Jump to content

யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, putthan said:

சிங்கன் ...மாவோ வின் சிந்தனைகளை தமிழருக்கு மெல்ல மெல்ல டிச் பண்ணுகிறார் போல....

மாவோவின் சிந்தனை எதுவாக இருந்தாலும் அவர்கள் உலகின் முதலாவது வல்லரசு என்ற இடத்தை நெருங்கி கொண்டிருக்கிறார்கள். அதாவது இலங்கை தமிழனும் ஒரு நாளைக்கு அந்த நிலைமைக்கு, குறைந்தது இரண்டாவது இடத்துக்காகவாவது  வரப்போகிறான் என்று சொல்லுகிறீர்கள். அப்படி என்றால் டக்ளசின் கொள்கைகளை வரவேற்கலாம். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

மாவோவின் சிந்தனைகள் இப்படியானதா?

பண்பாட்டு புரட்சி செய்கிறார்...அது தான் சிலர் இடக்கிட  பண்பாடு க்லாச்சாரம் என்று எழுதுவினம்...தமிழனின் பண்பாடு,கலாச்சாரம் மாற்றவேண்டும் என எழுதுவினம்....இருக்கிறவனிடமிருந்து இல்லாதவனுக்கு கொடுக்கினமாம்...

பட்டம் பெற்றவர்கள் உழைப்பாளிகளின் கஸ்டத்தை புரிந்து கொள்ளவேணும் என பல அட்டகாசங்களை மாவோ செய்திருக்கிறார் 

1 hour ago, Cruso said:

மாவோவின் சிந்தனை எதுவாக இருந்தாலும் அவர்கள் உலகின் முதலாவது வல்லரசு என்ற இடத்தை நெருங்கி கொண்டிருக்கிறார்கள். அதாவது இலங்கை தமிழனும் ஒரு நாளைக்கு அந்த நிலைமைக்கு, குறைந்தது இரண்டாவது இடத்துக்காகவாவது  வரப்போகிறான் என்று சொல்லுகிறீர்கள். அப்படி என்றால் டக்ளசின் கொள்கைகளை வரவேற்கலாம். 😜

வல்லரசு கனவுகளை நான் காணவில்லை ....டக்கிளசினால் அதை செய்யவும் முடியாது.....

தமிழர் நிலம் காப்பாற்றப்பட்டு அங்கு ஒர் அதிகாரம் கொண்ட சபை நடைமுறையிலிருந்தால் அதுவே பெரிய மனநிறைவாக இருக்கும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, putthan said:

 

வல்லரசு கனவுகளை நான் காணவில்லை ....டக்கிளசினால் அதை செய்யவும் முடியாது.....

தமிழர் நிலம் காப்பாற்றப்பட்டு அங்கு ஒர் அதிகாரம் கொண்ட சபை நடைமுறையிலிருந்தால் அதுவே பெரிய மனநிறைவாக இருக்கும்....

உங்கள் ஆசை நிறைவேற மனம் நிறைந்த வாழ்த்துக்கள். 😗

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி அமைச்சு, பொதுச்சேவை ஆணைக்குழுவின் விதிகளுக்கமைய அதிபர் நியமனம் இடம்பெற வேண்டும் -  யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம்

29 FEB, 2024 | 12:05 PM
image

கல்வி அமைச்சு மற்றும் பொதுச்சேவை ஆணைக்குழுவின் விதிகளுக்கு அமையவே அதிபர் நியமனம் இடம்பெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ். மத்திய கல்லூரியின் அதிபர் நியமனம் தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும்போதே மேற்கண்டவாறு பழைய மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இது தொடர்பாக மேலும் கூறுகையில்:-

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் என்பது 1909ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.

இன்று வரை அந்த சங்கம் எதுவித பிரச்சினையும் இன்றி தொடர்ச்சியாக இயங்கி வருகிறது.

புதிய பதில் அதிபர் பதவியேற்றதன் பின்னர், சில காரணங்களுக்காக பழைய மாணாக்கர் சங்கம் என்ற பெயரில் இன்னொரு அமைப்பு உருவாக்கப்பட்டது.

அந்த சங்கத்துக்கும் எமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அவர்கள் உருவாக்கியது பழைய மாணாக்கர் சங்கம். இது கடந்த ஆறு மாதத்துக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும். இது சம்பந்தமான வழக்கு கூட தற்பொழுது நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.

பழைய மாணவர் சங்கமாகிய நாங்களே தற்பொழுது புதிதாக உருவாக்கப்பட்ட பழைய மாணாக்கர் சங்கத்துக்கு எதிராக வழக்கினை தாக்கல் செய்துள்ளோம்.

பழைய மாணவர் சங்கத்தை பொறுத்தவரையில் நாங்கள் இவர்தான் அதிபராக வரவேண்டும்; அவர்தான் அதிபராக வரவேண்டும் என்று எந்த ஒரு நிபந்தனையும் விதிக்கவில்லை. 

எங்களைப் பொறுத்தவரையில் சட்ட திட்டங்களுக்கு அமையவாக கல்வி அமைச்சினதும் பொதுச் சேவை ஆணைக்குழுவினதும் விதிகளுக்கு அமைவாக ஓர் ஒழுங்குமுறையில் தெரிவு செய்யப்பட்ட அதிபர் வரவேண்டும் என்பதேயாகும்.

அவ்வாறான ஒருவரை நாம் ஆதரிப்போம். அதுவே எமது நிலைப்பாடாகவும் இருக்கிறது.

குறிப்பாக, இந்த அதிபர் விடயத்தில் நாங்கள் தாய் சங்கமாக இருக்கிறோம். 

கனடா மற்றும் இங்கிலாந்து, கொழும்பைச் சேர்ந்த எமது பழைய மாணவர் சங்கங்களும் எமது நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

118 வருடங்கள் பழமையான சங்கமும் எமது  சங்கமாகும். ஆகவே, எமது செயற்பாடுகள் பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் அமைய வேண்டும். அதுவே எமது நிலைப்பாடாகும் என தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/177580

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மத்திய கல்லூரி அதிபர் தெரிவு - பெற்றோர்கள் விடுத்துள்ள கோரிக்கை!

29 FEB, 2024 | 04:44 PM
image

யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தின் எதிர்கால வளர்ச்சியைத் தடுப்பதற்கு எடுக்கப்படும் பாதக முயற்சிகளை பெற்றோர்கள் ஆகிய எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதென யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபர் தெரிவு குறித்து பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபர் தெரிவு குறித்து நேற்றைய தினம் (28) பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளனர். 

அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாவது,

2023.03.02ஆம் திகதி தொடக்கம் எமது கல்லூரிக்கு பதில் அதிபராக நியமிக்கப்பட்ட திரு. சி. இந்திரகுமார் (SLEAS) எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு அயராது உழைத்து வருகின்றார்.

முன்னைய காலத்தினை விட இவ்வதிபர் பதவியேற்ற குறுகிய காலத்தில் எங்களுடைய பிள்ளைகளின் கல்வி மற்றும் கல்விசாரா செயற்பாடுகளில் வளர்ச்சியை ஏற்படுத்தக் காட்டிய சிறப்பான திட்டமிடலுடன் கூடிய அணுகுமுறைகள் எங்களை மகிழ்வடைய வைத்ததுடன், பெற்றோர்கள் ஆகிய எங்கள் மத்தியில் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கை மிகவும் வலுவாக கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

அதிபர் சி. இந்திரகுமார், எங்களுடைய பிள்ளைகளின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு நிரந்தர நியமனம் வழங்குமாறு பெற்றோராகிய நாங்களும் எங்களுடைய கல்லூரியின் பழைய மாணவர்களும், எமது பாடசாலையின் பழைய மாணவராகிய கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரியிருந்தோம். 

இக்கோரிக்கை தொடர்பில் எதுவித அரசியல் தலையீடுகளும் கையாளப்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். 

மேலும், எங்களுடைய கோரிக்கைக்கு இணங்கவே அமைச்சர் அவர்கள், பிள்ளைகளின் எதிர்கால அடைவுகளின் நியாயங்களைச் சமூகம் சார்ந்து ஆழமாக ஆராய்ந்து செயற்படுவது எங்களுக்கு பக்கபலமாக இருப்பது வெளிப்படையான ஒன்றாகும்.

மேலும், இவ்வதிபர் தன்னலம் சாராது யாழ்ப்பாணத்தின் கல்வி மற்றும் கல்விசாரா மேம்பாட்டுக்கு பெயர் குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு பாடசாலையொன்றை உருவாக்க தீவிர முயற்சி எடுத்துவருவதால் பெற்றோர் மற்றும் மாணவர் மத்தியில் இப்பாடசாலையின் பெயர் பேசுபொருள் மட்டுமன்றி, மாணவர் கற்றலுக்கான அனுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. 

எனவே இவற்றை இழந்து யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தின் எதிர்கால வளர்ச்சியைத் தடுப்பதற்கு எடுக்கப்படும் பாதக முயற்சிகளை பெற்றோர்கள் ஆகிய எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதென்பது வெளிப்படை உண்மையாகும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றுள்ளது. 

 

kr.jpg

https://www.virakesari.lk/article/177600

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

எங்களுடைய கோரிக்கைக்கு இணங்கவே அமைச்சர் அவர்கள், பிள்ளைகளின் எதிர்கால அடைவுகளின் நியாயங்களைச் சமூகம் சார்ந்து ஆழமாக ஆராய்ந்து செயற்படுவது எங்களுக்கு பக்கபலமாக இருப்பது வெளிப்படையான ஒன்றாகும்.

IMG-5922.jpg

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

IMG-5922.jpg

கல்வித் துறை மட்டுமல் எல்லாமே போகும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

IMG-5922.jpg

கல்வித்துறை போகவில்லை  மீன்பிடி அமைச்சர் தான்  கல்வித்துறைக்குள்  நீந்தி வந்துள்ளார் 

அவர் படித்த படசாலை 

அவரது படசாலை 

அவர் விரும்பும் ஒருவர் தான் அதிபர் பதவியில் இருக்க முடியும் ஆண். பெண்  என்பது எல்லாம் நொண்டி சாட்டுகள்  உலகின் முதல் பெண் பிரதமர்  இலங்கையை சேர்ந்தவர்   அவரது ஆட்சியில் ஆண்களும் வாழ்ந்தார்கள் 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

2023.03.02ஆம் திகதி தொடக்கம் எமது கல்லூரிக்கு பதில் அதிபராக நியமிக்கப்பட்ட திரு. சி. இந்திரகுமார் (SLEAS) எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு அயராது உழைத்து வருகின்றார்.

நாலு வருடங்கள் அவர் சேவை ஆற்றலாம் .ஏன் உடனடியாக அவருக்கு இடமாற்றமும் பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது....
தேசிய பாடசாலை கல்வி அமைச்சினால் நடத்த பட வேண்டும்....இவர் மக்களை தூண்டிவிட்டு போராட்டம் ந்டுத்துகிறார்கள்...

மீன்பிடிப்பதற்கு போராட்டம்,கல்வி கற்பதற்கு போராட்டம்

20 minutes ago, Kandiah57 said:

கல்வித்துறை போகவில்லை  மீன்பிடி அமைச்சர் தான்  கல்வித்துறைக்குள்  நீந்தி வந்துள்ளார் 

அவர் படித்த படசாலை 

அவரது படசாலை 

அவர் விரும்பும் ஒருவர் தான் அதிபர் பதவியில் இருக்க முடியும் ஆண். பெண்  என்பது எல்லாம் நொண்டி சாட்டுகள்  உலகின் முதல் பெண் பிரதமர்  இலங்கையை சேர்ந்தவர்   அவரது ஆட்சியில் ஆண்களும் வாழ்ந்தார்கள் 

நல்ல வேளை நீந்தி வந்திட்டார்...அந்த நாள் ஞாபகத்தில் கடல்கலனில் வராமல் விட்டிட்டார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

கல்வித் துறை மட்டுமல் எல்லாமே போகும்?

அடுத்த பொது தேர்தலில் ஐந்து எம்பிக்களை தனது கட்சி சார்பாக தெரிவு செய்ய கடுமையாக உழைக்கின்றார்...அதனால் எல்லா துறைகளிலும் போகிறது அவரது ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கல்லூரி பெண் அதிபர் நியமனம் இரத்து!

1251534651.jpg

மாதவன்)

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக நியமன கடிதம் வழங்கப்பட்ட பெண் அதிபராக திருமதி செல்வ குணபாலனின் நியமனத்தை தற்காலிகமாக இடம் நிறுத்துவதாக கல்வி அமைச்சின் செயலாளர் வசந்த பெரகரா எழுத்து மூலமான கடிதத்தை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது செயலாளரினால் (22.02.2024) ல் திகதி இடப்பட்ட Ese/App/SLPS/04/11/2023 கடிதத்தின் பிரகாரம் மத்திய கல்லூரி அதிபராக நியமிக்கப்பட்ட உங்கள் நியமனத்தை தற்காலிகமாக இடை நிறுத்துவதாக தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுச் சேவை ஆணைக்குழுவின் கீழ்  நிறுவப்பட்ட கல்வி சேவை குழு வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரம் கல்வி அமைச்சின் செயலாளர் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.(ப)
 

https://newuthayan.com/article/மத்திய_கல்லூரி_பெண்_அதிபர்_நியமனம்_இரத்து!

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.