Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரூ.20,000 சம்பள உயர்வு கோரும் அரச ஊழியர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு தேவையென தேசிய தொழிற்சங்க நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதன் அழைப்பாளர் வசந்த சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றைய தினம் ஆசிரியர்களின் போராட்டத்தின் மீது நீர் மற்றும் கண்ணீர் புகை வீச்சுக்கு கண்டனம் தெரிவிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்கவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

அகில இலங்கை அரச முகாமைத்துவ உதவி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உதேனி திஸாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு சம்பள அதிகரிப்பு தேவைப்படுவதாக தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் டி.எம்.பி.அபேரத்ன, சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து பாரிய போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/278748

  • கருத்துக்கள உறவுகள்

20.000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வருடத்துக்கா அல்லது மாதத்திற்கா கேட்கின்றார்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை  வலியுறுத்தி திருமலையில் அரச உத்தியோகத்தர்கள் போராட்டம்…!

20ஆயிரம் ரூபாய்  சம்பள அதிகரிப்பை வழங்குமாறு  வலியுறுத்தி திருகோணமலை கோமரங்கடவல பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் , ஊழியர்கள் இணைந்து இன்று(30)ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை-கோமரங்கடவல பிரதேச செயலகத்திற்கு முன்னால்  இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்தில் ‘அரசே நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகளே,  மின்சாரம் மற்றும் நீர் கட்டணத்தை குறை, 20 ஆயிரம் சம்பளத்தை அதிகரி,  வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பளத்தை அதிகரி போன்ற வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/279180

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி அரச சேவையாளர் சங்கத்தினர் போராட்டம்

30 OCT, 2023 | 04:37 PM
image

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் 20000 ரூபா சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி அரச மற்றும் மாகாண அரச சேவையாளர் சங்கத்தினர் இன்று திங்கட்கிழமை (30) செத்சிறிபாய கட்டிடத் தொகுதிக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வுகள் போன்ற காரணங்களால் பொதுமக்கள் சாதாரண சிறிய சம்பளத்தை கொண்டு வாழ்க்கையை நடத்த முடியாதுள்ள நிலையில் அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

por-2.gif

por-3.gif

por-6.gif

por-4.gif

por-5.gif

por-7.gif

(படப்பிடிப்பு – ஜே.சுஜீவகுமார்)

https://www.virakesari.lk/article/168095

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி புத்தளத்தில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published By: VISHNU    30 OCT, 2023 | 05:18 PM

image

2024 ஆம் ஆண்டிற்கான பாதீட்டில் 20, 000 ரூபா சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி புத்தளத்தில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Resize_20231030_140744_4547.jpg

எதிர் வருகின்ற 2024ம் ஆண்டிற்கான பாதீட்டில் இருபதாயிரம் ரூபா சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி திங்கட்கிழமை (30) புத்தளம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Resize_20231030_140740_0406.jpg

குறித்த ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலகம், நகரசபை மற்றும் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

Resize_20231030_140738_8823.jpg

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, மின்கட்டணம் அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு, போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு என பல்வேறு  எதிர்ப்புகளைத் தெரிவித்து பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Resize_20231030_140739_9639.jpg

Resize_20231030_140732_2243.jpg

Resize_20231030_140729_9944.jpg

Resize_20231030_140726_6776.jpg

Resize_20231030_140727_7788.jpg

https://www.virakesari.lk/article/168106

இந்த அரச ஊழியர்கள் செய்யும் வேலையின் திறத்துக்கு மாதாந்தம் 10,000 ரூபாவை குறைத்து கொடுக்க வேண்டும். இலங்கை உருப்படாமல் போவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இந்தக் கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

இந்த அரச ஊழியர்கள் செய்யும் வேலையின் திறத்துக்கு மாதாந்தம் 10,000 ரூபாவை குறைத்து கொடுக்க வேண்டும். இலங்கை உருப்படாமல் போவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இந்தக் கூட்டம்.

நிழலி இந்தப் பிரச்சனை இலங்கையில் மட்டுமல்ல.

அடுத்து விலைவாசி விண்ணைத் தொடும்போது வேலை செய்தா என்ன செய்யாட்டில் என்ன வாழத்தானே வேண்டும்.

இதையே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சம்பள உயர்வு அதுஇது என்று கொடுக்கிறாரகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுவரெலியாவில் அரச ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Published By: VISHNU     30 OCT, 2023 | 04:53 PM

image

இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை கோரி நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு  ஆதரவாக நுவரெலியாவிலும் திங்கட்கிழமை (30) நண்பகல் நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Screenshot_20231030_133004_Gallery.jpg

இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி, அலுவலக சேவைகள் மற்றும் மாகாண அரசாங்க உத்தியோகத்தர்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/168094

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.