Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பராமரிப்பில்லாத ஆரியகுளம்!

805118965.jpg

இனியபாரதி)

யாழ்ப்பாணம் ஆரியகுளத்தை நாம் புனரமைத்து கொடுத்தோம். ஆனால் யாழ் மாநகர சபை அதனை பராமரிப்பதாக தெரியவில்லை என தியாகி அறக்கட்டளை நிலைய ஸ்தாபகர் வாமதேவா தியாகேந்திரன் கவலை வெளியிட்டார்.

தியாகி அறக்கட்டளை நிலைய ஸ்தாபகர் வாமதேவா தியாகேந்திரனின் நிதி அனுசரணையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கலந்துரையாடல் மண்டபம் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் ஆரியகுளத்தை யாழ் மாநகர சபை சிறப்பாக பராமரித்தால் இன்னமும் பல குளங்களை புனரமைக்க தயாராக உள்ளேன்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பார்க்கும்போது சிறப்பாக பராமரிப்பார்கள் போல தெரிகிறது - என் குறிப்பிடடார்.

https://newuthayan.com/article/பராமரிப்பதாக_தெரியவில்லை!_ஆரியகுளம்_ 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆரிய குளம் புனரமைக்கப்பட்ட போது,  நாக விகாரைக்கு வரும் சிங்கள யாத்திரிகர்கள் வந்து இளைப்பாறுவதற்கே மேயர் மணிவண்ணன் இதை புனரமைக்கிறர் என்று வசைபாடி பேட்டி கொடுத்து தனது  இனவாதத்தை கக்கினார் கஜேந்திரகுமார்.

  இன்று பராமரிப்பின்றி குளம் மீண்டும் அசுத்தமடையும் போது எந்த தமிழ் அரசியல்வாதியோ தமிழ் தேசியம் பேசும் எவரோ கவலைப்பட்டப் போவதில்லை.  அதை திரும்பிக்கூடப் பார்க்கப போவதில்லை

யாராவது அரச ஆதரவுடன் இதை மீண்டும் புரனமைத்து பரமரித்தால் மீண்டும் தமது இத்துப்போன அரசியலுடன்  அதனை வசைபாடி அவருக்கு துரோகிப்பட்டம் கொடுக்க  வருவார்கள்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப இருக்கிற எங்கடை அரசியல்வாதிகள் ஒரு சதத்துக்கும் உதவாததுகள்.ஒற்றுமை எண்டது மருந்துக்கும் இல்லை. ஒழுங்காய் இருக்கிறதை கூட வைச்சு பராமரிக்க தெரியேல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆரியர் குளத்தை திருத்தும்போது நான் நிறைய இடங்களில் கண்டனம் செய்திருக்கிறேன் காரணம் யாழ் மாநகரசபைக்கு அப்படி எதையும் தொடர்ந்து பராமரிக்கும் வளமோ அல்லது தொழில்நுட்ப அறிவோ அறவே இல்லை என தவிர அங்கு அதிகாரிகள் உட்பட தொழிலாளர் வரைக்கும் அசமந்தப்போக்குடன் நடப்பவர்கள் தைவிடக் கேவலம் யாழ் குடாநாட்டில் அதுவும் யாழ் மாநகர சபை எல்லைக்குள்ளும் அதன் சுற்றுப்புறங்களிலும் வதிவோர் கொஞ்சமேனும் சமூக அக்கறை இல்லாத கூட்டம். 

யாழ் பேரூர்ந்து நிலையத்தைச் சுற்றி நடக்கும் அக்கிரமமும் குற்றச்செயல்களும் சொல்லி மாளாது.

இப்போது இருக்கும் கார்கிள்ஸ் பூட்சிற்றிக்கு அருகாமையில் வெளியூர் செல்வதற்காக ஒரு தரிப்பு நிலையம் கட்டினார்கள் ஆனால் நாங்கள் அங்கு வண்டிகளை நிறுத்தமாட்டோம் என தனியார் மற்றும் அரச போக்குவரத்தாளர்கள் அடம்பிடிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Elugnajiru said:

1970 ம் ஆண்டுகளின் முற்பகுதியிலேயே  இலங்கையில் உள்ள நகரங்களில்  முதன் முறையாக  நவீனமான அழகான நவீன சந்தையை கட்டி அதை அழகாகப் பராமரித்ததுடன் தமிழ் சான்றோர்களின் சிலைகளை நகரின் முக்கிய சந்திகளில் நிறுவி  இலங்கையில் உள்ள நகரங்களில் மிக அழகான சுத்தமான நகரம் என்று,  பெயரெடுத்த யாழ்பாணத்திற்கு  இன்று அரை நூற்றாண்டின் பின்னர் ஒரு குளத்தை பராமரிக்கும் தொழில்நுட்ப அறிவு இல்லை என்று கூறுமளவுக்கு  நாம் பின்னோக்கி போயுள்ளோம் என்று கூற வருகின்றீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, island said:

ஐலண்ட் அவர்களே,

நாம் பின்னோக்கிப்போகவில்லை தற்போதைய தொழில்நுட்பங்களை எங்கள் சமுதாயம் உள்வாங்கப்பழகவில்லை அல்லது அதற்கான சந்தர்ப்பங்கள் எமக்குக்கிடைக்கவில்லை அல்லது அப்படியான சந்தர்பங்கள் கிடைப்பதற்கு பல்வேறு தடைகளை யாரோ எங்கள் முன்பு ஏற்படுத்தியுள்ளார்கள்.

ஒரு குளத்தை நாம் வெறும் சாதாரண குளமாக நினைத்து ஒதுக்கிவிட்டுப்போகமுடியாது, அந்தப்பிரதேசத்தின் நிலத்தடி நீரில் கூடிய அளவு கடல்நீர் சேராமல் பாதுகாக்கும் பொறிமுறெளக்கான ஒரு அலகு என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

யாழ் ந்நகர்ப்பகுதியில் காணாமல் போன குளங்கள் பல அதில் வண்ணான் குளம் இறுதியாகக் காணாமல் போனது நரியஙுண்டுக்குளம்  முலவைவைச்சந்திக்குளம் தாராக்குளம் இவைகள் முன்னமேயே காணாமல்போய்விட்டன. பொம்மை வெளி காக்கைதீவு ஆகிய இடங்கள் பெருமுதலாளிகளது வணிக நிறுவனங்களின் பண்டகசாலையாக மாறிவிட்டது யாழ்ப்பாண நகர்ப்பகுதியில் சேரும் குப்பகளில் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பொம்மைவெளி தொடங்கி நவாலி நோக்கி காற்றில் பயணப்பட்டு அந்த இடத்தின் சூழலே மாற்றமடைந்துவிட்டது இதற்கு யார் பொறுப்பு? 

வேலிகளாக இருந்த குடியிருப்புக்காணிகளின் எல்லைகள் அனைத்தும் யாழ் மாநகர எல்லைக்குள் மதில்களாக மாறி வெள்ளம் வழிந்தோடாது பெரும் சீரளிவு இதை யார் திருத்தவேண்டும் யாழ் மாநகரசபைதானே? யாழ் குடாநாட்டின் அனைத்துப்பகுதியும் இப்போது சன நெரிசலாம் அல்லாடுகிறது அங்கு காணப்படும் மலசலக்குழிகள் அடுத்தவீட்டின் கிணற்றுக்கு அண்மையாகக் கைகோர்த்து நிற்கிறது அப்போ கிணற்று நீரின் தரம் பற்றிய கேள்வி எழுகிறது?
கோடைகாலத்தில் நிலத்திலிருந்து உறிஞ்சும் நீர மரிகாலத்தில் நிலத்துக்கு ரீசார்ச் செய்யக்கூடிய இலகுவான தொழில் நுட்பத்தை ஏன மாநகரசபை குடியிருப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தவில்லை?

எங்கே ஆரியகுளப்பிரதேசத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்ட மாநகரசபை ஊழியர்கள் சரியாக எட்டு மணி நேரம் தமது கடமையைச் செய்கிறார்களா?

அல்லது மாநகர சபை நிர்வாகம் ஆரியகுளத்தை வருடம்தோறும் எப்படிப்பராமரிப்பது என்பதற்கான ஒரு வரைபுக்கோப்பை வைத்திருக்கிறார்களா?

நல்லூர் திருவிழாகாலத்தில் தற்காலிக சந்தைக்கடைகளுக்காக அறவிடப்படும் பணம் எந்தக்கணக்கில் வருகிறது?

யாழ் மாநகரசபையில் இப்போது பணிபுரியும் துறைசார் வல்லுனர்களது பட்டியல் இருக்குதா? 

மராமத்துக்கான பொறியாளர்களது தராதரம் என்ன?

சோலைவரி எனச்சொல்லப்படும் சொத்துவரியை மாநகரசபை சரியாக அறவிடுகிறதா? அப்படி அறவிடப்பட்டாலும் அவை புதிய கணக்கீடுகளுக்கு உட்பட்டதா? 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Elugnajiru said:

அதாவது யாழ் மாநகர சபையானது தனது நிலையில் இருந்து இறங்கிவிட்ட்டதென்று சொல்லலாமா? ஒரு மாநகர சபை என்று சொல்லும்போது சில வரையறைகள் இருக்கின்றது. அப்படியான நிலையில் இப்போது இல்லைபோலதான் தெரிகின்றது. அப்படி என்றால் இனி நகர   சபைதான். 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/12/2023 at 19:28, Elugnajiru said:

ஐலண்ட் அவர்களே,

நாம் பின்னோக்கிப்போகவில்லை தற்போதைய தொழில்நுட்பங்களை எங்கள் சமுதாயம் உள்வாங்கப்பழகவில்லை அல்லது அதற்கான சந்தர்ப்பங்கள் எமக்குக்கிடைக்கவில்லை அல்லது அப்படியான சந்தர்பங்கள் கிடைப்பதற்கு பல்வேறு தடைகளை யாரோ எங்கள் முன்பு ஏற்படுத்தியுள்ளார்கள்.

ஒரு குளத்தை நாம் வெறும் சாதாரண குளமாக நினைத்து ஒதுக்கிவிட்டுப்போகமுடியாது, அந்தப்பிரதேசத்தின் நிலத்தடி நீரில் கூடிய அளவு கடல்நீர் சேராமல் பாதுகாக்கும் பொறிமுறெளக்கான ஒரு அலகு என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

யாழ் ந்நகர்ப்பகுதியில் காணாமல் போன குளங்கள் பல அதில் வண்ணான் குளம் இறுதியாகக் காணாமல் போனது நரியஙுண்டுக்குளம்  முலவைவைச்சந்திக்குளம் தாராக்குளம் இவைகள் முன்னமேயே காணாமல்போய்விட்டன. பொம்மை வெளி காக்கைதீவு ஆகிய இடங்கள் பெருமுதலாளிகளது வணிக நிறுவனங்களின் பண்டகசாலையாக மாறிவிட்டது யாழ்ப்பாண நகர்ப்பகுதியில் சேரும் குப்பகளில் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பொம்மைவெளி தொடங்கி நவாலி நோக்கி காற்றில் பயணப்பட்டு அந்த இடத்தின் சூழலே மாற்றமடைந்துவிட்டது இதற்கு யார் பொறுப்பு? 

வேலிகளாக இருந்த குடியிருப்புக்காணிகளின் எல்லைகள் அனைத்தும் யாழ் மாநகர எல்லைக்குள் மதில்களாக மாறி வெள்ளம் வழிந்தோடாது பெரும் சீரளிவு இதை யார் திருத்தவேண்டும் யாழ் மாநகரசபைதானே? யாழ் குடாநாட்டின் அனைத்துப்பகுதியும் இப்போது சன நெரிசலாம் அல்லாடுகிறது அங்கு காணப்படும் மலசலக்குழிகள் அடுத்தவீட்டின் கிணற்றுக்கு அண்மையாகக் கைகோர்த்து நிற்கிறது அப்போ கிணற்று நீரின் தரம் பற்றிய கேள்வி எழுகிறது?
கோடைகாலத்தில் நிலத்திலிருந்து உறிஞ்சும் நீர மரிகாலத்தில் நிலத்துக்கு ரீசார்ச் செய்யக்கூடிய இலகுவான தொழில் நுட்பத்தை ஏன மாநகரசபை குடியிருப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தவில்லை?

எங்கே ஆரியகுளப்பிரதேசத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்ட மாநகரசபை ஊழியர்கள் சரியாக எட்டு மணி நேரம் தமது கடமையைச் செய்கிறார்களா?

அல்லது மாநகர சபை நிர்வாகம் ஆரியகுளத்தை வருடம்தோறும் எப்படிப்பராமரிப்பது என்பதற்கான ஒரு வரைபுக்கோப்பை வைத்திருக்கிறார்களா?

நல்லூர் திருவிழாகாலத்தில் தற்காலிக சந்தைக்கடைகளுக்காக அறவிடப்படும் பணம் எந்தக்கணக்கில் வருகிறது?

யாழ் மாநகரசபையில் இப்போது பணிபுரியும் துறைசார் வல்லுனர்களது பட்டியல் இருக்குதா? 

மராமத்துக்கான பொறியாளர்களது தராதரம் என்ன?

சோலைவரி எனச்சொல்லப்படும் சொத்துவரியை மாநகரசபை சரியாக அறவிடுகிறதா? அப்படி அறவிடப்பட்டாலும் அவை புதிய கணக்கீடுகளுக்கு உட்பட்டதா? 

எழுஞாயிறு,  நீங்கள் கூறிய விடயங்கள் யுத்த காலத்துக்கு முற்பட்ட, மாநகர சபை இயங்கிய காலத்தில் ஒரளவுக்கேனும் சீராகவே இயங்கின. சோலைவரி, மின்சாரக்கட்டணம், துவிச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்படும் அனுமதி எண் தகடு போன்ற விடயங்களில்  நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகள் பெரியளவில் இருக்கவில்லை. 

அதைவிட மாரகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் நன்னீர் இல்லாத  இடங்களுக்கு பவுணர் மூலம் தண்ணீர் விநியோகமும் சீராக இயங்கியது. அதைவிட மாநகர சபை மேற்பார்வையில் பல இடங்களில் ஆயுர்வேத வைத்தியசாலை, பிரசவவிடுதி போன்றனவும் தொழில்முறை உயர் தரத்தில் இல்லாவிடினும் ஒரளவு சீராக இயங்கியது.  

யுத்தம் தொடங்கிய பின்னர் நிலைமை மாற்றமடைந்து படிப்படியாக  இவ்வாறான தகைமைகளை மாநகரசபை இழந்திருக்கலாம். யுத்தத்தின் கொடூரத்தால் எமது தமிழ் சமூகம் இழந்தவை ஏராளம். அதில் இவ்வாறான விடயங்களும் அடங்கும்

ஆனால் அதை மீண்டும் கட்டி எழுப்புவதில் சில சிரமங்கள் உள்ளன. தற்போது அரச நிர்வாக சீர்கேடு இதற்கு தடையாக உள்ளது. மக்களும் சீர்கேடான நிர்வாக சேவையே எமது  Standard என்று நினைத்து அதற்கு பழக்கப்படுத்தி வாழப் பழகிவிட்டார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணன் முடிந்தவரை நல்லது செய்தார் , ஆனால் இந்த கஜேந்திரகுமார் அணி எல்லாத்தயும் கெடுத்து விட்டது . 

  • கருத்துக்கள உறவுகள்
On 24/12/2023 at 12:29, கிருபன் said:

பராமரிப்பில்லாத ஆரியகுளம்!

திரு. மணிவண்ணன் செய்தவற்றை ஏன் தற்போதுள்ள நகரமுதல்வரது நிர்வாகம் பராமரிக்காதுள்ளது.இதிலும் அரசியல் பேதம் பார்க்கப்படுகிறது. நிகழ்கால முதல்வரான திரு.ஆர்னோல்டிற்கு கண் இல்லையா? அல்லது யாரோ ஒருவரது பதவிக்காலத்தில் செய்ததை அப்படியே அழியவிடும் நோக்கமாக இருக்காதா?இதற்கும் கயே குழுவுக்கும் தற்போது என்ன இழுபறி.
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

மாநகரசபை, நகர சபை, பிரதேச சபை, மாகாணசபை நிர்வாகங்களுக்கு ஆட்களை தெரிவு செய்யும. போது நிர்வாகத்திறன், மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகள், அபிவிருத்தி ஆகியவற்றில்ஆர்வம்  உடையவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து  மக்கள் எதிர்காலத்தில் அவர்களை  தெரிவு செய்யவேண்டும்.

  நடைமுறையில் பார்ததால் அதி தீவிர தமிழ் தேசியம் பேசுவோர்  திறமை  அற்றவர்களாகவும் தமது திறமையீனத்தை மறைக்க தமிழ் தேசியத்தை உபயோகிப்பவர்களாகவும் உள்ளதால் அவர்களை இவ்வாறான உள்ளூர் நிர்வாகத்துக்கு தெரிவு  செய்வதை மக்கள் இயன்றளவுக்கு தவிர்கக வேண்டும்.  அதன் மூலம் உள்ளூர் நிர்வாக சீர்கேடுகளை ஒரளவுக்கவது குறைக்க முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

மிக முக்கியமாக நகர சபைகள், மாகாண சபை இரண்டிற்கும் செயல்பாட்டில் track record இருப்போரைத் தெரிவு செய்ய வேண்டும். இதே போலவே வட மாகாணசபையும் கூடித் தேனீரும் வடையும் சாப்பிட்டு விட்டுக் கலைந்து போய், சுய பதவிகளுக்கான அரசியலுக்கு உழைத்த பாடமும் எங்களுக்கு ஒரு எச்சரிக்கை.

இன்னொரு பக்கம் நகர சுத்தத்தில் மக்களின் பங்களிப்பு எங்கே? உதாரணமாக, நெகிழிக் கழிவுகளை பொறுப்பாக எறியவும், சேமிக்கவும் வேண்டும் என்ற அறிவு யாழ்ப்பாண நகர வாசிகளுக்கு இல்லையென்றால், அவர்கள் பின் தங்கியிருக்கிறார்கள் என்று தான் அர்த்தம்.  

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழன்பன் said:

மணிவண்ணன் முடிந்தவரை நல்லது செய்தார் , ஆனால் இந்த கஜேந்திரகுமார் அணி எல்லாத்தயும் கெடுத்து விட்டது . 

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பதினைந்தாம் வட்டாரத்து மாநகரசபை உறுப்பினர் இவர் யாழ் அம்மன் வீதியிலுள்ள விடுதி ஒன்றில் பியூட்டி பார்லர் நடாத்தி அங்கு தென்னிலங்கை யுவதிகளைக் கொண்டுவந்து விபச்சாரம் செய்த்தாகக் குற்றம் சாட்டப்பட்டு பின்பு அவர் மறுப்பு அறிக்கை விட்டவர். அவர் அண்மையில் சி வி கே சிவஞானம் அவர்களது தலைமையில் நல்லூர் சட்டநாதர் கோவிலடியில் உள்ள மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நல்லூர் கிளை நிர்வாகக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார் சிவிகே சிவஞானம் அவர்கள் முன்னர் அல்பிரட் துரையப்பா காலத்தில் மாநகரசபைக் ஆணையாளராகக் கடமையாற்றியவர் இவரது திருமணை தற்போது நல்லூரடியில் உள்ள யாழ் மாநகரசபை மண்டபத்தில் நடந்தது. அப்போது அது கலியான மண்டபம். 

இப்படியான திருகுதாளக்காரர்களை கூட்டமைப்பின் சிவஞானத்தார் உடன் கொண்டு திரிகிறார். ஆனால் சிவஞானத்தார் ஒரு மாவீரரின் தந்தையார் ஆவார்.

ஐலண்ட் யுத்தகாலத்தில் எல்லாம் சீரளிஞ்சு போச்சுது எனச்சொல்லுறியள் யுத்தம் முடிந்து இப்போ பதின்நாஙு வருடத்தை அண்மிக்கிறது அங்கு சிறிலங்கா ஜனநாயகக் குடியரசின் அரசியலமைப்புச்சட்டத்தின் உள்ளூராட்சி சபைகளுக்கான அரசியல் சட்டங்களின்படி மாநகரசபை நிர்வாகம் நடைபெறவேண்டும் அதில் வரி அறவீடுகள் மற்றும் மராமத்துப்பணிகள் தவிர எதிர்காலத்தில் ஏற்படும் குடிசனக்கொள்ளளவுக்கு ஏற்றதுபோல ஒரு திட்டமிடல் அறிக்கை ஆகியவற்றைத் திறணாளர்கள்மூலம் தயாரித்து அதனை உள்ளூராட்சி அமைச்சுக்கு அனுப்பவேண்டும் 

சும்மா மணிவண்ணன் சுமந்திரன் கஜேந்திரகுமார் என அலப்பறை செய்யவேண்டாம் 

இது சாதாரணமான சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட உள்ளூராட்சி நிர்வாகம் இதனுடன் கொண்டுவந்துதமிழ் தேசியத்தை உள்நுளைக்கவேண்டாம்.

கடந்தமுறை நான் யாழ் சென்றபோது ஒரு காணொளியை எனது யூ ரியூப் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தேன் அதில் கோட்டை முனியப்பர் கோவிலை அண்டியுள்ள முற்றவெளிப்பகுதியும் யாழ் வீரசிங்கம் மணடபத்துக்கு முன்னால் உள்ள தமிழாராச்சி நினைவிடமும் எப்படிக்கோரமாகக் காட்சியளிக்குது என காட்டியிருந்தேன் அதற்கு ஒரு வாரத்துக்குப் பின்பு மணிவண்ணனும் அவரது பரிவாரங்களும் ஒப்புக்குச் சப்பாணியாக சிறிது துப்பரவு வேலை செய்துவிட்டு அப்படியே போட்டது போட்டபடி விட்டாச்சு.

ஒரு மாநகரத்தைப் பராமரிப்பது என்பது இன்று கூட்டிக்கழுவிவிட்டு அடுத்த ஆறு மாதத்துக்கு மறப்பது இல்லை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து செப்பனிடவேண்டும்.

யாழ் மாநகரசபையின் "கோல்டன் எரா" என்பது அல்பிரட் துரையப்பா காலமாகும் அவர் தமிழின விரோதியாகட்டும் இல்லை வேறு எதுவாகவும் இருக்கட்டும் அந்த வேளையில் யாழ்ப்பாண நகர்ப்பகுதிக்கு அவர் செய்த சேவை என்பது சொல்லி மாளாது அவரது காலத்திலேயே பல இடங்களில் ஆயுர்வேதச் சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டது.இப்போது யாழ் வைத்திய சாலை சுற்றுச்சுவருக்கு அண்மித்த நடைபாதை மேடை அப்போதுதான் அமைக்கப்பட்டது.

அப்போது இருந்ததைவிட இப்போது வாகனப்பெருக்கம் அதிகரித்துவிட்டது ஆனால் அப்போதே பாட்டா சந்திக்கு அண்மிதத கஸ்தூரியார் வீதி வின்ஸர் தெயேட்டர் வரைக்கும் ஒற்றைவழிப்பாதையாக மாற்றப்பட்டது. ஆனால் இப்போது அப்படியான ஒழுங்குபடுத்தல் எதுவுமே  இல்லை

உதாரணமாக 

யாழ் வைத்தியசாலை வீதி மற்றும் மின்சார நிலையவீதி ஆகியவை கட்டாயமாக ஒருவழிப்பாதையாக மாற்றமடையவேண்டும்  யாழ் சிற்றூர்தி நிலையம் புகையிரத நிலையத்துக்குப்பின்னால் உள்ள ஸ்ரான்லிவீதிப்பக்கத்தில் இருக்கும் இரயில்வே காணிக்குள் அமைய வேண்டும் தவிர தற்போதைய பேரூர்து நிலையம் வாகனம் தரித்து நிற்காது உடனடியாகவே புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டு குறுகிய நேர நிறுத்தத்துக்குப் பின்பான புறப்படுகயை மேற்கொள்ளவேண்டும். 

தவிர அங்கு காணப்படும் கழிவுநீர் வடிகால்கள் யாவும் மூள் ஒழுங்கமைக்கப்படல்வேண்டும். இப்படியாக பல வேண்டும்களை உள்ளடக்கி யாழ் மாநகரசைப் பிரதேசம் காத்துக்கிடகுது.

இதில் தமிழ் தேசியம் தமிழர் உரிமை யுத்தம் இவைகளைப் பற்றிப்பேச என்ன கிடக்குது.

தேவை தமிழர்கள் தலைநிமிர ஒரு சிறந்த நிர்வாகம்.

ஆனால் எமது பிரதிநிதிகள் அனைவரும் குறுகிய மனம் படைத்த சிறு குள்ளர்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.