Jump to content

ஐ.பி.எல் 2024 - செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி இடத்தில் ஆர்சிபி; தவறு நடந்தது எங்கே? கேப்டன் கூறுவது என்ன?

ஆர்சிபி -  ஹைதராபாத்

பட மூலாதாரம்,SPORTZPICS

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வீடியோ கேம்ஸிஸ் கிரிக்கெட் பார்த்த, விளையாடிய உணர்வு ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தின்போது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும்.

38 சிக்ஸர்கள், 43 பவுண்டரிகள், ஒரே போட்டியில் 549 ரன்கள், 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய சோகம், அதிகபட்ச ஸ்கோர் என நேற்றைய ஐபிஎல் டி20 ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பட்டியலிடலாம்.

ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு கழுத்துவலி கூட வந்திருக்கலாம். ஏனென்றால், கிட்டத்தட்ட 40 ஓவர்களில் 9 ஓவர்களில் வெறும் சிக்ஸர், பவுண்டரிகளாகவே அடிக்கப்பட்டது.

மிகச்சிறிய மைதானமான சின்னசாமி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் எப்படி வீசினாலும் பேட்டை நோக்கித்தான் வந்தது என்பதால் பேட்டர்கள் கருணையற்றவர்களாக மாறினர். யாருக்கு எப்படி பந்துவீசுவது எனத் தெரியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்களும், சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களும் திணறி நின்றதைக் காண முடிந்தது.

 
ஆர்சிபி -  ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. 288 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது. நிகர ரன்ரேட்டிலும் பெரிய ஸ்கோர் அடித்தும் பெரிய முன்னேற்றமில்லாமல் 0.502 ஆக இருக்கிறது.

டி20 போட்டிகளில் 250ரன்களுக்கு மேல் அதிகமுறை அடித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் அணி நேற்று பெற்றது.

ஆர்சிபி அணியைப் பொருத்தவரை இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்தும் தோல்வி அடைந்த முதல் அணியாக மாறிவிட்டது. 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 6 தோல்விகள் என 2 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது.

 
ஆர்சிபி -  ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ஹைதராபாத் வீரர்கள்

சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை அமைத்துக் கொடுத்தவர்களில் முக்கியமான பேட்டர் டிராவிஸ் ஹெட் 102 (41பந்துகள், 8சிக்ஸர், 9பவுண்டரி). ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்த ஹெட், நேற்றைய ஆட்டத்தில் முதல் சதத்தைப் பதிவு செய்து ஆட்டநாயகன் விருது வென்றார். 39 பந்துகளில் சதம் அடித்து, அதிவேக சதம் அடித்த 4வது பேட்டர் என்ற பெயரை ஹெட் பதிவு செய்தார். சன்ரைசர்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெயரை ஹெட் பெற்றார். இதற்கு முன் வார்னர் 43 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.

மற்றொரு பேட்டர் ஹென்ரிச் கிளாசன் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சீசன் முழுவதும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்ந்துவரும் கிளாசன் 31 பந்துகளில் 67 ரன்கள்(7சிக்ஸர், 2 பவுண்டரி) அடித்து ஆட்டமிழந்தார்.

இது தவிர மார்க்ரம் 32(17பந்துகள், 2சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்), அப்துல் சமது37(10 பந்துகள் 3 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள்) என ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த 4 பேட்டர்கள் அடித்த ஸ்கோர்தான் மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை.

 
ஆர்சிபி -  ஹைதராபாத்

பட மூலாதாரம்,SPORTZPICS

சன்ரைசர்ஸ் கேப்டன் கூறியது என்ன?

சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “ நானும் பேட்டராக இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் பெரிய ஸ்கோர் அடித்துள்ளோம். போட்டி பேட்டர்கள் ராஜ்ஜியமாகமாறி வருகிறது. இந்த ஆடுகளத்தை படிக்க நானும் முயற்சித்தேன். எங்கள் ஆட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 4 வெற்றிகள் பெற்றுள்ளோம். பேட்டர்களுக்கு முழுசுதந்திரம் அளித்துள்ளோம். அதனால்தான் பெரிய ஸ்கோர் வருகிறது” எனத் தெரிவித்தார்

ஆர்சிபி கொடுத்த பதிலடி

ஆர்சிபி அணியிலும் கேப்டன் டூப்பிளசிஸ் 28 பந்துகளில் 62 ரன்கள்(4சிக்ஸர், 7பவுண்டரி), விராட் கோலி 42 (2சிக்ஸர், 6பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 85(7சிக்ஸர், 5 பவுண்டரி) என விளாசினர்.

இதில் ஆர்சி அணியில் நடுவரிசை பேட்டர்கள் ரஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ், சவுகான் ஆகிய மூவவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்காமல் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தால், ஆர்சிபி அணி ஒருவேளை வென்றிருக்கலாம்.

சன்ரைசர்ஸ் அடித்த ஸ்கோருக்கு தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று ரீதியில்தான் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

 
ஆர்சிபி -  ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நிகழ்த்தப்பட்ட சாதனைகள்

இந்த ஆட்டத்தில் சில சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன.

ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரான 287 ரன்களை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்தது. இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த சீசனில் 277 ரன்கள் சேர்த்ததுதான் சாதனையாக இருந்தது, தன்னுடைய சாதனையை அந்த அணியை முறியடித்தது. ஆடவர் டி20 போட்டியில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

ஓட்டுமொத்தமாக நேற்றைய ஆட்டத்தில் 549 ரன்கள் சேர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் ஹைதராபாத்தில் இந்த சீசனில் நடந்த மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 523 ரன்கள் சேர்க்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தநிலையில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.

ஆர்சிபி அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 22 சிக்ஸர்களை விளாசி, ஒரு இன்னிங்ஸில் ஒரு அணிக்கு எதிராக அடிக்கப்பட்டஅதிகபட்ச சிக்ஸர்களைப் பதிவு செய்தது. இதற்கு முன் 2013-இல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 21 சிக்ஸர்களை அடித்த நிலையில் அதை சன்ரைசர்ஸ் முறியடித்துவிட்டது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்களை விளாசின.

டி20 போட்டியில் அதிக பட்சமாக 262 ரன்கள் சேர்த்தும் தோல்வி அடைந்த முதல் அணி என்ற பெயரை ஆர்சிபி பெற்றது. இதற்குமுன் 2023ம் ஆண்டில் செஞ்சூரியனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 258 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் சேர்த்தும் தோல்வி அடைந்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

ஆர்சிபி அணியில் பந்துவீச்சாளர்கள் டாப்ளி(68), யாஷ் தயார்(51), லாக்கி பெர்குஷன்(52), விஜயகுமார்(64) என 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஒரு போட்டியில் 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது இதுதான் முதல்முறை.

சன்ரைசர்ஸ் அணியில் நேற்று மட்டும் 4 பேட்டர்கள் ஒரு சதம் பார்ட்னர்ஷிப்பும் உள்பட, 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் வரலாற்றில் இது 2வது முறையாக நடக்கிறது. இதற்கு முன் 2008-இல் ஆர்சிபிக்கு எதிராக கொல்கத்தா அணியின் 4 பேட்டர்கள் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.

 
ஆர்சிபி -  ஹைதராபாத்

பட மூலாதாரம்,SPORTZPICS

ஆர்சிபி இதயத்தை உடைத்த ஹெட்

ஆர்சிபி அணி நேற்றைய ஆட்டத்தில் முறையான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா என இரு இடதுகை பேட்டர்கள் களத்துக்கு வந்ததும் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான ஜேக்ஸை பந்துவீசச் செய்து சோதிதித்துப் பார்த்தது.

முதல் இரு ஓவர்கள் மட்டும் பொறுமை காத்த ஹெட், அபிஷேக் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்ஸர்களாக அடிக்கத் தொடங்கினர். எந்தப் பந்துவீச்சாளர் பந்துவீசினாலும் ஹெட், அபிஷேக் பேட்டிலிருந்து பவுண்டரி, சிக்ஸர்களாக பறந்தன. ஆர்சிபிக்காக முதல்முறையாக களமிறங்கிய பெர்குஷன் 5-ஆவது ஓவரில் ஹெட் சிக்ஸர்களாக விளாசி 18 ரன்களையும், யாஷ் தயால் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என 20 ரன்களையும் சேர்த்தார். 20 பந்துகளில் ஹெட் அரைசதம் அடித்தார்.

பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் 76 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் சன்சைர்ஸ் சேர்த்த 3வது அதிகபட்ச ரன்களாகும். இதற்குமுன் மும்பை அணிக்கு எதிராக 81 ரன்கள், சிஎஸ்கேவுக்கு எதிராக 77ரன்களும் சேர்த்திருந்தது. 7.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை தொட்டது. அபிஷேக் சர்மா 34 ரன்களில் டாப்ளே பந்துவீச்சில் பெர்குஷனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஹெட், அபிஷேக் 108 ரன்கள் என வலுவான அடித்தளம் அமைத்தனர்.

கிளாசன் சிக்ஸர் மழை

2-ஆவது விக்கெட்டுக்கு கிளாசன் களமிறங்கி ஹெட்டுடன் சேர்ந்தார். முதல் 5 பந்துகளில் 3 ரன்கள் சேர்த்து மெதுவாகத் தொடங்கிய கிளாசன், அதன்பின் வாண வேடிக்கை நிகழ்த்தினார். டி20 போட்டிகளில் ஆபத்தான பேட்டராக கருதப்படும் கிளாசன், ஆர்சிபி பந்துவீச்சாளர்களை நேற்று வதம் செய்தார். பெர்குஷன், யாஷ் தயால் ஓவரில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் கிளாசன் பேட்டிலிருந்து பறந்தன. மறுபுறம் டிராவிஸ் ஹெட்டும் சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்து, 39 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். டிராவிஸ் ஹெட் 102 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அதிரடியாக ஆடிய கிளாசன் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 14.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களைத் தொட்டது. கிளாசன் 67 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீ்ச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த கிளாசன், ஹெட் ஆகிய இரு பேட்டர்களும் ஆட்டமிழந்து சென்றபின் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

கடைசி நேரத்தில் களமிறங்கிய அப்துல் சமது, மார்க்ரம் இருவரும் சூப்பர் கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினர். கடைசி இரு ஓவர்களில் மட்டும் இருவரும் 46 ரன்களைக் குவித்தனர்.

 
ஆர்சிபி -  ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடைசி வரை போராடியது பெருமை

ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “இது முறையான டி20 ஆடுகளம். இன்று சேர்த்த ரன்களை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. அதுவே சாதனையாக மாறிவிட்டது. இந்த ஆடுகளத்தில் 270 ரன்கள்கூட சேஸிங் செய்யக்கூடியதுதான். இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவது கடினம். பாவம் பந்துவீச்சாளர்கள் பல நுணுக்கங்களை பயன்படுத்தி வீசியும் பயன் இல்லை. பேட்டர்கள் பக்கமே ஆட்டம் தொடர்ந்து போவது கடினம்தான். வித்தியாசமாக சந்திக்க வேண்டும். எங்கள் பேட்டிங்கில் சில தவறுகள் உள்ளன. அதை சரிசெய்வோம். பவர்ப்ளேக்குப்பின் நாங்கள் தவறுகளைத் திருத்த வேண்டியுள்ளது. ஆனால் கடைசிவரை எங்கள் வீரர்கள் போராடியது பெருமையாக இருந்தது. பந்துவீச்சைப் பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் எப்போதும் மனதை உற்சாக வைத்திருக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.

 
ஆர்சிபி -  ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆர்சிபிக்கு நம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக்

ஆர்சிபியும் பதிலடி கொடுக்க முயன்று, விக்கெட்டுகளை இழந்திருந்த தருணத்தில் தினேஷ் கார்த்திக் களமிறங்கி, அரங்கில் இருந்த ரசிகர்களுக்கு தனது பேட்டால் விருந்தளித்தார். லாம்ரோருடன் சேர்ந்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டிகே, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். உனத்கட், மர்கண்டே வீசிய 13 மற்றும் 14வது ஓவர்களில் மட்டும் தினேஷ் கார்த்திக், லாம்ரோர் சேர்ந்து 46 ரன்கள் சேர்த்தனர். டிகே அடித்த ஷாட்களால் ரன்ரேட்டும் வேகமாக உயர்ந்தது, ரசிகர்களுக்கும் ஆர்சிபி வென்றுவிடும் என்ற நம்பிக்கை வந்தது. 23 பந்துகளில் டிகே அரைசதம் அடித்தார்.

லாம்ரோர் 19 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார். அடுத்துவந்த ராவத்துடன் சேர்ந்து தினேஷ் கார்த்திக் வெளுத்துவாங்கினார். அனுஜ் ராவத்துடன் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக் 83 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தவரை ஆர்சிபி ரசிகர்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால் அவர் வெளியேறியபின், ரசிகர்களும் கலையத் தொடங்கினர். தினேஷ் கார்த்திக் கடைசிவரை போராடியும், ஆர்சிபி 25 ரன்களில் தோற்றது.

https://www.bbc.com/tamil/articles/cj5l2j16y69o

ipl-pt-15-04.jpg

Link to comment
Share on other sites

  • Replies 230
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

கொல்கத்தாவிடம் இருந்து 'நம்பமுடியாத' வகையில் வெற்றியைப் பறித்த பட்லர்

பட்லர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

14-ஆவது ஓவர்வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று வர்ணனையாளர்களும், ரசிகர்களும் நம்பி கருத்துக்களைத் தெரிவித்தனர். கணினி கணிப்புகளும் 0.30 சதவீதம் மட்டுமே ராஜஸ்தான் வெற்றிக்கு வாய்ப்பு இருப்பதாக கணித்தது.

ஆனால், கடைசி 6 ஓவர்களில் தனிஒருவனாக இருந்து சாதித்த ஜோஸ் பட்லர் சதம் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகமும், வீரர்களுமே ஒரு கட்டத்தில் தோல்வியை ஏற்கும் மனநிலைக்குச் சென்றிருப்பார்கள். அத்தகைய சூழலில் இருந்து, கடினமான வெற்றியை பட்லர் சாதித்துக் காட்டினார்.

கடைசி 6 ஓவர்கள் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், வெற்றி தங்களின் கரங்களை விட்டு மெல்ல மெல்ல நழுவுகிறது என்பதை அறியாமல் கொல்கத்தா அணியினர் திகைத்துபோய் பந்துவீசியதைக் காண முடிந்தது. அணி நிர்வாகத்திடம் இருந்து அவ்வப்போது, அறிவுரைகள் வந்து கொண்டிருந்தன. ஆயினும் தோல்வியைத் தடுக்க முடியவில்லை.

புள்ளிப்பட்டியலில் முதலிரு இடங்களில் இருக்கும் அணிகள் மோதிய ஆட்டம் என்பதால் இரு அணி வீரர்களுமே அதிக நுட்பங்களை, உத்திகளை போட்டியில் கையாண்டனர். எந்த பேட்டருக்கு யாரை பந்துவீசச் செய்வது, யாரை எப்படி வீழ்த்துவது, திட்டங்களை எப்படி முறியடிப்பது என ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் ஆட்டம் அமைந்திருந்தது.

 
ஐபிஎல் - கொல்கத்தா - ராஜஸ்தான்

பட மூலாதாரம்,SPORTZPICS

முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் சேர்த்தது. 224 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 போட்டிகளில் 6 வெற்றி, ஒரு தோல்வி என 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், நிகர ரன்ரேட்டை பொருத்தவரை பெரிதாக முன்னேற்றமில்லாமல் 0.677 என்ற அளவிலேயே 3வது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே(0.726) அணியை விட குறைவாக இருக்கிறது. அடுத்துவரும் ஆட்டங்களில் ராஜஸ்தான் அணி மிகப்பெரிய வித்தியாசத்தில் வென்றால்தான் நிகர ரன்ரேட்டை உயர்த்த முடியும்.

அதேசமயம், கொல்கத்தா அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2தோல்விகளுடன் 8 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. ஆனால், நிகர ரன்ரேட்டைப் பொருத்தவரை, 1.399 என்று அனைத்து அணிகளையும் விட வலுவாக இருக்கிறது அந்த அணிக்கு பலவகையிலும் சாதகமாக அமையும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜாஸ் பட்லர் 107 நாட்அவுட்(60 பந்துகள்,6 சிக்ஸர், 9பவுண்டரி) தவிர வேறு எந்த பேட்டரும் பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை. ரியான் பராக்(34), ரோவ்மென் பாவெல்(26) ஆகியோர் மட்டும் சிறிய கேமியோ ஆடினர். மற்றவகையில் அனைத்து பேட்டர்களும் ஏமாற்றினர்.

 
ஐபிஎல் - கொல்கத்தா - ராஜஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

‘ரியல் இம்பாக்ட் பிளேயர்’ ஜாஸ் பட்லர்

தொடக்க ஆட்டக்காரராக, இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கிய ஜாஸ் பட்லர், தனது ஆட்டத்தின் மூலம் “பெரிய இம்பாக்ட்டை” நிகழ்த்திவிட்டார். சதம் அடித்தபோதுகூட கொண்டாடாத பட்லர் அணியை கடைசிப்பந்தில் வென்று கொடுத்தபின்புதான் தனது ஹெல்மெட்டையும், பேட்டையும் தூக்கி எறிந்து வெற்றியைக் கொண்டாடினார். ராஜஸ்தான் அணிக்கு சாத்தியமில்லாத வெற்றியை பெற்றுக் கொடுத்த ஜாஸ் பட்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஜாஸ் பட்லர் இந்த ஐபிஎல் சீசனில் அடித்த 2ஆவது சதமாகும். இதற்கு முன் ஆர்சிபி அணிக்கு எதிராக கோலி சதத்துக்குப் பதிலடியாக பட்லர் சதம் அடித்திருந்தார். ஐபிஎல் வரலாற்றில் அதிகசதம் அடித்த பேட்டர்களில் 7 சதங்களுடன் பட்லர் 2-ஆவது இடத்தில் இருக்கிறார்.

அதேபோல சேஸிங்கில் அதிக சதங்களை அடித்தவர்கள் வரிசையில் கோலிக்கு அடுத்ததாக பட்லர் 3 சதங்களுடன் உள்ளார். டி20 சதங்களைப் பொருத்தவரை அதிகமான சதங்களை அடித்த இங்கிலாந்து பேட்டர் என்ற பெருமையையும் பட்லர் பெற்றார். இந்த 8 சதங்களுமே பட்லர் கடந்த 3 ஆண்டுகளுக்குள் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி 6 ஓவர்களில் ஜாஸ் பட்லர் அதிரடியாக பேட் செய்தார். அவரின் கண்களுக்கு வெற்றியைத் தவிர வேறு ஏதும் தெரியவில்லை என்றே கூற வேண்டும். பட்லர் கடைசியாக சந்தித்த 27 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உள்பட 65 ரன்கள் சேர்த்து 240.74 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்தார். ஆனால் 7ஆவது ஓவர் முதல் 14-ஆவது ஓவர்வரை பட்லர் ஆமை வேகத்தில் 21 பந்துகளில் ஒரு பவுண்டரி உள்பட 22ரன்கள் மட்டுமே சேர்த்த்திருந்தார்.

 
ஐபிஎல் - கொல்கத்தா - ராஜஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

‘நம்பமுடியாத வெற்றி’

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்ஸன் கூறுகையில் “ இந்த வெற்றியால் பெருமகிழ்ச்சி. நம்பமுடியவில்லை. 6 விக்கெட்டுகள் சென்றபின் சிறிது நம்பிக்கையற்று இருந்தோம். ஆனால் பாவெல் களமிறங்கி சிக்ஸர்கள் விளாசியபின் நம்பிக்கை ஏற்பட்டது, போட்டி கையைவிட்டுச் செல்லவில்லை என்று எண்ணினோம். தோல்வியிலிருந்து மீண்டு வந்து வெற்றி பெற்று அழகான நிகழ்வு, இதற்கு அதிர்ஷ்டமும் தேவை. நரைன், வருண் இருவருமே அற்புதமாக பந்துவீசி நடுப்பகுதி ஓவர்களில் எங்கள் ரன்ரேட்டை இறுக்கிப் பிடித்தனர். இந்த விக்கெட் இருவருக்குமே அருமையாக ஒத்துழைத்தது.”

“கடந்த 7 ஆண்டுகளாக ஜாஸ் பட்லர் எங்கள் அணிக்காக அற்புதமாக பேட் செய்து வருகிறார். அவரின் பேட்டிங் நிலைத்துவிட்டால் கடைசி 20 ஓவர்கள்வரை நின்றுவிளையாடுவார் என டக்அவுட்டில் பேசிக்கொள்வோம். பட்லரின் 20வது ஓவர் பேட்டிங், ரன் எடுக்காத அவரின் புத்திசாலித்தனம், யாராலும் அவரை தோற்கடிக்க முடியாது என்பதை வெளிப்படுத்தியது” எனத் தெரிவித்தார்.

 
ஐபிஎல் - கொல்கத்தா - ராஜஸ்தான்

பட மூலாதாரம்,SPORTZPICS

ராஜஸ்தான் செய்த சாதனை

6 விக்கெட்டுகளை இழந்தநிலையில், கடைசி 6 ஓவர்களில் மட்டும் ராஜஸ்தான் அணி 103 ரன்களைச் சேர்த்துள்ளது. 6-வது விக்கெட்டை இழந்தபின், 100க்கும் மேற்பட்ட ரன்களை சேஸிங் செய்த அணி என்ற பெருமையை ராஜஸ்தான் ராயல்ஸ் பெற்றது.

ராஜஸ்தான் அணி 15-வது ஓவரை பேட் செய்ய எதிர்கொண்டபோது வெற்றிக்கு 96 ரன்கள் தேவைப்பட்டது. 36 பந்துகளில் 96 ரன்கள் என்பது சாத்தியமில்லாதது. ஆனால் கடைசி 6 ஓவர்களில் இதுபோன்ற மிகப்பெரிய ஸ்கோரை சேஸிங் செய்த முதல் அணி என்ற பெயரை ராஜஸ்தான் ராயல்ஸ் பெற்றது.

ராஜஸ்தான் அணி 14.1 ஓவர்களின்போது 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் சேர்த்திருந்தது. கணினியின் வெற்றிக் கணிப்பின்படி, ராஜஸ்தான் அணி வெல்வதற்கு 0.32 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தது. ஆனால், அதன்பின் கூடுதலாக 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 96 ரன்களை சேஸிங் செய்தது ராஜஸ்தான் அணி.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும் சரி, ஐபிஎல் தொடரிலும் சரி ராஜஸ்தான் அணி சேஸிங் செய்த 224 ரன்கள்தான் அதிகபட்ச சேஸிங்காகும்.

 
ஐபிஎல் - கொல்கத்தா - ராஜஸ்தான்

பட மூலாதாரம்,SPORTZPICS

கடைசி 6 ஓவர்களில் நடந்தது என்ன?

ராஜஸ்தான் அணி வெற்றிக்கு கடைசி 36 பந்துகளில் 96 ரன்கள் தேவைப்பட்டது. பட்லர் 42 ரன்களுடனும், பாவெல்2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வருண் வீசிய 15வது ஓவரில் பட்லர் 4 பவுண்டரிகளை விளாசி 17 ரன்கள் சேர்த்துதனது அரைசதத்தை நிறைவு செய்தார்.

கடைசி 5 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 79 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை ஆந்த்ரே ரஸல் வீசினார். ரஸல் ஓவரில் பாவெல் ஒரு சிக்ஸரும், பட்லர் ஒரு சிக்ஸரும் விளாசி 17 ரன்கள் சேர்த்து பதற்றத்தைத் தணித்தனர்.

கடைசி 4 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 62 ரன்கள் தேவை. நரைன் வீசிய 17-வது ஓவரை பயன்படுத்திய பாவெல் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசி, 4வது பந்தில் கால்காப்பில் வாங்கி 26 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 16 ரன்கள் மட்டுமே கிடைத்தது. பாவெல் சென்றபின் ராஜஸ்தான் அணியில் பெரிதாக பேட்டர்கள் யாரும் இல்லை என்பதால், பட்லரையும் தூக்கிவிட்டால் ராஜஸ்தான் தோல்வி உறுதி என்று வர்ணனையாளர்கள் தெரிவித்தனர்.

கடைசி 18 பந்துகளில் ராஜஸ்தான் வெற்றிக்கு 46 ரன்கள் தேவை. அடுத்த 3 ஓவர்களையுமே பட்லர் தனி ஒருவனாக இருந்து களமாடி, கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை துவம்சம் செய்தார். கடைசி 3 ஓவர்களில் ஒரு பந்தைக் கூட ஸ்ட்ரைக்கில் ஆவேஷ் கானுக்கு பட்லர் வழங்கவில்லை. 2 ரன்கள், கடைசிப்பந்தில் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை தனது பக்கவே பட்லர் வைத்திருந்து பேட் செய்தார் .

 
ஐபிஎல் - கொல்கத்தா - ராஜஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மிட்ஷெல் ஸ்டார்க் வீசிய 18-வது ஓவரில் பட்லர் ஒரு சிக்ஸர், பவுண்டரியும் அடித்தார், அந்த ஓவரில் வைடில் பைஸ் 5 ரன்கள் என 18 ரன்கள் ராஜஸ்தானுக்குக் கிடைத்தது. ஆட்டத்திலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.இந்த ஓவரின் கடைசிப்பந்தில் ஒரு ரன் எடுத்து பட்லர் ஸ்ட்ரைக்கை தக்கவைத்தார்.

கடைசி 12 பந்துகளில் ராஜஸ்தான் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்சித் ராணா வீசிய 19-வது ஓவரில் பட்லர் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 19 ரன்கள் விளாசி கடைசிப்பந்தில் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை தக்கவைத்து அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார்.

கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன்கள் தேவை. வருண் சக்ரவர்த்தி கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் லாங்-ஆன் திசையில் சிக்ஸரை விளாசி பட்லர் அதிர்ச்சி அளித்தார். அடுத்த 3 பந்துகளும் ரன் சேர்க்க வாய்ப்புக் கிடைத்தும் பட்லர் ஓடவில்லை, ஒரு ரன் எடுத்தால் ஆவேஷ் கான் ஸ்ட்ரைக்கில் வருவார், அவரை எளிதாக ஆட்டமிழக்கச் செய்துவிடுவார்கள் என்பதால் 3 பந்துகளையும் பட்லர் டாட் பந்துகளாக கழித்தார். 4வது பந்தில் லாங் ஆப் திசையில் தட்டிவிட்டு 2 ரன்களை பட்லர் சேர்த்தார். ஸ்கோர் சமநிலைக்கு வந்ததையடுத்து, ராஜஸ்தான் தோல்வியிலிருந்து தப்பியது. ஆனால், கடைசிப்பந்தில் ரன் அடிக்காவிட்டால் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றுவிடும் என்பதால் ரசிகர்களும், வீரர்களும் பதற்றத்தில் இருந்தனர்.

வருண் வீசிய கடைசிப்பந்தை லெக் திசையில் தட்டிவிட்டு பட்லர் ஒரு ரன் எடுக்க ராஜஸ்தான் அணி ‘சாத்தியமில்லாத’ வெற்றியை பெற்றது. சதம் அடித்தபோதுகூட தனது பேட்டை உயர்த்தி பட்லர் கொண்டாடவில்லை, ஆனால், ராஜஸ்தான் வென்றவுடன், தனது ஹெல்மெட்டையும், பேட்டையும் தூக்கி எறிந்து பட்லர் வெற்றியைக் கொண்டாடினார்.

 
ஐபிஎல் - கொல்கத்தா - ராஜஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நரைன் அடித்த முதல் சதம் வீணாகியது

கொல்கத்தா அணி 223 ரன்கள் அடித்ததில் பெரும்பகுதி காரணம் சுனில் நரைன்தான். டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 80 ரன்கள்வரை சேர்த்திருந்த நரைன் முதல்முறையாக சதத்தைபதிவு செய்து 109 ரன்களில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணியிலும் சுனில் நரைனைத் தவிர வேறு எந்த பேட்டர்களும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை.

கொல்கத்தா அணியில் இதுவரை 2 பேட்டர்கள் மட்டுமே சதம் அடித்திருந்தனர். முதலாவது மெக்கலம்(158), 2வதாக வெங்கேடஷ் ஐயர்(104), 3வதாக தற்போது நரைன்(109) சதம் அடித்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் சதமும் அடித்து, பல விக்கெட்டுகளை 3 வீரர்கள் மட்டுமே நிகழ்த்தியுள்ளனர். கிறிஸ் கெயில் இருமுறையும், ஷேன் வாட்சன் ஒருமுறையும் நிகழ்த்தினர், 3வது வீரராத நரைன் சதமும் அடித்து, 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

ஐபிஎல் வரலாற்றிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வீரரும், சதம் அடித்த வீரரும் என்ற ஒருசேரப் பெருமை பெற்றவர் சுனில் நரைன் மட்டும்தான். வேறு எந்த ஆல்ரவுண்டரும் சதம் அடித்திருந்தால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை, 5 விக்கெட்டுகளை எடுத்தவர்கள் சதம் அடித்தது இல்லை. இந்த இரு அம்சங்களை நிகழ்த்தியவர் நரைன் மட்டும்தான்.

2வது விக்கெட்டுக்கு ரகுவன்ஷியுடன் சேர்ந்து நரைன் 85 ரன்கள் சேர்த்ததுதான் பெரிய பார்ட்னர்ஷிப்பாகும். ரகுவன்ஷி(30) ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக பேட் செய்த நரைன் 29 பந்துகளில் அரைசதம் அடித்து, அடுத்த 20 பந்துகளில் அடுத்த 50 ரன்கள் சேர்த்து 49 பந்துகளில் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். நரைன் தனது ரன் கணக்கில் 6 சிக்ஸர்கள், 9பவுண்டரிகளை விளாசினார்.

 
ஐபிஎல் - கொல்கத்தா - ராஜஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சஹல், அஸ்வினை பந்துகளைப் பறக்க விட்ட நரைன்

நரைன் தனது 109 ரன்களில் 67 ரன்கள் சஹல், அஸ்வின் ஓவர்களில் அடித்ததாகும்.

அஸ்வின்,சஹல் ஓவரை வெளுத்து வாங்கிய நரைன், சிக்ஸர், பவுண்டரி என தெறிக்கவிட்டார். அஸ்வின் வீசிய ஓவரில் 17 பந்துகளைச் சந்தித்த நரைன் 34 ரன்களையும், சஹல் வீசிய ஓவரில் 11 பந்துகளில் 33 ரன்களையும் விளாசி, இருவரையும் ஓடவிட்டார். நரைன் கடைசியாக தான் சந்தித்த 14 பந்துகளில் மட்டும் 35 ரன்கள் சேர்த்தார். அஸ்வின், சஹல் இருவரும் ஓவருக்கு 12 ரன்கள் வீதம் வாரி வழங்கினர். அஸ்வினைப் பொருத்தவரை இந்த சீசன் அவருக்கு தொடக்கம் முதலே மோசமாக இருந்துவருகிறது.

மற்றவகையில் கொல்கத்தா அணியில் பேட்டர்கள் அதிகம் இருந்தும் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கேப்டன் ஸ்ரேயாஸ்(11), ரஸல்(13), வெங்கடேஷ்(8), பில் சல்ட்(10) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இவர்களும் கேமியோ ஆடி இருந்தால் ஸ்கோர் 250 ரன்களைக் கடந்திருக்கும். ரிங்கு சிங் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 9 பந்துகளில் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 
ஐபிஎல் - கொல்கத்தா - ராஜஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொல்கத்தா கோட்டைவிட்டது எங்கே?

கொல்கத்தா அணியின் தொடக்கத்தில் இருந்தே நெருக்கடி கொடுத்து பந்துவீசியதால் ராஜஸ்தான் அணி சீராக விக்கெட்டுகளை இழந்தது. ஜெய்ஸ்வால்(19), சாம்ஸன்(12), ஜூரைல்(2), அஸ்வின(8), பராக்34) என சீராக விக்கெட்டுகளை இழந்தது. அதிலும் 97 ரன்கள்வரை 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ராஜஸ்தான் அணி, அடுத்த 24 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. நரைன், வருண் இருவரும் நடுப்பகுதி ஓவர்களில் ராஜஸ்தான் ரன்ரேட்டை இறுக்கிப் பிடித்து, விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர். இதனால் வெற்றி கொல்கத்தா பக்கம் என்றுதான் அனைவரும் நம்பினர்.

ஆனால், 15வது ஓவருக்குப்பின் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சு படுமோசமாக மாறியது. குறிப்பாக 15வது ஓவரில் இருந்து ராஜஸ்தான் அணி சராசரியாக 17 ரன்களுக்குள் குறைவில்லாமல் சேர்த்தது, அந்தஅளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு மோசமாக இருந்தது.

தொடக்கத்தில் சிறப்பாக பந்துவீசிய நரைன், வருண் கடைசி ஸ்பெல்லில் பவுண்டரி, சிஸ்கர் வழங்கினார். மிட்ஷெல் ஸ்டார் கடைசி ஓவரில் பைஸ் உள்பட 18 ரன்கள், ராணவின் கடைசி ஓவர் என கொல்கத்தாவின் பதற்றத்தை பட்லர் பயன்படுத்தினார்.

https://www.bbc.com/tamil/articles/c4n1zvgd4vko

ipl-pt-16-04.jpg

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி?

குஜராத் - டெல்லி ஐபிஎல்

பட மூலாதாரம்,SPORTZPICS

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது.

2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும்.

ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.

 
குஜராத் - டெல்லி ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும்.

அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர்.

அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

 
குஜராத் - டெல்லி ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான்.

குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 
குஜராத் - டெல்லி ஐபிஎல்

பட மூலாதாரம்,SPORTZPICS

ரிஷப் பந்த் கூறியது என்ன?

டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார்

குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது.

குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.

 
குஜராத் - டெல்லி ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர்.

ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர்.

அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது.

முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.

 
குஜராத்

பட மூலாதாரம்,SPORTZPICS

குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா?

ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர்.

அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது.

ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார்.

தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார்.

குஜராத் - டெல்லி ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.”

“சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo

ipl-pt-17-04.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுனில் ந‌ர‌ன் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகிறார்🙏🥰.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சன்ரைசர்ஸ் அணி ப‌ல‌ ஜ‌பிஎல்ல‌ சுத‌ப்பின‌து.................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்.................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு ஒரு விளையாட்டில் விளையாட‌ வாய்ப்பு கிடைச்ச‌து அதுக்கு பிற‌க்கு கூப்பில‌ உக்க‌ரா வைச்சிட்டின‌ம்...................ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ஒரு நாள் தொட‌ர் ரெஸ் விளையாட்டி நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ இள‌ம் வீர‌ர்🙏🥰....................................

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது

Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM

image

(நெவில் அன்தனி)

மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது.

போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது.

எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது.

இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர்.

ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார்.

திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது.

முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.)

எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.)

இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது.

ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.

வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார்.

அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார்.

அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.)

மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார்.

எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/181411

ipl-pt-18-04.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள்
சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள்

ஐபிஎல் 2024: CSK vs LSG

பட மூலாதாரம்,SPORTZPICS

2 மணி நேரங்களுக்கு முன்னர்

வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது.

சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது.

ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது.

லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர்.

லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.

 
ஐபிஎல் 2024: CSK vs LSG

பட மூலாதாரம்,SPORTZPICS

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும்.

அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது.

லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது.

இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது.

குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும்.

மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

 

பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக்

ஐபிஎல் 2024: CSK vs LSG

பட மூலாதாரம்,SPORTZPICS

இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர்.

ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது.

கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார்.

தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார்.

ஐபிஎல் 2024: CSK vs LSG

பட மூலாதாரம்,SPORTZPICS

பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது.

ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.

நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை.

முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

கட்டுக்கோப்பான பந்துவீச்சு

ஐபிஎல் 2024: CSK vs LSG

பட மூலாதாரம்,SPORTZPICS

லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர்.

நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர்.

இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர்.

இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர்.

நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.

 

ஹோம் ஓர்க் செய்ததன் பலன்

ஐபிஎல் 2024: CSK vs LSG

பட மூலாதாரம்,SPORTZPICS

லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம்.

எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது.

என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர்.

குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.

 

சிஎஸ்கே சறுக்கியது எங்கே?

ஐபிஎல் 2024: CSK vs LSG

பட மூலாதாரம்,SPORTZPICS

சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள்.

ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது.

புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது.

கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு.

பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர்.

ஐபிஎல் 2024: CSK vs LSG

பட மூலாதாரம்,SPORTZPICS

ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை.

டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர்.

நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது.

ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை.

ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.

 

பல் இல்லாத பந்துவீச்சு

ஐபிஎல் 2024: CSK vs LSG

பட மூலாதாரம்,SPORTZPICS

சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம்.

சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல.

அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி.

அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஐபிஎல் 2024: CSK vs LSG

பட மூலாதாரம்,SPORTZPICS

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும்.

இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார்.

தோனியின் 101 மீட்டர் சிக்ஸர்

சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது.

இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/cx03y922278o

ipl-pt-19-04.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

438128256_122165660348034101_32219135500

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹைதராபாத் அணி இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ப‌ல‌ சாத‌னைக‌ள் செய்து விட்ட‌து

 

ஜ‌பிஎல்ல‌ அதிக‌ ர‌ன்ஸ் அடிச்ச‌ அணி

 

மூன்று த‌ட‌வை 250 ர‌ன்ஸ் அடிச்சு இருக்கின‌ம்

 

இப்ப‌டியே விளையாடினால் இர‌ண்டாவ‌து முறை கோப்பை தூக்க‌ கூடும்.....................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SRH vs DC: டிராவிஸ் ஹெட் டெல்லிக்கு கொடுத்த 'மரண அடி' - அசுர பேட்டிங்கின் ரகசியம் என்ன?

SRH vs DC: டிராவிஸ் ஹெட் டெல்லிக்கு கொடுத்த 'மரண அடி' - அசுர பேட்டிங்கின் ரகசியம் என்ன?

பட மூலாதாரம்,SPORTZPICS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், விதான்ஷு குமார்
  • பதவி, விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்திக்காக
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

ஹைதராபாத் அணியின் 266 ரன்கள் எடுத்த நிலையில், டெல்லி அணி 199 ரன்களுக்கு சுருண்டது.

டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 89 ரன்கள் எடுத்த நிலையில், டி. நடராஜன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லியின் ரன் வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு, ஹைதராபாத் அணி சனிக்கிழமை இரவு நடைபெற்ற போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்து புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது.

 

பவர் பிளே

SRH vs DC: டிராவிஸ் ஹெட் டெல்லிக்கு கொடுத்த 'மரண அடி' - அசுர பேட்டிங்கின் ரகசியம் என்ன?

பட மூலாதாரம்,SPORTZPICS

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பல சாதனைகளைப் படைத்தது. டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடியின் ஆக்ரோஷமான விளையாட்டால், அந்த அணி 5 ஓவரில் 100 ரன்களை எட்டியது. முதல் பவர்பிளே முடிவதற்குள், ஹைதராபாத் எந்த விக்கெட்டும் இல்லாமல் 125 ரன்கள் எடுத்திருந்தது. எந்தவொரு டி20 போட்டியின் பவர்பிளேவிலும் இதுவே மிகப்பெரிய ஸ்கோர் ஆகும்.

இதற்கு முன் 2017இல் டர்ஹாமுக்கு எதிராக நாட்டிங்ஹாம்ஷயர் 6 ஓவர்களில் 105 ரன்கள் எடுத்திருந்தது. 6 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்தது ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையாக அமைந்தது. இதற்கு முன் 2017இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக பவர்பிளேவில் 105 ரன்கள் எடுத்திருந்தது.

ஆறு ஓவரில் 125 ரன்கள் என்பது எவ்வளவு பெரிய ஸ்கோர் என்பதை இப்படிப் புரிந்து கொள்ளலாம்: அதாவது, ஹைதராபாத் இந்த ரன்ரேட்டில் 20 ஓவர்கள் விளையாடியிருந்தால், இறுதியில் ஸ்கோர் 400 ரன்களை தாண்டியிருக்கும். 50 ஓவர் போட்டியில், இந்த ரன்ரேட் ஸ்கோர் மூலம் 1000 ரன்களுக்கு மேல் கிடைத்திருக்கும்.

 

டிராவிஸ் ஹெட்டின் வேகமான அரைசதம்

SRH vs DC: டிராவிஸ் ஹெட் டெல்லிக்கு கொடுத்த 'மரண அடி' - அசுர பேட்டிங்கின் ரகசியம் என்ன?

பட மூலாதாரம்,SPORTZPICS

பவர் பிளே: ஹைதராபாத் அணியின் அபார பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் மீண்டும் முக்கியப் பங்கு வகித்தார்.

சனிக்கிழமை இரவு, ஐபிஎல்-இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அதிவேக அரைசதம் அடித்தார். வெறும் 16 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், இந்த சீசனில் 16 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த அபிஷேக் சர்மாவின் சாதனையை சமன் செய்தார்.

இந்த சீசனில் அதிவேக சதம் அடிக்கும் பாதையில் டிராவிஸ் ஹெட் பயணித்தார். ஆனால், குல்தீப் யாதவின் ஒரு பந்து அவரது பயணத்தை முடித்துவிட்டது. டிராவிஸ் ஹெட் 32 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸின் மூலம், ஆரஞ்சு கேப் பந்தயத்தில் (Orange Cap) டிராவிஸ் ஹெட் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

விராட் கோலி இந்த சீசனில் அதிக ரன்களை எடுத்துள்ளார், அவருக்கு அடுத்த இடத்தில் டிராவிஸ் ஹெட் உள்ளார்.

டிராவிஸ் ஹெட்டுடன், தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவும் ஜொலித்தார். இருவரும் இணைந்து 38 பந்துகளில் 131 ரன்கள் எடுத்தனர். அபிஷேக் ஷர்மா 12 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 383 ஆக இருந்தது.

 

ஹைதராபாத் அணியின் வேகமான பேட்டிங்கின் ரகசியம்

SRH vs DC: டிராவிஸ் ஹெட் டெல்லிக்கு கொடுத்த 'மரண அடி' - அசுர பேட்டிங்கின் ரகசியம் என்ன?

பட மூலாதாரம்,SPORTZPICS

டிராவிஸ் ஹெட் வேகமாக ரன்களை எடுப்பது மட்டுமல்லாமல், அவரது இருப்பு காரணமாக அணியின் மற்ற பேட்ஸ்மேன்களும் மிகவும் சுதந்திரமாக விளையாடத் தொடங்கியுள்ளனர்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன், அபிஷேக் சர்மாவின் பேட்டிங்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட அபிஷேக், போட்டிக்குப் பிறகு, “கடந்த ஓர் ஆண்டாக அவரைப் பின்பற்றி வருகிறேன், நான் அவருடைய தீவிர ரசிகன். மற்ற பேட்ஸ்மேன்கள் மீது எந்த அழுத்தத்தையும் அவர் அனுமதிக்க மாட்டார். இதனால், நானும் பயனடைகிறேன். அவர் எங்களுடன் விளையாடுவது எங்கள் அணியின் அதிர்ஷ்டம்,” என்றார்.

இந்த சீசனில் ஐபிஎல்-இன் அதிகபட்ச ஸ்கோர்கள் ஐந்தில் மூன்றை ஹைதராபாத் அணி பெற்றுள்ளது. போட்டிக்குப் பிறகு சுனில் கவாஸ்கர், ஹைதராபாத் அணியின் அனுபவமிக்க பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரிடம், பயிற்சி வலையிலும் உங்கள் பேட்ஸ்மேன்கள் இப்படித்தான் பேட் செய்கிறார்களா என்று கேட்டார்.

இந்தக் கேள்விக்கு, புவனேஷ்வர் பதிலளிக்கையில் “பயிற்சி வலையிலும்கூட, பேட்ஸ்மேன்கள் முதல் பந்திலிருந்தே அடிக்கத் தொடங்குகிறார்கள். இது சற்று வினோதமாகத் தெரிகிறது, ஏனெனில் பொதுவாக வலைகளில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதற்கும், தற்காப்பு பேட்டிங்கை பயிற்சி செய்வதற்கும் நேரம் ஒதுக்க விரும்புகிறார்கள். ஆனால் இந்த ஆண்டு அப்படி எதுவும் நடக்கவில்லை,” என்றார்.

 

பவுண்டரி ஷூட்-அவுட்

SRH vs DC: டிராவிஸ் ஹெட் டெல்லிக்கு கொடுத்த 'மரண அடி' - அசுர பேட்டிங்கின் ரகசியம் என்ன?

பட மூலாதாரம்,SPORTZPICS

வெளிப்படையாக ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் ஏற்கெனவே முதல் பந்தில் இருந்து அடித்து ஒவ்வொரு பந்திலும் பவுண்டரி அடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆக்ரோஷமான சிந்தனையின் உதவியுடன் டெல்லிக்கு எதிராக 266 ரன்கள் எடுத்தனர்.

இருப்பினும், ஆரம்பத்தில் வேகமான பேட்டிங்கிற்கு பிறகு, குல்தீப் யாதவ் ஹைதராபாத் அணி ஸ்கோரில் மற்றொரு சாதனையை உருவாக்கவிடாமல் தடுத்து நிறுத்தினார்.

பதிலுக்கு பேட்டிங் செய்த டெல்லி அணியும் வலுவாக ஆரம்பித்தது. அந்த அணி, முதல் பத்து ஓவர்களில் 130 ரன்களைப் பெற்றது.

இளம் பேட்ஸ்மேன்களான ஃப்ரேசர் மெக்குர்க் மற்றும் அபிஷேக் போரல் ஆகியோர் தொடர்ந்து பவுண்டரிகள் அடித்து டெல்லி அணியைக் காப்பாற்றினர்.

மெக்குர்க் மிக எளிதாக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடித்தார். மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயன் பிஷப், "இது இரு அணிகளுக்கு இடையிலான பவுண்டரி-ஷூட் அவுட்" என்று கூறினார்.

 

ஹெல்மெட் அணிந்த ‘பால் பாய்ஸ்'

SRH vs DC: டிராவிஸ் ஹெட் டெல்லிக்கு கொடுத்த 'மரண அடி' - அசுர பேட்டிங்கின் ரகசியம் என்ன?

பட மூலாதாரம்,SPORTZPICS

காலப்போக்கில் கிரிக்கெட் ஆட்டம் எப்படி மாறி வருகிறது என்பதை போட்டிகளில் ஹெல்மெட் பயன்படுத்துவதன் மூலமும் சொல்லலாம்.

நல்ல தரமான ஹெல்மெட்டுகள் சந்தைக்கு வந்தபோது, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் அவற்றை முதலில் பயன்படுத்தத் தொடங்கினர். பின்னர், கேட்சுகளை எடுக்க பேட்ஸ்மேனுக்கு மிக அருகில் நிற்கும் நெருக்கமான ஃபீல்டர்கள் அணிந்தனர்.

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட் கீப்பர்கள் விக்கெட்டுக்கு அருகில் நிற்க ஆரம்பித்தபோது, அவர்கள் ஹெல்மெட்டை அணியத் தொடங்கினர். டி-20 கிரிக்கெட்டில், பேட்ஸ்மேன்களின் பலமான அடிகளில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள நடுவர்களும் ஹெல்மெட் அணிவார்கள். இப்போது எல்லைக்கு வெளியே இருந்து பந்தைப் பிடித்து மைதானத்திற்குத் திருப்பி அனுப்புவதற்குப் பொறுப்பான ‘பால் பாய்ஸ்'-கூட (Ball boys) ஹெல்மெட் அணிய வேண்டியிருந்தது.

பால் பாய்ஸ்கூட மைதானத்தில் ஹெல்மெட் அணிவது இதுவே முதல்முறையாக ஒரு போட்டியில் நடந்திருக்கலாம். கருத்து தெரிவித்த முரளி கார்த்திக் இதைச் சுட்டிக்காட்டிய போது, பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பது முதல் பொறுப்பு என்பதால் இது சரியான நடவடிக்கை என சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.

 

நடராஜனை உலகக்கோப்பை அணியில் காண முடியுமா?

SRH vs DC: டிராவிஸ் ஹெட் டெல்லிக்கு கொடுத்த 'மரண அடி' - அசுர பேட்டிங்கின் ரகசியம் என்ன?

பட மூலாதாரம்,SPORTZPICS

முதல் பத்து ஓவர்களில் டெல்லி சிறப்பாக பேட்டிங் செய்தாலும் பின்னர் பேட் கம்மின்ஸ் மற்றும் டி.நடராஜன் ஆகியோர் அபாரமாக பந்துவீசி ஹைதராபாத் அணியின் நிலையை பலப்படுத்தினர்.

நடராஜன் 4 ஓவர்களில் 19 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

புவனேஷ்வர் குமார் கூறுகையில், “அவர் மிகவும் கடினமாக உழைக்கும் அமைதியான வீரர். பல நேரங்களில் யாரும் அவரைக் கவனிக்கவில்லை, அவர் போட்டியில் அற்புதங்களைச் செய்கிறார்” என்றார்.

அவரைப் பாராட்டிய சுனில் கவாஸ்கர், “இப்படியே தொடர்ந்து பந்து வீசினால், ஐபிஎல்லுக்கு பிறகு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவர் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார் மற்றும் டி20 உலகக் கோப்பையில் அணிக்கு ஆயுதமாக இருக்க முடியும்," என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cld0nwyrwgvo

ipl-pt-20-04.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

RCBvsKKR : ஒரு ரன்னில் பரிதாப தோல்வி… ஆபத்தில் ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் கனவு!

Apr 21, 2024 20:53PM IST ஷேர் செய்ய : 
rcb-vs-kkr.webp

கொல்கத்தா அணிக்கு எதிராக இன்று (ஏப்ரல் 21) நடந்தப்போட்டியில் கடைசி பந்தில்  1 ரன் வித்யாசத்தில் தோல்வியை தழுவியது பெங்களூரு அணி.

ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியும், பெங்களூர் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் காடன் மைதானத்தில் இன்று மதியம் மோதின.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தனர்.

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர் 50 ரன்களும், தொடக்க வீரர் பிலிப் சால்ட் 49 ரன்களும் எடுத்தனர்.

Shreyas Iyer smokes his fourth half-century versus RCB: Stats

தொடர்ந்து 223 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களுரூ அணியில் தொடக்க வீரர்களான கோலியும்(18), டூ பிளெஸ்ஸியும்(7) அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

எனினும் அதன் பின்னர்3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வில் ஜாக்ஸ், ரஜத் பட்டிதார் ஜோடி கொல்கத்தா அணியின் பவுலர்களை சிதறவிட்டனர்.

இருவரம் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த நிலையில் பெங்களூரு அணியும் 11 ஓவரில் 137 ரன்கள் குவித்திருந்தது.

இதனால் வெற்றி பெங்களூரு பக்கம் திரும்பிய நிலையில், 12வது ஓவரை வீச வந்த ரஸ்ஸல் ஒரே ஓவரில் வில் ஜாக்ஸ்(55) மற்றும் பட்டிதாரை(54) வெளியேற்றினார்.

Kkr Vs Rcb Ipl Highlights: Kolkata Knight Riders Vs Royal Challengers Bangalore Match Scorecard Updates - Amar Ujala Hindi News Live - Kkr Vs Rcb Highlights :केकेआर ने रोमांचक मुकाबले में आरसीबी

ரஸ்ஸலை தொடர்ந்து 13வது ஓவரை வீசிய சுனில் நரைனும் தன் பங்கிற்கு களமிறங்கிய கேமரூன் க்ரீன் மற்றும் லாம்ரோர் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

இதனால் 155 – 6 விக்கெட்டுகள் என பெங்களூரு அணி தடுமாற மீண்டும்  கொல்கத்தா அணி கை ஓங்கியது.

அதன்பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் – பிரபு தேசாயுடன் இணைந்து அதிரடியாக ஆட  மீண்டும் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது.

இருவரும் மேற்கொண்டு 33 ரன்கள் குவித்த நிலையில், பிரபுதேசாய் (24) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும் வெற்றி பெங்களூரு அணிக்கு தான் என்று நினைத்த நிலையில், 3 பவுண்டரி, 1 சிக்சருடன் விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் 19-வது ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் 4 பந்தில் மூன்று சிக்சர்களை பறக்கவிட்டு பெங்களூரு ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்தார் கர்ண் சர்மா.

எனினும் அடுத்த பந்தில் அவர் ஆட்டமிழக்க, கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால் அதில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றியை ருசித்தது.

Image

இதன் மூலம் கொல்கத்தா அணி இந்த தொடரில் 10 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் மீண்டும் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினயது. அதே வேளையில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 7ல் தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ளது பெங்களூரு அணி.

மீதம் இன்னும் 6 போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் பெங்களூரு அணி நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதே கடினமாகியுள்ளது. இதனால் இந்த முறையும் ஈ சாலே கப் நமதில்லை என்று பெங்களூரு அணி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
 

 

https://minnambalam.com/sports/rcbvskkr-bengalurus-play-off-dream-in-jeopardy/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்சிபி 7-வது தோல்வி: கடைசி வரை போராடி ஒரு ரன்னில் தோல்வி - கோலி அவுட்டானது நோபாலா? பிளேஆஃப் வாய்ப்பு உள்ளதா?

ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்ற ஆர்சிபி

பட மூலாதாரம்,SPORTZPICS

21 ஏப்ரல் 2024

நடப்பு ஐ.பி.எல் சீசனில் ஆர்சிபி அணி இன்றைய ஆட்டத்தில் வீரர்களின் ஜெர்சி நிறத்தை மாற்றினாலும் போட்டியின் முடிவு மாறவில்லை. தொடர்ந்து ஆறாவது போட்டியாக அந்த அணிக்கு தோல்வில்வியே பரிசாக கிடைத்திருக்கிறது.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கின் 36வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது. கடைசிப் பந்து வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே வரவழைத்து விட்டது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் 50 ரன்களை சேர்த்தார். ஃபில் சால்ட் 14 பந்துகளில் 48 ரன்கள் விளாசினார். 223 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஐபிஎல் வரலாற்றில் ஒருமுறைகூட கோப்பையை வெல்லாத பெங்களூரு அணி இந்த முறையாவது கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்த ஆர்சிபி ரசிகர்கள் இந்த தோல்வியால் பெரும் சோகத்தில் உள்ளனர்.

ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்ற ஆர்சிபி

பட மூலாதாரம்,SPORTZPICS

படக்குறிப்பு,ஒரே ஓவரில் 28 ரன்கள் விளாசிய பில் சால்ட்.

பில் சால்ட் அதிரடி தொடக்கம்

கொல்கத்தா அணியில் பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஆரம்பத்திலேயே தடுமாறிய சுனில் நரைன், ஆர்.சி.பி வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாளின் யார்க்கரை சமாளிக்க முடியாமல் திணறினார்.

15 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து யாஷ் தயாள் பந்தில் ஆட்டமிழந்தார் சுனில் நரைன். அடுத்து வந்த அங்கிரிஸ் ரகுவன்ஷியும் 3 ரன்களை மட்டுமே எடுத்து உடனே வெளியேறியது பெங்களூரு அணிக்கு உற்சாகத்தை அளித்தது.

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிய, மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை ஆடிக் கொண்டிருந்தார் பில் சால்ட். லாக்கி பெர்குசன் வீசிய நான்காவது ஓவரில் 6, 4, 4, 6, 4, 4 என்று 28 ரன்கள் விளாசினார் பில் சால்ட். ஆனால் அடுத்த ஓவரில் அவரும் ஆட்டமிழந்தார்.

வெறும் 14 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர் விளாசி 48 ரன்கள் எடுத்திருந்தார் பில் சால்ட். இதில் தான் எதிர்கொண்ட 14 பந்துகளில் 10 பந்துகளை பவுண்டரிக்கு பறக்க விட்டார்.

பவர்பிளேவுக்கு பின்னரும் கேகேஆர் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் - வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அதிரடியை தொடர்ந்தனர். வெங்கடேஷ் ஐயர் 8 பந்துகளில் 16 ரன்களை எடுத்து ஆட்டமிழந்த நிலையில், ரிங்கு சிங் 16 பந்துகளில் 24 ரன்களை எடுத்து சிறிய கேமியோ ஆடினார்.

ஆட்டம் பெங்களூரு அணிக்கு சாதகமாகச் செல்வதை உணர்ந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்பாக விளையாடினார். 36 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 50 ரன்கள் எடுத்து ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 20ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் கேமரூன் க்ரீன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல் மற்றும் ரமன் தீப் சிங் கடைசியில் இணைந்து ஓரளவு ரன்கள் சேர்த்தனர்.

ரஸ்ஸல் மற்றும் ரமன்தீப் சிங் சேர்ந்து கடைசி கட்டத்தில் அதிரடி காட்டியதால் 20 ஓவர்களில் கேகேஆர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன் குவித்தது.

ரஸ்ஸல் 20 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களையும், ரமன்தீப் சிங் 9 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 24 ரன்களையும் குவித்தனர். இது அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்தது. ஆர்சிபி பந்துவீச்சில் யாஷ் தயாள் மற்றும் கேம்ரூன் கிரீன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 
ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்ற ஆர்சிபி

பட மூலாதாரம்,SPORTZPICS

படக்குறிப்பு,ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 20ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்த கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்.

கொல்கத்தாவின் சிறப்பான திட்டம்

கொல்கத்தா இன்னிங்ஸை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். 14 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த பில் சால்ட் கொடுத்த அதிரடியான தொடக்கம் தந்த பிறகு மிடில் ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயரின் பொறுமையாக ஆடி இன்னிங்சை வலுவாக கட்டமைத்தார். இறுதியாக களமிறங்கிய ரமன்தீப் சிங், அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை 222 ரன்களுக்கு உயர்த்தினார்.

ரமன்தீப் சிங் உள்ளே வந்தபோது கொல்கத்தா அணி 18 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்திருந்தது. 9 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் என 24 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் ரமன்தீப் சிங். ஆண்ட்ரே ரஸல் 20 பந்துகளில் 4 பவுண்டரி விளாசி 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

20 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூரு அணி.

ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்ற ஆர்சிபி

பட மூலாதாரம்,SPORTZPICS

படக்குறிப்பு,பெவிலியன் திரும்புவதற்கு முன்பாக நடுவர்களிடம் கலந்துரையாடும் விராத் கோலி.

விராத் கோலியின் அவுட் குறித்த சர்ச்சை

பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராத் கோலி, டூ பிளெசிஸ் களமிறங்கினர். 7 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என அதிரடியாகத் தொடங்கிய ஹர்ஷித் ராணா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

18 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விடைபெற்றார் விராத் கோலி. ஆனால் அவர் ஆட்டமிழந்தபோது வீசப்பட்ட பந்து நோ பால் என சமூக ஊடகங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன. நடுவர்களின் முடிவுக்கு பெங்களூரு ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அடுத்ததாக 7 ரன்கள் மட்டுமே எடுத்து வருண் சக்கரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார் டூ பிளெசிஸ். ஆர்.சி.பி 35 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, வில் ஜேக்ஸும் ரஜத் பட்டிதரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினர்.

கோலி அவுட்டில் என்ன சர்ச்சை?

அதிக ரன்களை சேஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆர்சிபி அணிக்கு கோலி அதிரடி தொடக்கம் கொடுத்திருந்தார். வெறும் 7 பந்துகளில் 2 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 18 ரன்களை சேர்த்திருந்த அவர் அவுட்டான விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரசிகர்கள் இதுகுறித்து சமூக வலைதளங்களில் தங்களது சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஹர்ஷித் ராணா ஃபுல்டாஸாக வீசிய பந்தை கோலி கிரீசுக்கு வெளியே இறங்கி வந்து ஆட, பந்து அவரது பேட்டில் பட்டு ராணாவிடமே கேட்சாகிப் போனது. உடனே நடுவர் அவுட் கொடுத்துவிட்டாலும் கொல்கத்தா அணி வீரர்கள் கொண்டாடவில்லை. மறுபரிசீலனையில், பந்து நோபாலாக அறிவிக்கப்பட்டு கோலி அவுட் என்ற முடிவு திரும்பப் பெறப்படலாம் என்ற சந்தேகம் இருந்ததே காரணம்.

பந்து கோலியின் இடுப்பு உயரத்திற்கும் மேலே சென்றதால் அது நோபாலா என்று பரிசீலிக்கப்பட்டது. ஹாக்ஐ தொழில்நுட்பம் மூலம் பந்து செல்லும் கோணத்தையும் விராட் கோலி அதனை எதிர்கொண்ட விதத்தையும் நடுவர்கள் ஆய்வு செய்தனர். இடுப்பு உயரத்திற்கு மேலே நோபால் என்ற அறிவிப்பு, வீசப்பட்ட பந்தானது கிரீஸில் பேட்ஸ்மேனுக்கு இடுப்பு உயரத்திற்கு மேலே வந்தால் மட்டுமே பொருந்தும். மாறாக, இந்த விஷயத்தில் கோலி கிரீஸை விட்டு வெளியே இறங்கி வந்து பந்தை எதிர்கொண்டதால், பந்தின் கோணத்தை நடுவர்கள் ஆய்வு செய்ததில், பந்தின் கோணம் தாழ்வாக இருந்ததால், அது பேட்டிங் கிரீசை எட்டுகையில் உயரம் குறைந்துவிடும் என்று ஹாக்ஐ தொழில்நுட்பம் காட்டியது. இதனால் விராட் கோலி அவுட்டை நடுவர் உறுதி செய்தார். அவரோ அதிருப்தியுடன் களத்தை விட்டு வெளியேறினார்.

2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் காலி

இந்த ஜோடி கேகேஆர் அணியின் பலமான சுழற்பந்துவீச்சாளர்களை போட்டு நொறுக்கியது. இரு வீரர்களும் அரைசதத்தை பதிவு செய்தனர். அந்த நிலையில், கேகேஆர் அணி 12வது ஓவரில் ரஸ்ஸலை பந்துவீச அழைத்தது. இது கேகேஆர் அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. நன்றாக செட் ஆகியிருந்த வில் ஜோக்ஸ் மற்றும் கரன் சர்மா ஆகிய இருவரும் அந்த ஓவரிலேயே ஆட்டமிழந்தனர். அதேபோல், நரைன் வீசிய 13வது ஓவரில் கிரீன் மற்றும் லோம்ரோட் இருவரும் ஆட்டமிழக்க ஆர்சிபி தடுமாற தொடங்கியது.

137 ரன்களுக்கு 2 விக்கெட்களை மட்டுமே இழந்திருந்த பெங்களூரு அணி, 18 ரன்கள் இடைவெளியில் அடுத்தடுத்து 4 விக்கெட்களை இழந்து மீண்டும் தடுமாறத் தொடங்கியது.

ஒருபக்கம் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிய, மறுபுறம், இதுவரையிலான ஆட்டங்களில் அதிரடி காட்டி எதிரணிகளை திணறடித்த தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தது ஆர்.சி.பி ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை தந்தது. அவரும் தனது பங்கிற்கு அடுத்தடுத்து சிக்சும் பவுண்டரியுமாக விளாசினார்.

ஒருகட்டத்தில் பெங்களுரு அணி வெற்றிபெற 12 பந்துகளில் 31 ரன்கள் தேவை என்று இருந்தது. ஆட்டத்தை ஆர்.சி.பி. அணிக்கு சாதகமாக முடித்துவைப்பார் என்று அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்த்த தினேஷ் கார்த்திக், கேகேஆர் அணி வீரர் ஆந்த்ரே ரஸ்சல் வீசிய 19வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

 
ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்ற ஆர்சிபி

பட மூலாதாரம்,SPORTZPICS

படக்குறிப்பு,களத்தில் தினேஷ் கார்த்திக் இருந்தது ஆர்சிபி ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலை தந்தது.

பரபரப்பான இறுதி ஓவர்

கடைசி ஓவரில், 6 பந்துகளில் ஆர்.சி.பியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டிரைக்கில் நின்றது கரண் சர்மா. கொல்கத்தாவுக்காக கடைசி ஓவரை வீசினார் மிட்செல் ஸ்டார்க். முதல் பந்தையே சிக்சருக்கு விளாசி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார் கரண். 2வது பந்து டாட் பால். பந்து பேட்டின் நுனியில் உரசியிருந்தாலும் அது தரையைத் தொட்டு கீப்பர் வசம் சென்றதால் கொல்கத்தாவுக்கு கேட்ச் வாய்ப்பு கிடைக்கவில்லை.

3வது பந்தை அவுட் சைட் ஆஃபில் 135 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார் ஸ்டார்க். அதையும் சிக்சருக்கு பறக்கவிட்டார் கரண். 4வது பந்திலும் சிக்ஸர் விளாசினார் கரண். ஈடன் கார்னனில் இருந்த ஆர்.சி.பி ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். வெற்றி கைக்கு எட்டிவிட்டதாக அவர்கள குதூகலித்தனர்.

இப்போது ஆர்.சி.பிக்கு 2 பந்துகளில் 3 ரன் மட்டுமே தேவை. கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை லோ ஃபுல்டாசாக ஸ்டார்க் வீச, அதை கரண் ஓங்கி அடித்தார். ஆனால் அது நேராக ஸ்டார்க்கின் கைகளில் தஞ்சம் புகுந்தது. இதன் மூலம் பெங்களூரு ரசிகர்களின் உற்சாகத்தை நொடிப்பொழுதில் கலைத்துவிட்டார் மிட்செல் ஸ்டார்க்.

கடைசி ஒரு பந்தில் 3 ரன்கள் தேவை. 2 ரன்களை எடுத்தால் ஆட்டம் டிராவாகி சூப்பர் ஓவருக்குச் செல்லும். கடைசி வீரராக ஆடுகளத்திற்கு வந்த ஃபெர்கியூசன், பந்தை அடித்துவிட்டு 2 ரன்கள் ஓட முயற்சிக்க, கொல்கத்தா கீப்பர் ஃபில் சால்ட் டைவ் அடித்து ஸ்டம்புகளை தகர்க்க, ஆர்.சி.பியின் வெற்றியும் கானல் நீராகிப்போனது.

 
ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்ற ஆர்சிபி

பட மூலாதாரம்,SPORTZPICS

படக்குறிப்பு,கொல்கத்தா கீப்பர் ஃபில் சால்டின் அற்புதமான டைவ் பெங்களூரு அணியின் தோல்வியை உறுதி செய்தது.

ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ஆர்.சி.பியின் வரலாற்றில் ஒரு ரன் வித்தியாசத்தில் அந்த அணி தோற்றிருப்பது இதுவே முதல்முறை.

நடப்பு ஐபிஎல் தொடர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கடும் சோதனையாக அமைந்திருக்கிறது. டூ பிளெசிஸ் தலைமையிலான பெங்களூரூ அணி நடப்பு தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே வெற்றிபெற்றது. இதர போட்டிகள் அனைத்திலுமே தோல்வி.

கொல்கத்தாவுடனான ஆட்டத்தையும் சேர்த்து, தொடர்ச்சியாக 6 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலிலும் ஆர்.சி.பி கடைசி இடத்தில் உள்ளது.

ஆர்.சி.பி. அணிக்கு இன்னும் 6 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் அந்த அணி ஒரே ஒரு வெற்றியுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற அடுத்துவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும். அத்துடன், மற்ற அணிகள் மோதும் ஆட்டங்களின் முடிவும், ரன் ரேட்டும் சாதகமாக அமைந்தால் மட்டுமே ஆர்.சி.பி. அணியால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.

https://www.bbc.com/tamil/articles/c254kkwvrkwo

கடைசி ஓவரில் தோற்கும் பஞ்சாப் கிங்ஸ்; மீண்டும் வெற்றியைத் தவறவிட்டது எங்கே?

பஞ்சாப் - குஜராத் - ஐபிஎல்

பட மூலாதாரம்,SPORTZPICS

3 மணி நேரங்களுக்கு முன்னர்

பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த சீசனில் கடைசி ஓவர்வரை வெற்றிக்காகப் போராடித் தோற்பது இது 5-ஆவது முறையாகும். வெற்றிக்காக எதிரணியுடன் போராடி கடைசி வரை இழுத்துவரும் பஞ்சாப் கிங்ஸ் அணியினர், கடைசி நேரத்தில் கோட்டைவிடுவது தொடர்கதையாகி வருகிறது.

முலான்பூரில் நேற்று நடந்த ஆட்டத்திலும் பந்துவீச்சில் செய்த சில தவறுகளால் பஞ்சாப் அணி வெற்றியை தாரை வார்த்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி.

முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 143 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 5 பந்துகள் மீதமிருக்கையில் 7 விக்கெட்டுகளை இழந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகளுடன் குஜராத் அணி 6-வது இடத்தில் இருக்கிறது. இருப்பினும் குஜராத் அணியின் நிகர ரன்ரேட் மைனஸ் 1.055 என்ற அளவில்தான் இருக்கிறது.

தற்போது 8 புள்ளிகளுடன் 3 அணிகள் கடும் போட்டியில் உள்ளன. சிஎஸ்கே, லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்றுள்ளன. இருப்பினும், இதில் சிஎஸ்கே அணியின் நிகரரன்ரேட் 0.529 என உயர்வாக இருப்பதால் 4-ஆவது இடத்தில் இருக்கிறது. லக்னெள அணி ரன்ரேட் 0.123 என்ற அளவில் நேர்மையாக இருக்கிறது. ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் இருந்தாலும், நிகரரன்ரேட் அடிப்படையில் மைனஸில் தொடர்ந்து வருவது பின்னடைவாகும்.

 
பஞ்சாப் - குஜராத் - ஐபிஎல்

பட மூலாதாரம்,SPORTZPICS

பஞ்சாப் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் ஆடி, 2 வெற்றி, 6 தோல்விகளுடன் 4 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் நீடிக்கிறது. இருப்பினும் பஞ்சாப் அணியின் நிகர ரன்ரேட் வியப்புக்குரிய வகையில் மிகக் குறைவாக மைனஸ் 0.292 என்ற அளவில்தான் இருக்கிறது. பஞ்சாப் அணிக்குத் தற்போது 2 வெற்றிகள் தேவை, இரு போட்டிகளில் அடுத்தடுத்து ரன்ரேட்டில் வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் மற்ற அணிகளுக்கு கடும் போட்டியாளராக மாறிவிடும்.

தமிழக வீரர்களின் பங்களிப்பு

குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் சுழற்பந்துவீச்சாளர்கள்தான். ரஷித்கான், நூர் அகமது, தமிழக வீரர் சாய் கிஷோர் ஆகிய 3 பேரும் சேர்ந்து 12 ஓவர்கள் வீசி 78 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணியை சுருட்டினர்.

முலான்பூர் விக்கெட் மந்தமானது. பந்துகள் இங்கு என்னதான் வேகமாக வீசினாலும் பயன் இருக்காது, ஸ்விங் இருக்காது. அதேசமயம், வேகம் குறைவாக பந்துவீசினால் நினைத்த ஸ்விங்கை, சுழற்பந்துவீச்சில் நல்ல டர்னை எதிர்பார்க்க முடியும்.

இதை குஜராத் அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் மூவரும் பயன்படுத்தினர். அதிலும் தமிழக வீரர் சாய் கிஷோர், 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். அதேபோல தமிழக வீரர் சாய் சுதர்சன்(31) பொறுப்பான பேட்டிங், கடைசி நேரத்தில் ரபாடா ஓவரில் ஷாருக்கான் அடித்த சிக்ஸர்கள் ஆட்டத்தை திருப்பிவிட்டன. இந்த தமிழக வீரர்கள் 3 பேரும் குஜராத் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தனர்

குறிப்பாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கடந்த சில போட்டிகளாக ஆபத்பாந்தவனாக வரும் அஷூதோஷ்(3), சஷாங்க் சிங்(9), ஜிதேஷ் சர்மா(13) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாகினார்.

 
பஞ்சாப் - குஜராத் - ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதேபோல ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும்,சக ஆப்கன் வீரர் நூர் அகமது 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

நடுப்பகுதியில் இவர்கள் 3 பேருந்து வீசிய 12 ஓவர்களில் பஞ்சாப் அணியின் ஒட்டுமொத்த ரன்ரேட்டும் இறுகக்கட்டப்பட்டு 142 ரன்களில் சுருட்டப்பட்டது.

ஆனால், 142 ரன்கள் என்பது டிபெண்ட் செய்யக்கூடிய ஸ்கோர் இல்லை. இருப்பினும், இதையும் பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர்கள் டெபெண்ட் செய்ய கடினமாகப் போராடினர். லிவிங்ஸ்டோன் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஹர்சல் படேல் கடைசி நேரத்தில் 3 விக்கெட்டுகளையும் எடுத்து நம்பிக்கையூட்டினர். இவர்களின் போராட்டத்துக்கு பலன் கிடைத்ததுபோல் ஆட்டமும் ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணியின் கரங்களுக்கு மாறியது.

30 பந்துகளில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 42 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது, கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தன. ஹர்சல் படேல் வீசிய 16 ஓவரில் ஓமர்சாய் ஆட்டமிழக்க குஜராத் அணி தடுமாறியது. 18 பந்துகளில் 25 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஆனால், ஹர்பிரித் பிரார் வீசிய 17-வது ஓவரில் திவேட்டியா 2 பவுண்டரிகள் உள்பட 13 ரன்களும், ரபாடா வீசிய 18-வது ஓவரில் ஷாருக்கான் ஒரு சிக்ஸரும், திவேட்டியா 3 பவுண்டரிகளும் அடிக்க ஒட்டுமொத்த ஆட்டமும் பஞ்சாப் கரங்களில் இருந்து குஜராத் அணிக்கு மாறியது. 12 பந்துகளில் குஜராத் அணி வெற்றிக்கு 5 ரன்கள் என்றநிலை ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் பந்துகள் குறைவாகவும், வெற்றிக்காரச் சேர்க்க வேண்டிய ரன்கள் அதிகமாகவும் இருந்தன. ஆனால், 2 ஓவர்களில் அனைத்தும் தலைகீழாக மாறியது.

 
பஞ்சாப் - குஜராத் - ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பஞ்சாப் அணி எங்கு கோட்டைவிட்டது?

15-வது ஓவர்கள் வரை ஆட்டத்தை பஞ்சாப் அணி கட்டுக்கோப்பாக கொண்டு சென்று, குஜராத் அணி பக்கம் சாயாமல் பார்த்துக் கொண்டது. ஹர்பிரித் பிரார், ரபாடா வீசிய இரு ஓவர்கள்தான் ஆட்டத்தைத் திருப்பிவிட்டது. களத்தில் தரமான ஃபினிஷரான ராகுல் திவேட்டியை இருப்பதை உணர்ந்து, அதற்கு ஏற்றார்போல், ஹர்ஸ்தீப் சிங், அல்லது சாம் கரன் பந்துவீசியிருக்கலாம். அடுத்தடுத்து இரு ஓவர்களையும் இருவரும் வீசி இருந்து, கடைசி ஓவரை ரபாடாவிடம் கொடுத்திருக்கலாம்.

ஆனால், சுழற்பந்துவீச்சில் சுமாராகச் செயல்பட்ட ஹர்பிரித் பிராரை பயன்படுத்தியதும், ரபாடாவின் அதிவேகப் பந்துவீச்சும் தோல்விக்கு இட்டுச் சென்றன. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப ரபாடா கடைசி நேரத்தில் பந்துவீசவில்லை.

இந்த ஆட்டத்தில் விக்கெட் வீழ்த்தாத சுழற்பந்துவீச்சாளரும் ஹர்பிரித் பிரார் மட்டும்தான். பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான லிவிங்ஸ்டன் கூட 2 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார், ஆனால், ஸ்பெலிஸிட் சுழற்பந்துவீச்சாளரான ஹர்பிரித் பிரார் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

4 ஓவர்கள் வீசிய பிரார் 35 ரன்களை வாரி வழங்கினார், இதில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தால், குஜராத் அணிக்கு மேலும் அழுத்தம் அதிகமாக ஆட்டம் பஞ்சாப் பக்கம் சாய்ந்திருக்கும்.

 
பஞ்சாப் - குஜராத் - ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றிக்கான வாய்ப்புகள் 15 ஓவர்கள்வரை இருந்தும், கடைசி நேரத்தில் யாரை எவ்வாறு பயன்படுத்துவது, சூழலுக்கு ஏற்ப, களத்தில் இருக்கும் பேட்டர்களைப் பார்த்து எந்த பந்துவீச்சாளரைப் பயன்படுத்துவது எனும் முடிவை சரியாக எடுக்க முடியாமல்தான் பஞ்சாப் அணி தோற்றது.

பேட்டிங்கைப் பொருத்தவரை தொடக்க ஆட்டக்காரர்கள் பிரப்சிம்ரன் சிங்(35), சாம் கரன்(20) இருவரும் 52 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பஞ்சாப் அணி இழந்தது. நடுவரிசை, கீழ்வரிசை பேட்டர்களில் ஒருவர்கூட பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

63 ரன்கள் வரை ஒரு விக்கெட் இழந்திருந்த பஞ்சாப் அணி, அடுத்த 36 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதேபோல கடைசியில் 139 ரன்கள் முதல் 142 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை பஞ்சாப் அணி பறிகொடுத்தது.

பஞ்சாப் அணியில் பேட்டர்கள் இருந்தும் நடுவரிசையில் அஷுதோஷ், சஷாங்சிங் ஜொலிக்காததே ஸ்கோர் பெரியாக உயராததற்கு காரணமாகும். ஜிதேஷ் சர்மா இந்த சீசனில் இதுவரை பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை என்பதால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவது மிகக்கடினமாகிவிட்டது.

பஞ்சாப் அணியின் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவண் காயத்தில் இருந்துமுழுமையாக குணம் அடையாததால், கேப்டன் பொறுப்பையும், தொடக்க ஆட்டக்காரர் நிலையிலும், பந்துவீச்சாளராகவும் இருக்கவேண்டிய அழுத்தத்துக்கு சாம் கரன் தள்ளப்பட்டார்.

கேப்டன் பொறுப்போடு பந்துவீச்சாளர் பணியை கவனிப்பதும் கடினமானது. இதில் ப தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி புதிய பந்தை சந்திப்பது மிகக் கடினமானது, அனைத்தையும் சாம் கரன் தனி ஒருவனாகக் கவனித்து வருகிறார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் நடுவரிசை பேட்டர்கள் ஓரளவுக்கு கை கொடுத்திருந்து, கூடுதலாக 40 ரன்கள் சேர்த்திருந்தால் டிபெண்ட் செய்ய ஏதுவாக இருந்திருக்கும்.

 
பஞ்சாப் - குஜராத் - ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடைசி நேரத் தோல்வி ஏன்?

பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் கூறுகையில் “ நாங்கள் இன்னும் 20 ரன்கள்வரை கூடுதலாக சேர்த்திருக்க வேண்டும். ஆனால் பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டு ஆட்டத்தை இழுத்தோம், எங்கள் வீரர்களின் போராட்ட குணம் அற்புதமாக இருந்தது. மீண்டும் தோல்வியைச் சந்திக்கமாட்டோம் என நினைத்தேன். சாய் கிஷோர் சிறப்பாகப் பந்துவீசினார், இவர்போல தரமான பந்துவீச்சாளர்கள் குஜராத் அணியில் உள்ளனர். டிபெண்ட் செய்யும் அளவுக்கு போதுமான ஸ்கோர் வந்துவிடும் என நினைத்தேன். ஆனால், வரவில்லை. 160 முதல் 165 வரை நாங்கள் சேர்த்திருந்தால், குஜராத் அணி வெற்றியை தடுத்திருப்போம், ஆட்டத்தை கடினமாக மாற்ற இருப்போம். மொத்தமாக நாங்கள் எங்கள் விக்கெட்டை இழந்தது தவறு. பல போட்டிகளில் நாங்கள் ஏன் கடைசி நேரத்தில் தோல்வி அடைகிறோம் என்பது ஆலோசிக்கப்பட வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்தார்.

 

ஃபினிஷர் பணியை கச்சிதமாகச் செய்யும் திவேட்டியா

ராகுல் திவேட்டியா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்ததில் இருந்து பல போட்டிகளில் ஃபினிஷிங் பணி சிறப்பாகச் செய்து கொடுத்துள்ளார். அந்தப்பணி குஜராத் அணிக்கு வந்தபின்பும் தொடர்கிறது. இந்த ஆட்டத்தில் 16 ஓவர்கள்வரை வெற்றி பஞ்சாப் கிங்ஸ் பக்கமே இருந்தது. கணினியின் கணிப்பில் குஜராத் வெற்றி சதவீதம் 80 லிருந்து 50ஆகக் குறைந்தது.

ராகுல் திவேட்டியா களமிறங்கியபின் ஆட்டம் அனைத்தும் தலைகீழாக மாறியது. ஒரு கட்டத்தில் 4 ஓவர்களில் குஜராத் அணி வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன. அதிலும் பஞ்சாப் அணி பந்துவீச்சாளர்கள் 2 விக்கெட்டுகளை வீழ்த்தவே குஜராத் அணி தடுமாறியது.

எந்தப் பந்துவீச்சாளரை குறிவைப்பது என காத்திருந்த திவேட்டியாவுக்கு ஹர்பிரித் ஓவர் கிடைத்தது. அந்த ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்தும், ரபாடா வீசிய 18-வது ஓவரில் திவேட்டியா 3 பவுண்டரிகள், ஷாருக்கான ஒரு சிக்ஸர் அடிக்கவே குஜராத் அணி பெரிய சிக்கலில் இருந்து மீண்டது.

மற்றவகையில் குறைந்த ரன்கள் இலக்கை துரத்தும் பணியில் குஜராத் பேட்டர்களும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. கேப்டன் கில் (35) தமிழக வீரர் சாய் சுதர்சன்(31), திவேட்டியா(36 நாட்அவுட்) இவர்கள் 3 பேரும் அடித்த ஸ்கோர்தான் ஓரளவுக்கு பெரிதானது. மற்ற வகையில் மில்லர்(4), ஓமர்சாய்(13), சஹா(13), ஷாருக்கான்(8), ரஷித் கான்(3) என சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

குஜராத் அணியில் எந்த பேட்டர்களும் 50 ரன்கள்கூட பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. 66 ரன்கள்வரை ஒரு விக்கெட் இழந்திருந்த குஜராத் அணி அடுத்த 31 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது, 103 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தநிலையில் அடுத்த 38 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

https://www.bbc.com/tamil/articles/c1rv3zw1y0do

ipl-pt-21-04.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2024 at 07:06, ஏராளன் said:

கடைசி இடத்தில் ஆர்சிபி; தவறு நடந்தது எங்கே? கேப்டன் கூறுவது என்ன?

ஆர்சிபி -  ஹைதராபாத்

பட மூலாதாரம்,SPORTZPICS

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வீடியோ கேம்ஸிஸ் கிரிக்கெட் பார்த்த, விளையாடிய உணர்வு ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தின்போது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும்.

38 சிக்ஸர்கள், 43 பவுண்டரிகள், ஒரே போட்டியில் 549 ரன்கள், 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய சோகம், அதிகபட்ச ஸ்கோர் என நேற்றைய ஐபிஎல் டி20 ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பட்டியலிடலாம்.

ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு கழுத்துவலி கூட வந்திருக்கலாம். ஏனென்றால், கிட்டத்தட்ட 40 ஓவர்களில் 9 ஓவர்களில் வெறும் சிக்ஸர், பவுண்டரிகளாகவே அடிக்கப்பட்டது.

மிகச்சிறிய மைதானமான சின்னசாமி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் எப்படி வீசினாலும் பேட்டை நோக்கித்தான் வந்தது என்பதால் பேட்டர்கள் கருணையற்றவர்களாக மாறினர். யாருக்கு எப்படி பந்துவீசுவது எனத் தெரியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்களும், சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களும் திணறி நின்றதைக் காண முடிந்தது.

 

ஆர்சிபி -  ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. 288 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது. நிகர ரன்ரேட்டிலும் பெரிய ஸ்கோர் அடித்தும் பெரிய முன்னேற்றமில்லாமல் 0.502 ஆக இருக்கிறது.

டி20 போட்டிகளில் 250ரன்களுக்கு மேல் அதிகமுறை அடித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் அணி நேற்று பெற்றது.

ஆர்சிபி அணியைப் பொருத்தவரை இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்தும் தோல்வி அடைந்த முதல் அணியாக மாறிவிட்டது. 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 6 தோல்விகள் என 2 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது.

 

ஆர்சிபி -  ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ஹைதராபாத் வீரர்கள்

சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை அமைத்துக் கொடுத்தவர்களில் முக்கியமான பேட்டர் டிராவிஸ் ஹெட் 102 (41பந்துகள், 8சிக்ஸர், 9பவுண்டரி). ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்த ஹெட், நேற்றைய ஆட்டத்தில் முதல் சதத்தைப் பதிவு செய்து ஆட்டநாயகன் விருது வென்றார். 39 பந்துகளில் சதம் அடித்து, அதிவேக சதம் அடித்த 4வது பேட்டர் என்ற பெயரை ஹெட் பதிவு செய்தார். சன்ரைசர்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெயரை ஹெட் பெற்றார். இதற்கு முன் வார்னர் 43 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.

மற்றொரு பேட்டர் ஹென்ரிச் கிளாசன் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சீசன் முழுவதும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்ந்துவரும் கிளாசன் 31 பந்துகளில் 67 ரன்கள்(7சிக்ஸர், 2 பவுண்டரி) அடித்து ஆட்டமிழந்தார்.

இது தவிர மார்க்ரம் 32(17பந்துகள், 2சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்), அப்துல் சமது37(10 பந்துகள் 3 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள்) என ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த 4 பேட்டர்கள் அடித்த ஸ்கோர்தான் மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை.

 

ஆர்சிபி -  ஹைதராபாத்

பட மூலாதாரம்,SPORTZPICS

சன்ரைசர்ஸ் கேப்டன் கூறியது என்ன?

சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “ நானும் பேட்டராக இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் பெரிய ஸ்கோர் அடித்துள்ளோம். போட்டி பேட்டர்கள் ராஜ்ஜியமாகமாறி வருகிறது. இந்த ஆடுகளத்தை படிக்க நானும் முயற்சித்தேன். எங்கள் ஆட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 4 வெற்றிகள் பெற்றுள்ளோம். பேட்டர்களுக்கு முழுசுதந்திரம் அளித்துள்ளோம். அதனால்தான் பெரிய ஸ்கோர் வருகிறது” எனத் தெரிவித்தார்

ஆர்சிபி கொடுத்த பதிலடி

ஆர்சிபி அணியிலும் கேப்டன் டூப்பிளசிஸ் 28 பந்துகளில் 62 ரன்கள்(4சிக்ஸர், 7பவுண்டரி), விராட் கோலி 42 (2சிக்ஸர், 6பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 85(7சிக்ஸர், 5 பவுண்டரி) என விளாசினர்.

இதில் ஆர்சி அணியில் நடுவரிசை பேட்டர்கள் ரஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ், சவுகான் ஆகிய மூவவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்காமல் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தால், ஆர்சிபி அணி ஒருவேளை வென்றிருக்கலாம்.

சன்ரைசர்ஸ் அடித்த ஸ்கோருக்கு தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று ரீதியில்தான் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

 

ஆர்சிபி -  ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நிகழ்த்தப்பட்ட சாதனைகள்

இந்த ஆட்டத்தில் சில சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன.

ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரான 287 ரன்களை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்தது. இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த சீசனில் 277 ரன்கள் சேர்த்ததுதான் சாதனையாக இருந்தது, தன்னுடைய சாதனையை அந்த அணியை முறியடித்தது. ஆடவர் டி20 போட்டியில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

ஓட்டுமொத்தமாக நேற்றைய ஆட்டத்தில் 549 ரன்கள் சேர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் ஹைதராபாத்தில் இந்த சீசனில் நடந்த மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 523 ரன்கள் சேர்க்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தநிலையில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.

ஆர்சிபி அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 22 சிக்ஸர்களை விளாசி, ஒரு இன்னிங்ஸில் ஒரு அணிக்கு எதிராக அடிக்கப்பட்டஅதிகபட்ச சிக்ஸர்களைப் பதிவு செய்தது. இதற்கு முன் 2013-இல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 21 சிக்ஸர்களை அடித்த நிலையில் அதை சன்ரைசர்ஸ் முறியடித்துவிட்டது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்களை விளாசின.

டி20 போட்டியில் அதிக பட்சமாக 262 ரன்கள் சேர்த்தும் தோல்வி அடைந்த முதல் அணி என்ற பெயரை ஆர்சிபி பெற்றது. இதற்குமுன் 2023ம் ஆண்டில் செஞ்சூரியனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 258 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் சேர்த்தும் தோல்வி அடைந்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

ஆர்சிபி அணியில் பந்துவீச்சாளர்கள் டாப்ளி(68), யாஷ் தயார்(51), லாக்கி பெர்குஷன்(52), விஜயகுமார்(64) என 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஒரு போட்டியில் 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது இதுதான் முதல்முறை.

சன்ரைசர்ஸ் அணியில் நேற்று மட்டும் 4 பேட்டர்கள் ஒரு சதம் பார்ட்னர்ஷிப்பும் உள்பட, 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் வரலாற்றில் இது 2வது முறையாக நடக்கிறது. இதற்கு முன் 2008-இல் ஆர்சிபிக்கு எதிராக கொல்கத்தா அணியின் 4 பேட்டர்கள் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.

 

ஆர்சிபி -  ஹைதராபாத்

பட மூலாதாரம்,SPORTZPICS

ஆர்சிபி இதயத்தை உடைத்த ஹெட்

ஆர்சிபி அணி நேற்றைய ஆட்டத்தில் முறையான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா என இரு இடதுகை பேட்டர்கள் களத்துக்கு வந்ததும் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான ஜேக்ஸை பந்துவீசச் செய்து சோதிதித்துப் பார்த்தது.

முதல் இரு ஓவர்கள் மட்டும் பொறுமை காத்த ஹெட், அபிஷேக் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்ஸர்களாக அடிக்கத் தொடங்கினர். எந்தப் பந்துவீச்சாளர் பந்துவீசினாலும் ஹெட், அபிஷேக் பேட்டிலிருந்து பவுண்டரி, சிக்ஸர்களாக பறந்தன. ஆர்சிபிக்காக முதல்முறையாக களமிறங்கிய பெர்குஷன் 5-ஆவது ஓவரில் ஹெட் சிக்ஸர்களாக விளாசி 18 ரன்களையும், யாஷ் தயால் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என 20 ரன்களையும் சேர்த்தார். 20 பந்துகளில் ஹெட் அரைசதம் அடித்தார்.

பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் 76 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் சன்சைர்ஸ் சேர்த்த 3வது அதிகபட்ச ரன்களாகும். இதற்குமுன் மும்பை அணிக்கு எதிராக 81 ரன்கள், சிஎஸ்கேவுக்கு எதிராக 77ரன்களும் சேர்த்திருந்தது. 7.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை தொட்டது. அபிஷேக் சர்மா 34 ரன்களில் டாப்ளே பந்துவீச்சில் பெர்குஷனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஹெட், அபிஷேக் 108 ரன்கள் என வலுவான அடித்தளம் அமைத்தனர்.

கிளாசன் சிக்ஸர் மழை

2-ஆவது விக்கெட்டுக்கு கிளாசன் களமிறங்கி ஹெட்டுடன் சேர்ந்தார். முதல் 5 பந்துகளில் 3 ரன்கள் சேர்த்து மெதுவாகத் தொடங்கிய கிளாசன், அதன்பின் வாண வேடிக்கை நிகழ்த்தினார். டி20 போட்டிகளில் ஆபத்தான பேட்டராக கருதப்படும் கிளாசன், ஆர்சிபி பந்துவீச்சாளர்களை நேற்று வதம் செய்தார். பெர்குஷன், யாஷ் தயால் ஓவரில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் கிளாசன் பேட்டிலிருந்து பறந்தன. மறுபுறம் டிராவிஸ் ஹெட்டும் சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்து, 39 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். டிராவிஸ் ஹெட் 102 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அதிரடியாக ஆடிய கிளாசன் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 14.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களைத் தொட்டது. கிளாசன் 67 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீ்ச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த கிளாசன், ஹெட் ஆகிய இரு பேட்டர்களும் ஆட்டமிழந்து சென்றபின் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

கடைசி நேரத்தில் களமிறங்கிய அப்துல் சமது, மார்க்ரம் இருவரும் சூப்பர் கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினர். கடைசி இரு ஓவர்களில் மட்டும் இருவரும் 46 ரன்களைக் குவித்தனர்.

 

ஆர்சிபி -  ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடைசி வரை போராடியது பெருமை

ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “இது முறையான டி20 ஆடுகளம். இன்று சேர்த்த ரன்களை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. அதுவே சாதனையாக மாறிவிட்டது. இந்த ஆடுகளத்தில் 270 ரன்கள்கூட சேஸிங் செய்யக்கூடியதுதான். இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவது கடினம். பாவம் பந்துவீச்சாளர்கள் பல நுணுக்கங்களை பயன்படுத்தி வீசியும் பயன் இல்லை. பேட்டர்கள் பக்கமே ஆட்டம் தொடர்ந்து போவது கடினம்தான். வித்தியாசமாக சந்திக்க வேண்டும். எங்கள் பேட்டிங்கில் சில தவறுகள் உள்ளன. அதை சரிசெய்வோம். பவர்ப்ளேக்குப்பின் நாங்கள் தவறுகளைத் திருத்த வேண்டியுள்ளது. ஆனால் கடைசிவரை எங்கள் வீரர்கள் போராடியது பெருமையாக இருந்தது. பந்துவீச்சைப் பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் எப்போதும் மனதை உற்சாக வைத்திருக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.

 

ஆர்சிபி -  ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆர்சிபிக்கு நம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக்

ஆர்சிபியும் பதிலடி கொடுக்க முயன்று, விக்கெட்டுகளை இழந்திருந்த தருணத்தில் தினேஷ் கார்த்திக் களமிறங்கி, அரங்கில் இருந்த ரசிகர்களுக்கு தனது பேட்டால் விருந்தளித்தார். லாம்ரோருடன் சேர்ந்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டிகே, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். உனத்கட், மர்கண்டே வீசிய 13 மற்றும் 14வது ஓவர்களில் மட்டும் தினேஷ் கார்த்திக், லாம்ரோர் சேர்ந்து 46 ரன்கள் சேர்த்தனர். டிகே அடித்த ஷாட்களால் ரன்ரேட்டும் வேகமாக உயர்ந்தது, ரசிகர்களுக்கும் ஆர்சிபி வென்றுவிடும் என்ற நம்பிக்கை வந்தது. 23 பந்துகளில் டிகே அரைசதம் அடித்தார்.

லாம்ரோர் 19 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார். அடுத்துவந்த ராவத்துடன் சேர்ந்து தினேஷ் கார்த்திக் வெளுத்துவாங்கினார். அனுஜ் ராவத்துடன் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக் 83 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தவரை ஆர்சிபி ரசிகர்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால் அவர் வெளியேறியபின், ரசிகர்களும் கலையத் தொடங்கினர். தினேஷ் கார்த்திக் கடைசிவரை போராடியும், ஆர்சிபி 25 ரன்களில் தோற்றது.

https://www.bbc.com/tamil/articles/cj5l2j16y69o

ipl-pt-15-04.jpg

அந்த‌ 1 வெற்றியும் தினேஸ் கார்த்திக்கால் கிடைச்ச‌ வெற்றி
 ஆர்சிவி அணியில் ந‌ல்ல‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லை அண்ணா.....................அடுத்த‌ வ‌ருட‌ம் ந‌ல்ல‌ திற‌மையான‌ பந்து வீச்சாள‌ர்க‌ளை வேண்ட‌னும்

இங்லாந் உள்ளூர் கில‌ப்பில் நிறைய‌ ந‌ல்ல‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இருக்குன‌ம் அவ‌ர்க‌ளின் சில‌ரை வேண்ட‌லாம்.....................இங்லாந் அணியில் இட‌ம் பிடிக்காத‌ ப‌ல‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ள் 18கில‌ப்பிலும் விளையாடுகின‌ம்.................................................

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்லில் 200 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் சஹால்

Published By: VISHNU   22 APR, 2024 | 11:34 PM

image

(நெவில் அன்தனி)

இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை ராஜஸ்தான் றோயல்ஸ் சுழல்பந்துவீச்சாளர் யுஸ்வேந்த்தர சஹால் படைத்துள்ளார்.

yuzvendra_chahal_...png

மும்பை இண்டியன்ஸுக்கு எதிராக ஜெய்பூர், சவாய் மான்சிங் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றுவரும் போட்டியிலேயே அவர் இந்த மைல்கல் சாதனையை எட்டினார்.

தனது பந்துவீச்சில் மொஹமத் நபியின் பிடியை தானே எடுத்து ஐபிஎல்லில் 200 விக்கெட்களை சஹால் பூர்த்தி செய்தார்.

ட்வேன் ப்ராவோவின் 183 விக்கெட்கள் என்ற சாதனையை கடந்த வருடம் முறிடித்த சஹால், தனது 153ஆவது போட்டியில் இந்த அரிய சாதனையை படைத்தார்.

'ஐபிஎல்லில் அதிக விக்கெட்களை வீழ்த்துவேன் என நான் ஒருபோதும் எண்ணியதில்லை' என ப்ராவோவின் சாதனையை கடந்த வருடம் முறியடித்த பின்னர் சஹால் தெரிவித்திருந்தார்.

'நான் ஐபிஎல்லில் விளையாட ஆரம்பத்ததும் மும்பை இண்டியன்ஸுடன் 3 வருடங்கள் இருந்தேன். ஆனால் எனது பயணம் 2014இலிலேயே ஆரம்பித்தது. மேடு, பள்ளங்கள் நிறைய இருந்தன. அதேபோல் நான் நிறைய ரசித்தேன். நான் எனது சரிவுகளின்போது நிறைய கற்றுக்கொண்டேன். எனது வீழ்ச்சிகளும் எனது நெருங்கிய சகாக்களினது ஆதரவுமே இன்று இந்த நிலைக்கு என்னைஉயர்த்திவிட்டுள்ளன' என்றார்.

மும்பை இண்டியன்ஸினால் 2011இல் ஒப்பந்தும் செய்யப்பட்ட சஹால், 2013இலேயே ஐபிஎல்லில் அறிமுகமானார்.

அடுத்த வருடம் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருவினால் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அங்குதான் அவரது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கை பிரகாசிக்கத் தொடங்கியது.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகாக 2014 முதல் 2021வரை 113 போட்டிகளில் விளையாடிய சஹால், 139 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார்.

இன்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு சார்பாக அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை சஹால் தன்னகத்தே கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும் 2022இல் அவரை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மீண்டும் எடுக்கவில்லை.

ஆனால், ராஜஸ்தான் றோயல்ஸ் அவரை 6.5 கோடி ரூபா (இந்திய நாணயப்படி) ஏலத்தில் வாங்கியது.

ராஜஸ்தான் றோயல்ஸ் சார்பாக 2022இல் 27 விக்கெட்களையும் 2023இல் 21 விக்கெட்களையும் கைப்பற்றிய சஹால், இந்த வருடம் இதுவரை 13 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

அவரது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதி 2022இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக பதிவான 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களாகும். அவர்  ஒரு 5 விக்கெட் குவியலையும் ஆறு 4 விக்கெட் குவியல்களையும் பதிவுசெய்துள்ளார். அவரது பந்துவீச்சு சராசரி 21.57ஆகவும் எக்கொனொமி  ரேட் 7.72ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 16.74 ஆகவும் இருக்கின்றன.

https://www.virakesari.lk/article/181722

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மும்பை அணியின் தோல்விக்கு யார் காரணம்? ஹர்திக் கூறியது என்ன?

ஹர்திக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

6 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த 7 போட்டிகளாக 121 ரன்கள், ஒரு அரைசதம், சதம் கூட இல்லை, அதிகபட்சமாக 39 ரன்கள் என இந்த சீசன் தொடங்கியதில் இருந்து ஃபார்மின்றி ஜெய்ஸ்வால் திணறிக்கொண்டிருந்தார். திறமையான தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் மீது தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வைத்திருந்த நம்பிக்கையை நேற்றை ஆட்டத்தில் சதம் அடித்து நிரூபித்தார்.

அது மட்டுமல்லாமல் காயத்தால் பல போட்டிகளாக பந்துவீசாமல் இருந்த டெத் ஓவர் பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா நேற்றைய ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணியின் ஒட்டுமொத்த சரிவுக்கும் காரணமாகினார்.

அது மட்டுமல்லாமல் ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் எனும் சாதனையை யஜுவேந்திர சஹல் நேற்று பெற்றார். டி20 போட்டிகளிலேயே 200 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் இங்கிலாந்தின் டேனி பிரிக்ஸ், சமித் படேலுக்கு அடுத்தார்போல் சஹல் இடம் பெற்றார்.

இதுபோன்ற பல இனிமையான நினைவுகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை அணியை எளிதாகவே வீழ்த்திவிட்டது.

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 38-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

 
மும்பை - ராஜஸ்தான் ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. 180 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 பந்துகள் மீதமிருக்கையில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டிகளில் 7 வெற்றி, ஒரு தோல்வி என 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஆனால், நிகர ரன் ரேட் அடிப்படையில் 2வது இடத்தில் 10 புள்ளிகளுடன் இருக்கும் கொல்கத்தா(1.206) அணியைவிட, ராஜஸ்தான் குறைவாகவே 0.698 என்ற அளவிலேயே இருக்கிறது.

அதேசமயம், மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் 5 தோல்விகள், 3 வெற்றி என 6 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.227 என்ற அளவில் இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை அணியைவிட நிகர ரன்ரட்டில் குறைவாக இருந்தாலும், புள்ளிக்கணக்கில் அதிகமாக இருப்பதால் 6வது இடத்துக்கு நகர்ந்துள்ளது.

மும்பை - ராஜஸ்தான் ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பையைச் சாய்த்த சந்தீப் சர்மா

மும்பை இந்தியன்ஸ் அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக இருந்தது சந்தீப் சர்மா, டிரன்ட் போல்ட் இருவரும்தான். இதில் டிரன்ட் போல்ட் ஏற்கெனவே மும்பை வான்ஹடே மைதானத்தில் உள்ள ரசிகர்களை தனது பந்துவீச்சால் நிசப்தமாக்கி அதிர்ச்சியளித்தார். அதேபோல ஜெய்ப்பூர் மைதானத்திலும் மும்பை அணியின் ரசிகர்களையும் மவுனமாக்கினார்.

காயத்திலிருந்து மீண்டுவந்து பந்துவீசிய சந்தீப் சர்மா அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இதற்கு முன் டெத் ஓவர்களில் மட்டுமே பந்துவீசி வந்த சந்தீப் சர்மா பவர்ப்ளேயில் பந்துவீசினார். ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொண்டு வீசிய சந்தீப் சர்மா, பவர்ப்ளேயில் 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து மும்பைக்கு அதிர்ச்சி அளித்தார். கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி டெத் ஓவரில் மும்பை அணிக்கு சிம்ம சொப்னமாகத் திகழ்ந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

 
மும்பை - ராஜஸ்தான் ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஃபார்முக்கு வந்த ஜெய்ஸ்வால்

இந்த ஆட்டத்தில் 31 பந்துகளில் அரைசதம் அடித்தபின், ஜெய்ஸ்வால் பேட்டிலிருந்து பந்துகள் சிக்ஸர், பவுண்டரி என பறந்தன, அடுத்த 28 பந்துகளில் 50 ரன்களுடன் சதத்தை நிறைவு செய்து 60 பந்துகளில் 104 ரன்களுடன் (7 சிக்ஸர், 9பவுண்டரிகள்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கடந்த சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்திருந்த ஜெய்ஸ்வால், இந்த சீசனிலும் சதம் அடித்துள்ளார். ஒற்றை பேட்டராக இருந்து ராஜஸ்தான் அணியை ஜெய்ஸ்வால் கரை சேர்த்துள்ளார்.

கடந்த போட்டியில் ஒற்றை பேட்டராக இருந்து வெற்றி தேடித்தந்த ஜாஸ் பட்லர் இந்த போட்டியில் 35 ரன்களில் பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். முதல் விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் பட்லர் கூட்டணி 74 ரன்கள் சேர்த்தனர். 2வது விக்கெட்டுக்கு கேப்டன் சாம்ஸன், ஜெய்ஸ்வாலுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து 38 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 2வது விக்கெட்டுக்கு சாம்ஸன்-ஜெய்ஸ்வால் கூட்டணி 109 ரன்கள் சேர்த்தனர்.

 
மும்பை - ராஜஸ்தான் ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பையின் தொடக்க வரிசையை உடைத்த போல்ட், சந்தீப்

மும்பை அணியின் தொடக்க வரிசை பேட்டிங்கை டிரன்ட் போல்ட், சந்தீப் சர்மா இருவரும் சேர்ந்து நிலைகுலையச் செய்தனர். ஆடுகளத்தின் தன்மை, பனிப்பொழிவு, காற்று ஆகியவற்றை சாதகமாகப் பயன்படுத்தி, துல்லியமான லைன் லென்த்தில் வீசி பேட்டர்களை திணறடித்தனர். பவர்ப்ளே ஓவருக்குள் மும்பை அணியின் முதுகெலும்பு பேட்டிங் வரிசை சுக்குநூறாக இருவரும் சேர்ந்து உடைத்துவிட்டனர்.

மூன்று வாரங்களுக்கு முன் மும்பை வான்ஹடே மைதானத்தில் மும்பை அணி ரசிகர்களை தனது பந்துவீச்சால் ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்தி டிரன்ட் போல்ட் அரங்கையே நிசப்தமாக்கினார். அதேபோன்று நேற்றும் தனது பந்துவீச்சால் முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா(6) விக்கெட்டை வீழ்த்தி ரசிகர்களுக்கு ஷாக் அளித்தார். ஐபிஎல் தொடரில் டிரன்ட் போல்ட் முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்துவது இது 26-வது முறையாகும். இந்த சீசனில் மட்டும் போல்ட் 5-ஆவதுமுறையாக முதல் ஓவரில் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

சந்தீப் சர்மா தான் வீசிய முதல் ஓவரிலேயே இஷான் கிஷனை அவுட் ஸ்விங் மூலம் சாம்ஸனிடம் கேட்ச் கொடுக்கவைத்து டக்அவுட்டில் வெளியேற்றினார். அடுத்துவந்த 360 டிகிரி பேட்டர் சூர்யகுமாரும், தனக்குரிய ரிதம் கிடைக்காமல் பேட்டிங்கில் தடுமாறினார். அவர் தனது இயல்பான பேட்டிங்கிற்கு திரும்பவிடாமல், போல்ட், சந்தீப் இருவரும் துல்லியமாகப் பந்துவீசினர். ஒரு கட்டத்தில் சந்தீப் வீசிய ஸ்லோ-பாலோ தூக்கி அடிக்க ரோவ்மன் பாவலிடம் கேட்சானது. சூர்யகுமார் 10 ரன்னில் வெளியேறியது, மும்பையின் பெரிய நம்பிக்கையே உடைந்தது. அடுந்து வந்த முகமது நபி, அதிரடியாக ஆவேஷ் கான் ஓவரில் கேமியோ ஆடி 18 ரன்கள் சேர்த்து, சஹல் வீசிய முதல் ஓவரிலேயே அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பவர்ப்ளே ஓவரில் மும்பை அணி 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் சேர்த்தும், 52 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது.

5-ஆவது விக்கெட்டுக்கு நேஹல் வதேரா, திலக் வர்மா ஜோடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். நிதானமாகவும், மோசமான பந்துகளை மட்டும் பவுண்டரி, சிக்ஸர் அடித்து ஆடிய திலக் வர்மா 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். மிகக் குறைந்த வயதில் 21 வயது 166 நாட்களில் ஐபிஎல் தொடரில் 1000 ரன்களை எட்டிய வீரர் எனும் பெருமையை திலக் பெற்றார்.

மும்பை - ராஜஸ்தான் ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் பங்கேற்ற நேஹல் வதேரா அதிரடியாக பேட் செய்து 24 பந்துகளில் 49 ரன்கள்(4சிக்ஸர், 3பவுண்டரி) சேர்த்து போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இவர்கள் இருவரும் சேர்த்ததுதான் அணியில் பெரிய ஸ்கோராகும். இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்காமல் இருந்தால், மும்பை அணி 140 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.

அதன்பின் வந்த பேட்டர்களான கேப்டன் ஹர்திக் பாண்டியா(10), டிம் டேவிட்(3), கோட்ஸி(0) எனவரிசையாக ஆட்டமிழந்தனர். திலக் வர்மா 65 ரன்களில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 18 ஓவர்களில் மும்பை அணி 170 ரன்களை எட்டியநிலையில் கடைசி இரு ஓவர்களில் அதிரடியாக ஆடி 200 ரன்களை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி இரு ஓவர்களில் மும்பை அணி 9 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அதிலும் சந்தீப் சர்மா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் திலக் வர்மா, 2வது பந்தில் கோட்ஸீ, 5வது பந்தில் டிம் டேவிட் என 3 விக்கெட்டுகளை மும்பை இழந்தது. அதாவது ஒரு ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை மும்பை இழந்தது. கடைசி 28 ரன்களுக்குள் மும்பை அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

என்ன சொல்கிறார் பாண்டியா?

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ தொடக்கத்தில் இருந்தே நாங்கள் சிக்கல்களைச் சந்தித்தோம். ஆனால், திலக், வதேரா ஆடியவிதம் அருமை.அதேபோல ஃபினிஷிங்கிலும் சிறப்பாகச் செயல்படவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததைவிட 15 ரன்கள் குறைவாகச் சேர்த்துவிட்டோம். அதேபோல பந்துவீச்சிலும், பீல்டிங்கிலும் எங்களுக்கு சிறந்தநாளாக அமையவில்லை. பவர்ப்ளே ஓவர்களில் ரன்கள் சேர்க்க முடியாத பிரச்னை தொடர்கிறது.”

“ஒவ்வொரு வீரரும் தங்களுக்குரிய பணியை, பொறுப்பை உணர்வார்கள். தவறுகளை திருத்துவது அவசியம், மீண்டும் தவறுகள் வராமல் பார்க்கவேண்டும். தனிப்பட்ட முறையில் ஏற்படும் தவறுகள், பணியையும் ஏற்க வேண்டும். சரியாக விளையாடாத வீரர்களை உடனே நீக்குபவன் நான் அல்ல, வீரர்களுக்கு போதுமான வாய்ப்புத் தருவேன். நல்ல கிரிக்கெட்தான் என்னுடைய நோக்கம், எங்கள் திட்டங்களை நோக்கிச் செல்வோம்”எ னத் தெரிவித்தார்”

மும்பை - ராஜஸ்தான் ஐபிஎல்

பட மூலாதாரம்,SPORTZPICS

மும்பை அணியின் தோல்விக்கான காரணங்கள்

மும்பை அணியின் பந்துவீச்சு, பீல்டிங், கேட்ச் பிடிக்கும் திறன் ஆகியவை நேற்று சுமாராகவே இருந்தது. ஜெய்ஸ்வாலுக்கு மட்டும் நேற்று இரு கேட்சுகளை டிம் டேவிட், வதேரா இருவரும் தவறவிட்டனர். இருவரும் கேட்சுகளை பிடித்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கக்கூடும்.

அதேபோல பவுண்டரிகளை தடுக்கும் பீல்டிங்கிலும் மும்பை வீரர்கள் பெரிதாக முயற்சி எடுக்காமல் பீல்டிங்கில் கோட்டைவிட்டனர். கேப்டன் ஹர்திக் பாண்டியா மட்டும் 2 பவுண்டரிகளை விட்டார்..

பந்துவீச்சிலும் 7 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் சராசரியாக ஓவருக்கு 9 ரன்களுக்கு குறைவில்லாமல் வாரி வழங்கினர். ஹர்திக் பாண்டியா 2 ஓவர்கள்வீசி 21 ரன்களை வாரிக் கொடுத்தார். உலகக் கோப்பை நெருங்கும் நேரத்தில் ஐபிஎல் தொடரில் இதுவரை ஹர்திக் பாண்டியா பேட்டிங், பந்துவீச்சு இரு பிரிவுகளிலும் பெரிதாக ஜொலிக்கவில்லை. இது நிச்சயமாக உலகக் கோப்பைக்கான அணியில் எதிரொலிக்கும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சிறப்பாகப் பந்துவீசக்கூடிய பும்ரா 4 ஓவர்கள் வீசி 37 ரன்களை வழங்கினார். முகமது நபி, துஷாரா பந்துவீச்சும் எடுபடவில்லை. ராஜஸ்தான் பேட்டர்கள் குறிப்பாக ஜெய்ஸ்வாலைக் கட்டுப்படுத்தக்கூடிய பந்துவீச்சு நேற்று மும்பையிடம் இல்லாததே தோல்விக்கு முக்கியக் காரணமாகும்.

 
மும்பை - ராஜஸ்தான் ஐபிஎல்

பட மூலாதாரம்,SPORTZPICS

சஹலின் சாதனைகள்

யஜுவேந்திர சஹல் நேற்று முகமது நபி விக்கெட்டை வீழ்த்தியபோது, ஐபிஎல் தொடரில் 200-வது விக்கெட்டை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் எனும் பெருமையைப் பெற்றார். டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது பந்துவீச்சாளராகவும் சஹல் இடம் பெற்றார். இதற்கு முன் டேனி பிரிக்ஸ்(219), சமித் படேல்(208) வீழ்த்தியுள்ளனர்.

சஹல் தனது 200 விக்கெட்டுகளில் 158 விக்கெட்டுகளை 125 போட்டிகளில் இந்திய மண்ணில் விளையாடி எடுத்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் 42 விக்கெட்டுகளை சஹல் வீழ்த்தியுள்ளார். உள்நாட்டு மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை புவனேஷ்வர் குமார்(160) வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

ஐபிஎல் தொடரில் 7 முறை 4 விக்கெட்டுகளை சஹல் வீழ்த்தி மலங்காவுக்கு அடுத்தார்போல் இடம்பெ ற்றுள்ளார். 20 முறை 3 அல்லது அதற்கு மேல் அதிகமான விக்கெட்டுகளை சஹல் கைப்பற்றியுள்ளார். இரு அணி நிர்வாகங்களுக்கு 50 விக்கெட்டுகளை4 பந்துவீச்சாளர்கள் இதுவரை வீழ்த்தியுள்ளனர்.

இதில் சஹல் ஆர்சிபி அணிக்கும், ராஜஸ்தானுக்கும் 50 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திக் கொடுத்துள்ளார். இதில் ஆர்சிபி அணிக்காக மட்டுமே சஹல் 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துக் கொடுத்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு வந்தபின் 61 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக சஹல் கைப்பற்றியுள்ளார். அதிலும் பெங்களூரு சின்னசாமி அரங்கில் மட்டும் சஹல் 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

நடுப்பகுதி ஓவர்களில் சஹல் சிறப்பாகப் பந்துவீசக் கூடியவர். சஹல் எடுத்த 200 விக்கெட்டுகளில் 152 விக்கெட்டுகள் 7 முதல் 16-வது ஓவர்களுக்குள் எடுக்கப்பட்டவையாகும்.

https://www.bbc.com/tamil/articles/ckr530mxp1ko

ipl-pt-22-04.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கத்தின் ராஜதந்திரங்கள் அதன் கோட்டையிலேயே தகர்ந்தது ஏன்? புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே எங்கே?

சிஎஸ்கே - லக்னௌ

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஐபிஎல் போட்டி நடக்கும் அனைத்து மைதானங்களிலும் அதிக சத்தம் எழுப்பக்கூடிய மைதானத்தில் முதலிடமாக இருப்பது சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தின் ரசிகர்கள்தான். அதிலும் குறிப்பாக சிஎஸ்கே ஆட்டமாக இருந்தால், அதிலும் தோனி களமிறங்கினால், ரசிகர்களின் விசில் சத்தம், கரவொலி செவிப்பறையை கிழித்துவிடும் அளவுக்கு இருக்கும்.

ஆனால், இவை எல்லாமே நேற்றைய போட்டியின்போது கடைசி சில ஓவர்களில் காணாமல் போய்விட்டன.

ஏனென்றால், லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் பேட்டர் ஸ்டாய்னிஸ் ஒட்டுமொத்த சேப்பாக்கம் ரசிகர்களையும் தனது ஆட்டத்தால் மவுனமாக்கிவிட்டார்.

லக்னெளவில் வைத்து மட்டுமல்ல, சிங்கத்தை அதன் கோட்டையிலேயே சந்தித்து, வீழ்த்துவோம் என்று சொல்லாமல் சொல்லி சிஎஸ்கே அணியை வீழ்த்தி கடினமான வெற்றியை பெற்றுள்ளது லக்னெள அணி.

சேப்பாக்கம் மைதானம் சிஎஸ்கே அணியின் கோட்டையாகக் கருதப்படுகிறது. இங்கு வந்து சிஎஸ்கே அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதானது அல்ல என்பது கடந்த கால போட்டியின் புள்ளிவிவரங்கள் மூலம் அறியலாம். இந்த சீசனில் சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மைதானத்தில் சந்தித்த முதல் தோல்வியாகும். அது மட்டுமல்லாமல் கடந்த 5 நாட்களுக்குள் லக்னெள அணியிடம் 2வது முறையாக சிஎஸ்கே அணி தோற்றுள்ளது.

 
சிஎஸ்கே - லக்னௌ

பட மூலாதாரம்,GETTY IMAGES

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 39-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் சேர்த்தது. 211 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னௌ அணி 3 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

சேப்பாக்கம் மைதானத்தில் லக்னெள அணியின் அதிகபட்ச சேஸிங் என்ற சாதனைய பதிவு செய்தது.

புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே சரிவு

இந்த வெற்றியின் மூலம் லக்னெள அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட் 0.148ஆக உயர்ந்துள்ளது.

இந்தத் தோல்வியால் 4வது இடத்தில் இருந்த சிஎஸ்கே அணி 5வது இடத்துக்கு சரிந்துள்ளது. 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வி என 8 புள்ளிகளுடன் சிஎஸ்கே, உள்ளது. தோற்றாலும், அதன் நிகரரன்ரேட் பெரிதாகக் குறையாமல், 0.415 என்ற ரீதியில் இருக்கிறது.

சிஎஸ்கே - லக்னௌ

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்டாய்னிஸின் அதிரடி

லக்னெள அணியின் வெற்றிக்கு முதல் முக்கியக் காரணம் ஸ்டாய்னிஸின் அற்புதமான பேட்டிங் மட்டும்தான். 63 பந்துகளைச்சந்தித்த ஸ்டாய்னிஷ் ஐபிஎல் தொடரில் முதல் சதத்தை நிறைவு செய்து 124 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் 56 பந்துகளில் சதம் அடித்ததற்குப் போட்டியாக ஸ்டாய்னிஸும் 56 பந்துகளில் சதம் கண்டார்.

எந்த ராஜதந்திரமும் பலிக்கவில்லை

இந்த சீசனில் லக்னெள அணிக்காக 3வது வீரராகக் களமிறங்கிய ஸ்டாய்னிஸ் தொடக்கத்தில் நிதானமாக பேட் செய்யத் தொடங்கி அதன்பின் களத்தில் நங்கூரமிட்டு, சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்னமாக மாறிவிட்டார். ஸ்டாய்னிஸை வெளியேற்ற பல உத்திகளை கேப்டன் கெய்க்வாட்டும், தோனியும் பயன்படுத்தியும் அவரை அசைக்கக் கூட முடியவில்லை.

கடைசி 5 ஓவர்களில் லக்னெள வெற்றிக்கு 74 ரன்கள் தேவைப்பட்டது. சிஎஸ்கே போன்ற வலிமையான பந்துவீச்சு வைத்திருக்கும் அணிகள், தோனியை அணியில் வைத்திருக்கும்போது, பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி எதிரணியை வீழ்த்திவிடும் என எதிர்பார்க்கப்பட்டது, எளிதாக டிபெண்ட் செய்துவிடும் எனக் கணிக்கப்பட்டது.

ஆனால், சிஎஸ்கேயின் அனைத்து திட்டங்களையும் நிகோலஸ் பூரன் மற்றும் தீபக் ஹூடாவின் உதவியால் ஸ்டாய்னிஸ் உடைத்து எறிந்து சேப்பாக்கத்தை நிசப்தமாக்கிவிட்டார். பூரனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து 70 ரன்களும், ஹூடாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து 65 ரன்களும் சேர்த்து ஸ்டாய்னிஷ் வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

சிஎஸ்கே - லக்னௌ

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆட்டம் எங்கு திரும்பியது?

ஷர்துல் தாக்கூர் வீசிய 16-வது ஓவரில் இருந்துதான் ஆட்டம் லக்னெள அணி கரங்களுக்குத் திரும்பியது. அதுவரை சிஎஸ்கே அணி களத்தில் ஆதிக்கம் செய்து, தங்களுக்குத்தான் வெற்றி என மிதந்து கொண்டிருந்தனர். ஆனால், இந்த ஓவரில் இருந்துதான் ஆட்டம் மெல்ல சிஎஸ்கே கரங்களில் இருந்து நழுவியது.

கடைசி 5ஓவர்களில் லக்னெள வெற்றிக்கு 74 ரன்கள் தேவைப்பட்டது. ஷர்துல் தாக்கூர் 16-வது ஓவரை வீசினார். களத்தில் ஸ்டாய்னிஷ், பூரன் இருந்தனர். ஸ்ட்ரைக்கில் இருந்த பூரன், ஷர்துல் ஓவரில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 20 ரன்கள் சேர்த்தார்.

பதிரணா வீசிய 17-வது ஓவரில் பூரன் க்ளீன் போல்டாகி 34 ரன்களில் வெளியேற ஆட்டம் பரபரப்பானது. அந்த ஓவரில் லக்னெள அணிக்கு 7 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி 3 ஓவர்களில் லக்னெள வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்டது.

முஸ்தபிசுர் வீசிய 18-வது ஓவரில் ஹூடா ஒரு சிக்ஸரும், ஸ்டாய்னிஸ் ஒரு பவுண்டரி உள்பட 15 ரன்களை லக்னெள அணி சேர்த்தது. கடைசி 12 பந்துகளில் லக்னெள வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. 19-ஆவது ஓவரை பதிரணா வீசிய நிலையில் அந்த ஓவரில் ஹூடா 3 பவுண்டரி உள்பட 15 ரன்கள் சேர்த்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

சிஎஸ்கே - லக்னௌ

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 பந்துகளில் 15 ரன்கள்

கடைசி 6 பந்துகளில் லக்னெள வெற்றிக்கு 17ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை முஸ்தபிசுர் வீச, ஸ்ட்ரைக்கில் ஸ்டாய்னிஷ் இருந்தார். முஸ்தபிசுர் வீசிய முதல் பந்தில் லாங்ஆன் திசையில் ஸ்டாய்னிஷ் சிக்ஸர் விளாசி ரசிகர்களை அமைதியாக்கினார். 2வது பந்தில் ஸ்டாய்னிஸ் பவுண்டரி அடிக்க சேப்பாக்கமே அதிர்ச்சியில் உறைந்தது.

கடைசி 4 பந்துகளில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. 3-ஆவது பந்து ஸ்டாய்னிஷ் பேட்டில் பட்டு தேர்டுமேன் திசையில் பவுண்டரியானது. அந்த பந்தையும் முஸ்தபிசுர் நோபாலாக வீசவே 5 ரன்கள் லக்னெளவுக்கு கிடைத்தது. கடைசி 4 பந்துகளில் வெற்றிக்கு லக்னெள வெற்றிக்கு 2 ரன்கள் தேவை. ஸ்டாய்னிஷ் பைன்லெக் திசையில் பவுண்டரி அடித்து லக்னெள அணிக்கு நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியை பரிசளித்தார்.

சிஎஸ்கே அணிக்கு எதிராக சேஸிங்கில் கடைசி ஓவரில் 17 ரன்களை அடித்த செய்த 2ஆவது அணியாக லக்னெள மாறியது. இதற்கு முன் 2020ம் ஆண்டில் சிஎஸ்கே அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் கடைசி ஓவரில் 17 ரன்களை சேஸிங் செய்திருந்தது.

லக்னோ அணி கடைசி 8 ஓவர்களில் மட்டும 113 ரன்கள் சேர்த்தது. சேஸிங்கின்போது 13 முதல் 20 ஓவர்களில் 113 ரன்களை இதற்குமுன் மும்பை அணி மட்டும்தான் 2021ல் சிஎஸ்கே அணிக்கு எதிராகச் சேர்த்திருந்தது. அதன்பின் தற்போது லக்னெள அணி சேர்த்துள்ளது.

சிஎஸ்கே அணிக்கு எதிராக சேஸிங்கில் ஸ்டாய்னிஸ் அடித்த 124 ரன்கள்தான் ஐபிஎல் தொடரில் தனிநபர் பேட்டரின் அதிகபட்ச ஸ்கோராகும்.இதற்கு முன் 2011ல் மொஹாலில் பஞ்சாப் வீரர் பால் வால்தாட்டி 120 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 211 ரன்கள் சேஸிங்தான் அதிகபட்சமாகும். இதற்கு முன் 2012ல் ஆர்சிபிக்கு எதிராக 206 ரன்களை சிஎஸ்கே சேஸ் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது அதை லக்னெள முறியடித்துவிட்டது.

சிஎஸ்கே - லக்னௌ

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்டாய்னிஸ் வெற்றியை சாத்தியமாக்கியது எப்படி?

லக்னெள அணி ஐபிஎல் தொடர் முழுவதும் 3-ஆவது இடத்தில் சரியான பேட்டர் கிடைக்காமல் தடுமாறி வந்தது. பலமுறை தீபக் ஹூடாவை களமிறக்கியும் அவரால் ஜொலிக்க முடியவில்லை. இந்த ஆட்டத்தில் டீகாக் விரைவாக ஆட்டமிழக்கவே, ஆங்கர் ரோலுக்காக 3வது இடத்தில் ஸ்டாய்னிஷை களமிறக்கியது லக்னெள அணி.

இந்தப் போட்டிக்கு முன்புவரை லக்னெள அணியின் 3வது வரிசை பேட்டரின் சராசரி ரன் 9.33, ஸ்ட்ரைக் ரேட் 101 ஆக மட்டுமே ஐபிஎல் தொடரில் இருந்தது. ஆனால், ஸ்டாய்னிஷ் 3வது வீரராகக் களமிறங்கினாலும், டீகாக் விரைவாக ஆட்டமிழந்ததால், தொடக்க ஆட்டக்காரர் போல் மாறி செயல்பட வேண்டியதிருந்தது.

லக்னெள அணிக்காக 3வது வரிசை பேட்டராக ஸ்டாய்னிஷ் முதல்முறைாயக இந்த ஆட்டத்தில் களமிறங்கினார். இந்த வரிசையில் ஸ்டாய்னிஸ் களமிறங்கி சற்றுகூட தடுமாறாமல், மிகவும் நேர்த்தியாக ஷாட்களை ஆடினார். நிதானமான ஆட்டத்தை கையில் எடுத்து, நேரம் செல்லச் செல்ல அதிரடிக்கு மாறினார்.

ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் டி20 தொடரில் மெல்போர்ன்ஸ் ஸ்டார்ஸ் அணிக்காக ஸ்டாய்னிஷ் பலமுறை 3-ஆவது வீரராகக் களமிறங்கி விளையாடிய அனுபவம், டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்தபோது, 3வது வீரராகக் களமிறங்கிய அனுபவம் அவருக்குக் கை கொடுத்தது. தொடக்கத்தில் நிதானமாக ஆடிய ஸ்டாய்னிஷ் 16 பந்துகளில் 11 ரன்கள் என்றுதான் இருந்தார்.

ஆனால், அணியின் ஸ்கோர், ரன்ரேட்டைப் பார்த்து, அதிரடியாக ஆடிய ஸ்டாய்னிஷ் 26 பந்துகளில் அரைசதத்தையும், அடுத்த 30 பந்துகளில் 50 ரன்கள் என 56 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார்.

இந்தப் போட்டிக்கு முன்புவரை பதிரணா ஓவரை ஒருமுறை மட்டுமே ஸ்டாய்னிஸ் எதிர்கொண்டிருந்தார். இதனால் பதிரணாவின் பந்துவீச்சு ஆக்சன், பந்து ரிலீஸ் ஆகும் ஸ்டெயில் ஆகியவற்றை கணித்து ஆடுவதில் ஸ்டாய்னிஸுக்கு தொடக்கத்தில் சற்று குழப்பம் இருந்தது. ஆனால் பதீராணா ஓவரை பின்னர் சமாளித்து ஆடி 12 பந்துகளில் 15 ரன்களை ஸ்டாய்னிஷ் சேர்த்தார்.

தோல்விக்குப் பிறகு கெய்க்வாட் கூறியது என்ன?

தோல்விக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் கூறுகையில் “ இந்த தோல்வியை ஜீரணிக்கவே கடினமாக இருக்கிறது. லக்னெள அணியினர் கடைசியில் சிறப்பாக ஆடினர். 13-ஆவது ஓவர்வரை எங்கள் கரங்களில் ஆட்டம் இருந்தது, ஆனால் ஸ்டாய்னிஷ் அதை பறித்துக்கொண்டார். பனிப்பொழிவும் சேர்ந்து எங்களுக்கு பாதகமாக மாறியது. கட்டுப்படுத்த முடியாத விஷயங்களை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை” எனத் தெரிவித்தார்.

சிஎஸ்கே - லக்னௌ

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஎஸ்கே சறுக்கியது எங்கே?

சிஎஸ்கே அணியின் 210 ரன்கள் ஸ்கோர் உயர்வுக்கு இரு பேட்டர்கள் மட்டும்தான் காரணம். முதலாவதாக கேப்டன் கெய்க்வாட் அடித்த 60 பந்துகளில் (108), 2வதாக ஷிவம் துபேயின் 66 ரன்கள்(27பந்துகள்) ஆகியவைதான். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இருவரும் ஜோடி சேர்ந்த பின்புதான் சிஎஸ்கே ஸ்கோர் உயரத் தொடங்கியது.

மற்ற பேட்டர்களான ரஹானே(1), டேரல் மிட்ஷெல்(11), ஜடேஜா(16) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கெய்க்வாட் இதுவரை சதம் அடித்த 4 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த போட்டியில் அரைசதம் அடித்த ஜடேஜாவை மீண்டும் 4-ஆவது வரிசையில் களமிறக்கி சிஎஸ்கே கையை சுட்டுக்கொண்டது. ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட டேரல் மிட்ஷெல் இதுவரை ஒரு போட்டியில்கூட பெரிதாக ஸ்கோர் செய்யாதது சிஎஸ்கேவுக்கு பெரிய ஷாக்.

சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர்கள் பெரிதாக நெருக்கடி தரும் வகையில் பந்துவீசவில்லை. தீபக் சஹர் 2 ஓவர்கள் வீசி 11 ரன்கள் கொடுத்து ஒருவிக்கெட் வீழ்த்தினார். அதன்பின் அவருக்கு ஓவர்கள் வழங்கப்படவில்லை. மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும், ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்துள்ளனர். அதிகபட்சமாக முஸ்தபிசுர், ஷர்துல் இருவரும் ஓவருக்கு 14 ரன்களை வாரி வழங்கினர். சுழற்பந்துவீச்சிலும் ஜடேஜா, மொயின் அலி ஓரளவுக்குபந்துவீசிய நிலையிலும் அவர்களுக்கு 2 ஓவர்கள் மட்டுமே வழங்கப்பட்டது.

சேஸிங்கின்போது, பனிப்பொழிவு லேசாக இருந்தது ஆடுகளத்தை லக்னெள பேட்டர்களுக்கு இன்னும் இலகுவாக மாற்றியது. பந்துகள் பேட்டர்களின் பேட்டுக்கு எளிதாக வரத் தொடங்கியது சேஸிங்கை எளிதாக்கியது. அது மட்டுமல்லாமல் பனிப்பொழிவால் பந்துவீச்சாளர்கள் பந்தை இறுக்கமாகப் பிடித்து பந்துவீசுவதும் கடினமாக இருந்தது.

https://www.bbc.com/tamil/articles/cd137wdkpn1o

ipl-pt-23-04.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: கருணையில்லாமல் பந்தாடப்பட்ட கடைசி ஓவர் - எப்படிப் போட்டாலும் அடித்த ரிஷப் பந்த்

குஜராத் - டெல்லி

பட மூலாதாரம்,SPORTZPICS

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நடப்பு ஐபிஎல் சீசனில் முதலில் பேட் செய்யும் அணி 200 ரன்களுக்கு மேல் சேர்த்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோராக மாறிவிட்டது. அந்த ரன்களுக்குள் எதிரணியை முடக்குவதற்கும் கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது.

டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 40-வது லீக் ஆட்டமும் இப்படித்தான் இருந்தது. இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்தது. 225 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் சேர்த்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி 9 போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்வி, என 8 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இருப்பினும் டெல்லி கேபிடல்ஸ் நிகர ரன்ரேட் இன்னும் மைனசிலிருந்து மீளவில்லை, மைனஸ் 0.386 என்ற அளவில்தான் இருக்கிறது.

அதேநேரம், குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த 7 நாட்களில் சந்திக்கும் 2-ஆவது தோல்வி இதுவாகும். 9 போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்விகளுடன் 8 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்துக்குச் சரிந்துள்ளது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.974 என்று இருக்கிறது.

 
குஜராத் - டெல்லி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல என்ன செய்ய வேண்டும்?

குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இன்னும் தலா 5 லீக் ஆட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவது கடந்த முறை இருந்ததைவிட மிகவும் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் 10 புள்ளிகளுடன் 3 அணிகளும், 8 புள்ளிகளுடன் 3 அணிகளும் இருப்பதால், அடுத்தடுத்து எந்தெந்த அணிகள் ப்ளே ஆஃப் செல்லும் என்பதை கணிக்க முடியாததாகவும், கடும்போட்டியாகவும் இருக்கும்.

இந்த நிலையில் குஜராத் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணிகள் அடுத்துவரும் 5 லீக் ஆட்டங்களில் குறைந்தபட்சம் 4 போட்டிகளில் வென்றால்தான் பாதுகாப்பாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அடுத்து வரும் 5 ஆட்டங்களும் கடும் சவாலானவை.

குஜராத் அணி 4 ஆட்டங்களில் வென்றால் 16 புள்ளிகளைப் பெறலாம். இந்த இதில் ஆர்சிபி அணியுடனான இரு போட்டிகளும் அடக்கம். மற்ற 3 ஆட்டங்களில் சிஎஸ்கே, கொல்கத்தா, லக்னெள அணிகளுடன் குஜராத் மோத வேண்டியிருக்கிறது.

ஒருவேளை இரு அணிகளும் அடுத்துவரும் 3 போட்டிகளில் வென்று 14 புள்ளிகள் பாதுகாப்பானது என்று கூறப்பட்டாலும், நிகர ரன்ரேட் அடிப்படையில் இரு அணிகளும் இன்னும் மைனசிலிருந்து மீளாதநிலையில் 14 புள்ளிகள் பெறும்போது நிகர ரன்ரேட்டையில் வாய்ப்புகளை இழக்க நேரிடும். ஆதலால், அடுத்து வரும் 5 லீக் ஆட்டங்களில் 4 ஆட்டங்களிலும் வெல்வது கட்டாயம்.

 
குஜராத் - டெல்லி

பட மூலாதாரம்,GETTY IMAGES

குஜராத் - டெல்லி போட்டியில் என்ன நடந்தது?

நேற்றைய போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் கேப்டன் ரிஷப் பந்த், அக்ஸர் படேல் இருவரின் ஆகச்சிறந்த பேட்டிங் என்று கூறலாம். அதிலும் கேப்டன் ரிஷப் பந்த் கடைசி ஓவரில் மதம் பிடித்தயானை போன்று ஷாட்களை அடித்து, மோகித் சர்மாவை மோசமான சாதனைக்குள் தள்ளிவிட்டார். கடைசி ஓவரில் மட்டும் ரிஷப் பந்த் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 31 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக ஆடிய ரிஷப் பந்த் 43 பந்துகளில் 88 ரன்களுடன்(8சிக்ஸர்,5பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து விக்கெட் கீப்பிங்கிலும் இரு கேட்சுகளைப் பிடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

ரிஷப் பந்த்துக்கு துணையாக ஆடிய அக்ஸர் படேல் ஆட்ட வரிசையில் உயர்வு பெற்று 3வது வீரராகக் களமிறங்கி தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சிறப்பாகச் செய்தார். நேர்த்தியாக பேட் செய்த அக்ஸர் படேல் ஐபிஎல் தொடரில் 2வது அரைசதத்தை நிறைவு செய்து, 43பந்துகளில் 66ரன்கள்(4சிக்ஸர், 5பவுண்டரி) சேர்த்தார்.

ரிஷப் பந்த்-அக்ஸர் படேல் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும். டெல்லி கேபிடல்ஸ் சேர்த்த ஸ்கோரில் பெரும்பகுதி இருவரும் சேர்த்த ஸ்கோர்தான். மற்ற வகையில் பிரித்வி ஷா(11), ஜேக் பிரேசர் மெக்ருக்(23), சாய் ஹோப்(5) என விரைவாக ஆட்டமிழந்தனர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் கடைசி நேரத்தில் சிறந்த கேமியோ ஆடி 7 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார்.

டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி 3 ஓவர்களில் மட்டும் 67 ரன்கள் சேர்த்தது. இதில் ரிஷப் பந்த் மட்டும் கடைசி ஓவரில் 31 ரன்கள் சேர்த்தார். இந்த 3 ஓவர்களில் டெல்லி அணி சேர்த்த ரன்கள்தான் மிகப்பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது.

குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர் மோகித் சர்மா இந்த சீசனில் சிறந்த டெத் ஓவர் பந்துவீச்சாளர் என்று பெயரெடுத்து வந்தார். அவரை டெத் ஓவரில் மட்டுமே பெரும்பாலும் கேப்டன் கில் பயன்படுத்தி வந்தார். அதேபோல நேற்றும் மோகித் சர்மாவை பந்துவீசப்பயன்படுத்த, ரிஷப் பந்த் அவரின் பந்துவீச்சை துவம்சம் செய்து விட்டார்.

இறுதியில் மோகித் சர்மா 4 ஓவர்கள் வீசி 73 ரன்கள் கொடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிகமான ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர்கள் என மோசமான சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்டார்.

குஜராத் - டெல்லி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரிஷப் பந்த் என்ன சொன்னார்?

டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில் “ டி20 போட்டியில் எதுவுமே உறுதியில்லாமல், எதிர்பார்க்காத முடிவுகள்தான் கிடைக்கிறது. 15-ஆவது ஓவருக்கு மேல் பேட்டிற்கு பந்துகள் நன்றாக வந்தன. 44 ரன்களுக்கு 3விக்கெட்டுகளை இழந்திருந்தோம், அதன்பின் அக்ஸரும் நானும் பேசி சிறப்பாக ஆட முடிவு செய்தோம், சுழற்பந்துவீச்சாளர்களை மட்டும் குறிவைக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். இந்த வெற்றி எங்களை உற்சாகப்படுத்துகிறது, 100 சதவீத உழைப்பை வழங்கி இருக்கிறேன். களத்தில் இருக்கும் ஒவ்வொரு மணிநேரத்தையும் நேசிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

குஜராத் அணியைப் பொருத்தவரை பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சுமாராகவே செயல்பட்டது. பந்துவீச்சில் அனைத்து பந்துவீச்சாளர்களும் இரட்டை இலக்க ரன் ரேட்டில்தான் ரன்களை வாரி வழங்கினர். இதில் சந்தீப் வாரியர் மட்டும் 3 ஓவர்கள் வீசி 15 ரன்கள் கொடுத்து 3விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மற்ற வகையில் ரஷித் கான், நூர் அகமது இருவரும் சேர்ந்து 7 ஓவர்கள் வீசி 71 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். சுழற்பந்துவீச்சும் எதிர்பார்த்த அளவு இல்லை. தமிழகவீரர் சாய்கிஷோர் ஒரு ஓவர் வீசியநிலையில் 22 ரன்கள் விளாசப்பட்டதால் அத்தோடு நிறுத்தப்பட்டது.

டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசக் கூடியவர் மோகித் சர்மா என்று பெயரெடுத்த நிலையில் கடைசி ஒரு ஓவரில் அனைத்தும் மாறிவிட்டது.

தொடக்கத்தில் சந்தீப் வாரியர் 4வது ஓவரில் மெக்ருக், பிரித்வி ஷா விக்கெட்டை வீழ்த்தி நெருக்கடி அளித்தார். அதன்பின் 6-ஆவது ஓவரில் ஹோப்பை வீழ்த்தி குஜராத் அணிக்கு உதவினார். சந்தீப் வாரியர் அமைத்துக் கொடுத்த தளத்தை அடுத்துவந்த பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தவில்லை. தொடர்ந்து நெருக்கடி கொடுத்திருந்தால், டெல்லி பேட்டர்கள் விக்கெட்டை இழந்திருப்பார்கள்.

ஆனால், ரிஷப் பந்த்-அக்ஸர் படேல் பார்ட்னர்ஷிப்பை அமைக்கவிட்டது, குஜராத் பந்துவீச்சாளர்கள் செய்த பெரிய தவறாகும். இருவரையும் தொடக்கத்திலேயே பிரிக்காமல், கடைசி நேரத்தில் முயன்றது எந்தபயனும் அளிக்கவில்லை.

குஜராத் - டெல்லி

பட மூலாதாரம்,GETTY IMAGES

நம்பிக்கையளித்த தமிழக வீரர்

பேட்டிங்கிலும் கேப்டன் கில் 6 ரன்னில் நார்க்கியா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 2ஆவது விக்கெட்டுக்கு விருதிமான் சஹா, சுதர்சன் கூட்டணி ஓரளவுக்கு ஸ்கோரை குறையவிடாமல் கொண்டு சென்று பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் என ஓவருக்கு 10 ரன்ரேட்டில் சென்றது.

இருவரும் 2வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தநிலையில் குல்தீப் யாதவ் பிரித்தார். சாஹா 39 ரன்கள் சேர்த்தநிலையில் குல்தீப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த ஓமர்சாய் நிலைக்கவில்லை.

தமிழக வீரர் சாய் சுதர்சன் நிதானமாக ஆடி அரைசதம் அடித்து 39 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ராகுல் திவேட்டியா, ஷாருக்கான் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.

ஆனால் மனம் தளராமல் ஆடிய மில்லர் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். நார்க்கியா வீசிய 17-வது ஓவரில் 3 சிக்ஸர், ஒருபவுண்டரி என 24 ரன்கள் சேர்த்து ஆட்டத்துக்கு திருப்புமுனை ஏற்படுத்தினார். மில்லர் இருந்தவரை குஜராத் அணியின் வெற்றி மீது பசுமை காணப்பட்டது.

முகேஷ் குமார் வீசிய 18வது ஓவரில், மில்லர் 55 ரன்களில் விக்கெட்டை இழந்தவுடன் ஆட்டம் பரபரப்பாகியது, டெல்லி அணியின் கரங்கள் வலுக்கத் தொடங்கியது.

குஜராத் - டெல்லி

பட மூலாதாரம்,GETTY IMAGES

திக் திக் கடைசி 2 ஓவர்கள்

களத்தில் சாய் கிஷோர், ரஷித் கான் இருந்தனர். கடைசி இரு ஓவர்களில் குஜராத் வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்டது. அறிமுக வீரர் ரசிக் சலாம் வீசிய 19-வது ஓவரில் ரஷித் கான் ஒரு பவுண்டரியும், சாய் கிஷோர் இரு சிக்ஸர்களையும் விளாசினார், ஆனால் கடைசிப்பந்தில் சாய் கிஷோர் க்ளீன் போல்டாகி 13 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. ரஷித் கான், மோகித் சர்மா களத்தில் இருந்தனர். முகேஷ் குமார் கடைசி ஓவரை வீச, ஸ்ட்ரைக்கில் ரஷித்கான் இருந்தார்.

முகேஷ் ஓவரில் முதல் இரு பந்துகளிலும் ரஷித் கான் இரு பவுண்டரிகளை விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அடுத்த 2 பந்துகள் டாட் பந்துகளாக மாறவே 5வது பந்தில் ரஷித் கான் சிக்ஸர் விளாச ஆட்டம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியது. கடைசிப் பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை, பவுண்டரி அடித்தால் சூப்பர் ஓவர் என்ற நிலை இருந்தது. ஆனால் முகேஷ் குமார் பவுன்ஸராக வீசவே அதில் ரஷித் கான் ரன்அடிக்காமல் போக 4 ரன்னில் குஜராத் அணி தோற்றது.

"போராடினோம் வெற்றி கிடைக்கவில்லை"

குஜராத் கேப்டன் சுப்மான் கில் கூறுகையில் “ நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம் என நினைக்கிறேன். கடைசியில் கிடைத்த தோல்வி வேதனையாக இருக்கிறது, ஆனால், போராட்டத்தை வெளிப்படுத்தினோம். 224 ரன்கள் சேஸிங் எளிதானது அல்ல. முதல்பந்திலிருந்தே அடித்து ஆட வேண்டும். இம்பாக்ட் ப்ளேயர் பங்கு பெரியஸ்கோருக்கு வழிவகுக்கிறது. 200 ரன்களுக்குள் சுருட்ட நினைத்தோம் ஆனால் முடியவில்லை. கடைசி 2 ஓவர்களில் அதிக ரன்களை விட்டுவிட்டோம். சிறிய மைதானம் என்பதால் பவுண்டரி, சிக்ஸர் எளிதாக இருந்தது.” எனத் தெரிவித்தார்.

 
குஜராத் - டெல்லி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அசத்திய அக்ஸர் படேல்

டெல்லி அணியின் ஆல்ரவுண்டர் எனக் கூறப்பட்ட அக்ஸர் படேல் அதை நேற்று நிரூபித்துவிட்டார். டேவிட் வார்னர் காயத்திலிருந்து குணமாகாத நிலையில் 3வது வீரராக அக்ஸர் படேல் களமிறக்கப்பட்டார். தனக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்த அக்ஸர் படேல் 30 ரன்களைக் கடக்கும் வரை ஒரு பவுண்டரி மட்டுமே அடித்து, பெரும்பாலும் ஒரு ரன், 2 ரன்களாக மெதுவாகவே ஆடினார். ஒரு கட்டத்துக்குப்பின்புதான் சிக்ஸர், பவுண்டரிகளை விளாசி 2வது ஐபிஎல் அரைசதத்தை நிறைவு செய்து 66 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்துக்கு துணையாக பேட் செய்து 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

பந்துவீச்சிலும், பீல்டிங்கிலும் அக்ஸர் சிறப்பான பங்களிப்பு செய்தார். கேப்டன் கில் விக்கெட்டை வீழ்த்துவதில் அக்ஸர் படேல் பிடித்த கேட்ச் பெரிய திருப்புமுனையாகவும், பெரியவிக்கெட்டாகவும் அமைந்தது. அதேபோல குல்தீப் ஓவரில் சாஹா அடித்த ஷாட்டை ஒற்றைக் கையில் அக்ஸர் கேட்ச் பிடித்து பாட்ர்னர்ஷிப்பை உடைத்தார். பவர்ப்ளேயில் ரசிக் சலாம் முதல் ஓவர் முதல்பந்தில் சுதர்சன் அடித்த கேட்சை அக்ஸர் தவறவிட்டாலும், அடுத்தமுறை லாங்ஆன் திசையில் கேட்ச் பிடித்து சுதர்சனை வெளியேற்றினார்.

அக்ஸர் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டார். 3 ஓவர்கள் வீசிய அக்ஸர் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர்28 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 11வது ஓவரில் ஓமர்சாயை விக்கெட்டை வீழ்த்தி குஜராத்துக்கு நெருக்கடி ஏற்படுத்தினார் அக்ஸர் படேல்.

https://www.bbc.com/tamil/articles/c3g5494g9wjo

ipl-pt-24-04.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன?

ஆர்சிபி - ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

26 ஏப்ரல் 2024, 03:06 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி.

ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார்.

ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.

 
ஆர்சிபி - ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா?

ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும்.

ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும்.

அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது.

ஆர்சிபி - ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன?

ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும்.

ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர்.

அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது.

ஆர்சிபி - ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பொறுமையாக ஆடிய கோலி

விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது.

விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது.

இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான்.

கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது.

ஆர்சிபி - ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பந்துவீச்சில் பொறுப்புணர்வு

ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்?

ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.”

“இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.”

“ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார்

ஆர்சிபி - ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி

சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது.

ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது.

அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம்.

ஆர்சிபி - ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது.

பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.

 
ஆர்சிபி - ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பட்டிதார் அளித்த உத்வேகம்

ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது.

தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார்.

அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

https://www.bbc.com/tamil/articles/c80z102przro

ipl-pt-25-04.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன?

ஆர்சிபி - ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

26 ஏப்ரல் 2024, 03:06 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி.

ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார்.

ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.

 

ஆர்சிபி - ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா?

ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும்.

ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும்.

அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது.

ஆர்சிபி - ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன?

ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும்.

ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர்.

அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது.

ஆர்சிபி - ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பொறுமையாக ஆடிய கோலி

விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது.

விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது.

இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான்.

கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது.

ஆர்சிபி - ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பந்துவீச்சில் பொறுப்புணர்வு

ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்?

ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.”

“இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.”

“ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார்

ஆர்சிபி - ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி

சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது.

ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது.

அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம்.

ஆர்சிபி - ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது.

பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.

 

ஆர்சிபி - ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பட்டிதார் அளித்த உத்வேகம்

ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது.

தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார்.

அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

https://www.bbc.com/tamil/articles/c80z102przro

ipl-pt-25-04.jpg

முத‌ல் 5 இட‌த்தின் நிக்கும் அணிக‌ளில் 4அணிக‌ள் உள்ள‌ போகும் 

மீத‌ம் உள்ள‌ அணிக‌ள் வெளிய‌..............................

 

ஜ‌பிஎல்ல‌ கோப்பை தூக்காத‌ அணிக‌ள் என்றால்

 

வ‌ங்க‌ளூர்

ப‌ஞ்சாப்

டெல்லி

ல‌க்னோ

இந்த‌ 4 அணிக‌ள்......................................

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள்

பேட்டிங் வாண வேடிக்கை.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல்
  • எழுதியவர், அயாஸ் மேமன்
  • பதவி, கிரிக்கெட் எழுத்தாளர்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது.

நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள்.

இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்.

செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன.

ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே.

பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.

 

எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள்

பேட்டிங் வாண வேடிக்கை.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார்.

ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன.

ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை.

இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது.

செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது.

சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை.

இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம்.

டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.

 

இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன?

பேட்டிங் வாண வேடிக்கை.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன.

டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது.

இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர்.

அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன.

உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது.

சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது.

கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம்.

இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.

 

பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை

பேட்டிங் வாண வேடிக்கை.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட்.

வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம்.

"ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார்.

நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது.

முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன்.

டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும்.

https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ பல புதிய சாதனை நிகழ்த்தி இருக்கணும் ஒவ்வொரு அணியும்😁..............................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

KKR vs PBKS: பேர்ஸ்டோ விஸ்வரூபம், வெலவெலத்துப் போன கொல்கத்தா - பஞ்சாபின் வரலாற்று சேஸிங்

ஐபிஎல் 2024: KKR vs PBKS

பட மூலாதாரம்,SPORTZPICS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

2024 ஐபிஎல் சீசனில் ஒரு அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்பது நேற்றைய பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தெரிந்துவிட்டது.

'என்ன அடி... என்ன மாதிரியான ஷாட்கள்...' என்று ரசிகர்களைப் பிரமிக்க வைத்த ஆட்டம் நேற்று நடந்தது. களத்தில் நீயா-நானா பார்த்துவிடலாம் என்ற ரீதியில் கொல்கத்தா அணி வீரர்களும், பஞ்சாப் வீரர்களும் மோதினர். இரு அணி பேட்டர்களின் பேட்டில் இருந்து சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தவாறு இருந்தன.

கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் மட்டும் 37 பவுண்டரிகள், 42 சிக்ஸர்கள், 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஏறக்குறைய 10 ஓவர்களை ரசிகர்கள் வானத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்திருக்கும் அளவுக்கு பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தவாறு இருந்தன.

இதுவரை ஐபிஎல் டி20 தொடரில், டி20 போட்டிகளில் சேஸிங் செய்ய முடியாத ஸ்கோரை அடைந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய வரலாறு படைத்துள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ்.

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்தது. 262 ரன்கள் என்னும் கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் 8 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது.

 

வரலாற்று சேஸிங்

ஐபிஎல் 2024: KKR vs PBKS

பட மூலாதாரம்,SPORTZPICS

ஐபிஎல் டி20 போட்டியில், உலக டி20 வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 261 ரன்களை சேஸிங் செய்தது இல்லை.

ஆனால், அதையும் 8 பந்துகள் மீதமிருக்கும்போது சேஸிங் செய்து பஞ்சாப் கிங்ஸ் டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் டி20 லீக்கிலும் புதிய வரலாற்றையும், சாதனையையும் படைத்துள்ளது.

கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து சேர்த்த ஸ்கோரை பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சேஸிங் செய்து சவால்விட்டது.

பஞ்சாப் கிங்ஸ் பேட்டர்கள் பேர்ஸ்டோ, சஷாங் இருவரும் நேற்று இருந்த ஃபார்முக்கு 285 ரன்களைக்கூட சேஸிங் செய்திருப்பார்கள். இருவரும் மதம்பிடித்த யானை போல் பேட்டால் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வதம் செய்தனர்.

சவாலாக மாறும் பஞ்சாப்

இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் அடையவில்லை என்றாலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி, மற்ற அணிகளுக்கு அச்சத்தைத் தரும். அடுத்து வரும் போட்டிகளில் பஞ்சாப் அணி தொடர் வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்று இன்னும் கடும் போட்டி நிறைந்ததாக மாறிவிடும்.

பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியால் 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.187 என்ற ரீதியில் இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பஞ்சாப் அணி பெறும் வெற்றி, புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும்.

கொல்கத்தா அணி இந்தத் தோல்வியால் 2வது இடத்திலிருந்து சரியவில்லை. ஆனால் அந்த அணியின் நிகர ரன்ரேட் சரிந்துவிட்டது. இதற்கு முன் ஒரு புள்ளிக்கு மேல் நிகர ரன்ரேட் வைத்திருந்த கொல்கத்தா இந்தத் தோல்வியால் 0.972 ஆகக் குறைந்துவிட்டது. கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது.

 

பேர்ஸ்டோ விஸ்வரூபம்

ஐபிஎல் 2024: KKR vs PBKS

பட மூலாதாரம்,SPORTZPICS

பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை சந்தித்த 9 போட்டிகளிலும் பேர்ஸ்டோ ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்காமல் இருந்ததால், இந்த சீசன் அவருக்கு மோசமாக அமைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், நேற்று நிதானமாகத் தொடங்கிய பேர்ஸ்டோ, அதன்பின் கோடை இடி முழக்கம்போல் அடிக்கத் தொடங்கினார். பேர்ஸ்டோ பேட்டிலிருந்து தெறித்த பந்துகள் பெரும்பாலும் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறந்தன.

மிரட்டலாக பேட் செய்த பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதம் அடித்து, 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். பேர்ஸ்டோ கணக்கில் மட்டும் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் டி20 தொடரில் பேர்ஸ்டோ அடித்த 2வது சதம் இது.

மூன்று பார்ட்னர்ஷிப்பில் முடிந்த ஆட்டம்

அதேபோல பேர்ஸ்டோவுக்கு நெம்புகோலாக இருந்தது தொடக்க பேட்டர் பிரப்சிம்ரன் சிங். இவரின் அதிரடி ஆட்டத்தால் உற்சாகம் பெற்ற பேர்ஸ்டோ வெளுத்து வாங்கத் தொடங்கினார். பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.

அதேபோல சஷாங் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும்.

ஐபிஎல் ஏலத்தில் தவறிப்போய் வேறு சஷாங் சிங்கை எடுத்துவிட்டோமே என்று கவலைப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, தற்போது சஷாங் சிங் பெரிய சொத்தாக, முத்தாக மாறிவிட்டார்.

இந்த 3 பேட்டர்களும் சேர்ந்துதான் கொல்கத்தா அணி சேர்த்த இமாலய ஸ்கோரை எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றனர். பிரப்சிம்ரன் சிங்-பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப், ரூஸோ-பேர்ஸ்டோ 2வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப், சஷாங் சிங்-பேர்ஸ்டோ 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் என மொத்தமே 3 பார்ட்னர்ஷிப்பில் ஆட்டத்தை முடித்துவிட்டனர்.

 

நேற்றைய ஆட்டத்தில் படைக்கப்பட்ட சாதனைகள்

ஐபிஎல் 2024: KKR vs PBKS

பட மூலாதாரம்,SPORTZPICS

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் சேஸிங் செய்தது டி20 வரலாற்றிலும், ஐபிஎல் டி20 வரலாற்றில் மிக அதிகபட்சம். இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 259 ரன்களை தென் ஆப்பிரிக்கா சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஐபிஎல் தொடரில் 224 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது, அந்த ரன்களைவிட 38 ரன்கள் கூடுதலாக சேஸிங் செய்துள்ளது.

இந்த ஆட்டத்தில் மட்டும் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் மும்பை-சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயும், கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையே 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது. அது நேற்றைய ஆட்டத்தில் முறியடிக்கப்பட்டது.

சேஸிங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணி 24 சிக்ஸர்களை நேற்று விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த 2வது அதிகபட்ச சிக்ஸர்களாகும். ஐபிஎல் வரலாற்றில் சேஸிங் செய்யும் அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பஞ்சாப் பெற்றது. இதற்கு முன் ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் 22 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

இந்த ஆட்டத்தில் மட்டும் 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் டி20 போட்டிகளில் இரு அணிகள் சேர்ந்து சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் இது. கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் சேர்ந்து 549 ரன்கள் சேர்த்தன.

கொல்கத்தா, பஞ்சாப் அணிகளில் 4 தொடக்க ஆட்டக்காரர்கள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71), பிரப்சிம்ரன் சிங்(54), ஜானி பேர்ஸ்டோ(108) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் 50 ரன்களுக்கு மேல் குவித்தது இதுதான் முதல்முறை. டி20 போட்டியில் இது 11வது முறை. 4 தொடக்க ஆட்டக்காரர்களும் சேர்ந்து 308 ரன்கள் சேர்க்கப்பட்டது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை.

இந்த ஆட்டத்தில் 5 பேட்டர்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் வைத்து அரைசதம் அடித்ததும் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. சால்ட்(25பந்துகள்), நரைன்(23பந்துகள்), பிரப்சிம்ரன்(18), பேர்ஸ்டோ(23), சஷாங் சிங்(23) ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை 200க்கு மேல் வைத்திருந்தனர்.

டி20 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி 7வது முறையாக வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது. இதுதான் டி20 போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச சேஸிங். மும்பை இந்தியன்ஸ், இந்தியா, ஆஸ்திரலேியா, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் 5 முறை மட்டுமே 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளன.

 

பந்துவீச்சாளர்கள் பாவம்

ஐபிஎல் 2024: KKR vs PBKS

பட மூலாதாரம்,SPORTZPICS

கொல்கத்தா ஈடன் கார்டன் போன்ற பேட்டர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட, சொர்க்கபுரி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிலைமை படுமோசமாகும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களும் துவைத்து எடுக்கப்பட்டனர்.

இரு அணிகளிலும் சுனில் நரைன், ராகுல் சாஹர் இருவர்தான் ஒற்றை இலக்கத்தில் ரன்ரேட்டை வைத்திருந்தனர். மற்ற வகையில் இரு அணிகளின் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 15 ரன்களை வாரி வழங்கினர். இதுபோன்ற பேட்டர்களுக்கு மட்டும் சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணியாக மாற்றப்படுகிறார்கள்.

குறிப்பாக ரஸல், ரபாடா, அங்குல் ராய், சாம்கரன், ஹர்சல் படேல், வருண், ஹர்சித் ராணா, சமீரா ஆகியோர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 17 ரன்கள் விளாசப்பட்டன.

டி20 போட்டி "ரசிகர்களின் ரசிப்புத்தன்மையை அதிகப்படுத்துவதற்காக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேட்டர்களுக்கு மட்டும் உதவும் விக்கெட்டாக மாற்றுவது ஆட்டத்தை ஒருதரப்பாகவே கொண்டு செல்லும். இதில் பந்துவீச்சாளர்களின் பணி, அவர்களுக்கான அறம், மரியாதை அறவே இல்லாமல் போகும்," என்ற விமர்சனம் ஒருபுறம் இதனால் முன்வைக்கப்படுகிறது.

பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஆடுகளம் அமைக்கப்பட்டால்தான் ஆட்டம் சுவாரஸ்யமாகச் செல்லும்.

பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றப்படும்போது, பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை உடைக்கப்படும், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்து அடுத்தடுத்த போட்டிகளில் அவர்களின் திறமை பாதிக்கப்படும். எதிர்காலத்தில் இளம் தலைமுறைகள்கூட பேட்டர்களாக மாற விரும்புவார்களே தவிர பந்துவீச்சாளர்கள் மீது வெறுப்பு உண்டாகிவிடும். இதுபோன்ற பேட்டர்களுக்கான விக்கெட் என்பது வீடியோ கேம் பார்த்த உணர்வுதான் ரசிகர்களுக்கு ஏற்படும்.

 

கொல்கத்தா என்ன செய்யப் போகிறது?

ஐபிஎல் 2024: KKR vs PBKS

பட மூலாதாரம்,SPORTZPICS

கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்ள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71) இருவரும் அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த பேட்டர்கள் வெங்கடேஷ் (39), ரஸல்(24), ஸ்ரேயாஸ்(28) என கேமியோ ஆடி உயிரைக் கொடுத்து 261 ரன்கள் சேர்த்தனர்.

பெரும்பாலும், 120 பந்துகளைக் கொண்ட டி20 போட்டியில் 262 ரன்களை சேஸிங் செய்வது என்பது மிகக்கடினமானது என்று பார்க்கப்பட்டது. 261 ரன்களை அடித்துவிட்டோம் வெற்றி உறுதி என்ற மனநிலையுடன் இருந்த கொல்கத்தா அணிக்கு நேற்றைய சேஸிங் சம்மட்டி அடியாக இறங்கியுள்ளது. 261 ரன்கள் என்பதே மிகப்பெரிய ஸ்கோர் இதையே சேஸிங் செய்துவிட்டதால், எந்த ஸ்கோர் பாதுகாப்பானது என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் 160 ரன்கள் அடித்து ஐபிஎல் தொடரில் டிபெண்ட் செய்யும் அணிகள் இருக்கும் நிலையில் 261 ரன்கள் சேர்த்தும் கொல்கத்தா அணியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பது அந்த அணியின் பந்துவீச்சு மீதும், திறன் மீது பெரிய கேள்வியை எழுப்புகிறது.

பஞ்சாப் அணியை 261 ரன்களை சேஸிங் செய்ய அனுமதித்த பந்துவீச்சாளர்கள் மீது குறை சொல்வதா, அல்லது பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றியதைக் குறை சொல்வதா என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் கொல்கத்தா நிர்வாகம் இருக்கிறது. ஆனால், 261 ரன்களைக்கூட டிபெண்ட் செய்ய முடியாவிட்டால், நிச்சயமாக பந்துவீச்சில் பெரிய சிக்கல் ஏதோ இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.

இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டர்களை சிந்திக்க வைக்கும் அளவுக்கு, நெருக்கடி தரும் அளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். இரு ஓவர்களில் நெருக்கடியாக பந்துவீசியிருந்தால் ஆட்டம் மாறியிருக்கும்.

இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருவர்கூட யார்க்கர் வீசவில்லை, ஸ்லோபால் பவுன்ஸர், ஷார்ட்பால் அதிகம் வீசவில்லை. பந்துவீச்சில் வேரியேஷன் என்பதே பெரிதாக இல்லாமல் பேட்டர்களின் பேட்டை நோக்கியே பந்து வீசப்பட்டது பேட்டர்களின் பணியை இன்னும் எளிதாக்கியது. ஆதலால், கொல்கத்தா அணி நிர்வாகம் பந்துவீச்சு குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

 

‘அறியப்படாத ஹீரோ’ சஷாங் சிங்

ஐபிஎல் 2024: KKR vs PBKS

பட மூலாதாரம்,SPORTZPICS

சஷாங் சிங், அஷுடோஷ் சர்மா இருவரும் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கிடைத்த இரு சொத்துகள் என்று கூறலாம். பஞ்சாப் அணி கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தோல்வி அடைந்த ஆட்டங்களில் ஆட்டத்தை ஒற்றை பேட்டராக இழுத்து வந்தவர் சஷாங் சிங்.

ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தாவை சேர்ந்த சஷாங் சிங்கை வாங்குவதற்குப் பதிலாக இந்த சஷாங் சிங்கை ரூ.20 லட்சத்துக்கு வாங்கிவிட்டோமே என்ற கவலையில் இருந்தது. ஆனால், சஷாங் சிங் ஆட்டம் என்பது அவரின் விலையான ரூ.20 லட்சத்துக்கும் அதிகமானது என்பதை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் புரிந்து கொண்டுள்ளது.

பிகாரை சேர்ந்த சஷாங் சிங், சத்தீஸ்கர், மும்பை, புதுச்சேரி அணிகளுக்குக்கூட ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளார். தனது திறமையை அங்கீகரிக்க ஒரு ஆட்டம் கிடைக்காதா என்று ஏங்கியவர் சஷாங் சிங். மும்பை, சத்தீஸ்கர் கிரிக்கெட் வட்டாரங்கள் அறிந்திருந்த சஷாங் சிங்கை இந்தியா முழுவதும் யாரும் இதற்கு முன் அறியவில்லை.

ஆனால் கடந்த சில போட்டிகளாக சஷாங் சிங் அடிக்கும் அடி, ஆட்டத்தின் திறமை, உலக கிரிக்கெட்டை திரும்பப் பார்க்க வைத்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட முடியுமா என்று கேட்கும் அளவுக்கு சஷாங் சிங் ஆட்டம் பேசப்பட்டு வருகிறது.

ஐபிஎல் 2024: KKR vs PBKS

பட மூலாதாரம்,SPORTZPICS

பஞ்சாப் அணியில் வழக்கமாக 6வது வரிசையில் களமிறங்கும் சஷாங் சிங், நேற்று முதல்முறையாக 4வது வீரராகக் களமிறங்கினார். களமிறங்கி 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் வருண் பந்தவீச்சில் சஷாங் சிக்ஸர் பறக்கவிட்டார்.

ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி என்பது சவாலாக இருந்த நிலையில் சஷாங் சிங் களமிறங்கிய பின் அது இலகுவானது. சமீரா ஓவரில் ஸ்வாட், ஸ்கூப், புல் ஷாட் என 3 விதங்களில் சஷாங் சிங் சிக்ஸர் விளாசி, வெற்றியை எளிதாக்கினார்.

அது மட்டுமல்லாமல் ஹர்சித் ராணா, ராமன்தீப் ஓவரிலும் சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார் சஷாங் சிங். 23 பந்துகளில் அரைசதத்தை சஷாங் அடைந்து 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் மட்டும் 8 சிக்ஸர்கள் அடங்கும்.

பேஸ்பால் ஆட்டமா?

பஞ்சாப் சிங்ஸ் கேப்டன் சாம் கரன் வெற்றிக்குப் பின் கூறுகையில், “இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, முக்கியமானவெற்றி. கிரிக்கெட் பேஸ்பாலாக மாறிவிட்டதா என எனக்குத் தோன்றியது.

கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தவறவிட்டது கடினமாக இருந்தது. நாங்கள் ஸ்கோரை பார்க்கவில்லை, வெற்றியை மட்டும்தான் பார்த்தோம்.

பேர்ஸ்டோ மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது அருமை. இந்த சீசனில் நாங்கள் கண்டறிந்த சிறந்த வீரர் சஷாங் சிங். அவருக்கான பணியை இன்றும் சிறப்பாகச் செய்தார். கொல்கத்தாவில் கிடைத்த பெரிய வெற்றியை நாங்கள் ரசிக்கிறோம்,” என்று தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/ckdq2ygdqpdo

ipl-pt-26-04.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரி20யில் மிகப் பெரிய வெற்றி இலக்கை விரட்டிக் கடந்து உலக சாதனை படைத்தது பஞ்சாப் கிங்ஸ்

27 APR, 2024 | 06:44 AM
image

(நெவில் அன்தனி)

கொல்கத்தா ஈடன் கார்ட்ன் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 42ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்த்தாடிய பஞ்சாப் கிங்ஸ் உலக சாதனையுடன் 8 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 262 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 18.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 262 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.

இதன் மூலம் சகலவிதமான ரி20 கிரக்கெட் போட்டிகளிலும் மிகப் பெரிய வெற்றி இலக்கை விரட்டிக் கடந்த அணி என்ற உலக சாதனையை பஞ்சாப் கிங்ஸ் படைத்தது.

கடந்த வருடம் நடைபெற்ற சர்வதேச ரி20 போட்டி ஒன்றில் மேற்கிந்தியத் தீவுகளினால் நிர்ணயிக்கப்பட்ட 259 ஓட்டங்களே தென் ஆபிரிக்காவினால் கடக்கப்பட்ட மிகப் பெரிய வெற்றி இலக்காக இதற்கு முன்னர் இருந்தது.

ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் சிக்ஸ்களுக்கும் பவுண்டறிகளுக்கும் பஞ்சமில்லாமல் கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட அப் போட்டியில் 42 சிக்ஸ்கள் மொத்தமாக விளாசப்பட்டது. இதுவும் ரி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் குவிக்கப்பட்ட அதிகூடிய சிக்ஸ்களுக்கான உலக சாதனையாகும்.

சன்ரைசர்ஸ் - மும்பை ஐபிஎல் போட்டியிலும், பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஐபிஎல் போட்டியிலும் இந்த வருடம் தலா 38 சிக்ஸ்கள் மொத்தமாக குவிக்கப்பட்டதே போட்டி ஒன்றில் பெறப்பட்ட அதிக சிக்ஸ்களுக்கான சாதனையாக  இதற்கு முன்னர்  இருந்தது.

பஞ்சாபின் வெற்றியில் ஜொனி பெயாஸ்டோவின் ஆட்டம் இழக்காத சதம், ப்ரப்சிம்ரன் சிங், ஷஷாங்க் சிங் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் என்பன முக்கிய பங்காற்றின.

பஞ்சாப் கிங்ஸ் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது ப்ரப்சிம்ரன் சிங், ஜொனி பெயாஸ்டோவ் ஆகியோர் பவர் ப்ளேயில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

ப்ரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 4 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 54 ஓட்டங்களைக் குவித்தார்.

தொடர்ந்து பெயாஸ்டோவ், ரைலி ருசோவ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 39 பந்துகளில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ருசோவ் 16 பந்துகளில் 26 ஓட்டங்களைப் பெற்றார்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஜொனி பெயாஸ்டோவ், ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 37 பந்துகளில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதிசெய்தனர்.

ஜொனி பெயாஸ்டோவ் 48 பந்துகளில் 8 பவுண்டறிகள், 9 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 108 ஓட்டங்களையும் ஷஷாங்க் சிங் 28 பந்துகளில் 2 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 68 ஓட்டங்களையும் குவித்தனர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 261 ஓட்டங்களைக் குவித்தது.

பில் சோல்ட், சுனில் நரேன் ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 62 பந்துகளில் 138 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

சுனில் நரேன் 32 பந்துகளில் 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 71 ஓட்டங்களைக் குவித்தார்.

மொத்த எண்ணிக்கை 163 ஓட்டங்களாக இருந்தபோது பில் சோல்ட் 37 பந்துகளில் 6 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 75 ஓட்டங்களை விளாசினார்.

தொடர்ந்து வெங்கடேஷ் ஐயர் (39), அண்ட்றே ரசல் (24) அணித் தலைவர் ஷ்ரயேஸ் ஐயர் (28) ஆகியோரும் சிக்ஸ்களை விளாசி துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.

பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இப் போட்டியில் இரண்டு அணிகளிலும் துடுப்பெடுத்தாடிய 11 பேரில் ஒருவரைத் தவிர மற்றைய எல்லோரும் சிக்ஸ்கள் விளாசியிருந்தது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.

https://www.virakesari.lk/article/182064

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@கந்தப்பு

என்ன‌ உங்க‌ட‌ ஆள் ஜ‌பிஎல்ல‌ இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டிலும் அச‌த்தி விட்டார் க‌ந்த‌ப்பு அண்ணா.........................

Jake Fraser-McGurk இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் அவுஸ்ரேலியா அணியின் ந‌ம்பிக்கை ந‌ச்ச‌த்திர‌ம் இவ‌ரா தான் இருப்பார் க‌ந்த‌ப்பு அண்ணா.........................................🙏🥰..................

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆகா தொடங்கிட்டாங்க ............................
    • டயகம சிறுமி விவகாரம்: ரிசாத் பதியுதீன் விடுதலை! 3 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு சொந்தமான வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய டயகம சிறுமி தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து ரிசாத் பதியுதீன் விடுவிக்கப்பட்டுள்ளார். சிறுமியை பணிப்பெண்ணாக கொடுத்ததாக கூறப்படும் முதலாம் சந்தேகநபரான பொன்னையா பண்டாரம், இரண்டாவது சந்தேகநபரான ரிஷாத் பதியுதீனின் மாமனார் என கூறப்படும் அலி இப்ராஹிம் கிதார் மொஹமட் மற்றும் மூன்றாவது சந்தேகநபர் ரிசாத் பதியுதீனின் மனைவியான கிதார் மொஹமட் ஷிஹாப்தீன் ஆயிஷா அவர்கள் மீது இவ்வாறான வழக்கை தாக்கல் செய்திருந்திருந்தனர். அதன்படி சம்பவம் தொடர்பில் ரிசாத் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை பணிப்பெண்ணாக அமர்த்திய நபர் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடருமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டதுடன், நான்காவது சந்தேகநபர் ரிசாத் பதியுதீன் மற்றும் ஐந்தாவது சந்தேகநபர் பதியுதீன் அப்துல் ரிஷாத் ஆகியோர் விடுதலை செய்தார் இந்த மூவருக்கும் எதிராக கொடுரமான வேலையாட்களை பணியமர்த்துதல், மனித கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு தெற்கு பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. டயகம பகுதியைச் சேர்ந்த ஹிஷாலினி ஜூட் குமார் என்ற சிறுமி, பதியுதீனின் வீட்டிற்கு பணிப்பெண்ணாக வந்திருந்த நிலையில், உடலில் தீப்பற்றியதால் உயிரிழந்துள்ளார். இவ்வாறு மரணம் நிகழ்ந்துள்ளது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்போது சிறுமிக்கு 15 வயது என்பதுடன் சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்ட பொரளை பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். மேலும் அந்த வீட்டில் பணிப்பெண்ணாக பல வருடங்கள் பணியாற்றிய நிலையில், 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி அவரது உடலில் தீப்பிடித்ததாகவும், பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 15 ஆம் திகதி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1382881
    • யாழில் நாய் இறைச்சி கொத்து. யாழ்ப்பாணத்தில், உணவகம் ஒன்றில் இருந்து பழுதடைந்த இறைச்சி மற்றும் கறிகள் மீட்கப்பட்டதை அடுத்து , உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாட்டிறைச்சி கொத்து வாங்கிய நபர் ஒருவருக்கு கொத்து ரொட்டியில் பழுதடைந்த இறைச்சி துண்டு காணப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த இறைச்சி துண்டு , மாட்டிறைச்சி போல் அல்லாது வேறு இறைச்சி போன்று காணப்பட்டதால் , அது குறித்து உணவகத்தில் இருந்தவாறே அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு குறித்த நபர் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்துள்ளார். இருந்த போதிலும் , பொது சுகாதார பரிசோதகர் சம்பவ இடத்திற்கு வராத காரணத்தால் , பழுதடைந்த இறைச்சி கொத்தினை புகைப்படம் எடுத்தும் , , கொத்து ரொட்டிக்கான விற்பனை சீட்டையும் பெற்றுக்கொண்டவர் , அது தொடர்பில் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரியிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பட்டின் பிரகாரம் சுகாதார பரிசோதகர் குழு குறித்த உணவகத்திற்கு சென்று சோதனையிட்ட போது , பழுதடைந்த இறைச்சிகள் மீட்கப்பட்டதுடன் , சுகாதார சீர்கேட்டுடன் உணவகம் காணப்பட்டதுடன் , இறைச்சியை கொள்வனவு செய்தமைக்கான பற்று சீட்டுக்கள் இல்லாதமை கண்டறியப்பட்டது. அதனை அடுத்து குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து , நீதிமன்ற விசாரணைகளில் உரிமையாளர் தன் மீதான குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , 65 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. அதேவேளை உணவகத்தில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பிலும் , பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தலுக்கு அமைய உணவகத்தில் திருத்த வேலைகள் செய்த பின்னர் அது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் அறிக்கை கிடைக்கப்பெற்று மன்று திருப்தி படும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. https://athavannews.com/2024/1382900
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : வர்த்தக நிலையங்கள் பூட்டு. முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் உணவகங்கள், மருந்தகங்கள் தவிர்த்த ஏனைய வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுச்சந்தை உள்ளிட்ட அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் கைவிடப்பட்டுள்ளதை எமது பிராந்திய செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார். https://athavannews.com/2024/1382941
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.