை முடக்கி மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் செயற்படுவது வரவேற்கத்தக்கதன்று. நாட்டில் தொடரும் வங்குரோத்து நிலையில் வியாபாரிகள் வியாபாரம் இல்லாது அல்லாடி வரும் நிலையில் இவ்வாறான கடையடைப்பின் மூலம் கிடைக்கப்போரும் நன்மை என்ன என வியாபாரிகளும் விசனம் தெரிவித்து வருவதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு இடர்களைக் கடந்து மீண்டு வந்த மக்களுக்கு அடுத்த பேரிடியாக பொருளாதாரா நெருக்கடி ஏற்பட்டது. இதிலிருந்து மீள முடியாமல் மக்கள் திண்டாடி வரும் நிலையில் இவ்வாறான ஹர்த்தால் எவ்வகையில் நியாயமானது?

ஒன்று சேர முடியாத தமிழ் கட்சிகள் தமிழர்களின் அபிலாசைகளை எப்போது நிறைவேற்றுவார்கள்?

தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நாடகமாடும் இவர்களின் செயற்பாடு மக்களுக்கு எதையுமே பெற்றுக் கொடுக்கப்போவதில்லை என்பது திண்ணம். அரசியல் கட்சிகள் தங்களது இருப்பிற்கும் வாக்கு வங்கியை சரிய வீடாமல் காப்பாற்றுவதற்குமே இவ்வாறான வேலைத்திட்டங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிந்தித்து செயற்படுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

IMG-20231018-WA0074.jpg

https://www.virakesari.lk/article/167185

இந்த உளுத்துப் போன ஹர்த்தால் போராட்டத்தால் சிங்கள அரசுக்கோ அல்லது சிங்களத்தின் பொருளாதாரத்துக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. பங்குச் சந்தையில் எந்த பங்குகளிலும் சரிவு இதனால் ஏற்படப்  போவதில்லை, இலங்கையில் இருக்கும் வெளி நாட்டு தூதரகங்கள் இதை ஒரு பொருட்டாகக் கூட கருதப் போவதில்லை. 

பாதிக்கப்படப் போவது தமிழ் பகுதிகளின் பொருளாதாரமும், வியாபாரமும், பொதுமக்களின் அன்றாடச் செயற்பாடுகளும் தான். வருடத்துக்கு நாலு, ஐந்து ஹர்த்தால் என்று, எந்த பலனையும் தராத போராட்டத்தை செய்வதால் நன்மை அடைவது, எதையும் புதிதாக சிந்திக்காமல், அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைக்கும் அரைவேக்காட்டு தமிழ் தேசிய கட்சிகளும் அவை சார்ந்த அமைப்புகளும்  மட்டும் தான். இப்படியாவது தம் இருப்பை காட்டுகின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கர்த்தால் இல்லை என்னத்தை போட்டாலும் சிங்கள அரசாங்கம்  அசையாது 

உந்த ஹர்த்தால் கடையடைப்புகளால பாதிக்கப்படுறது பொது சனம்.    சந்தோசப்படுறது பள்ளிக்கூட பொடியள் 😃 மற்றும் படி எந்த பிரயோசனமும் இல்லை. அரசியல்வாதிகள் தங்களை தக்க வைக்கும் நடவடிக்கையாக ஹர்த்தால்களும் கடையடைப்புகளும் மாறிவிட்டது😡

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வுத் துறையினர் வியாபாரிகளை மிரட்டுவதாக செல்வம் அடைக்கலநாதன் எம்.பி குற்றச்சாட்டு

18 OCT, 2023 | 05:41 PM
image
 

இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வுத் துறையினர் வியாபாரிகளை மிரட்டுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கேட்டு இடம்பெறவுள்ள ஹர்த்தால் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று புதன்கிழமை (18) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

20 ஆம் திகதி ஹர்த்தாலை அனுஸ்டிக்குமாறு கோருகின்றோம். எங்களுடைய மக்கள்  போராட்டத்தின் ஊடாக முன்னுக்கு வந்தவர்கள். போராட்டத்தின் குணாதிசயங்களை கொண்டவர்கள். இருந்தாலும் நீதித்துறை, நில அபகரிப்பு, புத்த கோவில்களுடைய ஆக்கிரமிப்பு  என்பன வடக்கு - கிழக்கில் மிக மோசமாக நடந்து வருகின்றது. எங்களது மக்களின் பூர்வீகம் மற்றும் அவர்களின் நிலங்களை அபகரிப்பதன் ஊடாக எங்களுடைய மக்களின் வரலாற்றை சிதைக்கும் செயற்பாட்டை தடுத்து நிறுத்தும் வகையில் இந்த கர்த்தால் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.

எமது மக்கள் போராட்டத்தின் ஊடாக வந்தவர்கள் ஆகையால் இதற்கு ஆதரவு தருவார்கள் என நம்புகின்றோம். இருந்தாலும் சில சங்கடங்கள் இருக்கின்றது. அன்றாடம் உழைக்கின்ற மக்கள் தமது அன்றைய தேவைக்கு என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுகிறது.

தற்போது புதிதாக அடாவடித் தனமான, ஜனநாயக விரோதமான செயற்பாடு நடக்கிறது. இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வுத் துறையினர் வலர்த்தக நிலையங்களை நடத்துவோர், சிறுதொழில் செய்வோர், மரக்கறி வியாபாரம் செய்வோர் என அவர்களை மிரட்டி அவர்களை கர்த்தாலுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் எனக் கூறி வருகிறார்கள். அதற்கு எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

அனைத்து தமிழ் பேசும் மக்களும் இதற்கு ஆதரவு தருவார்கள். அரசாங்கம் கூடுதலான திணைக்களங்கள் மற்றும் பிக்குகளை வைத்து எமது மக்களை அடக்கி ஒடுக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கிறது. தொடர்ந்தும் கர்த்தாலை நடத்த முடியாது. இது ஒரு கடைசியான கர்த்தால். அதனால் அனைவரும் ஆதரவு தர வேண்டும் எனத் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/167205

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். அச்சுவேலி பகுதியில் ஹர்த்தாலுக்கு எதிராக தனி மனித போராட்டம்

Published By: DIGITAL DESK 3   18 OCT, 2023 | 03:55 PM

image
 

வடக்கு மற்றும் கிழக்கில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனி நபர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இன்று புதன்கிழமை (18)  நபர் ஒருவர் தமிழ் எழுத்துப்பிழைகளுடனான பதாகை ஒன்றுடன் சில நிமிடங்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து சென்றிருந்தார்.

https://www.virakesari.lk/article/167192

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

உந்த ஹர்த்தால் கடையடைப்புகளால பாதிக்கப்படுறது பொது சனம்.    சந்தோசப்படுறது பள்ளிக்கூட பொடியள் 😃 மற்றும் படி எந்த பிரயோசனமும் இல்லை. அரசியல்வாதிகள் தங்களை தக்க வைக்கும் நடவடிக்கையாக ஹர்த்தால்களும் கடையடைப்புகளும் மாறிவிட்டது😡

இந்த அரசாங்கத்தில் இருந்து இந்த தமிழ் கட்சிகள் மொத்தமாக ராஜினாமா செய்து விலகினால் சரிதானே சிங்களவன் ஒரு தீர்வும் தருகிறான் இல்லையென அப்படி செய்வாங்களா சாமியார்?

Edited by தனிக்காட்டு ராஜா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கில் ஹர்த்தால்; கல்வி நடவடிக்கைகள், பரீட்சைகளை பாதிக்குமா ?

Published By: DIGITAL DESK 3  19 OCT, 2023 | 02:19 PM

image

நாளையதினம் வடக்கு கிழக்கு முழுவதும் ஹர்த்தாலினை அனுஷ்டிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பேருந்துகளின் சேவையானது எவ்வாறு அமையும் என எதிர்வுகூற முடியாத நிலை காணப்படுகிறது.

இந்நிலையில், பாடசாலைகளில் தவணைப் பரீட்சை இடம்பெற்று வருகிறது. தரம் 6-9 வரையான மாணவர்களுக்கு வலய ரீதியிலான பரீட்சையும், தரம் 10 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு மாகாண ரீதியிலான பரீட்சையும் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் நாளையதினம் பாடசாலையை நடாத்துவதா? இல்லையா? என அந்த அந்த கல்வி வலயங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரன்ஸ் ஹர்த்தால் தொடர்பில் வினவிய போது தெரிவித்தார்.

இது தொடர்பில் வலிகாமம் கல்வி வலய பணிப்பாளர் பிரெக்ட்லியிடம் வினவிய போது,

"ஒரு கல்வி வலயம் பரீட்சையை வைத்து, ஒரு வலயம் பரீட்சையை பிற்போட்டால் அந்த பரீட்சை வினாத்தாள்கள் வெளியாகிவிடும். இதனால் பிற்போடப்படும் பரீட்சைகள் மூலம் பிரயோசனம் இருக்காது ஏனெனில் நாளையதினம் மாணவர்களின் வருகையை வைத்தே பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும்” என்றார்.

இது குறித்து செய்தி வெளியிட்டு மாணவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்திற்கு ஒரு தெளிவான பதிலை வழங்குவதற்காக ஊடகவியலாளர் ஒருவர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் இரண்டு தடவைகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் அவர் கூட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளையதினம் பரீட்சையை நடாத்தினால் பேருந்தில் பாடசாலைக்கு வரும் மாணவர்களால் பாடசாலைக்கு வருகை தர முடியாது இருக்கும். இதனால் அவர்கள் பாதிக்கப்படுவர். இதற்குரிய முடிவை உரிய அதிகாரிகள் ஒருமித்து எடுக்க வேண்டும் என மாணவ சமூகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/167262

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் புறக்கணிப்பா..! பகிரங்க அறிவித்தல்

பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தையும் நாளை வெள்ளிக்கிழமை (20) புறக்கணிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

இது தொடர்பில் தமிழ் கட்சிகள் அனுப்பி வைத்த செய்தி குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கம் 

அந்த செய்தி குறிப்பில், நாளை நிகழவுள்ள பொது முடக்கம் முழுமையாக வெற்றியீட்டுவதை உறுதிப்படுத்துவது நம் எல்லோருடைய கடமை ஆகும்.

பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் புறக்கணிப்பா..! பகிரங்க அறிவித்தல் | Hartal In North East School Activities Ignore

எனவே, நாளைய தினம் நடைபெறவுள்ள பாடசாலைப் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு, கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்கு நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

யதார்த்த பூர்வமான முடிவு எடுக்கப்படும் என்றே எதிர்பார்க்கின்றோம். எது எப்படி இருந்தாலும், பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தையும் நாளை புறக்கணிக்குமாறு எமது மாணவச் செல்வங்களை உரிமையோடு வேண்டிக் கொள்கின்றோம். பெற்றோர்களின் ஒத்துழைப்பையும் நாடி நிற்கின்றோம்.

நாளை நிச்சயிக்கப்பட்டுள்ள பரீட்சையை, வேறு ஒரு தினத்தில் கல்வித் திணைக்களம் தாராளமாக நடாத்த முடியும். எமது ஒத்துழைப்பும் அதற்கு இருக்கும்- என்றுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கவன ஈர்ப்பு தேவை. இதை வேறு மாதிரியாக காண்பிக்க ஏதும் வழிவகைகளை பார்க்கலாமே. 

பாடசாலை பிள்ளைகள் கல்வி ஏலவே மட்டம். 

நிருவாக இயந்திரம் ஏற்கனவே சோம்பேறித்தனம் பிடித்தது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.