Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் 21 வயதான இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஆற்றிய உரை தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

ஹக்கா (haka) எனப்படும் பாரம்பரிய வெற்றி முழக்கத்துடன் அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

Hana-Rawhiti Maipi-Clarke எனும் குறித்த பெண் கடந்த 170 வருடங்களில் நியூசிலாந்து வரலாற்றில் பதிவான முதல் இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.

நியூசிலாந்தின் ஆக்லேண்ட் மற்றும் ஹெமில்டனுக்கு இடையில் உள்ள Huntly எனும் சிறிய நகரத்தை சேர்ந்த இவர், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

மாவோரி பழங்குடி இனத்தை சேர்ந்த இவர் நியூசிலாந்தின் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறார்.

இந்நிலையில், Maipi-Clarke கடந்த மாதத்தில் பாராளுமன்றத்தில் பாரம்பரிய முறையில், ‘ஹாக்கா’ அல்லது ‘போர் முழக்கம்’ (‘haka’ or ‘war cry’ ) செய்து தனது மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்.

அந்த வாக்குறுதியில், “உங்களுக்காக இறப்பேன்… ஆனால், உங்களுக்காக வாழவும் செய்வேன்” என அவர் கூறியதாக New Zealand Herald செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நியூசிலாந்தை பொறுத்தவரை ஹக்கா நடனம், நியூசிலாந்து மாவோரி பழங்குடியினரின் ஆதி பழக்கங்களில் ஒன்று. போர், வெற்றி, ஒற்றுமை, இன குழுவின் பெருமை என எல்லாவற்றையும் சொல்ல அவர்கள் இதனை பயன்படுத்துகின்றனர்.

https://thinakkural.lk/article/287227

  • கருத்துக்கள உறவுகள்

rajinikanth-energetic.gif

சும்மா அதிருதில்ல .......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம், மிகவும் உணர்ச்சிகரமாகத்தான் உள்ளது. பேசும் மொழி புரியாவிட்டாலும் அவரது உணர்ச்சிகள் மயிர் கூச்செரியச்செய்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, நியாயம் said:

ஆமாம், மிகவும் உணர்ச்சிகரமாகத்தான் உள்ளது. பேசும் மொழி புரியாவிட்டாலும் அவரது உணர்ச்சிகள் மயிர் கூச்செரியச்செய்கின்றது. 

கோவிச்சுக்காதீங்க  நியாயம்....இந்த இளம்பொண்ணு...அப்புறமா.. சனாதிபதியுடன் சேர்ந்து சிரிச்சபடி செல்பி எடுக்கமாட்டாவா?.......சும்மா ஒரு🙃

Edited by alvayan
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, alvayan said:

கோவிச்சுக்காதீங்க  நியாயம்....இந்த இளம்பொண்ணு...அப்புறமா.. சனாதிபதியுடன் சேர்ந்து சிச்சபடி செல்பி எடுக்கமாட்டாவா?.......சும்மா ஒரு🙃

எல்லாவற்றையும் கலக்கக்கூடாது.  நூறு வீதம் பரிசுத்தம் என்பது முழுப்பொய். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

கோவிச்சுக்காதீங்க  நியாயம்....இந்த இளம்பொண்ணு...அப்புறமா.. சனாதிபதியுடன் சேர்ந்து சிரிச்சபடி செல்பி எடுக்கமாட்டாவா?.......சும்மா ஒரு🙃

எனக்கு நியூசிலாந்து பற்றி விரிவாக தெரியாதபடியால் உங்கள் வினாவுக்குரிய பதில் தெரியவில்லை. சில தடவைகள் அங்கு சென்றுள்ளேன். பல விடயங்களை நேரில் பார்க்க அதிசயமாகத்தான் தோன்றின. எனக்கு முன்பு தெரிந்த நியூசிலாந்து பற்றிய விபரங்கள் அதன் தேசிய கிரிக்கெட் அணியுடன் மட்டுப்படுத்தப்பட்டது. 

இந்த காணொளியையும் ஒருக்கால் பாருங்கள். எனக்கு நியூசிலாந்து பெண்ணின் காணொளி பார்த்தபோது இந்தப்பெண் நினைவில் வந்தார். ஒரு காலத்தில் எல்லார் தலையிலும் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டவர் பின்னர் தூக்கி எறியப்பட்டார் (தற்போதைய பேச்சு வழக்கில் கழுவி கழுவி ஊத்தினார்கள்).  

https://youtu.be/K9yqU37MhT4?si=1u6izceSgWKVMWn0

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, நியாயம் said:

ராதிகா....மிகவும் நல்ல ஆளூமைமிக்க பெண்....சிலரின் எடுப்பார் கைப்பிள்ளை போலாகி தன் சுயத்தை இழந்துவிட்டார்...கனடாவில் நான் மதிப்பு வைத்திருந்த பெண்...  நம்மட ஆட்களாலேயே தோற்கடிக்கப்பட்டார்...நீங்கள்  குறிப்பிட்டதுபோல் இருவருக்கும் ஒற்றுமையுள்ளது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஏராளன் said:

மாவோரி பழங்குடி இனத்தை சேர்ந்த இவர் நியூசிலாந்தின் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறார்.

பிரிட்டிஷ்காரன் சொந்த நிலத்தவனை அடக்கி/அழிச்சு கால் வைச்ச இடமெல்லாம் போராட்ட களமாகியே விட்டது. உலகம் முழுவதும்  விஞ்ஞானிகளும்,அறிவுஜீவிகளும், பகுத்தறிவாளர்களும் ,மனிதாபிகளும் ,ஆய்வாளர்களும், நிறைந்திருந்தும் என்ன பயன்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

New Zealand’s youngest MP in 170 years, as she delivered her maiden speech in Parliament.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பிரிட்டிஷ்காரன் சொந்த நிலத்தவனை அடக்கி/அழிச்சு கால் வைச்ச இடமெல்லாம் போராட்ட களமாகியே விட்டது. உலகம் முழுவதும்  விஞ்ஞானிகளும்,அறிவுஜீவிகளும், பகுத்தறிவாளர்களும் ,மனிதாபிகளும் ,ஆய்வாளர்களும், நிறைந்திருந்தும் என்ன பயன்?

1840 இல் நியூசிலாந்து பழங்குடி இனத்தலைவர்களுக்கும் பிரித்தானியாவிற்குமிடையே ஏற்பட்ட உடன்பாட்டினை பிரித்தானியா கடைப்பிடிக்கவில்லை என தற்போதுவரை பிரச்சினை அங்குள்ளது என கருதுகிறேன், அதிகாரத்தினை கைபற்றுவதற்கான ஒப்பந்தத்தினை உருவாக்கி பின்னர் அதனை குப்பையில் போட்டுவிட்டார்கள் எனும் கருத்து நிலவுகிறது.
 
அழகான நாடு, பழகுவதற்கு இனிமையான மனிதர்கள் கொண்ட அமைதியான நாடு, தனது இராணுவத்தினை மிக சிறியளவில் பேணும் நாடு, தனது பணத்தினை தேவையற்ற யுத்த செலவிற்காக செலவிட விரும்பாத நாடு.
 
கடந்தகாலத்தில் இஸ்லாமியர்களின் மேல் நிகழ்த்தப்பட்ட வெறுப்பு தாக்குதலுக்கெதிராக (அவுஸ்ரேலியர் மேற்கொண்ட தாக்குதல்) உறுதியான முடிவினை எடுத்து மேற்குநாடுகளுக்கு முன் மாதிரியாக திகழ்ந்த நாடு, துணிச்சலாக பொருளாதார முடிவு எடுக்கும் ஒரு சிறியநாடு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.