Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில். அனுமதியின்றி ஹோட்டல்களில் நடக்கும் “டிஜே நைற்”க்கு எதிராக போராட்டத்தில் குதிப்போம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

டுதலைப்புலிகள் ஆட்சி இன்றிருந்தால் உங்கள் காலக்காட்டாறு விளையாட்டுக்கள் நடைபெற சாத்தியம் இருந்திருக்குமா?

சுனாமிகள் அணையை உடைத்திருக்குமா?

குமாரசாமி, யுத்தம் தொடர்ந்து நடந்திருந்தால்  சாத்தியமில்லை. யுத்த அவலத்தின் மத்தியில் உயிரைக்காப்பாறுவதே மக்களின் தேவையாக இருக்கும. போது மக்களே அதை விரும்ப மாட்டார்கள். 

ஆனால், யுத்தம் முடிந்திருந்தால் காலக்கட்டாறில் விளையாட்டுக்கு எவரும் விதிவிலக்கு இல்லை. விடுதலைப்புலிகளும் காலக் கட்டாறின் கட்டுப்பாட்டில் இருந்த சாதாரண மனிதர்களே.  

நிச்சயமாக  காலச்சுனாமி அணைகளை உடைத்திருக்கும். அதில்  சந்தேகமே இல்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

காலம் என்பது காட்டாறு….

அது தடுத்து நிறுத்த முடியாத மோட்டாரு….

சகல விடயங்களிலும் மேனாட்டு நடைமுறைகளை பின் பற்றி கொண்டு சிலதை மட்டும் தவிர்க்க முடியாது.

இல்லாவிட்டால் தலிபான் போல் ஒட்டு மொத்தமாக அடித்து மூட வேண்டும்.

இதெல்லாம் சென்னையில் 98 வாக்கிலேயே வந்து விட்டது. சென்னை என்ன நாசமாயா போய்விட்டது.

என்ன சொல்ல வாறீங்க?

இண்டைக்கு டிஜே போறதா, இல்லையா? 

கெதியா சொல்லுங்கோ! 🤧🤨

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, Nathamuni said:

என்ன சொல்ல வாறீங்க?

இண்டைக்கு டிஜே போறதா, இல்லையா? 

கெதியா சொல்லுங்கோ! 🤧🤨

காலக்காட்டாற்றிலை இனியென்ன அடுத்தது லிவிங் டூ கெதர் தான் 🤣

லிவிங் டூ கெதர் + DI  இரண்டும் ஒண்டு சேர ஆகா ஓகோ தான் ஜமாயுங்கோ 😎

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த காலம் வேறு விதமான இலக்குகள், மக்கள் தங்கள் சுய புத்தியைப் பாவித்து இலக்குகளை வரிசைப் படுத்திக் கொண்டார்கள். யுத்தம் முடிந்த பின்னர் (போர் ஓய்வு தற்காலிகமாக வந்த காலத்தில் கூட), சில கட்டுப் பாடுகள் தளர்த்தப் பட்டன, வன்னியில் வாழ்ந்தோருக்கு இது புரியும்.

எனவே, இது போன்ற விடயங்கள் மூடியிருந்த நகரங்கள் திறக்கப் படும் போது நிச்சயம் உள் நுழையும். முகாமை செய்யலாம், முற்றாகக் கட்டுப் படுத்த இயலாது.

முற்றாகக் கட்டுப் படுத்தினால் என்னவாகும்?

வெளித்தோற்றத்தில் எல்லாம் சுத்தமாகத் தெரியும் (கலாச்சாரக் காவலர்களுக்கு இந்த வெளித்தோற்றம் மட்டும் தான் முக்கியமென்பதால் அவை அமைதியாகி விடுவினம்😎!). இருட்டில் சிறுவர் துஷ்பிரயோகம் முதல், திருமணம் தாண்டிய உறவு வரை எல்லாம் நடக்கும், இளவயதுக் கர்ப்பங்களும், அனாதைகளும் இருட்டிலேயே உருவாகி, இருட்டிலேயே முடிந்து போகும் (ஏனெண்டால் பாலியல் அறிவும் கலாச்சாரக் காவலர்களுக்கு ஒவ்வாமை என்பதால் எங்கள் சமூகத்தில் மிகக் குறைந்த நிலை!)

ஒரு ஆரோக்கியமான சமூகம் தேவையென்றால், இது போன்ற விடயங்களை மதுக் கட்டுப் பாடு, போதை வஸ்துத் தடை, பாலியல் சுரண்டல் குறித்த எச்சரிக்கை என்பவற்றை உத்தியோக பூர்வமாக அமல் படுத்தி அனுமதிக்க வேண்டும். அப்படி முகாமை செய்யாமல் ஒரேயடியாகத் தடுத்தால் என்ன ஆகும் என்பதை அறிய  தென்னாபிரிக்க நகரங்களில் நடக்கும் இரகசிய பார்ட்டிகளும், தீ விபத்துகளும், அதியுயர்ந்த HIV தொற்றுகளும் எப்படிப் போகின்றன என்று தேடி அறிந்து பாருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

சென்னை பார்ட்டிகள் என்றால் உடனே நினைவுக்கு வருவது போதைப்பொருட்கள் பாவனைதானே?
அல்லது காலம் எனும் காட்டாற்றில் போதைப்பொருளும் ஒரு அம்சம் என சொல்ல வருகின்றீர்களா?

ஊருக்குத்தான் போகவில்லை, சென்னைக்குமா?

இது உங்கள் மித மிஞ்சிய கற்பனை.

5 hours ago, குமாரசாமி said:

 

விடுதலைப்புலிகள் ஆட்சி இன்றிருந்தால் உங்கள் காலக்காட்டாறு விளையாட்டுக்கள் நடைபெற சாத்தியம் இருந்திருக்குமா?

சுனாமிகள் அணையை உடைத்திருக்குமா?

யுத்த காலம் வேறு. யுத்தமற்ற காலம் வேறு.

புலிகள் தனி நாட்டை அடைந்து, அதன் பின் அங்கே ஒரு தேர்தல் ஜனநாயகம் அமைக்கப்பட்டிருப்பின், கால ஓட்டத்தில் டிஜே யும் வந்திருக்கும்.

டிஜே = போதை அல்ல. இதுவும் உங்கள் அதீத கற்பனை. அல்லது மோசமான சுய அனுபவம்.

3 hours ago, Nathamuni said:

என்ன சொல்ல வாறீங்க?

இண்டைக்கு டிஜே போறதா, இல்லையா? 

கெதியா சொல்லுங்கோ! 🤧🤨

மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு….

அவர காப்பாத்த வேணும் கர்த்தரு…🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

காலக்காட்டாற்றிலை இனியென்ன அடுத்தது லிவிங் டூ கெதர் தான் 🤣

லிவிங் டூ கெதர் + DI  இரண்டும் ஒண்டு சேர ஆகா ஓகோ தான் ஜமாயுங்கோ 😎

எனக்குத்தெரிய மேற்கில் தமிழ் குடும்பங்களில் இது வழக்கம் இல்லை என்றாலும் அரிது என சொல்லிவிட முடியாத ஒன்றாகி வருகிறது.

ஊரில் கூட இளவட்டம் எல்லாமும் செய்கிறார்கள், ஆனால் ஒரே வீட்டில் வாழ்வதில்லை (இப்போதைக்கு). இது மட்டுமே வித்தியாசம்.

இந்த கூடி வாழ்தல் கூட சங்க இலக்கிய முறைதான்.

இடையில் வந்த ஆரிய, ஐரோப்பிய கலாச்சாரத்தாக்கதை கட்டி பிடித்து கொண்டிராமல் மீண்டும் எமது மரபுக்கு திரும்புதல் எனவும் எடுக்கலாம்.

நீங்கள், நீங்கள் விட்டு விட்டு வந்த 1983 இன் சுப்ரமணிய புரத்தில் இன்னும் நிற்பதாக படுகிறது. யாழ்ப்பாணமும் 2023 இல் இருந்து 2024 க்கு போகத்தயாராகத்தான் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு….

அவர காப்பாத்த வேணும் கர்த்தரு…🤣

யோவ் சாமியாரே,

இன்னிக்கு கிறிஸ்மஸ் பார்ட்டி.

டிஜே, சின்னமாமியே போட வலியாட்டம் போடனுமெல்லே!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

யோவ் சாமியாரே,

இன்னிக்கு கிறிஸ்மஸ் பார்ட்டி.

டிஜே, சின்னமாமியே போட வலியாட்டம் போடனுமெல்லே!

முட்டி பத்திரம்…முட்டி பத்திரம்🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

முட்டி பத்திரம்…முட்டி பத்திரம்🤣

 

முட்டி? ஓ... கள்ளு முட்டி??? மழைக்கால இருட்டெண்டாலும் மந்தி கொப்பிழக்காது....

என்ன வலியாட்டம் ஆடினாலும், கையில இருக்கிற முட்டி உடையாது, கண்டியளே... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

ஊருக்குத்தான் போகவில்லை, சென்னைக்குமா?

ஒரு சில யதார்த்த பூர்வமாக கருத்துக்களை வைத்து நல்லது கெட்டதுகளை அறியலாம் /வெளிக்கொண்டு வரலாம் என சிந்திப்பேன். இப்படியான கருத்துக்கள் வரும்  போது விலகியிருப்பதுதான் சித்தம் என தெரிகின்றது.
நான் இலங்கைக்கு/ சென்னைக்கு போனால் என்ன போகா விட்டால் என்ன? அதுவா இப்போது முக்கியம்?

நீங்கள் இதுவரை காலமும் நேரில் நின்று பார்த்து அனுபவித்த கருத்துக்களையா இங்கு வைக்கின்றீர்கள்?

அதட்டல் மன்னர்கள்.🤣

  • கருத்துக்கள உறவுகள்

மாநகர சபைகளுக்கு இந்த விடயத்தில் எவ்வளவு அதிகாரங்கள் உள்ளன என தெரியவில்லை. இலங்கையில் வேறு பாகங்களில் இப்படியான கேளிக்கை நிகழ்ச்சிகளை நடாத்தமுடியும் எனுமளவில் இதற்கு தடை கொண்டுவர முடியாது, அப்படியான தடையை இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவானவர்கள் சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றியடைய முடியும் என நினைக்கின்றேன். 

அதேசமயம் கோயில்கள், பாடசாலைகள் நிறைந்துள்ள யாழ் நகர சூழலில், அத்துடன் யாழ் போதனா வைத்தியசாலை அமைவிடம் ஆகியனவற்றை நோக்கும்போது சுற்றுவட்டாரத்துக்கு இடைஞ்சல் கொடுக்காத வகையில் இப்படியான நிகழ்ச்சி எங்கே வைக்கப்பட முடியும் என கேள்வி எழுகின்றது. 

மேலும் இரவு பத்துக்கு படுத்து காலை நான்குக்கு எழும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமுதாயத்தில் வெளிநாடு போல் இரவு பன்னிரண்டு, சாமம் இரண்டு மணிக்கு எல்லாம் குத்து ஒலியுடன் குத்தாட்டம் போடுவது எல்லாம் சீரழிவில் கொண்டுபோய் முடியும். நிச்சயம் நேரக்கட்டுப்பாடு தேவை. அத்துடன் மேற்பார்வை அவசியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, நியாயம் said:

மாநகர சபைகளுக்கு இந்த விடயத்தில் எவ்வளவு அதிகாரங்கள் உள்ளன என தெரியவில்லை. இலங்கையில் வேறு பாகங்களில் இப்படியான கேளிக்கை நிகழ்ச்சிகளை நடாத்தமுடியும் எனுமளவில் இதற்கு தடை கொண்டுவர முடியாது, அப்படியான தடையை இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவானவர்கள் சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றியடைய முடியும் என நினைக்கின்றேன். 

அதேசமயம் கோயில்கள், பாடசாலைகள் நிறைந்துள்ள யாழ் நகர சூழலில், அத்துடன் யாழ் போதனா வைத்தியசாலை அமைவிடம் ஆகியனவற்றை நோக்கும்போது சுற்றுவட்டாரத்துக்கு இடைஞ்சல் கொடுக்காத வகையில் இப்படியான நிகழ்ச்சி எங்கே வைக்கப்பட முடியும் என கேள்வி எழுகின்றது. 

மேலும் இரவு பத்துக்கு படுத்து காலை நான்குக்கு எழும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமுதாயத்தில் வெளிநாடு போல் இரவு பன்னிரண்டு, சாமம் இரண்டு மணிக்கு எல்லாம் குத்து ஒலியுடன் குத்தாட்டம் போடுவது எல்லாம் சீரழிவில் கொண்டுபோய் முடியும். நிச்சயம் நேரக்கட்டுப்பாடு தேவை. அத்துடன் மேற்பார்வை அவசியம்.

சிங்கள பகுதிகளிகளில் அளவிற்கு அதிகமாக நடக்கின்றது.இழப்புகளும் அதிகம்.போதை தரும் மாத்திரைகளின் பாவனை அதிகரித்துள்ளது. இந்த மாத்திரைகளின் பின் விளைவுகளை வயது 30 களிலேயே உணர்ந்து கொள்வார்கள். வாலிப வயதில் எதையும் தாங்கும் சக்தி உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

இதெல்லாம் சென்னையில் 98 வாக்கிலேயே வந்து விட்டது. சென்னை என்ன நாசமாயா போய்விட்டது.

தமிழ்நாடு ஒரு முன்னோடி தான். முற்காலத்தில் மதகுருமார்கள் நடத்திவைத்தால் தான் திருமணம் செல்லுபடியாகும் என்று இருந்த நிலைமையை அண்ணா என்ற முதலமைச்சர் பதிவு திருமணம் செல்லுபடியாகும் என்று சட்டம் கொண்டுவந்து மாற்றி அமைத்தார் என்று யாழ்களத்தில் படித்தேன்.

(திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற கோசமும் விளங்கியது)

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் அது எல்லாம் யாழ்பாணத்தில் நடத்த அனுமதிக்க முடியாது என்கிறார்கள் நீங்கள்

2 hours ago, நியாயம் said:

இப்படியான நிகழ்ச்சி எங்கே வைக்கப்பட முடியும் என கேள்வி எழுகின்றது. 

அத்துடன் மேற்பார்வை அவசியம்.

நீங்களே சுகிர்தன் மற்றும் வெளிநாடுகளில் உள்ள யாழ்பாணத்து கலாச்சார காவலர்களுடன் இணைந்து ஒரு மேற்பார்வை குழுவை அமையுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஒரு சில யதார்த்த பூர்வமாக கருத்துக்களை வைத்து நல்லது கெட்டதுகளை அறியலாம் /வெளிக்கொண்டு வரலாம் என சிந்திப்பேன். இப்படியான கருத்துக்கள் வரும்  போது விலகியிருப்பதுதான் சித்தம் என தெரிகின்றது.
நான் இலங்கைக்கு/ சென்னைக்கு போனால் என்ன போகா விட்டால் என்ன? அதுவா இப்போது முக்கியம்?

நீங்கள் இதுவரை காலமும் நேரில் நின்று பார்த்து அனுபவித்த கருத்துக்களையா இங்கு வைக்கின்றீர்கள்?

அதட்டல் மன்னர்கள்.🤣

இல்லை சென்னை பார்ட்டி என்றாலே போதைதான் என பொத்தாம் பொதுவாக சொன்னீர்கள் அதுதான்.

சென்னையில் பார்ட்டிகள் பலவகைப்படும். அதில் டிஸ்கோதேக்கள் உட்பட பெரும்பாலானதில், வரும் பெரும்பாலானோர் போதை மருந்து பாவிப்பது இல்லை.

அதைத்தான் சொல்கிறேன். 

பிகு

அதட்டல் எல்லாம் இல்லை….ஒன்லி உருட்டல் மட்டுமே🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

அவர்கள் அது எல்லாம் யாழ்பாணத்தில் நடத்த அனுமதிக்க முடியாது என்கிறார்கள் நீங்கள்

நீங்களே சுகிர்தன் மற்றும் வெளிநாடுகளில் உள்ள யாழ்பாணத்து கலாச்சார காவலர்களுடன் இணைந்து ஒரு மேற்பார்வை குழுவை அமையுங்கோ.

 

எனது பிள்ளைகள் உழைத்து தமது சொந்த காசை செலவளித்து இப்படியான கேளிக்கை நிகழ்ச்சிகள் பார்க்க செல்ல தடை இல்லை. அடுத்தவன் காசில் செல்வதற்கும் அனுமதி இல்லை. 

உங்கள் வீட்டு நிலவரம் எப்படி?

பிள்ளைகளுக்கு மேற்பார்வை எப்போதும் உள்ளது.

 

6 hours ago, குமாரசாமி said:

சிங்கள பகுதிகளிகளில் அளவிற்கு அதிகமாக நடக்கின்றது.இழப்புகளும் அதிகம்.போதை தரும் மாத்திரைகளின் பாவனை அதிகரித்துள்ளது. இந்த மாத்திரைகளின் பின் விளைவுகளை வயது 30 களிலேயே உணர்ந்து கொள்வார்கள். வாலிப வயதில் எதையும் தாங்கும் சக்தி உண்டு.

 

இந்த கேளிக்கை வேண்டும் வேண்டும் என குரல் கொடுப்பவர்கள் நாளை ஆமிக்காரன் எங்கள் பிள்ளையை கட்டிப்பிடிச்சு போட்டான், போலிஸ்காரன் உரசிப்போட்டான், முஸ்லீம்காரன் பிள்ளையை கடத்திக்கொண்டு போயிட்டான், சிங்களவன் பிள்ளையை என்னமோ செய்துபோட்டான் என்றும் அலரத்தான் போகின்றார்கள். 

இப்படியான நிகழ்ச்சிகளுக்கு எல்லாவிதமான ஆட்களும் வருவார்கள். தவிர, சடாமுடிக்காரன், தோடுகள், பச்சைகுத்துக்களை பார்த்து பிறகு பயப்படக்கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இலங்கைல தமிழர் பிரதேசத்தில குறிப்பா யாழ்ப்பாணத்தில ஏதாவது நடந்தால் கலாச்சாரம் சீரழியிது, தமிழர் மானம் போது மரியாதை போது ஆனால் இதே தமெழன் வெளிநாட்டில என்னவும் செய்யலாம் அங்க அவையளின்ர பிள்ளையள் குடிச்சா அது சாதாரணம் யாழ்ப்பாணத்தில குடிச்சா அவன் குடிகாரப் பொறுக்கி

  • கருத்துக்கள உறவுகள்
On 14/12/2023 at 01:17, நியாயம் said:

மாநகர சபைகளுக்கு இந்த விடயத்தில் எவ்வளவு அதிகாரங்கள் உள்ளன என தெரியவில்லை. இலங்கையில் வேறு பாகங்களில் இப்படியான கேளிக்கை நிகழ்ச்சிகளை நடாத்தமுடியும் எனுமளவில் இதற்கு தடை கொண்டுவர முடியாது, அப்படியான தடையை இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவானவர்கள் சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றியடைய முடியும் என நினைக்கின்றேன். 

 

கொழும்பை பொறுத்த வரைக்கும் இப்போது இரவு முழுவதும் களியாட்டங்களை நடத்த அனுமதி கொடுத்திருக்கிறார்கள். மதுபான சாலைகள் கூட இரவு பன்னிரண்டு மணி வரைக்கும் திறக்கலாம். முன்னர் அப்படி இருக்கவில்லை. இப்போதுள்ள ராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்.

இவர்கள் நடத்தும் விடுதிகள் இலங்கை உல்லாச பயண சபையில் பதிவு செய்யப்பட்டிருந்தால் மாநகர சபையின் அனுமதி தேவைப்படாது. எனவே அனுமதி அமைச்சில் பெறப்படுமாக இருந்தால் கொண்டு நடத்தலாம். இப்போது கஞ்சா வளர்ப்பதெட்கே அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2023 at 14:08, goshan_che said:

இந்த திரியில்…. டிஜே நைட்டை எதிர்பவர்கள் யாருங்கிறே

80,90,2000,2010 களில்….மேற்கு நாட்டின் நகரங்களில்….

(மிகுதியை வாசர்கர் கற்பனைக்கு விடுகிறேன்🤣). 

நான் காலேஜ் படிக்கும் காலத்தில் இங்கிருக்கும் பாட்டிகள் போதாது என்று 
அயோவா Iowa என்ற அடுத்த மாநில யூனிவெர்சிட்டிக்கு வெள்ளிபோய் செடில் குத்தி 
ஞாயிறு காலை காவடி இறக்கி வைத்தும் வந்திருக்கிறோம் .... இந்தியா கம்போடியா வியடனாம் தமிழ் பெண்களும் எங்களுடன் கூடி வந்து பார்டி செய்து திரும்பி இருக்கிறோம் 

இப்போது காசு தந்து யாராவது வா என்றாலும் போகும் எண்ணமும் இல்லை அந்த வயதும் இல்லை 

இரண்டு வருடம் முன்பு ஒரு திருமணத்திற்கு ( இங்கிருந்து சில வெள்ளைகாரிகளும் வந்தார்கள்) 
திருமணம் யாழ்ப்பாணம்  ரெசெப்சன் திருகோணமலையில் நடந்தது 
திருகோணமலையில் இங்கு போலத்தான் டி ஜே வந்து  பாட்டு போட்டு ஆடி 
கோடடலில் இருந்த மற்ற ரசியன் ஆட்களையும் இழுத்துவந்து ஆடி பின்பு கோட்டல் காரர்கள் 
12 மணிக்கு மேல் தங்களுக்கு அனுமதி இல்லை இனி போலீஸ் வரும் என்று எங்களுடன் சண்டை போட்டு 
வலு கட்டாயமாகவே நிறுத்தினார்கள். 

எனக்கு தனிப்பட இதில் எந்த ஆடசேபனையும் இல்லை 

ஆனால் சமூகம் ...... பாதுகாப்பு ........ என்று வரும்போது 
இது தனியாக பாட்டு போட்டு ஆடுவதுடன் முடிவதில்லை என்பது இங்கு இருக்கும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே ........ மது ...... போதைவஸ்து ........ செக்ஸ் ...... விபச்சாரம் எல்லாவற்றுக்கும் நிழலாக பிடிக்கும் குடை   இதுதான்! அதுவும் மூன்றாம் உலகில் இதுதான் என்று நான் கண் ஊடாகவே காண்கிறேன் தற்காலத்தில் நீங்கள் தரமான கோக்கையின் ( Cocaine) வாங்கவேண்டும் என்றால் நீங்கள் நிற்கவேண்டிய இடம்  பெங்களூர்  இங்கு கூட பலரால் வாங்குவதற்கு போதுமான பணம் இல்லை. கை நிறைய பணம் வாலிப வயது  ஆட்களை ஆட்கள் தெரியாத காஸ்மோபாலிதான் நகரம் என்பதால் பெங்களூர் முதன்மையில் இருப்பதில் எனக்கு  ஆச்சரியம் ஏதும் இல்லை. 

எனக்கு இருக்கும் கேள்வி 

நாம் செய்ததால் அது சரியானதுதான் அதை எல்லோரும் செய்யலாம் என்று ஆதரிப்பதா? 

அல்லது எமது சமூக கட்டமைப்பு மிகவும் பிற்போக்குத்தனமானது  (One night stand ) என்று சொல்ல கூடிய ஒரு இரவுக்கு  ஒரு பெண்ணுடன்  படுத்து செக்ஸ் வைத்துவிட்டு காலையில் எழுந்து தன் தன் பாட்டில் செல்லும் வசதி யாழ்ப்பாணத்தில்  இல்லாதிருப்பது மிகவும் பிற்போக்குத்தனமானது என்ற அடிப்படையில் ஆதரிப்பதா ??

அல்லது ஒரு சமூகத்தில் ஆண்கள் பெண்கள் சேர்ந்து குடித்து டான்ஸ் ஆடினால்தான் அந்த சமூகம் உயர்ந்தது  எனும் ஏதாவது மறைமுக  உந்துதல் இருப்பதால் அதை ஆதரிப்பதா? 

இதனால் சமூகத்தில் வரவிருக்கும் நன்மை தீமை பற்றி நான் ஆய்வுசெய்திருக்கிறேன் எனும் ஒரு குருட்டு  பார்வையில்  ஆதரிப்பதா? 

இந்த இடத்தில இருந்து இதை ஆதரிப்பது எதிர்ப்பது நல்லது 
ஒரு சமூகத்துக்கு ஆரோக்கியம் ஆனது என்று நீங்கள் உங்கள் தனிப்பட்ட பார்வையில் பார்க்கிறீர்கள் ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.