Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

கடந்த சனியன்று, ஈஸ்ட்காம், முருகன் கோவிலுக்கு எள் எண்ணெய் எரிக்க போனால், கோவிலில் உள்ள அளவுக்கு பிரசாதம் கொடுக்கும் இடத்தில் கூட்டம். பார்த்தால் அனைவருமே புதியவர்கள். வழக்கத்துக்கு மாறாக அதாவது, பிரசாதம் கொடுக்க தொடங்க முன்னம், அங்கே, குவிந்து நின்றார்கள்.  இவர்களில் பலர் இந்தியர்கள். அங்கே ஏன் கூடி நிக்கிறார்கள் என்று விசாரித்தால், வந்தது தலை கிறுகிறுக்கும் செய்தி. 

அவர்கள் அனைவருமே, மோசடி முகவர்களுக்கு காசு கொடுத்து விசா எடுத்து, வேலைக்கு வந்திருக்கிறார்கள்.

இவர்கள் எப்படி ஏமாத்தப்பட்டார்கள் ?

மோசடியாளர்கள், 10, 20 வருடம் முன்னதாக பதிவு செய்த, திவாலாகாமல், சிறிதானாலும், நனறாக நடந்த கொம்பனிகளை, கம்பெனி ஹவுஸ் தளத்தில் தேடிப்பிடித்து, விலை கொடுத்து வாங்கி, அவைகளை, care home services தரும் கொம்பனிகளாக பதிவை செய்து, ஆட்களை இறக்க, approval எடுத்து, அப்புறம், முடிந்த அளவுக்கு விசாக்களை வெளிநாடுகளில் process பண்ணி, எடுத்ததும், அவர்களை, குறித்த நாளில் அல்லது குறித்த வார இறுதியில் சேர்ந்தே வரப்பண்ணி, எல்லோரும் ஒட்டு மொத்தமாக வந்த பின்னர், அங்கே வாங்கிய பணதுடன் காணாமல் போய்விட்டனர்.

இங்கே நடந்த பெரு மோசடியால், அரசு, ஜனவரி முதல் care workers விசாவை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது.

ஆக, வந்து இறங்கியவர்கள், அவர்களை, அழைத்தவர்களோ, அல்லது, எந்த நிறுவனத்துக்காக வேலைக்கு அழைக்கப்பட்டார்களோ, யாருமே இல்லாமல், என்ன செய்வது என்று புரியாத அவலத்தினுள் சிக்கி விட்டனர். இப்படி வந்த நம்மவர்கள், சமூக உதவி (உறவினர் உதவி) இருப்பதால் தப்பி விடுகின்றனர். இவர்களுக்கு அப்படி உதவி இல்லை. ஆகவே, கோவிலில் கிடைக்கும் உணவுக்காக வந்து தவித்து நிற்கிறார்கள். இது லண்டணில் உள்ள சகல கோவில்களிலும் உள்ள நிலைமை. 

இவர்களே, இந்த கோவில்களில் உணவுக்காக வந்து அலைமோதும் பரிதாபம். இவர்கள் இரண்டு மாதத்தில் வேலை எடுத்து, அரசுக்கு வரி செலுத்தாவிடில், deport பண்ணப்படுவார்கள் என்ற சிக்கலும் உள்ளது.

போனவாரம் இதேபோல ஒரு தமிழ் கடை வைத்திருக்கும் ஒருவர், இருவரை, ஆளாளுக்கு 25 லச்சம் வீதம் இறக்கி, வெளியே டெலிவரி வேலைக்கு விட்டிருக்கிறார். அங்கேயும் ஒரு இடத்தில் இமிகிரேசின் சுற்றி வளைத்து கைது செய்ததால், எதுவுமே இலகுவானதல்ல.

இதனை நம்மவர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்.

***

அதேவேளை, ரெய்னர்ஸ் லேன் ரொட்டி ஹட் take away யில் ஒரு இலங்கை இஸ்லாமிய பெண்ணும், முன்னால் புதிதாக திறந்திருக்கும், சம்பல் take away யில் சிங்கள மாணவியும் வேலை செய்வது பார்க்க நன்றாக இருக்கிறது. சிங்கள மனைவி, இது எமது 9வது கிளை, 10வது விரைவில் வெம்பிளியில் என்று பெருமையாக சொன்னார். இலங்கையர் நிறுவனத்தில் வேலை செய்வது மிகப்பெருமை என்றும் சொன்னார்.

Edited by Nathamuni
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி நாதம் தகவலுக்கு இலங்கையில் எனக்கு தெரிந்த பலருக்கு இதை அனுப்பி உள்ளேன்.. உறவுகளும் தங்களுக்கு தெரிந்த வட்சப் குறூப்களில் இதை பகிர்ந்தால் பலர் ஏமாறாமல் இருப்பார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, Nathamuni said:

பார்க்க நன்றாக இருக்கிறது.

அப்படியா சொல்றீங்க

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நன்றி நாதம் தகவலுக்கு இலங்கையில் எனக்கு தெரிந்த பலருக்கு இதை அனுப்பி உள்ளேன்.. உறவுகளும் தங்களுக்கு தெரிந்த வட்சப் குறூப்களில் இதை பகிர்ந்தால் பலர் ஏமாறாமல் இருப்பார்கள்..

https://www.gov.uk/employee-lose-sponsor-licence

https://www.citizensadvice.org.uk/immigration/health-and-care-worker-visas/losing-your-job-if-you-have-a-health-and-care-worker-visa/

2022 பிப்ரவரியில் பராமரிப்புப் பணியாளர்களை திறமையான வேலை விசாக்களுக்குத் தகுதியுடையதாக மாற்றும் நடவடிக்கையைத் தொடர்ந்து, ஜூன் 2023 இல் முடிவடைந்த ஆண்டில் பராமரிப்பு மற்றும் மூத்த பராமரிப்புப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட நீண்ட கால வேலை விசாக்களின் எண்ணிக்கை 77,700ஐ எட்டியது. இது 2022 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் 12,300 ஆக இருந்தது. பிரான்சில் இருந்து அகதியாக வந்தவர்களில் பார்க்க இது அதிகமாக இருப்பதால், இந்த விசாவினை நிறுத்தி, அகதிகளுக்கு இந்த வேலையினை செய்வதுக்கு உரிய பயிற்சியினை கொடுக்கலாமே என்று ஆலோசனை வைக்கப்படுள்ளது.

4 hours ago, goshan_che said:

அப்படியா சொல்றீங்க

😍🥰 🤫

விபரம் தந்தது உங்களுக்காக தானே... 😜

Edited by Nathamuni
Posted

நான் எனக்கு என்று ஒரு சிறு கம்பெனி ஒன்றை உருவாக்கி பதிந்து அதனூடாக மற்ற கம்பெனிகளுக்கு வேலை செய்கின்றேன் (incorporated / consultant). வருடா வருடம் எந்த பிசகும் இல்லாமல், நேர்மையான ஒரு தமிழ் கணக்காளரினூடாக அதன் வரிகளை அரசுக்கு கட்டிக் கொண்டு வருகின்றேன்.

அண்மையில் நெருங்கிய உறவு ஒருவரின் ஆண்டுத்துவசத்துக்கு அழைத்து இருந்தனர். அங்கு வந்திருந்த சிலருக்கு நான் எவ்வாறு கம்பெனி ஒன்றினூடாக வேலை செய்கின்றேன் என தெரியும். அவர்களில் ஒருவர் என்னிடம் வந்து ஒரு டீல் பேசினார்.

என் கம்பெனியின் பெயரால் 3 பேருக்கு வேலை கொடுப்பதாக ஒரு செட்டப் பின்வருமாறு செய்ய முடியுமா எனக் கேட்டார்.

1. முதலில் என் கம்பெனிக்கு 3 பேர் தேவை என்று சட்டப்படி அறிவிப்பது.

2. ஒரு வேலைக்கு 10 பேரை நேர்முகத் தேர்வுக்கு அழைப்பது. 

3. அதில் தாம் காட்டும் ஒருவரையும் அழைப்பது (அவர் ஊரில் இருந்து இறக்கப்பட்டவர்)

4. 10 பேரையும் நேர்முகத் தேர்வுக்கு சமூகமளித்ததாக காட்டுவது. அதில் 9 பேர் இங்கு சிட்டிசன் எடுத்தவர்களாக இருக்க வேண்டும்.

5. அதில் தாம் காட்டும் நபரை தெரிவு செய்வது. இதன் மூலம் மிச்ச 9 பேருக்கும் இல்லாத தகுதி, ஊரில் இருந்து வந்து நிற்பவரிடம் உள்ளதாக காட்டுவது.

6. மூன்று நான்கு மாதங்கள் payroll போட்டு அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது (இந்த சம்பள தொகையை ஊரில் இருந்து வந்தவர் வெளியில் காசுக்கு வேலை செய்து எனக்கு கொடுக்க வேண்டும், அதை நான் அவருக்கு கொடுக்க வெண்டும்)

7. பின் LMIA இற்கு விண்ணபித்து அதை பெற வேண்டும்

8. பின் ஊரில் இருந்து வந்தவர் அதைக் காட்டி Work Permit எடுக்க முடியும்.

இவ்வாறு செய்தால், எனக்கு ஆளொன்றுக்கு 15,000 கனடிய டொலர்கள் தருவேன் என்றார். ஆக, 3 பேருக்கு 45,000 கனடிய டொலர்கள் எனக்கு கிடைக்குமாம். ஏதும் பிரச்சனை வந்தால், அந்த கம்பெனியை திவாலாகி (bankruptcy) விட்டதாகக் காட்டி, இன்னொரு கம்பெனியை உருவாக்கட்டாம்.

நான் அப்பனே சிவனே.. எனக்கு இப்ப கிடைக்கும் வருமானமே போதம், ஆளை விடுங்கள் என்று சொல்லி தெறித்து விலகி விட்டேன்.

நான் அப்படிச் செய்தது பின்னால் ஏதும் பிரச்சினை வந்து என் குடுமி அறுபடுமோ என்ற பயத்தினால் மட்டுமே.  மற்றப்படி பார்த்தால், இப்படி துணிந்து செய்து ஊரில் இருந்து வந்தவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவுவது நல்ல காரியம் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்களை பாராட்டுகின்றேன்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, Nathamuni said:

கடந்த சனியன்று, ஈஸ்ட்காம், முருகன் கோவிலுக்கு எள் எண்ணெய் எரிக்க போனால், கோவிலில் உள்ள அளவுக்கு பிரசாதம் கொடுக்கும் இடத்தில் கூட்டம். பார்த்தால் அனைவருமே புதியவர்கள். வழக்கத்துக்கு மாறாக அதாவது, பிரசாதம் கொடுக்க தொடங்க முன்னம், அங்கே, குவிந்து நின்றார்கள்.  இவர்களில் பலர் இந்தியர்கள். அங்கே ஏன் கூடி நிக்கிறார்கள் என்று விசாரித்தால், வந்தது தலை கிறுகிறுக்கும் செய்தி. 

அவர்கள் அனைவருமே, மோசடி முகவர்களுக்கு காசு கொடுத்து விசா எடுத்து, வேலைக்கு வந்திருக்கிறார்கள்.

இவர்கள் எப்படி ஏமாத்தப்பட்டார்கள் ?

மோசடியாளர்கள், 10, 20 வருடம் முன்னதாக பதிவு செய்த, திவாலாகாமல், சிறிதானாலும், நனறாக நடந்த கொம்பனிகளை, கம்பெனி ஹவுஸ் தளத்தில் தேடிப்பிடித்து, விலை கொடுத்து வாங்கி, அவைகளை, care home services தரும் கொம்பனிகளாக பதிவை செய்து, ஆட்களை இறக்க, approval எடுத்து, அப்புறம், முடிந்த அளவுக்கு விசாக்களை வெளிநாடுகளில் process பண்ணி, எடுத்ததும், அவர்களை, குறித்த நாளில் அல்லது குறித்த வார இறுதியில் சேர்ந்தே வரப்பண்ணி, எல்லோரும் ஒட்டு மொத்தமாக வந்த பின்னர், அங்கே வாங்கிய பணதுடன் காணாமல் போய்விட்டனர்.

இங்கே நடந்த பெரு மோசடியால், அரசு, ஜனவரி முதல் care workers விசாவை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது.

ஆக, வந்து இறங்கியவர்கள், அவர்களை, அழைத்தவர்களோ, அல்லது, எந்த நிறுவனத்துக்காக வேலைக்கு அழைக்கப்பட்டார்களோ, யாருமே இல்லாமல், என்ன செய்வது என்று புரியாத அவலத்தினுள் சிக்கி விட்டனர். இப்படி வந்த நம்மவர்கள், சமூக உதவி (உறவினர் உதவி) இருப்பதால் தப்பி விடுகின்றனர். இவர்களுக்கு அப்படி உதவி இல்லை. ஆகவே, கோவிலில் கிடைக்கும் உணவுக்காக வந்து தவித்து நிற்கிறார்கள். இது லண்டணில் உள்ள சகல கோவில்களிலும் உள்ள நிலைமை. 

இவர்களே, இந்த கோவில்களில் உணவுக்காக வந்து அலைமோதும் பரிதாபம். இவர்கள் இரண்டு மாதத்தில் வேலை எடுத்து, அரசுக்கு வரி செலுத்தாவிடில், deport பண்ணப்படுவார்கள் என்ற சிக்கலும் உள்ளது.

போனவாரம் இதேபோல ஒரு தமிழ் கடை வைத்திருக்கும் ஒருவர், இருவரை, ஆளாளுக்கு 25 லச்சம் வீதம் இறக்கி, வெளியே டெலிவரி வேலைக்கு விட்டிருக்கிறார். அங்கேயும் ஒரு இடத்தில் இமிகிரேசின் சுற்றி வளைத்து கைது செய்ததால், எதுவுமே இலகுவானதல்ல.

இதனை நம்மவர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்.

***

அதேவேளை, ரெய்னர்ஸ் லேன் ரொட்டி ஹட் take away யில் ஒரு இலங்கை இஸ்லாமிய பெண்ணும், முன்னால் புதிதாக திறந்திருக்கும், சம்பல் take away யில் சிங்கள மாணவியும் வேலை செய்வது பார்க்க நன்றாக இருக்கிறது. சிங்கள மனைவி, இது எமது 9வது கிளை, 10வது விரைவில் வெம்பிளியில் என்று பெருமையாக சொன்னார். இலங்கையர் நிறுவனத்தில் வேலை செய்வது மிகப்பெருமை என்றும் சொன்னார்.

👆

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிழலி said:

நான் எனக்கு என்று ஒரு சிறு கம்பெனி ஒன்றை உருவாக்கி பதிந்து அதனூடாக மற்ற கம்பெனிகளுக்கு வேலை செய்கின்றேன் (incorporated / consultant). வருடா வருடம் எந்த பிசகும் இல்லாமல், நேர்மையான ஒரு தமிழ் கணக்காளரினூடாக அதன் வரிகளை அரசுக்கு கட்டிக் கொண்டு வருகின்றேன்.

அண்மையில் நெருங்கிய உறவு ஒருவரின் ஆண்டுத்துவசத்துக்கு அழைத்து இருந்தனர். அங்கு வந்திருந்த சிலருக்கு நான் எவ்வாறு கம்பெனி ஒன்றினூடாக வேலை செய்கின்றேன் என தெரியும். அவர்களில் ஒருவர் என்னிடம் வந்து ஒரு டீல் பேசினார்.

என் கம்பெனியின் பெயரால் 3 பேருக்கு வேலை கொடுப்பதாக ஒரு செட்டப் பின்வருமாறு செய்ய முடியுமா எனக் கேட்டார்.

1. முதலில் என் கம்பெனிக்கு 3 பேர் தேவை என்று சட்டப்படி அறிவிப்பது.

2. ஒரு வேலைக்கு 10 பேரை நேர்முகத் தேர்வுக்கு அழைப்பது. 

3. அதில் தாம் காட்டும் ஒருவரையும் அழைப்பது (அவர் ஊரில் இருந்து இறக்கப்பட்டவர்)

4. 10 பேரையும் நேர்முகத் தேர்வுக்கு சமூகமளித்ததாக காட்டுவது. அதில் 9 பேர் இங்கு சிட்டிசன் எடுத்தவர்களாக இருக்க வேண்டும்.

5. அதில் தாம் காட்டும் நபரை தெரிவு செய்வது. இதன் மூலம் மிச்ச 9 பேருக்கும் இல்லாத தகுதி, ஊரில் இருந்து வந்து நிற்பவரிடம் உள்ளதாக காட்டுவது.

6. மூன்று நான்கு மாதங்கள் payroll போட்டு அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது (இந்த சம்பள தொகையை ஊரில் இருந்து வந்தவர் வெளியில் காசுக்கு வேலை செய்து எனக்கு கொடுக்க வேண்டும், அதை நான் அவருக்கு கொடுக்க வெண்டும்)

7. பின் LMIA இற்கு விண்ணபித்து அதை பெற வேண்டும்

8. பின் ஊரில் இருந்து வந்தவர் அதைக் காட்டி Work Permit எடுக்க முடியும்.

இவ்வாறு செய்தால், எனக்கு ஆளொன்றுக்கு 15,000 கனடிய டொலர்கள் தருவேன் என்றார். ஆக, 3 பேருக்கு 45,000 கனடிய டொலர்கள் எனக்கு கிடைக்குமாம். ஏதும் பிரச்சனை வந்தால், அந்த கம்பெனியை திவாலாகி (bankruptcy) விட்டதாகக் காட்டி, இன்னொரு கம்பெனியை உருவாக்கட்டாம்.

நான் அப்பனே சிவனே.. எனக்கு இப்ப கிடைக்கும் வருமானமே போதம், ஆளை விடுங்கள் என்று சொல்லி தெறித்து விலகி விட்டேன்.

நான் அப்படிச் செய்தது பின்னால் ஏதும் பிரச்சினை வந்து என் குடுமி அறுபடுமோ என்ற பயத்தினால் மட்டுமே.  மற்றப்படி பார்த்தால், இப்படி துணிந்து செய்து ஊரில் இருந்து வந்தவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவுவது நல்ல காரியம் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்களை பாராட்டுகின்றேன்.

அதே தான் கதை.

எனது கம்பனி, அப்படீயே விலைக்கு கேட்டார்கள். மறுத்தேன்.

பங்குதாரராக செய்வோம் என்றும் கேட்டார்கள்.

வேண்டாம் வாய்ப்பில்லை ராசாக்களே என்று விட்டேன்.

எனது நண்பர் சில வருடங்களுக்கு முன்னர், மத்திய கிழக்கில் கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார் ஒரு உறவினர் என்று, 5 சதம் கூட வாங்காமல், விசாவுக்கு உதவ, முழு குடும்பமும் வந்து சேர்ந்தது.

வந்த பின்னர், உறவினர் வீட்டில் தங்கியிருந்தவர், உறவினர் புத்திமதிப்படி, நீங்கள் இவ்வளவு காசு சம்பளம் தருவன் எண்டு தானே கூப்பிட்டியள். அதை எப்ப தருவியள் எண்டு கேட்க.... அரண்டு போனார்.

மறுக்க, வக்கீல் நோட்டீஸ் போடுவன் என்று சொல்ல, இவர் கையோட நாம் எதிர்பார்த்த திறமை இல்லாததால் உமது விசாவை கான்சல் செய்து திருப்பியனுப்ப அரசை கோரப்போகிறன் எண்டவுடன் தான் நிலமை உணர்ந்து என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்தார்.

அதனால் தான் இது உபத்திரவமானது. தூரத்தில் வைத்திருக்க வேண்டும்.

1 hour ago, யாயினி said:

👆

இந்த மோபைல் ஓட்டோ கரெக்சன் பண்ணுற வேலை!! 🥹

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று சவுத் ஹரோ பெஸ்ட் பூட் கடைக்கு சென்று வந்தேன்.

அங்கே நம்ம நிழலி போல ஒருவர் இருப்பார்.

எப்படி வியாபாரம் என்று கேட்டேன். தீடீரென அதிக இந்தியர்கள் வந்துள்ளனர். வேலை கேட்டு தினமும் வருகிறார்கள். குறிப்பாக, ரூம் எடுக்க முடியுமா என்று பலர் கேட்கிறார்கள். 

ரிஷியும், சுலேலாவும் இந்தியர்களை இறக்குகிறார்கள் என்று வெள்ளைகள் கதைக்க தொடங்க போகிறார்கள். அதனால் தான் ஜனவரியில் இருந்து விசா கொடுப்பதை நிறுத்தப்போகிறார்கள் என்றார். ஆனால் அதன் இடையே பலர் வருவார்கள். எனினும், பலரை உள்ளே விட்டு, கண்காணிப்பையும் அதிகரித்து விட்டார்கள்.

முன்பு போல, சுத்துமாத்து விட முடியாது. இவர்களுக்கு சமூக கொடுப்பனவு இல்லை என்பதால், வந்ததில் ஒரு பிரயோசனமும் இல்லை என்பதை விரைவில் உணர்வார்கள் என்றார். @goshan_che

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Nathamuni said:

அங்கே நம்ம நிழலி போல ஒருவர் இருப்பார்.

ஐயோ பாவம்🤣

@நிழலி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/10/2023 at 10:19, நிழலி said:

நான் எனக்கு என்று ஒரு சிறு கம்பெனி ஒன்றை உருவாக்கி பதிந்து அதனூடாக மற்ற கம்பெனிகளுக்கு வேலை செய்கின்றேன் (incorporated / consultant). வருடா வருடம் எந்த பிசகும் இல்லாமல், நேர்மையான ஒரு தமிழ் கணக்காளரினூடாக அதன் வரிகளை அரசுக்கு கட்டிக் கொண்டு வருகின்றேன்.

அண்மையில் நெருங்கிய உறவு ஒருவரின் ஆண்டுத்துவசத்துக்கு அழைத்து இருந்தனர். அங்கு வந்திருந்த சிலருக்கு நான் எவ்வாறு கம்பெனி ஒன்றினூடாக வேலை செய்கின்றேன் என தெரியும். அவர்களில் ஒருவர் என்னிடம் வந்து ஒரு டீல் பேசினார்.

என் கம்பெனியின் பெயரால் 3 பேருக்கு வேலை கொடுப்பதாக ஒரு செட்டப் பின்வருமாறு செய்ய முடியுமா எனக் கேட்டார்.

1. முதலில் என் கம்பெனிக்கு 3 பேர் தேவை என்று சட்டப்படி அறிவிப்பது.

2. ஒரு வேலைக்கு 10 பேரை நேர்முகத் தேர்வுக்கு அழைப்பது. 

3. அதில் தாம் காட்டும் ஒருவரையும் அழைப்பது (அவர் ஊரில் இருந்து இறக்கப்பட்டவர்)

4. 10 பேரையும் நேர்முகத் தேர்வுக்கு சமூகமளித்ததாக காட்டுவது. அதில் 9 பேர் இங்கு சிட்டிசன் எடுத்தவர்களாக இருக்க வேண்டும்.

5. அதில் தாம் காட்டும் நபரை தெரிவு செய்வது. இதன் மூலம் மிச்ச 9 பேருக்கும் இல்லாத தகுதி, ஊரில் இருந்து வந்து நிற்பவரிடம் உள்ளதாக காட்டுவது.

6. மூன்று நான்கு மாதங்கள் payroll போட்டு அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது (இந்த சம்பள தொகையை ஊரில் இருந்து வந்தவர் வெளியில் காசுக்கு வேலை செய்து எனக்கு கொடுக்க வேண்டும், அதை நான் அவருக்கு கொடுக்க வெண்டும்)

7. பின் LMIA இற்கு விண்ணபித்து அதை பெற வேண்டும்

8. பின் ஊரில் இருந்து வந்தவர் அதைக் காட்டி Work Permit எடுக்க முடியும்.

இவ்வாறு செய்தால், எனக்கு ஆளொன்றுக்கு 15,000 கனடிய டொலர்கள் தருவேன் என்றார். ஆக, 3 பேருக்கு 45,000 கனடிய டொலர்கள் எனக்கு கிடைக்குமாம். ஏதும் பிரச்சனை வந்தால், அந்த கம்பெனியை திவாலாகி (bankruptcy) விட்டதாகக் காட்டி, இன்னொரு கம்பெனியை உருவாக்கட்டாம்.

நான் அப்பனே சிவனே.. எனக்கு இப்ப கிடைக்கும் வருமானமே போதம், ஆளை விடுங்கள் என்று சொல்லி தெறித்து விலகி விட்டேன்.

நான் அப்படிச் செய்தது பின்னால் ஏதும் பிரச்சினை வந்து என் குடுமி அறுபடுமோ என்ற பயத்தினால் மட்டுமே.  மற்றப்படி பார்த்தால், இப்படி துணிந்து செய்து ஊரில் இருந்து வந்தவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவுவது நல்ல காரியம் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்களை பாராட்டுகின்றேன்.

பலர் அணுகப்பட்டு உள்ளார்கள். ஆட்கள் இந்த வழியில் வந்து பீ ஆர் எடுக்கின்றார்கள் போலும். ஆனால், இங்கு ஸ்பொன்சர் செய்யும் நிறுவனத்துக்கு பல ரிஸ்க் உள்ளன. 

எனது நண்பர் ஒருவர் இந்தியர் ஒருவருக்கு உதவி கேட்டு இந்த வழியில் உதவினார். ஆனால், அந்த இந்தியர் ஏற்கனவே தொழில் வீசாவில் வந்துவிட்டார். சிறிது காலத்தில் வேலையில் தன்னை டிஸ்கிரிமினேட் செய்துவிட்டார்கள் என ஒரு புது கேசை உருவாக்கி டிப்போடேசன் ஓடரை தள்ளிபோட்டு விட்டார். கடைசியில் உதவி செய்த நண்பருக்கு ஆப்பு. வாழ்வா சாவா என வரும்போது உதவி பெற்றவர்கள் உதவி செய்தவருக்கு எந்த நேரத்திலும் ஆப்பு அடிப்பார்கள். ஒரு வக்கீல் இந்த இந்தியருக்கு இப்படி வழக்கு போட்டு எஸ்கேக் ஆகலாம் என அறிவுரை கொடுத்து உள்ளார். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, நியாயம் said:

இதைத்தான் மேலே எனது நண்பர் உதவிய விசயத்திலும் நடந்தது.

வந்து, உறவினர் வீட்டில் நன்றாக சாப்பிட்டு, வீடியோவில் படமும் பார்த்து, அட, இது அருமையான வாழ்வு என்று காலை நீட்டிக்கொண்டு இருந்தவர்கள், வேலை தேட மாட்டார்கள் போல என்று, வீட்டுக்காரர், மெதுவாக கதைகொடுத்து, கூப்பிட்டவர்கள் சம்பளம் தர தானே வேண்டும், கேட்டு பாருங்கோவன் என்று கிளப்பி.... அவரும் என்ன பேசிக்கொண்டு வந்தமோ அதனை மறந்து... நன்றி கெட்ட வேலை பார்த்தார்.   

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Edited by Nathamuni

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.