Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஆயுத படையினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கையை 135000 ஆக இந்த வருட இறுதிக்குள் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே சுமார் 150000 இராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை இராணுவத்தில் ஏற்படும் திடீர் மாற்றம் | Tri Forces Halt General Recruitment

இராணுவத்தின் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பகுதியாக குறைக்கப்படும் என கடந்த ஆண்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்திருந்தார்.

 

 

2030 ஆண்டில் இராணுவத்தின் எண்ணிக்கை 

இதற்கமைய, எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் இராணுவ படையினரின் எண்ணிக்கை ஒரு இலட்சமாக பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி கொள்கைகளின் அடிப்படையில் இவ்வாறு படைத்தரப்பு குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு அளவில் தொழில்நுட்ப ரீதியாகவும் மூலோபாய ரீதியாகவும் சமநிலையான பாதுகாப்பு படை ஒன்றை உருவாக்கும் நோக்கில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு அளவில் கடற்படை மற்றும் விமானப்படையினரின் எண்ணிக்கை 35000 ஆக குறைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இராணுவ படைக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை இராணுவத்தில் ஏற்படும் திடீர் மாற்றம் | Tri Forces Halt General Recruitment

புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கை

புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக எதிர்வரும் சில மாதங்களில் இராணுவத்தின் எண்ணிக்கை 35000னால் குறைவடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விமானப்படையினர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதாக  விமானப்படை பேச்சாளர் குரூப் கேப்டன் துஷான் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடற்படைக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடரும் எனவும் ஓய்வு பெற்றுக்கொள்ளும் அதிகாரிகளின் எண்ணிக்கையும் புதிதாக இணைத்துக்கொள்ளப்படுவோரின் எண்ணிக்கையிலும் வித்தியாசம் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இலங்கை இராணுவத்தில் ஏற்படும் திடீர் மாற்றம் | Tri Forces Halt General Recruitment

இதனால் தொடர்ச்சியாக கடற்படைக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கடற்படை பேச்சாளர் கேப்டன் கயான் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இலங்கையில் தொழிற்சங்க போராட்டங்கள் நடைபெறும் போது படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படுகின்றது.

எனினும் படையினரின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு ஏனைய நடவடிக்கைகளில் படையினரை ஈடுபடுத்த முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://tamilwin.com/article/tri-forces-halt-general-recruitment-1707878229

இலங்கை இராணுவத்தில் ஏற்படும் திடீர் மாற்றம் | Tri Forces Halt General Recruitment

இந்த படம் வெளிவந்த இணையம் https://www.adaderana.lk/news.php?nid=91365அதில் வந்த செய்தியின் சுருக்கம் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலும் பாகிஸ்தானின் கப்பலும் ஒரே நேரத்தில் இலங்கைக்கு வருகின்றன. நேரம் கிடைத்தால் தமிழாக்கம் செய்து போடுகிறேன் .

 கொப்பி பண்ணிய தமிழ் விண்ணுக்கு அதன் ஆங்கில மொழியாக்கம் தெரியவில்லை எல்லாம் ai செய்த வேலை .😀

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ராணுவ குறைப்பு சம்பந்தமாக பேச படட போது சில குழப்பங்கள் ஏட்பட்ட்து. அப்போது பிரசன்னமாகி இருந்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி சில மாற்று கருத்துக்களை கூறினார்.

அதாவது ராணுவத்தை குறைக்கும்போது குடும்ப பொருளாதார பிரச்சினை உருவாகும் என்றும் உயர் அதிகாரிகளின் கொடுப்பனவு, வசதிகளை குறைக்கும் போது செலவு மிச்சப்படுத்தலாம் என்றும் கூறினார். அதனால் உயர் மடடத்தில் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இப்போது மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

இப்படி ஆட் சேர்ப்பில் குறைப்புகள் ஏட்படுத்தும்போது நிச்சயமாக சிங்கள மக்களை பாதிக்கும். எப்படி இருந்தாலும் IMF இன் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு இருக்கின்றது.  

  • கருத்துக்கள உறவுகள்

வேலை நிறுத்தத்தின் போதும் இராணுவத்தை பயன்படுத்துகிறார்கள்.
மற்றது செஙகடலில் பயன்படுத்துவது தான் சகிக்க முடியவில்லை. (கடல்படையை)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டின் இராணுவம் (military) என்பது தரைப்படை மட்டுமா. அல்லது தரை, ஆகாய, கடல் ஆகிய மூன்றையும் உள்ளடக்கியதா?. இலங்கை நாட்டின் ஆயுதப்படை சுமார் 3.5 இலட்சம் பேராக இருக்கையில் 1.5 இலட்சம் பேரைக்கொண்ட தரைப்படையின் எண்ணிக்கையை மட்டும் குறைக்கும்படியா IMF  கேட்டது? குளறுபடியான தமிழாக்கத்தில்  செய்தியின் முக்கியத்துவம் வேண்டுமென்றே குறைக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இதன் தாக்கத்தை சிங்களப் படை ஆக்கிரமிப்பு தமிழர் தேசத்திலும் அவதானிக்க முடிக்கிறது. பெரும் பணச் செலவில்.. அமைக்கப்பட்டிருந்த.. சொகுசு விடுதிகளுடன்.. பூங்காக்கள்.. தடாகங்களுடன்... மைதானங்களுடன் அமைக்கப்பட்ட இராணுவ தலைமையகங்கள் எல்லாம் வெறிச்சோடிப் போயுள்ளன.

இவங்கள் இவ்வளவு வசதிகளையும் விட்டிட்டு போவாங்களா.. என்று அங்கலாய்த்த மக்கள்.. இந்த வெறிச்சோடிப் போன ஆக்கிரமிப்பு வளாகங்களை அண்டிய காணிகளில் இம்முறை நெல் மற்றும் தமது விவசாய நடவடிக்கைகளை செய்துள்ளமை அவதானிக்கப்படக் கூடியதாக இருக்குது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும்,அமெரிக்காவும் சொல்லியிருப்பினம் இனி எவன் வந்து உங்களை பயப்படுத்தினாலும் நாங்கள் உங்களை பாதுகாப்போம்....முள்ளிவாய்காலில் மக்களை அழித்து உங்களை காப்பாற்றியது போல்...ஐ நா சபை ,எங்கள் கையில்....பயப்பட வேண்டாம் ..என கூறியிருப்பார்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.