Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யூலியன் கப்பெலி (Julian Cappelli)அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். சிறுவர்களுக்கான புத்தகங்கள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.

IMG-5662.jpg

அவருடைய சிறுவர்களுக்கான இரண்டு புத்தகங்களுக்கு( The Missing cup cake, Block Party) நான் படங்களை வரைந்திருக்கிறேன்.
 

Untitled Artwork

யூலியன் கப்பெலி ஒருதடவை ஒரு தமிழ்க் குடும்பத்தை சிட்னியில் சந்தித்த பொழுது, “பாயசம் வைக்க வேண்டும் பானையிலே அரிசி இல்லை…” என்று அங்கே சிறுவன் ஒருவன் பாடுவதைக் கேட்டு அந்தப் பாடல் பிடித்துப் போய் அதைப் பற்றி என்னிடம் கேட்டார். அந்தப் பாடலை இணையத்தில் தேடி எங்கோ ஒளிந்திருந்த பாடலைத் தேடி எடுத்து அதன் விளக்கத்தை அவரிடம் சொன்னேன். அதை வைத்து அவர் எழுதிய சிறுவர்களுக்கான பாடல் புத்தகம்தான் Oats and honey.

 

Untitled Artwork

நான் படம் வரைந்து அவரது மூன்றாவது புத்தகமாக Oats and honey கடந்த வருடம் மார்கழியில் வெளிவந்திருக்கிறது. புத்தகத்தின் இறுதியில்பாயசம் வைக்க வேண்டும் பானையிலே அரிசி இல்லை…” என்ற பாடலை தமிழிலேயே அவர் பதிந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் பாயாசம் செய்யும் முறையையும் ஆங்கிலத்தில் பதிவிட்டிருக்கிறார்.

புத்தகத்தின் முகப்பை யாழ் இணைய விம்பகத்தில் பதிவிட்ட கிருபனுக்கு எனது நன்றி.

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளருக்கும் ஓவியருக்கும் பாராட்டுக்கள் .........!   👍

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பெருமையாக இருக்கிறது.

புத்தகத்துக்காக பாடுபட்ட இருவருக்கும் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியை கேட்க பெருமையாக உள்ளது.
இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பு! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கலைஞர் @Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளருக்கும் ஓவியருக்கும் பாராட்டுக்கள் .........!   👍

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_6847.jpeg.3c74d5b379812fc028a7bd8d0984d900.jpeg

Oats with Honey எனும் சிறுவர்களுக்கான வண்னப்படங்களுடனான புத்தகம் Julian Cappelli யும் மூனா என்று அழைக்கப்படும் A T செல்வகுமாரனும் சேர்ந்து உருவாக்கியது. இந்தப் புத்தகம் தமிழில் உள்ள நாட்டார் பாடலை மூலமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 

“பாயசம் வைக்கவேணும் பானையிலோ அரிசியில்லை”  எனும் பாடலை தமிழர் ஒருவரின்  வீட்டில் சிறுவன் பாடியதை  ஜூலியன் கப்பெல்லி கேட்டு, அதன்மீது ஈர்க்கப்பட்டு மூனா அண்ணாவுடனான உரையாடல் மூலம் பாடலின் உள்ளார்ந்த அர்த்தங்களைப் புரிந்து, அப்பாடலைச் சற்று நீட்டி இந்த உலகில் உயிரனங்கள் வாழ தேனீக்களின் அவசியமான பங்களிப்பையும், அந்தப் பங்களிப்பை சிறுவர்கள் அறியவேண்டியும் இந்தப் புத்தகத்தை உருவாக்கியுள்ளனர்.

#……#

இதோ அந்த தமிழ் நாட்டார் பாடல்.. கூகிள் தேடலில் யாழ் இணையத்தில் இப்பாடல் உள்ளதும் தெரியவந்தது.  
 

large.IMG_6857.jpeg.318942c1b7a48eccb39f548c22959d33.jpeg

 

“பாயசம் வைக்கவேணும் பானையிலோ அரிசி இல்லை.
முற்றிய நெற்கதிரே அரிசி கொஞ்சம் தருவாயோ?”

இதற்கு நெற்கதிர்

“நானெப்படித்தர முடியும்?
என்னை வளர்க்கும் வயலிடம் போய்க் கேள்” 

என்றது.

 

வயலிடம் போன எலியார்

“பாயசம் வைக்கவேணும் பானையிலோ அரிசியில்லை.
முற்றிய நெற்கதிரே நெல்லை வளர்த்த வயலே கொஞசம் அரிசி தருவாயா?” 
என்று கேட்டது.

 

அதற்கு வயல் 


“நானெப்படி தர முடியும்
என்னை ஈரமாக்கி உதவும் நீரைப் போய்க் கேள்“
என்றது.

 


நீரிடம் போன எலியார்

“பாயசம் வைக்க வேணும் பானையிலோ அரிசியில்லை.
முற்றிய நெற்கதிரே நெல்லைவளர்த்த வயலே வயலில் பாய்ந்த நீரே கொஞ்சம் அரிசி தருவாயோ” 
என்றது.

 

அதற்கு வயலில் பாய்ந்த நீர் 

“நானெப்படித் தரமுடியும் என்னை வரம்பு கட்டி இங்கே பாய விட்ட உழவனைப் போய்க் கேள்” 
என்றது.

 

உழவனிடம் போன எலியார்


“பாயசம் வைக்க வேணும் பானையிலோ அரிசியில்லை முற்றிய நெற்கதிரே கதிரைவளர்த்த வயலே வயலை நனைத்த நீரே நீரைப்பாய்ச்சிய உழவா கொஞ்சம் அரிசி தருவாயோ?”

என்றது.

 

உழவன் எலியாருக்கு அரிசி கொடுத்தார். எலியார் பாயாசம் வைத்தார் என்று நிறைவுபெறும்.

 

#*****#

 

சிறுவர்களுக்கான இந்தப் புத்தகத்தில் Olli எனும் சிறுவன் காலை உணவுக்காக ஓட்ஸ் கஞ்சி தயாரிக்க விரும்புகின்றார். ஆனால் ஓட்ஸ் இல்லை. ஓட்ஸைக் கண்டுபிடிக்க கூக்கபுரா பறவை காட்டிய பாதையில் ஓட்ஸ் வயலுக்குப் போகின்றார். தமிழில் எலியார் நெற்கதிரைக் கேட்பதில் ஆரம்பிப்பது போல ஆங்கிலத்தில் ஓட்ஸ் கதிரை Olli கேட்பதில் கதை தொடங்குகின்றது.

சிறுவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ரைம்களைக் கொண்ட  அற்புதமான புத்தகம். மூனா அண்ணாவின் கைவண்ணத்தில் நிறைய அழகான விளக்கப்படங்கள் உள்ளன. 

large.IMG_6858.jpeg.eb0c68e859d3adc695c521fc50c833ec.jpeg

ஒவ்வொரு ரைமின் உரையும் படிக்க எளிதானது மற்றும் இந்த புத்தகம் சிறுவர்களைப் படிக்க தூண்டுவது போலவும், பயன்படுத்தப்படும் வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் ஒவ்வொரு ரைமைச் சுற்றியுள்ள படங்களாலும் மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதையும் காணலாம். அனைத்து விளக்கப்படங்களும் மிகவும் அருமையாக உள்ளன. சிறுவர்களுக்கான நேர்சரி ரைம்ஸ் புத்தகத்தைத் தேடுபவர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன்.

அமேஸனில் புத்தகம் வாங்க:

Hard cover, paperback, kindle edition  எனக் கிடைக்கின்றது.

https://amzn.eu/d/4RTqDmU

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கிருபன் said:

அமேஸனில் புத்தகம் வாங்க:

விரிவான தகவல்களுக்கு மிகவும் நன்றி கிருபன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

சிறுவர்களுக்கான நேர்சரி ரைம்ஸ் புத்தகத்தைத் தேடுபவர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன்

நன்றி கிருபன்🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.