Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 குழாய்க்கிணறுகள் யாழில் பூதாகரம்!

661504940.jpg

[ஆதவன்]

யாழில் அதிகரிக்கும் குழாய்க் கிணறுகளால் நிலத்தடி நீர் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்றும், நாள் ஒன்றுக்கு எவ்வளவு நீர் வெளியேற்றப்படுகிறது என்பதைக்கணிப்பிட முடியாத சூழல் உருவாகியுள்ளது என்றும் யாழ். பல்கலைக்கழகத்தின் விலங்கியல்துறை பேராசிரியர் திருமதி ஞானேஸ்வரன் இராஜேந்திரமணி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:- யாழ். மாவட்டத்தில் அதிகரித்துவரும் குழாய்க் கிணறுகளால் நிலத்தடி நீர் பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. ஒரு நாளைக்கு குழாய்க் கிணறுகள் ஊடாக வெளியேற்றப்படும் நீரின் அளவைக் கணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. யாழ். குடா மூன்று பக்கமும் நீரினால் சூழப்பட்டு ஒரு பகுதியில் நிலத்துடன் இணைக்கப்பட்ட பிரதேசமாகக் காணப்படுகிறது. நிலத்தடி தண்ணீரை ஆதாரமாகக் கொண்டே அனைத்துச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. 

எமக்கு இரு கடலேரிகள் மட்டும் உள்ள நிலையில் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கு நீர் ஏந்துப் பிரதேசங்களை அதிகரிக்கவேண்டும். நீர்நிலைகள் நீரேந்துப் பிரதேசங்களில் உக்காத பிளாஸ்ரிக் பொருள்கள் பொலித்தீன் வகைகள் சேர்வதைத் தடுப்பதற்கு பொதுமக்கள் உரிய வகையில் செயற்படவேண்டும். கழிவு முகாமைத்துவம், கழிவுகளைத் தரம் பிரித்தல் போன்ற செயற்பாடுகளில் பொதுமக்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி சூழலுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் செயற்படவேண்டும் என்றார். [எ]   

https://newuthayan.com/article/குழாய்க்கிணறுகள்_யாழில்_பூதாகரம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை.
கிணறு வெட்டிக் கட்ட 3-4 லட்சம் வேணும், குழாய்க் கிணறடிக்க 50-60 ஆயிரம் காணும் என யோசிப்பினம்.
பெய்த மழை வெள்ளத்தை கடலுக்கு திறந்து விடுவினம் சிலர், பிறகு கோடையில் குடிக்க நல்ல தண்ணீர் இல்லை, கிணறு வத்திப்போச்சு என்று பலரும் வருந்துவினம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, ஏராளன் said:

இது பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை.
கிணறு வெட்டிக் கட்ட 3-4 லட்சம் வேணும், குழாய்க் கிணறடிக்க 50-60 ஆயிரம் காணும் என யோசிப்பினம்.
பெய்த மழை வெள்ளத்தை கடலுக்கு திறந்து விடுவினம் சிலர், பிறகு கோடையில் குடிக்க நல்ல தண்ணீர் இல்லை, கிணறு வத்திப்போச்சு என்று பலரும் வருந்துவினம்.

இருக்கிற குளம் குட்டைகளை வருசாவருசம் தூர்வாரி மழைத்தண்ணியை தேக்கினாலே அரைவாசி பிரச்சனையை தீர்க்கலாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, ஏராளன் said:

இது பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை.
கிணறு வெட்டிக் கட்ட 3-4 லட்சம் வேணும், குழாய்க் கிணறடிக்க 50-60 ஆயிரம் காணும் என யோசிப்பினம்.
பெய்த மழை வெள்ளத்தை கடலுக்கு திறந்து விடுவினம் சிலர், பிறகு கோடையில் குடிக்க நல்ல தண்ணீர் இல்லை, கிணறு வத்திப்போச்சு என்று பலரும் வருந்துவினம்.

எனது உறவினர், தனது இரு மகள்களுக்கு வீட்டினை மூத்த மகளுக்கும், பின்னால் கிணறு இருந்த வளவினை இரண்டாவது மகளுக்கும் கொடுத்திருந்தார். 

அந்த கிணறு, காணியின் நடுவில் இருந்திருக்கிறது, ஆக தங்கை வீடு கட்டவும் ஏலாது, தமக்கைக்கு கிணறும் வேணும்.

கிணத்தை பங்கு கொடுத்தால், பின்னால் பிரச்சனை வரலாம் என்று, கிணத்தை மண்ணை, கல்லை போட்டு மூடி, இரண்டு பக்கமும் இரண்டு ஆழ் துளை கிணறு அடித்தார். தங்கைக்கும் வீடு கட்டியாச்சு. எல்லோரும் சந்தோசமாம்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.