Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

அண்ணளவாக இற்றைக்கு சரியாக இரண்டுவருடங்களுக்கு முன் புற்றுநோயால் தாயை இழந்த  
குடிக்கடிமையான ஒரு பொறுப்பற்ற தகப்பனால் குடும்பத்தை சரியாக நடத்திச்செல்ல முடியாததையிட்டு 
பாதியிலே பட்டப்படிப்பை நிறுத்த முற்பட்ட யாழ் பல்கலையில் வணிகபீடத்தில் இரண்டாமாண்டு கற்றுக்கொண்டிருந்த ஒரு தங்கையின் கடிதம் எனக்கு வந்து சேர்ந்திருந்தது. அதனை ஒரு திரியிலும் குறிப்பிட்டிருந்தேன்.
அதனை கண்ணுற்ற இரு யாழ்கள உறவுகள் (@வாலி ,@ஏராளன்) அவர்களால் முடிந்த உதவிகளை உடனடியாகவே வழங்கியிருந்தனர்.

இன்று அந்த தங்கை தனது பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்து தனது பட்டமளிப்பு விழாவை எதிர்பார்த்து மகிழ்வுடன் காத்திருப்பதை பேருவகையுடன் யாழ்கள உறவுகளுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமையடைகிறேன். அடுத்த வருடம் மாசி மாதமளவில் பட்டமளிப்பு விழா நடைபெறக்கூடும். அதுமட்டுமல்லாமல் அவருக்கு எனது வங்கி முகாமையாள நண்பன் ஒருவர் மூலமாக வேலைக்கும் ஏற்பாடுசெய்துவிட்டேன். 

@வாலி ,@ஏராளன் உங்களுக்கு எனது மனங்கனிந்த நன்றிகள் பல 
உங்களுக்கு அந்த தங்கை அனுப்பிய நன்றிக்கடிதங்களையும் இந்தத்திரியில் இணைத்துள்ளேன்  

@வாலி
spacer.png

@ஏராளன்
spacer.png
மீண்டுமொருமுறை நன்றி உறவுகளே 
 

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. 

Edited by அக்னியஷ்த்ரா
  • Like 10
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை"  ........!   👍

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தங்கைக்கு வாழ்த்துக்கள்.
எங்களிடம் பொதுவான நிதிக்கட்டமைப்பு ஒன்று தேவை. (தனிநபர்கள் கையாடல் செய்ய முடியாதவாறு) அதனூடாக கல்வி, மருத்துவம், நிலமற்ற ஏழைகளுக்கு நிலம்(வீட்டுத்திட்டம் வரும்போது அரசு வீடு கட்டிக் கொடுக்கும்) போன்றவற்றுக்கு உதவலாம்.

மேலே குறியிட்ட நன்றி விருப்புக்குறி அக்னிக்கானது.
 

  • Like 6
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த உதவியை முன்னின்று வெற்றிகரமாக நடத்தி முடித்த அக்னிக்கும்

தக்க நேரத்தில் உதவிகள் செய்து படித்து முடிக்க உதவிய வாலி மற்றும் ஏராளனுக்கும் மிக்க நன்றி கலந்த பாராட்டுக்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

மெய்யிலை நல்ல சந்தோசமாக இருக்கிறது. 

மென்மேலும் வாழ்வில் முன்னேற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/11/2023 at 05:28, ஏராளன் said:

தங்கைக்கு வாழ்த்துக்கள்.
எங்களிடம் பொதுவான நிதிக்கட்டமைப்பு ஒன்று தேவை. (தனிநபர்கள் கையாடல் செய்ய முடியாதவாறு) அதனூடாக கல்வி, மருத்துவம், நிலமற்ற ஏழைகளுக்கு நிலம்(வீட்டுத்திட்டம் வரும்போது அரசு வீடு கட்டிக் கொடுக்கும்) போன்றவற்றுக்கு உதவலாம்.

மேலே குறியிட்ட நன்றி விருப்புக்குறி அக்னிக்கானது.
 

முன்பு நேசக்கரம் இயங்கிய போது இப்படியான உதவித் திட்டங்கள் நடந்தது..பலரும் அறிந்திருப்பீர்கள் மறுடியும்  கல்வி கற்க வசதிக் குறைவானவர்களை இனம் கண்டு , மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள் உதவிட முன் வரும் பட்சத்தில், ஏராளன் மாணவர்களின் கல்வி முன்ளேற்றத்திலும் அக்கறை காட்டுவார் என்று நம்புகின்றேன்.✍️

  • Like 2


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.