Jump to content

சுசீலா அம்மாவுக்கு டாக்டர் பட்டம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

சுசீலா அம்மாவுக்கு டாக்டர் பட்டம்.

சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு டாக்டர் ஜெ, ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் 2 வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் 3,226 மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தன் இனிமையான குரலின் மூலம் தனக்கென ஏராளமான ரசிகர்களை உருவாக்கி, தென்னிந்திய சினிமாவின் சிறந்த – தனித்துவமிக்க பின்னணி பாடகியாக இருப்பவர் தேன் இசை குரலுக்கு சொந்தக்காரரான பாடகி பி.சுசீலா. அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின்; கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தார். பாடகி பி.சுசீலா தமிழ், தெலுங்கு , கன்னடம், மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியல் பாடகி பி. சுசீலாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய முதலமைச்சர், ‘நீ இல்லாத உலகத்திலே’ என்று பி. சுசீலா அவர்கள் பாடிய பாடலை பாடி, அவரை சிறப்பித்து பேசினார்.

இதனை தொடர்ந்து அவ்விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்திற்கான அரசு மானியம் ரூ. 1 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்ததோடு மேலும் இசை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மையம், நூலகம், கற்றல் மேலாண்மை அமைக்க ரூ.1 கோடி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2023/1360078

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசையுலகில் மிகவும் பெறுமதியான பெண்மணி.......டாக்டர் பட்டத்துக்கு தகுதியானவர் ....பாராட்டுக்கள் தாயே......இன்றும் எங்கள் வீடுகளில், வாகனங்களில்  தங்கள் குரல் ஒலித்து வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் எல்லாவற்றிலும் கூடவே வருகின்றது........!  🙏

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுசீலா அம்மையார் இந்த கெளரவ டாக்டர் பட்டத்துக்கு முழுத்தகுதியானவர் ஆயினும்.. அவருக்கு அதனை வழங்க தகுதியே இல்லாத ஸ்ராலினை அழைத்தது.. தமிழகத்தில்.. பல்கலைக்கழக.. கல்வி எந்தளவுக்கு அரசியல் ஆதாயம் சார்ந்திருக்குது என்பதற்கு நல்ல உதாரணம்.

உலகெங்கும்.. குறித்த பல்கலைக்கழக.. துணை வேந்தர்... அல்லது வேந்தர் அல்லது துறைசார் பேராசிரியர்கள் தான் கெளரவ டாக்டர் பட்டங்களை அளிப்பது வழமை.

ஏன்.. இங்கு படிப்பறிவே இல்லாத ஸ்ராலினுக்கு இந்த தகுதி..??!

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.