Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.பி.எல் 2024 - செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மும்பை அணி 6-வது தோல்வி: டெல்லியை கரை சேர்த்த இளம் புயல் பிரேசர் - மும்பை பிளேஆஃப் செல்லுமா?

MI vs DC

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 27 ஏப்ரல் 2024

ஐபிஎல் டி20 தொடரில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் “ ரன் திருவிழா” நடந்தது. மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்த டெல்லி, அதைத் துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி என இந்த ஆட்டத்திலும் 504 ரன்கள் குவிக்கப்பட்டன.

ஐபிஎல் டி20 தொடரில் தொடர்ந்து இரு நாட்கள் நடந்த ஆட்டத்திலும் 200க்கும் மேலாக இரு அணிகளும், 500க்கும் மேல் ஒரு ஆட்டத்திலும் தொடர்ந்து குவிக்கப்பட்டது இதுதான் முதல்முறையாகும்.

டெல்லியில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 43-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தது. 258 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் சேர்த்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஐபிஎல் வரலாற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணி தனது அதிகபட்ச ஸ்கோரை இன்று பதிவு செய்தது.இதற்கு முன் 2011ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக 231 ரன்கள் சேர்த்ததுதான் டெல்லி அணியின் அதிகபட்சமாகும்.

வாண வேடிக்கையுடன் தொடக்கம்

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். இதையடுத்து, டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. காயத்திலிருந்து வார்னர் இன்னும் முழுமையாக மீளாததையடுத்து, பிரேசர் மெக்ருக்குடன் இணைந்து அபிஷேக் போரெல் ஆட்டத்தைத் தொடங்கினார்.

உட் வீசிய முதல் ஓவர் முதல் பந்திலிருந்து பிரேசர் மெக்ருக் அதிரடியில் இறங்கினார். முதல் 3 பந்துகளில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை விளாசிய பிரேசர் 5வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். முதல் ஓவரிலேயே டெல்லி அணி 19 ரன்ரேட்டில் பயணித்தது.

பும்ரா வீசிய 2வது ஓவரில் நோபாலில் ஒரு சிக்ஸர், அடுத்து ஒரு பவுண்டரி, கடைசிப் பந்தில் ஒரு பவுண்டரி என பிரேசர் 18 ரன்கள் விளாசினார். இந்த சீசனில் பும்ரா முதல் ஓவரில் விட்டுக்கொடுத்த அதிகபட்ச ரன்களாக இது அமைந்தது.

3வது ஓவரை துஷாரா வீசினார். முதல் பந்தில் அபிஷேக் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் அவர் ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தைச் சந்தித்த பிரேசர் அடுத்தடுத்து 3 பவுண்டரிகளை விளாசிஅந்த ஓவரில் 18 ரன்கள் சேர்த்தனர். 2.4 ஓவர்களில் டெல்லி அணி 50 ரன்களை மின்னல் வேகத்தில் எட்டியது.

 
MI vs DC

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரேசர் அதிரடியால் மிரண்ட பாண்டியா

3 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் பிரேசர் காட்டடி ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கேப்டன் பாண்டியா விழிபிதுங்கி நின்றார். 4வது ஓவரை பியூஷ் சாவ்லா வீசினார். அந்த ஓவரையும் விட்டு வைக்காத பிரேசர் முதல் பந்தில் சிக்ஸர் விளாசி 15 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்து, அடுத்தபந்தில் பவுண்டரி விளாசினார்.

ஹர்திக் பாண்டியா வீசிய 5வது ஓவரை துவைத்து எடுத்த மெக்ருக் 2 சிக்ஸர்கள், 2பவுண்டரிகள் என 20 ரன்கள் சேர்த்தார். பவர்ப்ளே முடிவில் டெல்லி கேபிடல்ஸ் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் சேர்த்தது.

பாண்டியா வீசிய 7-வது ஓவரிலும் மெக்ருக், அபிஷேக் இருவரு ம் ருத்ரதாண்டவம் ஆடினர். அபிஷேக் போரெல் ஒரு சிக்ஸர் பவுண்டரியும், மெக்ருக் ஒரு சிக்ஸரும் என 21 ரன்கள் விளாசினர்.

பியூஷ் சாவ்லா வீசிய 8-வது ஓவரில் டீப் மிட் விக்கெட் திசையில் முகமது நபியிடம் கேட்ச் கொடுத்து மெக்ருக் ஆட்டமிழந்தார். அவர், 27 பந்துகளில் 84ரன்கள் குவித்தார். இவரின் கணக்கில் 6 சிக்ஸர்கள், 11பவுண்டரிகள் அடங்கும். டெல்லி அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் கிடைத்தன.

MI vs DC

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஷாய் ஹோப் அதிரடி

அடுத்து களமிறங்கிய , அபிஷேக்குடன் சேர்ந்து நிதானமாக பேட் செய்தார். முகமது நபி வீசிய 10-வது ஓவரில் இறங்கி ஷாட் அடிக்க முற்பட்ட போரெல் 36 ரன்கள் சேர்த்த நிலையில் இஷான் கிஷனால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

3வதுவிக்கெட்டுக்கு கேப்டன் ரிஷப் பந்த் களமிறங்கி, ஹோப்புடன் சேர்ந்தார். முகமது நபி வீசிய 12-வது ஓவரில் ஹோப் 2 சிக்ஸர்கள் உள்பட 16 ரன்கள் சேர்த்தார். அணியின் ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் துஷாரா வீசிய 13-வது ஓவரில் ரிஷப் பந்த் பவுண்டரி, சிக்ஸர் விளாசி 12 ரன்கள் சேர்த்தார்.

உட் வீசிய 14-வது ஓவரை பதம் பார்த்த ஹோப் 2 சிக்ஸர்கள் விளாசிய நிலையில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து 17 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள் அடங்கும். 3வது விக்கெட்டுக்கு ஹோப் -ரிஷப் பந்த் கூட்டணி 53 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் களமிறங்கி, ரிஷப் பந்துடன் சேர்ந்தார். உட் வீசிய 17-வது ஓவரை துவைத்து எடுத்த ஸ்டெப்ஸ் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 26 ரன்கள் சேர்த்தார்.

MI vs DC

பட மூலாதாரம்,GETTY IMAGES

7வது முறையாக பும்ரா பந்தில் ரிஷப் அவுட்

பும்ரா வீசிய 19-வது ஓவரில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ரிஷப் பந்த் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடரில் பும்ரா வீசிய 46 பந்துகளைச் சந்தித்த ரிஷப் பந்த் 55 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார், 7-வது முறையாக பும்ரா பந்துவீச்சில் ரிஷப் பந்த் விக்கெட்டை இழந்துள்ளார். பும்ரா பந்துவீச்சில் இதுவரை ரிஷப் பந்த் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளார்.

4வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த்-ஸ்டெப்ஸ் கூட்டணி 55 ரன்கள் சேர்த்தனர். 6-வது விக்கெட்டுக்கு வந்த அக்ஸர் படேல், ஸ்டெப்ஸுடன் சேர்ந்தார். துஷாரா வீசிய கடைசி ஓவரில் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 17 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் சேர்த்தது.

2.4 ஓவர்களில் 50 ரன்களை எட்டிய டெல்லி கேபிடல்ஸ் அணி, அடுத்த 4 ஓவர்களில் அதாவது 6.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. 11.6 ஓவர்களில் 150 ரன்களையும், 16.1 ஓவர்களில் 200 ரன்களையும், 19.4 ஓவர்களில் 250 ரன்களையும் டெல்லி கேபிடல்ஸ் எட்டியது.

MI vs DC

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பை தோல்விக்கு காரணம் என்ன?

மும்பை அணி பவர்ப்ளே ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. ரோஹித் சர்மா(8), இஷான் கிஷன்(20), சூர்யகுமார் யாதவ்(26) ஆகியோர் ரன்ரேட் நெருக்கடி, அழுத்தம் காரணமாக தவறான ஷாட்களுக்கு முயன்று விக்கெட்டை இழந்தனர்.

ஆனால், நடுவரிசையில் கேப்டன் பாண்டியா(46) திலக் வர்மா(63) இருவரும் ஓரளவுக்கு நிலைத்து ஆடி நம்பிக்கை அளித்தனர். இருவரும் 4வது வி்க்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தனர். இதுதான் மும்பை அணியில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். அடுத்ததாக டிம் டேவிட்(37), திலக்வர்மா சேர்ந்து 6-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தனர். இந்த இரு பார்ட்னர்ஷிப்களைத் தவிர பெரிதாக ஏதும் அமையவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பெரிய பலமே தொடக்க வரிசை பேட்டர்கள்தான். ரோஹித், இஷான் கிஷன், ஸ்கை ஆகிய 3 வீரர்கள் இன்று சொதப்பியதால், ஒட்டுமொத்த ரன்ரேட் நெருக்கடியும், அழுத்தமும் நடுவரிசை பேட்டர்கள் மீது விழுந்தது. அதிலும் மிகப்பெரிய இலக்கைத் துரத்தும்போது, தேவைப்படும் ரன்ரேட் அதிகரிக்கும் போது பதற்றத்தில் தவறான ஷாட்களை ஆடி விக்கெட்டுகளை இழக்க நேரிடும். அப்படித்தான் பாண்டியா விக்கெட்டை இழந்தார்.

 
MI vs DC

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பை அணியும் வெற்றிக்கான இலக்கை விடாமல் துரத்திய நிலையில் ராஸிக் சலாம் வீசிய 17வது ஓவர்தான் டெல்லி அணிக்கு திருப்புமுனையாக மாறியது. 24 பந்துகளில் மும்பை அணி வெற்றிக்கு 71 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரசிக் சலாம் 17-வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய 7ரன்கள் மட்டுமே கொடுத்து மும்பை பேட்டர்களை ரன்ரேட் நெருக்கடியில் தள்ளினார். இந்த ஓவரில் மும்பை அணி கூடுதலாக 10 ரன்கள் சேர்த்திருந்தால் வெற்றி கை மாறியிருக்கும்.

210 ரன்கள் வரை மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் அடுத்த 37 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை ரன்ரேட் பதற்றத்தில் இழந்தது. டிம் டேவிட்(37), முகமது நபி(7), சாவ்லா(10), திலக் வர்மா ஆகியோர் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தது. 20வது ஓவரின் முதல் பந்தில் திலக் வர்மா ரன் அவுட் ஆகியதுமே மும்பை இந்தியன்ஸ் தோல்வி உறுதியாகியது.

அதிரடி நாயகன் மெக்ருக்

டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் இளம் ஆஸ்திரேலிய பேட்டர் ஜேக் பிரேசர் மெக்ருக்கின் அதிரடியான பேட்டிங்கும், இளம் பந்துவீச்சாளர் ரஷிக் சலாமின் பந்துவீச்சும்தான். ஜேக் பிரேசரின் அதிரடியான ஆட்டத்தால் டெல்லி அணி பவர்ப்ளே ஓவர் கடந்து 4 பந்துகளில் 100 ரன்களை எட்டிவிட்டது. 2.4 ஓவர்களில் 50 ரன்களைத் தொட்டது.

மும்பை பந்துவீச்சை துவைத்து எடுத்த பிரேசர் 15 பந்துகளில் அரைசதம் அடித்து, ஆட்டநாயகன் விருது வென்றார். டெல்லி அணிக்கு நீண்டகாலத்துக்குப்பின் கிடைத்துள்ள சிறந்த தொடக்க வீரராக பிரேசர் திகழ்கிறார். காயத்திலிருந்து வார்னரும் மீண்டுவந்து அணியில் சேர்ந்தால் டெல்லி அணி இன்னும் வலிமை பெறும்.

MI vs DC

பட மூலாதாரம்,GETTY IMAGES

இளம் வீரர் சலாம் அசத்தல்

அதேபோல, பந்துவீச்சில் ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்ட இளம் பந்துவீச்சாளர் அறிமுகமாகிய 2வது போட்டியிலேயே 4 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். குறிப்பாக ஹர்திக் பாண்டியா, நேகல் வதேரா, முகமது நபி விக்கெட்டுகளை சாய்த்து மும்பை அணியை தோல்விக் குழிக்குள் சலாம் தள்ளினார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு மெக்ருக் தவிர்த்து, ஷாய் ஹோப் கேமியோ ஆடி 41 ரன்கள் சேர்த்தது, டிரிஸ்டென் ஸ்டப்ஸ் அதிரடியாக 48 ரன்கள் சேர்த்தது என இருவரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தனர். இது தவிர கேப்டன் ரிஷப் பந்த் 29 ரன்கள், அபிஷேக் போரெல் 36 ரன்கள் சேர்த்து ஸ்கோர் உயர்வுக்கு உதவினர்.

என்ன சொல்கிறார் பாண்டியா?

தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ இதுபோன்ற ஆட்டங்களில் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். நாங்களும் இலக்கை விரட்ட முயன்றோம். நடுப்பகுதி ஓவர்களில் ஆட்டம் எங்கள் பக்கம் திரும்ப வாய்ப்பு இருந்தது. ஆனால் தவறவிட்டோம். டெல்லி வீரர் மெக்ருக் பேட்டிங் செய்த விதம் என்னை வியக்க வைத்தது. எந்தவிதமான பயமும் இன்றி அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சையும் வெளுத்து வாங்கினார்” எனத் தெரிவித்தார்.

MI vs DC

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெல்லி அணி முன்னேற்றம்

இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 10 போட்டிகளில் 5 வெற்றி, 5 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. ஆனால், நிகர ரன்ரேட்டில் இன்னும் டெல்லி கேபிடல்ஸ் அணி மைனஸைக் கடக்காமல் 0.276 என்ற ரீதியில்தான் இருக்கிறது.

தற்போது 10 புள்ளிகளுடன் 4 அணிகள் உள்ளன. கொல்கத்தா, சன்ரைசர்ஸ், லக்னெள, டெல்லி அணிகள் இருப்பதால் முதல் 4 இடங்களுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான்-லக்னெள அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் முடிவும், சிஎஸ்கே-சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தின் முடிவும் புள்ளிப்பட்டியலில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தும்.

காத்திருக்கும் திருப்பங்கள்

டெல்லி அணிக்கு இன்னும் 4 லீக் ஆட்டங்கள் மட்டுமே மீதம் இருப்பதால், அதில் அனைத்திலும் வென்றால் 8 புள்ளிகள் பெற்று 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லலாம். இதில் ஒன்று தோற்றாலும், நிகரரன்ரேட் அடிப்படையில் மற்ற அணிகள் பெரிய நெருக்கடி கொடுக்கும். ஏனென்றால், சன்ரைசர்ஸ், கொல்கத்தா, லக்னெள அணிகள் 8 ஆட்டங்களே ஆடியிருப்பதால், இன்னும் அந்த அணிக்கு 6 லீக் ஆட்டங்கள் இருப்பதால், அவர்களுக்கு வாய்ப்புக் கதவுகள், டெல்லியை விட பரந்து விரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
MI vs DC

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பை ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி?

அதேசமயம், மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்விகள் என 6புள்ளிகளுடன் 9-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. அடுத்தடுத்த வெற்றியால் முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் தோல்வியால் பின்னடைவைச் சந்தித்துள்ளது. நிகர ரன்ரேட்டிலும் மைனஸ் 0.261 என்ற ரீதியில் இருக்கிறது.

மும்பை அணிக்கு இன்னும் 5 லீக் ஆட்டங்களே இருப்பதால், அனைத்திலும் கட்டாய வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் பாதுகாப்பாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும். இதில் ஒரு ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும், 14 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு பல அணிகள் போட்டியிடும், அப்போது நிகர ரன்ரேட் சிக்கல் ஏற்படலாம். ஆதலால் வரும் ஆட்டங்களில் மும்பை அணி நிகர ரன்ரேட்டை உயர்த்தும்வகையிலும் விளையாடுவது அவசியமாகும். மும்பை இந்தியன்ஸ் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு என்று அந்த அணியின் அடுத்த இரு தோல்விகளில் முடிவு எழுதப்பட்டுவிடும்.

https://www.bbc.com/tamil/articles/c060nmm2ek1o

LSG vs RR: ராஜஸ்தானை கரைசேர்த்த சஞ்சு சாம்சன், ஜூரெல் - குழம்பி நின்ற கே.எல்.ராகுல்

ஐபிஎல் 2024: LSG vs RR

பட மூலாதாரம்,SPORTZPICS

5 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த சில நாட்களாக ஐபிஎல் டி20 தொடரில் 200 ரன்களுக்கு மேல் ஒரு அணி அடித்தாலே அது பாதுகாப்பில்லாத ஸ்கோராக மாறி வந்தது. தற்போதைய ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக கொல்கத்தாவின் 261 ரன்களை சேஸிங் செய்த பஞ்சாப், எதுதான் பாதுகாப்பான ஸ்கோர் என்று அணிகளை யோசிக்க வைத்துள்ளது.

அப்படியிருக்கும்போது, 197 ரன்கள் ஸ்கோரை வைத்துக்கொண்டு டிபெண்ட் செய்ய நினைப்பதும், அதற்கான முயற்சியில் ஈடுபடுவதும் சற்று கடினமானதுதான். இருப்பினும் 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்த அணிகளின் முன் 197 ரன்கள் இலக்கு இலகுவாகத்தான் தெரியும்.

அதுபோலத்தான் நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் இருந்தது.

லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 43வது லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த லக்னெள அணி 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் சேர்த்தது. 196 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு ஓவர் மீதமிருக்கையில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

 

ப்ளே ஆஃப் வாய்ப்பு

ஐபிஎல் 2024: LSG vs RR

பட மூலாதாரம்,SPORTZPICS

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இருப்பினும் நிகர ரன்ரேட் 0.694 என்ற அளவில்தான் இருக்கிறது, இன்னும் ஒரு புள்ளி அளவைத் தொடவில்லை.

ராஜஸ்தான் அணிக்கு இன்னும் 5 லீக் ஆட்டங்கள் மீதமிருக்கையில் இன்னும் குறைந்தபட்சம் 2 போட்டிகளில் வென்றாலே ப்ளே ஆஃப் சுற்று உறுதியாகிவிடும். இ்ப்போது 16 புள்ளிகள் என்ற நிலையில் ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஏற்றதுதான் என்றாலும், நிகர ரன்ரேட்டை உயர்த்துவது அவசியமாகிறது.

அதேநேரம், லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்வி என 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் நீடிக்கிறது. நிகர ரன்ரேட் 0.059 என்ற பாதுகாப்பில்லாத நிலையில் இருக்கிறது. அடுத்து ஒரு போட்டியில் தோற்றால்கூட நிகர ரன்ரேட் லக்னெளவுக்கு மைனசில் சென்றுவிடும்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் நேற்றைய வெற்றியால் அந்த அணியும் 10 புள்ளிகளுடன் லக்னெள அணிக்கு குடைச்சலாக வரத் தொடங்கியுள்ளது. டாப் 4 அணிகளில் லக்னெள இடம் பெற அடுத்து வரும் 5 லீக் ஆட்டங்களில் குறைந்தபட்சம் 4 போட்டிகளில் வெல்வது அவசியம்.

ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் கேப்டன் சஞ்சு சாம்ஸன்தான். துருவ் ஜூரெலை வைத்துக்கொண்டு 3வது விக்கெட்டுக்கு 121 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து இலக்கை அடைந்து அணியை வெற்றிபெற வைத்தார். அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போது ஒரு கேப்டன் செய்ய வேண்டிய பணியை சிறப்பாகச் செய்து ஒரு கேப்டனாகவும், சிறந்த பேட்டராகவும் சாம்ஸன் நிரூபித்துள்ளார்.

சிறப்பாக பேட் செய்த சாம்ஸன் 33 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்து (4சிக்ஸர், 7பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். கடந்த சில போட்டிகளில் ஜூரெலின் அதிகபட்ச ஸ்கோர் 10 ரன்களை கடக்கவில்லை. ஆனால், ஜூரெலுக்கு தேவையான நம்பிக்கையளித்து, அவரை பேட் செய்ய வைத்த பெருமை சாம்ஸனுக்கே சேரும்.

அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜூரெல் 34 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து (2சிக்ஸர், 5பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 4வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

 

'சரியான திசையில் செல்கிறோம்'

ஐபிஎல் 2024: LSG vs RR

பட மூலாதாரம்,SPORTZPICS

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சாம்ஸன் கூறுகையில், “புதிய பந்தில் பேட் செய்வதைவிட, பழைய பந்தில் பேட் செய்தபோது, விக்கெட் நன்கு ஒத்துழைத்தது. இந்த வெற்றி அணியின் ஒற்றுமைக்குக் கிடைத்தது.

டெத் ஓவர்களில் நாங்கள் சிறப்பாகப் பந்து வீசினோம். ஒவ்வொரு ஓவரையும் திட்டமிட்டு, நீண்ட ஆலோசனை செய்து பந்து வீசினோம். தொடக்கத்திலும், டெத் ஓவரிலும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. ஆனால், நடுப்பகுதி ஓவர்களில் ஆட்டம் லக்னெள பக்கம் சென்றது.

ஜூரெல் தற்காலிகமாக ஃபார்மின்றி இருந்தார், உண்மையில் டி20 கிரிக்கெட்டில் 5வது பேட்டராக வருவது கடினமான பணி. துருவ் திறமை மீது நம்பிக்கை இருந்தது, கடினமாக பேட்டிங் பயிற்சி எடுத்தார். நாங்கள் அணியாகவே சிறப்பாகச் செயல்பட்டோம், அதேபோல அதிர்ஷ்டமும் இருக்கிறது.

தவறுகளைக் குறைத்துக்கொண்டதாலேயே வெற்றி எங்களுக்கு வசமானது. தவறுகள் நடப்பது இயல்பு அதை ஒவ்வொரு போட்டியிலும் குறைத்துக் கொள்வதில்தான் வெற்றி இருக்கிறது. சரியான திசையில் பயணிக்கிறோம் என்று நினைக்கிறேன். ப்ளே ஆஃப் சுற்றுக்கு இன்னும் ஒரு வெற்றிதான் தேவை,” எனத் தெரிவித்தார்.

இக்கட்டில் சிக்கிய ராஜஸ்தான்

ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெரிய சிக்கலில் தோல்வியை நோக்கிச் சென்றது. 8.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

கணினியின் கணிப்பும், லக்னெள அணி வெல்வதற்குத்தான் 86 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகக் கணித்தது. கடைசி 10 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 116 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால், 4வது விக்கெட்டுக்கு கேப்டன் சாம்ஸன், ஜூரெல் ஜோடி ஆகச் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். இவர்கள் இருவரையும் பிரிக்க லக்னெள கேப்டன் கே.எல்.ராகுல் 7 பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் பிரிக்க முடியவில்லை. இறுதியில் 197 ரன்களை எந்தவிதமன சிரமும் இன்றி ஒரு ஓவர் மீதமிருக்கையில் ராஜஸ்தான் சேஸிங் செய்தது.

 

பட்லர், ஜெய்ஸ்வால் அடித்தளம்

ஐபிஎல் 2024: LSG vs RR

பட மூலாதாரம்,SPORTZPICS

ராஜஸ்தான் அணி சேஸிங்கிற்கு அடித்தளமிட்டவர்கள் ஜாஸ் பட்லர், ஜெய்ஸ்வால் ஜோடிதான். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 60 ரன்கள் சேர்த்து 10 ரன்ரேட்டில் கொண்டு சென்றனர்.

பவர்ப்ளே முடிய இரு பந்துகள் இருந்தநிலையில், யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் பட்லர் ஃபுல் டாஸ் பந்தைத் தவறவிட க்ளீன் போல்டாகி 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்த ஓவரை ஸ்டாய்னிஷ் வீச, ஜெய்ஸ்வால் 24 ரன்கள் சேர்த்த நிலையில் பிஸ்னோயிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். 4வது வீரராகக் களமிறங்கிய ரியான் பராக் 14 ரன்கள் சேர்த்த நிலையில் 41வயது லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா பந்துவீச்சில் பதோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 60 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி இருந்த ராஜஸ்தான் அணி அடுத்த 18 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறியது.

அணியை மீட்ட நாயகர்கள்

நான்காவது விக்கெட்டுக்கு கேப்டன் சாம்ஸன், துருவ் ஜூரெல் ஜோடி இணைந்தனர். சாம்ஸன் இந்த சீசனில் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்து ஃபார்மில் இருக்கிறார். ஆனால் ஜூரெல் தனது 6 போட்டிகளில் கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களில் 10 ரன்களைக் கூட கடக்கவில்லை.

இதனால், ஜூரெல் எவ்வாறு பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கப் போகிறார் என்று எண்ணப்பட்டது. இருவரும் மெதுவாகவே ஆட்டத்தைத் தொடங்கினர். 8 பந்துகளில் இருவரும் பார்ட்னர்ஷிப்பில் 3 ரன்கள் மட்டுமே சேர்த்து மெதுவாகத் தொடங்கினர்.

அதன்பின் மிஸ்ரா ஓவரில் ஜூரெல் ஒரு சிக்ஸரும், யாஷ் தாக்கூர் ஓவரில் சாம்ஸன் 3 பவுண்டரிகளும் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினர். மோசின் கான் வீசிய 14வது ஓவரில் இந்த ஜோடியை பிரிக்க லக்னெள அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்து. அந்த ஓவரில் ஜூரெல் அடித்த இரு ஷாட்களிலும் கேட்ச் பிடிக்கும் வாய்ப்பை யாஷ் தாக்கூர் நழுவவிட்டார். யாஷ் தாக்கூர் கேட்சை நழுவவிடவில்லை, வெற்றியை நழுவவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.

இந்த வாய்பைப் பயன்படுத்திய ஜூரெல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். கேப்டனுக்குரிய பொறுப்புடனும், ரன்ரேட்டை உயர்த்தும் நோக்கில் அதிரடியாக ஆடிய சாம்ஸன் 28 பந்துகளில் அரைசதம் அடித்து அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஒன்பதாவது ஓவரில் சேர்ந்த ஜோடியை லக்னெள பந்துவீச்சாளர்களால் ஆட்டத்தின் கடைசிவரை பிரிக்க முடியவில்லை. 7 பந்துவீச்சாளர்கள் மாறி, மாறி பந்துவீசியும், சாம்ஸனின் பேட் முன், ஜாலங்கள் தோற்றன, ஜூரெல் பேட்டிங் முன் எந்த உத்தியும் எடுபடவில்லை.

 

குழப்பத்தில் கே.எல்.ராகுல்

ஐபிஎல் 2024: LSG vs RR

பட மூலாதாரம்,SPORTZPICS

டிரன்ட் போல்ட் தனது முதல் ஓவரில் பெரும்பாலும் விக்கெட் எடுப்பதை வழக்கமாக வைத்திருப்பதை நேற்றைய ஆட்டத்திலும் தவறவிடவில்லை. முதல் இரு பந்துகளில் டீ காக் இரு பவுண்டரிகள் அடித்தநிலையில் 3வது பந்தில் குயின்டன் டீகாக்கை க்ளீன் போல்டாக்கி பெவிலியன் அனுப்பினார் போல்ட். அடுத்து வந்த ஸ்டாய்னிஷ் ரன் ஏதும் சேர்க்காமல் சந்தீப் சர்மாவின் அருமையான இன்ஸ்விங்கில் க்ளீன் போல்டாகினார். 11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து லக்னெள அணி திணறியது.

மூன்றாவது விக்கெட்டுக்கு கேப்டன் கே.எல்.ராகுலுடன், தீபக் ஹூடா சேர்ந்தார். தீபக் ஹூடாவும் இந்த சீசனில் இதுவரை பெரிதாக ஸ்கோர் செய்யாமல் தடுமாறி வந்தார். ஆனால், நேற்றை ஆட்டத்தில் ராகுலுடன், சேர்ந்து அருமையான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இருவரும் சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். பவர்ப்ளே ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு லக்னெள 46 ரன்கள் சேர்த்தது.

ஆவேஷ் கான் வீசிய 8வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என விளாசி ராகுல் 21 ரன்கள் சேர்த்தார். 10 ஓவர்களில் லக்னெள அணி 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் சேர்த்திருந்தது. கேப்டன் ராகுல் 31 பந்துகளில் அரைசதம் அடைந்தார்.

நிதானமாக பேட் செய்த தீபக் ஹூடா 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரின் நீண்ட பார்ட்னர்ஷிப்பை அஸ்வின் தனது கேரம்பால் பந்துவீச்சால் பிரித்தார். தீபக் ஹூடா 50 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் பாவெலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் 62 பந்துகளில் 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.

அடுத்து வந்த ஆபத்தான பேட்டர் பூரன் 11 ரன்னில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ராகுல் 76 ரன்கள் சேர்த்த நிலையில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

 
ஐபிஎல் 2024: LSG vs RR

பட மூலாதாரம்,SPORTZPICS

பதோனி 18 ரன்களுடனும், குர்னல் பாண்டியா 15 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெத் ஓவர்களை சரியாகப் பயன்படுத்தாத லக்னெள அணி கடைசி 3 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே சேர்த்தது. டெத் ஓவர்களை சரியாகப் பயன்படுத்தி கூடுதலாக 25 ரன்களை சேர்த்திருந்தால், ஆட்டம் இன்னும் பரபரப்பாக அமைந்திருக்கும்.

இந்த ஆட்டத்தில் கேப்டன் ராகுல் விக்கெட் கீப்பிங்கின்போது சற்று குழப்பத்துடனே காணப்பட்டார். ஒரு கேட்சையும் கோட்டைவிட்ட ராகுல், கேப்டன்சியை சரியாகச் செய்யவில்லை என்றே தெரிகிறது. சாம்ஸன், ஜூரெல் பாட்னர்ஷிப்பை உடைக்க எந்தப் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துவது எனத் தெரியாமல் குழப்பமான முடிவுகளை எடுத்தார்.

உதாரணமாக சிறந்த லெக் ஸ்பின்னரான ரவி பிஸ்னோய்க்கு ஒரு ஓவர் மட்டுமே வீச வாய்ப்பு வழங்கப்பட்டது, 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய மோசின் கான், யாஷ் தாக்கூருக்கு 4 ஓவர்களும் முழுதாக வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஸ்டாய்னிஷ் தனக்கு வழங்கப்பட்ட ஒரு ஒவரை வீசி 3 ரன்கள் கொடுத்து ஜெய்ஸ்வால் விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆனால், ஸ்டாய்னிஷ்க்கு ஏன் தொடர்ந்து பந்துவீச ராகுல் வாய்ப்பு வழங்கவில்லை எனத் தெரியவில்லை.

ஐபிஎல் 2024: LSG vs RR

பட மூலாதாரம்,SPORTZPICS

பந்துவீச்சாளர்களை ஏமாற்றிய ஆடுகளம்

லக்னெள ஆடுகளம் கறுப்பு மண் கொண்டதாலும், விக்கெட்டில் அதிகமான விரிசல்கள் இருந்ததாலும் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்று கணிக்கப்பட்டது. வரலாற்று ரீதியாகவே லக்னெள விக்கெட் சுழற்பந்துவீச்சுக்கு சொர்க்கபுரிதான்.

ஆனால், லக்னெள அணி பேட் செய்தபோது, ராஜஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வின், சஹல் இருவருமே பந்துவீச சிரமப்பட்டனர். பந்துவீச்சு எடுக்கவே இல்லை. இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 80 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

அதேபோல லக்னெள சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் விக்கெட் ஒத்துழைக்கவில்லை. குர்னல் பாண்டியா, ரவி பிஸ்னோய், அமித் மஸ்ரா ஆகிய 3 பேரும் பந்துவீசியும் எடுபடவில்லை. 3 பேரும் சேர்ந்து 7 ஓவர்கள் வீசிய 50 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினர்.

இதில் குர்னல் பாண்டியா மட்டும்தான் ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்தார். மிஸ்ரா, பிஸ்னோய் பந்துவீச்சு எடுபடவில்லை.

https://www.bbc.com/tamil/articles/cll41v3e559o

ipl-pt-27-04.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 230
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்தே பந்துகளில் 50 ரன்: தமிழக வீரர்களின் அதிரடியை ஊதித் தள்ளிய ஜேக்ஸ் - ஆர்சிபியால் எந்த அணிகளுக்கு நெருக்கடி?

RCB vs GT

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 44 நிமிடங்களுக்கு முன்னர்

2024ம் ஆண்டு சீசன்தான் உண்மையில் கணிக்க முடியாத ஆட்டங்களையும், முடிவுகளை ஊகிக்க முடியாத ஆட்டங்களாகவும் அமைந்துவிட்டது என்று கூற முடியும்.

இதற்கு முன் நடந்த சீசன்களில் ஒரு அணி 200 ரன்களை எட்டினாலே அந்த அணிக்கு வெற்றி பெற்றுவிடுவோம் என்று மனரீதியாக நம்பிக்கையும், உற்சாகமும் வந்துவிடும். ஆனால், இந்த சீசனில் மட்டும் எவ்வளவு ஸ்கோர் அடித்தாலும் அதை டிபெண்ட் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். ஒரு தேநீர் குடிக்கும் நேரத்தில் ஒட்டுமொத்த ஆட்டமும் தலைகீழாக மாறிவிடுகிறது.

அப்படித்தான் இன்று ஆர்சிபி-குஜராத் அணிகள் மோதிய ஆட்டமும் அமைந்திருந்தது!!

அகமதாபாத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 45-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. 201 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 4 ஓவர்கள் மீதமிருக்கையில் ஒரு விக்கெட்டை இழந்து 206 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

விக்கெட் சரிவில் குஜராத் அணி

டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. குஜராத் அணியின் சுப்மான் கில், சாஹா ஆட்டத்தைத் தொடங்கினர். அகமதாபாத் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு எடுக்கும் என்பதில் முதல் ஓவரிலே ஆப் ஸ்பின்னர் ஸ்வப்னில் பந்துவீசினார். 2வது பந்தில் பவுண்டரி அடித்த சாஹா, அதே ஓவரில் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து 5 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து சாய் சுதர்சன் களமிறங்கி கில்லுடன் சேர்ந்தார். யாஷ் தயால், சிராஜ் ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக பந்துவீசவே கில், சுதர்சன் ரன் சேர்க்க தடுமாறினர். பவர்ப்ளேயில் எதிர்பார்த்த அளவு ரன் சேர்க்கமுடியாமல், 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் மட்டுமே குஜராத் அணி சேர்த்தது.

7-வது ஓவரை மேக்ஸ்வெல் வீசினார். அவரின் 4வது பந்தில் கில் 16 ரன்கள் சேர்த்த நிலையில் கேமரூன் கிரீனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஷாருக்கான் களமிறங்கி, சுதர்சனுடன் சேர்ந்தார். இரு தமிழக வீரர்கள் களத்தில் இருந்து குஜராத் அணிக்காக ஆடினர்.

RCB vs GT

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஷாருக்கான் மிரட்டல் அரைசதம்

வழக்கமாக ஷாருக்கான் நடுவரிசையில் களமிறங்குவார் ஆனால் அவரை 3வது வீரராக களமிறக்கினர். களத்துக்கு வந்தது முதலே ஷாருக்கான் அதிரடியாக ஆடத் தொடங்கினார். கரன் ஷர்மா வீசிய 8வது ஓவரில் சுதர்சன் ஒருபவுண்டரி, சிக்ஸர்உள்பட 12 ரன்களை விளாசினார்.

மேக்ஸ்வெல் வீசிய 9-வது ஓவரில் ஷாருக்கான் ஒருசிக்ஸர், பவுண்டரி என 13 ரன்கள் சேர்த்தார். கரன் ஷர்மா வீசிய 10-வது ஓவரிலும் ஷாருக்கான் ஒருசிக்ஸர் உள்பட 10 ரன்கள் சேர்த்தார். 10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் சேர்த்தது.

கேமரூன் வீசிய 11வது ஓவரில் ஒரு சிக்ஸர், கரன் ஷர்மா வீசிய 12ஓவரில் 2 சிக்ஸர் என ஷாருக்கான் அகமதாபாத் ரசிகர்களுக்கு விருந்தளித்தார். 11.3 ஓவர்களில் குஜராத் அணி 100 ரன்களை எட்டியது. கிரீன் வீசிய 13வது ஓவரை வெளுத்த ஷாருக்கான் 2பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 17 ரன்கள் சேர்த்து 24 பந்துகளில் ஐபிஎல் தொடரில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.

ஷாருக்கான் களத்துக்கு வந்தது முதல் குஜராத் அணி ஓவருக்கு 10 ரன்ரேட்டில் பயணித்தது. நிதானமாக ஆடிய சுதர்சன் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

RCB vs GT

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெருமை சேர்க்கும் தமிழக வீரர் சுதர்சன்

சாய் சுதர்சன் தனது ஐபிஎல் வாழ்க்கையை 2022 சீசனில் இருந்து அருமையாகத் தொடங்கியுள்ளார். ஐபிஎல் தொடரில் 900 ரன்களுக்கு மேல் குவித்த சுதர்சன் 23 போட்டிகளில் எட்டி, சராசரியாக 45 ரன்கள் வைத்துள்ளார், 135 ஸ்ட்ரைக் ரேட்டுக்கும் அதிகமாகவே பேட் செய்து வருகிறார். சாய் சுதர்சன் 3வது வீரராக சிறப்பாக ஆடி வருவதால், அவரை தொடர்ந்து 3வதுவீரராக களமிறக்கவே குஜராத் அணி நிர்வாகமும் விரும்பியது.

சுழற்பந்துவீச்சை எளிதாக,அனாசயமாக ஆடக்கூடிய சுதர்சன் ரன்ரேட்டை வேகமாக உயர்த்தக்கூடியவர். கடைசியாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 39 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்து 166 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். சுழற்பந்துவீச்சை எந்த அளவுக்கு விரும்பி ஆடக்கூடியவரோ அதேபோல வேகப்பந்துவீச்சையும் எளிதாக சுதர்சன் ஆடும் திறமை உடையவர்.

இந்த சீசனில் வேகப்பந்து வீ்ச்சுக்கு எதிராக சுதர்சன் 122 ஸ்ட்ரைக் ரேட்டும், சுழற்பந்துவீச்சுக்கு எதிராக 137 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார். 2023 சீசனில் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக சுதர்சன் 148 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வீரர் சுதர்சன் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். பவர் ப்ளேவில் 18 பந்துகளில் 16 ரன்கள் என நிதானமாக பேட் செய்த சுதர்சன் ஷாருக்கான் களத்துக்கு வந்தபின் பேட்டிங் கியரை மாற்றி ரன் சேர்ப்பை வேகப்படுத்தினார். 23 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்த சுதர்சன் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த பின் ரன் சேர்ப்பை இன்னும் வேகப்படுத்திய சுதர்சன் 13 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். இன்றை ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சுதர்சன் 205 ஸ்ட்ரைக் ரேட் வைத்து 20 பந்துகளில் 41 ரன்களும், வேகப்பந்துவீச்சுக்கு எதிராக 148 ஸ்ட்ரைக் ரேட்டில் 27 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார்.

RCB vs GT

பட மூலாதாரம்,GETTY IMAGES

கலக்கிய தமிழக வீரர்கள்

முகமது சிராஜ் 15வது ஓவரை வீசியபோதுதான் திருப்பம் ஏற்பட்டது. அரைசதம் நிறைவு செய்து பேட் செய்த ஷாருக்கான், முதல் பந்திலேயே யார்கரில் க்ளீன் போல்டாகி 58 ரன்களில் (30பந்துகள், 5 சிக்ஸர், 4 பவுண்டரி) ஆட்டமிழந்தார். 10 ஓவர்கள் முதல் 13 ஓவர்களுக்குள் குஜராத் அணி ஷாருக்கான் அதிரடியால் 43 ரன்கள் சேர்த்தது. 3வது விக்கெட்டுக்கு ஷாருக்கான், சுதர்சன் இருவரும் சேர்ந்து 45 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்தனர்.

நடுப்பகுதி ஓவர்களில் குஜராத் அணி மந்தமாக ஆடும் என்று குற்றச்சாட்டு இருந்த நிலையில் இந்த ஆட்டத்தில் 7-வது ஓவர் முதல் 16வது ஓவர் வரை 100 ரன்கள் சேர்த்தது. இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் குஜராத் அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

அடுத்து மில்லர் களமிறங்கி, சுதர்சனுடன் சேர்ந்தார். 16 ஓவர்களுக்குப்பின் சுதர்சன், மல்லர் இருவரும் அதிரடி ஆட்டத்தைக் கையில் எடுத்தனர். கிரீன் வீசிய 17-வது ஓவரில் சுதர்சன் 3 பவுண்டரிகள் உள்பட 15 ரன்கள் சேர்த்தார்.

சிராஜ் வீசிய 19வது ஓவரில் சுதர்சன் முதல் பந்தில் சிக்ஸர் விளாசி, 2வது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ஆனால், மிகவும் சிரமமான அந்த கேட்சை ஜேக்ஸ் தவறவிட்டார். அந்த ஓவரில் சுதர்சன் பவுண்டரி அடித்து 13 ரன்கள் சேர்த்தார். யாஷ் தயால் வீசிய கடைசி ஓவரில் மில்லர் சிக்ஸர் உள்பட 13 ரன்கள் சேர்த்தனர். 20 ஓவர்களில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் சேர்த்தது.

தமிழக வீரர் சாய்சுதர்சன் 49 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்து(4 சிக்ஸர், 8பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார், மில்லர் 26 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

RCB vs GT

பட மூலாதாரம்,GETTY IMAGES

கணினி கணிப்பை பொய்யாக்கிய பேட்டர்

பவர்ப்ளே முடிவில் ஆர்சிபி அணி வெற்றி பெற 84 பந்துகளில் 138 ரன்கள் தேவைப்பட்டது. கணினியின் கணிப்புகள் ஆர்சிபி வெற்றிபெற 38.33 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தது. ஆனால், 24 பந்துகள் மீதமிருக்கையில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று கணினியின் கணிப்பையே பொய்யாக்கியது.

கணினியின் கணிப்பை பொய்யாக்கியதற்கு முக்கிய காரணமான பேட்டர் வில் ஜேக்ஸ். அதிரடி என்று சொல்வதைவிட காட்டடி அடித்த வில் ஜேக்ஸ் 41 பந்துகளில் சதம் அடித்து ஆர்சிபி வெற்றிக்கு முக்கியக் காரணமாகி ஆட்டநாயகன் விருது வென்றார். இதில் 5 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் அடங்கும். 243 ஸ்ட்ரைக் ரேட்டில் ஜேக்ஸ் ஆடினார். 31 பந்துகளில் அரைசதம் அடித்த வில் ஜேக்ஸ், அடுத்த 10 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து சதம் அடித்து மிரட்டியுள்ளார்.

குஜராத் அணியின் பேட்டர்கள் 10 சிக்ஸர்கள் அடித்த நிலையில் அந்த 10 சிக்ஸர்களையும் ஆர்சிபி பேட்டர் வில் ஜேக்ஸ் ஒருவரே அடித்து 200 ரன்களை அனாசயமாக சேஸிங் செய்ய உதவினார். குறிப்பாக 31 பந்துகளில் அரைசதம் அடித்த வில் ஜேக்ஸ், அடுத்த 10 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து சதம் அடித்து மிரட்டியுள்ளார்.

RCB vs GT

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆக்ரோஷம் தெறித்த பேட்டிங்

3வது வீரராக களமிறங்கிய ஜேக்ஸ் தொடக்கத்தில் மிகவும் நிதானமாக பேட் செய்தார். ரன்களைவிட பந்துகளை அதிகம் வீணாக்கி ஜேக்ஸ் ஆடினார். ஆனால், 10 ஓவர்களுக்குப்பின் ஜேக்ஸ் மதம் பிடித்த யானை போன்று ஆக்ரோஷமாக பேட் செய்து குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர்களை ஓடவிட்டார்.

குறிப்பாக மோகித் சர்மா வீசிய 15-வது ஓவரில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 29 ரன்களை ஜேக்ஸ் சேர்த்தார். கடைசி 5 ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. ஆர்சிபி அணி வெற்றி பெறுவதற்கு 2 அல்லது 3 ஓவர்கள் வரை ஆகும் என்று ரசிகர்கள் எண்ணி தேநீர் குடிக்க சென்றவர்களுக்கு திரும்பி வந்தபோது வியப்புதான் காத்திருக்கும்.

ஏனென்றால், ரஷித்கான் வீசிய 16-வது ஓவரில் வில் ஜேக்ஸ் 4 சிக்ஸர்கள், ஒருபவுண்டரி அடித்து ஆர்சிபி அணியை 24 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெறவைத்து அஹமதாபாத் அரங்கையே வியப்பில் ஆழ்த்தினார்.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி கோலி, 32 பந்துகளில் அரைசதம் அடித்து 44 பந்துகளில் 70 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜேக்ஸின் மிரட்டலான ஆட்டத்தின் முன் கோலியின் அரைசதம் கவனிப்பின்றி மாறியது.

RCB vs GT

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாவப்பட்ட பந்துவீச்சாளர்கள்

குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் பாவப்பட்டவர்கள். வில் ஜேக்ஸுக்கு எப்படி பந்து வீசுவதென்று தெரியாமல் சிக்கித் தவித்தனர். இதில் பலிகடாவாகியது ரஷித் கான், மோகித் சர்மாதான். இருவரின் ஓவரில்தான் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது, மோகித் சர்மா 2 ஓவர்களில் 41 ரன்களை வாரி வழங்கினார், ரஷித் கான் நிலைமை அதைவிட மோசம் 4 ஓவர்கள் வீசி 51 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

ஒட்டுமொத்த குஜராத் பந்துவீச்சாளர்களும் ஜேக்ஸ் அதிரடியால் துவைத்து தொங்கவிடப்பட்டனர். ஓமர் ஜாய் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 15 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினார்.

இதுபோன்ற பேட்டர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணியாக சிக்கிக் கொண்டு பேட்டர்களால் கொடுமையாக வதம் செய்யப்படுகிறார்கள். பந்துவீச்சாளர்கள் இதுவரை கட்டிக்காத்துவந்த தன்னம்பிக்கை எனும் சராசரி, ஸ்ட்ரைக்ரேட் ஆகியவை பேட்டர்களை கிழித்து தொங்கவிடப்படுகின்றன. ரசிகர்களின் ரசனைக்காக, பந்துவீச்சாளர்கள் பலியிடப்படுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

RCB vs GT

பட மூலாதாரம்,GETTY IMAGES

"நம்பிக்கை துளிர்விடுகிறது"

ஆர்சிபி கேப்டன் டூப்பிளெசிஸ் கூறுகையில் “ அருமையான விக்கெட். நாங்கள் முதலில் பந்துவீசியபோதே சேஸிங் எளிதாக இருக்கும் என நினைத்தோம். கடந்த சில போட்டிகளை விட தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறியிருக்கிறோம். எங்கள் அணிக்குள் நம்பிக்கை துளிர்விடத் தொடங்கிவிட்டது. பந்துவீச்சாளர்கள் புத்துணர்ச்சி பெற்று நம்பிக்கையுடன் பந்துவீசுகிறார்கள். நாங்கள் இப்போது அடிப்படையான விஷயங்களை சிறப்பாக செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்

நெருக்கடி தரும் ஆர்சிபி

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் பெரிதாக எந்த மாற்றத்தையும் சந்திக்கவில்லை என்றாலும், நிகர ரன்ரேட்டில் முன்னேறி வருகிறது. இதுவரை ஆர்சிபி அணி 10 போட்டிகளில் 3 வெற்றி, 7 தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில்தான் இருக்கிறது, ஆனால், நிகர ரன்ரேட் மைனஸ் 0.415 ஆகக் குறைந்துவிட்டது. தற்போது 6 புள்ளிகளுடன் பஞ்சாப் அணி, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி என 3 அணிகள் இருக்கின்றன.

இதில் ஆர்சிபி அணிக்கு இன்னும் 4 லீக் ஆட்டங்களும், மற்ற இரு அணிகளுக்கும் 5 லீக் ஆட்டங்களும் உள்ளன. ஆர்சிபி அணி அடுத்துவரும் 4 ஆட்டங்களிலும் இதுபோல் பெரிய வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு உண்டு. ஆர்சிபியின் தொடர் வெற்றிகளால் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது பாதியில் உள்ள அனைத்து அணிகளுமே நெருக்கடியில் சிக்கியுள்ளன.

RCB vs GT

பட மூலாதாரம்,GETTY IMAGES

மோசமாகும் குஜராத்

குஜராத் அணி கடந்த 10 நாட்களில் சந்திக்கும் 3வது தோல்வி இதுவாகும். 10 போட்டிகளில் 4 வெற்றி, 6 தோல்வி 8 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. குஜராத் அணி கூடுதலாக 2புள்ளிகள் பெற்றுள்ளதேத் தவிர நிகர ரன்ரேட்டில் ஆர்சிபிக்கும் மோசமாக மைனஸ் 1.113 ஆக இருக்கிறது.

அடுத்து ஒரு போட்டியில் கூட குஜராத் அணி தோற்றாலும் அதன் ப்ளே ஆஃப் வாய்ப்புக்கு சிக்கல் வந்துவிடும். ஏனென்றால், நிகர ரன்ரேட் மற்ற அனைத்து அணிகளையும் விட மோசமாக இருப்பது பெரும் பின்னடைவாக மாறும்.

https://www.bbc.com/tamil/articles/cprg1v1lgero

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2024 at 00:24, வீரப் பையன்26 said:

@கந்தப்பு

என்ன‌ உங்க‌ட‌ ஆள் ஜ‌பிஎல்ல‌ இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டிலும் அச‌த்தி விட்டார் க‌ந்த‌ப்பு அண்ணா.........................

Jake Fraser-McGurk இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் அவுஸ்ரேலியா அணியின் ந‌ம்பிக்கை ந‌ச்ச‌த்திர‌ம் இவ‌ரா தான் இருப்பார் க‌ந்த‌ப்பு அண்ணா.........................................🙏🥰..................

யாழ்களப்போட்டியில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை இவர் பெறலாம் என நினைத்துத்தான் டெல்கியின் போட்டி முடியும்வரை பார்த்தபின்பு , யாழ்கள போட்டி முடிவு திகதிக்கு முதல்நாள்  அப்பொழுது ஏதாவது ஓரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்று முதல் இடத்தில் இருந்த கோலியைத் தெரிவு செய்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோனி போன்ற சீனியர்களை கையாளும் ருதுராஜின் உத்தி; ஹைதராபாத் அணியில் அம்பலமான பலவீனம்

சிஎஸ்கே

பட மூலாதாரம்,SPORTZPICS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 210 ரன்கள் குவித்தும் வெற்றி முடியாமல் இதே சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த வாரத்தில் சிஎஸ்கே தோற்றது. கிட்டத்தட்ட அதே அளவு ரன்களைக் குவித்து அதே சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பலவீனத்தை ஆர்சிபி “எக்ஸ்போஸ்” செய்துவிட்டு சென்றது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. சன்ரைசர்ஸ் அணி இதுவரை பெற்ற 5 வெற்றிகளில் சேஸிங் செய்து பெற்ற வெற்றிகளைவிட முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை அடித்து எதிரணியை திக்குமுக்காடவைத்து வெல்வதையே ஃபார்முலாவாக வைத்திருந்தது.

முதல் முறையாக ஆர்சிபிக்கு எதிராக 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ய வேண்டும் என்றபோது, சன்ரைசர்ஸ் பலவீனம் வெளிப்பட்டுவிட்டது. இதை சிஎஸ்கே அணி இறுகப்பற்றிக் கொண்டு அதே உத்தியை கையாண்டு வெற்றி பெற்றுள்ளது.

இதுவரை ஐபிஎல் வரலாற்றில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை சன்ரைசர்ஸ் அணியால் வெல்ல முடியவில்லை என்ற வரலாறு நேற்றும் தொடர்ந்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 46-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் சேர்த்தது. 213 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 18.5 ஓவர்களில் 134 ரன்களில் சுருண்டு, 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

 
சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

புள்ளிப்பட்டியலில் திடீர் மாற்றம்

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. 6-வது இடத்தில் இருந்த சிஎஸ்கே அணி திடீரென உயர்வு பெற்று, 3வது இடத்துக்கு முன்னேறியது. சிஎஸ்கே அணி 9 போட்டிகளில் 5வெற்றி 4 தோல்வி என 10 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட் உயர்வால் 3-ஆவது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே நிகர ரன்ரேட் 0.810 ஆக இருக்கிறது.

சிஎஸ்கே அணிக்கு இணையாக 10 புள்ளிகளுடன் கொல்கத்தா, லக்னெள, சன்ரைசர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய 5 அணிகள் உள்ளன. இதனால் முதல் 4 இடங்களுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த 5 அணிகளில் டெல்லி அணி மட்டுமே 10 புள்ளிகள் பெற்றிருந்தாலும், நிகர ரன்ரேட் மைனசில் வைத்துள்ளது. மற்ற 4 அணிகளின் நிகர ரன்ரேட்டும் பாசிட்டிவாக இருக்கிறது.

கொல்கத்தா-டெல்லி அணிகளுக்கு இடையே இன்று நடக்கும் ஆட்டத்தின் முடிவில் 2வது இடத்தைப் பிடிக்கப் போவது என்பது தெரிந்துவிடும். தற்போது நிகர ரன்ரேட் அடிப்படையில்தான் கொல்கத்தா அணி 2வது இடத்தில் இருக்கிறது. டெல்லி அணியும் 10 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 5வது இடத்தில் இருக்கிறது. இன்று நடக்கும் ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி 12 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடிக்கும்.

சன்ரைசர்ஸ் அணியைப் பொறுத்தவரை 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு எதிராக மோசமாகத் தோற்றதால் சன்ரைசர்ஸ் நிகரரன்ரேட் மோசமாகக் குறைந்து, 0.075 ஆகச் சரிந்துள்ளது. 10 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டை குறைவாக சன்ரைசர்ஸ் வைத்துள்ளது.

 
சிஎஸ்கே

பட மூலாதாரம்,SPORTZPICS

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள்தான் முக்கியக் காரணம். ஏனென்றால், இதே மைதானத்தில் 210 ரன்களை டிபெண்ட் செய்ய முடியாமல் லக்னெள அணியிடம் தோற்ற சிஎஸ்கே அணி, நேற்றைய ஆட்டத்தில் 212 ரன்கள் அடித்து சன்ரைசர்ஸ் அணியை டிபெண்ட் செய்து வென்றுள்ளது.

ஆதலால் சிஎஸ்கே பந்துவீச்சில் ஏற்பட்ட முன்னேற்றம், பந்துவீச்சாளர்களிடையே ஏற்பட்ட மாற்றம்தான் முக்கியக் காரணம்.

அதேநேரம், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 54 பந்தகளில் 98 ரன்கள் சேர்த்து 2 ரன்னில் சதத்தை தவறவிட்டார். ருதுராஜ் கணக்கில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். சிஎஸ்கே ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்த கெய்க்வாட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

அதேபோல கெய்க்வாட்டுக்கு துணையாக டேரல் மிட்ஷெல் 32 பந்துகளில் அடித்த அரைசதம்(52), ஷிவம் துபே(39)ரன்கள் ஆகியவையும் ஸ்கோர் உயர்வுக்கு காரணம். கடந்த சில போட்டிகளில் சொதப்பியதால் அமரவைக்கப்பட்ட மிட்ஷெல் நேற்று சிஎஸ்கே அணிக்காக தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.

கெய்க்வாட்-மிட்ஷெல் கூட்டணி 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதேபோல ஷிவம் துபே, கெய்க்வாட் கூட்டணி 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த இரு பார்ட்னர்ஷிப்தான் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. இவர்கள் தவிர அணியில் பெரிதாக யாரும் ஸ்கோர் செய்யவில்லை. ரஹானே தொடக்க வீரராக தொடர்ந்து சொதப்பி வருவதால், அடுத்த ஆட்டத்தில் நீக்கப்பட்டு ரவீந்திரா உள்ளேவரவும் வாய்ப்புள்ளது.

 
சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

சீனியர் வீரர்களை கெய்க்வாட் எப்படிக் கையாளுகிறார்?

வெற்றிக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் கூறுகையில் “ பனிப்பொழிவுக்கு மத்தியில் இந்த ஆடுகளத்தில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெல்வது கடினமானது. எங்களுக்கு இது மிகப்பெரிய வெற்றி. சேப்பாகத்தில் அதிகமான வெப்பம், ஈரப்பதமும் கூடுதலாக இருந்தது. நான் சதம் அடிப்பதைப் பற்றி நினைக்கவே இல்லை, அணியின் ஸ்கோரை 220 அதற்கு மேல் நகர்த்தவே திட்டமிட்டேன். கடந்த போட்டியில்கூட நான் சதத்தைப் பற்றி நினைக்கவில்லை. சில ஷாட்களை நான் தவறவிட்டது எனக்கு வருத்தம். கடந்த போட்டியில் நாங்கள் சில தவறுகளைச் செய்தோம். தவறான பந்துகள் பல வீசினோம், பீல்டிங் சரியில்லை. ஆனால், தவறுகளைத் திருத்திக்கொண்டு, திட்டங்களுடன் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளோம். தேஷ்பாண்டே சிறப்பாகப் பந்துவீசினார், அவரின் கடின உழைப்புக்கு கிடைத்த பலன். குறிப்பாக இந்த ஈரப்பதமான சூழலில், சுழற்பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 25ரன்கள் மட்டுமே கொடுத்து ஒருவிக்கெட்டை வீழ்த்திய ஜடேஜாவின் பங்கு சிறப்பானது.”

“'நான் அதிகமாக சொல்லிக் கொண்டிருக்கமாட்டேன். டிரெஸ்ஸிங் ரூமில் அனைவருமே மிகுந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள். சீனியர் வீரர்களிடம் நேரில் சென்று இப்படி விளையாடுங்கள், இப்படி பந்துவீசுங்கள் எனக் கூற முடியாது. அதனால் நான் அவர்களுக்கு பின்னால் இருந்து கொள்கிறேன் அவ்வளவுதான்” எனத் தெரிவித்தார்.

சிஎஸ்கே

பட மூலாதாரம்,SPORTZPICS

சிஎஸ்கே அணி எப்படி வென்றது?

லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் செய்த தவறுகள் ஏதும் இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி செய்யாததே வெற்றிக்கு முக்கியக் காரணம். சன்ரைசர்ஸ் அணியில் எந்த பேட்டரையும் நங்கூரமிட வைக்கவில்லை. ஏனென்றால், ஸ்டாய்னிஸைவிட ஆபத்தான பேட்டர்கள் சன்ரைசர்ஸ் அணியில் இருக்கிறார்கள்.

குறிப்பாக டிராவிஸ் ஹெட், கிளாசன், மார்க்ரம், அபிஷேக் ஆகியோர் நிலைத்துவிட்டால் ஸ்கோர் எங்கோ சென்றுவிடும் என்பதால் இந்த பேட்டர்களை தனியாகக் கட்டம் கட்டி சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் வெளியேற்றினர்.

அடுத்தாக ஷர்துல் தாக்கூர், தேஷ்பாண்டே, முஸ்தபிசுர், பதிரணா ஆகியோர் தங்களின் ஒவ்வொரு ஓவரிலும் பந்துவீச்சில் வேரியேஷனை வெளிப்படுத்தி சன்ரைசர்ஸ் பேட்டர்களை திணறவிட்டனர். பந்துவீச்சில் சரி செய்யப்பட்ட தவறுகள், ஆட்டத்தின் போக்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே பீல்டிங் மோசமாக இருந்தது. ஆனால், அந்தத் தவறுகள் நேற்று திருத்தப்பட்டு, கட்டுக்கோப்பான பீல்டிங் வீரர்களிடையே காண முடிந்தது.

குறிப்பாக மிட்ஷெல் நேற்றைய ஆட்டத்தில் மட்டும் 5 கேட்சுகளைப் பிடித்து, ஒரே போட்டியில் அதிக கேட்சுகளைப் பிடித்த முகமது நபி சாதனையுடன் சமன் செய்தார். பெரிதாக எந்த பவுண்டரிகளையும் கோட்டைவிடாமல், கட்டுக்கோப்பாக பீல்டிங் செய்தது, மனரீதியாக சன்ரைசர்ஸ்பேட்டர்களுக்கு நெருக்கடி அளித்தது.

சிஎஸ்கே

பட மூலாதாரம்,SPORTZPICS

மெருகேறிய தேஷ்பாண்டே பந்துவீச்சு

சிஎஸ்கே அணியில் சொல்லிக்கொள்ளும் வகையில் நட்சத்திர பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை என்றாலும், இருக்கும் வீரர்களை வைத்து சிறப்பாக காய்களை நகர்த்தி வருகிறது. சிஎஸ்கே அணிக்குள் சென்றுவிட்டால் எந்த வீரரும் விளையாடுவிடுவார்கள், விளையாட வைத்துவிடுவார்கள் என்று ஐபிஎல் வட்டாரங்களில் பேசப்படுவதுண்டு.

அதுபோல் அன்கேப்டு வீரர் தேஷ்பாண்டேவின் பந்துவீச்சில் நேற்று பெரிய மாற்றம், துல்லியம், லைன்லென்த் காணப்பட்டது. தேஷ்பாண்டே வீசிய முதல் ஓவரில் ஹெட் ,பவுண்டரியும், அடுத்த ஓவரில் சிக்ஸரும் விளாசினாலும் கவலைப்படவில்லை. ஸ்லோவர் பாலை வைடாக தேஷ்பாண்டே வீச, அதை அடிக்க முற்பட்டு ஹெட் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த அன்மோல்பிரித் சிங்கை வந்தவேகத்தில் தேஷ்பாண்டே வெளியேற்றினார். டிராவிஸ் ஹெட்டை ஆட்டமிழக்கச் செய்ததைதப் போல், அபிஷேக் சர்மாவையும் வெளியேற்றினார் தேஷ்பாண்டே. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் டாப் ஆர்டரை நிலைகுலைய வைத்து அந்த அணிக்கு பெரிய அதிர்ச்சியை தேஷ்பாண்டே அளித்தார்.

சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

குறிப்பாக தேஷ்பாண்டே 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இதில் பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார். ஆனால், இந்த திறன் லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் இல்லை, இந்த உத்தியை செயல்படுத்தவும் இல்லை. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் 3 பெரிய விக்கெட்டுகளை இழந்ததுமே மனரீதியாக நம்பிக்கை உடைந்துவிட்டது.

லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி முதல் 10 ஓவர்களில் ஒரு சிக்ஸர்கூட அடிக்காமல் பயணித்தது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் கம்மின்ஸ் வீசிய 9-வது ஓவரில் மிட்ஷெல் சிக்ஸர் அடித்தும், கெய்க்வாட் ஒரு சிக்ஸரும் விளாசினர்.

ரன்களை அதிகமாகச் சேர்க்க சிக்ஸர், பவுண்டரி அவசியம் என்பதை உணர்ந்து நேற்று மிட்ஷெல், கெய்க்வாட் பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து பேட் செய்தனர். இதனால் சிஎஸ்கே அணி 10.5 ஓவர்களில் 100 ரன்களைக் குவித்தது. மிட்ஷெல்(52) அரைசதம் அடித்து ஆட்டமிழந்தபோது, 13.3 ஓவர்களில் சிஎஸ்கே 126 ரன்கள் சேர்த்திருந்தது.

சிஎஸ்கே அணிக்கு கடைசி நேரத்தில் பினிஷிங் பணியை ஷிவம் துபே சிறப்பாகச் செய்து வருகிறார். சன்ரைசர்ஸ் அணியினர் நேற்று டெத் ஓவர்களில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினாலும், துபே தனது அதிரடியால் மிரட்டி 4 சிக்ஸர்களை விளாசி 20 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார்.

இந்த ஆட்டத்திலும் கடைசி நேரத்தில் களமிறங்கி, 2 பந்தகளில் ஒருபவுண்டரி உள்பட 5 ரன்கள் சேர்த்து தோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 
சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

சன்ரைசர்ஸ் அணியின் பலவீனம் என்ன?

சன்ரைசர்ஸ் அணியின் பலவீனம் வெளிப்பட்டதிலிருந்து தொடர்ந்து 2ஆவது தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆர்சிபிக்கு எதிராக சேஸிங்கில் தோற்று, இந்த ஆட்டத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராகவும் சேஸிங்கில் வீழ்ந்துள்ளது.

சன்ரைசர்ஸ் அணி மீது எழும் கேள்வி அவர்களின் சேஸிங் முறைதான். ஏனென்றால், இதுவரை டிபெண்ட் செய்து ஒரு வெற்றி பெற்றுள்ள சன்ரைசர்ஸ், சேஸிங் செய்தும் ஒருவெற்றிதான் பெற்றுள்ளார்கள்.

முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை அடித்து, எதிரணியை திணறவைத்து வெல்வதையே உத்தியாக சன்ரைசர்ஸ் இதுவரை செயல்படுத்திவந்தது. ஆனால், வலிமையான, பவர் ஹிட்டர் பேட்டர்கள் அணியில் இருந்தும், சேஸிங்கில் கோட்டைவிடுகிறது. அதிலும் தொடர்ந்து இரு ஆட்டங்களும் சேஸிங்கில் சன்ரைசர்ஸ் அணி தோற்றது அந்த அணியின் ஆட்டமுறையை சுயபரிசீலனைக்கு உட்படுத்தும் எனத் தெரிகிறது. ஹெட், அபிஷேக், கிளாசன், மார்க்ரம், நிதிஷ் ரெட்டி, அன்மோல் பிரித் சிங், அப்துல் சமது ஆகியோர் இருந்தும் சேஸிங்கில் தோல்வி அடைந்தது அந்த அணியின் அடுத்தக் கட்டநகர்வை கேள்விக்குள்ளாக்குகிறது.

பந்துவீச்சில் நேற்று சன்சைர்ஸ் அணி வேகப்பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தியதே தவிர சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. நிதிஷ் ரெட்டிக்கு ஒரு ஓவர் வழங்கிய நிலையில் அப்படியே நிறுத்திக்கொண்டது. சிஎஸ்கே அணி ஜடேஜாவை பயன்படுத்திய அளவுக்கு சன்ரைசர்ஸ் அணி, சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தவில்லை.

https://www.bbc.com/tamil/articles/c0dexjmmzglo

ipl-pt-28-04.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியின் கனவைக் கலைத்த தமிழ்நாட்டு வீரர்; ஷ்ரேயாஸ் சொன்ன ரகசியம்

கொல்கத்தா - டெல்லி - ஐபிஎல்

பட மூலாதாரம்,SPORTZPICS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளத்தில்தான் 262 ரன்களை சேஸிங் செய்த சம்பவத்தையும் ரசிகர்கள் பார்த்தனர். ஆனால், நேற்று அப்படியே தலைகீழாக மாறி, பாரம்பரிய கொல்கத்தா மைதானம் போல் குறைந்த ரன்னை சேஸிங் செய்யும் வழக்கமான ஆட்டமாகவும் அமைந்தது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 47-வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. 154 ரன்கள் இலக்குடன் புறப்பட்ட கொல்கத்தா அணி, 21 பந்துகள் மீதமிருக்கையில், 3 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த ஆட்டமே ஒருதரப்பாக அமைந்தது போல் இருந்தது. கொல்கத்தா தொடக்க வீரர் பில் சால்ட் பவர்ப்ளே ஓவர்களில் 79 ரன்களும், 9 ஓவர்களில் 96 ரன்களும் சேர்த்தபோதே ஆட்டம் ஏறக்குறைய முடிவுக்குவந்து, கொல்கத்தா அணி வென்றதுபோல் ஆகிவிட்டது.

கொல்கத்தா அணிக்கு சவால் விடுக்கும் வகையில் டெல்லியின் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் இல்லாததால் ஆட்டம் ஒருதரப்பான முடிவையே அளித்தது.

 
கொல்கத்தா - டெல்லி - ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

புள்ளிப்பட்டியலில் வலுவாக அமர்ந்த கொல்கத்தா

இந்த வெற்றியால் கொல்கத்தா அணி 9 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து அணிகளையும்விட நிகர ரன்ரேட்டில் உயர்வாக 1.096 என்று உச்சத்தில் இருக்கிறது. இந்த வெற்றியால், அடுத்தடுத்து ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது.

கலைந்துவிட்டதா டெல்லியின் ப்ளே ஆஃப் கனவு?

ஆனால், டெல்லி அணி இந்த தோல்வியால் ப்ளே ஆஃப் சுற்றுவாய்ப்பு மறுக்கப்படவில்லை என்றாலும், சற்று கடினமாகியுள்ளது. டெல்லி அணி தற்போது 11 போட்டிகளில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி என 10 புள்ளிகளுடன்6-வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மோசமாகக் குறைந்து மைனஸ் 0.442 என சரிந்துவிட்டது.

இனி அடுத்துவரும் 3 போட்டிகளையும் டெல்லி அணி கட்டாயமாக வெல்ல வேண்டிய நிலையிலும் நல்ல ரன்ரேட்டில் வெல்ல வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், அடுத்த 3 போட்டிகளை டெல்லி அணி வென்றாலே அதிகபட்சமாக 16 புள்ளிகள்தான் பெற முடியும்.

ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல 4-ஆவது இடத்துக்கு 16 புள்ளிகள் அளவுகோலாக இருக்கும் பட்சத்தில் பல அணிகள் கடும் நெருக்கடி கொடுக்கும். அப்போது ரன்ரேட் முக்கியமாகும், அதை பராமரிக்க வேண்டிய நிலையில் டெல்லி அணி இருக்கிறது.

 
கொல்கத்தா - டெல்லி - ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழ்நாட்டு வீரர்

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் அமைத்துக் கொடுத்த அடித்தளமும், பந்துவீச்சில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட் வீழ்த்தியதும் முக்கியக் காரணமாகும். கடந்த 8 போட்டிகளாக பந்துவீச்சில் திணறிக் கொண்டிருந்த வருண், 8 போட்டிகளில் 8 விக்கெட் மட்டுமே எடுத்திருந்தால், பந்துவீச்சு சராசரியும் 9 ரன்களாக இருந்தது.

ஆனால், நேற்றைய ஆட்டத்தில் வருண் மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். அவருக்கு உதவும் வகையில் விக்கெட்டும் இருந்ததால், வருண் பந்துவீச்சில் பந்துகள் நன்றாக திரும்பின. டெல்லி பேட்டர்கள் வருண் பந்துவீச்சை சமாளித்து ஆடத் திணறினர். 4 ஓவர்கள் வீசிய வருண் 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.

“ப்ளே ஆஃப்தான் எங்கள் இலக்கு”

கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் கூறுகையில் “ஆடுகளம் உதவியதாக நினைக்கவில்லை. ஏனென்றால், பவர்ப்ளே ஓவருக்குப்பின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைத்தது பேட்டர்களுக்குக் கடினமாக இருந்தது. முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது ஒருவிதத்தில் நல்லதாகிவிட்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட, நரைன் இருவரிடமும் எப்படி விளையாட வேண்டும் என்று டீம் மீட்டிங்கில் பேசியதில்லை. அவர்களும் கூட்டத்தில் பங்கேற்கமாட்டார்கள். ஆனால் அவர்களின் பங்களிப்பில் எந்தச் சிக்கலும் இல்லை.”

“வருண் கடந்த சில போட்டிகளாக தடுமாறிய நிலையில் இன்று சிறப்பாகப் பந்துவீசினார். ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுவிட வேண்டும் என்று முதல் போட்டியிலிருந்து இலக்காக வைத்து ஆடி வருகிறோம். அதை நோக்கித்தான் செல்கிறோம், எங்கள் திறமையை வெளிப்படுத்துகிறோம்” எனத் தெரிவித்தார்

கொல்கத்தா - டெல்லி - ஐபிஎல்

பட மூலாதாரம்,SPORTZPICS

நெருக்கடி தந்த கொல்கத்தா பந்துவீச்சு

கொல்கத்தா ஈடன்கார்டன் ஆடுகளத்தில் கடந்த சில போட்டிகளாக தட்டையான ஆடுகளத்திலே ஆட்டங்கள் நடந்த நிலையில் நேற்று சுழற்பந்துவீச்சுக்கு உதவும் வகையில் மெதுவான விக்கெட் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆடுகளத்தை டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தியதைவிட கொல்கத்தா பந்துவீச்சாளர்களே நன்றாகப் பயன்படுத்தினர்.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வரிசையில் 3 விக்கெட்டுகளை மிட்ஷெல் ஸ்டார்ஸ், வைபவ் அரோரா ஆகியோர் பவர்ப்ளே ஓவருக்குள் வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர்.

நடுப்பகுதி ஓவர்களில் வருண், நரைன், ராணா ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி அணியை பெரிய இக்கட்டில் சிக்கவைத்தனர். ஒரு கட்டத்தில் டெல்லி அணி 111 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 68 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த டெல்லி அணி, அடுத்த 43 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து சரிவை நோக்கிச் சென்றது. கடைசி நேரத்தில் குல்தீப் யாதவ் 26 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து கவுரமான ஸ்கோர் கிடைக்க உதவினார். இல்லாவிட்டால் டெல்லி அணி 120 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.

குறிப்பாக கொல்கத்தா சுழற்பந்துவீச்சாளர்கள் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஹர்சித் ராணா, வைவப் அரோரா இருவரும் ஓரளவுக்கு கட்டுக்ககோப்பாக பந்துவீசி ஓவருக்கு 7 ரன்கள் வீதம் கொடுத்து தலா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தனர். ஸ்டார்க் பந்துவீச்சில் ரன்கள் வாரி வழங்கப்பட்டன, 3 ஓவர்கள் வீசிய ஸ்டார்க் 43 ரன்களை வழங்கி ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தினார்.

கொல்கத்தா - டெல்லி - ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றிக்கு அடித்தளமிட்ட பில் சால்ட்

குறைவான இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட், நரைன் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். டெல்லி பந்துவீச்சாளர்கள் கலீல், வில்லியம்ஸ்,ரசிக் சலாம் ஆகியோரின் பந்துவீச்சை வெளுத்த பில் சால்ட் பவுண்டரி, சிக்ஸர்களாகப் பறக்கவிட்டார். லிசாட் வில்லியம்ஸ் வீசிய முதல் ஓவரிலேய சால்ட் 23 ரன்கள் சேர்த்தார், கலீல் அகமது வீசிய 2வது ஓவரிலும் சால்ட் 15 ரன்கள் சேர்த்து பவர்ப்ளே ஓவரை நன்றாகப் பயன்படுத்தினார்.

பில் சால்ட் 26 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்த பில் சால்ட் இந்த சீசனில் 4வது அரைசதத்தை அடித்தார். பவர்ப்ளே ஓவர்களில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் சேர்த்து, ஏறக்குறைய வெற்றியை உறுதி செய்தது.

தொடக்கத்திலேயே சுழற்பந்துவீச்சைக் கொண்டுவராமல் பவர்ப்ளே ஓவருக்குப்பின்புதான் அக்ஸர் படேல், குல்தீப் இருவரும் பந்துவீச வந்தனர். ஆனால், அக்ஸர் வந்த உடனே முதல் பந்திலேயே சுனில் நரேன்(15) விக்கெட்டை எடுத்தார். முதல் விக்கட்டுக்கு இருவரும் 79 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்த 9-வது ஓவரை அக்ஸர் வீச வந்தபோது, களத்தில் நங்கூர மிட்டு பேட் செய்த பில் சால்ட்டை(68) க்ளீன் போல்டாக்கி வெளியேற்றினார்.வழக்கமாக கீழ் வரிசையில் களமிறங்கும் ரிங்கு சிங் பதவி உயர்வு பெற்று 3வதுவீரராகக் களமிறங்கினார். ரசிகர்களுக்கு பெரிய விருந்து காத்திருக்கிறது என்று நினைத்தபோது, ரிங்கு சிங் ஏமாற்றினார். வில்லியம்ஸ் ஓவரில் ரிங்கு சிங்(11) ரன்களில் குல்தீப்பிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

4வது விக்கெட்டுக்கு கேப்டன் ஸ்ரேயாஸ், வெங்கடேஷ் இருவரும் சேர்ந்து நிதானமாக பேட் செய்து அணியை வெற்றி பெற வைத்தனர். ஸ்ரேயாஸ் 33 ரன்களிலும், வெங்கடேஷ் 26 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர்.

கொல்கத்தா - டெல்லி - ஐபிஎல்

பட மூலாதாரம்,SPORTZPICS

டெல்லி அணி சறுக்கியது எங்கே?

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் ஆகிய 3 துறைகளுமே நேற்று மோசமாக இருந்தது. இதில் சுழற்பந்துவீச்சு மட்டுமே ஓரளவுக்க டெல்லிக்கு கை கொடுத்தது. பவர்ப்ளே ஓவரிலேயே அக்ஸர், குல்தீப் யாதவை பந்துவீச அழைத்திருந்தால், கொல்கத்தா அணி பவர்ப்ளேயில் ரன் குவிப்பைத் தடுத்திருக்கலாம். ஆட்டத்தை இன்னும் சிறிது நெருக்கடியாகக் கொண்டு சென்றிருக்கலாம்.

பீல்டிங்கில், முதல் ஓவரில் பில் சால்ட் அடித்த ஷாட்டை கலீல் அகமது கோட்டைவிட்டு பெரிய தவறு செய்தார். பந்துவீச்சில் லிசாட் வில்லியம்ஸ், ரசீக் சலாம், கலீல் ஆகியோர் ரன்களை அதிகமாக வழங்கியதும் ஆட்டத்தை இன்னும் நெருக்கடியாகக் கொண்டு செல்லத் தவறியது.

பேட்டிங்கில் பிரேசர் மெக்ருக் அதிரடியாகத் தொடங்கினாலும், அவரை கட்டம் கட்டி கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் தூக்கினர். அதிலும் மிட்ஷெல் ஸ்டார்க், பிரேசருக்கு வீசிய 7 பந்துகளில் 5 பந்துகள் யார்க்கராக வீசினார். வைபவ் அரோராவும் யார்கர்களை வீசி மெக்ருக்கை திணறவைத்தனர். இறுதியில் ஸ்டார்க் பந்துவீச்சில் மெக்ருக்(12) விக்கெட்டை இழந்தார்.

 
கொல்கத்தா - டெல்லி - ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹர்சித் ராணா பந்துவீச வந்து முதல் பந்திலேயே அபிஷேக் போரெலை 15 ரன்னில் க்ளீன் போல்டாக்கினார். ஏற்கெனவே எதிரணி பேட்டர்களுக்கு “சென்ட்ஆஃப்” செய்து அபாராதத்தை வாங்கிய ஹர்சித் நேற்றும் “சென்ட்ஆஃப்” செய்ய முயன்று கட்டுப்படுத்திக்கொண்டார்.

ரிஷப்பந்த்-அக்ஸர் படேல் ஜோடி சரிவிலிருந்து அணியை மீட்க முயன்றனர். ஆனால், வருண், நரைன் ஓவரில் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் டெல்லி பேட்டர்கள் விக்கெட்டை இழந்தனர். ரிஷப் பந்த்(27), வருண் பந்துவீச்சிலும் அக்ஸர்(15) நரைன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர்.

ஸ்டப்ஸ்(4), குஷ்ஹரா(1) விக்கெட்டுகளை வருண் வீழ்த்தவே டெல்லி அணி 111 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி நேரத்தில் குல்தீப் யாதவ் கேமியோ ஆடிய 35 ரன்கள் சேர்க்காமல் இருந்தால், நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்.

https://www.bbc.com/tamil/articles/c6pydxq0pzwo

ipl-pt-29-04.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் தோல்வி பற்றி ஹர்திக் கூறியது என்ன? சென்னைக்கு என்ன சிக்கல்?

மும்பை - லக்னோ

பட மூலாதாரம்,SPORTZPICS

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மாற்றங்களுடன் இந்த சீசனை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தடுமாற்றம் தொடர்ந்து வருகிறது. பவர் ப்ளேயின் முதல் 4 ஓவர்களில் 27 ரன்களுக்கு 3 விக்கெட், அடுத்த 2 ஓவர்களில் ஒரு ரன்னுக்கு ஒரு விக்கெட் என 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாறியது.

லக்னோவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 48-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது. 145 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 4 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

மும்பை - லக்னோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

ப்ளே ஆஃப் செல்ல லக்னோ என்ன செய்ய வேண்டும்?

இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி 10 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்வி என 12 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியது. இதனால் சென்னை அணி 4-ஆவது இடத்துக்குச் சென்றுவிட்டது. இதனால் அடுத்தடுத்து வரும் போட்டிகள் சென்னை அணிக்கு முக்கியமானதாக மாறியிருக்கின்றன.

அதே நேரத்தில் எளிதாக வெல்ல வேண்டிய போட்டியை கடைசிவரை இழுத்து வந்ததால், லக்னோவின் நிகர ரன்ரேட் பெரிதாக உயரவில்லை. சென்னை அணியையும் விட 0.094 என்ற அளவில் மிகக்குறைவாக இருக்கிறது.

அடுத்தடுத்து வரும் போட்டிகளில் லக்னோ அணி நிகர ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் ஆடினால்தான், ப்ளேஆஃப் சுற்றுக்குள் செல்ல தகுதிப்படுத்த முடியும். லக்னோ அணிக்கு இன்னும் 4 ஆட்டங்கள் மீதமிருக்கும் நிலையில் குறைந்தபட்சம் 3 ஆட்டங்களில் வெல்வது ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை சிக்கலில்லாமல் உறுதி செய்யும்.

மும்பை - லக்னோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பை ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லுமா?

மும்பை அணி 10 போட்டிகளில் 3 வெற்றி, 7 தோல்வி என 6 புள்ளிகளுடன் கடைசி இடத்துக்கு அருகே உள்ளது.. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.272 என்று மோசமாக இருக்கிறது. இன்னும் கைவசம் 4 போட்டிகள் மட்டுமே இருப்பதால் அதில் அனைத்திலும் வென்றாலும் ப்ளே ஆஃப் சுற்று செல்வது கடினம்தான்.

மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை ஆர்சிபி அணியைப்போல், ப்ளே ஆஃப் சுற்று என்பது வெறும் கணிதத்தின் அடிப்படையில்தானேத் தவிர செயல்பாட்டளவில் சாத்தி இல்லாத செயலாகும். ஏனென்றால், மும்பை இந்தியன்ஸுக்கும், ஆர்சிபிக்கும் இன்னும் 4ஆட்டங்களே மீதம் உள்ளன. இந்த 4 ஆட்டங்களிலும் இரு அணிகளும் வெற்றி பெற்றால்கூட தலா 8 புள்ளிகள்தான் பெற முடியும் ஏற்கெனவே இருக்கும் 6 புள்ளிகள் என 14 புள்ளிகள்தான் பெற முடியும்.

ஆனால், ப்ளே ஆஃப் சுற்றில் 4-ஆவது இடத்துக்கு 16 புள்ளிகள்வரை பெற்று அணிகளுக்குள் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இருந்தால், ஆர்சிபி, மும்பை ஆகிய அணிகளும் தானாகவே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியாமல் போகும். ஒருவேளை 14 புள்ளிகள் பெற்ற அணிகள் 4-ஆவது இடத்துக்கு போட்டியிட்டால், ஆர்சிபி, மும்பை அணிகளின் நிகர ரன்ரேட் மிக அதிகமாக இருக்க வேண்டும். இவையெல்லாம் சாத்தியமானால்தான் மும்பை, ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்ல முடியும்.

இந்த ஐபிஎல் சீசன் தொடங்கும்போது ஸ்டாய்னிஸ் மந்தமாகத்தான் தொடங்கினார். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் மெருகேறி இரு போட்டிகளில் லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகியுள்ளார். இந்த சீசனில் பேட்டிங் சராசரியாக 40 வைத்திருக்கும் ஸ்டாய்னிஸ் 150 ஸ்ட்ரைக் ரேட்டுக்கும் அதிகமாக வைத்துள்ளார், பந்துவீச்சில் இதுவரை 10 போட்டிகளில் 12 ஓவர்கள் மட்டுமே வீசிய ஸ்டாய்னிஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இந்த சீசனில் ஏற்கெனவே சதம் அடித்துவிட்ட ஸ்டாய்னிஸ் இந்த ஆட்டத்தில் 45 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து (2சிக்ஸர், 7பவுண்டரி) ஆட்டமிழந்து, ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

மும்பை - லக்னோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

வாய்ப்பை தவறவிட்ட லக்னோ

சேஸிங்கின்போது கேப்டன் ராகுலும், ஸ்டாய்னிஸும்தான் ஆட்டத்தைத் தொடங்கினார்கள் என்று கூறலாம். ஏனென்றால், தொடக்க ஆட்டக்காரர் குல்கர்னி முதல்பந்திலேயே துஷாரா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். அதன்பின் 3வது வீரராக களமிறங்கிய ஸ்டாய்னிஸ், ராகுலுடன் சேர்ந்து தொடக்க ஆட்டக்காரர்போலத்தான் விளையாட வேண்டியதிருந்தது

ஆனால், சூழலுக்கு ஏற்றார்போல் பேட்செய்த ஸ்டாய்னிஸ், பவர்ப்ளே ஓவர்களை சிறப்பாகப் பயன்படுத்தி கோட்ஸீ வீசிய 3வது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். ராகுலும் அவ்வப்பபோது பவுண்டரிகள் அடிக்க பவர்ப்ளே ஓவரில் லக்னோ அணி ஒரு விக்கெட்டை இழந்து 52 ரன்கள் சேர்த்தது.

ராகுல் 5 ரன்கள் சேர்த்திருந்த ஒரு கேட்ச் கோட்டைவிடப்பட்டிருந்தது, ஆனால் இந்த முறை பாண்டியா பந்துவீச்சில் ராகுல்(28) அடித்தஷாட்டை நபி சிறப்பாக கேட்ச் பிடித்து வெளியேற்றினார். 2வது விக்கெட்டுக்கு ஸ்டாய்னிஸ்,ராகுல் கூட்டணி 58 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

முதல் 50 ரன்களை 5.2 ஓவர்களை எட்டிய லக்னோ அணி அடுத்த 50 ரன்களை எட்டுவதற்கு 8ஓவர்கள் எடுத்துக்கொண்டது, அதாவது 48பந்துகளை எடுத்துக் கொண்டது. தொடக்கத்தில் 10 ரன்ரேட்டில் சென்ற லக்னோ அணி நடுப்பகுதி ஓவர்களில் ரன்சேர்க்கும் வேகம் குறைந்து 6 ரன்ரேட்டாகச் சரிந்தது.

நடுப்பகுதி ஓவர்களில் மும்பை அணியின் பியூஷ் சாவ்லா, பும்ரா, பாண்டியா ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்துவீசியதால் ஸ்டாய்னிஸ், தீபக் ஹூடா பேட்டிலிருந்து ரன்கள் செல்வது கடினமாக இருந்தது. இருப்பினும் நிதானமாக ஆடிய ஸ்டாய்னிஸ் 39 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

மும்பை - லக்னோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

தீபக் ஹூடா 18 ரன்கள் சேர்த்தநிலையில் பாண்டியா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 3வது விக்கெட்டுக்கு ஸ்டாய்னிஸ்-பாண்டியா கூட்டணி 40 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷுடன் சேர்ந்தார்

இரு பெரிய ஹிட்டர்களும் அணியை விரைவாக வெற்றிக்கு அழைத்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்டாய்னிஸ் 62 ரன்களில் முகமது நபி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில்2 சிக்ஸர், 7பவுண்டரிகள் அடங்கும்.

அடுத்து களமிறங்கிய டர்னர்(5), பதோனி(6) ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 115 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த லக்னோ அணி, அடுத்த 18 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

வழக்கமாக அதிரடியாக சிக்ஸர்கள், பவுண்டரிகளை அடிக்கும் நிகோலஸ் பூரன் நிதானமாக ஆடி ஒரு பவுண்டரி மட்டுமே சேர்த்தார். பூரன் 14 ரன்களுடனும், குர்னல் பாண்டியா ஒரு ரன்னுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர்.

லக்னோ அணி முதல் 50 ரன்களை விரைவாக எடுத்துவிட்டு அடுத்த 95 ரன்களை மிகவும் மந்தமாகச் சேர்த்ததுதான் அதனால் நிகர ரன்ரேட்டைஉயர்த்தமுடியாமல் இருக்கிறது. 95 ரன்களைச் சேர்க்க லக்னோ அணி 14 ஓவர்களை எடுத்துக் கொண்டுள்ளது. இந்த மந்தமான பேட்டிங்தான் லக்னோவின் குறைவான நிகர ரன்ரேட்டுக்கு காரணமாகும். முதல் 50 ரன்களைச் சேர்த்ததுபோல் விரைவாக இலக்கை எட்டி குறைந்த ஓவர்களில் வென்றிருந்தால், லக்னோ அணி 2வது இடத்துக்கு முன்னேறியிருக்க முடியும்.

மும்பை - லக்னோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேட்டிங், பந்துவீச்சில் கலக்கிய ஸ்டாய்னிஸ்

சிஎஸ்கே அணிக்கு எதிராக சதம் அடித்து லக்னோவுக்கு மிகப்பெரிய வெற்றியை ஸ்டாய்னிஸ் பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில், நேற்றைய ஆட்டத்திலும் ஸ்டாய்னிஸ் அடித்த 62 ரன்கள் சேர்த்து லக்னோ வெற்றிக்கு முக்கியமான பங்களிப்பு செய்தார். பந்துவீச்சிலும், ஸ்டாய்னிஸ் மீது நம்பிக்கை வைத்து தொடக்கத்திலேயே கேப்டன் ராகுல் வாய்ப்பு வழங்கினார்.

அந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திய ஸ்டாய்னிஸ் புதிய பந்தை ஸ்விங் செய்து ஆபத்தான பேட்டர் சூர்யகுமார் யாதவ்(10) விக்கெட்டை வீழ்த்தினார். 3 ஓவர்கள் வீசிய ஸ்டாய்னிஸ் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

மும்பை - லக்னோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பையின் சரிவு

மும்பை அணியைக் காப்பாற்றியது கீழ் வரிசை பேட்டர்கள் நேகல் வதேரா(46), டிம் டேவிட்(35) கடைசி நேரத்தில் ஆடிய கேமியோதான். இருவரும் கடைசி நேரத்தில் ஓரளவுக்கு பேட் செய்யாமல் இருந்திருந்தால் 120 ரன்களுக்குள் மும்பை அணி சுருண்டிருக்கும்.

லக்னோவில் நேற்று நடந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட விக்கெட் பேட்டர்கள் பேட் செய்ய கடினமாக இருந்தது. மும்பை அணி கூடுதலாக 30 ரன்கள் ஸ்கோர் செய்திருந்தால், ஆட்டத்தை வென்றிருக்கக்கூடும்.

மும்பையின் தொடக்க வரிசை பேட்டர்கள் பவர்ப்ளே ஓவருக்குள் பெவிலியன் திரும்பினர். பவர்ப்ளே ஓவரில் மும்பை அணி அடித்த பவுண்டரிகளைவிட இழந்த விக்கெட்டுகள்தான் அதிகம். 3 பவுண்டரிகள் அடித்த மும்பை அணி, 4 விக்கெட்டுகளை இழந்தது.

ரோஹித் சர்மா(4) ரன்னில் மோசின்கான் வீசிய 2வது ஓவரில் ஆட்டமிழக்க, சூர்யகுமார்(10) ரன்னில் ஸ்டாய்னிஸ் வீசிய 3வது ஓவரில்விக்கெட்டை பறிகொடுத்துஇருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதேபோல திலக் வர்மா(7), கேப்டன் ஹர்திக் (0) ஆகிய இருவரும் நவீன் உல்ஹக் வீசிய 6-வது ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பவர்ப்ளே ஓவருக்குள் 4 விக்கெட்டுகளை மும்பை அணி இழந்தது.

இஷான் கிஷன், நேகல் வதேராவுடன் சேர்ந்து ஓரளவுக்கு நிதானமாக பேட்செய்து ஸ்கோரை உயர்த்தினர். மும்பை அணி 10 ஓவரில்தான் 50 ரன்களை எட்டியது. ரவி பிஸ்னோய் வீசிய 13-வது ஓவரில் இஷான் 32 ரன்கள் சேர்த்தநிலையில் யாதவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். நேஹல் வதேரா மட்டும் ஓரளவுக்கு சிறப்பாக ஆடி 46 ரன்களில் ஆட்டமிழந்தார். டிம் டேவிட் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 35 ரன்கள் சேர்த்தார். மற்றவகையில் மும்பை பேட்டர்கள் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

மும்பை - லக்னோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

மயங்க் யாதவ் மீண்டும் காயமா?

இந்த சீசனில் கண்டுபிடிக்கப்பட்ட இளம் வேகப்பந்துவீச்சாளர், மணிக்கு 156 கி.மீ வேகத்தில் பந்துவீசக்கூடிய மயங்க் யாதவ் காயத்திலிருந்து மீண்டுவந்து நேற்று விளையாடினார். 3 ஓவர்கள் சிறப்பாகப் பந்துவீசிய மயங்க் யாதவ், 4வது ஓவரின் முதல் பந்தில் நபியை கிளீன் போல்டாக்கினார். ஆனால், வயிற்றுப்பகுதியில் மீண்டும் வலி எடுக்கவே மயங்க் யாதவ் பெவிலியன் திரும்பினார், அவரின் ஓவரை நவீன் உல்ஹக் பந்துவீசி நிறைவு செய்தார்.

மயங்க் யாதவ் குறித்து பயிற்சியாளர் ஜஸ்டின்லாங்கர் கூறுகையில் “ மயங்க் ஏற்கெனவே ஏற்பட்ட காயத்தில் மீண்டும் வலி ஏற்பட்டதால் முன்கூட்டியே அவரை அழைத்துவந்துவிட்டோம். மயங்க் உடல்நிலையில் நாங்கள் விளையாட விரும்பவில்லை. முன்னெச்சரிக்கையாக மயங்க் அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பெரிதாக அவருக்கு பாதிப்பில்லை” எனத் தெரிவித்தார்.

மும்பை - லக்னோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

என்ன சொல்கிறார் பாண்டியா?

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ தொடக்கத்தில் அதிகமான விக்கெட்டுகளை பவர்ப்ளேக்குள் இழந்தபின் மீண்டு வரமுடியவில்லை. எங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் எங்களால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் பிற அணிகள் பெரிய ஸ்கோரை அடித்துவருவதால் பேட்டர்கள் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள் என்று கூற முடியாது. விக்கெட் நன்றாக இருந்தது, பந்தை பார்த்து அடிக்க முடிந்தது. ஆனால் தவறான ஷாட்களை ஆடினோம். களத்துக்குள் இறங்கிவிட்டால் சில நேரங்களில் தோற்கலாம், வெற்றி பெறலாம், ஆனால் போராட வேண்டும் என்று நம்பக்கூடியவன். இந்த ஆட்டம் கடினமானதுதான். ஏராளமானவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறோம். வதேரா சிறப்பாக பேட் செய்தார், கடந்த சீசனிலும் வதேரா சிறப்பாக விளையாடினார். தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடியதால் வதேராவுக்குவாய்ப்புக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். பல ஆண்டுகளாக மும்பை அணிக்காக ஆடி வருவதைப் பார்த்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c3gq141p06qo

ipl-pt-30-04.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ சென்னை தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ப‌ல‌ விளையாட்டில் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுக்க‌ வில்லை

 ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கு ர‌க‌னாவை விளையாட‌ விடுவ‌தை நினைக்க‌ சிரிப்பாய் இருக்கு

 

போன‌ ஜ‌பிஎல்ல‌ மிடிலில் வ‌ந்து ந‌ல்லா விளையாடினார்........................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோனியை களத்தில் வைத்து சென்னையை திணறடித்த பஞ்சாப்

சிஎஸ்கே - ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மே 2024, 02:52 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்துவது கடினம் என்று கூறப்பட்ட வரலாறு மாறி வருகிறது. சிஎஸ்கே அணியின் பலவீனத்தைப் புரிந்து கொண்ட அணிகள் இந்த சீசனில் எளிதாக சொந்த மைதானத்தில் வீழ்த்தி வருகின்றன.

ஏற்கெனவே லக்னெள அணி சிஎஸ்கே அணியை தோற்கடித்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே-வை எளிதாக வென்றிருக்கிறது பஞ்சாப் கிங்ஸ். சிஎஸ்கே அணியில் திறமையான பேட்டர்கள், அதிரடியான வீரர்கள் இருந்தும் பஞ்சாப் அணியை ஆட்டத்தின் எந்தச் சூழலிலும் முந்த முடியவில்லை.

பஞ்சாப் கிங்ஸ் வெற்றியால் அந்த அணிக்கு புள்ளிப்பட்டியலில் பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்படப்போவதில்லை என்றாலும், சிஎஸ்கே ப்ளே ஆஃப் செல்வதில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த இந்த 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பஞ்சாப் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. 163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 13 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணியை தொடர்ந்து 5 முறை வீழ்த்திய 2-ஆவது அணி என்ற பெருமையை பஞ்சாப் கிங்ஸ் பெற்றது. இதற்கு முன் 2018-19ம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அந்த பெயரை பெற்றிருந்தது.

 
ஐபிஎல் - சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

பஞ்சாப் பிளே ஆப் செல்ல வாய்ப்பு உள்ளதா?

இந்த வெற்றி மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் 4 வெற்றி, 6 தோல்வி என 8 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் அடிப்படையில் மைனஸ் 0.0.62 ஆக உயர்ந்திருக்கிறது.

இன்னும் 4 போட்டிகள் பஞ்சாப் அணிக்கு மீதம் இருப்பதால், அந்த 4 ஆட்டங்களிலும் கண்டிப்பாக வென்றால்தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். எனினும் வெற்றியால், இப்போதைக்கு ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேற்றப்படுவதை தாமதப்படுத்திக்கொண்டது பஞ்சாப் கிங்ஸ் அணி.

சிஎஸ்கே அணியுடன் மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் அணி விளையாடுகிறது. அந்த ஆட்டத்த்தில் ஒருவேளை பஞ்சாப் தோற்றாலே ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிடும். ஏனென்றால், குறைந்தபட்சம் 16 புள்ளிகளுடன் இருந்தால்தான் ப்ளே ஆஃப் சுற்றில் 4-ஆவது இடத்துக்கு மல்லுக்கட்ட முடியும், 14 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் செல்வது கடினமானதாக இந்த சீசனில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

 
ஐபிஎல் - சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிளே ஆப் செல்வதில் சென்னைக்கு என்ன சிக்கல்?

சிஎஸ்கே அணி 10 போட்டிகளில் 5 தோல்வி, 5 வெற்றி என 10 புள்ளிகளுடன் தொடர்ந்து 4-ஆவது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே நிகர ரன்ரேட் லக்னெள அணியைவிட கூடுதலாக 0.627 வைத்துள்ளது. இருப்பினும் அடுத்து வரும் 4 ஆட்டங்களிலும் சிஎஸ்கே அணி கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதில் பஞ்சாப் அணியுடன் மே-5ஆம் தேதி மீண்டும் சிஎஸ்கே மோதுகிறது.

இது தவிர்த்து குஜராத் (மே10), ராஜஸ்தான் (மே12), ஆர்சிபி(மே18) ஆகிய போட்டிகளும் சிஎஸ்கேவுக்கு உள்ளன. இதில் ராஜஸ்தான், குஜராத் அணிகளுடனான ஆட்டம் கடினமாக இருக்கும். ஏற்கெனவே ஆர்சிபி, குஜராத் அணிகளை முதல் ஆட்டங்களில் சிஎஸ்கே வென்றுள்ளது. ஆனால், ப்ளே ஆஃப் வாய்ப்பைத் தீர்மானிக்கும் போட்டிகளில் இவ்விரு அணிகளும் நெருக்கடி கொடுத்தால், சிஎஸ்கே நிலை போராட்டமாக அமையும்.

சிஎஸ்கே அணியில் ஏற்கெனவே டேவன் கான்வே இல்லாதது தொடக்க ஆட்டத்தில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அதற்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட் க்ளீசனை சிஎஸ்கே வாங்கியது. கடந்த போட்டியோடு வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானும் வங்கதேசம் செல்வதால் பந்துவீச்சில் பலவீனம் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிதாக ஒரு பந்துவீச்சாளரை சேர்க்க இருக்கிறதா அல்லது இருக்கும் பந்துவீச்சாளர்களுடன் போட்டிகளை சிஎஸ்கே எதிர்கொள்ளப் போகிறதா என்பது கேள்வியாக இருக்கிறது.

சிஎஸ்கே அணியில் பந்துவீச்சில் வேரியேஷன்களை காண்பித்து பந்துவீசுவது முஸ்தபிசுர் ரஹ்மான் முன்னணியில் இருந்தார். அவரும் செல்வதால், தேஷ்பாண்டே, பதீராணா, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹர் ஆகியோரை வைத்துதான் பந்துவீச வேண்டியதிருக்கும்.

ஐபிஎல் - சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

நேற்றைய போட்டியில் என்ன நடந்தது?

சிஎஸ்கே நிர்ணயித்த 163 ரன்களை துரத்திய பஞ்சாப் அணிக்கு பேர்ஸ்டோ(46), ரூஸோ(43) நல்ல அடித்தளம் அமைத்தனர். 2-ஆவது விக்கெட்டுக்கு இருவரும் 62 ரன்கள் சேர்த்துக் கொடுத்து வெற்றியை எளிதாக்கினர். குறைவான ரன்கள் என்பதால், விரைவாக ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்று, ரன்ரேட்டில் தொய்வில்லாமல் பஞ்சாப் பேட்டர்கள் ஆட்டத்தைக் கொண்டு சென்றனர்.

சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுக்க வாய்ப்பில்லாத வகையில் ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் அடித்து நம்பிக்கை வளராத வகையில் பஞ்சாப் பேட்டர்கள் நேர்த்தியாக பேட் செய்தனர்.

பேர்ஸ்டோ, ரூஸோ ஆட்டமிழந்தபின் சஷாங் சிங், சாம் கரன் கூட்டணி ஆட்டத்தை வெற்றி பெறச் செய்தனர். சஷாங் சிங் ஒரு பவுண்டரி, சிக்ஸர் உள்பட 25 ரன்னிலும், சாம் கரன் 3பவுண்டரிகள் உள்பட 26 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

ஐபிஎல் - சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

சென்னை வீரர்களை வீழ்த்திய பஞ்சாபின் சுழல்

பஞ்சாப் அணியின் வெற்றிக்கு அந்த அணியில் இருக்கும் இரு சுழற்பந்துவீச்சாளர்கள்தான் முக்கியக் காரணம். ஹர்பிரி்த் பிரார், ராகுல் சஹர் இருவரும் இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தனர். இருவரின் பந்துவீச்சிலும் கெய்க்வாட் உள்ளிட்ட எந்த பேட்டராலும் பெரிய ஷாட்களை அடிக்க முடியவில்லை.

ஹர்பிரித் பிரார், ராகுல் சஹர் இருவரும் 8 ஓவர்கள் வீசி, 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சராசரியாக ஓவருக்கு 4 ரன்களை விட்டுக் கொடுத்தனர். இருவரும் தங்களின் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸரைக் கூட சிஎஸ்கே பேட்டர்களை அடிக்க அனுமதிக்கவில்லை.

இதில் இரு திருப்புமுனையான விக்கெட்டுகளான ரஹானே, ஷிவம் துபேவை வெளியேற்றி 4 ஓவர்களில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்த ஹர்பிரித் பிரார் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். பிரார், சஹர் இருவரும் 8 ஓவர்கள் பந்துவீசி அந்த 8 ஓவர்களிலும் ஒருபவுண்டரி, சிக்ஸர் கூட அடிக்கவிடாமல் சிஎஸ்கே அணியின் ரன்ரேட்டை கட்டிப்போட்டனர்.

 
ஐபிஎல் - சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோனி களமிறங்கிய பிறகு என்ன நடந்தது?

வழக்கமாக தோனி களமிறங்கியதும் பெரிய ஷாட்களை அடித்து ரன்களைக் குவிப்பதுதான் இந்த சீசனில் வழக்கமாக இருக்கிறது. ஆனால் பஞ்சாப் வீரர்களிடம் அதி பெரிய அளவில் நடக்கவில்லை. அதுவும் ரன்கள் குவிக்கப்படவேண்டிய 19-ஆவது ஓவரில் தோனியை பேட் செய்ய வைத்தே, ரன்களைக் கட்டுப்படுத்தினர் பஞ்சாப் வீரர்கள்.

19-வது ஓவரை வீசிய ராகுல் சஹர் வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து, மொயின் அலியின் விக்கெட்டையும் வீழ்த்தினார். அந்த ஓவரில் 4 பந்துகளைச் சந்தித்த தோனியால் 2 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. எனினும் கடைசி ஓவரில் ஒரு சிக்சரும் பவுண்டரியும் அடித்தது ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கக்கூடும்.

பவர் பிளேயில் ஓரளவு சிறப்பாகத் தொடங்கிய சிஎஸ்கே, 7-ஆவது ஓவர் தொடங்கி, 15-ஆவது ஓவர்கள் வரை மிக மெதுவாகவே ஆடியது. இந்த 8 ஓவர்களில் ஷிவம் துபே, ஜடேஜா, ரஹானே, ஆகியோர் விக்கெட்டுகளையும் சிஎஸ்கே இழந்தது.

ஐபிஎல் - சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஎஸ்கே தோல்விக்கு மைதானம் காரணமா?

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நிலவிய பனிப்பொழிவு, ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றாற்போல் மாறியதும், சிஎஸ்கே பேட்டர்களுக்கு சவாலாக அமைந்திருந்தது.

இந்த சீசனில் ரஹானே தொடர்ந்து மோசமான ஃபார்மில் இருந்து வருகிறார். இருப்பினும் தொடக்க ஆட்டத்துக்கு வேறுவீரர் இல்லை என்பதால், அவருக்கு மீண்டும், மீண்டும் வாய்ப்பளித்து வருகிறது சிஎஸ்கே நிர்வாகம். இந்த ஆட்டத்தில்கூட பவர்ப்ளேயில் 5 பவுண்டரிகள் உள்பட 29 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ரஹானே-கெய்க்வாட் சேர்த்த 64 ரன்கள்தான் பெரிய பார்ட்னர்ஷிப். அதன்பின் வந்த எந்த பேட்டரும் பெரிதாக கெய்க்வாட்டுடன் சேர்ந்து ரன்களைச் சேர்க்கவில்லை.

குறிப்பாக ஷிவம் துபே(0), ஜடேஜா(2) இருவரும் 6 ரன்கள் இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது சிஎஸ்கே அணியை பெரிய இடரில் தள்ளியது. அதிலும் நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே ரன்ரேட்டை தோளில் சுமக்கும் பேட்டர் துபே ஆட்டமிழந்தது சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. ஆல்ரவுண்டர் எனக் கூறப்படும் ஜடேஜாவும் வெளியேறியது சிஎஸ்கேயின் நம்பிக்கையை உடைத்தது.

ஐபிஎல் ஏலத்தில் ரூ.8.40 கோடிக்கு வாங்கப்பட்ட உத்தரப் பிரதேச பேட்டர் சமீர் ரிஸ்வி பேட்டிங் மீது நேற்று பெரிய கேள்வி எழுந்தது. இளம் வீரர், பெரிய ஹிட்டர், பவர் ஹிட்டர் என்றெல்லாம் பாராட்டப்பட்ட சமீர் ரிஸ்வியை ஏலத்தில் சிஎஸ்கே எடுத்து, அதனால் எந்தப் பலனையும் பெறவில்லை.

ஐபிஎல் - சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த சீசனில் ரிஸ்வி தனது ஆட்டத்திறமையை நிரூபிக்க இந்த ஆட்டம் சமீர் ரிஸ்விக்கு வாய்ப்பாக அமைந்திருந்தது. ஆனால், அவர் 23 பந்துகளில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிலும் தான் சந்தித்த 23 பந்துகளில் 22-வது பந்தில்தான் தேர்டுமேன் திசையில் ஒரு பவுண்டரி அடித்தார். அதுவரை 21 பந்துகள்வரை ஒருபவுண்டரிகூட ரிஸ்வி அடிக்கவில்லை.

ரஹானே களத்தில் இருந்தவரை அடிக்கப்பட்ட 5 பவுண்டரிகள்தான் சிஎஸ்கே கடைசியாக அடித்தது. அதன்பின் 55 பந்துகளாக ஒரு பவுண்டரிகூட சிஎஸ்கே அணி அடிக்கவில்லை. கேப்டன் கெய்க்வாட், துபே, ஜடேஜா, ரிஸ்வி ஆகியோர் களத்தில் வந்து சென்றபோதிலும் 55 பந்துகளாக பவுண்டரி இல்லை. ஐபிஎல் சீசனில் பவுண்டரி அடிக்காமல் நீண்டநேரம் இருந்த ஆட்டமாக இருந்தது, இதற்கு முன் குஜராத்-டெல்லி அணிகளுக்கு இடையே 38 பந்துகளாக பவுண்டரி அடிக்காமல் இருந்ததை சிஎஸ்கே முறியடித்துவிட்டது.

கடைசியில் களமிறங்கிய மொயின் அலி(15), தோனி(15) ஆகியோரால்தான் 150 ரன்களை சிஎஸ்கே கடந்தது.

 
ஐபிஎல் - சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோல்வி பற்றி கெய்க்வாட் கூறியது என்ன?

தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் கூறுகையில் “ நாங்கள் 50 முதல் 60 ரன்கள் குறைவாகச் சேர்த்துவிட்டோம் இது தோல்விக்கு பிரதான காரணம். நாங்கள் பேட் செய்தபோது, ஆடுகளம் சிறப்பாக இல்லை, பனிப்பொழிவு இருந்தது. இந்த ஆடுகளத்தில் அதிகமாக பயிற்சி எடுத்துள்ளேன், வென்றுள்ளேன். ஆனால், இந்த ஆட்டத்தில் என்னால் வெல்ல முடியவில்லை.” என்றார்.

“டாஸ் போடும்போது அழுத்தம் இருந்தது, பனிப்பொழிவு ஆட்டத்தை இன்னும் கடினப்படுத்தியது. கடந்த ஆட்டத்தில் நாங்கள் சன்ரைசர்ஸ் அணியை பெரிய ரன்கள் வித்தியாசத்தில் இதே மைதானத்தில்தான் வென்றோம் என்பது வியப்பாக இருக்கிறது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். கடந்த 2 போட்டிகளாக நாங்கள் 200 ரன்களுக்கு மேல்சேர்க்க முயன்றோம். இந்த முறை விக்கெட் கடினமாக இருந்தது. பதிரணா, தேஷ்பாண்டே இல்லாதது முக்கிய குறைபாடு. இரு பந்துவீச்சாளர்களை வைத்துக் கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்துவது கடினம். இது தவிர பனிப்பொழிவும் சேர்ந்து கொண்டது. எங்களால் பெரிதாக முயற்சிக்க முடியவில்லை” எனத் தெரிவித்தார் கெய்க்வாட்.

ஐபிஎல் - சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதல் முறையாக ஆட்டமிழந்த தோனி

இந்த சீசனில் கடந்த 9 ஆட்டங்களில் தோனி ஆட்டமிழக்காமல் பேட் செய்து வருகிறார் என்ற பெயர் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. ஆனால், நேற்று அந்த சாதனை தகர்க்கப்பட்டது. தோனி களமிறங்கிய சிறிய கேமியோ ஆடி 14 ரன்னில் மோகித் சர்மாவால் ரன்அவுட் செய்யப்பட்டார். ஆட்டமிழக்காமல் ஆடிவந்த தோனியின் சாதனையும் முடிவுக்கு வந்தது. ஆனால், இந்த சீசனில் தோனி ஆட்டமிழந்துவிட்டாரே தவிர, எந்த பந்துவீச்சாளராலும் ஆட்டமிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 போட்டிகளில் ஒரு ரன், 2 ரன்கள் சேர்த்து ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வதைவிட, பவுண்டரி, சிக்ஸர்கள் அடிப்பதுதான் பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்லும். ஆனால் நேற்று சிஎஸ்கே பேட்டர்கள் யாரும் பெரிய ஷாட்களுக்குச் செல்லவில்லை, பவுண்டரி, சிக்ஸர்கள் அதிகமாக அடிக்கவில்லை. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே தரப்பில் மொத்தம் 4 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டன.

தனி ஒருவனாக போராடிய கெய்க்வாட்

இந்த ஆட்டத்தில் விக்கெட்டுகள் சரிந்தவுடன் நிதானமாக ஆடிய கெய்க்வாட் 44 பந்துகளில் அரைசதம் அடித்து 62 ரன்னில் ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்கள், 5பவுண்டரிகள் அடங்கும். அதிலும் குறிப்பாக சேப்பாக்கம் மைதானத்தில் கெய்க்வாட் ஆட்டம் சிறப்பாக இருந்து 396 ரன்களை சேப்பாக்கத்தில் மட்டும் சேர்த்துள்ளார்.

இந்த சீசனில் 5-ஆவது அரை சதத்தை கெய்க்வாட் அடித்துள்ளார். இதற்கு முன் கடந்த சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் டேவான் கான்வே அதிகபட்சமாக 390 ரன்கள் சேர்த்திருந்தநிலையில் அதை கெய்க்வாட் முறியடித்தார்.

https://www.bbc.com/tamil/articles/czrxgvdz70mo

ipl-pt-01-05.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடராஜனுக்கு பர்ப்பிள் தொப்பி - ராஜஸ்தானை 1 ரன்னில் வீழ்த்திய ஹைதராபாத்தின் துல்லியமான யார்க்கர்கள்

ராஜஸ்தான் - ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மே 2024, 02:41 GMT
    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐபிஎல் தொடரில் வியாழக்கிழமை நடந்த ஆட்டத்தில், கடைசி ஓவரின் 5வது பந்துவரை ஆட்டம் ராஜஸ்தான் பக்கம் இருந்த நிலையில் கடைசிப்பந்தில் ஆட்டம் சன்ரைசர்ஸ் பக்கம் திரும்பி வெற்றி பெற்றதை யாராலும் கணித்திருக்க முடியாது. சன்ரைசர்ஸ் அணியினருக்கு கூட தாங்கள் வெற்றி பெறுவோமா என்பதில் சந்தேகம் இருந்திருக்கக்கூடும். ஆனால் முடிவு அவர்களுக்குச் சாதகமாகவே அமைந்துவிட்டது. அதேசமயம், ராஜஸ்தான் அணியினருக்கும் எப்படித் தோற்றோம் எங்கு தோற்றம் என்பது புதிராக இருந்தது.

19-ஆவது ஓவர்வரை ராஜஸ்தான் அணியின் ரன்ரேட் 10 ரன்களுக்குக் குறையாமல் இருந்துவந்தநிலையில் கடைசி ஓவரிலும் வெற்றிக்கு அருகே சென்று கோட்டைவிட்டுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 50-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஒரு ரன்னில் தோற்கடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்தது. 202 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் சேர்த்து ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது.

 
ராஜஸ்தான் - ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிளே ஆப் வாய்ப்பு யாருக்கு?

இந்தத் தோல்வியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து 10 போட்டிகளில் 8வெற்றி, 2 தோல்வி என 16 புள்ளிகளுடன் முதலிடத்தில், நிகர ரன்ரேட் 0.622 என்று இருக்கிறது. இன்னும் ராஜஸ்தான் அணிக்கு 4 லீக் ஆட்டங்கள் இருக்கும் நிலையில் அதில் குறைந்தபட்சம் 2 போட்டிகளில் வென்றாலே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் முதல் இரு இடங்களைப் பிடித்துவிட முடியும்.

சன்ரைசர்ஸ் அணி 10 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்வி என 12 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்துக்கு நகர்ந்துள்ளது. நிகர ரன்ரேட் 0.072 என்று வைத்துள்ளது. சிஎஸ்கே அணி 4ஆவது இடத்தில் இருந்தநிலையில் 5-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் அணிக்கு இன்னும் மீதம் 4 ஆட்டங்கள் உள்ளன. இதில் குறைந்தபட்சம் அடுத்துவரும் 3 ஆட்டங்களில் வென்றால்தான் சன்ரைசர்ஸ் சிக்கல் இல்லாமல் ப்ளே ஆஃப் செல்ல முடியும். இல்லாவிடில், 16 புள்ளிகளோடு இருந்தால், நிகர ரன்ரேட் சிக்கல் வந்துவிடும்.

சன்ரைசர்ஸ் அணிக்கு, மும்பை(மே6), லக்னோ(மே8), குஜராத்(மே16), பஞ்சாப்(மே19) ஆகிய அணிகளுடன் போட்டிகள் உள்ளன. மும்பை அணியை ஏற்கெனவே சன்ரைசர்ஸ் தோற்கடித்திருப்பதால், 2-ஆவது முறையும் தோற்கடித்தால், மும்பையின் ப்ளே ஆஃப்கனவு முடிந்துவிடும். அதேபோல பஞ்சாப், குஜராத் அணிகள் சன்ரைசர்ஸ் அணியுடன் தோற்றாலே ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்வது கடினமாகிவிடும்.

இதுவரை 50 லீக் ஆட்டங்கள் முடிந்துவிட்டன. ஆனால், இதுவரை எந்த அணியும் ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேற்றப்படவும் இல்லை, எந்த அணியும் அதிகாரப்பூர்வமாக ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதியாகவும் இல்லை.

ராஜஸ்தான் - ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சன்ரைசர்ஸ் - ராஜஸ்தான் போட்டியில் என்ன நடந்தது?

சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு மூல காரணமாக இருந்தது புவனேஷ்வர் குமாரின் அனுபவமான பந்துவீச்சுதான். அனுபவமான பந்துவீச்சாளர் என்பதை கடைசி ஓவரிலும் முதல் ஓவரிலும் வெளிப்படுத்திவிட்டார். முதல் ஓவரிலேயே பட்லர், சாம்ஸன் இரு பெரிய ஆபத்தான பேட்டர்களை டக்அவுட்டில் வெளியேற்றி ராஜஸ்தான் அணிக்கு பெரிய ஷாக் அளித்தார். முதல் ஓவரில் புவனேஷ்வர் இதுவரை 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்..

கடைசி ஓவரிலும் அவரது துல்லியமான பந்துவீச்சு தொடர்ந்தது. 13 ரன்களுக்குள் முடக்க வேண்டும் என்ற நிலையில், கடைசிப்பந்தில் பாவெலுக்கு கால்காப்பில் வீசி அவுட் ஆக்கி சன்ரைசர்ஸ் அணிக்கு புவனேஷ்வர் வெற்றி தேடித்தந்தார். 4 ஓவர்கள் வீசி 41ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

நடராஜன்

பட மூலாதாரம்,SPORTZPICS

கடைசிப் பந்து வெற்றி பற்றி கம்மின்ஸ் கூறியது என்ன?

சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “ அற்புதமான போட்டி. கடைசிப்பந்துவரை நாங்கள் வெற்றி பெறுவோம் என நான் நினைக்கவில்லை. இது டி20 கிரிக்கெட் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். புவனேஷ்வர் 6 யார்கர்களை வீசி அற்புதமாக பந்துவீசினார். கடைசிப்பந்தில் நிச்சயம் சூப்பர் ஓவருக்கு கொண்டு செல்லும் என நினைத்தேன். நடராஜன் அருமையான யார்கர் பந்துவீச்சாளர். ராஜஸ்தான் அணியும் நன்கு பேட்செய்தனர், ஆனால் தொடக்கத்தில்தான் விக்கெட்டுகளை இழந்தனர். தரமான வீரர்கள் என்பதால் கடைசிவரை எங்களுக்கு வெற்றிக்கான வாய்ப்பைத் தரவில்லை. நிதிஷ் குமார் சிறப்பாக பேட் செய்து இக்கட்டான சூழலில் நல்ல ஸ்கோர் செய்தார்” எனத் தெரிவித்தார்.

 
ராஜஸ்தான் - ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாட்டு வீரர் நடராஜன் எட்டிய புதிய மைல்கல்

தமிழ்நாட்டைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் 4 ஓவர்கள்வீசி 35 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி நடராஜன் புதிய மைல்கல் எட்டினார்.

சிம்ரன் ஹெட்மயர் விக்கெட்டை நடராஜன் எடுத்தபோது இந்த சாதனையைப் படைத்தார். 89 டி20 போட்டிகளில் நடராஜன் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், இவரின் எகானமி 9 ரன்களுக்கும் குறைவாகவே இருக்கிறது. இதற்கு முன் நடராஜன் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது, 55 போட்டிகளில் 63 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த சீசனில் இதுவரை 8 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா நிற தொப்பியையும் பெற்றுள்ளார். சன்ரைசர்ஸ் அணிக்கு அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்த 3-ஆவது பந்துவீச்சாளராக நடராஜன் இருக்கிறார். முதலிடத்தில் புவனேஷ்வரும், 2வது இடத்தில் ரஷித் கானும் உள்ளனர்.

ஆட்டத்தை மாற்றிய கடைசி 2 ஓவர்கள்

18-ஆவது ஓவர்கள் வரை ஆட்டத்தின் வெற்றி ராஜஸ்தான் அணி பக்கமே இருந்தது. கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் துருவ் ஜுரெல், ரோவ்மென் பாவல் இருந்தனர். 19-ஆவது ஓவரை கேப்டன் கம்மின்ஸ் வீசினார்.

உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களுள் ஒருவர் என்பதை கம்மின்ஸ் இந்த ஓவரில் வெளிப்படுத்தினார். முதல் பந்தைச் சந்தித்த துருவ் ஜுரெல்(1) யார்க்கராக வீசப்பட்ட பந்தை லெக்திசையில் மடக்கி அடிக்க அபிஷேக்கிடம் கேட்சானது. அடுத்து அஸ்வின் களமிறங்கி 2வது பந்தில் ஒரு ரன்எடுத்து ஸ்ட்ரைக்கே பாவெலிடம் கொடுத்தார். தொடர்ந்து 3 பந்துகளை டாட் பந்துகளாக கம்மின்ஸ் வீசி பாவெலை திணறடித்தார். கடைசிப்பந்தை கம்மின்ஸ் வைடு யார்க்கராகவீச, அதை பாவெல் சிக்ஸருக்கு விளாச ஆட்டம் பரபரப்பானது. இந்த ஓவரில் கம்மின்ஸ் வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் எடுத்தார்.

ராஜஸ்தான் - ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடைசி ஓவரில் புவனேஷ்வர் நிகழ்த்திய திருப்பம்

கடைசி ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். ராஜஸ்தான் அணி வெற்றி பெற 6 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது. புவனேஷ்வர் வீசிய முதல் பந்தில் அஸ்வின் ஒரு ரன் எடுத்து, ஸ்ட்ரைக்கை பாவெலிடம் வழங்கினார். 2ஆவது பந்தில் பாவெல் 2 ரன்களும், 3வது பந்தில் பாவெல் பவுண்டரி அடித்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தனார்.

புவி வீசிய 4ஆவது பந்தில் பாவெல் 2 ரன்களும், 5-வது பந்தில் 2 ரன்களும் எடுத்தார். கடைசிப்பந்தில் ராஜஸ்தான் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு ரன் எடுத்தால் சூப்பர் ஓவர்செல்லும் 2 ரன்கள் எடுத்தார் ராஜஸ்தான் வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. பாவெல் கடைசிப்பந்தை எதிர்கொள்ள அதை புவி லோஃபுல்டாசாக வீசவே, பாவெல் கால்காப்பில் வாங்கி 27 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒட்டுமொத்தத்தில் ராஜஸ்தான் அணியிடம் இருந்த வெற்றியை சன்ரைசர்ஸ் அணி பறித்துக்கொண்டது என்றே கூறலாம்.

ராஜஸ்தான் - ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரியான் பராக்-ஜெய்ஸ்வால் கூட்டணி

ராஜஸ்தான் அணி முதல் ஓவரிலேயே கேப்டன் சாம்ஸன், பட்லர் இருவரின் விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. 3ஆவது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், ரியான் பராக் கூட்டணி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், ஜெய்ஸ்வால், பராக் கூட்டணி அதிரடியைக் கைவிடவில்லை, 4.5 ஓவர்களில் ராஜஸ்தான் 50 ரன்களை எட்டியது. சன்ரைசர்ஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கி பவர்ப்ளே ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்தனர். 9.6 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 100 ரன்களை எட்டியது.

ஜெய்ஸ்வால் 30 பந்துகளில் அரைசதத்தையும், 31 பந்துகளில் ரியான் பராக் ஒரு அரைசதத்தையும் விளாசினர். இருவருமே ஆட்டத்தை முடித்துவிடுவார்கள் என்று எண்ணப்பட்டது. ஆனால் ஜெய்ஸ்வால் தேவையற்ற ஒரு ஸ்விட்ச் ஹிட்ஷாட் ஆட முயன்று நடராஜன் பந்துவீச்சில் க்ளீன்போல்டாகி 67 ரன்களில் ஆட்டமிழந்தார்.இருவரும் 3வது விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

ஜெய்ஸ்வால் விக்கெட்தான், சன்ரைசர்ஸ் அணிக்கான வெற்றி வாய்ப்புக் கதவுகளை திறந்தது. அதுவரை ஆட்டம் ராஜஸ்தான் அணி பக்கம்தான் இருந்தது. அடுத்த சிறிறு நேரத்தில் ரியான் பராக் 49 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தநிலையில் கம்மின்ஸ் பந்தவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஹெட்மயர் ஒருசிக்ஸர், பவுண்டரி உள்பட 13 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த 3பேட்டர்கள் ஆட்டமிழந்து ராஜஸ்தான் அணியை நெருக்கடிக்குள் தள்ளினர். கடைசி நேரத்தில் ரோவ்மென் பாவல் அதிரடியாக ஆடினாலும், எதிர்முனையில் அவரின் அழுத்தத்தைக் குறைக்கும் பேட்டர்கள் இல்லை. கடந்த போட்டியில் சிறப்பான அரைசதம் அடித்த ஜூரெல் இந்த ஆட்டத்தில் ஒரு ரன்னில் வெளியேறி ஏமாற்றினார்.

5-ஆவது முறையாக 200 ரன்கள்

சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் மட்டும் 5வது முறையாக 200 ரன்கள் ஸ்கோரைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக்(12) ரன்னில் ஆவேஷ் கானும், அன்மோல்பிரித் சிங்கை(5) ரன்னில் சந்தீப் குமாரும் வீழ்த்தி தொடக்கத்திலேயே அழுத்தம் கொடுத்தனர். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் மிகக்குறைவாக 37 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

https://www.bbc.com/tamil/articles/c14k8g9nlnno

ipl-pt-02-05.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோடிக்கணக்கில கொட்டி மட்டையடி மன்னர்களை ஏலம் எடுத்து மட்டையாகிய கொம்பனி என்றால் அது மும்பைதான்......அநியாயத்துக்கு சச்சினும் அதுக்குள் கிடந்து அல்லாடுறார் .......!  😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைந்த மும்பையின் ப்ளே ஆஃப் கனவு - வரலாற்றை மாற்றி எழுதிய கொல்கத்தா அணி

ஐபிஎல் 2024: MI vs KKR

பட மூலாதாரம்,SPOORTZPICS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஐபிஎல் டி20 தொடரில் அனைத்து அணிகளும் 10 ஆட்டங்களை விளையாடிவிட்ட நிலையில் எந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும், வெளியேறும் என்று தெரியாமல் இருந்து வந்தது.

அனைத்து அணிகளுக்குமே வாய்ப்புகள் திறந்திருந்ததால், எந்தப் போட்டியிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், நேற்றைய கொல்கத்தா-மும்பை ஆட்டத்தின் முடிவைத் தொடர்ந்து ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறவுள்ளது.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 51வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 170 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.1 ஓவர்களில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மும்பை வான்ஹடே மைதானத்தில் 12 ஆண்டுகளுக்குப் பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது. இதற்கு முன் பல போட்டிகளில் விளையாடியிருந்தாலும், மும்பை அணியின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. ஆனால், தற்போது 12 ஆண்டுக்குப் பின் சொந்த மண்ணில் வைத்து மும்பை அணியை கொல்கத்தா அணி வீழ்த்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது இது 4வது முறை. ஒரே போட்டியில் 20 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. இதற்கு முன் 2018, ஏப். 24 (மும்பை-சன்ரைசர்ஸ்), 2017 ஏப். 23 (கொல்கத்தா-ஆர்சிபி), 2010 ஏப். 5 (டெக்கான்-ராஜஸ்தான்) ஆகிய போட்டிகளில் இரு அணிகளும் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளன. அதற்குப் பிறகு 6 ஆண்டுகள் கழித்து இப்போது இந்த ஆட்டத்தில் கொல்கத்தா, மும்பை அணிகள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருக்கின்றன.

 

கொல்கத்தா அணி 12 ஆண்டுகள் கழித்துப் பெற்ற வெற்றி

ஐபிஎல் 2024: MI vs KKR

பட மூலாதாரம்,SPORTZPICS

வெற்றிக்குப் பின் கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில், “நாங்கள் சரியான நேரத்தில் கதவைத் தட்டியிருக்கிறோம். நாங்கள் தோற்றுவிட்டோம் என தொடக்கத்தில் பேசினார்கள். 12 ஆண்டுகளாக வான்ஹடேவில் கொல்கத்தா வென்றதில்லை. இன்று அந்தப் பெயரை மாற்றியுள்ளோம்," என்றார்.

தங்களுக்குச் சிறப்பாக உதவியதாகவும் மணிஷ் பாண்டே கிடைத்த வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்தியதால் நல்ல ஸ்கோரை எட்ட முடிந்ததாகவும் தெரிவித்தார் ஸ்ரேயாஸ் அய்யர்.

"எந்த ஸ்கோர் கிடைத்தாலும் டிபெண்ட் செய்ய வேண்டும் என வீரர்களிடம் தெரிவித்தேன். சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு அற்புதம். லைன் லென்த்தில் வீசி பேட்டர்களை திணறவிட்டனர். வெங்கடேஷ் பேட்டிங் மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

வலுப்பெற்ற ப்ளே ஆஃப் வாய்ப்பு

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை நன்கு பிரகாசப்படுத்திக் கொண்டது. இதுவரை 10 போட்டிகளில் ஆடிய கொல்கத்தா 7 வெற்றி, 3 தோல்வி என 14 புள்ளிகளுடன் 2வது இடத்தில், நிகர ரன்ரேட்டில் 1.098 என வலுவாக இருக்கிறது.

புள்ளிப் பட்டியலில் உள்ள எந்த அணியையும்விட நிகர ரன்ரேட்டில் வலுவாக இருப்பது கொல்கத்தா என்பதால், இன்னும் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றாலே கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிடும்.

கொல்கத்தா அணிக்கு இனி லக்னெள(மே 5), மும்பை(மே11) குஜராத்(மே13) ராஜஸ்தான்(மே 19) ஆகிய அணிகளுடன் போட்டிகள் உள்ளன. இதில் மும்பை அணியுடன் வரும் 11ஆம் தேதி கொல்கத்தாவில் இரண்டாவது முறையாக மோதுகிறது. இனி வரும் ஆட்டங்களில் ராஜஸ்தான், லக்னெள அணிகளுக்கு எதிரான ஆட்டங்கள் கொல்கத்தாவுக்கு சவாலாக இருக்கக்கூடும்.

 

கலைந்த மும்பையின் ப்ளே ஆஃப் கனவு

ஐபிஎல் 2024: MI vs KKR

பட மூலாதாரம்,SPORTZPICS

மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொருத்தவரை இந்த சீசனில் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்புக் கதவு அடைக்கப்பட்டுவிட்டது. தற்போதைய கணக்குப்படி, ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல வேண்டுமானால் டாப்-3 அணிகளைத் தவிர்த்து மற்ற அணிகள் தாங்களே முன்வந்து தோற்க வேண்டும், இவையெல்லாம் நடந்தால் மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும். ஆனால், நடைமுறையில் அது சாத்தியமில்லை.

"மோசமான கேப்டன்சி, அணிக்குள் குழுவாகப் பிரிந்திருத்தல், மோசமான வீரர்கள் தேர்வு, பலமான பந்துவீச்சின்மை போன்றவைதான் மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்குக் காரணம்," என்று விமர்சிக்கப்படுகிறது.

இதற்கு முன் நடந்த பல சீசன்களில் 5 போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோற்றாலும், மீண்டு வந்து ப்ளே ஆஃப் சுற்றுக்குள் மும்பை சென்றுள்ளது. ரோஹித் சர்மா கேப்டன்சியில் இது பலமுறை நடந்துள்ளது. ஆனால், இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணி "அப்படி மீண்டெழ வேண்டுமென்ற உணர்வற்று இருந்ததே தோல்விக்கான பிரதான காரணம்" என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் ஆடி 3 வெற்றி, 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருக்கிறது. அடுத்து வரும் 3 ஆட்டங்களில் வென்றாலும் 12 புள்ளிகள் மட்டுமே மும்பையால் பெற முடியும். ஆனால், ப்ளே ஆஃப் சுற்றில் 4வது இடத்துக்கு இந்த முறை 16 புள்ளிகள் வரை போட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மும்பையின் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிட்டது.

 

ஆட்டநாயகன் வெங்கடேஷ்

ஐபிஎல் 2024: MI vs KKR

பட மூலாதாரம்,SPORTZPICS

கொல்கத்தா அணி 169 ரன்கள் எனும் கௌரவமான ஸ்கோரை எட்டுவதற்கும், பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்வதற்கும் முக்கியக் காரணமாக முதுகெலும்பாக இருந்தவர் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர்.

கொல்கத்தா 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, மணிஷ் பாண்டேவுடன் சேர்ந்து 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெங்கடேஷ் அணியை மீட்டெடுத்தார். இறுதியில் 52 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த வெங்கடேஷ் அய்யருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

கொல்கத்தா 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை 5 ஓவர்களில் இழந்தாலும், 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளுக்கு 83 ரன்கள் என ரன்ரேட்டை குறையவிடாமல் வெங்கடேஷ், மணிஷ் பாண்டே பார்த்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.

குறிப்பாக வெங்கடேஷ்-மணிஷ் பாண்டே ஆடிய ஆட்டம்தான் ஆட்டத்தின் உயிராக இருந்தது. இருவரும் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை குறையாமல் கொண்டு சென்றனர். மணிஷ் பாண்டே 31 பந்துகளில் 42 ரன்களில் 17வது ஓவரில் ஆட்டமிழந்தாலும், வெங்கடேஷ் 20வது ஓவர் வரை களத்தில் இருந்து ஆட்டமிழந்தார்.

 

டிபெண்ட் செய்த பந்துவீச்சாளர்கள்

ஐபிஎல் 2024: MI vs KKR

பட மூலாதாரம்,SPORTZPICS

அதேபோல ஒரு கட்டத்தில் ஆட்டம் கொல்கத்தா அணியின் கையைவிட்டு நழுவுவதுபோல் இருந்தது. களத்தில் சூர்யகுமார், டிம் டேவி என இரு ஆபத்தான பேட்டர்கள் இருந்தபோது மும்பை வெற்றிக்கு 28 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்பட்டது.

ஆட்டம் எந்த நேரத்திலும் மும்பை பக்கம் திரும்பலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மிட்ஷெல் ஸ்டார்க், ரஸல் வீசிய ஓவர்கள் ஆட்டத்துக்குப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தின.

குறிப்பாக மிட்ஷெல் ஸ்டார்க் 3.5 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஐபிஎல் தொடரில் தனது சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார். வருண், நரைன் இருவரும் மும்பை அணியின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்து ரன்ரேட்டை சுருக்கினர். இருவரும் 8 ஓவர்கள் வீசி 44 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஆண்ட்ரே ரஸல் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். 5 பந்துவீச்சாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு பேட்டர்கள் பலம் அதிகம் இருக்கும் மும்பை அணியை மும்பை மைதானத்தில் கொல்கத்தா சுருட்டியது பாராட்டுக்குரியது.

 

பும்ரா சரியாக பயன்படுத்தப்படவில்லையா?

ஐபிஎல் 2024: MI vs KKR

பட மூலாதாரம்,SPORTZPICS

கொல்கத்தா அணியின் 5 விக்கெட்டுகளை ஆட்டத்தின் முதல் 37 பந்துகளிலேயே எடுத்தும்கூட மும்பை அணி தோல்வியடைந்துள்ளது.

ஆறாவது விக்கெட்டுக்கு வெங்கடேஷ்-மணிஷ் பாண்டேவை 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கவிட்டதுதான் மும்பை அணி செய்த மிகப்பெரிய தவறாகப் பார்க்கப்படுகிறது. பும்ரா ஏற்கெனவே ஒரு ஓவரை விளையாட முடியாத அளவுக்கு கட்டுக்கோப்பாக வீசி 2 ரன்கள் மட்டுமே அளித்திருந்தார். துல்லியமாகப் பந்துவீசும் பும்ராவை தொடர்ந்து பந்துவீச வைத்து வெங்கடேஷ்-பாண்டே பார்ட்னர்ஷிப்பை உடைத்து எளிதாக ஆட்டத்தை முடித்திருக்கலாம்.

வெங்கடேஷ்-பாண்டே செட்டிலான பிறகு நடுப்பகுதி ஓவர்களை வீச பும்ரா அழைக்கப்பட்டபோது, அவரின் ஓவரில் பாண்டே ஒரு பவுண்டரி, சிக்ஸரை விளாசினார்.

ஆனால் டெத் ஓவருக்கு பும்ரா தேவை என்று நினைத்து பும்ராவுக்கு கடைசி ஓவர்களை ஹர்திக் பாண்டியா வழங்கினார். 18வது ஓவரில் 2 ரன்களை மட்டும் வழங்கிய பும்ரா, கடைசி ஓவரில் வெங்கடேஷ் விக்கெட்டையும் எடுத்துக் கொடுத்தார். இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் பும்ராவை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் ஹர்திக் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

 

'தொடர்ந்து போராடுவோம்'

ஐபிஎல் 2024: MI vs KKR

பட மூலாதாரம்,SPORTZPICS

மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல முடியாது என்று தெரிந்தபின், பேட்டியளித்த ஹர்திக் பாண்டியா கூறுகையில், “நாங்கள் நல்ல பார்ட்னர்ஷிப்பை பேட்டிங்கில் அமைக்கவில்லை, தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்தது தோல்விக்கு முக்கியக் காரணம். ஏராளமான கேள்விகள் இருக்கின்றன, அதற்கு பதிலளிக்க அவகாசம் தேவை என்றார்.

"இப்போது அதுபற்றி கூற முடியாது. பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு விக்கெட்டை நன்கு பயன்படுத்தினர். நான் தவறு செய்யாமல் இருந்திருந்தால், விக்கெட் நல்ல விக்கெட்டாக இருந்திருக்கும். இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவும் இருந்தது.

இந்த ஆட்டத்தில் என்ன தவறுகள் செய்தோம் என்று ஆலோசிப்போம், இன்னும் சிறப்பாக வரும் போட்டிகளில் எவ்வாறு விளையாடுவது எனச் சிந்திப்போம். தொடர்ந்து போராட வேண்டும், அதைத்தான் எனக்கு நானே கூறிக்கொள்வது. வாழ்க்கை என்பது சவாலானது. சவால்களை எதிர்கொண்டால்தான் சுவரஸ்யமாக இருக்கும்,” எனத் தெரிவித்தார்.

ஐபிஎல் 2024: MI vs KKR

பட மூலாதாரம்,SPORTZPICS

மும்பையின் தோல்விக்கு காரணம் பேட்டர்களா?

சூர்யகுமார் யாதவ்(56), டிம்டேவிட் (24) ரன்களை தவிர்த்துப் பார்த்தால் 80 ரன்கள்கூட தேறாது. எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

குறிப்பாக கேப்டன் ஹர்திக் பாண்டியா இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 198 ரன்கள் மட்டுமே சேர்த்து 19.18 ரன்கள் சராசரி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை டி20 உலகக் கோப்பையில் விளையாட பிசிசிஐ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாததும் பேசுபொருளாகியுள்ளது.

பவர்ப்ளே ஓவருக்குள் மும்பை அணி இஷான் கிஷன்(13), நமன்திர்(11), ரோஹித் சர்மா(11) விக்கெட்டுகளை இழந்தது. நடுவரிசையில் திலக் வர்மா(4), நேஹல் வதேரா(6), ஹர்திக் பாண்டியா(1) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

மும்பை வான்ஹடே மைதானம் குறித்து நன்கு தெரிந்தும், சொந்த மைதானத்தில்கூட 170 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் மும்பை அணி தோற்றதற்கு தொடக்க வரிசை பேட்டர்களும், நடுவரிசை பேட்டர்களும் செயல்படாமல் போனதே முக்கியக் காரணம்.

https://www.bbc.com/tamil/articles/cjr7zl7lqp4o

ipl-pt-03-05.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு நல்லாத்தான் போகுது....... நடக்கட்டும் நடக்கட்டும் .........!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூர் & குஜராத்.........பெங்களூர் பந்து போடுதல், குஜராத் மட்டையடி 

கடைசி ஓவர்......ஹாட்ரிக் விக்கட் போனது......அதிலும் சிராஜ் பிடித்த மூன்றாவது பிடி மிகவும் சுவாரஸ்யமானது ...... ஆல்அவுட்  147 ரன் ......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

RCB vs GT: குஜராத்தை வெளியேற்றிய ஆர்சிபி - ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உண்டா?

ஐபிஎல் 2024: RCB vs GT

பட மூலாதாரம்,SPORTZPICS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பவர்ப்ளேவில் 92 ரன்கள், 38 பந்துகள் மீதமிருக்கையில் மிகப்பெரிய வெற்றி, புள்ளிப்பட்டியலில் திடீர் முன்னேற்றம், இதுபோன்ற ஆட்டத்தைத்தான் ரசிகர்கள் ஆர்சிபி அணியிடம் எதிர்பார்த்தனர்.

ஆனால் அனைத்தும் காலம் கடந்து நடக்கிறது. அடுத்து வரும் 3 போட்டிகளிலும் வென்றாலும் ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்லுமா என்பது விவாதப் பொருள்தான். தொடர்ச்சியாக 6 தோல்விகளைச் சந்தித்த ஆர்சிபி நேற்றைய போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் ‘ஹாட்ரிக் வெற்றி’யை பதிவு செய்துள்ளது.

பெங்களூரு சின்னசாமி அரங்கில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 52வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 148 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 38 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த சீசனில் லீக் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதிய இரு ஆட்டங்களிலும் ஆர்சிபி அணி வென்றுள்ளது. கடந்த மாதம் 28ஆம் தேதி ஆமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் 200 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை சேஸிங் செய்து 9 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை ஆர்சிபி பெற்ற நிலையில் நேற்றைய ஆட்டத்திலும் வென்றது.

 

ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு உள்ளதா?

ஐபிஎல் 2024: RCB vs GT

பட மூலாதாரம்,SPORTZPICS

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 11 போட்டிகளில் 4 வெற்றி, 7 தோல்வி என 8 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட்டிலும் மைனஸ் 0.049 எனக் குறைந்துள்ளது. ஆர்சிபி அணி தனக்கு இருக்கும் அடுத்த 3 ஆட்டங்களில் வென்றாலும்கூட 14 புள்ளிகள்தான் கிடைக்கும். இந்தப் புள்ளிகள் ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்தைப் பிடிக்கக்கூட போதாது. ஆனாலும், தற்போது வரை ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து ஆர்சிபி வெளியேறவில்லை என்பதுதான் நிதர்சனம்.

கணித அடிப்படையில் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும். அதற்கு இவையெல்லாம் நடந்தால் சாத்தியம். முதலில் ஆர்சிபி அணி மீதமிருக்கும் 3 ஆட்டங்களையும் வெல்ல வேண்டும், அதேநேரம் லக்னெள அணி அல்லது சன்ரைசர்ஸ் அணி தனக்கு மீதமிருக்கும் ஆட்டங்களில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று மற்ற ஆட்டங்களில் தோற்க வேண்டும். அப்போது 14 புள்ளிகளோடு முடிக்கும்போது நிகர ரன்ரேட் பார்க்கப்படும்.

இரண்டாவதாக சிஎஸ்கே, டெல்லி கேபிடல்ஸ் அணி தற்போது 10 புள்ளிகளுடன் உள்ளன. இந்த அணிகள் தங்களுக்கு இருக்கும் 4 ஆட்டங்களில் இரு வெற்றிகள் மட்டுமே பெற வேண்டும், இரு போட்டிகளில் தோற்க வேண்டும். பஞ்சாப் கிங்ஸ் அணி 8 புள்ளிகளுடன் தனக்கிருக்கும் 4 ஆட்டங்களில் 3 போட்டிகளுக்கு மேல் வெல்லக்கூடாது, ஒரு ஆட்டத்தில் தோற்க வேண்டும். இவ்வாறு நடந்தால் 14 புள்ளிகளுடன் 6 அணிகளும் இடம்பெற்று நிகர ரன்ரேட்டில் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும்.

மூன்றாவதாக ஆர்சிபி அணி ஒருவேளை 12 புள்ளிகளுடன் முடித்தாலும் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாம். எப்படியென்றால் மேலே கூறப்பட்ட 5 அணிகளில் சிஎஸ்கே, டெல்லி, ஒரு வெற்றிக்கு மேல் பெறக்கூடாது, லக்னெள அல்லது சன்ரைசர்ஸ் அணி இனிமேல் வெல்லவே கூடாது, பஞ்சாப் அணி 2 வெற்றிகள் மட்டுமே பெற வேண்டும், இவ்வாறு நடந்தால் 6 அணிகளும் 12 புள்ளிகள் பெற்று நிகர ரன்ரேட்டில் ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்ல முடியும்.

இவை நடப்பது சாத்தியமென்றால், ஆர்சிபி ப்ளே ஆஃப் சுற்று செல்வதும் சாத்தியமே.

 

குஜராத் அணி வெளியேறுகிறது

ஐபிஎல் 2024: RCB vs GT

பட மூலாதாரம்,SPORTZPICS

முன்னாள் சாம்பியன், கடந்த சீசனில் 2வது இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் லீக் போட்டிகளோடு இந்த சீசனில் வெளியேற உள்ளது.

குஜராத் அணி இதுவரை 11 போட்டிகளில் 4 வெற்றி, 7 தோல்வி என 8 புள்ளிகளுடன் 9வது இடத்துக்கு சரிந்துள்ளது. அடுத்து வரும் 3 ஆட்டங்களிலும் குஜராத் அணி வென்றாலும்கூட14 புள்ளிகள்தான் கிடைக்கும். இது ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லப் போதுமான புள்ளிகளாக இருக்காது. ஒருவேளை கணித அடிப்படையில் குஜராத் அணிக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறினாலும், நிகர ரன்ரேட்டில் மைனஸ் 1.320 என்று மோசமாக இருக்கிறது. அடுத்த 3 ஆட்டங்களிலும் பிரமாண்ட வெற்றி பெற்றால்தான் நல்ல ரன்ரேட்டை பெற முடியும்.

ஆதலால், ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் மும்பை, ஆர்சிபி, குஜராத் ஆகிய 3 அணிகள் வெளியேறுகின்றன. ப்ளே ஆஃப் சுற்றில் 4 இடங்களுக்கு 7 அணிகள் மட்டுமே தற்போது ரேஸில் உள்ளன.

ஆர்சிபி அணி வெற்றிக்கு அணியின் வேகப்பந்துவீச்சாளர்களும், கேப்டன் டூப்ளெஸ்ஸி, விராட் கோலியின் அதிரடியான பேட்டிங்கும்தான் காரணம். ஆடுகளத்தின் தன்மையைச் சரியாகப் பயன்படுத்திய முகமது சிராஜ் 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டநாயகன் விருது வென்றார். தொடக்க ஆட்டக்காரர்கள் சாஹா, கேப்டன் கில் ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளை சிராஜ் வீழ்த்தியது குஜராத் அணியை பெரிய அதிர்ச்சியில் தள்ளியது.

டுப்ளெஸ்ஸியின் பதற்றம்

ஆர்சிபி கேப்டன் டூப்ளெஸ்ஸி கூறுகையில், “கடந்த சில போட்டிகளாக நாங்கள் சிறப்பாக ஆடி வருகிறோம். பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் நன்றாகச் செயல்படுகிறோம். பேட்டிங்கில் ஆக்ரோஷம், ஃபீல்டிங்கில் நம்ப முடியாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆடுகளத்தில் நல்ல பவுன்ஸர் இருந்ததை பந்துவீச்சாளர்கள் பயன்படுத்திக்கொண்டனர்.

கேட்சுகளை நாங்கள் கோட்டைவிட்டாலும், ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்தோம். 180 முதல் 190 ரன்கள் இந்த ஆடுகளத்தில் நல்ல ஸ்கோர். நாங்கள் ஸ்கோர் போர்டை பார்ப்பதில்லை, ஆட்டத்துக்கு என்ன தேவையோ அதை விளையாடுகிறோம்.

திடீரென வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தவுடன் நான் பதற்றமடைந்தேன். இந்த வெற்றி போதாது, நிகர ரன்ரேட்டை உயர்த்த வேண்டும்," எனத் தெரிவித்தார்.

 

ஆர்சிபியின் சாதனைகள்

ஐபிஎல் 2024: RCB vs GT

பட மூலாதாரம்,SPORTZPICS

பேட்டிங்கை பொறுத்தவரை பவர்ப்ளேவில் வெளுத்து வாங்கிய டுப்ளெஸ்ஸி, கோலி, ஆர்சிபி அணிக்கு 92 ரன்கள் சேர்த்தனர். அதேநேரம், குஜராத் அணி பவர்ப்ளேவில் 3 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள்தான் சேர்த்திருந்தது. குஜராத் அணியின் பவர்ப்ளே ஸ்கோருக்கும், ஆர்சிபி பவர்ப்ளே ஸ்கோருக்கும் இடையே 69 ரன்கள் இடைவெளி இருக்கிறது.

ஐபிஎல் வரலாற்றில் பவர்ப்ளே ஸ்கோரில் இதுபோன்று மிகப்பெரிய வேறுபாடு இருப்பது இதுதான் முதல்முறை. இதற்கு முன் கடந்த 2017இல் ஆர்சிபி 3 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் சேர்த்தநிலையில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 105 ரன்கள் சேர்த்ததுதான் பெரிய வேறுபாடாக இருந்தது.

குஜாரத் அணி பவர்ப்ளேவில் சேர்த்த 23 ரன்கள்தான் ஐபிஎல் தொடரில் அந்த அணியின் குறைந்தபட்ச பவர்ப்ளே ஸ்கோர். இதற்கு முன் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக குஜராத் 30 ரன்கள் சேர்த்திருந்தது.

ஆர்சிபி அணி பவர்ப்ளேவில் 92 ரன்கள் என்பது எந்த அணிக்கும் எதிராக பவர்ப்ளேவில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக பவர்ப்ளேவில் 79 ரன்களும், 2011இல் கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு எதிராக 79 ரன்கள் சேர்த்ததுதான் ஆர்சிபியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

ஆர்சிபி அணி 38 பந்துகள் மீதமிருக்கும்போதே இலக்கை எட்டி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் எந்த அணிக்கும் எதிராக அதிகமான பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்று ஆர்சிபி சாதனை படைத்தது. இதற்குமுன் கொல்கத்தா அணி 34 பந்துகள் மீதமிருக்கையில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்து குறிப்பிடத்தக்கது.

 

குஜராத் மீது ஆதிக்கம் செலுத்திய ஆர்சிபி

ஐபிஎல் 2024: RCB vs GT

பட மூலாதாரம்,SPORTZPICS

குஜராத் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் 26 ஓவர்களில் ஆர்சிபி ஆதிக்கம் செலுத்தியது. பந்துவீச்சில் 20 ஓவர்களும் ஆர்சிபியின் கட்டுப்பாட்டிலும், சேஸிங்கின்போது பவர்ப்ளேவில் 6 ஓவர்களும் ஆர்சிபி வீர்ரகள்தான் கோலோச்சினர்.

நடுப்பகுதியில் 25 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை ஆர்சிபி படபடவென இழந்தாலும், சுதாரித்து வெற்றியை அடைந்தது. தினேஷ் கார்த்திக்(21), ஸ்வப்னில் சிங்(15) ஆட்டமிழக்காமல் இருந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

சன்ரைசர்ஸ் அணி 287 ரன்கள் சேர்த்த அதே ஆடுகளத்தில்தான் நேற்றைய ஆட்டமும் நடந்தது. ஆனால், ஆட்டம் தொடங்குவதற்கு முன் சிறிது மழை பெய்ததால் விக்கெட்டின் தன்மை ஒட்டுமொத்தமாக மாறியது.

ஆடுகளம் வேகப்பந்துவீச்சில் ஸ்விங் செய்ய நன்கு ஒத்துழைத்ததால், அதை சிராஜ், யாஷ் தயால் நன்கு பயன்படுத்திக் கொண்டு குஜராத் பேட்டிங் வரிசையை ஆட்டம் காண வைத்தனர். முகமது சிராஜ் தனது முதல் ஓவரில் சஹாவை(1) வெளியேற்றினார். இதுவரை 6 இன்னிங்ஸில் சஹாவை 4 முறை சிராஜ் ஆட்டமிழக்க வைத்துள்ளார். சிராஜ் தனது 2வது ஓவரில் கில்(2) விக்கெட்டை வீழ்த்தி குஜராத் அணிக்கு அதிர்ச்சியளித்தார்.

ஒவ்வொரு ஆட்டத்திலும் குஜராத் அணிக்கு முதுகெலும்பாக இருக்கும் சாய் சுத்ரசன்(6) விக்கெட்டை கேமரூன் கிரீன் வீழ்த்த குஜராத் அணி ஆழ்ந்த சிக்கலுக்குச் சென்றது.

அதன்பின் களமிறங்கிய ஷாருக்கான்(37), மில்லர்(30), திவேட்டியா(35) ஆகியோர் குஜராத் அணியை சரிவிலிருந்து மீட்க முயன்றும் முடியவில்லை. அதன்பின் களமிறங்கிய கடைசி வரிசை பேட்டர்களுக்கு பவுன்ஸர்களையும், ஷார்ட் பந்துகளையும் வீசி ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் திணறடிக்கவே, குஜராத் அணி 147 ரன்களுக்கு வீழ்ந்தது.

குஜராத் அணி 131 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், அடுத்த 16 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அதிலும் வியாசக் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை குஜராத் இழந்தது.

 

மிரட்டலான சேஸிங்

ஐபிஎல் 2024: RCB vs GT

பட மூலாதாரம்,SPORTZPICS

இந்த ஆடுகளத்தில் 148 ரன்கள் இலக்கை விரைவாக அடைய வேண்டுமெனில் நீண்டநேரம் தாக்குப்பிடிக்கக் கூடாது என்பதை உணர்ந்து டூப்ளெஸ்ஸி, கோலி அதிரடி ஆட்டத்தைக் கையாண்டனர். மோகித் சர்மா வீசிய முதல் ஓவரிலேயே கோலி ஓவர் கவர் திசை, மிட்விக்கெட்டில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

ஜோஸ் லிட்டில் வீசிய 2வது ஓவரில் டூப்ளெஸ்ஸி சிக்ஸர், பவுண்டரி என 20 ரன்களை விளாசினார். மனவ் சத்தார், மோகித் ஓவரை டூப்ளெஸ்ஸி வெளுக்கவே, ஆர்சிபி அணி 3.1 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது.

மனவ் சத்தார் ஓவரில் தொடர்ந்து 2 சிக்ஸர்களை கோலி பறக்கவிட்டார். அதிரடியாக ஆடிய டூப்ளெஸ்ஸி 18 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். ஆர்சிபி அணிக்காக 2வது அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை டூப்ளெஸ்ஸி பெற்றார். இதற்கு முன் கிறிஸ் கெயில் 17 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். பவர்ப்ளேவில் ஆர்சிபி அணி 92 ரன்கள் சேர்த்தது.

பவர்ப்ளேவில் 92 ரன்கள் சேர்த்திருந்தபோதே ஏறக்குறைய ஆட்டம் முடிந்துவிட்டது, ஆர்சிபி வெற்றி உறுதியானது. லிட்டில் வீசிய ஓவரில் டூப்ளெஸ்ஸி 64 ரன்கள்(23 பந்துகள், 10 பவுண்டரி, 3 சிக்ஸர்) சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

பவர்ப்ளே ஓவருக்குள் ஆர்சிபி அணிக்காக அதிக ரன்களை சேர்த்த முதல் பேட்டர் என்ற பெருமையையும் டூப்ளெஸ்ஸி பெற்றார். அதன்பின் ஆர்சிபி அணி அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை மளமளவென இழந்தது.

நூர் முகமது பந்துவீச வந்ததும், அவரின் பந்துவீச்சில் வில் ஜேக்ஸ் ஒரு ரன்னில் ஷாருக்கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அரைசதம் நோக்கி நகர்ந்த விராட் கோலி 42 ரன்னில் விக்கெட் கீப்பர் சஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஐபிஎல் 2024: RCB vs GT

பட மூலாதாரம்,SPORTZPICS

லிட்டில் வீசிய 8வது ஓவரில் பட்டிதார்(2), மேக்ஸ்வெல்(4) ரன்னில் விக்கெட்டைஇழந்தனர். இந்த சீசன் முழுவதும் இதுவரை மேக்ஸ்வெல் ஒரு அரைசதம்கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் வரை இருந்த ஆர்சிபி அணி 117 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. அதாவது 25 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்த தடுமாறியது.

சின்னச்சாமி அரங்கமே மௌனமானது. 7வது விக்கெட்டுக்கு வந்த தினேஷ் கார்த்திக், ஸ்வப்னிங் சிங் அதிரடியாக சில பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் அடித்து, வெற்றி பெற வைத்தனர். டிகே(21), ஸ்வப்னில்(15) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

காபி குடிப்பதற்குள் ஆட்டம் மாறியது

ஆர்சிபி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கூறுகையில், “டூப்ளெஸ்ஸி, கோலி ஆட்டத்தைப் பார்த்தபோது, நான் களமிறங்க வேண்டிய தேவை இருக்காது என நினைத்து ரிலாக்ஸாக ஒரு காபி குடிக்கத் தொடங்கினேன்.

ஆனால், அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தவுடன் நான் பேட்டிங் செய்ய வேண்டி வந்தது. எனக்குரிய வேலையைச் செய்துவிட்டேன். விக்கெட் பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைத்தது, லேசான ஈரப்பதம் இருந்தது. டாஸை வென்றோம், போட்டியையும் வென்றோம்,” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c3g9r054xkpo

ipl-pt-04-05.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாபை வென்றாலும் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் வருத்தம் ஏன்? களத்தில் என்ன நடந்தது?

ரவீந்திர ஜடேஜா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரவீந்திர ஜடேஜா கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 34 நிமிடங்களுக்கு முன்னர்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தொடர்ந்து 5 தோல்விகள், இந்த சீசனில் சொந்த மைதானத்திலேயே தோல்வி என துவண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

அது மட்டுமல்லாமல் தனது மிகப்பெரிய வெற்றியால், பஞ்சாப் அணியையும் ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லவிடாமல் தொடரிலிருந்தே சென்னை அணி வெளியேற்றியது.

தரம்சாலாவில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 53-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சிஎஸ்கே அணி.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. 168 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களுக்கு ஆட்டமிழந்து 28 ரன்களில் தோல்வி அடைந்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கடந்த 3 ஐபிஎல் சீசன்களில் தொடர்ந்து 5 தோல்விகளைச் சந்தித்த சிஎஸ்கே அணி அந்தத் தோல்விகளுக்கு இந்த வெற்றியால் முற்றுப்புள்ளி வைத்தது.

ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்

இந்த வெற்றியால் சிஎஸ்கே அணி 11 போட்டிகளில் 6 வெற்றி, 5 தோல்வி என 12 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட்டில் கொல்கத்தாவுக்கு பின் அதிகமாக 0.700 வைத்துள்ளதால் 3-வது இடத்துக்கு முன்னேறியது.

முதலிடத்தில் இருக்கும் ராஜஸ்தான்அணிகூட நிகர ரன்ரேட் 0.622 மட்டுமே வைத்துள்ளது. இதன் மூலம் சிஎஸ்கே அணி தனது ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது. அடுத்துவரும் 3 ஆட்டங்களிலும் சிஎஸ்கே கட்டாய வெற்றி பெறுவது ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சிக்கலின்றி செல்ல உதவும்.

 

வெளியேறும் பஞ்சாப் கிங்ஸ்

டோனி மற்றும் ரபாடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டோனி மற்றும் ரபாடா

அதேநேரம், பஞ்சாப் கிங்ஸ் அணி இந்தத் தோல்வியால் ஐபிஎல் தொடரிலிருந்து ஏறக்குறைய வெளியேறிவிட்டது. 11 போட்டிகளில் 4 வெற்றி, 7 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் இருக்கும் பஞ்சாப் அணிக்கு இன்னும் 3 ஆட்டங்கள் உள்ளன. இந்த 3 ஆட்டங்களில் வென்றாலும் 6 புள்ளிகள் என அதிகபட்சமாக 14 புள்ளிகள்தான் பெற முடியும்.

இந்த புள்ளிகள் ப்ளேஆஃப் சுற்றின் கடைசி இடத்துக்குப் போதாது என்பதால், தொடரிலிருந்து ஏறக்குறைய வெளியேறிவிட்டது பஞ்சாப் அணி. இனிவரும் ஆட்டங்களில் பஞ்சாப் அணி வென்றால், பிற அணிகளின் ப்ளே ஆஃப் வாய்ப்பைத்தான் கெடுத்துவிடும்.

ஆபத்பாந்தவன் ஜடேஜா

சிஎஸ்கே அணி சிக்கலான கட்டத்தில் இருக்கும் போதெல்லாம் பெரும்பாலான நேரத்தில் ஆங்கர் ரோல் எடுத்து ஜடேஜா விளையாடியுள்ளார். இந்த ஆட்டத்திலும் சிஎஸ்கே தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த நேரத்தில் ஆங்கர் ரோல் செய்து 43 ரன்களும் பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பஞ்சாப் தோல்விக்குக் காரணம் என்ன?

பஞ்சாப் அணி கிடைத்த வாய்ப்பை தவறவிட்டதுதான் தோல்விக்கு முக்கியக் காரணம். சிஎஸ்கே அணி 122 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நேரத்தில் தொடர்ந்து நெருக்கடி கொடுத்திருந்தால், 140 ரன்களுக்குள் சுருட்டியிருக்கலாம். ஷர்துல் தாக்கூர்(17), ஜடேஜா(43) இருவரையும் களத்தில் ஷாட்களை ஆட அனுமதித்ததுதான் பஞ்சாப் அணி செய்த பெரிய தவறாகும். நடுவரிசையில் இருவரின் விக்கெட்டுகளையும் விரைவாக வீழ்த்தி இருந்தால் ஆட்டம் பஞ்சாப் கரங்களில் இருந்திருக்கும்.

பேட்டிங்கிலும் பஞ்சாப் அணி 2-வது ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணியின் “இன்டென்ட்டை” கடுமையாகப் பாதித்தது. இதனால் அடுத்தடுத்து வந்த பேட்டர்களும் களத்தில் நின்று செட்டில் ஆவதற்குள் பெரிய ஷாட்களுக்கு முயன்றது பெரிய தவறு. டெய்லெண்டர்கள் பேட்டர்கள் கடைசி நேரத்தில் சிறப்பாக ஆடும்போது தொடக்கவரிசை, நடுவரிசை பேட்டர்கள் நிதானமாக ஆடி இருக்கலாம்.

8-வது ஓவரிலிருந்து 10-வது ஓவர் வரை பஞ்சாப் அணி தொடர்ந்து விக்கெட்டுகளை சீராக இழந்து வந்தது. 62 ரன்களுக்கு 2 விக்கெட் என இருந்த பஞ்சாப் அணி அடுத்த 16 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கு முக்கியக் காரணம். பல போட்டிகளில் பஞ்சாப் அணியை காப்பாற்றிய சஷாங் சிங், அசுதோஷ் சர்மா இருவருமே ஏமாற்றம் அளித்தனர்.

 

"வெற்றி பெற்றாலும் வருத்தம்தான்"

ருதுராஜ் கெய்க்வாட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ருதுராஜ் கெய்க்வாட்

சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் கூறுகையில், “டாஸில் தோற்றாலும் போட்டியில் வென்றுவிட்டாயே என பலர் கூறினாலும் டாஸ் தோற்றது எனக்குக் கவலையாக இருக்கிறது. இந்த விக்கெட்டில் பந்து மெதுவாக பேட்டரை நோக்கி வரும் என்று கூறினர், பந்து தாழ்வாக பேட்டரை நோக்கி வரும் என்றனர். நாங்கள் 200 ரன்களை எடுக்கவே தொடக்கத்தில் நினைத்தோம். ஆனால், தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால், 180 ரன்களை எட்டிவிடுவோம் என்று நம்பினேன். ஆனால் 10 ரன்கள் குறைவுதான்.

2-வது இன்னிங்ஸில் நாங்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. சிமர்ஜித் சிங் 150 கி.மீ. வேகத்தில் பந்துவீசுவார் என எனக்கு இதற்குமுன் தெரியாது. தீபக், ஷர்துல், துஷார், பதிரணா, முஸ்தாபிசுர் மட்டுமே வைத்திருந்தோம். சிமர்ஜித்துக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கவில்லை. பரவாயில்லை இன்று அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது, அதை சிறப்பாக பயன்படுத்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நாங்கள் அடைந்த காயத்துக்கு நிவாரணம் இந்த வெற்றியால் கிடைத்துள்ளது. யாரெல்லாம் விளையாடப் போகிறார்கள் என்பது காலை வரை தெரியவில்லை. இந்த வெற்றி எங்களுக்கு உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

ரஹானே ஏமாற்றம்

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட், ரஹானே ஆட்டத்தைத் தொடங்கினர். ரபாடா வீசிய முதல் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் ஏதும் சிஎஸ்கே பேட்டர்கள் அடிக்கவில்லை. அர்ஷ்தீப் வீசிய 2-வது ஓவரில் ரஹானே பவுண்டரி அடித்தநிலையில் அதே ஓவரின் 5-வது பந்தில் ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து 9 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த முறையும் ரஹானே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். ரஹானே இந்த சீசனில் 200 ரன்களைக் கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிட்ஷெல், கெய்க்வாட் அதிரடி

அடுத்து டேரல் மிட்ஷெல் களமிறங்கி, கெய்க்வாட்டுடன் சேர்ந்தார். அர்ஷ்தீப் வீசிய 4-வது ஓவரில் மிட்ஷெல் ஒரு பவுண்டரி, சிக்ஸர் உள்பட 12 ரன்கள் சேர்த்தார். ஹர்பிரித் பிரார் வீசிய 6-வது ஓவரில் மிட்ஷெல் ஒரு பவுண்டரியும், கெய்க்வாட் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரி என 19 ரன்கள் சேர்த்தனர். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்தது.

கடந்த போட்டியில் ஹர்பிரித் பிரார் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள்தான் கொடுத்திருந்தார். இன்று ஒரே போட்டியில் 19 ரன்கள் வாரி வழங்கினார். இதுதான் டி20 கிரிக்கெட்!

 

சிஎஸ்கே தடுமாற்றம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

8-வது ஓவரை ராகுல் சஹர் வீச வந்தபோதுதான் திருப்பம் ஏற்பட்டது. சஹர் வீசிய முதல் ஓவர் முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து கெய்க்வாட் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு கெய்க்வாட்-மிட்ஷெல் கூட்டணி 52 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்தவந்த சிஎஸ்கே முதுகெலும்பு பேட்ஸ்மேன் ஷிவம் துபே டக்அவுட்டில் விக்கெட் கீப்பர் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது.

ஷிவம் துபே சுழற்பந்துவீச்சை எளிதாகக் கையாண்டு ரன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ஷிவம் துபே களத்தில் இருக்கும்போது சுழற்பந்துவீச்சாளர்களை பெரும்பாலும் அணியினர் பயன்படுத்தமாட்டார்கள். ஆனால், இன்று சுழற்பந்துவீச்சை கணிக்கத் தவறி துபே டக்அவுட்டில் வெளியேறினார்.

4-வது விக்கெட்டுக்கு மொயின் அலி களமிறங்கி, மிட்ஷெலுடன் சேர்ந்தார். இருவரும் ஒரு ஓவர்கூட சேர்ந்து விளையாடவில்லை, அதற்குள் பிரி்ந்தனர். ஹர்ஷல் படேல் வீசிய 9-வது ஓவரில் மிட்ஷெல் கால்காப்பில் வாங்கி 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.

69 ரன்கள் வரை ஒரு விக்கெட் இழந்திருந்த சிஎஸ்கே அணி அடுத்த 6 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 5-வது விக்கெட்டுக்கு ஜடேஜா களமிறங்கி, மொயின் அலியுடன் இணைந்தார். ராகுல் சஹர் வீசிய 10-வது ஓவரை சமாளிக்கத் திணறிய சிஎஸ்கே பேட்டர்கள் 3 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். 10 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 4 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் சேர்த்தது.

 

ஆங்கர் ரோலில் ஜடேஜா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹர்ஷல் படேல் வீசிய 11-வது ஓவரில் ஜடேஜா 2 பவுண்டரிகள் உள்பட11 ரன்கள் சேர்த்தார். ரபாடா வீசிய 12-வது ஓவரில் மொயின் அலி 2 பவுண்டரிகள் அடிக்கவே சிஎஸ்கே அணி 100 ரன்களை எட்டியது. இருவருக்கும் இடையே பார்ட்னர்ஷிப் உருவாகியது.

ஆனால், சாம் கரண் 13-வது ஓவரை வீச வந்தபோது இந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். சாம்கரன் வீசிய ஸ்லோ பவுன்சரை தூக்கி அடித்த மொயின் அலி, 17 ரன்னில் பேர்ஸ்டோவால் கேட்ச் பிடிக்கப்பட்டு வெளியேறினார். அடுத்து மிட்ஷெல் சான்ட்னர் களமிறங்கி, ஜடேஜாவுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். 15 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் சேர்த்தது.

16-வது ஓவரை ராகுல் சஹர் வீசியபோது மீண்டும் விக்கெட் விழுந்தது. அந்த ஓவரின் கடைசிப்பந்தில் சாம் கரனிடம் கேட்ச் கொடுத்து சான்ட்னர் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷர்துல் தாக்கூர் களமிறங்கி, ஜடேஜாவுடன் சேர்ந்தார்.

சாம்கரன் வீசிய 17-வது ஓவரில் 2-வது பந்தில் பவுண்டரி அடித்த தாக்கூர், 3-வது பந்தை சிக்ஸருக்கு தூக்கி அடித்தபோது எளிதாகப் பிடிக்க வேண்டிய கேட்ச்சை சஷாங்க் சிங் தவறவிட்டதால் 14 ரன்களை சிஎஸ்கே சேர்த்தது.

தோனி முதல் பந்திலேயே க்ளீன் போல்ட்

ராகுல் சஹர் வீசிய 18-வது ஓவரில் தாக்கூர் ஒரு பவுண்டரியும், ஜடேஜா ஒரு சிக்ஸரும் விளாசி 13 ரன்கள் சேர்த்தனர். 19-வது ஓவரை ஹர்சல் படேல் வீசினார், முதல் 3 பந்துகளில் தாக்கூருக்கு படம் காட்டிய ஹர்சல் படேல், 4-வது பந்தில் கிளீன் போல்டாக்கி தாக்கூரை(17) வெளியேற்றினார்.

அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனி ரசிகர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் களமிறங்கினார். தோனி சந்தித்த முதல் பந்திலேயே ஹர்சல் படேல் யார்கர் வீசி க்ளீன் போல்டாக்கி டக்அவுட்டில் வெளியேற்றினார். தோனி முதல் பந்திலேயே ஆட்டமிழந்தவுடன் அரங்கில் இருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, மௌனமாகினர். அடுத்து தேஷ்பாண்டே களமிறங்கி, ஜடேஜாவுடன் சேர்ந்தார்.

கடைசி ஓவரை அர்ஷ்தீப் வீசினார். ஸ்ட்ரைக்கில் இருந்த ஜடேஜா ஒரு பவுண்டரி, சிக்ஸர் விளாசிய நிலையில் சாம்கரனிடம் கேட்ச் கொடுத்து 43 ரன்களில் ஜடேஜா ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது.

பஞ்சாப் அணித் தரப்பில் ராகுல் சஹல், ஹர்சல் படேல் தலா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

ஷாக் அளித்த சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

168 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங் ஆட்டத்தைத் தொடங்கினர். தேஷ்பாண்டே வீசிய அவரின் முதல் ஓவரில் பவுண்டரி அடித்த பேர்ஸ்டோ அடுத்த இரு பந்துகளில் க்ளீ்ன் போல்டாகி 7 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்துவந்த ரிலே ரூஸோவும் வந்த வேகத்தில் தேஷ்பாண்டே பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். 2-வது ஓவரிலேயே பஞ்சாப் அணி 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அடுத்துவந்த சஷாங் சிங், பிரப்சிம்ரனுடன் சேர்ந்தார். இருவரும் அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர் அடித்து ரன்ரேட்டை மெதுவாக உயர்த்தினர். தேஷ்பாண்டே வீசிய 6-வது ஓவரில் பிரப்சிம்ரன் சிங் 2 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 16 ரன்களை விளாசினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் சேர்த்தது.

சரிவிலிருந்து மீளாத பஞ்சாப்

சான்ட்னர் வீசிய 8-வது ஓவரில் மீண்டும் சிஎஸ்கே அணி பஞ்சாப்புக்கு அதிர்ச்சியளித்து. சான்ட்னர் வீசிய அந்த ஓவரின் 5-வது பந்தில் பவுண்டரி அடித்த சஷாங்சிங் 27 ரன்களில் சிமர்சித் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக பேட் செய்து வந்த பிரப்சிம்ரன் சிங் 30 ரன்னில் ஜடேஜா ஓவரில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஜிதேஷ் சர்மா ரன் ஏதும் சேர்க்காமல் சிமர்ஜீத் ஓவரில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் சேர்த்தது பஞ்சாப் அணி. அஷுதோஷ் சர்மா, சாம்கரன் 6-வது விக்கெட்டுக்கு இணைந்து ஓரளவு ரன்கள் சேர்த்தனர். ஆனால் சாம்கரனும் நிலைக்கவில்லை. ஜடேஜா வீசிய 13-வது ஓவரில் சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்து சாம்கரன் 7 ரன்னில் வெளியேறினார். அதே ஓவரின் 4-வது பந்தில் அசுதோஷ் சர்மா 3 ரன்னில் சிமர்ஜித்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

62 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த பஞ்சாப் அணி 78 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. 16 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பஞ்சாப் பறிகொடுத்தது. 8-வது ஓவரிலிருந்து 10-வது ஓவர் வரை ஒவருக்கு ஒரு விக்கெட்டை பஞ்சாப் அணி இழந்தது.

 

பேட்டர்கள் ஏமாற்றம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

8-வது விக்கெட்டுக்கு ஹர்பிரித் பிரார், ஹர்சல் படேல் ஜோடி சேர்ந்தனர். சிமர்ஜித் வீசிய 15-வது ஓவரில் ஹர்ஷல் படேல் ஒரு பவுண்டரி, சிக்ஸர் அடித்து நம்பிக்கை ஏற்படுத்தினார். ஆனால், அதே ஓவரின் 4-வது பந்தில் சமீர் ரிஸ்வியிடம் கேட்ச் கொடுத்து ஹர்ஷல் படேல் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பஞ்சாப் அணி முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்களும், 7 முதல் 15 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் சேர்த்தது. ஹர்பிரித் பிரார், ராகுல் சஹர் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணி எளிய இலக்கை சேஸிங் செய்ய முடியாமல் தோல்வியில் பிடியில் இருந்தது.

ஆனால் கிளீசன் வீசிய 16-வது ஓவரில் ராகுல் சஹர் அதிரடியாக ஆடி 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 14 ரன்களை விளாசி நம்பிக்கை அளித்தார். பஞ்சாப் அணி 16 ஓவர்கள் முடிவில் 100 ரன்களைக் கடந்தது.

18-வது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசினார். முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஹர்பிரித் பிரார், அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். அந்த ஓவரில் ராகுல் சஹர்(12) க்ளீன் போல்டாகவே, பஞ்சாப் அணி ஆல்அவுட் நோக்கி நகர்ந்தது.

9-வது விக்கெட்டுக்கு ஹர்பிரித் பிரார், ரபாடா இணைந்து ஓரளவு ரன்களைச் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினர். க்ளீசன் வீசிய 19 ஓவரில் ரபாடா சிக்ஸர் அடித்து 11 ரன்களைச் சேர்த்தார்.

கடைசி ஓவரில் பஞ்சாப் அணி 7 ரன்கள் சேர்க்கவே 20 ஓவர்களில் 139 ரன்கள் சேர்த்து 28 ரன்களில் தோல்வி அடைந்தது. ரபாடா 11, ஹர்பிரித் பிரார் 17 ரன்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சிஎஸ்கே தரப்பில் சிமர்ஜித், தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

https://www.bbc.com/tamil/articles/c2x38pzmlpdo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என‌க்கு சென்னையை பிடிக்காது

சென்னை அணி இள‌ம் க‌ப்ட‌ன் கெய்க்வாட் முத‌ல் முறை க‌ப்ட‌ன் ப‌தவு கொடுத்து இருக்கின‌ம் 

கெய்க்வாட் அவ‌ருக்காக‌ சென்னை வெல்ல‌னும் என்று விரும்புவேன்....................இனி வ‌ரும் விளையாட்டுக‌ளில் தொட‌ர் வெற்றி பெற்றால் தான் 4லுக்குள் வ‌ர‌லாம்....................................

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளிப் பட்டியலையே புரட்டிய பிரமாண்ட வெற்றி; நிச்சயமற்ற நிலையில் பிளேஆப் இடங்கள்

கொல்கத்தா

பட மூலாதாரம்,SPORTZPICS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐபிஎல் தொடரில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்த ஆட்டங்கள் புள்ளிப் பட்டியலையே புரட்டிப் போட்டிருக்கின்றன. கடைசி இடத்தில் இருந்த ஆர்சிபி 7-ஆவது இடத்துக்குச் சென்றிருக்கிறது. 5-ஆவது இடத்திலிருந்த சிஎஸ்கே 3-ஆவது இடத்துக்குச் சென்றிருக்கிறது. முதலிடத்தில் நீடித்து வந்த ராஜஸ்தான் சரிந்துள்ளது, 2ஆவது இடத்திலிருந்த லக்னோ அணி டாப்-4 இடத்திலேயே இல்லை.

லக்னோவில் ஞாயிறன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 54-ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 98 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் சேர்த்தது. 236 ரன்கள் எனும் பிரமாண்ட இலக்கை விரட்டிய லக்னோ அணி 16.1 ஓவர்களில் 137 ரன்களில் சுருண்டு 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

 
தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதலிடத்துக்கு வலுக்கும் மோதல்

இந்த வெற்றியால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 11 போட்டிகளில் 8 வெற்றி, 3 தோல்வி என 16 புள்ளிகள் பெற்று, நிகர ரன்ரேட்டில் 1.453 என வலுவாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ராஜஸ்தான் அணி 16 புள்ளிகள் பெற்றிருந்தாலும், நிகர ரன்ரேட்டில் சிஎஸ்கே அணியை விடக் குறைவாக 0.622 என்று இருப்பதால் 2-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு இன்னும் 4 ஆட்டங்கள் மீதம் உள்ளன. இதில் அனைத்தையும் வென்றால் தான் முதல் இரு இடங்களுக்குள் வர முடியும்.

கொல்கத்தா அணிக்கு இன்னும் 3 ஆட்டங்கள் மட்டுமே இருப்பதால் அதில் அனைத்திலும் வென்றாலும் 22 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். ராஜஸ்தான் அணி 4 ஆட்டங்களிலும் வென்றால், 24 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடிக்க முடியும். ஒரு ஆட்டத்தில் தோற்றாலும், நிகர ரன்ரேட்டில் கொல்கத்தா முதலிடத்துக்கு முன்னேற வாய்ப்புள்ளது. தற்போது கொல்கத்தா அணி வலுவான நிகர ரன்ரேட்டை பெற்றுள்ளதால், முதலிடத்தை பிடிக்க ராஜஸ்தானுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

 
கொல்கத்தா - லக்னோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

4-ஆவது இடத்துக்கு கடும் போட்டி

லக்னோ அணி 2-ஆவது இடத்தில் இருந்த நிலையில் இந்தத் தோல்வியால் டாப்-4 இடத்திலிருந்து வெளியே அனுப்பப்பட்டுள்ளது.11 ஆட்டங்களில் 6 வெற்றி, 5 தோல்வி என 12 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது லக்னோ அணி. சிஎஸ்கே, சன்ரைசர்ஸ், லக்னோ அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்றிருந்தாலும், நிகர ரன்ரேட்டில் லக்னோ அணி மைனஸ் 0.371 என மோசமாக இருப்பதால் 5-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் 0.072 நிகர ரன்ரேட்டையும், சிஎஸ்கே 0.700 பெற்று வலுவாக இருக்கின்றன.

ப்ளே ஆஃப்பில் 4-ஆவது இடத்தைப் பிடிக்க லக்னோ, சன்ரைசர்ஸ், டெல்லி அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து வரும் ஆட்டங்களின் முடிவுகள் புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

பெங்களூரு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொல்கத்தா அணி வென்றது எப்படி?

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பேட்டர்கள் அமைத்துக் கொடுத்த மிகப்பெரிய ஸ்கோர் தான் காரணம். பெரிய ஸ்கோர் இருந்ததால் தான், பந்துவீச்சாளர்களால் சுதந்திரமாக, அழுத்தமின்றி அதை டிஃபெண்ட் செய்ய முடிந்தது.

குறிப்பாக சுனில் நரைன் தொடக்க வீரராக களமிறங்கி 39 பந்துகளில் 81 ரன்கள் (7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் வலுவான அடித்தளம், பெரிய ஸ்கோரை எட்ட கொல்கத்தா அணிக்கு உதவியது. பந்துவீச்சிலும் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்திய சுனில் நரைனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

கொல்கத்தா அணி பவர்ப்ளேயில் சேர்த்த பெரிய ஸ்கோரை அடித்தளமாக வைத்துக் கொண்டு அடுத்தடுத்து வந்த பேட்டர்கள் கேமியோ ஆடி ரன்ரேட்டை உயர்த்தி, 200 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றனர். சுனில் நரைனைத் தவிர கொல்கத்தா அணியில் வேறு எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. 30 ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர். குறிப்பாக ராமன்தீப் சிங் 6 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உள்பட 25 ரன்கள் சேர்த்தது, பில்சால்ட்(32), ஸ்ரேயாஸ்(23), ரகுவன்ஷி(32) ஆகியோரின் ஆக்ரோஷமான கேமியோ ஆகியவை கொல்கத்தா ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணம்.

பந்துவீச்சில் ஹர்சித் ராணா, ஆந்த்ரே ரஸல், வருண் ஆகியோர் லக்னோ அணி சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.

கொல்கத்தா - லக்னோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

லக்னோ தோல்விக்கு காரணம் என்ன?

லக்னோ அணிக்கு தொடக்கமும் சரியாக அமையவில்லை, அதன்பின் எந்த பார்ட்னர்ஷிப்பும் வலுவாக அமையவில்லை. கேப்டன் ராகுல்(25), ஸ்டாய்னிஸ்(36) ஆட்டமிழந்தபின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 70 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை மட்டும் இழந்திருந்த லக்னோ அணி, அடுத்த 67 ரன்களுக்குள் மீதமிருந்த 9 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வியை ஒப்புக்கொண்டது.

ராகுல், ஸ்டாய்னிஸை தவிர்த்து மற்ற அனைத்து பேட்டர்களும் 10 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது தோல்விக்கான முக்கியக் காரணம். தீபக் ஹூடா முதல் கடைசி வரிசை பேட்டர் பிஸ்னோய் வரை அதிகபட்சமாக 12 பந்துகளைத் தான் சந்தித்துள்ளனர்.

200 ரன்களுக்கு மேல் செல்லும் பெரிய ஸ்கோரை சேஸிங் செய்யும்போது பவர்ப்ளே ஓவருக்குள் பெரிய அடித்தளம் அமைக்க வேண்டியிருக்கிறது. ஆனால், பவர்ப்ளே ஓவரில் லக்னோ அணி 55 ரன்களை மட்டுமே சேர்த்தது.

அதன்பின் தேவைப்படும் ரன்ரேட் லக்னோவுக்கு 13 ஆக இருந்தது பெரிய அழுத்தத்தைக் கொடுத்தது. கொல்கத்தா பந்துவீச்சாளர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பவர்ப்ளே முடிந்தபின், லக்னோ பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. குறிப்பாக கேப்டன் ராகுல், ஸ்டாய்னிஸ் ஆட்டமிழந்தபின் லக்னோ பேட்டர்கள் நம்பிக்கையிழந்து விட்டது போல் பேட் செய்தனர்.

குறிப்பாக நிகோலஸ் பூரன்(10), தீபக் ஹூடா(5), பதோனி(15), டர்னர்(16) குர்னல் பாண்டியா(5), யுத்விர் சிங்(5) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கொல்கத்தா - லக்னோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

பலவீனமாகக் காணப்பட்ட பந்துவீச்சு

பந்துவீச்சில் படுமோசமாகவும் லக்னோ வீரர்கள் செயல்பட்டனர். ரவி பிஸ்னோய் தவிர மற்ற 6 பந்துவீச்சாளர்ளும் ஓவருக்கு சராசரியாக 12 ரன்களை விட்டுக் கொடுத்தனர். அதேபோல கடைசி டெத் ஓவர்களிலும் கட்டுக்கோப்பாக பந்துவீசாதது கொல்கத்தா அணியை 200 ரன்களுக்கு மேல் செல்ல உதவியாக இருந்தது.

தோல்விக்குப்பின் லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில் “ஏராளமான ரன்களை பந்துவீச்சில் தவறவிட்டு பெரிய இலக்கை அமைக்க உதவினோம். பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படவில்லை. ஒட்டுமொத்தத்தில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் மோசமான செயல்பட்டுள்ளோம். சுனில் நரைன் எங்களுக்கு பவர்ப்ளேயில் பெரிய அழுத்தத்தை உருவாக்கினார். அந்த அழுத்தத்தை எங்கள் பந்துவீச்சாளர்களால் கையாள முடியவில்லை.

தரமான வீரர்களுக்கு எதிராக போராட வேண்டும், உங்கள் திறமை பரிசோதிக்கப்படும். இதுதான் ஐபிஎல், இப்படித்தான் இருக்கும். நல்ல லென்த்தில் பந்தை பிட்ச் செய்தால் பவுன்ஸ் ஆகியது. நாங்கள் நினைத்ததை விட 30 ரன்கள் அதிகமாக கொல்கத்தாவை சேர்க்கவிட்டோம்.” என்றார்.

மேலும், “எங்கள் பேட்டிங் மோசமாக இருந்தது. நாங்கள் முன்கூட்டியே தயாராகினோம், எதிரணி பேட்டர்கள் குறித்து ஆலோசித்தோம். எந்த வகையான திட்டத்தோடு வந்தோம் என்பதை நினைக்கவில்லை, அதை செயல்படுத்தவும் இல்லை. சுனில் நரைனை ஆட்டமிழக்கச் செய்ய கிடைத்த 2 வாய்ப்புகளைத் தவறவிட்டோம். அடுத்தடுத்துவரும் ஆட்டங்கள் முக்கியமானவை. பதற்றமில்லாமல், பயமில்லாமல் எதிர்வரும் ஆட்டங்களை அணுக வேண்டும்” என்று கூறினார் ராகுல்.

கொல்கத்தா - லக்னோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுனில் நரைனின் ஆட்டம் எப்படி இருந்தது?

கொல்கத்தாவுக்கு பில் சால்ட், சுனில் நரைன் வலுவான அடித்தளம் அமைத்தனர். சால்ட் தனது முதல் 9 பந்துகளில் 24 ரன்களைச் சேர்த்து 14 பந்துகளில் 32 ரன்கள் என சிறிய கேமியோ ஆடி வெளியேறினார். அதன்பின், ரகுவன்ஷி, நரைனுக்கு ஒத்துழைப்பு அளிக்க, லக்னோ பந்துவீச்சை நரைன் கிழித்து எறிந்தார்.

மோசின் கான், குர்னல் பாண்டியா, ஸ்டாய்னிஸ், யாஷ் தாக்கூர் என யார் பந்துவீசினாலும் டீப் ஸ்குயர் லெக், டீப் மிட்விக்கெட் திசையில் பவுண்டரி, சிக்ஸர் என நரைன் அதிரடியாக இறங்கினார். 27 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். இந்த அரைசதத்தில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். 2-ஆவது விக்கெட்டுக்கு ரகுவன்ஷி, நரைன் 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.

லக்னோ அணி 14 ஓவர்கள் முதல் 18 ஓவர்கள் வரை தான் ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக பந்துவீசி 45 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரகுவன்ஷி(32), ரஸல்(12),ரிங்கு சிங்(16), ஸ்ரேயாஸ்(23) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். கடைசியில் ராமன்தீப் சிங் மிரட்டலான கேமியோ ஆடி 6 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 25 ரன்கள் சேர்த்தார். சுனில் நரைன் அமைத்துக் கொடுத்த தளத்தைப் பயன்படுத்தி பின்வரிசையில் வந்த பேட்டர்கள் கேமியோ ஆடி பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றனர்.

 
கொல்கத்தா - லக்னோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

நெருக்கடி தந்த கொல்கத்தாவின் பந்துவீச்சு

பந்துவீச்சிலும் கொல்கத்தா அணி தரமாக தாக்குதலைத் தொடுத்தது. தொடக்கத்திலிருந்தே ராகுல், குல்கர்னிக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் ஸ்டார்க், வைபவ் அரோரா பந்துவீசினர். குல்கர்னி(9) ஸ்டார்க்கின் முதல் ஓவரிலேயே வீழ்ந்தார். அதன்பின் ஸ்டாய்னிஸ், ராகுல் கூட்டணியைப் பிரிக்கத்தான் 6 ஓவர்களுக்கு கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டனர். 8-ஆவது ஓவரில் ராகுல் ஆட்டமிழந்தபின் கொல்கத்தா பந்துவீச்சாளர்களின் பணி எளிதாகியது. ஒவ்வொரு ஓவரிலும் விக்கெட்டுகள், லக்னோ பேட்டர்கள் வருவதும் போவதும் என இருந்து, கொல்கத்தா பந்துவீச்சாளர்களின் பணியை எளிதாக்கினர்.

குறிப்பாக நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஸ் விக்கெட்டுகளை ரஸல் வீழ்த்தி ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். கேப்டன் ராகுல் விக்கெட்டை ஹர்சித் ராணா எடுத்து லக்னோ ரன்ரேட்டுக்கு பெரிய திருப்பத்தை உருவாக்கினார். இந்த 3 விக்கெட்டுகள் தான் ஆட்டத்தின் போக்கையே திருப்பிவிட்டன.

https://www.bbc.com/tamil/articles/cd185jwygego

ipl-pt-05-05.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மும்பையின் ஆறுதல் வெற்றியால் சென்னைக்குக் கிடைத்த நன்மை

மும்பை ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐபிஎல் டி20 தொடரில் ப்ளே ஆஃப் சுற்று நெருங்க, நெருங்க ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்து மாற்றங்கள் நடந்து வருகின்றன. அப்படியொரு போட்டிதான் திங்கள்கிழமை நடந்திருக்கிறது. மும்பையின் ஆறுதல் வெற்றி, சன்ரைசர்ஸ் அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 55-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. 174 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 16 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

 
மும்பை ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பை அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறதா?

இந்த வெற்றி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆறுதலாக மட்டுமே இருக்கும். ஆனால், இந்த வெற்றி சன் ரைசர்ஸ் ப்ளே ஆஃப் சுற்று செல்வதில் பெரிய பிரேக் போடும் விதத்தில் அமைந்துவிட்டது. அதே நேரத்தில் இந்த வெற்றி சிஎஸ்கே உள்ளிட்ட சில அணிகளுக்கு பிளேஆப் கனவை தக்கவைத்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. மும்பை தோற்றிருந்தால், சிஎஸ்கே புள்ளிப் பட்டியலில் கீழே இறங்கியிருப்பதுடன், பிளேஆப் வாய்ப்பும் கூடுதல் சவாலாக மாறியிருக்கும்.

மும்பை அணி இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் 9-ஆவது இடத்துக்கு நகர்ந்துள்ளது, 12 போட்டிகளில் 4-ஆவது வெற்றியைப் பதிவுசெய்தாலும் நிகர ரன்ரேட் இன்னும் மைனஸைக் கடக்காமல் 0.212 என்ற அளவில்தான் இருக்கிறது. அடுத்த இரு போட்டிகளிலும் மும்பை அணி பெரிய அளவில் வென்றால்கூட ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வது பெரிய சந்தேகம்தான். இருப்பினும் மும்பையின் வெற்றிகள் பல அணிகளின் முன்னேற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

 
மும்பை ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சன்ரைசர்ஸ் அணிக்கு என்ன சிக்கல்?

இந்த தோல்வி சன்ரைசர்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்று செல்வதற்கான பாதையை கடினமாக்கியுள்ளது. முதல் இரு இடங்களை கொல்கத்தா அணி பிடிக்க தேவையான வசதிகளை உருவாக்கிவிட்டது. சன்ரைசர்ஸ் அணி அடுத்துவரும் 3 ஆட்டங்களிலும் கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையும், நிகர ரன்ரட்டை உயர்த் வேண்டிய சூழலிலும் இருக்கிறது.

ஏனென்றால் இந்த தோல்வியால் சன்ரைசர்ஸ் அணியின் நிகர ரன்ரேட் மைனசில் சென்று 0.065 ஆகக் குறைந்துவிட்டது. சன்ரைசர்ஸ் அணி 11 போட்டிகளில் 6 வெற்றி, 5 தோல்வி என 12 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது.இந்த 4வது இடத்தைத் தக்கவைக்க, சன்ரைசர்ஸ் அணிக்கு அடுத்தடுத்து வெற்றிகள் அவசியம். அதேசமயம் லக்னெள அணி இன்னும் ஒரு போட்டியில் தோற்றால்கூட சன்ரைசர்ஸ் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு பிரகாசமடையும்.

புள்ளிப்பட்டியலில் திடீர் மாற்றங்கள்

இன்று டெல்லியில் நடக்கும் ராஜஸ்தான், டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் முடிவு புள்ளிப்பட்டியலில் இன்னும் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். ராஜஸ்தான் அணி பிரமாண்ட வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும். கொல்கத்தா 2-ஆவது இடம் பிடிக்கும். ஒருவேளை சாதாரண வெற்றியாக அமைந்தாலும், 18 புள்ளிகளுடன் முதலிடம் செல்லும். அதேசமயம், டெல்லி அணி வெற்றி பெற்றால், 12 புள்ளிகளுடன், சிஎஸ்கே, லக்னெள, சன்ரைசர்ஸ் அணிகளுடன் ரேஸில் இணைந்துவிடும்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் நேற்றைய சேஸிங்கில் வெற்றிக்கு சூர்யகுமார் மட்டுமே முக்கியக் காரணமாக அமைந்தார். 51 பந்துகளில் சதம் அடித்த சூர்யகுமார் யாதவ் 102 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று ஆட்டநாயகன் விருது வென்றார். ஸ்கைக்கு துணையாக ஆடிய பேட்டர் திலக் வர்மா 37 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 79 பந்துகளில் 143 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

மும்பை ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெஸ்ட் போட்டியா அல்லது டி20 போட்டியா?

கடந்த முறை இதே வான்கடே மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் ரன் திருவிழாவாவை சன்ரைசர்ஸ் அணி நடத்தி, பல புதிய சாதனைகளைப் படைத்தது. ஆனால் இந்த முறை சன்ரைசர்ஸ் அணியை தொடக்கத்தில் இருந்தே கட்டுப்படுத்தி, 173 ரன்களில் மும்பை அணி சுருட்டியது.

ஆனால் 173 ரன்களையும் டிபெண்ட் செய்ய வலுவான பந்துவீச்சு வைத்திருக்கும் சன்ரைசர்ஸ் அணியும் முயன்றது. பேட்டர்களுக்கு சொர்க்கபுரியான வான்ஹடே மைதானத்தில் 173 ரன்களைக் கட்டுப்படுத்துவது எளிதான இலக்கு அல்ல. அதற்கு ஏற்றாற்போல் புதியபந்தில் பந்துவீசி மும்பை பேட்டர்களை புவனேஷ்வர், கம்மின்ஸ், யான்சென் திணறவிட்டனர்.

பனிப்பொழிவால் ஆடுகளம் லேசான நெகிழ்வுத்தன்மை அடைந்ததால், பந்துவீச்சாளர்களால் ஸ்விங்கைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பந்து பலமுறை பேட்டர்களை கடந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது. அதிகமான ஸ்விங் ஆகியதால், முதல் 3 ஓவர்களில் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் 18 உதிரிகளை விட்டனர்.

இதனால் மும்பை அணி முதல் 9 பந்துகளில் அதிரடியாகத் தொடங்கி 29 ரன்களைச் சேர்த்தது. ஆனால், அடுத்தடுத்து சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். முதலில் யான்சென் தனது ஸ்விங் பந்துவீச்சில் இஷான் கிஷன் விக்கெட்டை எடுத்தார்.

அடுத்ததாக கம்மின்ஸின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். 3வதாக நமன்திர் புவனேஷ்வர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால், முதல் 9 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்த மும்பை அணி அடுத்த 19 பந்துகளில் 6 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. 1.3 ஓவரிலிருந்து 4.4 ஓவர்கள்வரை மும்பை அணி ஒரு ரன்கூட எடுக்கவில்லை.

டெஸ்ட் போட்டியில் வீசப்படும் பந்துவீச்சா அல்லது டி20 போட்டியா எனத் தெரியாத அளவுக்கு பந்து ஸ்விங் ஆகின. இதுபோன்ற ஆடுகளத்தில் கம்மின்ஸ், புவனேஷ் பந்துவீச்சைப் பற்றி சொல்லத்தேவையில்லை. இருவரும் தலா ஒரு மெய்டன் ஓவர்களை வீசி திணறவிட்டனர்.

இதனால் ஆட்டம் மும்பையின் கையைவிட்டு சன்ரைசர்ஸ் பக்கம் நழுவுகிறதா என்று வான்கடே ரசிகர்கள் கவலையடைந்தனர். 4வது விக்கெட்டுக்கு சூர்யகுமார், திலக் வர்மா ஜோடி சேர்ந்து ஆட்டத்தை கையில் எடுத்து, அணியைச் சரிவிலிருந்து மீட்டனர்.

மும்பை ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சூர்யகுமாரின் அதிரடி

சூர்யகுமார் களத்துக்கு வந்தபின் ஆட்டத்தின் போக்கே மாறியது. கம்மின்ஸ், யான்சென் ஓவர்களை சூர்யகுமார் முதலில் குறிவைத்து பவுண்டரிகளை அடித்தார். யான்சென் வீசிய 7-வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசினார். நிதானமாகத் தொடங்கிய ஸ்கை 7 பந்துகளில் 4 ரன்கள் என்ற நிலையில் இருந்து, அதன்பின் 14 பந்துகளில் 32 ரன்கள் என்ற நிலைக்கு உயர்ந்தார். பந்துவீச்சில் கிடைத்த துல்லியத்தை அதன்பின் சன்ரைசர்ஸ் அணி இழந்தது. பவப்ப்ளேயில் மும்பை அணி 3 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் சேர்த்தது.

சன்ரைசரஸ் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எளிதாக அடித்த சூர்யகுமார் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதிலும் யான்சென் பந்துவீச்சில் 9பந்துகளைச் சந்தித்த சூர்யகுமார் 32 ரன்களை விளாசினார், அதில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடங்கும். 11.1 ஓவர்ளில் மும்பை அணி 100 ரன்களை எட்டியது.

ஒருகட்டத்தில் சூர்யகுமார் 82 ரன்கள் சேர்த்திருந்தபோது கம்மின்ஸ் வீசிய 17-வது ஓவரில் அடுத்தடுத்து 2பவுண்டரி, சிக்ஸர் விளாசி 96 ரன்களு உயர்ந்தார். நடராஜன் வீசிய 18-வது ஓவரில் லாங்க் ஆஃப் திசையில் சிக்ஸர்விளாசி சதத்தை நிறைவு செய்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் 2வது சதத்தையும், டி20 போட்டிகளில் 6வது சதத்தையும் நிறைவு செய்து 102 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆட்டத்தின் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், சன்ரைசர்ஸ் அணி பேட்டர்கள் அனைவரும் சேர்ந்து 12 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடித்தனர். ஆனால் நேற்று சூர்யகுமார் ஒருவரே 12 பவுண்டரிகள், 6சிக்ஸர்கள் விளாசினார்.

மும்பை ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

‘ப்ளே ஆஃப் கணக்குத் தெரியாது’

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ ப்ளேஆஃப் செல்வதற்கான கணித சூழல்கள் எனக்குத் தெரியாது. இந்த வெற்றியால் மகிழ்ச்சி. கூடுதலாக 20 ரன்கள் கொடுத்துவிட்டோம், இருப்பினும் பேட்டிங் சிறப்பாக அமைந்தது. என்னுடைய பந்துவீச்சு எனக்கு திருப்தி அளிக்கிறது. நல்ல லென்த்தில் பந்துவீசினேன், இதைத்தான் விரும்புகிறேன். பியூஷ் சாவ்லா எடுத்த விக்கெட்டுகள் திருப்புமுனையாக அமைந்தது. ஸ்கையின் ஆட்டம் நம்பமுடியாத அளவுக்கு இருந்தது. சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களுக்கு அவர் கொடுத்த அழுத்தம் ரன்சேர்ப்பில் தெரிந்தது. எந்தவிதமான மோசமான பந்தையும் ஸ்கை பெரிய ஷாட்கள் அடிக்க தவறவிடவில்லை. என்னுடைய அணியில் ஸ்கை இருப்பது அதிர்ஷ்டம். இதுபோல் அடுத்தடுத்து வெற்றிகள் வரும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

 
மும்பை ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சன்ரைசர்ஸ் அணி எங்கு தோற்றது?

சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 48 ரன்கள் சேர்த்ததுதான் அந்த அணியில் நேற்றைய அதிகபட்ச ஸ்கோராகும். வலுவான பேட்டிங் வரிசையை வைத்திருக்கும் சன்ரைசர்ஸ் அணி நேற்று விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்தது. பவர்ப்ளேயில் விக்கெட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த மும்பை அணி பந்துவீச்சாளர்களில் பும்ரா தவிர மற்றவர்கள் வழக்கத்துக்கு மாறாக துல்லியமாக பந்துவீசினர்.

ஆனால் பும்ரா தனது இயல்பான பந்துவீச்சில் அபிஷேக் சர்மா 11 ரன்னில் வெளியேற்றினார். மயங்க அகர்வால் 5 ரன்னில் கம்போஜ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். இருப்பினும் பவர்ப்ளேயில் சன்சைர்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்களுடன் வலுவாக இருந்தது.

டிராவிஸ் ஹெட் விக்கெட்டை எடுக்க பியூஷ் சாவ்லா கொண்டுவரப்பட்டார். தொடக்கத்தில் இருந்தே சாவ்லா பந்துவீச்சுக்கு திணறிய ஹெட் திலக் 48 ரன்கள் சேர்த்தநிலையில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஒரு கட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 90 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் இருந்தது, ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் கொண்டு செல்லகக்கூடிய வலுவான பேட்டர்கள் இருந்தனர்.

அதன்பின் வந்த நடுவரிசை, கீழ்வரிசை பேட்டர்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை. நிதிஷ்குமார் ரெட்டி(20), கிளாசன்(2), யான்சென்(17), ஷாபாஸ் அகமது(10) அப்துல் சமது(3) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது ரன் சேர்ப்பில் பெரிய பாறையை கட்டிவிட்டதுபோன்ற நிலை ஏற்பட்டது.

ஹர்திக் பாண்டியா, பியஷ் சாவ்லாவின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையாக இருந்தது.டி20 உலகக் கோப்பை நெருங்கும் நேரத்தில் ஹர்திக்கின் பந்துவீச்சில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருவரும் சேர்ந்து சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசையை உலுக்கி எடுத்தனர்.

90 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்த சன்ரைசர்ஸ் அணி, அடுத்த 11 பந்துகளில் 96 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. சன்ரைசர்ஸ் அணி 6 ரன்களுக்க 3 விக்கெட்டுகளை இழந்தது.

ஷாபாஸ் அகமது, யான்சென் தங்களால் முடிந்த அளவு போராடினர். 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்திருந்த சன்ரைசர்ஸ் அணி, 136 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. பியூஷ் சாவ்லா, ஹர்திக் இருவரும் கடைசி வரிசை பேட்டர்களின் விக்கெட்டை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ரன்ரேட்டை இறுக்கிப் பிடித்தனர். சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் அதிரடியாக கேமியோ ஆடி 17 பந்துகளில் 35 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

https://www.bbc.com/tamil/articles/c3g82zdll3do

ipl-pt-06-05.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா........கொல்கத்தா கோபுரத்தில்........!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்பாக்ட் பிளேயர் விதி பற்றி ரோஹித் சர்மா கவலை ஏன்? இந்திய கிரிக்கெட்டில் அதன் தாக்கம் என்ன?

ஐபிஎல் டி20 கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 7 மே 2024, 15:29 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

“இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறைக்கு நான் பெரிய ரசிகன் அல்ல. அந்த விதி ஆல்ரவுண்டர்கள் வளர்வதில் சிக்கல்களை ஏற்படுத்தும். கிரிக்கெட் என்பது 11 வீரர்கள் விளையாடுவதாக இருக்க வேண்டும், 12 வீரர்கள் விளையாடும் விளையாட்டு அல்ல."

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் ரோஹித் சர்மா அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்த கருத்து, ஐ.பி.எல்லில் கடைபிடிக்கப்படும் இம்பாக்ட் விதிமுறை குறித்த விவாதங்களை கிளப்பியுள்ளது. இம்பாக்ட் விதி ஐபிஎல் போட்டிகளை சுவாரஸ்யமாக்குகிறது என்று ஒரு தரப்பினரும், சர்வதேச போட்டிகளில் இல்லாத விதியால் இந்தியாவில் ஆல்ரவுண்டர்கள் உருவாவதை தடுப்பதாக மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர்.

திறமையை நிரூபிக்கும் களமான ஐபிஎல்

பாகிஸ்தான், இந்திய, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளின் முக்கிய வீரர்கள் ஒரே அணியில் விளையாடினால் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் செய்த கற்பனையை நிஜமாக்கியது ஐபிஎல் டி20 தொடர்தான்.

இந்த ஐபிஎல் தொடரால் இந்திய அணிக்கு மட்டும் பலன் கிடைக்கவில்லை. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் சிறப்பாக ஆடி தங்களின் தேசிய அணியில் இடம் பெற்றனர்.

புதிய இளம் பேட்டர்கள், இளம் வேகப்பந்து வீச்சாளர்கள், திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் அடையாளம் காணப்பட்டு இந்திய அணிக்குக் கிடைத்தனர்.

கிரிக்கெட் கனவுகளுடன் பயிற்சி எடுத்து, விளையாடி வரும் ஏராளமான இளைஞர்களை அடையாளம் காணும் தளமாகவும், தங்களின் திறமையை நிரூபிக்கும் அரங்காகவும் ஐபிஎல் உருவெடுத்துள்ளது என்றால் மிகையில்லை.

 
இம்பாக்ட் ப்ளேயர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆல்ரவுண்டர்கள் ஓர் அணியில் இருக்கும் எண்ணிக்கையைப் பொருத்து அணியில் பலம் நிர்ணயிக்கப்படும்.

சர்வதேச அளவில் கிரிக்கெட் அணியின் பலம் என்ன?

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணி வலிமையானது என்பதை முடிவு செய்யும் அளவுகோல்களில் ஒன்றாக இருப்பது ‘ஸ்பெஷலிஸ்ட்’ பந்துவீச்சாளர்கள், பேட்டர்கள் மட்டுமல்ல ‘ஆல்ரவுண்டர்கள்’ எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதும் கூர்ந்து கவனிக்கப்படும்.

ஆல்ரவுண்டர்கள் ஓர் அணியில் இருக்கும் எண்ணிக்கையைப் பொருத்து அணியில் பலம் நிர்ணயிக்கப்படும். அதிகமான ஆல்ரவுண்டர்களை வைத்திருக்கும் அணி உண்மையாகவே வலிமையான அணியாகவே பார்க்கப்படுகிறது. இதில் பேட்டிங் ஆல்ரவுண்டர், பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்று இரு வகைகளிலும் வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இம்பாக்ட் ப்ளேயர் விதி அறிமுகம்

இவையெல்லாம், ஐபிஎல் டி20 தொடரில் “இம்பாக்ட் ப்ளேயர்” விதி வருவதற்கு முன்புதான் இருந்தது. இந்த விதி ஐபிஎல் டி20 தொடரில் 2023ம் ஆண்டு சீசனில் நடைமுறைக்கு வந்தபின், ‘ஆல்ரவுண்டர்கள்’ அணிகளில் குறைந்து, “ இம்பாக்ட் ப்ளேயர்” என்ற கலாசாரத்துக்கு மாறிவிட்டனர்.

இம்பாக்ட் ப்ளேயர்

பட மூலாதாரம்,IPL / X

படக்குறிப்பு,2023 ஐபிஎல் அணிகள்

இம்பாக்ட் ப்ளேயர் விதி என்றால் என்ன?

இம்பாக்ட் பிளேயர் விதி என்பது வழக்கமான ஆடும் லெவனில் உள்ள 11 வீரர்கள் தவிர, மேலும் 5 வீரர்களை டாஸ் போடும்போது அறிவிக்க வேண்டும். இந்த 5 வீரர்களில் யாரை வேண்டுமானாலும் தேவைக்கு ஏற்றாற்போல் பந்துவீச்சாளருக்குப் பதிலாக பேட்டரையோ, அல்லது பேட்டருக்கு பதிலாக பந்துவீச்சாளராகவோ இம்பாக்ட் பிளேயராக களமிறக்கிக் கொள்ளலாம்.

இதற்கு முன் மாற்றுவீரர்(சப்ஸ்டிடியூட்) என்பவர் ஏதேனும் வீரருக்கு காயம் ஏற்பட்டால், உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பீல்டிங் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவார். ஆனால், இம்பாக்ட் ப்ளேயர் விதியில் வரும் வீரர் பந்துவீச முடியும், பேட்டிங் செய்யவும் முடியும்.

கடந்த 2023ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்பாக்ட் ப்ளேயர் விதிக்குப்பின், ஐபிஎல் தொடரில் உள்ள அணிகள், ஆல்ரவுண்டர்கள் மீதான தங்கள் கவனத்தைக் குறைத்துவிட்டன.

ஐபிஎல்லில் நடைபெறும் வீரர்களுக்கான ஏலத்தில் இதனை கண்கூடாக காண முடிந்தது. இம்பாக்ட் விதி அமலுக்கு வருவதற்கு முன்பு நடந்த ஏலங்களின் போதெல்லாம் மிகப்பெரிய நட்சத்திர வீரர்களுக்கு நிகராக ஆல் ரவுண்டர்களுக்கு கிராக்கி இருந்ததைக் காண முடிந்தது. பென் ஸ்டோக்ஸ், கிளென் மேக்ஸ்வெல், ரவீந்திர ஜடேஜா, ஆந்த்ரே ரஸ்ஸல், ஸ்டாய்னிஸ் போன்ற வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் பங்களிக்கக் கூடியவர்கள் என்பதாலேயே அதிக விலை போயினர்.

சர்வதேச போட்டிகளில் பெரிதாக ஜொலிக்காத கேதார் ஜாதவை ஆல்ரவுண்டர் என்பதாலேயே 2018-ம் ஆண்டு ஏலத்தின் போது 7.8 கோடி ரூபாய் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது ரசிகர்களுக்கு நினைவிருக்கும்.

ஆனால், கடந்த தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி அமலுக்கு வந்த பிறகு, நடப்புத் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் அந்த விதியின் தாக்கத்தை உணர முடிந்தது. ஒரு பேட்ஸ்மேனையோ, பவுலரையோ தேவைக்கு ஏற்ப 12-வது வீரராக களமிறக்க முடியும் என்பதால் அனைத்து அணிகளுமே ஏதாவது ஒரு துறையில் ஸ்பெஷலிஸ்டான வீரர்களையே குறிவைத்தன. இதனால், ஆல்ரவுண்டர்களுக்கான மவுசு குறைந்து போனது.

கடந்த ஏலத்தில் பேட்டிங் அல்லது பவுலிங்கில் ஸ்பெஷலிஸ்ட் வீரர்களே அதிக விலைக்கு ஏலம் போயினர். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடி ரூபாய்க்கும். மற்றொரு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 20.50 கோடி ரூபாய்க்கும் ஏலம் போயினர்.

 
இம்பாக்ட் ப்ளேயர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஐபிஎல் போலவே ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டில் “பவர் சர்ஜ்” என்ற விதி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் ‘பவர் சர்ஜ்’

ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டில் “பவர் சர்ஜ்”(Power Surge) என்ற முறை உள்ளது. ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் ப்ளேயர் விதியைப் போல பேட்டிங் செய்யும் அணியின் கரங்களையே இதுவும் வலுப்படுத்துகிறது.

பவர் சர்ஜ் என்பது பவர்ப்ளேயில் 6 ஓவர்களில் 4 ஓவர்கள் மட்டும்தான் வீச முடியும். மீதமுள்ள 2 ஓவர்களை 11-வது ஓவருக்குப்பின் பேட்டிங் செய்யும் அணிதான் எப்போது வீசுவது என்பதை முடிவு செய்யும். இந்த விதியால் ஆட்டத்தின் முடிவைத் தீர்மானிப்பதே பேட்டிங் செய்யும் அணியாகத்தான் இருக்கும்.

இந்த பவர் சர்ஜ் விதி பிக்பாஷ் லீக்கில் எவ்வாறு சர்ச்சையாக, விவாதப்பொருளாக மாறியுள்ளதோ அதேபோன்று இம்பாக்ட் ப்ளேயர் விதியும் மாறியுள்ளது.

 
இம்பாக்ட் ப்ளேயர்

பட மூலாதாரம்,IPL / INSTAGRAM

படக்குறிப்பு, இம்பாக்ட் ப்ளேயர் ஆல்ரவுண்டர்களை பாதிப்பதாக தெரிவிக்கிறார் வோக்ஸ்.

"ஆல்ரவுண்டர்களின் தேவையை குறைத்த இம்பாக்ட் பிளேயர் விதி"

"இம்பாக்ட் ப்ளேயர் விதி ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கைக் கொடுத்தாலும், அது போட்டியிலிருந்து ஆல்ரவுண்டர்களை வெளியேற்றிவிடுகிறது" என்று லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் ஆலோசகர் ஆடம் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.

அவர் ஆங்கில நாளேடுக்கு அளித்த பேட்டியில், “இம்பாக்ட் ப்ளேயர் விதி டி20 ஆட்டத்தின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி பொழுதுபோக்காக இருக்கிறது. ஆனால், இது ஆல்ரவுண்டர்களின் முக்கியத்துவத்தை குறைத்து விடுகிறது. அணிகளின் ஸ்கோர் எப்போதும் இல்லாத அளவு உயர்கிறது, அணிகளுக்கு முழுமையான ஸ்பெஷலிஸ்ட் பேட்டர்கள் 7வது அல்லது 8-வது வரிசை வரை கிடைக்கிறது.

நான் பவர் சர்ஜின் ரசிகன். இம்பாக்ட் ப்ளேயர் விதியைவிட பவர் சர்ஜை ரசிக்கிறேன். சேஸிங்கின் போது ஆட்டம் கையைவிட்டு சென்றுவிட்டதாக ஒருபோதும் நினைக்க முடியாது” என்றார்.

 
இம்பாக்ட் ப்ளேயர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டி20 உலகக் கோப்பையில் சிவம் துபேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரிங்கு சிங் – துபே சர்ச்சை

ரிங்கு சிங்கிற்கு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு, ஷிவம் துபேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாகி வருகிறது. ஏனென்றால், ஷிவம் துபே சர்வதேச போட்டிகளி்ல் விளையாடிய பெரிதாக அனுபவம் இல்லாதவர். ஐபிஎல் தொடரில் இதுவரை பெரிதாக பந்துவீசவும் இல்லை.

குறிப்பாக 2022 ஐபிஎல் சீசனில் 20.4 ஓவர்கள் வீசிய துபே 8 விக்கெட்டுகளையும், 2023 ஐபிஎல் சீசனில் 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார். 2024 சீசனில் இதுவரை துபே பந்துவீசவில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அப்படி இருக்கும் போது எந்த அடிப்படையில் ஷிவம் துபே ஆல்ரவுண்டர் வரிசையில் இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

அதேசமயம், ரிங்கு சிங் இந்திய டி20 அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக விளையாடி தன்னை ஃபினிஷர் என நிரூபித்துள்ளார். ஆனால், அவர் ரிசர்வ் வீரராக மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாமல் போனதற்கு அவரை இம்பாக்ட் ப்ளேயராகவே கொல்கத்தா அணி களமிறக்கியது முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்த சீசனில் ரிங்கு சிங் மொத்தம் 82 பந்துகளே ஆடியுள்ளார்.

ஆனால், சிஎஸ்கே அணியில் இடம் பெற்ற ஷிவம் துபே 203 பந்துகளை ஆடி, சராசரியாக 23 பந்துகளை சந்தித்துள்ளார். இதில் 26 சிக்ஸர்கள், 24 பவுண்டரிகளை அடித்துள்ளார். ஆனால், கொல்கத்தா அணியில் ரிங்கு சிங் 6வது அல்லது 7-வது வீரராக இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்படுகிறார்.

சமநிலையற்ற சூழல்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான டாம் மூடி எக்ஸ் தளத்தில் இம்பாக்ட் விதி பற்றி பதிவிட்ட கருத்தில் “பந்துவீச்சுக்கும், பேட்டிங்கிற்கும் சமநிலையற்ற சூழலை இம்பாக்ட் ப்ளேயர் விதி உருவாக்கும். ஏலத்தில் மோசமாக வீரர்களைத் தேர்வு செய்ததை மூடி மறைக்கவே இந்த முறை இருக்கிறது” என விமர்சித்துள்ளார்.

இம்பாக்ட் ப்ளேயர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இம்பாக்ட் ப்ளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்டபின், சர்வதேச டி20 போட்டிகளில் பவர்ப்ளேயில் இந்திய வீரர்கள் 25 இன்னிங்ஸ்களில் 1263 ரன்களும், நடுப்பகுதி ஓவர்களில் 2,133 ரன்களும் சேர்த்துள்ளனர்.

இம்பாக்ட் ப்ளேயர் விதியால் என்ன நன்மை?

ஆனால் இம்பாக்ட் ப்ளேயர் விதி கொண்டுவரப்பட்டதிலிருந்து இந்திய பேட்டர்களின் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் மேம்பட்டுள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இம்பாக்ட் ப்ளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்ட பின், சர்வதேச டி20 போட்டிகளில் பவர்ப்ளேயில் இந்திய வீரர்கள் 25 இன்னிங்ஸ்களில் 1,263 ரன்களும், நடுப்பகுதி ஓவர்களில் 2,133 ரன்களும் சேர்த்துள்ளனர். டெத் ஓவர்களில் 22 இன்னிங்ஸ்களில் 935 ரன்கள் சேர்த்துள்ளனர்

இம்பாக்ட் விதி அமலுக்கு வரும் முன்பு, 2022 டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி வீரர்கள் பவர் ப்ளேயில் 6 இன்னிங்ஸ்களில் 217 ரன்களும், நடுப்பகுதி ஓவர்களில் 6 இன்னிங்ஸ்களில் 477 ரன்களும், டெத் ஓவர்களில் 6 இன்னிங்ஸ்களில் 296 ரன்களும் சேர்த்திருந்தனர்.

 
இம்பாக்ட் ப்ளேயர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இம்பாக்ட் ப்ளேயர் விதி மீது தனக்கு பெரிய உடன்பாடு இல்லை என்று கூறுகிறார் ரோகித் சர்மா.

விதியை எதிர்த்தவரே இம்பாக்ட் பிளேயர் ஆனது எப்படி?

“இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறைக்கு நான் பெரிய ரசிகன் அல்ல. அந்த விதி ஆல்ரவுண்டர்கள் வளர்வதில் சிக்கல்களை ஏற்படுத்தும். கிரிக்கெட் என்பது 11 வீரர்கள் விளையாடுவதாக இருக்க வேண்டும், 12 வீரர்கள் விளையாடும் விளையாட்டு அல்ல. இந்த விதிமுறை சமநிலையான அணியைத் தேர்ந்தெடுத்த முக்கியத்துவத்தை அழித்துவிடும்” என்று கூறி இம்பாக்ட் பிளேயர் விதிக்கு எதிரான விவாதத்தை தொடங்கிவைத்த ரோஹித் சர்மாவே இம்பாக்ட் பிளேயராக களமிறங்கும் சூழலும் உருவானது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரை இம்பாக்ட் பிளேயராக மும்பை இந்தியன்ஸ் அணி பயன்படுத்தியது. முதுகில் ஏற்பட்ட பிரச்னையால் ரோஹித் சர்மா இம்பாக்ட் பிளேயராக களமிறங்கும் நிலை ஏற்பட்டதாக ஆட்டத்திற்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில் சக அணி வீரர் பியூஷ் சாவ்லா தெரிவித்தார்.

 
இம்பாக்ட் ப்ளேயர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறை தொடர்ந்தால், தோனியை இன்னும் அதிகமான காலம் கிரிக்கெட் விளையாட வைக்கலாம் என்று கூறுகிறார் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் டுவைன் பிராவோ.

"தோனி இன்னும் பல ஆண்டுகள் விளையாடலாம்"

இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறை செயல்பாட்டில் இருக்கும் வரை வயதான வீரர்களான தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா, ரஹானே உள்ளிட்ட மூத்த வீரர்கள் அவரவர் அணிகளில் இருந்து விடைபெற விடாமல் தொடர்ந்து இருக்க வைக்கும்.

இது குறித்து சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் டுவைன் பிராவோ“ இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறை தொடர்ந்து இருந்தால், தோனியை இன்னும் அதிகமான காலம் கிரிக்கெட் விளையாட வைக்கும்”என்று சமீபத்தில் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஏனென்றால், கோலி, ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்கள் விளையாடுவதைக் காணவே ரசிகர்கள் அரங்கிற்கு வருகிறார்கள். நட்சத்திர வீரர்கள் இல்லாத ஆட்டத்தைக் காண ரசிகர்களும் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.

வணிக ரீதியான நோக்கத்திற்காக, மூத்த வீரர்களை தொடர்ந்து தக்க வைக்கும் நோக்கில் இம்பாக்ட் ப்ளேயர் விதியை அணிகள் பயன்படுத்தக் கூடும் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c3ge94jq41qo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாம்சனின் சர்ச்சைக்குரிய அவுட், ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி - ப்ளே ஆஃப் வாய்ப்புகள் எப்படி?

IPL 2024: Dc vs RR

பட மூலாதாரம்,SPORTZPICS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கிரிக்கெட்டில் எப்போதுமே சந்தேகத்தின் பலன் பேட்டருக்குத்தான் தரப்பட வேண்டும் என்று தார்மீகம். ஏனென்றால், பேட்டருக்கு இருப்பது ஒரு வாய்ப்புதான், ஒரு உயிர்தான் அதில் தவறு நேரும்பட்சத்தில் பேட்டரும் தன்னுடைய விக்கெட்டை இழக்க நேரிடும், அணியின் வெற்றி வாய்ப்பும் தலைகீழாக மாறிவிடும்.

ஆனால், பந்துவீச்சாளருக்கு ஒரு பந்து இல்லாவிட்டால் அடுத்த பந்தில் வாய்ப்பு கிடைக்கும். இதைக் கணக்கிட்டுத்தான் சந்தேகத்தின் பலன் பேட்டருக்கு தரப்பட வேண்டும் என்று தார்மீகமாகக் கூறப்படுகிறது.

அதன்படி, நேற்று நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு சந்தேகத்தின் பலனை அளித்திருந்தால், ஆட்டம் வேறுவிதமாகத் திரும்பியிருக்கும். ஆனால், சந்தேகத்தின் பலன் சாம்சனுக்குத் தராமல் அவுட் வழங்கியது ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 56வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 20 ரன்களில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ்.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் சேர்த்தது. 222 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்து 20 ரன்களில் தோல்வி அடைந்தது.

 

ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்?

IPL 2024: Dc vs RR

பட மூலாதாரம்,SPORTZPICS

இப்போதுவரை ப்ளே ஆஃப் சுற்றை எந்த அணியும் இறுதி செய்யவில்லை என்பதுதான் ஐபிஎல் தொடரில் இருக்கும் சுவாரஸ்யம்.

டெல்லி கேபிடல்ஸ் அணி 12 ஆட்டங்களில் 6 வெற்றி, 6 தோல்வி என 12 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இருப்பினும் அந்த அணியின் நிகர ரன்ரேட் மைனஸ் 0.316 என்ற கணக்கில்தான் இருக்கிறது. டெல்லி அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், அதில் கட்டாய வெற்றி பெற்றால்தான் 16 புள்ளிகளுடன் கடைசி இடத்துக்குப் போராட முடியும். இதில் நிகர ரன் ரேட்டையும் டெல்லி அணி உயர்த்துவது அவசியம். டெல்லி அணிக்கு நெருக்கடி கொடுக்க லக்னெள, சன்ரைசர்ஸ் அணிகள் காத்திருக்கின்றன.

இப்போதைய சூழலில் இந்த 3 அணிகளுக்குள்தான் ப்ளே ஆஃப் சுற்றில் 4வது இடத்தைப் பிடிக்கக் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஒருவேளை சிஎஸ்கே அணி ஒரு போட்டியில் தோற்றாலும் 4வது இடத்துக்கான ரேஸில் சேர்ந்துகொள்ளும். இதில் டெல்லி அணி இன்னும் ஒரு போட்டியில் தோற்றாலும் ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறும்.

இன்று ஹைதராபாத்தில் நடக்கும் சன்ரைசர்ஸ், லக்னெள அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கிடைக்கும் முடிவுதான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு யார் செல்ல முடியும் என்பதில் தெளிவான பார்வையை உருவாக்கும்.

ஒருவேளை சன்ரைசர்ஸ் அணி வென்றால் 14 புள்ளிகளுடன் சிஎஸ்கே அணியைக் கீழே இறக்கிவிட்டு 3வது இடத்தைப் பிடித்துவிடும். லக்னெள அணி ஏற்கெனவே நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.371 என இருக்கும் நிலையில் தோல்வி அடைந்தால் அதன் நிலை இன்னும் மோசமாகும். அடுத்த இரு ஆட்டங்களையும் லக்னெள வென்றாலும் 16 புள்ளிகள்தான் கிடைக்கும், நிக ரன்ரேட்டில் சிக்கிக்கொள்ளும்.

ஒருவேளை சன்ரைசர்ஸ் அடுத்த 3 ஆட்டங்களையும் வென்று லீக் சுற்றை 18 புள்ளிகளுடன் முடித்து, சிஎஸ்கேவும் 18 புள்ளிகளுடன் முடித்தால், நிகர ரன்ரேட்டில் இரு அணிகளுக்குள் போட்டி ஏற்படும். அப்போது 3வது, 4வது இடத்தை இரு அணிகளுமே பகிர்ந்துகொள்ளும். டெல்லி, லக்னெள அணிகள் வெளியேற்றப்படும் சூழல் ஏற்படலாம். இதே கணக்கீடு, லக்னெள அணி வெற்றி பெற்றால் சன்ரைசர்ஸ் அணிக்கும் பொருந்தும். சிஎஸ்கே அணி அடுத்து ஒரு போட்டியில் தோற்றாலும், 16 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் சிக்கி 4வது இடத்தையே பிடிக்கலாம்.

 

ராஜஸ்தான் அணியின் நிலை என்ன?

IPL 2024: Dc vs RR

பட மூலாதாரம்,SPORTZPICS

ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இருப்பினும் 16 புள்ளிகளோடு வலுவாக இருப்பதால் 2வது இடத்தில் இருந்து இறங்கவில்லை, நிகர ரன்ரேட்டும் மைனசுக்கு வராமல் 0.476 ஆக இருக்கிறது. இப்போதுள்ள சூழலில் முதலிடத்தைப் பிடிக்க கொல்கத்தா, ராஜஸ்தானுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இரு அணிகளும் அடுத்து வரும் 3 ஆட்டங்களிலும் வென்றால் தலா 22 புள்ளிகள் பெறும், அப்போது நிகர ரன்ரேட் ஒப்பீடு பார்க்கப்படும். எந்த அணி நிகர ரன்ரேட்டில் உயர்வாக இருக்கிறதோ அந்த அணி முதலிடத்தைப் பிடிக்கும். ஏற்கெனவே நிகர ரன்ரேட்டில் கொல்கத்தா உயர்வாக இருப்பது அந்த அணிக்குக் கூடுதல் சாதகம்.

ராஜஸ்தான் முதலிடத்தைப் பிடிக்க வேண்டுமென்றால், அடுத்து வரும் 3 ஆட்டங்களையும் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில், விக்கெட் வித்தியாசத்தில் வென்று நிகர ரன்ரேட்டை உயர்த்தினால், முதலிடம் கிடைக்கும் அல்லது கொல்கத்தா அணி ஒரு ஆட்டத்தில் தோற்க வேண்டும். இல்லாவிட்டால் ராஜஸ்தானுக்கு 2வது இடம்தான்.

ராஜஸ்தான் அணி தனக்கிருக்கும் 3 லீக் ஆட்டங்களில் இன்னும் ஒரு ஆட்டத்தில் வேண்டுமென்றால் தோற்கலாம், மற்ற இரு ஆட்டங்களிலும் வென்றால் 2வது இடத்தைப் பிடித்துவிடும். ஒருவேளை ஒரு ஆட்டத்தில் வென்று 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்தால், ப்ளே ஆஃப் சுற்றில் 2,3,4வது இடங்களுக்கு கடும் போட்டி ஏற்படும்.

டெல்லி அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள்தான் காரணம் என்பதைவிட, ராஜஸ்தான் அணியில் வலுவான பேட்டர்கள் நடுவரிசையில் இல்லாததே காரணம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஹெட்மயர், துருவ் ஜூரெல் இருவரும் இல்லாத பலவீனமான நடுவரிசை இருந்ததால்தான் ராஜஸ்தான் 20 ரன்களில் தோல்வி அடைந்தது, ஒருவேளை இவர்கள் இருந்திருந்தால் ஆட்டம் வேறுவிதமாகத் திரும்பியிருக்கும்.

இருப்பினும் குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்தார். 4 ஓவர்கள் வீசிய குல்தீப் 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். குல்தீப் வீசிய 18வது ஓவர்தான் ஆட்டத்தை டெல்லி பக்கம் முழுமையாகக் கொண்டு சென்றது.

 

சாம்சனின் சர்ச்சைக்குரிய அவுட்?

IPL 2024: Dc vs RR

பட மூலாதாரம்,SPORTZPICS

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால்(4), பட்லர்(19), ரியான் பராக்(27) ஆகியோர் ஏமாற்றிய நிலையில் அணியை தோல்வியிலிருந்து கேப்டன் சாம்சன் இழுத்து வந்தார். அரைசதம் அடித்து 85 ரன்களுடன் ஆக்ரோஷமாக சாம்சன் பேட் செய்தார். சாம்சன் இருந்த தீவிரத்துக்கும், ஆவேசத்துக்கும், ஸ்பிரிட்டுக்கும் களத்தில் இருந்திருந்தால் அணியை வெற்றி பெற வைத்திருப்பார். ராஜஸ்தான் வெற்றிக்கு 30 பந்துகளில் 63 ரன்கள்தான் தேவைப்பட்டது.

அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. 16வது ஓவரை முகேஷ் குமார் வீசினார். அந்த ஓவரில் 4வது பந்தை சாம்சன் தூக்கி அடிக்க பவுன்டரி கோடு அருகே பக்கவாட்டில் சாய்ந்தவாறு ஷாய் ஹோப் கேட்ச் பிடித்தார். ஆனால், ஹோப் கேட்ச் பிடித்தபோது அவரின் கால் பவுண்டரி எல்லைக் கோட்டின் மீது லேசாக மிதித்தது போன்று இருந்ததா அல்லது இல்லையா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

எல்லைக் கோட்டின் மீது ஹோப் லேசாக மிதித்தது போன்றும் இருந்தது, மிதிக்காமல் சென்றது போன்றும் இருந்தது. ஆனால், உறுதி செய்ய முடியாத சூழலில் இருந்தது, 3வது நடுவரும் பலமுறை ரீப்ளே செய்து பார்த்தபோதும் இறுதி முடிவை எடுக்க முடியவில்லை.

களத்தில் இருந்த சாம்சனும் வெளியேறவில்லை. ஆனால் ஷாய் ஹோப் கேட்ச் பிடித்துவிட்ட மகிழ்ச்சியில் சகவீரர்களோடு கொண்டாட்டத்தில் இருந்தார். சந்தேகத்தின் பலனை பேட்டருக்கு வழங்காமல் 3வது நடுவர் சாம்சனுக்கு அவுட் வழங்கினார். இதைப் பார்த்த சாம்சன் கள நடுவரிடம் வாக்குவாதம் செய்துவிட்டு மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

சாம்சனின் அவுட் குறித்து முடிவு அறிவிக்கப்படாத நிலையில், அரங்கில் இருந்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் உரிமையாளர் பர்த் ஜிண்டால் கொண்டாட்டத்தில் இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள் தங்கள் ஆதங்கத்தையும், கோபத்தையும் சமூக ஊடகத்தில் பதிவிட்டனர். சாம்சனுக்கு ஒரு தலைபட்சமாக முடிவு அளிக்கப்பட்டதைக் கண்டித்தும், டெல்லி உரிமையாளரின் செயலையும் கடுமையாகக் கண்டித்து, விமர்சித்து வருகிறார்கள்.

ஒருவேளை சாம்சனுக்கு சந்தேகத்தின் பலனை அளித்து அவுட் இல்லை எனத் தெரிவித்திருந்தால், ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி உறுதியாகி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சாம்சனும் 46 பந்துளில் 86 ரன்களில் (6 சிக்ஸர், 8 பவுண்டரி) இருந்தவர் சதம் அடித்திருப்பார். இவை அனைத்தும் சர்ச்சைக்குரிய அவுட்டால் நடக்கவில்லை.

 

ராஜஸ்தான் அணி எங்கு தோற்றது?

IPL 2024: Dc vs RR

பட மூலாதாரம்,SPORTZPICS

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால், பட்லர் விரைவாக ஆட்டமிழந்ததுதான் தோல்விக்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இருவரும் பவர் ப்ளேவில் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருந்தால், அடுத்து வரும் பேட்டர்களின் சுமை குறைந்திருக்கும்.

ஜெய்ஸ்வால் இந்த சீசனில் மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். கலீல் அகமது வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தது, பவர்ப்ளே ஓவருக்குள் பட்லர் ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவாக இருந்தது. இருப்பினும் சாம்சன் களமிறங்கி, பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தி சிக்ஸர், பவுண்டரி என விளாசி 67 ரன்களை சேர்த்தார்.

அடுத்ததாக நடுவரிசையில் களமிறங்கிய ரியான் பராக்(27), ரூ.2.80 கோடிக்கு வாங்கப்பட்ட ஷூபம் துபே(25) இருவரும் சாம்சனுக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமைக்கத் தவறிவிட்டனர். இருவரும் சாம்சனுக்கு நன்கு ஒத்துழைத்திருந்தால், ரன் சேர்ப்பு இன்னும் வேகமெடுத்திருக்கும். இதில் ஷுபம் துபே மட்டும் சாம்சனுக்கு ஓரளவு ஒத்துழைத்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ரியான் பராக், சாம்சன் கூட்டணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.

கீழ்வரிசையில் ரோவ்மென் பாவெல்(13), பெரேரா(1), அஸ்வின்(2) என அனைத்து பேட்டர்களும் ராஜஸ்தான் அணியைக் கைவிட்டது தோல்விக்குக் காரணமாக அமைந்தது. அதிலும் பவர் ஹிட்டரான பாவெல் கடைசி நேரத்தில் பந்துகளை வீணாக்கியது நெருக்கடியை ஏற்படுத்தியது. தென் ஆப்பிரிக்க வீரரான பெரேராவுக்கு பேட்டர் என நினைத்து வாய்ப்பளித்தும் அவர் ஏமாற்றினார்.

சாம்சன் ஆட்டமிழக்காத வரை ராஜஸ்தான் அணி 162 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்தது. 15வது ஓவர் வரை ஆட்டத்தை சாம்சன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். சாம்சனுக்கு எவ்வாறு பந்துவீசுவது எனத் தெரியாமல் டெல்லி பந்துவீச்சாளர்கள் திணறி வந்தனர். குறிப்பாக கலீல் அகமது பவுண்டரி அடிப்பதைத் தவிர்க்க வேண்டுமே என்பதற்காக 5 வைடு பந்துகளை ஒரே ஓவரில் வீசி சாம்சனை வெறுப்பேற்றினார். இசாந்த் சர்மா, சலாம், முகேஷ், குல்தீப் ஓவர்களையும் சாம்சன் வெளுத்து வாங்கி, 28 பந்துகளில் அரைசதம் அடித்து சிம்மசொப்னமாகத் திகழ்ந்தார்.

முகேஷ் குமார் ஓவரில் சர்ச்சைக்குரிய வகையில் சாம்சன் ஆட்டமிழந்தவுடன், ராஜஸ்தான் சரிவு தொடங்கி, அடுத்த 39 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. பவர் ஹிட்டர்களை வைத்திருக்கும் ராஜஸ்தான் அணி 20 ரன்களில் தோற்றது. பாவெல், பெரேரா இருவரும் சிறிய கேமியோ ஆடி இருந்தாலே ஆட்டத்தின் முடிவு வேறுவிதமாகத் திரும்பியிருக்கும்.

 

எங்களிடம்தான் ஆட்டம் இருந்தது

IPL 2024: Dc vs RR

பட மூலாதாரம்,SPORTZPICS

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், “ஆட்டம் எங்கள் கைகளில்தான் இருந்தது, ஓவருக்கு 10 முதல்11 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்குதான், ஐபிஎல் தொடரில் இதுபோன்ற சேஸிங் நடந்துள்ளது. பந்துவீச்சு, பேட்டிங்கில் சிறப்பாகவே செயல்பட்டோம், சூழலுக்கு என்ன தேவையோ அதைச் செய்தோம். 220 ரன்களை நாங்கள் அனுமதித்திருக்கக் கூடாது, 2 பவுண்டரிகள் கொடுத்ததைக் குறைத்திருந்திருந்தால், ஆட்டம் எங்கள் பக்கம்தான்.

டெல்லி அணி சிறப்பாக பேட் செய்தனர், மெக்ருக் இந்த சீசன் முழுவதும் சிறப்பான தொடக்கத்தை அளித்து வருகிறார். மெக்ருக் சந்தித்த இரு ஓவர்களில் அதிக ரன்களை கொடுத்தோம். நாங்கள் 3 ஆட்டங்களையும் வெற்றியின் அருகே வந்து தோற்றுள்ளோம், இருப்பினும் சிறந்த கிரிக்கெட்டை ஆடினோம் என்ற மனநிறைவு இருக்கிறது.

முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் வரட்டும், ஆனால் தொடர்ந்து எங்களை நாங்கள் உற்சாகப்படுத்திக்கொண்டே அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றோம், சிறிதுகூட ரிலாக்ஸ் ஆக எங்களை நாங்கள் அனுமதிக்கவில்லை.

டெத் ஓவரில் சந்தீப் சர்மா சிறப்பாகப் பந்துவீசக்கூடியவர். அவர் கடைசி நேரத்தில் 3 சிக்ஸர்களை விட்டது பின்னடைவு. எங்கு தவறு நடந்தது என்பதை ஆலோசிப்போம், அடுத்தடுத்த ஆட்டங்களில் முன்னோக்கிச் செல்வோம்,” எனத் தெரிவித்தார்.

மெக்ருக், போரெல், ஸ்டெப்ஸ் அதிரடி பேட்டிங்

டெல்லி அணி 200 ரன்களுக்கு மேல் சேர்த்ததற்கு தொடக்க ஆட்டக்காரர் மெக்ருக், அபிஷேக் போரெல், கடைசியில் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் ஆகியோரின் அதிரடிதான் காரணம். அதிலும் பிரேசன் மெக்ருக் தொடக்கத்தில் இருந்தே ராஜஸ்தான் பந்துவீச்சை வெளுத்தார். போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே பவுண்டரி, சிக்ஸர் என 15 ரன்களை பிரேசர் விளாசினார்.

IPL 2024: Dc vs RR

பட மூலாதாரம்,SPORTZPICS

ஆவேஷ் கான் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி, 6 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி என 28 ரன்களை பிரேசர் விளாசி, 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். பிரேசர் அதிரடியில் 3.5 ஓவர்களில் டெல்லி அணி 50 ரன்களை எட்டியது. அஸ்வின் வீசிய 5வது ஓவரில் பிரேசர் 50 ரன்கள் சேர்த்த நிலையில்(3 சிக்ஸர்,7 பவுண்டரி) விக்கெட்டை இழந்தார், அடுத்துவந்த ஷாய் ஹோப் ரன் அவுட் ஆனார். இதனால் பவர்ப்ளே ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 78 ரன்களை டெல்லி அணி சேர்த்தது.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் போரெல் 28 பந்துகளில் அரைசதம் அடித்து 65(36 பந்து, 3 சிக்ஸர், 7 பவுண்டரி) ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நடுவரிசையில் ரிஷப் பந்த்(15), அக்ஸர் படேல்(15) எனப் பெரிதாக ரன் சேர்க்கவில்லை.

கீழ்வரிசையில் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடினார். ஸ்டெப்ஸ் தொடக்கத்தில் நிதானமாக பேட் செய்து 11 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே சேர்த்தார். டெல்லி அணியும் 14 முதல் 17வது ஓவர்கள் வரை ரன்ரேட் குறைந்து 22 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

ஆனால் யஷ்வேந்திர சஹலின் கடைசி ஓவரை வெளுத்த ஸ்டெப்ஸ் 16 ரன்கள் சேர்த்து 41 ரன்களில் ஆட்டமிழந்தார். குல்புதின் நயீப்(19), ரசிக் சலாம்(9) இருவரும் கடைசி ஓவர்களில் கேமியோ ஆடியதால், டெல்லி அணி 200 ரன்களை கடந்தது. கடைசி 6 ஓவர்களில் மட்டும் டெல்லி அணி 70 ரன்களை சேர்த்ததுதான் 200 ரன்களுக்கு மேல் உயரக் காரணம்.

டெல்லி பந்துவீச்சு சுமார்தான்…

டெல்லி அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சாம்சன் ஒருவரை ஆட்டமிழக்கச் செய்யவே டெல்லி பந்துவீச்சாளர்கள் மிகவும் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

குல்தீப் யாதவ், அக்ஸர் மட்டும்தான் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை சாம்சன், ரியான் பராக், ஷூபம் துபே ஆகிய 3 பேட்டர்களும் துவைத்து எடுத்துவிட்டனர். டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் 4 பேருமே ஓவருக்கு சராசரியாக 11 ரன்களை விட்டுக்கொடுத்தனர். மற்றவகையில் டெல்லியின் பந்துவீச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cevepv8zx94o

ipl-pt-07-05.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் விஜயகாந்த் ஐபிஎல்இல் விளையாடுகிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கந்தப்பு said:

இன்றைய போட்டியில் யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் விஜயகாந்த் ஐபிஎல்இல் விளையாடுகிறார்

Sunrisers Lineup
 
Travis Head
Left-Handed Batsman
Nitish Kumar Reddy
Right-Handed Batsman
Heinrich Klaasen
(Wk)
Right-Handed Batsman
Abdul Samad
Right-Handed Batsman
Shahbaz Ahmed
Right-Handed Batsman
Sanvir Singh
Right-Handed Batsman • Right-arm Medium Bowler
Pat Cummins
(C)
Right-arm Fast Bowler
Bhuvneshwar Kumar
Right-arm Medium Bowler
Jaydev Unadkat
Left-arm Medium Bowler
Vijayakanth Viyaskanth
Right-arm Leg Spin Bowler
T. Natarajan
Left-arm Medium Bowler

தகவலுக்கு நன்றி கந்தப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2 ஓவர்களுக்கு 7 ஓட்டம் தான் வியாஸ்காந்த் கொடுத்துள்ளார்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன்றைய நாளில் மிகவும் தேவையான நல்ல செய்தி. வாழ்த்துக்கள். 
    • Published By: RAJEEBAN   18 MAY, 2024 | 08:35 AM   ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தினை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை கோரும் மற்றும் ஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என அங்கீகரிக்கவேண்டும் என கோரும் தீர்மானம் அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அதனை வரவேற்றுள்ளனர். தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டு உரைகள் ஆற்றப்பட்ட பின்னர் அமெரிக்க காங்கிரஸ்; உறுப்பினர்கள் காங்கிரஸ் நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டனர் . இந்த நிகழ்வில் அமெரிக்காவை சேர்ந்த 100க்கும் அதிகமான தமிழர்களும் கலந்துகொண்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 வருடத்தினை நினைவேந்துவதற்கு உலகம்எங்கிலும் உள்ள ஈழத்தமிழர்கள் தயாராகிவந்த நிலையிலேயே இந்த தீர்மானம்  அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த தீர்மானம் இழப்பை நினைகூருகின்றது ஆனால் தமிழர்களை எதிர்கால வன்முறைகள் பாரபட்சங்களில் இருந்து பாதுகாக்க முயல்கின்றது என தீர்மானத்தை அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பித்த சனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினர் வில்லே நிக்கல் தெரிவித்தார். எனது தீர்மானம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை அங்கீகரிக்கின்றது, ஜனநாயக வழிமுறைகள் மூலம் சுயநிர்ணய உரிமைக்கான தமிழர்களின் உரிமையை வலியுறுத்துகின்றது என தெரிவித்த அவர் இலங்கையில் தொடரும் பதற்றங்களிற்கு அமைதியான ஜனநாயக தீர்வுகள் அவசியம் என்பதை தீர்மானம் வலியுறுத்துகின்றது எனவும் குறிப்பிட்டார். இந்த தீர்மானம் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பை முன்வைக்கின்றது. இவ்வாறான அணுகுமுறை உலகின் பல பகுதிகளில் பின்பற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இலங்கையின் வரலாற்றின் இருள்படிந்த அத்தியாயங்களின் முடிவை நாங்கள் நினைவுகூரும் அதேவேளை நாங்கள் எதிர்காலத்தை நோக்கியும் சிந்திக்கவேண்டும் என குறிப்பிட்ட வில்லியம் நிக்கெல் இந்த எதிர்காலம் அனைத்து மக்களினதும் உரிமைகளும் கௌரவமும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக காணப்படவேண்டும் எனவும் தெரிவித்தார். எங்களால் இதனை செய்ய முடியும் நாங்கள் இணைந்து நிற்போம் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிப்பதற்கு தமிழர்களிற்கு உள்ள உரிமையை மதிக்கும் ஜனநாயக அமைதி தீர்விற்காக பரப்புரை செய்வோம் எனவும் அவர் தெரிவித்தார். இதற்கான ஆதரவு மெதுவாக ஆனால் நிச்சயமாக அதிகரிப்பதை நாங்கள் காணமுடிகின்றது. அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் இது குறித்து கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்  ஈழத்தமிழர்கள் விவகாரத்திற்கு அமெரிக்க காங்கிரஸின் இரு கட்சிகளினதும் ஆதரவு உள்ளது என அவர் குறிப்பிட்டார். இந்த முக்கியமான தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் உள்ள எனது சகாக்களை கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்த அவர் இது முன்னுதாரணத்தின் மூலம் தலைமை வகிப்பதற்கான சிறந்த உதாரணம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளிற்காக குரல்கொடுப்பதற்கான தமிழ்மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் எனவும் குறிப்பிட்டார். இலங்கை தமிழர்களின் கதை போராட்டங்களின் கதைகளில் ஒன்று என தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர் டொம் டேவிஸ் எங்கு அநீதி நிலவினாலும் அது நீதிக்கு அச்சுறுத்தலே என மார்ட்டின் லூதர் கிங் தெரிவித்ததை நினைவுபடுத்துகின்றேன் எனவும் தெரிவித்தார். தமிழர்களிற்கு எதிரான அநீதி உலகில் நீதிக்கான அச்சுறுத்தல் என குறிப்பிட்ட அவர் 2009 இனப்படுகொலைக்கு இட்டுச்சென்ற துயரமான சம்பவங்கள் பாராபட்சத்தின் கொடுமைகளை நினைவுபடுத்துகின்றன எனவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/183839
    • புனைகதைக்கான கரோல் ஷீல்ட்ஸ் பரிசை வென்ற இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளா் May 18, 2024     அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தமிழ்ப் பெண் எழுத்தாளரான வி.வி.சுகி கணேசானந்தன் எழுதிய பிரதர்லெஸ் நைட் (Brotherless Night) என்ற நாவல், புனைகதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ் (Carol Shields) பரிசை வென்றுள்ளது. இதற்காக அவருக்கு 150,000 அமெரிக்க டொலர் (இலங்கை நாணயத்தின் பெறுமதி 4 கோடியே 51 இலட்சத்து 5,064 ரூபா) பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டியலிடப்பட்ட ஏனைய 4 எழுத்தாளர்களுக்கும் 12,500 டொலர் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் வன்முறையில் சிக்கித் தவிக்கும் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்கு உதவும் முகமாக கதை அமையப்பெற்றுள்ளது. இதேவேளை இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடையும் வாரத்தில் தமக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், தாம் விரும்பாதவர்களின் கைகளில் அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் மக்களுக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளதாக சுகி கணேசானந்தன் தனது நாவலில் தெரிவித்துள்ளார். 1980 ஆம் ஆண்டு பிறந்த சுகி கணேசானந்தன், ஒரு அமெரிக்க புனைகதை எழுத்தாளரும் கட்டுரையாளரும் ஊடகவியலாளரும் ஆவார். கிராண்டா, தி அட்லாண்டிக் மந்த்லி மற்றும் த வோசிங்டன் போஸ்ட் உள்ளிட்ட பல முன்னணி பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   https://www.ilakku.org/புனைகதைக்கான-கரோல்-ஷீல்ட/
    • முள்ளிவாய்க்காலில் ‘அவர்கள்’ வழங்கிய கஞ்சி! May 18, 2024 “உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற இந்தப் பாத்திரம், உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய ரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. என்னை நினைவுகூறும்படி இதைச் செய்யுங்கள் ” – லூக்கா இதுவரை மானுடம் கண்டிராத ஓர் பேரவலத்தின் சாட்சியாக நிற்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதி நாட்களின் கொடூரங்களை உலகுக்கு சொல்லும் வரலாறாக ‘அவர்கள்’ வழங்கிய உப்புக் கஞ்சி நிலைத்திருக்கும் இனப்படுகொலை என்ற சொல்லைக் கேட்டாலே ஆயுதங்கள், மரணங்கள், நில ஆக்கிரமிப்புகள், ஓலங்கள், ராணுவ அத்துமீறல்கள், பண்பாட்டுச் சீரழிப்புக்கள், பொருளாதாரச் சூறையாடல்கள் என மானுடத்தின் வதைகள் நமது நினைவுக்கு வந்து செல்லும். அதுவும், தமிழர்களுக்கு அது குறித்து நினைத்த மாத்திரத்தில் முள்ளிவாய்க்கால் பேரழிவு கண்களுக்கு முன்னால் வந்து நிற்கும். அத்தகைய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் ஆறாத வடுக்களோடு வலிகளைத் தாங்கி நிற்கிற தமிழினத்திற்கு கூடுதலாக இன்னுமொரு வார்த்தை நினைவில் வந்துபோகும் அதுதான் பசிப்பட்டினி. 2006 ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்போடு, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என சிங்களப்பேரினவாதம் முன்னெடுத்த திட்டமிட்ட இன அழிப்பு 2009 ஆம் ஆண்டு முல்லைத் தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் மே மாதம் 18 ஆம் தேதியன்று 1,50,000 மக்களின் படுகொலையோடு நிறைவடைந்தது. ரசாயனக் குண்டுகள், விஷவாயு குண்டுகள், கொத்துக்குண்டுகள், ஷெல் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், பல்குழல் எறிகணைகள், ஆட்லெறி குண்டுகள் என உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட அனைத்து ஆயுதங்களைக் கொண்டும் நடத்தப்பட்ட இந்த இன அழிப்புப் போரை சர்வதேச சமூகம் கைகட்டி, வாய்மூடி மெளனமாய் வேடிக்கை பார்த்த அந்த மே 18 ஆம் நாளை ஆண்டுதோறும் உலகம் முழுதும் வாழும் தமிழர்கள், மனித உரிமையாளர்கள், விடுதலைப் போராட்ட இயக்கங்கள் ‘தமிழினப்படுகொலை நாளாக’நினைவுகூர்ந்து வருகின்றனர். விளக்கேற்றி, மெழுகுவர்த்திகள் ஏந்தி, மலர் வணக்கம் செய்து நடைபெறும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் இந்தாண்டு‘முள்ளிவாய்க்கால் உப்புக் கஞ்சி’என்ற ஊழியின் உணவு வழங்கப்பட்டது.முன்னமே, சொன்னது போல, முள்ளிவாய்க்கால் என்றால் தமிழினத்திற்கு கூடுதலாக நினைவில் வந்துபோகும் அந்த பசிப்பட்டினியின் குறியீடே இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’. இப்போது பேசும் பொருளாக மாறியுள்ள இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’தமிழீழ நடைமுறை அரசின் (DeFacto State) தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கடைசி உறுப்பினரின் இறுதி மூச்சுவரை வழங்கப்பட்டது.போர் நடைபெறும் பகுதியில் நிற்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டியது அந்த போரை முன்னெடுக்கும் அரசின் பொறுப்பு. மருத்துவமனைகள் மீதும், மக்கள் அதிகம் இருந்த பகுதிகள் மீதும் கொத்துக்குண்டுகளைப் போட்டு கொன்ற சிங்களப் பேரினவாத அரசு இந்த சர்வதேச விதிமுறையை மட்டும் எப்படி கடைப்பிடிக்கும் ?. மக்களிடம் இருந்த உணவுக் களஞ்சியங்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு மக்களின் வாழ்வாதாரங்களை முற்றாக அழித்த சிங்கள அரசின் திட்டமிட்ட செயல்பாட்டால், பட்டினிச்சாவில் தவித்த மக்களை காப்பாற்றியது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் வழங்கிய இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’தான். சாவின் விளிம்பில் நின்று இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களுக்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு மக்களின் பட்டினியை போக்க மாத்தளன் பகுதியில் தயாரித்து வழங்கத் தொடங்கிய கஞ்சி, முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து வழங்கப்பட்டது. ஆனந்தபுரத்தில் பீரங்கி டாங்கிகளால் தகர்க்கப்பட்ட தென்னைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட, பிடுங்கப்பட்ட தேங்காய்கள், தமிழீழ போராட்ட இயக்கத்திடம் இருந்த அரிசி, காடுகளில் சேகரிக்கப்பட்ட விறகு, ஆங்காங்கே கிடைத்த ஊற்று தண்ணீர் இவற்றால் தயாரிக்கப்பட்ட கஞ்சிதான் அது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கஞ்சி வழங்கப்பட்டது. பசிப்பட்டினியால் தமது மக்கள் சாகக்கூடாது என்பது அந்தப் போராட்ட இயக்கத் தலைவனின் அதியுச்சக் கட்டளையாக இருந்தது.சிங்கள ராணுவத்தின் கண்களில் மண்ணைத் தூவி, பதுக்கி வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருள்கள் தோண்டி எடுக்கப்பட்டு அதிகாலை 2 மணியளவில் தயாரிப்பு நிலையங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும். அதன்மூலம் தயாரிக்கப்படும் கஞ்சி, 8 மணிக்கு முன்னதாக மக்களுக்கும், ஐ.நா. அலுவலர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தன. மனித நேயமற்ற தாக்குதல்கள், இறுக்கமான பொருளாதாரத் தடைகளுக்கு இடையிலும் மக்களில் ஒருவர்கூட பட்டினியால் சாகக்கூடாதென தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பணியாற்றியது. உலகில் நடைபெற்ற எத்தனையோ விடுதலைப் போராட்டங்களில், மக்களின் உணவை கொள்ளையடித்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், த.வி.பு இனவிடுதலைப் போர் நடவடிக்கைகளில் மட்டும்தான் போராளிகள் மக்களுடன் இணைந்து தமக்குக் கிடைத்த உணவை பகிர்ந்து உண்டனர். மக்களை காப்பாற்ற தமது உயிரைத் துறந்தனர். பேரிடர் இடப்பெயர்வின் யூதர்கள் அருந்திய ஓர் உணவை “பாஸ் ஓவர்” என இன்றும் வழக்கமாக நடைமுறையிலுள்ளதைப் போல ஈழத்தமிழர்களின் பொடியன்கள் தயாரித்து தந்த அமிழ்தான ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வரலாற்றில் நிலைபெறும். முள்ளிவாய்க்காலினை பொது பண்பாட்டுக் குறிப்பாக மாற்றும். சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக மட்டுமல்ல, சர்வதேச வல்லாதிக்க நாடுகளின் பங்களிப்பையும், ஐ.நாவின் கள்ள மெளனத்தையும் தீவிரக் கேள்விக்குள்ளாக்குகிற தமிழர்களின் எதிர்ப்புக் குறியீடாக வருங்காலத்தில் மாறும் என்பது உறுதி.   https://www.ilakku.org/முள்ளிவாய்க்காலில்-அவர/
    • டுபாயில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 5 கோடி ரூபா பெறுமதியான நவீன அப்பிள் ரக கையடக்க தொலைபேசிகளுடன் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள பிரிவினால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் உரிய தீர்வையை செலுத்தாது 1,083 நவீன அப்பிள் ரக கையடக்க தொலைபேசிகளை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதுதவிர, குறித்த இருவரும் தம்வசம் வைத்திருந்த 200 பென்ட்ரைவ்களும் மீட்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/301907
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.