Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடியில் இருந்து ஒரு Satellite 🛰️ தயாரித்து விண்ணுக்கு அனுப்பினால் எப்படி இருக்கும்? நெனச்சு பாக்ககுரதுக்கே ரொம்ப திரிலிங்கா இருக்கு இல்ல ?

 

என்ன சொல்றீங்க? இது சாத்தியமா? 

 

(வெங்காயம், பச்ச கொச்சிக்கா பிரச்சினை வேற போயிகிட்டு இருக்கு எண்டு நீங்க நினைக்கிறத‌ கொஞ்சம் கட்டுப்படுத்தி போட்டு தொடர்ந்து வாசிங்க ) 

 

ஆம், இது சாத்தியமே! 

 

வாங்க செல்றன். 

 

சாட்டிலைட் 🛰️, ராக்கெட் 🚀 என்றாலே நமக்கு ஞாபகம் வருவது அமேரிக்காவின் NASA நிறுவனம்தான். ஆனால் அண்மையில் ஈலோன் மாஸ்க்கின் SpaceX நிறுவனம், Russia, China மற்றும் இந்தியாவின் ISRO நிறுவனமும் தனது புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.  

 

 

நான் இங்கே பேச முனைவது உலகெங்கிலும் இருந்தும் மாணவர்களினால் தயாரிக்கப்பட்டு விண்ணுக்கு ஏவப்படுகின்ற மாணவர் சேட்டிலைட்டுகள் 🛰️ ஆகும். இவ்வகையான மாணவர் சேட்டிலைட்டுகள் satellite 🛰️ நிறைய விண்ணுக்கு ஏவப்பட்டு கொண்டிருக்கிறது. Please Google, YouTube பன்னி‌ பாருங்க. 

 

 

இந்த சேட்டிலைடினை காத்தாங்குடி மாணவர்களினால் தயாரிக்கப்பட்டு விண்ணுக்கு அனுப்பி வைப்பதே எனது ஆசை. 

 

 

இந்த சாட்டிலைட்டுக்கு நான் வைத்திருக்கும் பெயர் "KATSAT" 🛰️ ஆகும் (Kattanakudy Satellite என்பதன் சுருக்கம்). 

 

இந்த Satellite 🛰️ உடன் தொடர்பு கொள்வதற்கும் தொடர்ச்சியாக விண்வெளி 🌌 ஆராய்ச்சிகளை செய்வதற்கும் காத்தான்குடி மத்திய கல்லூரியில் "Kattanakudy Space Research Institute 📡" (KSRI)‌ என்ற‌ நிறுவனம் நிறுவப்படும். பெயரும் நல்லா இருக்கு இல்ல 😃

 

இந்த KATSAT 🛰️ திட்டத்தில் இரண்டு பிரிவு காணப்படும். 

 

1. சாட்டிலைட்‌ satellite 🛰️ தயாரிப்பு 

 

2. ராக்கெட்  🚀 தயாரிப்பு

 

இந்த satellite 🛰️ இனை இரண்டு வழியில் விண்வெளிக்கு அனுப்ப‌ முடியும். 

 

1. சர்வதேச விண்வெளி நிலையத்தினால் (International Space Station) அனுப்பப்படுகின்ற Cargo Spaceship 🚀 மூலம் இவ்வாறு மாணவர்களினால் தயாரிக்கப்படுகின்ற சேட்டிலைட் இணை அனுப்பி அங்கே இருக்கின்ற Astronaut உதவியுடன் விண்ணில் Manual ஆக‌ launch செய்வது. இது சம்பந்தமான‌ ஆராய்ச்சிகளை‌ நாம் இன்றிலிருந்து தொடங்க வேண்டும். நான்‌ தொடங்கிட்டன்..

 

2.‌ அல்லது நாமே ராக்கெட்டினை 🚀 தயாரித்து அதனுள் நமது Satellite யினை 🛰️ வைத்து விண்ணுக்கு அனுப்புவது. இதற்கான தேடல்கள், நல்ல முன் உதாரணங்கள்‌ தமிழ் நாட்டில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும். Google பன்னி‌ பாருங்க. 

 

நாம் அனுப்ப இருக்கின்ற இந்த KATSAT 🛰️ ஆனது காலநிலை சம்பந்தமான தரவுகளை சேகரித்து அனுப்புகின்ற வேலையினை பிரதானமாக செய்யும். அவ்வப்போது காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப:

 

- இலங்கை சார்ந்த சேட்டிலைட் படங்களை எடுத்து அனுப்புதல்,

 

- அவசரகால warning ⚠️ யினை‌ முன்கூட்டியே கூட்டியே தெரியப்படுத்துதல், 

 

- மாணவர்கள் எப்படி ஒரு செய்மதியுடன்‌ தொடர்பாடல் (satellite communication) செய்தல் போன்ற பயிற்சிகளை (training) வழங்குவதற்காக இந்த சாட்டிலைட் பயன்படுத்தப்படும். 

 

இதனுடைய fun factor ஆக: 

 

- தானாகவே விண்வெளி புகைப்படங்கள் எடுத்து அனுப்புவது. 

 

- ஒவ்வொரு ஆண்டினை பூர்த்தி செய்கின்ற பொழுதும் Kattanakudy Satellite 🛰️ என்ற LED யினை விண்ணில் ஒளிரச் செய்து வீடியோ எடுத்து அனுப்புவது.  

 

- விண்வெளியில் கிடைக்கின்ற ஒலிகளினை record (30 second) செய்து அவ்வப்போது அனுப்புதல்.‌

 

- தனக்கான ட்விட்டரை (X தளம்) அக்கவுண்ட் தொடர்ச்சியாக தானாகவே அப்டேட் செய்தல்.

 

- KATSAT இருக்கும் AI தொழில்நுட்பத்தின் மூலம் விண்வெளி சம்பந்தமான கேள்விகளுக்கு email மூலம் பதில் அளித்தல் போன்ற பல செயற்பாடுகளை நமது KATSAT 🛰️ செய்மதி கொண்டிருக்கும். 

 

இந்த சாட்டிலைட் launch 🚀 ஆனது NASA or ISRO இல் இருந்து காத்தான்குடியின் முதல் செய்மதி KATSAT 🛰️ விண்ணுக்கு ஏவப்படுகின்ற அதே தருணம் காத்தான்குடி மத்திய கல்லூரியில் இருந்தும் மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டும் அதே நேரத்தில் விண்ணை நோக்கி ஏவப்படும். 

 

இந்த வரலாற்று நிகழ்வினை கண்டுகளிக்க காத்தான்குடியில் அனைத்து மாணவர்களும் மத்திய கல்லூரி கிரவுண்டில் ஒன்று கூடி இருப்பர். இந்த ராக்கெட் லான்ச் ஆனது காத்தான்குடியில் எந்த மூலையில் இருந்தும் மக்கள் பார்வையிடக் கூடியதாகவே அமைந்திருக்கும். இதனது நேரடி ஒளிபரப்பும் குட்வின் ஜங்ஷனில் அமைந்திருக்கும் திரையிலும் மக்கள் பார்வைக்கு காட்டப்படும். 

 

2019 ம் ஆண்டு எனது மனதில் தோன்றிய அந்த எண்ணம் இன்று அது முழு திட்டமாக உருவாகி வருகிறது. இறைவனின் உதவியினால் இந்த திட்டம் நான் மரணிப்பதெற்கு முன்னர் Project Lead ஆக இருந்து இந்த சாதனையை நம் மண்ணில் நிகழ்த்த வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. நீங்களும் உங்கள் பிராத்தனைகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 

"வரலாறுகளுக்காக காத்திருக்கக் கூடாது அதனை நாமே தொடங்கி வைக்க வேண்டும்"

 

கனவு காணுங்கள் என்ற‌ அப்துல் கலாம் ஐயாவின் வரிகளினை‌ உதாரணமாக கொண்டு நீங்களும் உங்களது பிள்ளைகளுக்கு ஆர்வம் ஊட்டுங்கள். கொச்சிக்கா பிரச்சினை தானாகே தீரும். 

 

"அறிவியல் வளர்ச்சியே எமது எழுச்சி"

 

இர்ஷாத் இஸ்மாயில்

https://www.madawalaenews.com/2024/01/satellite.html

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன வயதில் பழைய VHF & UHF video cassette player இனை செய்மதி அலைகளை பெறுவதற்காக செய்த கோமாளித்தனங்கள் நினைவுக்கு வருகின்றது இந்த கட்டுரையினை வாசிக்கும் போது😁.

  • கருத்துக்கள உறவுகள்

குரான் ஒரு பொக்கிஷம் அங்கேயே விஞ்ஞானம் தொடங்கி எல்லாம்  அனைத்தும் உள்ளது என்றவர்கள் இன்று  சாட்டிலைட் ராக்கெட் அறிவியல் வளர்ச்சியே எமது எழுச்சி என்பது சிறந்த மாற்றம் 👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, colomban said:

இந்த சாட்டிலைட்டுக்கு நான் வைத்திருக்கும் பெயர் "KATSAT" 🛰️ ஆகும் (Kattanakudy Satellite என்பதன் சுருக்கம்). 

ஆடறுக்க முதல்...... எண்ட வசனம் தான் ஞாபகத்துக்கு வருது.😂
கொத்துரொட்டி போடுறமாதிரி சாட்டிலைட் அனுப்புறதை கதைக்கிறானுகள்🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.