Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
too-much-heat.jpg

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 1 முதல் 4 செல்சியஸினால் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் புத்தளத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதன்படி, புத்தளத்தில் 33.7 செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரியில் 33.5 செல்சியஸ் ஆக வெப்பநிலை பதிவாகியது.

கட்டுநாயக்கவில் வெப்பநிலை 33.4 செல்சியஸாக உயர்ந்துள்ளது.

ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் வெப்பமான காலநிலை மேலும் அதிகரிக்கலாம் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

https://thinakkural.lk/article/291294

  • 2 weeks later...
  • Replies 51
  • Views 4.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • சில அமைப்புக்கள்,தனிநபர்கள் செய்கின்றனர்..... ஐங்கரநேசனின் பசுமை புரட்சி அமைப்பு மற்றும் சில யூ டியுப் இளைஞர்கள் செய்கின்றனர் ... யாழ்கள புத்தன் என்ற இளைஞனும் வருடத்திற்கு 75 மரம் என்ற வகையில் கடந

  • யாரப்பா அந்த புத்தன்? 🙂 புத்தனின் வழியை எம்மக்கள் பின்பற்ற வேண்டும்.

  • ஏராளன்
    ஏராளன்

    சிட்னி புத்திரன் என்ற பெயரில் பொன்னாலைப் பகுதியில் மரக்கன்றுகள் வழங்கியது புத்தன் அண்ணா தான். அகரம் யுரியூப்பில் பார்த்தனான். யாழிலும் புத்தன் அண்ணா இணைத்திருந்தவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரத்தினபுரி வெப்பமாக மாறுகிறது!

காற்றின் ஓட்டம் குறைந்ததன் காரணமாக சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டம் மற்றும் மத்திய மாகாணத்தின் கண்டி, நுவரெலியா ஆகிய பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரியில் 36c டிகிரியாகவும், கண்டியில் 30c மற்றும் நுவரெலியாவில் 21c டிகிரியாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

காற்றின் ஓட்டம் குறைந்ததால் வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இது வழமையான நிகழ்வு எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் காலநிலை நிபுணர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/293029

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வறட்சியான காலநிலைக்கு பொதுமக்களால் மட்டுமே தீர்வுகளை வழங்க முடியுமாம்!

Published By: VISHNU   25 FEB, 2024 | 07:07 PM

image

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் வறட்சியான காலநிலைக்கு பொதுமக்களால் மட்டுமே தீர்வுகளை வழங்க முடியும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஒருவர் வருடத்துக்கு ஒருவர் ஒரு மரக்கன்றையாவது நட்டினால் எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகளைத் தவிர்க்க முடியும் என ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/177277

  • கருத்துக்கள உறவுகள்

பாத்தி மாற்றி தண்ணி விடுவதுக்கே சம்பளத்துக்கு ஆள் தேடும் நிலையில் நம்மவர் இருக்கையில் ஒரு மரமாவது நடுவது அதிசயம் .

  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2024 at 21:08, பெருமாள் said:

பாத்தி மாற்றி தண்ணி விடுவதுக்கே சம்பளத்துக்கு ஆள் தேடும் நிலையில் நம்மவர் இருக்கையில் ஒரு மரமாவது நடுவது அதிசயம் .

சில அமைப்புக்கள்,தனிநபர்கள் செய்கின்றனர்.....
ஐங்கரநேசனின் பசுமை புரட்சி அமைப்பு மற்றும் சில யூ டியுப் இளைஞர்கள் செய்கின்றனர் ...
யாழ்கள புத்தன் என்ற இளைஞனும் வருடத்திற்கு 75 மரம் என்ற வகையில் கடந்த 3 வருடங்களாக செய்து வருகிறார் என்று யாழ் களத்தில் பார்த்த ஞாபகம்😃
 

*****

  • கருத்துக்கள உறவுகள்

பூமி பாதுகாப்புக்காக செயற்படும் அந்த யாழ்களத்து இளைஞனுக்கு நன்றி 🙏

  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2024 at 00:22, putthan said:

சில அமைப்புக்கள்,தனிநபர்கள் செய்கின்றனர்.....
ஐங்கரநேசனின் பசுமை புரட்சி அமைப்பு மற்றும் சில யூ டியுப் இளைஞர்கள் செய்கின்றனர் ...
யாழ்கள புத்தன் என்ற இளைஞனும் வருடத்திற்கு 75 மரம் என்ற வகையில் கடந்த 3 வருடங்களாக செய்து வருகிறார் என்று யாழ் களத்தில் பார்த்த ஞாபகம்😃

 

-****

யாரப்பா அந்த புத்தன்? 🙂
புத்தனின் வழியை எம்மக்கள் பின்பற்ற வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, putthan said:

சில அமைப்புக்கள்,தனிநபர்கள் செய்கின்றனர்.....
ஐங்கரநேசனின் பசுமை புரட்சி அமைப்பு மற்றும் சில யூ டியுப் இளைஞர்கள் செய்கின்றனர் ...
யாழ்கள புத்தன் என்ற இளைஞனும் வருடத்திற்கு 75 மரம் என்ற வகையில் கடந்த 3 வருடங்களாக செய்து வருகிறார் என்று யாழ் களத்தில் பார்த்த ஞாபகம்😃

சிட்னி புத்திரன் என்ற பெயரில் பொன்னாலைப் பகுதியில் மரக்கன்றுகள் வழங்கியது புத்தன் அண்ணா தான். அகரம் யுரியூப்பில் பார்த்தனான். யாழிலும் புத்தன் அண்ணா இணைத்திருந்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2024 at 00:22, putthan said:

சில அமைப்புக்கள்,தனிநபர்கள் செய்கின்றனர்.....
ஐங்கரநேசனின் பசுமை புரட்சி அமைப்பு மற்றும் சில யூ டியுப் இளைஞர்கள் செய்கின்றனர் ...
யாழ்கள புத்தன் என்ற இளைஞனும் வருடத்திற்கு 75 மரம் என்ற வகையில் கடந்த 3 வருடங்களாக செய்து வருகிறார் என்று யாழ் களத்தில் பார்த்த ஞாபகம்😃

 

 

******

ஆனால், மரம் நடுகிற உங்கள் பணி பாராட்டுக்குரியது, வாழ்த்துக்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயர்வடையும்!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்திருக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்வதற்காக போதியளவு நீரை பருகுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, வறட்சியான காலநிலையைக் கருத்தில் கொண்டு விவசாய நடவடிக்கைளுக்காக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்ப்பாசன, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி விவசாயிகளை கோரியுள்ளார்.

https://thinakkural.lk/article/294336

  • கருத்துக்கள உறவுகள்

73000 மரக்கன்றுகளை இலங்கை விமானப்படையினர் வடமாகாணத்தில் இந்த வாரம் நடுகின்றனர் ....73 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மே வரை வெப்பமான காலநிலை தொடரும்

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை இந்த ஆண்டு மே மாதம் வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன, வரட்சியான காலநிலை மார்ச் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து ஏப்ரல் இறுதி வரை தொடரும்.

மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் போதுதான் வெப்பமான காலநிலை முடிவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/295542

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிக வெப்பநிலையால் பாடசாலைகளில் விளையாட்டுப்போட்டிகள் ஒத்திவைப்பு! - கல்வி அமைச்சு

17 MAR, 2024 | 10:57 AM
image
 

அதிக வெப்பநிலை நிலவுவதால் விளையாட்டுப் போட்டிகளை  ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடும் வெப்பநிலை நிலவுவதன் காரணமாக பிள்ளைகளின் பாதுகாப்புக் கருதியே  இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/178919

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை மேலும் அதிகரிக்கும் வெப்பநிலை!

Published By: VISHNU    17 MAR, 2024 | 09:12 PM

image

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை திங்கட்கிழமை (18) கவனத்துக்குரிய மட்டத்துக்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு, மேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், இரத்தினபுரி மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனத்துக்குரிய அளவில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, போதியளவு தண்ணீர் அருந்துதல், நிழலான பகுதிகளில் இயன்றவரை ஓய்வெடுத்தல், கடுமையான வெளிச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/178961

  • கருத்துக்கள உறவுகள்

அதிகரிக்கும் வெப்ப நிலை – விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்குமாறு அறிவிப்பு

March 18, 2024
 

அதிக வெப்பநிலை நிலவுவதால் விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடும் வெப்பநிலையால் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேநேரம், கடந்த சில வாரங்களாக நாட்டின பல பகுதிகளில் அதிக வெப்ப காலநிலை நிலவுகிறது.

இதன்படி மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று திங்கட்கிழமை கவனத்துக்குரிய மட்டத்துக்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மன்னார், வவுனியா, மொனராகலை, இரத்தினபுரி மாவட்டங்களிலும் கிழக்கு, வடமேற்கு, வடமத்திய, மேல் மாகாணங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனத்துக்குரிய அளவில் இருக்கும்
என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, போதியளவு தண்ணீர் அருந்துதல், நிழலான பகுதிகளில் இயன்றவரை ஓய்வெடுத்தல், கடுமையான வெளிச் செயல்பாடுகளை கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.


 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

19 MAR, 2024 | 10:01 AM
image

வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார். 

விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம்.

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார். 

செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர்.

https://www.virakesari.lk/article/179087

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை நாடு முழுவதும் அதிக வெப்பநிலை!

weather.jpg

மனித உடலால் உணரக்கூடிய அதிக வெப்பநிலை, நாளை (20) முழுவதும் நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில் சில இடங்களில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொணராகலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

https://thinakkural.lk/article/296333

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருணாகலில் அதிக வெப்பநிலை பதிவு!

too-much-heat.jpg

இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் குருணாகல் மாவட்டத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதன்படி, குறித்த மாவட்டத்தில் வெப்பநிலை 36.9 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், புத்தளம் மாவட்டத்தில் 36.7 பாகை செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் வெப்பநிலை 33.5 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/296499

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடும் மழை! 31ஆம் திகதி வரை மழை தொடருமாம்!

22 MAR, 2024 | 06:09 PM
image

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையையடுத்து இன்று (22) கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் கடும் மழை பெய்துவருகிறது.

குறிப்பாக கொழும்பு நகரின் பல பகுதிகளில் கடும் மழை பெய்வதால் வெள்ள நீர் நிரம்பியுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 31ஆம் திகதி வரை மழை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகக்கது. 

IMG_1550.JPG

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றம் காரணமாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என இன்று வெள்ளிக்கிழமை (22) மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய இணைப்பாளர் சுப்பிரமணியம் ரமேஸ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பல தடவை மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடய மழையோ பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

Ramas.jpg

வானிலை தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

சப்ரகமுவ மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் மேலான பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பனி மூட்டம் காணப்படும்.

அதேவேளை இடியுடன் கூடிய மழையின்போது பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இதேவேளை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புக்களை பொறுத்தளவில் திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு அம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடல் பரப்புக்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

IMG_1548.JPG

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

நாட்டை சூழவுள்ள கடல் பரப்புக்களில் காற்றானது கிழக்கு அல்லது மாறுபட்ட திசையில் வீசுவதுடன் மணிக்கு 20 தொடக்கம் 30 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும்.

புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புக்களுக்கு அப்பாற்பட்ட கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது 40 தொடக்கம் 45 கிலோமீற்றர் வரை அவ்வப்போது அதிகரிக்கக்கூடும்.

புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையும் அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்பில் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்றார். 

இதேவேளை திடீர் காலநிலை மாற்றம் காரணமாக கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் நேற்று வியாழக்கிழமையில் இருந்து அவ்வப்போது மழை பெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG_1549.JPG

https://www.virakesari.lk/article/179458

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு, கம்பஹா, மன்னார் மாவட்டங்களில் இன்று கடும் வெப்பம்!

23 MAR, 2024 | 06:41 AM
image

வடமேல்  மாகாணத்திலும் அத்துடன் கொழும்பு, கம்பஹா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும்  இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். 

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில்  பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின்  சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும்  100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மத்திய,சப்ரகமுவ மற்றும் ஊவா  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை   மாவட்டங்களின் சில இடங்களிலும்  காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு  கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.  

 

திருகோணமலை தொடக்கம்  மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்குஅப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல்  அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் கிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். 

புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் காலி தொடக்கம் மாத்தறை ஊடாக  ஹம்பாந்தோட்டை  வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 கிலோமீற்றரிலம் கூடிய வேகத்தில் அடிக்கடி  காற்று அதிகரித்து அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/179473

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேல், வடமேல், தென் மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, அனுராதபுரம் மாவட்டங்களில் அதிகரித்த வெப்பம் நிலவும் ! 

25 MAR, 2024 | 06:14 AM
image

மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார், வவுனியா மற்றும் அனுராதபுரம்  மாவட்டங்களிலும்  இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், 

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலன்நறுவை மாவட்டத்திலும்  இடைக்கிடையே  மழை பெய்யக்கூடும். 

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின்  பல இடங்களில்  பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மத்திய,சப்ரகமுவ மற்றும் ஊவா  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும்  காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு  கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். 

திருகோணமலை தொடக்கம்  மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்குஅப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கொழும்பு தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான  கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல்  அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத்  திசையில் இருந்து  காற்று வீசும். 

புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி  காற்று அதிகரித்து அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/179611

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சப்ரகமுவ, மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, அனுராதபுரம், காலி மாவட்டங்களிலும் கடும் வெப்பம்!

26 MAR, 2024 | 06:18 AM
image

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார், வவுனியா, அனுராதபுரம் மற்றும் காலி மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், 

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலன்நறுவை மாவட்டத்திலும்  இடைக்கிடையே  மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின்  பல இடங்களில்  பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

தென் மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும்  காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு  கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

திருகோணமலை தொடக்கம்  மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை  ஊடாக காலி  வரையான கரையோரத்திற்குஅப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கொழும்பு தொடக்கம் காலி வரையான  கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல்  அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத்  திசையில் இருந்து  காற்று வீசும். 

புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி  காற்று அதிகரித்து அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/179705

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15 மாவட்டங்களுக்கு இடி, மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

Published By: DIGITAL DESK 3    27 MAR, 2024 | 03:17 PM

image

நாட்டில் இன்று புதன்கிழமை (27)  மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம், மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான  இடி, மின்னலுடன்  கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

50.jpg

https://www.virakesari.lk/article/179826

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் சில பகுதிகளில் இன்று பலத்த மழை!

weather-1-300x200.jpg

நாட்டின் சில பகுதிகளில் இன்று (28) 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தென் மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/297373

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் சில மாவட்டங்களுக்கு வெப்ப அபாய எச்சரிக்கை!

மேல், வடமேல், வடமத்திய, வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்றைய தினம் வெப்பநிலை கடுமையாக இருக்கும் என ‘ இயற்கை அபாயங்கள் முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

heat.jpg

மேல் , வடமேல் வடமத்திய, வடக்கு மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரியின் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இயற்கை அபாயங்கள் ஆரம்ப எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.

Untitled-6-1.jpg

மனித உடலில் வெப்ப சுட்டெண்ணின் தாக்கம் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் இது சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் ஆலோசனையின் பேரில் தயாரிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/297734

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.