Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸால் அமர்த்தப்பட்ட அமெரிக்க கூலிப்படையினர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஏமனின் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சௌதி தலைமையிலான கூட்டணியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராணுவம் ஒரு அங்கமாக உள்ளது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், நவல் அல்-மகாஃபி
  • பதவி, பிபிசி நியூஸ், அரபு
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஏமனில் அரசியல் படுகொலைகளைச் செய்யும் நபர்களுக்கு நிதியளித்துள்ளது. இது அரசாங்கத்திற்கும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலை மேலும் மோசமாக்கியுள்ளது. இதுகுறித்த தகவல்கள் சமீபத்தில் செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து உலக நாடுகளுக்குத் தெரியவந்துள்ளது.

பிபிசி நடத்திய புலனாய்வின் மூலம் இந்தத் தகவல் அம்பலப்படுத்தப்பட்டது.

ஏமனில் உள்ள எமிரேட்ஸ் அதிகாரிகளுக்கு அமெரிக்க கூலிப்படையினரால் வழங்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியானது, உள்ளூர் மக்களை கீழ்த்தரமான செயல்களைச் செய்யப் பயிற்றுவிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. இது அரசியல் படுகொலைகளின் கணிசமான அதிகரிப்புக்கு வழிவகுத்தது என்று ஒரு தகவலறிந்தவர் பிபிசி நியூஸ், அரபு புலனாய்வுக் குழுவிடம் தெரிவித்தார்.

அல்கொய்தா மற்றும் தெற்கு ஏமனில் செயல்படும் ஐ.எஸ். ஆகிய ஜிஹாதி குழுக்களை ஒழிப்பதே அமெரிக்கக் கூலிப்படைகளின் குறிக்கோளாக இருந்த போதிலும், ஹூத்திகள் மற்றும் பிற ஏமன் ஆயுதப் பிரிவுகளுக்கு எதிராகப் போரிடுவதற்காக அல்கொய்தாவின் முன்னாள் உறுப்பினர்களை எமிரேட்ஸ் உண்மையில் நியமித்துள்ளது என்பதையும் பிபிசி கண்டறிந்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் பயங்கரவாதத்துடன் எந்த தொடர்பும் இல்லாதவர்களின் கொலைகள் தொடர்பான பிபிசி விசாரணையில் உள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுககள் "பொய் மற்றும் ஆதாரமற்றவை" என்று கூறியுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸால் அமர்த்தப்பட்ட அமெரிக்க கூலிப்படையினர்

பட மூலாதாரம்,JACK GARLAND/BBC

படக்குறிப்பு,

வழக்கறிஞர் ஹுடா அல்-சராரி ஏமனில் மனித உரிமைகளுக்கு ஆதரவாக செய்த பணிக்கான பதிலடியாக 2019 இல் தனது மகனை இழந்தார்.

மூன்று வருட காலப்பகுதியில் ஏமனில் 100 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டது மத்திய கிழக்கின் ஏழ்மையான நாட்டில் பல சர்வதேச சக்திகளை ஒருவருக்கொருவர் எதிர்த்து நிற்கும் கசப்பான உள் மோதலின் ஒரு கூறு மட்டுமே.

இந்த சூழ்நிலைகள் ஏமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கம் நிரந்தரமாக திரும்புவதை ஊக்கப்படுத்தியுள்ளது. கப்பல்களைத் தாக்கி, செங்கடலில் வர்த்தகத்தை சீர்குலைப்பதற்காக சமீபத்தில் செய்திகளில் வந்த இரான் ஆதரவு ஹூத்திகளுக்கு இது மறைமுகமாக உதவியது என்று கூட ஒருவர் வாதிடலாம் .

சமீபத்திய நாட்களில், அக்குழுவை "உலகளாவிய பயங்கரவாதிகள்" என்று மறுபெயரிடப் போவதாக அமெரிக்கா அறிவித்தது.

ஏமனில் 2014 ஆம் ஆண்டு தொடங்கிய மோதலைப் பற்றி நான் செய்திகளை அளித்து வருகிறேன். சண்டையின் காரணமாக நாட்டின் வடபகுதியை ஹூத்திகளிடம் அரசு நேரிட்டது. அவர்கள் பல ஆண்டுகளாக மிகவும் திறமையான மற்றும் சிறந்த உபகரணங்களைப் பெற்றிருந்த நிலையில், அவர்களிடம் அரசு அதிகாரங்கள் சென்றடைந்தன.

2015 ஆம் ஆண்டில், அமெரிக்காவும் பிரிட்டனும் ஹூத்திகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு சௌதி அரேபியா தலைமையிலான பெரும்பாலான அரபு நாடுகளின் கூட்டணியை ஆதரித்தன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதில் ஒரு முக்கிய கூட்டாளியாக இருந்தது. நாடு கடத்தப்பட்ட ஏமன் அரசாங்கத்தை மீண்டும் நிறுவுதல் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் நோக்கத்துடன் அக்கூட்டணி ஏமனை ஆக்கிரமித்தது.

நாட்டின் தென்பகுதியின் பாதுகாப்பு பொறுப்பு எமிரேட்ஸிடம் விடப்பட்டது என்பதுடன் பிராந்தியத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக அந்நாடு உருவெடுத்தது. அல்கொய்தா நீண்ட காலமாக தெற்கில் இருந்து தனது பிரதேசத்தை கைப்பற்றி வைத்துள்ளது.

ஆனால் அதிக ஸ்திரத்தன்மைக்கு பதிலாக, எனது பூர்வீக நாடான ஏமனுக்கு நான் அடிக்கடி செல்லும் பயணங்களின் போது, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு பகுதிகளில் மர்மமான முறையில் கொலைகள் அதிகரித்ததை நான் கண்டேன். இதில் பாதிக்கப்பட்டவர்கள் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில்லாத ஏமன் குடிமக்களாக இருந்தனர்.

சர்வதேசச் சட்டத்தின் கீழ், உரிய நடைமுறையின்றி பொதுமக்களைக் கொல்வது சட்டத்திற்குப் புறம்பான, நீதித்துறைக்கு அப்பாற்பட்ட மரண தண்டனையாகக் கருதப்படுகிறது.

 
ஐக்கிய அரபு எமிரேட்ஸால் அமர்த்தப்பட்ட அமெரிக்க கூலிப்படையினர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அதன் நட்பு நாடுகளின் முயற்சிகள் இருந்தபோதிலும், ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏமனின் பெரும்பகுதியை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் ஏமன் கிளையான இஸ்லாத்தை சேர்ந்தவர்கள். இது ஒரு பிரபலமான சர்வதேச சுன்னி இஸ்லாமிய இயக்கமாகும். இது அமெரிக்காவால் ஒருபோதும் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்படவில்லை. ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட பல அரபு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு நாட்டின் அரச குடும்பம் அதன் அரசியல் செயல்பாடு மற்றும் தேர்தல்களுக்கான ஆதரவை அச்சுறுத்தலாகக் கருதுகிறது.

முதல் கொலை தொடர்பாக கசிந்த ட்ரோன் காட்சிகள் இந்த மர்மமான மரணங்களை விசாரிக்க எனக்கு தொடக்கப் புள்ளியைக் கொடுத்தன.

டிசம்பர் 2015 இல் பதிவு செய்யப்பட்ட ஒரு காட்சி, ஸ்பியர் ஆபரேஷன்ஸ் குரூப் என்ற அமெரிக்க பாதுகாப்பு நிறுவனத்தின் உறுப்பினர்களுக்குக் கிடைத்தது.

2020 இல் லண்டன் உணவகத்தில் உள்ள படங்களில் காணப்பட்ட அறுவை சிகிச்சையின் பின்னணியில் இருந்த ஒருவரை நான் சந்தித்தேன். முன்னாள் கடற்படை சீல்ஸ் உறுப்பினரான ஐசக் கில்மோர், பின்னர் ஸ்பியரின் செயல்பாட்டு இயக்குநரானார். ஏமனில் படுகொலைகளை மேற்கொள்ள எமிரேட்ஸ் அரசாங்கத்தால் பணியமர்த்தப்பட்டதாகக் கூறிய பல அமெரிக்கர்களில் ஒருவராக அவர் இருக்கிறார்.

கில்மோர் ஸ்பியருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) வழங்கிய "கொலை பட்டியலில்" உள்ளவர்களைப் பற்றி விவாதிக்க மறுத்துவிட்டார். அவருடைய முதல் பணியின் இலக்கைத் தவிர: முதல் இலக்காக 2015 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும், தெற்கு துறைமுக நகரமான தற்காலிக தலைநகர் ஏடனில் இஸ்லாஹ்வின் தலைவராகவும் செயல்பட்ட அன்சாஃப் மாயோ தான் அவர்.

அமெரிக்க அதிகாரிகள் இஸ்லாஹ்வை ஒருபோதும் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தவில்லை என்பது குறித்து நான் அவரிடம் கேட்டபோது, அவர் கூறினார்: "நவீன மோதல்கள் துரதிர்ஷ்டவசமாக மிகவும் வெளிப்படையின்றி உள்ளன. இதை நாங்கள் ஏமனில் காண்கிறோம். ஒரு சிவிலியன் மற்றும் மதகுரு தலைவரை வேறொருவர் பயங்கரவாதியாகத் தான் அங்கே பார்க்க முடிகிறது."

 
ஐக்கிய அரபு எமிரேட்ஸால் அமர்த்தப்பட்ட அமெரிக்க கூலிப்படையினர்

பட மூலாதாரம்,JACK GARLAND/BBC

படக்குறிப்பு,

ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஐசக் கில்மோர், எமிரேட்ஸ் மற்றும் ஏமன் படைகளுக்கு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பயிற்சி அளித்ததாக பிபிசியிடம் ஒப்புக்கொண்டார்.

ஏமனில் இருந்த மற்றொரு ஸ்பியர் ஊழியரான டேல் காம்ஸ்டாக், கில்மோர் மற்றும் அவருடைய பணி 2016 இல் முடிவடைந்தது என்று கூறினார். இருப்பினும், தெற்கு ஏமனில் கொலைகள் தொடர்ந்தன. உண்மையில், மனித உரிமைகள் அமைப்பான ரிப்ரைவ் அளித்த தகவல்களின் படி, அவை அடிக்கடி நிகழ்ந்தன.

2015 மற்றும் 2018 க்கு இடையில் ஏமனில் நடத்தப்பட்ட 160 கொலைகளை குழு விசாரித்தது என்பதுடன் பெரும்பாலான கொலைகள் 2016 இல் நடந்ததாகக் கூறியது. 160 இறப்புகளில் 23 பேர் மட்டுமே பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் அக்குழு தெரிவித்தது.

அனைத்து கொலைகளும் ஸ்பியர் பயன்படுத்திய அதே தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதையும் அவர்கள் கண்டறிந்தனர்: ஒரு கவனச்சிதறலாக ஐஈடி (IED) வெடிகுண்டை வெடிக்கச் செய்து, அதன் பின் துப்பாக்கி சூடு நடத்துவதே அந்த தந்திரமாக இருந்தது.

ஏமன் மனித உரிமைச் செயற்பாட்டாளரும், வழக்கறிஞருமான ஹுடா அல்-சராரியின் கூற்றுப்படி, மிக சமீபத்தில் கடந்த மாதம் இதே முறையைப் பயன்படுத்தி லாஜ் நகரில் ஒரு இமாம் கொல்லப்பட்ட போது அந்தத் தந்திரம் கண்கூடாகத் தெரிந்தது.

கில்மோர், காம்ஸ்டாக் மற்றும் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத வேறு இரண்டு ஸ்பியர் கூலிப்படையினர் ஏமன் நாட்டின் ஏடனில் உள்ள இராணுவ தளத்தில் எமிரேட்ஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதில் ஸ்பியர் ஈடுபட்டதாகக் கூறினர். பெயர் வெளியிட விரும்பாத ஒரு பத்திரிகையாளரும் அத்தகைய பயிற்சி குறித்த காட்சிகளைப் பார்த்ததாகக் கூறினார்.

கூலிப்படையினர் மேலும் விரிவான விவரங்களைத் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுடன் நேரடியாக பணிபுரிந்த மூத்த ஏமன் அதிகாரி ஒருவர் கூடுதல் தகவல்களை அளித்தார்.

அவர்களின் சுயவிவரத்தின் காரணமாக, கூலிப்படையினர் ஏமனில் கவனத்தை ஈர்த்ததால், அவர்களின் பணி எமிரேட்ஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் விதத்திற்கு மாறியது. "அவர்கள் உள்ளூர் ஏமன்களுக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கினர்," என்று ஏமன் சீருடை அணிந்தவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

 
ஐக்கிய அரபு எமிரேட்ஸால் அமர்த்தப்பட்ட அமெரிக்க கூலிப்படையினர்

பட மூலாதாரம்,JACK GARLAND/BBC

படக்குறிப்பு,

அல்-இஸ்லாஹ் குழுவின் தலைவரான அன்சாஃப் மாயோ, தாக்குதலுக்கு இலக்கான பின்னர் அவர் நாடுகடத்தப்பட்டார்.

விசாரணை முழுவதும், ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ஏமன் நாட்டு சாட்சிகளையும் கலந்தாலோசித்து தகவல் உறுதிப்படுத்தப்பட்டன. எமிரேட்ஸ் படையினரின் பயிற்சியை நிறைவு செய்த பின்னர், பயங்கரவாதத்துடன் தொடர்பில்லாத நபர்களை கொலை செய்ததாகக் கூறிய இருவரும் அவர்களில் இருந்தனர்.

ஒரு மூத்த ஏமன் அதிகாரியை கொலை செய்வதற்கு ஈடாக, எமிரேட்ஸ் சிறையில் இருந்து தன்னை விடுவிக்க முன்வந்ததாகவும், ஆனால் அதைத் தான் ஏற்கவில்லை என்றும் ஒரு நபர் கூறினார்.

ஏமனியர்கள் கொலைகளைச் செய்ததால், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்று அதைப் பற்றி விசாரிப்பது மிகவும் சவாலானதாக மாறியது.

2017 ஆம் ஆண்டில், எமிரேட்ஸ் ஏமனில் ஒரு துணை ராணுவப் படையை தெற்கு இடைநிலை கவுன்சில் (STC) பகுதியில் உருவாக்க உதவியது. அப்படை, நாட்டின் தெற்கு பகுதியில் ஆயுதக் குழுக்களின் வலையமைப்பை இயக்கும் ஒரு பாதுகாப்பு அமைப்பாகும்.

இந்த படை ஏமன் அரசில் இருந்து சுயாதீனமாக இயங்கியது என்பதுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து உத்தரவுகளை மட்டுமே பெற்றது. போராளிகள் சுறுசுறுப்பான முன்னணியில் போராடுவதற்கு மட்டும் பயிற்சியளிக்கப்படவில்லை. குறிப்பாக ஒரு குழு, பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு, படுகொலைகளை நடத்துவதற்கு பயிற்சி பெற்றதாக, தகவலறிந்தவர் கூறினார்.

 
ஐக்கிய அரபு எமிரேட்ஸால் அமர்த்தப்பட்ட அமெரிக்க கூலிப்படையினர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஹுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் வணிகக் கப்பல்களுக்கு எதிராக நடத்திய தொடர் தாக்குதல்களால் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளனர்.

இப்போது சதர்ன் ட்ரான்சிஸனல் கவுன்சில் பகுதியில் செயல்படும் துணை ராணுவ படையில் பணிபுரியும் முன்னாள் அல் கொய்தா உறுப்பினர்களின் 11 பெயர்களைக் கொண்ட ஆவணத்தை, அந்தத் தகவல் அளித்தவர் எங்களுக்கு அனுப்பியுள்ளார். அவர்களில் சிலரின் அடையாளங்களை நாங்கள் சரிபார்க்க முடிந்தது.

புலன் விசாரணையின் போது, நாசர் அல்-ஷிபாவின் பெயரையும் பிபிசி கண்டுபிடித்தது. அவர் ஒரு காலத்தில் அல்கொய்தாவின் உயர் பதவியில் இருந்தவர் என்பதுடன் பயங்கரவாதத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பின்னர் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 17 மாலுமிகளைக் கொன்ற அமெரிக்க போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கோல் மீதான தாக்குதலில் அல்-ஷிபாவுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக நாங்கள் பேசிய ஏமன் அமைச்சர் ஒப்புக்கொண்டார். ஆனால் தற்போது அந்த அல்-ஷிபா சதர்ன் ட்ரான்சிஸனல் கவுன்சிலில் செயல்படும் துணை ராணுவப் பிரிவுகளில் ஒன்றின் தளபதியாக இருக்கிறார் என்பதற்கு பல ஆதாரங்கள் எங்களிடம் கிடைத்துள்ளன.

வழக்கறிஞர் ஹுடா அல்-சராரி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிதியுதவி பெறும் இந்த படைகள் செய்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அவரது பணியின் விளைவாக அவருக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இருப்பினும், அவரது 18 வயது மகன் மொஹ்சென் தான் தனது உயிரை விலையாகக் கொடுக்கவேண்டியிருந்தது.

அந்த இளைஞர் மார்ச் 2019 இல் உள்ளூர் எரிவாயு நிலையத்திற்குச் சென்ற போது மார்பில் சுடப்பட்டு ஒரு மாதத்திற்குப் பிறகு பரிதாபமாக உயிரிழந்தார். ஹுடா அவரது மரணத்திற்குப் பிறகு மீண்டும் தனது பணிகளைத் தொடங்கியபோது, அப்பணிகளில் ஈடுபடக்கூடாது என தன்னை எச்சரிக்கும் செய்திகள் வந்ததாக அவர் கூறினார்.

"ஒரு மகன் போதாதா? மேலும் ஒரு உயிரைப் பறிகொடுக்க வேண்டுமா?" என மிரட்டல்கள் வந்தன என்றார்.

ஏடன் வழக்கறிஞரின் அடுத்தடுத்த விசாரணையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆதரவு பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் உறுப்பினரால் மொஹ்சென் என்பவர் கொல்லப்பட்டார் என்று கண்டறியப்பட்டது. இருப்பினும் அதிகாரிகள் அந்தந்த நீதித்துறை செயல்முறையைத் தொடங்கவில்லை.

பாதுகாப்பு காரணங்களுக்காக பெயரிடப்படாத அரசுத் தரப்பு உறுப்பினர்கள், பரவலான கொலைகள் அச்சத்தின் சூழலை உருவாக்கிவிட்டதாகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆதரவு பெற்ற படைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதியைப் பெற அவர்கள் கூட பயப்படுவதாகவும் தெரிவித்தனர்.

 
ஐக்கிய அரபு எமிரேட்ஸால் அமர்த்தப்பட்ட அமெரிக்க கூலிப்படையினர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏமனில் நடைபெறும் போரில் முழுமையாக ஈடுபட்டுள்ளது.

2020 இல் ஸ்பியர் அமைப்பு மேலும் பணம் செலுத்தியதாகக் காட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கசிந்த ஆவணத்தை ரிப்ரீவ் பெற்றார். இருப்பினும் ஏன் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஸ்பியர் நிறுவனர் ஆபிரகாம் கோலனிடம் அவரது கூலிப்படையினர் எமிரேட்ஸைச் சேர்ந்தவர்களுக்கு படுகொலை செய்வது குறித்து பயிற்சி அளித்தார்களா என்று கேட்கப்பட்டது. ஆனால் அவர் அதற்குப் பதிலளிக்கவில்லை.

பிபிசி விசாரணையின் முடிவுகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால், பயங்கரவாதத்துடன் எந்த தொடர்பும் இல்லாதவர்களை கொலை செய்ய முயன்றதாக கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் தவறானது அரசு மறுத்துவிட்டது. மேலும், ஏமனில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அரசு கூறியது.

"இந்த நடவடிக்கைகளின் போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சர்வதேச சட்டத்தின்படி செயல்பட்டது," ஏமன் அதிகாரிகள் பதிலளித்தனர்.

‘ஸ்பியர் ஆபரேஷன்ஸ்’ குழுவைப் பற்றி விவாதிக்க அமெரிக்க பாதுகாப்பு மற்றும் அரசுத் துறைகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அக்கேள்வி குறித்து பதில் அளிக்க அத்துறைகள் மறுத்துவிட்டன. மேலும், "இது போன்ற ஒரு நடவடிக்கைக்கு அமெரிக்காவின் நடுவண் ஒற்று முகமை (CIA) ஒப்புதல் அளித்தது என்ற கருத்து தவறானது," என அமெரிக்க அரசு புலனாய்வு அமைப்பு ஒரு அறிக்கையில் கூறியது.

 
ஐக்கிய அரபு எமிரேட்ஸால் அமர்த்தப்பட்ட அமெரிக்க கூலிப்படையினர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஐக்கிய அரபு எமிரேட்ஸால் பணியமர்த்தப்பட்ட அமெரிக்க கூலிப்படையினரால் பயிற்சியளிக்கப்பட்ட படைகளால் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு ஹுத்திகளும் பிற எதிர்ப்பாளர்களும் இலக்காகியுள்ளனர்.

சுருக்கமாக நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

  • 2014 ஆம் ஆண்டில், ஏமனின் ஷியா முஸ்லிம் சிறுபான்மையினரின் ஒரு பிரிவைச் சேர்ந்த ஹூத்தி போராளிகள், தலைநகரான சனாவைக் கைப்பற்றினர்.
  • பிப்ரவரி 2015 இல் சனாவில் வீட்டுக் காவலில் இருந்து தப்பி ஓடிய பின்னர் அதிபர் மன்சூர் ஹாதி தெற்கு நகரமான ஏடனில் ஒரு தற்காலிக தலைநகரை நிறுவினார்.
  • சௌதி அரேபியாவும் மற்ற எட்டு சன்னி அரபு நாடுகளும் ஹூத்திகளுக்கு எதிராக ஒரு வான்வழித் தாக்குதலைத் தொடங்கின. அந்நாடுகள் பிராந்திய எதிரியான இரானால் தான் ஆயுதம் ஏந்தியதாகக் கூறினர். சௌதி தலைமையிலான கூட்டணி அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஆதரவையும் பெற்றுள்ளது.
  • வெளிப்படையாக ஒரே தரப்பில் இருப்பவர்களிடையே போர்கள் கூட நடந்துள்ளன. ஆகஸ்ட் 2019 இல், சௌதி ஆதரவுடைய அரசாங்கப் படைகளுக்கும், தெற்குப் பிரிவினைவாத இயக்கத்துக்கும் இடையே தெற்கில் போர் வெடித்தது. தெற்கில் செயல்படும் அமைப்புக்கள் அதிபர் ஹாதி தவறான நிர்வாகம் செய்வதாகவும் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் குற்றம் சாட்டின.
  • அரேபிய தீபகற்பத்தில் உள்ள அல்கொய்தாவின் போராளிகள் மற்றும் போட்டி ஐ.எஸ். குழுவின் உள்ளூர் துணை அமைப்பினர் குழப்பத்தை பயன்படுத்தி தெற்கில் நிலப்பரப்பைக் கைப்பற்றி, குறிப்பாக ஏடனில் கொடிய தாக்குதல்களை நடத்துகின்றனர்.
  • ஹூத்திகள் தங்கள் சொந்த செல்வாக்கை விரிவுபடுத்தியுள்ளனர். நவம்பர் 2023 இல் அவர்கள் செங்கடலில் சர்வதேச கப்பல் வழித்தடங்களைத் தாக்கத் தொடங்கியதன் மூலம் இது வெளிச்சத்துக்கு வந்தது.

https://www.bbc.com/tamil/articles/c9x0y63kyelo

 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா,.......🤣

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யாவின் வக்னர் Wagnar கூலிப்படையினர் தொடர்பாக குத்தி முறிந்த எமதாட்கள் இந்தக் கட்டுரைக்கும்  தமது எதிர்வினைகளை ஆற்றலாமே? 

 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

ரஸ்யாவின் வக்னர் Wagnar கூலிப்படையினர் தொடர்பாக குத்தி முறிந்த எமதாட்கள் இந்தக் கட்டுரைக்கும்  தமது எதிர்வினைகளை ஆற்றலாமே? 

 

அது நடவாத கரியம்😁, அமெரிக்காவின் ............👍

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, உடையார் said:

அது நடவாத கரியம்😁, அமெரிக்காவின் ............👍

பிழையான விடயங்களை யார் செய்தாலும் சுட்டிக்காட்டுவதுதான் நேர்மையாளர்களுக்கு அழகு. தனக்கு விருப்பமானவர்கள் செய்யும் தவறான விடயங்களை மூடி மறைத்தும் கண்டும் காணாலும் விடுதல் அவர்களின் நேர்மையில் சந்தேகத்தை ஏற்படித்தும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, உடையார் said:

அது நடவாத கரியம்😁, அமெரிக்காவின் ............👍

உடையார் நீங்களும் அப்பப்ப இருந்திட்டு......😂

இத் திரியில் கருத்து எழுதியவர்கள் வழக்கம்போல் கட்டுரையை வாசிக்காமல் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டுக் கருத்து எழுதியுள்ளனர் போலுள்ளது. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, இணையவன் said:

இத் திரியில் கருத்து எழுதியவர்கள் வழக்கம்போல் கட்டுரையை வாசிக்காமல் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டுக் கருத்து எழுதியுள்ளனர் போலுள்ளது. 🙂

வாசித்த தாங்கள் கருத்தெழுதலாம். அதற்குத் தடை இல்லை யே,.😉

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.