Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தியது சர்வதேச கிரிக்கெட் பேரவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

401162790_728071679357807_34707225494766

400881249_728199689345006_57187013144837

இது ஏதோ சிங்க‌ள‌ ப‌த்திரிகையில் வ‌ந்த‌து போல் இருக்கு ஹா ஹா 

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

400776484_728807282617580_62590363602621

400781217_728806435950998_29355241910462

400734524_728805622617746_14626257573507

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

400774710_748986153908106_20003651513848

400779955_748343467305708_41349071997850

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப‌த்த‌ இல‌ங்கை வீர‌ர்க‌ளை நினைத்து பார்த்தால் அவ‌ருவ‌ருப்பாய் இருக்கும்...........பெருத்த‌ அவ‌மான‌த்துட‌ன் நாடு திரும்பிய‌ அணி என்று இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் ப‌ல‌ர் விம‌ர்சிப்பார்க‌ள்....................இப்போது உள்ள‌ சூழ‌லில் இல‌ங்கை அணியில் ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் இல்லை 

இல‌ங்கை கிரிக்கேட் ர‌சிக‌ர்க‌ள் இதை ஒத்து கொண்டு தான் ஆக‌னும்..................

  • கருத்துக்கள உறவுகள்

399646727-773137174839944-17890823630215

படம் ஆதாரம்: முகநூல்.

இலங்கை அணி ஒழுங்கா விளையாடாததுக்கு புதுசா இன்னொரு காரணமும் கண்டு பிடித்திருக்கிறார் அர்ஜுன ரணதுங்க அவர்கள்.

ஜெய்ஷா இங்கிலாந்து நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா அணிகளை சூழ்ச்சி செய்து நாசமாக்கினால் அதில் ஏதாவது ஒரு நியாயம் இருக்க ஒரு வாய்ப்புண்டு. ஏனென்றாக் கண்டிப்பா அந்த அணிகள் இந்தியாவுக்கு சவாலான அணிகள்தான்.

வடிவேலுபோல போறவன் வாறவன் எல்லாரிடமும் அடிவாங்கும் இலங்கை அணியை இந்தியா எதற்கு காசை கரியாக்கி நாசமாக்கவேண்டும்?

ஆக மொத்தம் இப்போதும் அவர்கள்  வீரர்கள் தேர்வு, இன ஒதுக்கல் பற்றி கவலைபடவோ , தப்பை ஒத்துக்கொள்ளவோ தயாராக இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
சரியாக 13 வருடங்களுக்கு முன்பு இதே போன்ற ஒரு நவம்பர் மாதத்தின் மூன்றாம் நாள் அது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தில் நடைபெற்ற இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி எட்டு விக்கட் இழப்புக்கு 239 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அன்றைய தேதியில் உலகத் தரம் வாய்ந்த பல வீரர்களைக் கொண்டிருந்த இலங்கை அணி 107 ஓட்டங்களுக்குள் எட்டு விக்கட்டுக்களை இழந்து தோல்வியின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருந்தது.
அன்றைய தினம் இலங்கை அணிக்குள் வந்து ஓரிரு வருடங்களே ஆகியிருந்த சகலதுறை ஆட்டக் காரரான அஞ்செலோ மெத்தியூஸும், பந்து வீச்சாளரான லசித் மாலிங்கவும் இணைந்து ஒன்பதாவது விக்கட்டுக்கான உலக சாதனை இணைப்பாட்டமான 132 ஓட்டங்களைப் பெற்று, இலங்கை அணிக்கு அபாரமான ஒரு வெற்றியை ஈட்டிக் கொடுத்தனர்.
அன்றைய தேதியின் கதாநாயகனாகவும் மீடியாக்களில் கொண்டாடப்பட்டவராகவும் இருந்த, அன்றைய இலங்கை அணியைப் பிரதிநிதித்துவம் செய்தவர்களில் தற்போதுள்ள அணியில் இன்னும் எஞ்சியிருக்கும் ஒரே வீரராகவும் இருக்கும் அஞ்செலோ மெத்தியூஸ், இந்த உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் தனது சாதனைகளிலிருந்தெல்லாம் தூரமாகி, நியாயங்களையும் சாக்குப் போக்குகளையும் சொல்லும் ஒருவராகவும், தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும் ஒருவராகவும் மாறியிருக்கிறார்.
மறுபக்கத்தில் 2012ம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்த க்ளென் மேக்ஸ்வெல் (வயதில் மெத்தியூஸை விடவும் ஒரு வருடம்தான் இளையவர்) உலக ஒரு நாள் கிரிக்கட் வரலாற்றில் மிகச் சிறந்த ஒரு துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி, படுதோல்வியொன்றின் விளிம்பிலிருந்து தனது அணியை தன்னந்தனியாளாக தூக்கி நிறுத்தி வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
சாத்தியமே இல்லாத ஒன்றை நிதானமாக நின்று சாத்தியப்படுத்திய மேக்ஸ்வெல்லும் சரி, மறுமுனையில் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை துல்லியமாக மட்டிட்டு அதை மட்டும் செய்து கொண்டிருந்த கம்மின்ஸும் சரி, பெவிலியனில் இரண்டு மணித்தியாலமாக இடிந்து போய் உட்கார்ந்திருந்த அவுஸ்திரேலிய அணியினரும் சரி, இந்த அற்புதமான வெற்றியின் போது காட்டிய நிதானமும் முதிர்ச்சியும், எதிரணியினருக்குக் கொடுத்த கௌரவமும் மெச்சத்தக்கது.
ஆனால் கேவலம் ஒரு controversial ஆட்டமிழப்புக்காக இலங்கை அணியும், மேத்தியூஸும் நடந்து கொள்ளும் முறையும், காட்டித் திரியும் படமும், அவர்கள் கொடுக்கும் ரோதனையும் கிரிக்கட்டுக்கே ஓர் அவமானம்.
உங்களது முயற்சியும் நம்பிக்கையும் திடவுறுதியும் உங்களுக்கு வெற்றியைக் கொண்டு வந்து சேர்க்கும் போது முதிர்ச்சியையும், நிதானத்தையும் வெளிப்படுத்துங்கள். உங்களது சோம்பேறித்தனமும், கவனயீனமும், அசட்டுத்தனமும் உங்களது காலை இடறிவிடும் போது, சாக்குப் போக்குகளால் உங்களை நியாயப்படுத்த முயலாமல், வாழ்க்கையின் முக்கியமான பாடங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். இல்லாது போனால் நீங்கள் நேற்று ஹீரோவாக இருந்தாலும் இன்று ஸீரோவாகி விடுவீர்கள்.
நேற்றைய தினம் மேக்ஸ்வெல் நிகழ்த்திய வர்ணஜால வான வேடிக்கையை வேறு எந்த அணியின் வீரர் நிகழ்த்தியிருந்தாலும், போட்டியின் நிறைவில் ஒட்டுமொத்த ட்ரெஸ்ஸிங் ரூமும் மைதானத்துக்குள் ஓடி வந்து ஆளைத் தூக்கிச் சென்றிருக்கும். “…and he should not walk off the park, he should be carried off…” என்று வர்ணனையாளர்களில் ஒருவரான Ian Smith உம் கூட உச்சஸ்தாயில் சொல்லியிருந்தார். ஆனால், நகர முடியாமல் நொண்டி நொண்டி நின்ற மேக்ஸ்வெல் அத்தனை பெரிய அற்புதத்தை நிகழ்த்திய பின்னரும் ஒருவர்தானும் மைதானத்துக்குள் வரவுமில்லை, மேக்ஸ்வெல்லைத் தூக்கிச் செல்லவுமில்லை. அவர்களைப் பொருத்தவரையில் அது just another day in the middle, and another remarkable victory. அவுஸ்திரேலியா ஏன் கிரிக்கட் உலகை ஆள்கிறதென்றால், இந்த attitude இனால்தான். அவர்கள் கிரிக்கட்டை ஆராதிக்கிறார்கள். வீரர்களை அளவுக்கு மீறிக் கொண்டாடுவதில்லை. எனவே அங்கு ஹீரோக்கள் யாவரும் ஹீரோக்களாகவே ஓய்வு பெறுகின்றனர். ஆசிய அணிகளில் நடப்பது போல, ஸீரோக்களாக மாறி நொந்து நூடில்ஸாகி ஓரங்கட்டப்படுவதில்லை.
✍️ Affan Abdul Haleem
May be an image of 3 people and text
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

நல்லதொரு பதிவு.

அந்த விளையாட்டு இப்ப‌வும் என‌க்கு நினைவு இருக்கு

ல‌சித் ம‌லிங்கா அவுட் ஆக‌

முர‌ளித‌ர‌ன் க‌ட‌சி ர‌ன்ஸ் அடிச்சு அணிய‌ வெல்ல வைச்ச‌வ‌ர்..............

  • கருத்துக்கள உறவுகள்

’கொடுங்கோலனுக்கு எதிராக ஒன்றுபடணும்’

Freelancer   / 2023 நவம்பர் 13 , மு.ப. 02:00 - 0      - 51

facebook sharing button
twitter sharing button
print sharing button
pinterest sharing button

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட்  மிகவும் ஊழல் நிறைந்த நிறுவனம் என்பதை இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஏற்றுக்கொள்ளும் உண்மையாகும்.

 எனவே, இதனை தேசிய பிரச்சினையாக கருதி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் ஊழலை இல்லாதொழிக்கும் நோக்கில் பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தீர்மானம் நிறைவேற்றியதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிடுகின்றார்.
இது அரசியல் தலையீடு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் கவுன்ஸிலின் தலைவர் ஷம்மி டி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு கிரிக்கெட் தடை விதித்ததாக கிரிக்இன்போ இணையத்தளம் உட்பட பல சர்வதேச ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை கிரிக்கெட் இந்த நாட்டு மக்களின் பொதுச் சொத்தானதே தவிர அவரது தனிப்பட்ட சொத்து அல்ல. அவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தால் அது நாட்டிற்கு செய்யும் துரோகமாகும்.விஷயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊழல் நிறைந்த நிர்வாகக் குழுவின் கொடுங்கோன்மைக்கு எதிராக அனைத்து கிரிக்கெட் பிரியர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 இந்நாட்டில் சுமார் பத்தாயிரம் பாடசாலைகளில் சிறுவர்கள் கிரிக்கெட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த நாட்டில் கிரிக்கெட் உரிமையை மீளப் பெற வேண்டும் என்பதே அந்த சிறுவர்கள் மற்றும் ஒவ்வொரு குடிமகனின் நம்பிக்கை. அதற்காக அரசாங்கம் தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

Tamilmirror Online || ’கொடுங்கோலனுக்கு எதிராக ஒன்றுபடணும்’

  • கருத்துக்கள உறவுகள்
On 10/11/2023 at 23:55, நியாயம் said:

இந்த செய்தியில் மகிழ்ச்சியை கொடுக்கும் அளவுக்கு என்ன உள்ளது?

ஏற்கனவே குழம்பிய குட்டையில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் பெரிய பாறாங்கல்லை தூக்கி வீசியுள்ளது. 

நாங்கள் மகிழக்கூடிய எந்த விடையமும் இதில் இல்லை

காரணம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடந்த உலககோப்பைப் போட்டியில் இலங்கை படுதோல்வியைச் சந்தித்தது.

அதிகமாக நான் கிரிக்கெட் செய்திகளைப்பற்றி எதுவுமே அலட்டிக்கொள்வதில்லை ஆனால் முடிவுகளைக் கவனித்து வைப்பவன்.

இந்தியா அரை இறுதிப்போட்டிக்கு இலகுவாக வரவேண்டுமெனில் அதிக புள்ளிகளை எடுக்கவேண்டும் அல்லது பலமான அணிகளுடம் வெற்றியீட்டவேண்டும் 

இலங்கை எப்படியும் அரையிறுதிப்போட்டிக்குத் தெரிவு செய்யப்பட வாய்ப்பில்லை. என்பது முடிவானதும் இந்தியாவினது இலகுவான அரையிறுதி உள்நுழைவுக்கு இலங்கையை வைத்து வழிவகுக்க பேரம் பேசப்பட்டுள்ளது.

இதற்கான சாதாரண உதாரணம் 

இந்திய கிரிக்கட் சம்மேளனத்தின் தலைவராக இந்திய ஒன்றிய(?) அரசின் உள்துறை அமைச்சர் அமிர்த்ஸா அவர்களது மகந்தான் உள்ளார். இதில் அரசியல் விளையாடியது அப்பட்டமாகத் தெரிகிறது ஆனால் கிரிக்கெட்டின் மீது இருக்கும் பொதுவான மோகம் அந்த அரசியலை அறிய முயலவில்லை காரணம் கிரிக்கெட் என்பது ஜெண்டில்மன் விளையாட்டி எனப் பொதுப்புத்திக்குப் புகட்டப்பட்டுள்ளது. 

இலங்கையின் அனைத்து விவகாரங்களிலும் இந்தியா மூக்கை நுழைத்துப் பழகிவிட்டது காரணம் இலங்கைத்தீவை அடாத்தாக ஆழும் சிங்களத்தலைமைகள் கடன்பட்டுக்கடன்பட்டே தின்னப்பழகிக்கொண்டவர்கள், வரலாறுமுக்கியமோ இல்லையோ அவர்களுக்கு அடுத்தவேளைச் சோறு முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Elugnajiru said:

இந்தியா தொட‌ர்ந்து எல்லா அணிக‌ளையும் ஆர‌ம்ப‌ சுற்று போட்டியில் வென்று முத‌ல் இட‌ம் பிடிச்ச‌து...........இதில் இல‌ங்கை விட்டுக் கொடுத்த‌து என்ற‌து ஒரு புர‌ளி

இல‌ங்கை வீர‌ர்க‌ள் பாக்கிஸ்தான் கூட‌ வென்று இருக்க‌னும் அப்கானிஸ்தான் கூட‌வும் வென்று இருக்க‌னும்

இல‌ங்கை அணியின் ப‌ந்து வீச்சு இந்த‌ உல‌க‌ கோப்பையில் எடுப‌ட‌ வில்லை

ம‌ற்ற‌ நாடுக‌ளும் ஒரு சில‌ விளையாட்டில் தோத்து தான் சிமிபின‌லுக்கு வ‌ந்த‌வை............

ஹிந்திய‌ன் சொந்த‌ ம‌ண்ணில் அவ‌ங்க‌ளை வீழ்த்துவ‌து க‌டிண‌ம்...........A . B  இர‌ண்டு தேசிய‌ அணிய‌ உருவாக்க‌லாம் அப்ப‌டி திற‌மையான‌ இள‌ம் வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் ஹிந்தியாவில் ............

இப்போது உள்ள‌ இல‌ங்கை வீர‌ர்க‌ள் அனுப‌வ‌ம் இல்லா வீர‌ர்க‌ள் ப‌ழைய‌ இல‌ங்கை வீர‌ர்க‌ளுட‌ன் ஒப்பிடும் போது இப்ப‌ இருக்கும் இல‌ங்கை வீர‌ர்க‌ள் மார்கேட்டில் கீரை விக்க‌ தான் லாய்க்கு 🙈

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பையன்26 said:

பையன் நீங்கள் இதைச் சீமான் சொன்னால்தான் நம்புவியள்.

இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அதை ஒரு விளையாட்டாகப் பார்ப்பதில்லை இரண்டு நாடுகளுக்கிடையில் நடக்கும் போராகத்தான் பார்ப்பார்கள் பாகிஸ்தான் அணி இப்போது இந்தியா வந்துள்ளதை இந்திய ரசிகர்கள் அவர்கள் இங்குள்ள சாம்பிங்மாலகளைச் சுற்றிவந்தார்கள் புரியாணி சாப்பிட்டார்கள் வள்ளுவர் கோட்டத்தைப் பார்த்தார்கள் அவர்கள் கிரிக்கெட் விளயாட வரவில்லை என ஏராளமான ஏளனம் செய்தார்கள் காரணம் அவர்கள் மனதில் ஆழமாகப் படிந்துவிட்ட பாகிஸ்தானிய எதிர்ப்புணர்வு.

இந்தியா எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்பதும் அதையிட்டு இந்தியர்கள் புல்லரித்துப் புளகாங்கிதம் அடைந்து போதை மயக்கத்தில் இருக்கவேண்டும் என்பதும் எழுதப்படாத கொள்கை.

2009 ல் முள்ளிவாய்க்காலில் இந்தியா தலைமையில் இன அழிப்பு நடந்தபோது ஐ பி எல் போட்டிகள் அனைத்தும் சென்னையை முன்னிலைப்படுத்தெயே நடந்தது டோனியை சென்னை சூப்பர் கிங் அணிக்கு அதிக விலை கொடுத்து ஒதுக்கப்பட்டது. அனைத்து ஊடகங்களும் ஒரு இனம் படுகொலை செய்யப்படுவதை மறத்து கிரிக்கெட் செய்திகளை வெளியிட்டது. 

இந்திய ஆட்சியாளர்கள் கிரிக்கெட் எனும் போதையை எப்படு எந்த நேரத்தில் கையாளவேண்டும் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார்கள்.

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக பொதுச்செயலாளரது மகந்தான் இப்போது இந்திய கிரிக்கெட் வாரிய தலவர். பஜக தங்களது தலைமையிலேயே இந்தியகிரிக்கெட் குழு ஏனைய நாடுகளின் கிரிக்கெட் குழுக்களை "வாஸ் அவுட்" ஆக்கியது எனப்பெயர் பெறவேண்டும்.

இந்த அரசியலைப் புரிந்துகொள்ளுங்கள் முதலில்.

நீங்க‌ள் சொல்லுவ‌து 2011 உல‌கை கோப்பை பின‌னில் ந‌ட‌ந்த‌து.............ஏன் எனில் அப்ப‌ ந‌ல்லா ப‌ந்து போட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் இருக்க‌ அனுப‌வ‌ம் இல்லாத‌ வீர‌ரை இல‌ங்கை க‌ப்ட‌ன் தெரிவு செய்தார்............அந்த‌ விளையாட்டில் அர‌சிய‌ல் புகுந்து விளையாடின‌து ஏற்புடைய‌து

உல‌க‌ கோப்பைக்கு முத‌ல் ந‌ட‌ந்த‌ ஆசிய‌ கோப்பை பின‌ல‌ நீங்க‌ள் பார்க்க‌ வில்லையா 

அந்த‌ விளையாட்டில் இல‌ங்கை அணி 50ர‌ன்ஸ் அடிச்சு எல்லாரும் ஆட்ட‌ம் இழ‌ப்பு..........இந்த‌ உல‌க‌ கோப்பையில் 55ர‌ன்ஸ்

இந்த‌ உல‌க‌ கோப்பையில் ப‌டு கேவ‌ல‌மாய் விளையாடின‌ அணி என்றால் அது இல‌ங்கை அணி தான்

இந்த‌ உல‌க‌ கோப்பையில் குறைந்த‌ ர‌ன்ஸ் அடிச்ச‌ அணி இல‌ங்கை................ 

இவேன்ட‌ விளையாட்டில் அர‌சிய‌ல் இருப்ப‌தாக‌ ப‌ல‌ ஆண்டுக்கு முத‌லும் ஜ‌சிசி குற்ற‌ம் சாட்டின‌து.............இப்போது இல‌ங்கை அணிக்கு தற்காலிக தடை விதித்து இருக்கின‌ம்

இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் என்ன‌ ந‌ட‌க்குது என்று பாப்போம்

இல‌ங்கை கிரிக்கேட் க‌ட‌ந்த‌ 7 ஆண்டுக‌ளில் ப‌ல‌ சின்ன‌ அணிக‌ளிட‌ம் தோத்து இருக்கின‌ம்............

  • கருத்துக்கள உறவுகள்

பையன் நான் பேசுவது அரசியல் அதாவது கிரிக்கெட்டில் எப்படி அரசியல் விளையாடுது என எனக்கு இலங்கைக் கிரிக்கெட் அணியின் தரவுகள் தேவையில்லை.

நேற்று நடந்த கிரிக்கெட்டின் அரையிறுதியில் ஒரு பந்துவீச்சாளரது பந்துவீச்சே இந்திய அணி வெல்லக்காரணமாக இருந்தது அவர் ஒரு இஸ்லாமியராவார் இவர் ஒருமுறை டுபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இவரது பந்துவீச்சு மோசமாக இருந்தது எனவும் பாகிஸ்தான் அணிக்குச் சாதகமாகச் செயற்பட்டார் எனவும் முழு இந்துத்துவாவும் கூச்சல் போட்டது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவரது முகத்தில் காறி உமிழாத குறைதான்.

புரிகிறதா உங்களுக்கு இந்தியாவில் கிரிக்கெட்டும் அரசியலும் எப்படிப் பின்னியிருக்கு என 

இலங்கை மோசமான அணி என்பதற்காக அவர்கள் விழவில்லை அவர்களைத் தோற்கடிக்க வைத்திக்கிறார்கள் அதாவது போற போக்கில் வெற்றிய பொறுக்கிக்கொண்டு போயிருக்கிறார்கள் அவர்களுக்கு யாரை வெல்லுகிறோம் என்பது விடையமில்லை பட்டியல் நீளமானதாக இருக்கவேண்டும் ஒரு தெருச்சண்டியன் இளைச்சவனை அடித்து தனக்குக் கைப்புள்ளையாக வைத்திருப்பதுபோல் அப்போதான் அமித்ஸாவின் மகனை கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக வைத்திருப்பதின் அர்த்தம் புரியும் பி ஜே பி என்றால் சும்மாவ பனைமரத்தில வெவவாலா என்பதுபோல.

On 15/11/2023 at 14:15, பையன்26 said:

நீங்க‌ள் சொல்லுவ‌து 2011 உல‌கை கோப்பை பின‌னில் ந‌ட‌ந்த‌து.............ஏன் எனில் அப்ப‌ ந‌ல்லா ப‌ந்து போட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் இருக்க‌ அனுப‌வ‌ம் இல்லாத‌ வீர‌ரை இல‌ங்கை க‌ப்ட‌ன் தெரிவு செய்தார்............அந்த‌ விளையாட்டில் அர‌சிய‌ல் புகுந்து விளையாடின‌து ஏற்புடைய‌து

உல‌க‌ கோப்பைக்கு முத‌ல் ந‌ட‌ந்த‌ ஆசிய‌ கோப்பை பின‌ல‌ நீங்க‌ள் பார்க்க‌ வில்லையா 

அந்த‌ விளையாட்டில் இல‌ங்கை அணி 50ர‌ன்ஸ் அடிச்சு எல்லாரும் ஆட்ட‌ம் இழ‌ப்பு..........இந்த‌ உல‌க‌ கோப்பையில் 55ர‌ன்ஸ்

இந்த‌ உல‌க‌ கோப்பையில் ப‌டு கேவ‌ல‌மாய் விளையாடின‌ அணி என்றால் அது இல‌ங்கை அணி தான்

இந்த‌ உல‌க‌ கோப்பையில் குறைந்த‌ ர‌ன்ஸ் அடிச்ச‌ அணி இல‌ங்கை................ 

இவேன்ட‌ விளையாட்டில் அர‌சிய‌ல் இருப்ப‌தாக‌ ப‌ல‌ ஆண்டுக்கு முத‌லும் ஜ‌சிசி குற்ற‌ம் சாட்டின‌து.............இப்போது இல‌ங்கை அணிக்கு தற்காலிக தடை விதித்து இருக்கின‌ம்

இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் என்ன‌ ந‌ட‌க்குது என்று பாப்போம்

இல‌ங்கை கிரிக்கேட் க‌ட‌ந்த‌ 7 ஆண்டுக‌ளில் ப‌ல‌ சின்ன‌ அணிக‌ளிட‌ம் தோத்து இருக்கின‌ம்............

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Elugnajiru said:

நேற்று நடந்த கிரிக்கெட்டின் அரையிறுதியில் ஒரு பந்துவீச்சாளரது பந்துவீச்சே இந்திய அணி வெல்லக்காரணமாக இருந்தது அவர் ஒரு இஸ்லாமியராவார் இவர் ஒருமுறை டுபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இவரது பந்துவீச்சு மோசமாக இருந்தது எனவும் பாகிஸ்தான் அணிக்குச் சாதகமாகச் செயற்பட்டார் எனவும் முழு இந்துத்துவாவும் கூச்சல் போட்டது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவரது முகத்தில் காறி உமிழாத குறைதான்.

முதல் சில போட்டிகளில் இவரை பந்து போட விடவில்லை.

சாதனை படைத்து விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கிரிக்கெட் நெருக்கடி குறித்து ஜெய் ஷாவுடன் ஜனாதிபதி உரையாடல் : காஞ்சன

இலங்கை கிரிக்கெட் நெருக்கடி குறித்து இந்திய கிரிகெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷாவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று வியாழக்கிழமை (16) தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இதனை பாராளுமன்றத்தில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஜெய் ஷாவின் தந்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வலது கரம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் நெருக்கடி குறித்து ஜெய் ஷாவுடன் ஜனாதிபதி உரையாடல் : காஞ்சன | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

icc-slc.png?resize=750,375&ssl=1

கிரிக்கெட் சபை இடைநீக்கம் இரத்து செய்யப்படாது – ICC அதிரடி

சர்வதேச கிரிக்கெட் பேரவை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண தொடரை இலங்கையில் இருந்து தென்னாபிரிக்காவிற்கு மாற்றியுள்ளது.

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தை தென்னாபிரிக்காவில் நடத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நிர்வாக நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டு ஐசிசி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆலோசனைக்குப் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை இடைநிறுத்தப்பட்டாலும் இலங்கை அணி தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடியும் என சர்வதேச கிரிக்கட் பேரவை ஏகமனதாக முடிவு செய்துள்ளது.

இதேநேரம் கிரிக்கெட் விளையாட்டை தொடர அனுமதிக்குமாறு தான் ஐசிசியிடம் கோரியுள்ள நிலையில் அந்த கோரிக்கையை உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர் என ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஜனவரி 14 முதல் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

https://athavannews.com/2023/1359971

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சுற்றுப்போட்டி தென் ஆபிரிக்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இலங்கை அணி சர்வதேச/பிராந்திய போட்டிகளில் விளையாடுவதற்கு தடை இல்லை என்பது ஆறுதல் தரும் விடயம். 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நியாயம் said:

சுற்றுப்போட்டி தென் ஆபிரிக்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இலங்கை அணி சர்வதேச/பிராந்திய போட்டிகளில் விளையாடுவதற்கு தடை இல்லை என்பது ஆறுதல் தரும் விடயம். 

இல‌ங்கை அணி தூக்காத‌ ஒரே ஒரு கோப்பை 19வ‌ய‌துக்கு உள்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் உல‌க‌ கோப்பை

சொந்த‌ ம‌ண்ணில் அடுத்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌ப்ப‌தால் சில‌து கோப்பைய‌ வெல்ல‌க் கூடும் என்று நினைத்தேன்............தென் ஆபிரிக்காவுக்கு மாற்ற‌ம் செய்த‌ ப‌டியால் இல‌ங்கை வீர‌ர்க‌ளுக்கு பின்ன‌டைவு தான்

இனியாவ‌து அர‌சிய‌ல் வாதிக‌ள் கிரிக்கேட்டுக்குள் மூக்கை நுழைக்காம‌ சிற‌ந்த‌ வீர‌ர்க‌ளை தொட‌ர்ந்து அணியில் விளையாட‌ விட‌னும்............ஜ‌சிசி இவ‌ங்க‌ளை கை விடாது என்று என‌க்கு தெரிந்த‌ விடைய‌ம் தான் ஜ‌சிசிக்கு இந்தியாவில் இருந்து தான் அதிக‌ ப‌ண‌ம் கிடைக்குது...........இந்தியா இல‌ங்கைய‌ எப்ப‌டியாவ‌து காப்பாற்ற‌ தான் பார்க்கும் அது ந‌ட‌ந்து விட்ட‌து.......................

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

உலகக் கிண்ணத் தொடர் மாற்றம் : 100 மில்லியன் டொலர் நட்டம்!

நாட்டில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக் கிண்ணத் தொடர் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டமையால், சுமார் 100 மில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை கிரிக்கெட் பிரச்சினை தொடர்பாக சுமார் 45 நிமிடங்கள் ஐ.சி.சி. கலந்துரையாடியது.

நான் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணத் தொடரை இலங்கையில் நடத்துமாறு அவர்களிடம் வலியுறுத்தியிருந்தேன்.

எனினும், தடை விதிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில் தொடரை நடத்த முடியாது எனத் தெரிவித்தார்கள்.

குறைந்தது கிரிக்கெட் தொடர்களில் விளையாடவேனும் அனுமதிக்க வேண்டும் என நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், நான் தான் கிரிக்கெட்டை தடை செய்யுமாறு ஐ.சி.சி.க்கு கடிதம் எழுதியதாக பொய்யான குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டது.

கிரிக்கெட்டுக்குள் அரசியல் தலையீடு அதிகரித்துள்ளதாக ஐ.சி.சி. குற்றஞ்சாட்டியே, நாட்டில் நடைபெறவிருந்த தொடரை தென்னாப்பிரிக்காவுக்கு ஐ.சி.சி. மாற்றியுள்ளது.

இதனால் நாட்டுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 100 மில்லியன் டொலர் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2023/1360200

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

இது பொய் குற்ற‌ச் சாட்டாய் நான் பார்க்கிறேன்...........இந்தியா போன்ர‌ அணிக‌ள் விளையாடும் விளையாட்டை தான் தொலைக் காட்சியில் ஒளிப‌ர‌ப்பு செய்வின‌ம்............ம‌ற்ற‌ அணிக‌ள் விளையாடும் விளையாட்டு மைதாண‌த்தில் இர‌ண்டு வீடியோ க‌ம‌ரா மூல‌ம் தான் விளையாட்டை காட்டுவின‌ம் மூன்றாவ‌து அப்பிய‌ர் பார்க்க‌..........19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையில் த‌வ‌றான‌ முறையில் அம்பிய‌ர் அவுட் குடுத்தால் மேல் முறையிடு செய்ய‌ முடியாது கார‌ண‌ம் ரீவுயூ இல்லை..........19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் உல‌க‌ கோப்பைக்கு ஜ‌சிசி முக்கிய‌த்துவ‌ம் கொடுப‌தில்லை.........இதில் இவ‌ர்க‌ளுக்கு எப்ப‌டி 100மில்லிய‌ன் டால‌ர் லொச்ட் ஆகும்😏..............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐசிசி தடையால் இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் என்ன ஆகும்? ரணில் விக்ரமசிங்க கூறுவது என்ன?

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் என்ன? இலங்கை அரசியலில் எதிரொலிக்கும் கிரிக்கெட் வாரிய விவகாரம்!

பட மூலாதாரம்,PMD SRI LANKA/GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 55 நிமிடங்களுக்கு முன்னர்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை தடை செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) கொண்டு வந்த தீர்மானத்தை அடுத்து, அந்நாட்டின் அரசியலிலும் அது தாக்கத்தை செலுத்தியுள்ளது.

பிரதேச அரசியல்வாதிகள் முதல் நாடாளுமன்றம் வரை தற்போது ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியம் குறித்தே அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்குள் அரசியல் தலையீடு காணப்படுவதாகத் தெரிவித்து, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை தடை செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை கடந்த 10ஆம் தேதி நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்தத் தீர்மானத்தைத் தடை செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை எடுத்த தீர்மானத்தை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்றுக் குழு அங்கீகரித்திருந்தது.

ஆமதாபாத்தில் கடந்த 21ஆம் தேதி இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சிறப்புக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் தடை

பட மூலாதாரம்,SRI LANKA CRICKET

படக்குறிப்பு,

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா

ஐசிசி கூட்டத்தில் என்ன பேசினார்கள்?

கிரிக்கெட் விளையாட்டில் அரசியல் தலையீடுகளை இல்லாது செய்யும் நோக்கிலேயே ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்ததாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

ஆமதாபாத்தில் கடந்த 21ஆம் தேதி இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவை கூட்டத்தில் ஷம்மி சில்வா கலந்துகொண்டிருந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் குறித்து தெளிவூட்டினார்.

அவர் கூறுகையில், ''முழுமையாக அரசியல் தலையீடு காணப்படுவதாக ஐசிசி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இலங்கை பிரச்னை குறித்து 45 நிமிடங்கள் வரை பேசப்பட்டது. இலங்கையில் கிரிக்கெட் மாத்திரம் அல்ல. இலங்கையில் ரக்பியும் தடை செய்யப்பட்டுள்ளதாக கூட்டத்தில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

அதேபோன்று, இலங்கை கால்பந்தாட்டமும் தடை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்த சட்ட வல்லுநர் ஒருவர் தெரிவித்தார். எனவே இலங்கையில் மூன்று விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது,” என அவர் தெரிவித்தார்.

மேலும், “இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சருடன் கலந்துரையாடியதாக அங்கிருந்த ஒருவர் தெரிவித்தார். ஆனால், அந்த சந்திப்பில் தமக்கு ஒன்றும் புரியவில்லை என்ற கருத்துகளும் அங்கு கூறப்பட்டது. இதற்கு முன்னர் இவ்வாறே ஜிம்பாப்வே அணிக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான கடுமையான தீர்மானங்களை எடுக்காத பட்சத்தில், ஏனைய நாடுகளிலும் இவ்வாறான நிலைமை ஏற்படக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது," என அவர் கூறினார்.

இதேவேளை, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஆண்டு இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், அந்தப் போட்டிகளை தென்னாபிரிக்காவில் நடத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.

''கிரிக்கெட் தடை செய்யப்பட்ட நாடொன்றில் போட்டிகளை நடத்த முடியாது என ஐசிசி அதற்குக் காரணம் தெரிவித்தது," என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷம்மி சில்வா குறிப்பிட்டார்.

இலங்கை கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க.

மேலும், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு வழங்கப்படும் நிதியைத் தடை செய்ய முதலில் சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்திருந்த பின்னணியில், தான் விடுத்த கோரிக்கையை அடுத்து கடும் கட்டுப்பாட்டுடன் நிதியை வழங்கத் தீர்மானித்ததாகவும் அவர் கூறினார்.

அத்துடன், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், கிரிக்கெட் அணி போட்டிகளில் விளையாட சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், கிரிக்கெட் போட்டிகள் குறித்து தாம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும், எதிர்காலத்தில் நிலைமை பழைய நிலைக்குத் திரும்பாத பட்சத்தில், அதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அதிகாரிகள் கூறியதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா மேலும் கூறினார்.

இலங்கையில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளை நடத்த அனுமதிக்காமையால், நாட்டிற்கு 833 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் கணக்காய்வாளர் நாயகத்தால் நடத்தப்பட்ட கணக்காய்வு அறிக்கையை, ஐசிசி கணக்காய்வாளர்கள் ஆராய்ந்து, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் எந்தவொரு ஊழலும் இடம் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்தியதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

மேலும், அரசியல் தலையீடுகள் காணப்படும் பட்சத்தில், இடைக்கால சபையொன்றை ஏற்படுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை இடமளிக்காது என அவர் கூறுகின்றார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு நியமிக்கப்பட்டுள்ள இடைக்கால சபையை நிறுத்தும் பட்சத்தில், மீண்டும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கான அங்கீகாரம் கிடைக்கும் என நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்ட நிதி தொகை, அவ்வாறே கிடைக்கும் எனவும், அடுத்த ஆண்டுக்கான நிதியிலேயே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் என்ன?

இலங்கை கிரிக்கெட் தடை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்து தாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவிக்கின்றது.

ஐசிசி எவ்வாறான தீர்மானத்தை எடுக்கும் என்பது குறித்து இதுவரை அவதானம் செலுத்தியிருந்ததாகவும், தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளமையால் அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தாம் எடுக்கவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியடத்தில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் ஊடகங்களின் ஊடாக மக்களுக்கு தெளிவூட்டப்படும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

நீதிமன்ற நடவடிக்கை

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவால் நியமிக்கப்பட்ட இடைக்கால சபையை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அந்த வழக்கு மீதான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுண ரணதுங்க தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவொன்றே, விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு நியமிக்கப்பட்ட கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு எதிராக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா நீதிமன்றத்தை நாடியிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், இடைக்கால சபை மற்றும் அதற்கான வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதன்படி, இந்த வழக்கு மீதான விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

ஜெய் ஷாவிடம் மன்னிப்பு கோரிய ரணில்

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் என்ன? இலங்கை அரசியலில் எதிரொலிக்கும் கிரிக்கெட் வாரிய விவகாரம்!

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகளில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷாவிற்கு தொடர்புள்ளதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்த கருத்து குறித்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜெய் ஷாவுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

இதன்போது, தான் ஜெய் ஷாவிடம் மன்னிப்பு கோரியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷாவிற்கும் இடையில் தொடர்பு கிடையாது என அவர் குறிப்பிடுகின்றார். இதேவேளை, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் நீண்டகாலமாகக் காணப்படுகின்ற பிரச்னையை புதிய சட்டத்தின் ஊடாகவே தீர்க்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதைக் குறிப்பிட்டார்.

''இரண்டு குழுக்களுக்கு இடையில் காணப்படுகின்ற பிரச்னை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. புதிய சட்டமொன்றை கொண்டு வந்து, சட்டத்தின் ஊடாக சரியான குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். இந்த வழக்கை அவ்வாறு கொண்டு செல்ல வேண்டாம் என நான் விளையாட்டுத்துறை அமைச்சருக்குக் கூறினேன். அவ்வாறு செய்தால் ஐசிசி இல்லாது போகும், போட்டிகள் இல்லாது போகும், சுற்றுலாத் துறை இல்லாது போகும் எனக் கூறினேன்.” எனத் தெரிவித்தார்.

மேலும், “அத்துடன், வழக்கொன்றில் சிக்குண்டால் சிக்கிரம் மீண்டு வர முடியாது. அமைச்சரவையிலும் இது தொடர்பில் பேசினோம். எனினும், தனக்கு சட்டத்தரணி ஒருவர் வேண்டும் என அமைச்சர் கூறினார். அவர்கள் வழக்கு போடப் போகின்றார்கள். அதனால் சட்டத்தரணி ஒருவர் தேவை.

சட்டமாதிபரும் இருந்தார், முன்னாள் ஜனாதிபதியும் அந்த இடத்தில் இருந்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் முன்னிலையாகுமாறு சட்ட மாதிபருக்கு கூறினோம்,” என ரணில் விக்ரமிசிங்க தெரிவித்தார்.

“நான் ஜெய் ஷாவுடனும் பேசினேன். ஐசிசியுடனும் பேசினேன். அரசியல் தலையீடு உள்ளதாக ஐசிசி கூறுகின்றது. ஷம்மி சில்வாவை பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. அமைச்சர் செய்தது சரியா இல்லையா என்பதை நீதிமன்ற தீர்ப்பின் ஊடாகப் பார்த்துக்கொள்ள முடியும்," என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/crgp3p5v95ko

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஏராளன் said:

இரண்டு குழுக்களுக்கு இடையில் காணப்படுகின்ற பிரச்னை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

யார் இந்த இரண்டு குழுக்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

யார் இந்த இரண்டு குழுக்கள்?

சிறிலங்கா கிரிக்கெட்டின் அதிகாரத்தை கைப்பற்ற விரும்புபவர்களாக இருக்கலாம் அல்லது அரசியல் கட்சிகளின் ஆசீர்வாதம் பெற்றவர்களாக இருக்கலாம் அண்ணை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.