Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   30 DEC, 2023 | 12:31 PM

image
 

இஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்க சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

இனப்படுகொலை தொடர்பான சாசனத்தின் கீழ் தென்னாபிரிக்கா வழக்கு தாக்கல் செய்துள்ளதை ஐசிஜே உறுதி செய்துள்ளது.

இனப்படுகொலை இடம்பெறுவதை தடுக்கவேண்டிய கடப்பாடுள்ளதாக தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது. 

காசாமீதான இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக சிக்குப்பட்டுள்ள மக்களின் நிலைமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள தென்னாபிரிக்கா கண்மூடித்தனமான படைபல பிரயோகமும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றுதலும் இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளது.

மனித குலத்திற்கு எதிரான குற்றம் யுத்த குற்றங்கள் போன்றவை இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகின்றன இனப்படுகொலை அல்லது அதனுடன் தொடர்புபட்ட குற்றங்கள் என தெரிவிக்ககூடிய சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் அறிக்கைகள் வெளியாகின்றன என தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளது.

https://www.virakesari.lk/article/172754

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிற்கு எதிரான இனப்படுகொலை வழக்கு - ஹேக் சர்வதேச நீதிமன்றில் இன்று ஆரம்பம்

Published By: RAJEEBAN  11 JAN, 2024 | 12:09 PM

image
 

காசாவில் யுத்தம் தொடர்ந்தும் இடம்பெறும் அதேவேளை இஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்கா தாக்கல் செய்துள்ள இனப்படுகொலை வழக்கினை இன்று சர்வதேச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.

hague_court.jpg

 

இஸ்ரேலிற்கு எதிரான ஹமாசின் தாக்குதல் 1948 சமவாயத்தினை மீறுகின்றது என தெரிவித்து தென்னாபிரிக்க தாக்கல் செய்துள்ள குற்றச்சாட்டு குறித்தே சர்வதேச நீதிமன்றம் இன்று ஆராயவுள்ளது.

ஹமாஸ் கற்பழிப்பாளர் ஆட்சிக்கு தென்னாபிரிக்கா அரசாங்கம் சட்டபூர்வ அரசியல் பாதுகாப்பை வழங்குவதால் தென்னாபிரிக்காவின் அபத்தமான இரத்த அவதூறுகளை களைவதற்காக சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்;துள்ளது.

காசாமீதான இராணுவநடவடிக்கையை இஸ்ரேல் இடைநிறுத்தவேண்டும் என்பதற்கான அவசரநடவடிக்கைகள் அவசியம் என தென்னாபிரிக்கா விடுத்துள்ள வேண்டுகோள் குறித்தே சர்வதே நீதிமன்றம் விசேடமாக ஆராயவுள்ளது.

தென்னாபிரிக்கா தாக்கல் செய்துள்ள வழக்கிற்கு கொலம்பியா பிரேசில் பாக்கிஸ்தான் உட்பட வேறு சில நாடுகள் ஆதரவளித்துள்ளன

ஹமாசின் ஒக்டோபர்ஏழாம் திகதி தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல்  ஆரம்பித்துள்ள இராணுவ நடவடிக்கைகள் பேரழிவை ஏற்படுத்திய நிலையில் பலவாரங்களாக தொடர்கின்ற நிலையிலேயே தென்னாபிரிக்காவின் குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச நீதிமன்றம் இன்று விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இஸ்ரேல் 23000க்கும் அதிகமான பொதுமக்களை கொலை செய்துள்ளது என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டவர்களில் 70 வீதமானவர்கள் பெண்கள் குழந்தைகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

காசாவின் சனத்தொகையில் 85 வீதமானவர்கள் -1.9 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என பாலஸ்தீனியர்களிற்கான ஐநாவின் நிவாரண முகவர்  அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆயிரகக்கணக்கான கட்டிடங்கள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நீதிமன்றத்திற்கான 84 பக்க ஆவணத்தில் தென்னாபிரிக்காவினால் முறைப்பாடு செய்யப்பட்ட இஸ்ரேலின் நடவடிக்கைகள் இனப்படுகொலை தன்மையை கொண்டவை - இஸ்ரேலின் நடவடிக்கைகள் பாலஸ்தீன தேசிய இனமற்றும் இனக்குழுவின் கணிசமான பகுதியை அழிப்பதை நோக்கமாக கொண்டுள்ளன என தென்னாபிரிக்க தெரிவித்துள்ளது.

gaza_1.jpg

இனப்படுகொலை வழக்குகள் நிரூப்பிப்பதற்கு கடினமானவை - பல காலம் நீடிக்க கூடியவை எனினும் சர்வதேச நீதிமன்றம்  தற்காலிக நடவடிக்கைகளை அறிவிக்கவேண்டும் என தென்னாபிரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இஸ்ரேல் காசாவில் பொதுமக்களை  கொல்வதையும் அவர்களிற்கு கடுமையான மன மற்றும் உடல் ரீதியாக தீங்கு விளைவிப்பதையும் நிறுத்தவேண்டும் என சர்வதேச நீதிமன்றம்  வேண்டுகோள் விடுக்கவேண்டும் என தென்னாபிரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

https://www.virakesari.lk/article/173672

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு ஒரு நீதி, ரஸ்யாவுக்கு ஒரு நீதி, இஸ்ரேலுக்கு ஒரு நீதி என்றாகிவிட்டது. 

சர்வதேச நீதிமன்றம் பக்கச்சார்பான ஒரு அமைப்பு என நிரூபணமாகி பலகாலம் ஆகிவிட்டது. 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

First day of ICJ hearings in South Africa's genocide case against Israel in Gaza

 

  • கருத்துக்கள உறவுகள்

போத்தா அரசை ஆதரித்த இஸ்ரேலை பழி வாங்கவேண்டுமென்று கொதியில் இருந்த ஆப்பிரிக்கனுக்கு நல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்குது. அத்துடன் நிறையவே அராபியர்கள் பணமும் கிடைக்கிறது. பொறுத்திருந்து பார்ப்பம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் இனப்படுகொலை நோக்கத்துடன் செயற்படுகின்றது - சர்வதேச நீதிமன்றில் தென்னாபிரிக்கா வாதம்

Published By: RAJEEBAN  11 JAN, 2024 | 05:01 PM

image

இஸ்ரேல் இனப்படுகொலை நோக்கத்துடன் செயற்படுகின்றது என தென்னாபிரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

இஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்கா தாக்கல் செய்த இனப்படுகொலை வழக்குவிசாரணை இன்று ஹேக்கின் சர்வதேச நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இதன் போது தென்னாபிரிக்கா சார்பில் வாதத்தை முன்வைத்த தென்னாபிரிக்காவின் உயர்நீதிமன்ற சட்டத்தரணி அடிலா ஹாசிம் இஸ்ரேல் திட்டமிட்ட அடிப்படையில் செயற்படுகின்றது அதன் நோக்கங்கள் இனப்படுகொலையை வெளிப்படுத்துகின்றன என தெரிவித்துள்ளார்.

icj1.jpg

இஸ்ரேல் காசாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்களை குறிவைத்து ஆயுதங்களை பயன்படுத்திய பாரியளவிலான படுகொலைகளில் அழிவுகளில் ஈடுபடுகின்றது மேலும் பொதுமக்களை சினைப்பர் தாக்குதல் மூலம் இலக்குவைக்கின்றது.

பாலஸ்தீனியர்களிற்கான பாதுகாப்பு வலயங்களை அறிவித்த பின்னர் அவற்றின் மீது குண்டுவீச்சுதாக்குதலை மேற்கொள்கின்றது.

காசாவில் பாலஸ்தீனியர்களிற்கான அத்தியாவசிய தேவைகளான உணவு நீர் சுகாதாரம் எரிபொருள் தொடர்பாடல் போன்றவற்றை மறுக்கின்றது 

சமூக கட்டமைப்புகளை வீடுகளை பாடசாலைகளை மசூதிகளை தேவாலயங்களை மருத்துவமனைகளை அழிக்கின்றது.

பெருமளவானவர்களை கொலை செய்கின்றது கடும் காயங்களிற்குட்படுத்துகின்றது பெருமளவு சிறுவர்களை அனாதைகளாக்கியுள்ளது.

இனப்படுகொலைகள் ஒரு போதும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுவதில்லை, ஆனால் இந்த நீதிமன்றத்திற்கு 13 வார ஆதாரங்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/173718

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசா யுத்தம் : இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிடலாம்

Published By: RAJEEBAN   26 JAN, 2024 | 10:59 AM

image

காசாவில் இஸ்ரேல் யுத்த குற்றங்களில் ஈடுபடுவதாக தெரிவித்து தென்ஆபிரிக்கா தாக்கல் செய்துள்ள மனு மீதான தனது தீர்ப்பை சர்வதேச நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது.

காசாவில் இஸ்ரேல் இராணுவநடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என ஐக்கியநாடுகளின் நீதிமன்றம் உத்தரவிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்கா தாக்கல் செய்த மனுதொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வேளை இரண்டு தரப்பினரும் தமது தரப்பு வாதங்களை முன்வைத்திருந்தனர்.

சர்வதேசநீதிமன்றத்தின் தீர்ப்பினை நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியம்  இல்லை என்ற போதிலும் இந்த தீர்ப்பு அரசியல்முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படலாம்.

பாலஸ்தீனியர்களிற்கு ஆதரவாக குரல்கொடுத்துவரும் தென்னாபிரிக்கா இஸ்ரேல் தனது இராணுவநடவடிக்கைகளை இடைநிறுத்தவேண்டும் என்பது உட்பட 9 இடைக்கால உத்தரவுகளை நீதிமன்றம்பிறப்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டிற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

https://www.virakesari.lk/article/174821

  • கருத்துக்கள உறவுகள்

பொது மக்கள் கொல்லப்படுவதை நிறுத்தும்படி சர்வதேச நீதிமன்றம் கோரியிருக்கிற நிலையில் , யுத்தத்தை நிறுத்தும்படி எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை என செய்திகள் கூறுகின்றன. எனவே யுத்தம் தொடர்வதட்கான நிலைமையே காணப்படுகின்றது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் இனப்படுகொலை இடம்பெறுகின்றதா? சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ள முக்கிய தீர்ப்பு என்ன?

Published By: RAJEEBAN   27 JAN, 2024 | 01:05 PM

image

காசாவில் இனப்படுகொலைகள் இடம்பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேல் இனப்படுகொலைகளில் ஈடுபடுவதாக தெரிவித்து தென்னாபிரிக்கா தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த சர்வதேச நீதிமன்றம் தனது உத்தரவினை வெளியிட்டுள்ளது.

இனப்படுகொலை என்பதற்குள் அடங்ககூடிய அனைத்துவகையான நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுக்கவேண்டும் என நீதிபதி ஜோன்டொனோகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய படையினர் இனப்படுகொலைகள் என கருதப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இஸ்ரேல் தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

எனினும் தென்னாபிரிக்கா வேண்டுகோள் விடுத்தபடி இஸ்ரேல் காசாவில் தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடவில்லை.

இஸ்ரேலின் நடவடிக்கைகள் தொடர்பிலான நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு இதுவல்ல என்ற போதிலும் பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலை ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என தாங்கள் கருதுவதை நீதிபதிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/174913

வெறும் கண்டனங்களைப் பதிவு செய்வதுடன் நிறுத்தாமல் செயலில் இறங்கிய தென்னாபிரிக்கா பாராட்டப்பட வேண்டியது. தாக்குதல்களைச் சர்வதேச நீதிமன்றத்தால் நிறுத்த முடியாவிட்டாலும் அதன் தீர்ப்பு ஒரு தடைக்கல்லாக இருக்கும். 

சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆய்வதற்காக வரும் புதன் கிழமை  ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் கூடவுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆய்வதற்காக வரும் புதன் கிழமை  ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் கூடவுள்ளது.

இது எத்தனையாவது பாதுகாப்பு சபை கூடடம் என்று சொல்ல முடியுமா? 😜

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.