Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

NATO நாடுகளின் விமானங்களையும் ஆயுதங்களையும் பாவித்துத்தானே Saudi Arabia இத்தனை ஆண்டுகளும் யேமனைத் தாக்கியது? 

😏

  • கருத்துக்கள உறவுகள்
On 19/1/2024 at 12:46, ஏராளன் said:

செங்கடல் ஊடாக பயணிக்கும் சீன ரஸ்ய கப்பல்களிற்கு எந்த ஆபத்தும் ஏற்படாது - ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்

Published By: RAJEEBAN   19 JAN, 2024 | 11:46 AM

image

செங்கடல் ஊடாக சீன, ரஸ்ய கப்பல்கள் பாதுகாப்பாக பயணிக்கலாம் அந்த நாட்டு கப்பல்களை தாக்கப்போவதில்லை என ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

செங்கடலில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக சரக்கு கப்பல்களை தாக்கிவரும் நிலையிலேயே சீன ரஸ்ய கப்பல்கள் தாக்கப்படாது என்ற உத்தரவாதம் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் உட்பட சில நாடுகளுடன் தொடர்புபட்ட கப்பல்களை தவிர ஏனைய நாடுகளின் கப்பல்களிற்கு ஆபத்தில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ரஸ்யா, சீனா உட்பட ஏனைய நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியில் பயணிப்பதால் ஆபத்து ஏதுவும் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/174310

அப்படி என்றால் இனி இஸ்ரேலுக்குக்கான பொருட்களை சீன , ருசியா கப்பல்களில் கொண்டு செல்லலாம். 

9 hours ago, Kapithan said:

NATO நாடுகளின் விமானங்களையும் ஆயுதங்களையும் பாவித்துத்தானே Saudi Arabia இத்தனை ஆண்டுகளும் யேமனைத் தாக்கியது? 

😏

ஆயுதம் ஒன்றாக இருந்தாலும் சவூதி தாக்குவதட்கும் அமெரிக்கா , பிரிட்டன் தாக்குவதட்கும் வித்தியாசம் இருக்குது. 😛

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Cruso said:

 

ஆயுதம் ஒன்றாக இருந்தாலும் சவூதி தாக்குவதட்கும் அமெரிக்கா , பிரிட்டன் தாக்குவதட்கும் வித்தியாசம் இருக்குது. 😛

எப்படி,......? 

சவூதியின் குண்டு டும் என்று வெடிக்கும் 

US UK யின் குண்டுகள் டம் என்று வெடிக்கும் என்கிறீர்களா? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

எப்படி,......? 

சவூதியின் குண்டு டும் என்று வெடிக்கும் 

US UK யின் குண்டுகள் டம் என்று வெடிக்கும் என்கிறீர்களா? 

🤣

அப்படி இல்லை. அதை எப்படி எங்கே பாவிக்கிறார்கள் என்பதை பொறுத்தது. அதுக்கெல்லாம் தலைக்குள்ளே  அது வேணும். இல்லாவிட்ட்தால் பிரயோசனம் இல்லை. 😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

அப்படி இல்லை. அதை எப்படி எங்கே பாவிக்கிறார்கள் என்பதை பொறுத்தது. அதுக்கெல்லாம் தலைக்குள்ளே  அது வேணும். இல்லாவிட்ட்தால் பிரயோசனம் இல்லை. 😜

சவூதி க்கு தலைக்குள் அது இல்லை என்பது உறுதி என்கிறீர்கள்  🤣

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிரான நடவடிக்கை தொடர்கின்றது – அமெரிக்காவும் பிரிட்டனும் மீண்டும் தாக்குதல்

Published By: RAJEEBAN  04 FEB, 2024 | 08:56 AM

image

யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது சனிக்கிழமை அமெரிக்காவும் பிரி;ட்டனும் மீண்டும் தாக்குதலை மேற்கொண்டதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஹமாஸ் யுத்தத்திற்கு பதில்நடவடிக்கையாக செங்கடலில் அமெரிக்காவின் இலக்குகளை தாக்கிவரும் ஈரான் சார்பு குழுவை மேலும் பலவீனமாக்குவதற்காக இந்த தாக்குதலை அமெரிக்காவும் பிரிட்டனும் மேற்கொண்டுள்ளன.

போர்க்கப்பல்களையும் விமானங்களையும் பயன்படுத்தி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் கடற்படை கலங்கள் மீதான தங்களின் சட்டவிரோத தாக்குதல்களை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் நிறுத்தாவிட்டால் அவர்கள் தொடர்ந்தும் விளைவுகளை எதிர்கொள்வார்கள் என்ற செய்தியை தெரிவிப்பதற்காகவே இந்த தாக்குதல் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார்.

13 பகுதிகளில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் தாக்கப்பட்டுள்ளன அமெரிக்காவின் போர்க்கப்பலில் இருந்து புறப்பட்ட எவ்ஏ 18 போர் விமானங்களும்,பிரிட்டனின் டைபூன் எவ்ஜிஆர்4 ர விமானங்களும் தாக்குதலை மேற்கொண்ட அதேவேளை அமெரிக்காவின் போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை தாக்குதலும் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக மேற்கொண்டுள்ள மூன்றாவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/175493

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொது பொருளாதாரத்தில் வந்து  நிற்கிறது.

ஈரானின் தொழில்நுட்ப வளர்ச்சி, மேற்கின் பாரிய பொருட்செலவில் ஆக்கப்படும்   ஆயுதங்களுக்கு , சற்றே குறைவான விளைவு , அனல் பொட்செலவு 50-100 மடங்கால் குறைந்த விலையில் ($10 - 20 ஆயிரம் , மேற்றுகின் செலவு $மில்லியன்),  பெருந்தொகையில் பாவிக்கலாம் என்ற நிலையை உருவாக்கி உள்ளது.

(இது ரஸ்சியா, உக்கிரைன் சண்டையிலும் நடக்கிறது)

மற்றது, ஹௌதிகள் எல்லா தாக்குதலும் சரியாக நடக்க வேண்டும் என்பது அல்ல.  

அவ்வப்போது தாக்குதலில்  கப்பல்கள் அகப்பட்டால், இந்த us, uk  தாக்குதல் எதிர்பார்க்கப்ட்ட விளைவான காப்புறுதியை குறைத்தல் , கப்பல் போக்குவரத்து பெரும்பாலும் நடப்பது போன்றவற்றை தராது.

 

அதனால், ஹௌதிகளின் தாக்குதல் தொடர்வதத்திற்கே வாய்ப்புகள் கூட 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

இப்பொது பொருளாதாரத்தில் வந்து  நிற்கிறது.

ஈரானின் தொழில்நுட்ப வளர்ச்சி, மேற்கின் பாரிய பொருட்செலவில் ஆக்கப்படும்   ஆயுதங்களுக்கு , சற்றே குறைவான விளைவு , அனல் பொட்செலவு 50-100 மடங்கால் குறைந்த விலையில் ($10 - 20 ஆயிரம் , மேற்றுகின் செலவு $மில்லியன்),  பெருந்தொகையில் பாவிக்கலாம் என்ற நிலையை உருவாக்கி உள்ளது.

(இது ரஸ்சியா, உக்கிரைன் சண்டையிலும் நடக்கிறது)

மற்றது, ஹௌதிகள் எல்லா தாக்குதலும் சரியாக நடக்க வேண்டும் என்பது அல்ல.  

அவ்வப்போது தாக்குதலில்  கப்பல்கள் அகப்பட்டால், இந்த us, uk  தாக்குதல் எதிர்பார்க்கப்ட்ட விளைவான காப்புறுதியை குறைத்தல் , கப்பல் போக்குவரத்து பெரும்பாலும் நடப்பது போன்றவற்றை தராது.

 

அதனால், ஹௌதிகளின் தாக்குதல் தொடர்வதத்திற்கே வாய்ப்புகள் கூட 

ஈரானையும் லெபனானின் ஹிஸ்புல்லாஹ் வையும்  இழுத்து சண்டையைப் பெரிதாக்கி அவர்களை அழித்து அடுத்த 50 வருடங்களுக்கு அவர்களை பின்னோக்கி வைத்திருப்பதுதான் இவர்களின் உண்மையான  நோக்கம்.

ஆனால் அது தற்போதைக்குச் சாத்தியம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா  ,அமெரிக்கா  எத்தனை தாக்குதலை நடாத்தினாலும் செங்கடலால் இஸ்ரேலுக்கான கப்பல் பயணம் சாத்தியமில்லை போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

பிரித்தானியா  ,அமெரிக்கா  எத்தனை தாக்குதலை நடாத்தினாலும் செங்கடலால் இஸ்ரேலுக்கான கப்பல் பயணம் சாத்தியமில்லை போலுள்ளது.

இஸ்ரேல் மட்டுமில்லை. நிறைய நாடுகள் பதிக்கப்பட்டுள்ளன. அதாவது சூயஸ் கால்வாயுடான கப்பல் பயணம் 40 % ஆல் குறைவடைந்துள்ளது. அதாவது இஸ்ரேல் அல்லாத மற்றைய நாடுகளுக்கான பயணங்களும் தடைபட்டுள்ளன. எனவே இது மற்றைய நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் நடவடிக்கை. எனவே இது விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும். அன்கொன்றும் , இன்கொன்றுமாக நடந்தாலும் முடிவு உண்டாகும். 

  • கருத்துக்கள உறவுகள்


 

 

ஆறு அமெரிக்க ஆதரவு குர்தீஸ் படையினர் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செங்கடலில் இன்றும் ட்ரோன் மூலம் சரக்கு கப்பல் மீது தாக்குதல்

தெற்கு செங்கடல் வழியாக இன்று காலையில் சென்ற கப்பல் மீது ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காசா பகுதியில் ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்திய போரையொட்டி கப்பல்களை குறிவைத்து தாக்கப்பட்டு வரும் நிலையில், ஏமனின் ஹொடைடாவிற்கு மேற்கே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

இந்த தாக்குதலில் கப்பலின் ஜன்னல்களுக்கு சிறிய சேதம் ஏற்பட்டு உள்ளது என இங்கிலாந்து இராணுவ கடல்சார் அமைப்பு தெரிவித்தது.

Capture-4-1.jpg

தாக்குதல் நடந்த கப்பல் இங்கிலாந்து தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்குக் கப்பல் ஆகும். பார்படோஸ் கொடியுடன் சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு முன்னதாக கப்பல் அருகே படகு ஒன்று சென்றுள்ளது. இதில் கப்பலில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கப்பலில் சிறிய சேதம் ஏற்பட்டு உள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்த குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. ஏமனில் உள்ள ஈரானிய ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

https://thinakkural.lk/article/290800

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும் இஸ்ரேலிய அமெரிக்க கப்பல்களை தாக்கியுள்ளோம் - ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தகவல்

Published By: RAJEEBAN   17 MAR, 2024 | 12:40 PM

image
 

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும் இஸ்ரேலிய அமெரிக்க கப்பல்களை இலக்குவைத்துள்ளதாக ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும் இஸ்ரேலிய அமெரிக்க கப்பல்களை இலக்குவைத்து ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது சர்வதேச வர்த்தகத்தின் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விடயமாக மாறாலாம்.

செங்கடலில் மேற்கொண்டுவரும் தாக்குதலிற்கு அப்பால் இந்து சமுத்திரத்திலும் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர் என வீடியோ செய்தியொன்றில்தெரிவித்துள்ள அதன் பேச்சாளர் மூன்று இஸ்ரேலிய அமெரிக்க கப்பல்களை இலக்குவைத்து ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானதாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

இந்து சமுத்திர தாக்குதல் குறித்து அமெரிக்க அதிகாரிகள் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை இந்த தகவல் உண்மையானதாக காணப்படும் பட்சத்தில் சர்வதேச வர்த்தகம் இதன் காரணமாக மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும்.

ship_houthi1.jpg

செங்கடலில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை தொடர்ந்து கப்பல்கட்டணங்கள் அதிகரித்துள்ளன,சில கப்பல் நிறுவனங்கள் தங்கள் பாதைகளை மாற்றியுள்ளன.இதன் காரணமாக கடற்பயண நேரம் அதிகரித்துள்ளது.

ஹெளத்திகளின் தாக்குதல்கள் காரணமாக உலகின் மிகவும் மும்முரமான கடற்பாதை மிகமோசமாக பாதிக்கப்படலாம் என்ற கரிசனைகள் எழுந்துள்ளன.

எனினும் செங்கடல் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து சந்தைகளில் அச்சநிலை குறைவடைந்துள்ளதுடன் தாமதங்கள் குறித்த அச்சங்களும் நீங்கியுள்ளன.

எனினும் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் இந்து சமுத்திர பகுதியில் தாக்குதல்களை மேற்கொண்டமை உண்மை என்றால் விலைகள் மீண்டும் அதிகரிக்கலாம், கப்பல்களை பாதுகாப்பதற்காக அந்த பகுதிகடற்படையினருக்கு உதவிகளை வழங்குமாறு வேண்டுகோள்கள் வெளியாகலாம்.

https://www.virakesari.lk/article/178932

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.