Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU  10 JAN, 2024 | 07:36 PM

image
 

ஆர்.ராம்

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னையில் 11,12 ஆம் திகதிகளில் நடைபெறும் அயலக தமிழர் விழாவில், பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து முக்கிய தமிழ் அரசியல்வாதிகள் பயணமாகியுள்ளனர்.

அதனடிப்படையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், ரெலோ அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், மற்றும் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் சென்னை நோக்கி பயணமாகியுள்ளனர்.

இதேவேளை, கனடாவின் ஒன்றாரியோ மாகாண சபையின் மார்க்கம்- தோர்ன்ஹில் தொகுதி உறுப்பினருமான லோகன் கணபதியும் குறித்த நிகழ்வில் பங்பேற்பதற்காக வருகை தந்துள்ளார். 

மூன்றாவது தடவையாக முன்னெடுக்கப்படும் இவ்விழாவை தமிழக அரசானது, தமிழக எல்லையைத் தாண்டி, பரந்துபட்டு சர்வதேசங்களிலும் வசிக்கும் தமிழர்களை ஒன்று சேர்க்கும் வகையில் கொண்டாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/173656

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அயலகத் தமிழர் தின விழாவில் பங்கேற்கும் செந்தில் தொண்டமானுக்கு இந்தியாவில் செஞ்சி மஸ்தான் அமைச்சரால் அமோக வரவேற்பு

இந்தியாவின் தமிழக அரசினால் நடத்தப்படும் “அயலகத் தமிழர் தினம் 2024” விழாவில் சிறப்புரை ஆற்றுவதற்காக, தமிழக அரசினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இந்தியா சென்றுள்ள கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் அவர்களுக்கு, தமிழ்நாடு அரசின், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

1704952930718-175x300.jpg

தமிழக முதல்வர் கௌரவ மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்றும் (11) நாளையும் (12), நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், டுபாய், இலண்டன், கனடா, மொரிசியஸ், அவுஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

1704952930726.jpg

இந்நிலையில், இந்தியா சென்றடைந்த கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரை, தமிழக அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் நேரடியாகச் சென்று வரவேற்றார்.

இந்நிலையில், “அயலகத் தமிழர் தினம் 2024” விழாவில், கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் சிறப்புரையாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/287856

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர் இந்தியாவின் பங்குதாரர் அல்ல. 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தமிழர்களின் பாதுகாப்பு அரணாக திமுக அரசு என்றும் திகழும்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

11 JAN, 2024 | 04:10 PM
image
 

அயலக தமிழர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

'தமிழ் வெல்லும்' என்னும் கருப்பொருளை மையமாக கொண்டு அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் மாபெரும் அயலகத் தமிழர் தின விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது

 

414765779_290713013585037_56587918644413

இந்நிலையில் இரண்டு நாட்கள் நடைபெறும் அயலக தமிழர் தின விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்தியாவிலேயே அயலக தமிழர் அணியை தொடங்கிய ஒரே கட்சி நமது திராவிட முன்னேற்ற கழகம்தான். தமிழ்நாடு அரசு 2021ம் அயலகத் தமிழர், மறுவாழ்வு துறையை உருவாக்கியது.

2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 58 நாடுகளிலிருந்து அயலக தமிழகர்கள் பங்கேற்றுள்ளனர். உங்கள் அனைவரையும் ஒரே இடத்தில் தாய் தமிழ்நாட்டில் சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வரும்போதெல்லாம் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அயலக தமிழர்களாகிய நீங்கள்தான் இருக்கிறீர்கள். முன்பைவிட தமிழர்கள் இப்போது வெளிநாட்டில் தமிழர்கள் அதிகம் வாழ்கின்றனர்.

அயலக நல வாரியம் மூலம் சட்டப்பூர்வமாக வேலை வாய்ப்பை வழங்கி வருகிறோம். வெளிநாட்டு வேலை ஏற்பாடு மட்டுமல்ல அங்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அவர்களை மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. அயலக தமிழர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

GDiz663aUAAD2yw.jpg

உயிரிழந்த வெளிநாட்டுத் தமிழர்களின் உடல்கள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு 10 மாதங்களுக்கு மேல் ஆகும் என்றிருந்த நிலையை மாற்றியது நமது கழக அயலக அணிதான். தற்போது உயிரிழந்தவர்களின் உடல்களை 8 நாட்களுக்குள் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் வகையில் தற்போது தி.மு.க அயலக அணி ஏற்பாடு செய்திருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு நாள் நிகழ்வில் இலங்கை , மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள் , கவிஞர்கள் என 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் 218 சர்வதேச தமிழ்ச் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ்ச் சங்கங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நிறைவு நாளான நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேருரை ஆற்றி எனது கிராமம் என்ற திட்டத்தை துவக்கி வைத்து, பல்வேறு துறையில் சிறந்து விளங்கும் 8 அயலக தமிழர்களுக்கு விருது வழங்குகிறார்.

https://www.virakesari.lk/article/173710

 

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்தால் அது நன்மையே. 

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

ஸ்ராலினுடன் சுமந்திரன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

உலகத் தமிழர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்தால் அது நன்மையே. 

 

அது எல்லாம் நடக்குமோ தெரியாது.  ஆனால் எல்லா தமிழ் பிரதிநிதிகளும் சேர்ந்து றோ விரித்துள்ள குடையின் கீழ் செயற்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நியாயம் said:

 

அது எல்லாம் நடக்குமோ தெரியாது.  ஆனால் எல்லா தமிழ் பிரதிநிதிகளும் சேர்ந்து றோ விரித்துள்ள குடையின் கீழ் செயற்படலாம்.

உலகத் தமிழர்கள் எல்லோரும் ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்வது இந்திய நலனுக்கும் சிங்களத்தின் நலனுக்கும் பாதகமானது. 

மேற்கின் கை இதன்  பின்னணியில் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அயலக தமிழர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆமா ஆமா

2009 இல் கண்டு கொண்டோம்.

15 minutes ago, நியாயம் said:
1 hour ago, Kapithan said:

உலகத் தமிழர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்தால் அது நன்மையே. 

 

அது எல்லாம் நடக்குமோ தெரியாது.  ஆனால் எல்லா தமிழ் பிரதிநிதிகளும் சேர்ந்து றோ விரித்துள்ள குடையின் கீழ் செயற்படலாம்

அப்போ திராவிடர்களை என்ன செய்வது?

  • கருத்துக்கள உறவுகள்

அயலகத் தமிழர் விழாவுக்கு செந்தமிழன் அண்ணன் சீமான் ஏன் போகவில்லை? 👀

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆமா ஆமா

2009 இல் கண்டு கொண்டோம்.

அப்போ திராவிடர்களை என்ன செய்வது?

👆இது கேள்வி 🤣

திராவிடர் என்பதற்குள் சிங்களம் வருமா? 

13 minutes ago, வாலி said:

அயலகத் தமிழர் விழாவுக்கு செந்தமிழன் அண்ணன் சீமான் ஏன் போகவில்லை? 👀

ஸ்ராலினுக்குப் பக்கத்தில்  கதிரை போடவேண்டி ஏற்படுமல்லோ அதுதான் அழைப்பில்லை என நினைக்கிறேன். 

🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

அது எல்லாம் நடக்குமோ தெரியாது.  ஆனால் எல்லா தமிழ் பிரதிநிதிகளும் சேர்ந்து றோ விரித்துள்ள குடையின் கீழ் செயற்படலாம்.

அப்படி தான் இருக்கும்.  இந்தியாவின்  குடையின் கீழ்  எல்லா தமிழ் பிரதிநிதிகளும் ஒன்று சேர்ந்து இருந்து அதனுடைய பணியை செவ்வனே செய்து முடிப்பார்கள்.

2 hours ago, வாலி said:

அயலகத் தமிழர் விழாவுக்கு செந்தமிழன் அண்ணன் சீமான் ஏன் போகவில்லை? 👀

அதனுடைய அவருடைய பணியை இவர்களே செய்யும் போது

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வாலி said:

அயலகத் தமிழர் விழாவுக்கு செந்தமிழன் அண்ணன் சீமான் ஏன் போகவில்லை? 👀

பேசும் போது விசிலடிக்க ஆட்கள் இருக்கமாட்டார்கள் என்பதனால் இருக்கலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கு வாழ்ந்தாலும் தாய்த் தமிழ்நாட்டை மறக்காதீர்கள் - அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழ்நாட்டிற்கு வாருங்கள் கீழடி, பொருணை, ஆதிச்சநல்லூரை காண்பியுங்கள் - ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள்

12 JAN, 2024 | 01:13 PM
image
 

எங்குவாழ்ந்தாலும் தாய்தமிழ்நாட்டை மறக்காதீர்கள் -அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழ்நாட்டிற்கு வாருங்கள் கீழடி பொருணை ஆதிச்சநல்லூரை காண்பியுங்கள் என அயலக தமிழர் தின நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இதே அரங்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு என்பது, தமிழ்நாட்டை வளப்படுத்த உலகமே திரண்ட மாநாடு என்று சொன்னால், இன்று நடைபெறுவது உலகத்தை வளப்படுத்த சென்ற தமிழர்களை கொண்டாடும் மாநாடு!
இந்த மாநாட்டுக்கு கிடைத்த மாபெரும் சிறப்புகளில் ஒன்று சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் மாண்புமிகு சண்முகம் அவர்கள் இங்கு வருகை தந்திருப்பது! அவர், உலகப் புகழ்பெற்ற தமிழன் மட்டுமல்ல, உலகமே கவனிக்கின்ற பதவியில் இருக்கும் தமிழன்!
இந்த மேடையில், உலகமெங்கும் பல நாடுகளில் இருக்கக்கூடிய பல்வேறு பொறுப்புகளில், அறிவால், ஆற்றலால் தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக அமர்ந்திருக்கும் அனைவரையும் நான் உள்ளபடியே வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன்.

அனைவரது வருகைக்கும் முதலில் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன். மேடையிலும், நேரிலும் அமர்ந்திருக்கும், உங்களை எல்லாம் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கிறது. "முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்" என்ற உழைப்புத் திறன்தான் கடல் கடந்தும் தமிழர்கள் வெற்றிகரமாக வாழக் காரணம்! இப்படி புலம்பெயர்ந்த நம் தமிழ்ச் சொந்தங்கள், அந்த நாடுகளுடைய வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் முதுகெலும்பாக இருந்து வருகிறார்கள். தாய்த் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமில்லாமல், ஒரு தமிழனாகவும் இதை பார்த்து நான் அகம் மகிழ்கிறேன். நீராலும், நிலத்தாலும் ஏன் நாடுகளாலும், கண்டங்களாலும் பிரிந்து இருந்தாலும் நாம் எல்லோரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்!
தமிழ் அன்னையின் குழந்தைகள்! அந்த உரிமையுடன் உங்கள் சகோதரனாக நான் உங்களிடம் வைக்கின்ற வேண்டுகோள்... எங்கு வாழ்ந்தாலும் தாய்த்தமிழ் நாட்டை மறக்காதீர்கள்! அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழ்நாட்டிற்கு வாருங்கள்! கீழடி, பொருணை, ஆதிச்சநல்லூரை காட்டுங்கள்! தமிழோடு இணைந்திருங்கள்! நீங்கள் எங்கு வாழ்ந்தாலும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், நமது திராவிட மாடல் அரசுக்கும் துணையாக இருந்திடுங்கள்! என்று கேட்டு, அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துகளைக் தெரிவித்து விடைபெறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/173785

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசின் கொடுங்கோல் ஆட்சியை முறையடிக்க தமிழ்நாடு அரசு உதவ வேண்டும்: செல்வம் எம்.பி கோரிக்கை

இலங்கை அரசின் கொடுங்கோல் ஆட்சியை முறையடிக்கின்ற அகிம்சை போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் தமிழ்நாட்டில் இடம்பெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், ஈழத்தமிழர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தமிழக அரசு என்றும் துணை நிற்கும் என நம்புவதாகவும் செல்வம் அடைக்கலநாதன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்தோடு, அகதிகளாக தமிழ்நாட்டை சென்றடைந்த இலங்கை தமிழ் மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள உதவிகள் தொடர்பிலும் இதன்போது நினைவுகூர்ந்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 

https://tamilwin.com/article/neighborhood-tamil-conference-1705059458

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழ இனவழிப்புக்கான நீதி உலகத் தமிழர்களின் தன்மானத்தில் தங்கியுள்ளது - ஒன்றாறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் லோகன் கணபதி முதல்வர் ஸ்டாலின் முன் தெரிவிப்பு

Published By: DIGITAL DESK 3   16 JAN, 2024 | 09:27 AM

image
 

ஈழ இனவழிப்புக்கான நீதியை வென்றெடுப்பதில் உலகத் தமிழர்களின் தன்மானமும், பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் என்ற வரலாற்றுப் பணிக்கு தமிழ்நாடு முதன்மையான பங்களிப்பை வழங்க வேண்டும் என கனடா நாட்டின் ஒன்றாரியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் லோகன் கணபதி தெரிவித்துள்ளார்.

கடந்த வார இறுதியில் இந்திய தமிழ்நாட்டில இடம் பெற்ற அயல் உறவு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

தமிழரின் தொன்மையைக் கீழடியும், கந்தரோடையும்  பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. 2,500 ஆண்டுகளுக்கு முன்பே நகர நாகரிகம் கண்டு, எழுத்தறிவு பெற்ற மக்கள் கூட்டத்தின் வழிவந்தவர்கள்.

 தமிழர்கள் கொத்துக் கொத்தாக கேட்பார் யாருமின்றி படுகொலை செய்யப்பட்டதன் குறியீடாக ’முள்ளிவாய்க்கால்’ என்ற இடம்  அமைந்துள்ளது.  

உலகம் எங்கும் 700 கோடிபேர் தமிழர்கள் வாழ்ந்தாலும் இத் தாய் தமிழ்நாட்டில் தான் 2009 இல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை தடுக்க வேண்டும் என்று 18 பேர் தீக்குளித்து தம்மை ஆகுதி ஆக்கினார்கள்.

 அந்த நினைவுகள் நெஞ்சில் மிகுந்த கனத்த இதயத்துடன்  சுமந்துகொண்டு தமிழ்நாட்டிற்கும் தமிழக  மக்களுக்கும் உலக எங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழர்கள் சார்பில் எனது அன்பை நன்றியையும் பகிர்ந்து கொள்கின்றேன். 

நான் கனடா நாட்டு ஒண்டாரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினராக உங்கள் முன் இங்கே நின்று கொண்டிருந்தாலும் நான் பிறந்து வளர்ந்தது மேற்சொன்ன கந்தரோடையும், முள்ளிவாய்க்காலும் அமைந்திருக்கும் ஈழ தேசம்  தான்.

எனது பூர்வீகம் என்று கம்பீரமாக செல்வதில பெருமை கொள்கின்றேன்.

இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கை தாயகமாகக் கொண்ட, அரைநூற்றாண்டுக்கும் மேலாக சபிக்கப்பட்டவர்களாக வாழ்ந்துவரும் இலட்சகணக்கான தமிழர்களில் நானும் ஒருவன்.

இன்றும் இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமிழர் தேசத்திற்காகவும் தம் குரலை அணைவிடாமல்  வைத்திருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் 80 களில் மாணவத் தலைவர்களில் ஒருவராக நானும் இருந்து  சிறீலங்கா அனசின் இனவழிப்பினால் நாட்டை விட்டு உலகம் முழுவதும் சிதறி ஓடிய இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களில் நானும் ஒருவன்.

புலம்பெயர்ந்து கனடா தேசத்தில் தஞ்சமடைந்தேன் இன்று உங்கள் முன்னால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நிற்கும் நிலைக்கு கனடா எனக்காக அனைத்து உரிமைகளையும் அங்கீகரித்துள்ளது.

இது என்னொருவனின் கதையல்ல, என்னைப் போல் பல இலட்சக்கணக்கில் அகதிகளாக உலக நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்களின் கதையாகும். இந்த மண்ணிலும் நம் சகோதர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்கள் குடியுரிமை கேட்டு தலைமுறை தலைமுறையாக காத்திருக்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடும் போது ஒருவகையில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்.

கனடாவின் குடிமகனாகவும் மக்கள் பிரதிநிதியாகவும் உங்கள் முன் நிற்கிறேன். 

அகதி ஒருவர் மக்கள் பிரதிநிதியாக அமைச்சராக ஆக முடியும் என்ற அதியுன்னத செயற்பாட்டை முன்னெடுத்த உலகில் முதன்மையான சனநயாக நாடாக நீதியின் முகமாக உள்ள கனடா தேசத்தில் என் குரலை வெளிப்படுத்தி வருகிறேன். 

உலக வரலாற்றில் முதல் தடவையாக என்னைப் போன்ற கனடா வாழ் மக்கள் அனைவரதும் முயற்சியோடு தமிழ் மரபுத் திங்கள் கனடா தேசத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை  உலகத் தமிழர்களுக்கு கிடைத்துள்ள வரலாற்று மிக்க அங்கீகாரமும் சாதனையுமாகும்.

அத்துடன் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை கனடா ஏற்றுக்கொண்டமைக்கு முன்னோடியாக  தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்திற்கு  தமிழக மக்கள் கொடுத்த பேராதரவுக்கும் நமது தோழமை கலந்த நன்றி உணர்வை இந்தச் சிறப்பு நாளில் வெளிப்படுத்திக் கொள்கிறேன்.

விண்வெளி ஆராய்ச்சி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், தொழில், வணிகம், கலை, இலக்கிய, இசை  என தமிழர்கள் கோலோச்சாத  துறைகளே இல்லை உலகின் நான்கு திசைகளிலும் தமிழர்கள் மலையென சாதனைகளைக் குவித்து வருகின்றனர் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இந்தியாவிற்குள்ளும் சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராக சமூக நீதியைக் கடைப்பிடித்து ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது.. தமிழ்நாடு அரசு சமூக நீதி அரசு என்று புகழாரம் சூட்டும் அளவுக்கு வளர்ச்சிப் பரவலாக்கத்திற்கு உழைத்து வருகிறது.

இந்த சாதனைகளையும், வெற்றிகளையும் தாண்டி 21 ஆம் நூற்றாண்டில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் கூட்டமாகவும் நம் இனம் இருந்து வருகிறது

இது நமது தொன்மைக்கும் பண்பாட்டுச் செழுமைக்கும், நாகரிகத்திற்கும், 100 மில்லியனுக்கும் மேற்பட்ட தமிழர்களினத்திற்கும் விடப்பட்டிருக்கும் சவால் ஆகும்.  

உலக அரங்கிலே இனவழிப்புக்கு உள்ளானது மட்டுமின்றி அதற்கான நீதியை இன்னும் வென்றெடுக்காதவர்களாகவும் நாம் இருந்து வருகிறோம். 

ஆனால், நாம் நீதியின் பால் மிகுந்த பற்று கொண்ட ஓர் இனம். சிலப்பதிகார நாயகி கண்ணகியை தெய்வமாக வழிபடும் இனம். நீதியின் குறியீடாக அவள் சென்னை மெரினாவில் கண்கள் சிவக்க நின்று கொண்டிருக்கிறாள்

அந்த கண்ணகித் தாயின் வழிவந்த நாம், நம்மினத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட படுகொலைகளுக்கு நீதியைப் பெறத் தவறுவோமாயின் இந்தப் இந்த உலகில் வாழும் பிற சமூகத்தினர் தமிழர்களின் ஆளுமை பற்றி கேள்வி எழுப்புவார்கள்.

நான் பிறந்த மண்ணின் இன்றைய நிலையை சொல்லில் விவரிக்க முடியாது. தமிழினத்தின் பண்பாட்டு பெருமிதத்தோடு இந்த மாநாடு நடந்துக் கொண்டிருக்கும் இதே சமநேரத்தில்   எமது தமிழர் தாயகத்தில் பண்பாட்டு படுகொலைகள் சத்தமின்றி அரங்கேறிவருகிறது.

இதற்கு அண்மைய சாட்சியாக முல்லைதீவு மாவட்ட நீதிபதி  சரவணராசா அவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் அவர் குடும்பத்தோடு தலைமறைவாகும் சூழல் உருவாகி இருக்கிறது .

 தமிழ் நீதிபதிக்கு கூட அங்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு எமது தாய்நாடு இரையாகிக் கொண்டிருக்கிறது.

தமிழன் சறுக்கி விழுந்தாலும் ஒன்றுபட்ட  உணர்வுடன் பீனிக்ஸ் பறவை போல் எழுந்தான் என்ற வரலாற்றை நாம் படைக்க வேண்டும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ்நாட்டுப் புலவன் கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்கு ஏற்ப உலகமெங்கும் சிதறி வாழ்கின்ற நாம் ஒரு நாடற்றவர்களாகி இனமழிந்து போகின்ற நிலைக்கு ஆளாவிடக்கூடாது. 

அதற்கு எம் தாய் தமிழ்நாடு துணை நிற்க வேண்டுமென எமது  தாய் நிலத்திலே  கண்ணீரோடு காத்திருக்கும் எமது உறவுகளின் சார்பில்  கேட்டுக்கொள்கின்றேன். 

நான் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் வருகிறேன். தமிழனுக்கு எங்கு அநீதி இழைத்தாலும் அவன் திரும்பிப் பார்க்கும் இடம்  தமிழ்நாடு தான்.

இந்த மண் தமிழினத்திற்காக பன்னாட்டரங்கில் குரல் கொடுப்பதில் தான் உலகெங்கும் பரவிவாழும் தமிழர்களின் மாண்பும் பாதுகாப்பும் இருக்கிறது.

இனவழிப்புக்கு உள்ளான தமிழினம் நீதியை வென்றெடுப்பதில்தான் உலகத் தமிழர்களின் தன்மானமும் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும். அந்த வரலாற்றுப் பணிக்கு தமிழ்நாடு முதன்மையான பங்களிப்பை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/174022

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.