Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண் மனதின் கேவலம் - உதாரணமாக சீமான்! By பிருந்தா சீனிவாசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் மனதின் கேவலம் - உதாரணமாக சீமான்!

1127738.jpg

ஆண்கள் பலர் என்னதான் படித்தாலும் தங்களை முற்போக்காகக் காட்டிக்கொண்டு மேடைகளில் பெண்ணுரிமை குறித்துப் பேசினாலும் அடிப்படையில் மோசமான ஆணாதிக்கச் சிந்தனையோடுதான் இருக்கிறார்கள் என்பதற்குச் சமீபத்திய உதாரணம் சீமான்.

நாம் தமிழர் கட்சியின் நிறுவனரும் தலைமை ஒருங்கிணைப்பாளருமான இவர் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் தெரிவித்திருந்தார். தன்னை மணந்துகொள்வதாகக் கூறித் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் தொடர்ந்து பொதுவெளியில் பேசிவந்தார்.

அண்மையில் அந்தப் புகார் குறித்த விசாரணைக்காக வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு சீமான் சென்றார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய சீமான், விஜயலட்சுமி குறித்து மிக மோசமாகப் பேசினார். ‘இவ்வளவு பெண்கள் இருக்க கொள்ளயில உனக்குப் பழகுவதற்கு ஒரு பொம்பளை பிடிச்சிருக்க பாரு’ என்று தன் மனைவி கயல்விழி தன்னைக் கடிந்துகொண்டதாகச் சிரித்தபடியே ஊடகத்தினர் மத்தியில் சீமான் பேசினார். இதைப் பேசுகிறபோது அவரது உடல்மொழியில் அவ்வளவு அலட்சியமும் திமிரும் வெளிப்பட்டன.

பெண் ஒருவரைப் பொதுவெளியில் கீழ்த்தரமாகப் பேசுகிறோம் என்கிற உணர்வு சிறிதுமின்றி நாட்டுக்காகப் போராடி சிறை சென்று திரும்பிய தியாகி போன்ற தொனியில் அவர் பேசினார். வெடித்துச் சிரித்தபடி சீமான் இதைச் சொன்னபோது சுற்றியிருந்த அனைவரும் சிரித்தனர். சீமானின் இந்த இழிசெயலைக் கேட்டுச் சிரிக்க ஆட்டு மந்தைகள்கூடக் கொஞ்சம் யோசித்திருக்கும்.

ஆனால், சீமானைச் சுற்றியிருந்தவர்களில் ஒருவர்கூட முகம் சுளிக்கவோ சீமானின் பேச்சைக் கண்டிக்கவோ குறைந்தபட்சம் அதிருப்தியை வெளிப்படுத்தவோகூட இல்லை. பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சீமானின் மனைவி கயல்விழியும் தன் கணவனின் பேச்சை சிரித்தபடியே ரசித்தார். ஒரு பெண்ணைப் பற்றித் தன் கணவர் இழிவாகப் பேசுகிறாரே என்கிற வருத்தமும் அவர் முகத்தில் துளிகூட இல்லை.

“இதுல எனக்கு எந்த மன உளைச்சலும் இல்லை. மலைபோல் அவர் நிற்கிறபோது எங்களுக்கு என்ன மன உளைச்சல்” என்று பெருமிதமாகப் பேட்டி தந்தார் கயல்விழி.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு உரிமை தருவோம் என்று பீற்றிக்கொள்கிற கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு ஊடகங்கள் முன்னிலையில் ஒரு பெண்ணைப் பற்றித் தரக்குறைவாகப் பேசுவதுதான் சீமான் பேசுகிற தமிழர் பண்பாடுபோல.

‘இந்த நிலம் மட்டும் என் கைக்கு வரட்டும்...’ என்று மேடைதோறும் முழங்குகிற சீமானின் கைகளுக்கு நிலம் வந்துவிட்டால் பெண்களின் நிலையை யோசித்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. ஒருவர் என்ன கதையை அளந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு கைதட்டி ரசிக்கிற கூட்டம் இருக்கிறபோது பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்பதற்கு சீமானும் அவரைச் சுற்றியிருக்கும் கூட்டமுமே சாட்சி.

டிஸ்கி

நோ டிஸ்கி. கட்டுரையே போதும்🤣.

https://www.hindutamil.in/amp/news/supplements/penn-indru/1127738-abomination-of-the-male-mind.html

  • Replies 82
  • Views 6.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் கிடக்கட்டும்.. இந்த ஹிந்துவும் அதன் பொம்பிளை எழுத்தாளர்களும்.. ஈழத்துப் பெண் போராளிகள் பற்றி எழுதிய வாசிக்கவே சகிக்க ஏலாத சோடிப்புக்கள் குறித்து ஹிந்து மன்னிப்புக் கேட்குமா..?! அத்தகைய ஹிந்துவையே ஹிந்தியர்கள் வாசிச்சு சகிச்சு சுகித்துக் கொண்டு போக வேண்டிய நிலையில்.. சீமானின் தமாசை தூக்கிப் பிடிக்க ஹிந்துவுக்கு எந்த அருகதையும் கிடையாது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

"சீமான் தமாசுப் பார்ட்டி தான்" என்ற புரிதல் மெல்ல மெல்ல உருவாகிறது போல😂!

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் மிக சிறந்த காமடிப் பேச்சு கலைஞர். 15  தொடக்கம் 20, 22 வயது பிரிவினரின் மனம் கவர்ந்த கதாநாயகன். அவர் பேச தொடங்கவே அரங்கில் சிரிப்பொலி காதை பிளக்கும்.   மேடையில் அவர் பக்கத்தில் இருப்பவர் அதை விட சத்தமாக சிரிப்பார்கள். அந்த அளவுக்கு கல கலப்பாக கூட்டங்களை நடத்தும் சிறந்த கலைஞர் அவர்.   

 ஆனால் சீமானின்  துரதிஷ்ரம் என்னவெனில் 22 வயதை கடந்தபின் இளைஞர்களில் பெரும்பான்மையினர் சற்றே  அறிவு வளர்ச்சியடைந்து maturity  அடைந்துவிடுவதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்

திடத்தில்.. தமாசும் இருக்கவே செய்யும். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பத்தரிகையின் பின் புலங்களை நன்கறிந்த கோசானின் இந்த இணைப்பைப் பார்க்க சிரிப்பாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

7 தரம் கொலை செய்தனான் என்று சொல்லும் போது ஒரு ஆணுக்கு வராத கோபம். இப்ப மட்டும் எப்படி சகோ???

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தப் பத்தரிகையின் பின் புலங்களை நன்கறிந்த கோசானின் இந்த இணைப்பைப் பார்க்க சிரிப்பாக உள்ளது.

ஒரு மாற்றத்திற்கு, பத்திரிகையை மறந்து விட்டு, சீமான் பேசியதும், சீமான் ஆதரவாளர்கள் சிரித்ததும் சரியா என்று யோசித்துப் பார்க்க முடியாதா? அல்லது அவர் பேசவேயில்லை என்கிறீர்களா?😂

"இந்த மூஞ்சையை நான் ஏறெடுத்தும் பார்த்திருக்க மாட்டேன்!" என்று ஜீன் கரோலைப் பற்றி ட்ரம்ப் சொன்னதைப் போலவேயல்லவா இருக்கிறது சீமானின் அலட்டல்?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

இத்துப்போன ஒரு செய்தியை இந்துப் பத்திரிகையில் இருந்து வெட்டி ஒட்டியதை நினைத்தேன்.
சிரித்தேன்
சொன்னேன்.

மற்றும்படி செய்தி உண்மையா பொய்யா

கவலையே இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஈழப்பிரியன் said:

இத்துப்போன ஒரு செய்தியை

இது செய்தி அல்ல. பார்கேல்லையோ அண்ணை தமிழக செய்திகள் பிரிவில் அல்லாமல், அரசியல் அலசில் இணைக்கப்பட்டுள்ளது.

இதை பதிந்ததன் நோக்கம் செய்தியை தெரியப்படுத்துவது அல்ல. அந்த நிகழ்வை பற்றிய ஒருவரின் சிந்தனை கோணத்தை வெளிப்படுத்தவே.

கட்டுரை என் கண்ணில் பட்ட போதுதான் நான் இணைக்க முடியும்.

37 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்துப் பத்திரிகையில்

நெடுக்ஸ்சும் சொல்லி இருந்தார். 

இந்து கெட்ட நோக்கில் பிரசுரித்ததாயே இருக்கட்டும்.

கட்டுரையில் சொல்லப்பட்டது பற்றி அல்லவா நாம் உரையாட வேண்டும்.

கட்டுரையில் சொன்னது தவறு என்றால் அதை எழுதுங்கள்.

39 minutes ago, ஈழப்பிரியன் said:

மற்றும்படி செய்தி உண்மையா பொய்யா

கவலையே இல்லை.

சீமானை ஆதரிப்பவர்களின் இந்த மனநிலையைத்தான் கட்டுரையும் சுட்டி காட்ட விழைகிறது.

பிருந்தா சீனிவாசன் முன் வைத்த கருதுகோளினை நிறுவ நீங்கள் மேலே சொன்னது பயன்படும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

7 தரம் கொலை செய்தனான் என்று சொல்லும் போது ஒரு ஆணுக்கு வராத கோபம். இப்ப மட்டும் எப்படி சகோ???

கட்டுரையில் அலச பட்டதை ஒட்டி கருத்து எழுதியுள்ளீர்கள் நன்றி.

நீங்கள் சொல்வதும் சரிதான். 

ஒரு பக்கத்தின் தவறை பிழை என சொல்வதால், மறுபக்கதின் தவறு சரி என்றாகாது.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Justin said:

ஒரு மாற்றத்திற்கு, பத்திரிகையை மறந்து விட்டு, சீமான் பேசியதும், சீமான் ஆதரவாளர்கள் சிரித்ததும் சரியா என்று யோசித்துப் பார்க்க முடியாதா? அல்லது அவர் பேசவேயில்லை என்கிறீர்களா?😂

"இந்த மூஞ்சையை நான் ஏறெடுத்தும் பார்த்திருக்க மாட்டேன்!" என்று ஜீன் கரோலைப் பற்றி ட்ரம்ப் சொன்னதைப் போலவேயல்லவா இருக்கிறது சீமானின் அலட்டல்?

அதைவிட முக்கியம் யாருக்கு எவரை வைத்துக்கொண்டு பதில் என்பதல்லவா?

அவரிடம் அவரது தனிப்பட்ட குடும்பம் சார்ந்த கேள்விகளை அது சார்ந்தவர்களின் முன் கேட்கக்கூடாது. கேட்டால் பாவம் அவர் வட் கி டூ? 🤪

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

அதைவிட முக்கியம் யாருக்கு எவரை வைத்துக்கொண்டு பதில் என்பதல்லவா?

அவரிடம் அவரது தனிப்பட்ட குடும்பம் சார்ந்த கேள்விகளை அது சார்ந்தவர்களின் முன் கேட்கக்கூடாது. கேட்டால் பாவம் அவர் வட் கி டூ? 🤪

நீங்களும் சங்கடமான கேள்விகள் வரும் போது கிறீஸ் போத்தல் பாவிக்கப் பழகி விட்டீர்கள் போல இருக்கே😂?

மைக் முன்னால் நிற்கும் ஒரு அரசியல் வாதியிடம், பொது வெளியில் பேசப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விடயம் பற்றிப் பத்திரிகையாளர் கேட்க, யார் பக்கத்தில் நிற்கிறார்கள் என்று யோசிக்க வேண்டுமா?

அப்படி கேட்பது நாகரீகமில்லையென்றே ஒரு விவாதத்திற்காக எடுத்துக் கொள்வோம். இப்படியான பதில் நாகரீகமாகத் தெரிகிறதா?

இப்படி macho தரமான பதில்களை சீமான் சொல்ல, சுற்றி நிற்போர் பூரித்து விட்டு, பிறகேன் பெண்களுக்கு உரிமை என்று முகமூடிப் பேச்சு? இந்தப் பின்புலத்தில் தான் சீமானின் "பல்வேறு" முகங்களை நான் பார்க்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

 ‘இவ்வளவு பெண்கள் இருக்க கொள்ளயில உனக்குப் பழகுவதற்கு ஒரு பொம்பளை பிடிச்சிருக்க பாரு’

சீமான் சொன்னது இவ்வளவுதான்... 

 நாட்டில் இவ்வளவு பெண்கள் இருக்க எதுக்கு அந்த வில்லங்கம் பிடிச்ச பென்னை லவ்பண்ணினாய் என்பதை வீட்டில் எப்படி ஒரு மனைவி கனவனிடம் கதைப்பாளோ அதை அப்படியே வீட்டில் கதைக்கும் உரையாடலை சொல்லி இருக்கிறார்.. இப்படித்தான் உங்கள் வீட்டிலோ என் வீட்டிலோ இந்த கட்டுரையை எழுதிய பெண்வீட்டிலோ கதைப்பார்கள்.. இதுதான் யதார்த்தம்..

இதுக்கு

மனித உரிமை வாதி கட்டுரை எழுதுரான்
மகளீர் அமைப்பு கட்டுரை எழுதுகிறார்கள்
நடு நிலைவாதி கட்டுரை எழுதுரான்
பென்னியவாதிகள் பக்கம் பகமாக கட்டுரை எழுதுகிறார்கள்
வலது இடது சங்கி பெரியாரிஸ்ட் பூராப்பயலும் கட்டுரை எழுதுரான்..
சீமான் வேற  எங்குட்டும்  தப்பிச்சி  போயிராம பின்னாடியே கட்டுரையோடு ஓடுகிறார்கள்... சீமான் வீட்டு வாசல்லையே பாய போட்டு படுத்திருக்கானுங்க பாதிபேரு...

எனக்கு இப்ப எல்லாம் பொம்பிளைங்கள பாத்தாலே பயமா இருக்கு... இவன் என்ன பாத்திட்டானு அது எப்படி ஒரு பெண்னை பாப்பான்.. இவர்களைப்போன்றவர்கள் நாட்டில் இருக்கும்போது பெண்களின் நிலையை யோசித்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது... இவர்களைப்போன்ரவர்களை ஊருக்குள் உலாவ விடக்குடாது என்று எல்லாம் கட்டுரை எழுதுவார்களோ என்று பயமா இருக்கிறது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒரு வழியா ஹிந்துவையும், கோசானையும் விட்டு விட்டு கட்டுரையை பற்றி எழுத விளைந்துள்ளீர்கள் நல்ல முன்னேற்றம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஒரு வழியா ஹிந்துவையும், கோசானையும் விட்டு விட்டு கட்டுரையை பற்றி எழுத விளைந்துள்ளீர்கள் நல்ல முன்னேற்றம்.

அங்கு தான் நிற்கிறார் என் தம்பி 

உங்களுக்கே புரியாமல் கடுகு போட்டு இருக்கிறாரே? 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாட்டில் இவ்வளவு பெண்கள் இருக்க எதுக்கு அந்த வில்லங்கம் பிடிச்ச பென்னை லவ்பண்ணினாய் என்பதை வீட்டில் எப்படி ஒரு மனைவி கனவனிடம் கதைப்பாளோ அதை அப்படியே வீட்டில் கதைக்கும் உரையாடலை சொல்லி இருக்கிறார்.. இப்படித்தான் உங்கள் வீட்டிலோ என் வீட்டிலோ இந்த கட்டுரையை எழுதிய பெண்வீட்டிலோ கதைப்பார்கள்.. இதுதான் யதார்த்தம்..

இது வாஸ்தவமான பேச்சு. ஆனால் பொதுவெளியில் இது சொல்லப்பட்ட விதமும், உடல் மொழியும், கேலியும் கிண்டலும்தான் இங்கே விமர்சிக்க படுகிறது.

மேலே ஜஸ்டின் கொடுத்த டிரம் உதாரணம் மிக பொருத்தமானது. 

ஒரு அரசியல்வாதி இப்படி நடக்க வேண்டும், இப்படி பேச வேண்டும் என ஒரு வரைமுறை இருக்கிறதல்லவா?

7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு இப்ப எல்லாம் பொம்பிளைங்கள பாத்தாலே பயமா இருக்கு...

விதி வலியது.

பொதுவெளியில் நாம் இறங்கின் நாம் எமது நடத்தைக்கும், சொல்லுக்கும் மிக பெரிய scrutiny ஐ எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

இல்லை என்றால் இறங்காமல் விட்டால். யாரும் கேட்கப்போவதில்லை.

யாழில் வந்து லகடபாண்டி, அக்கா மாலா, ஜிப்சி என ஏதோ ஒரு பெயரில் எழுதிவிட்டு போகலாம்.

பயப்படாமல்🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு இப்ப எல்லாம் பொம்பிளைங்கள பாத்தாலே பயமா இருக்கு... இவன் என்ன பாத்திட்டானு அது எப்படி ஒரு பெண்னை பாப்பான்.. இவர்களைப்போன்றவர்கள் நாட்டில் இருக்கும்போது பெண்களின் நிலையை யோசித்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது... இவர்களைப்போன்ரவர்களை ஊருக்குள் உலாவ விடக்குடாது என்று எல்லாம் கட்டுரை எழுதுவார்களோ என்று பயமா இருக்கிறது..

இது சமூகத்திற்கு நல்ல மாற்றம் தானே? உங்களைத் தனிப்படச் சொல்லவில்லை, ஆனால் இப்படியாக பெண்களின் அனுமதி இல்லாமல் பெண்களோடு எல்லைகள் மீறிப் பழகாமல் மரியாதையாக இருக்கும் படி இந்தப் பயம் ஆண்களை மாற்றினால் எனக்கு மிகவும் நிம்மதி: ஏனெனில் நான் ஒரு பெண் குழந்தையின் அப்பன்😂!  

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

பொதுவெளியில் நாம் இறங்கின் நாம் எமது நடத்தைக்கும், சொல்லுக்கும் மிக பெரிய scrutiny ஐ எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

இல்லை என்றால் இறங்காமல் விட்டால். யாரும் கேட்கப்போவதில்லை.

சரி இருக்கட்டும்.. இந்த பிரச்சினையை பொது வெளிக்கு வந்த சீமான் பாத்துக்கொள்ளட்டும்...

ஆனால்

இதை ஏன் ஆணுக்கு மட்டும் சுருக்குகிறார்கள்...

ஒரு பெண் தனிவாழ்வில் ஒழுக்கமில்லாமல் இருந்துவிட்டு பொது வாழ்க்கைக்கு வந்தால் அவருக்கு எதிராக இப்படி எழுத முடியுமா..? பெண் அமைப்புக்கள் பெண்ணிய வாதிகள் எழுத்தாளர்கள் சமூகம் என்று அனைவரும் கும்மி விடுவார்கள் எழுதுபவனை..

உதாரணம்..

ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை ஒழுக்கமானதா...,? அவருக்கும் எம் ஜீ ஆருக்கும் என்ன சம்பந்தம்..? மனைவி இருக்க அவர் ஏன் முன்னிலைக்கு வருகிறார்..? அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இப்படி கேள்விகள் கேட்டால் ஒரு பெண்ணை பற்றி கேவலமாக எழுதுகிறார்கள் என்று அனைவரும் கொந்தளிப்பார்கள்.. ஆணால் ஆண்கள் விடயத்தில் அது கடைப்பிடிக்க படுவதில்லை ஏன்..?  இப்படி கட்டுரை எழுதும் நியாயக்குடோன்கள் அதற்கு பொங்குவதே இல்லை... ஏன்..? சீமான் விடயத்தில் கூட தனிப்பட்ட காதல் சமாச்சரங்களை ஏன் எழுதுகிறீர்கள் பேசுகிறீர்கள் என்று இந்த கேள்விகளை கேட்ட பத்திரைகயாளர்களையும் இந்த கட்டுரையில் கண்டித்து ஒரு வரி சேர்த்து இவர்களால் கட்டுரை எழுத முடிவதில்லை ஏன்..? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

உங்களைத் தனிப்படச் சொல்லவில்லை

இப்படியான திரிகளில் எதுக்கோ முந்திய எதுவோ போல ஆஜராகும் சகல usual suspects க்கும் பொருந்தும் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:

இது சமூகத்திற்கு நல்ல மாற்றம் தானே? உங்களைத் தனிப்படச் சொல்லவில்லை, ஆனால் இப்படியாக பெண்களின் அனுமதி இல்லாமல் பெண்களோடு எல்லைகள் மீறிப் பழகாமல் மரியாதையாக இருக்கும் படி இந்தப் பயம் ஆண்களை மாற்றினால் எனக்கு மிகவும் நிம்மதி: ஏனெனில் நான் ஒரு பெண் குழந்தையின் அப்பன்😂!  

எனக்கும் மகிழ்ச்சியே.. ஆனால் இந்த பாதுகாப்பு ஆண்களுக்கும் கிடைக்கவேண்டும்.. ஏனெனில் நான் ஆண் குழந்தைகளின் அப்பன்..ஆண் பெண் பாலை வைத்து எந்த ஏற்றத்தாழ்வோ முன்னுரிமையோ ஒரு பகுதிக்கும் கிடைக்ககுடாது... எல்லாவற்றிலும் எல்லொருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சரி இருக்கட்டும்.. இந்த பிரச்சினையை பொது வெளிக்கு வந்த சீமான் பாத்துக்கொள்ளட்டும்...

ஆனால்

இதை ஏன் ஆணுக்கு மட்டும் சுருக்குகிறார்கள்...

ஒரு பெண் தனிவாழ்வில் ஒழுக்கமில்லாமல் இருந்துவிட்டு பொது வாழ்க்கைக்கு வந்தால் அவருக்கு எதிராக இப்படி எழுத முடியுமா..? பெண் அமைப்புக்கள் பெண்ணிய வாதிகள் எழுத்தாளர்கள் சமூகம் என்று அனைவரும் கும்மி விடுவார்கள் எழுதுபவனை..

உதாரணம்..

ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை ஒழுக்கமானதா...,? அவருக்கும் எம் ஜீ ஆருக்கும் என்ன சம்பந்தம்..? மனைவி இருக்க அவர் ஏன் முன்னிலைக்கு வருகிறார்..? அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இப்படி கேள்விகள் கேட்டால் ஒரு பெண்ணை பற்றி கேவலமாக எழுதுகிறார்கள் என்று அனைவரும் கொந்தளிப்பார்கள்.. ஆணால் ஆண்கள் விடயத்தில் அது கடைப்பிடிக்க படுவதில்லை ஏன்..?  இப்படி கட்டுரை எழுதும் நியாயக்குடோன்கள் அதற்கு பொங்குவதே இல்லை... ஏன்..? சீமான் விடயத்தில் கூட தனிப்பட்ட காதல் சமாச்சரங்களை ஏன் எழுதுகிறீர்கள் பேசுகிறீர்கள் என்று இந்த கேள்விகளை கேட்ட பத்திரைகயாளர்களையும் இந்த கட்டுரையில் கண்டித்து ஒரு வரி சேர்த்து இவர்களால் கட்டுரை எழுத முடிவதில்லை ஏன்..? 

ஏன் இல்லாமல்? ஜெ கொ.ப.செ யாக அறிவிக்கப்பட்ட காலம் முதல் இதை விட மிக கடுமையான விமர்சனத்தை சந்தித்தார்.

ஜெ-சசி உறவை பற்றி எழுதப்படாத ஜூனியர் விகடன் கட்டுரைகளா?

அப்படி பெண்களை எழுதுவதில்லை என வைதாலும் - அதை உங்கள் போன்ற ஒரு ஆண்-உரிமை கேட்டு போராடும் நபர் கேட்க வேண்டும்.

Feminist பெண்களுக்கு எதிரானதை தட்டி கேட்பது போல், நீங்கள் (men-ist?) ஆண்களுக்கு எதிரானதை, பெண்கள் செய்யும் தீமையை தட்டி கேட்க வேண்டும்.

ஆண்களுக்கு எதிரானது தட்டி கேட்கப்படவில்லை என்பதால் பெண்களுக்கு எதிரானதை அனுமதிக்க முடியாதே.

நான் என் புரொபைலில் நான் ஒரு ஆணிய வாதி என்று மாற்றப்போகிரேன்.. உண்மையில் நான் இப்பொழுது முழுவதும் ஆணிய வாதியாக மாறிவிட்டேன்..நீங்கள் சொல்லும்போது இன்னும் தெளிவாக உணர்கிறேன்..  அது எனக்கு மகிழ்ச்சியும் பெருமையுமாக இருக்கு.... இந்தியா போணால் ஆண்கள் சங்கத்தில் இணையப்போகிறேன்.. 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கும் மகிழ்ச்சியே.. ஆனால் இந்த பாதுகாப்பு ஆண்களுக்கும் கிடைக்கவேண்டும்.. ஏனெனில் நான் ஆண் குழந்தைகளின் அப்பன்..ஆண் பெண் பாலை வைத்து எந்த ஏற்றத்தாழ்வோ முன்னுரிமையோ ஒரு பகுதிக்கும் கிடைக்ககுடாது... எல்லாவற்றிலும் எல்லொருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும்..

இப்பவே சங்கத்தை ஆரம்பியுங்கோ. பெடியள் வளந்து வர சரியா இருக்கும்.

5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நான் என் புரொபைலில் நான் ஒரு ஆணிய வாதி என்று மாற்றப்போகிரேன்.. உண்மையில் நான் இப்பொழுது முழுவதும் ஆணிய வாதியாக மாறிவிட்டேன்..நீங்கள் சொல்லும்போது இன்னும் தெளிவாக உணர்கிறேன்..  அது எனக்கு மகிழ்ச்சியும் பெருமையுமாக இருக்கு.... இந்தியா போணால் ஆண்கள் சங்கத்தில் இணையப்போகிறேன்.. 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள ஆண்களின் சப்போட்டை எதிர்பாக்கிரேன்.. 😄🤜🤛

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.