Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூப்புனித நீராட்டுவிழா விமர்சையாக செய்தல்

Featured Replies

********

Edited by harikalan

மேல இதில கேட்பது ஒன்றும் பொருத்தமாக இல்லை. அவனவன் விருப்பத்திற்கு செய்யுறாங்கள். சனங்களை சட்டம் போட்டு கட்டுப்படுத்த முடியாது. காசு இருப்பவர்கள் விமரிசையாக செய்வது தவறாக தெரியவில்லை. ஆனால் காசு இல்லாதவர்கள் கடன் வாங்கிச் செய்து நட்டப்படுவது அவர்கள் கவலையீனமே. இதை பெண் அடிமைத்தனம் என்றும் கூறுவதற்கு இல்லை. ஆண்களுக்கும் இப்போது விமரிசையாக இப்படி பிறந்தநாள் போன்றவை கொண்டாடுகின்றார்கள். விரும்புவன் கலர் காட்டுறான், நாம் என்ன செய்யமுடியும்? எம்மையும் விழாவிற்கு அழைத்தால் நாமும் அங்கு சென்று பொழுதுபோக்கிவிட்டு வரமுடியும்.

கலைஞன்

பூப்புனித நீராட்டுவிழா தேவை இல்லாதது என்பது என்கருத்து அதுவும் இக்காலத்துக்கு ஏற்றது அல்ல என நினைகின்ரேன்.பெண் தாயாகுவதற்கு தயாரான பின் கொண்டாடப்படுவெதே பூப்புனித நீராட்டு விழா அதாவது அந்தகாலத்தில் தாயாக தகுதியான பெண் தன் வீட்டில் இருப்பதாக காட்டி கொள்வதற்காகவே இதனை செய்வதாகவும் இது பெண் கேட்கலாம் என்பதற்காக நடத்தப்படும் நிகழ்வு என நான் கேள்விப்பட்டேன்

கலர் காட்டுவதற்கு கொன்டாடுவது என்பது கவலைக்குரியது.பூப்புனித நீராட்டுவிழாவினை ஊரை கூட்டி செய்யும் நிகழ்வு அல்ல என்பது எனது வாதம் அது தேவை அற்றது.எனக்கு தெரிந்த ஒருவரின் மகளின் பூப்புனித நீராட்டுவிழா இங்கு நடந்தது அதற்கு அவர் மாமன் மச்சான் என பலரையும் வெளிநாட்டில் இருந்து வரவளைத்திருந்தார் இது விளம்பரத்துகாக செய்யப்படுவதாக இருந்தாலும் பெண்ணின் மனம் எப்படி இருக்கும் என்பதனை பெண்ண் ஒருவராலேயே சொல்லமுடியும் களப்பெண்மணிகள் இதனை எவ்வாறு எதிர்நோக்குகின்றார்களோ என எனக்கு தெரியவில்லை

"பூப்புனித நீராட்டுவிழா என்பது பெண்களை போற்றும் ஒரு நிகழ்வு. தமிழர்கள் பெண்களுக்கு எவ்வாறாக மதிப்பைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதற்கு சான்று. தமிழரின் பண்பாட்டை கேள்விக்குள்ளாக்கி கேவலப்படுத்துவதே பலரது வேலையாகிவிட்டது. எல்லாவற்றையும் இழந்துவிட்டு தமிழரின் அடையாளம் தனித்துவம் என்று எதைக் காட்டப் போகிறீர்கள்? பகுத்தறிவு, பெண்ணியம் என்கிற போர்வையில் தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை அழித்து முடிவில் தமிழ்ச் சமூகத்தை இல்லாதொழிக்கும் சதித்திட்டத்தை நாம் அம்பலப்படுத்துவோம். புனிதமான ஒரு நிகழ்வை விளம்பரம், முட்டாள்தனம், பெண்ணடிமைத்தனம் என்று சொல்லி கீழ்நிலைப்படுத்துவது மக்கள் மனதை நோகடிக்கும் ஒரு செயலாகும். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்" :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

பூப்புனித நீராட்டு விழா என்பது எல்லா ஆண்களுக்கும் பாலியல் உணர்வைத் தூண்டுகின்ற செயல். அதற்குப் போகின்ற எல்லோரும் அந்த எண்ணத்தோடு தான் தான் போகின்றார்கள். *** பகுத்தறிவு, பெண்ணியம் என்ற பெயரில் நாம் கட்டாக்கலிகள் போல ஊர் முழுக்க அலைந்து இன்னோரன்ன பலன்களைப் பெறுவோம். எதற்கேடுத்தாலும் ஆங்கிலேயனைப் பார், ஆங்கிலேயனைப் பார் என நாக்கு வடிப்போம்.அது தான் நாங்கள் பகுத்தறிந்து பெற்ற அறிவாகும்.

எனவே எம் சமுதாயத்தை டேட்டிங்கிற்கும், நிர்வாண சங்கத்திற்கும் அனுப்பி கற்பைப் பாதுகாப்போம்.

*** நீக்கப்பட்டுள்ளது - இணையவன்

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

பூப்புனித நீராட்டு விழா என்பது எல்லா ஆண்களுக்கும் பாலியல் உணர்வைத் தூண்டுகின்ற செயல். அதற்குப் போகின்ற எல்லோரும் அந்த எண்ணத்தோடு தான் தான் போகின்றார்கள்.

ஆஆஆஆஆஆஆஆஅ

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆஆஆஅ

என்ன நீங்களும் இப்ப வாயைப் பிளக்கின்றீர்கள். ஆண்கள் தான் அப்படி என்று சொன்னால்?.....

இதை வந்து வெறுமனே "ஆ" என்று வாயைப் பிளப்பதன் மூலம் முடித்துக் கொள்ளக்சூடாது. இது மாபெரும் தத்துவமாகும். பெண்ணியம் என்று கதைக்கின்ற எம் பெண்குலத்து விடுதலை விரும்பிகளும், பகுத்தறிவு கதைக்கின்றவர்களும் கண்டுபிடித்த உண்மையிது.

யாழ்களத்திலும் பாருங்கள். பூப்புனித நீராட்டு விழா என்பது பெண்ணை அடிமைப்படுத்துவதாக பல ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். இவ்வளவு காலமும் யாழ்களத்தில் இருக்கின்ற நீங்கள் இந்தப் பகுத்தறிவைப் பெறாததது வேதனையான செயலாகும்.

பெண் தாலி கட்டுகின்றதால் தான், பெண்ணை ஆண் கொடுமைப்படுத்துறதாகவும், அடிமை போலப் பார்க்கின்றதாகவும் இல்லாவிட்டால் கொடுமைப்படுத்துகின்ற ஆண்கள் கொடுமைப்படுத்தாமல் விடுவார்கள் எனவும் கண்டு பிடித்திருப்பது தமிழ் சமூகத்திற்குக் கிடைத்த மற்றுமொரு அறிவியல் சொத்தாகும்.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

பூப்புனித நீராட்டு விழா ஒரு மக்கள் குழுமத்தின் கலாசார பண்பாட்டியலின் வெளிப்பாடு. அதில் மூட நம்பிக்கை இருக்கலாம்... அல்லது அவர்கள் அளவில் அதில் ஒரு தெளிவு இருக்கலாம். அது இரண்டாம் பட்சம். உலக மக்களின் பண்பாடு கலாசாரம் என்பவை எல்லாம் அறிவியல் மட்டும் சார்ந்து எழுந்தவையல்ல. மக்கள் தங்களின் மன மகிழ்வுக்காக தங்களின் கலாசாரத்தை பண்பாட்டைப் பிரதிபலித்து இப்படிச் செய்ய முற்படுகின்றனர். அதில் தவறுகள் மூடநம்பிக்கைகள் இருக்கலாம். ஆனால் அதையே தூக்கிப் பிடிச்சிட்டு.. சாட்டு வைத்து மக்களை முழு முட்டாள்கள் என்ற நிலைக்கு கொண்டு வந்து "பகுத்தறிவு வாதம்.." என்று இங்கு பூப்புனித நீராட்டு விழா கொண்டாடுவதுதான் பெண்ணடிமைத்தனத்தின் ஆரம்பம் என்றால் அதுவும் ஒரு வகை மூட நம்பிக்கையே தான்.

பூப்புனித நீராட்டு விழா ஏன் ஆண்களுக்கு இல்லை என்று கேளுங்கள் நியாயம். கலாசாரம் பண்பாடு பெண்களுக்கு மட்டும் தானா.. என்று வினவுதல் நியாயம். ஆனால்.. பூப்புனித நீராட்டு விழா என்பது பெண்ணடிமைத்தனம் என்பதன் வெளிப்பாடு என்றால்..தாலி அணிவது பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்றால்.. மேற்குலகில் பிரித்தானியாவில் மட்டும் ஒரு நிமிடத்துக்கு 10 தொலைபேசி அழைப்புக்கள் பெண்கள் வன்முறை சார்ந்து வருகின்றன என்ற நிலையின் தோற்றுவாய் என்ன...???! பூப்புனித நீராட்டு விழாவும்.. தாலியும்.. பொட்டுமா...????! :lol::unsure::lol:

எமது பெண்கள்.. இந்த அளவுக்கு ஆண்களால் துன்புறுத்தப்படுவது ஒப்பீட்டளவில் குறைவு. மாறாகத்தான் நடக்கிறது.

பூப்புனித நீராட்டு விழா என்பது ஒரு get together for fun போன்றது.

அண்மையில் ஒரு மாணவி தனது பூப்புனித நீராட்டு விழாப் படங்களோடு பாடசாலைக்கு வந்தாள். அதை பல இன நண்பிகளுக்கும் காண்பித்து பேசியதை அவதானித்த போது.. அந்த நண்பிகள் தங்களுக்கு இப்படி ஒரு நிகழ்வே இல்லை என்று தங்களின் மன ஆதங்கத்தை வெளியிட்டத்தை அவதானித்தேன். புகலிடத்தில் பிள்ளைகள் அதை ஒரு cultural fun ஆகவே கருதுகின்றனர். பெண்ணடிமைத்தனமாவோ.. சமுதாயச் சீரழிவாவோ.. பெண்களை ஆபாசப்பண்டமாக காட்டுவதாகவோ அல்லது கருதிறதாவோ அந்தச் சின்னங்கள் பார்க்கல்ல..! அப்படிச் சிந்திக்கிற நிலையிலும் அவர்கள் இல்லை. ஆனால் இவ்வகை நிகழ்வுகளை மையப்படுத்தி பெண்ணடிமை சோடனை.. பெண்கள் மீதான விடுதலை.. என்றதெல்லாம்.. சில பெரிசுகளுக்கு வாற சிந்தனை இருக்கே அது அவர்களின் வக்கிர திசையில் அமைந்த சிந்தனைகளின் பின்னணியில் இருந்து எழுகின்றனவே தவிர சமூகப் பார்வை.. என்பது அங்கு வெகு குறைவாகவே உள்ளது.

உண்மையான பெண்கள் மீதான வன்முறைக்கான காரணிகள் வேறு எங்கோ இருக்க.. இவர்கள் காரணம் கண்டுபிடிப்பது இப்படியான சின்ன விடயங்களில் என்பதால் தான் உலகில் இன்னும் பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர். பெண்களை பெண்களும் துன்புறுத்துகின்றனர்.. ஆண்களும் துன்புறுத்துகின்றனர். அதேபோல் பெண்களால் ஆண்களும் துன்புறுத்தப்படுகின்றனர். அது மனித அவலமாக தொடர்கிறது. அது வேறு ஒரு வகையில் நோக்கப்பட வேண்டியது. அதற்கான காரணிகள் வேறு எங்கையோ இருக்கிறது. இதில் அல்ல.

பெண்ணடிமைத்தனம் என்பது பூப்புனித நீராட்டு விழாவுக்கையோ.. தாலிலையோ.. பொட்டிலையோ கிடையாது. பெண்ணின் பாதுகாப்பு..சுய சிந்தனை செயலாற்றலுக்கான மன வலிமை.. ஆளுமைத் திறன்.. திறன்.. கல்வி என்பது சார்ந்து அது இருக்கிறது. இவை மெருகேறும் போது அவை தானாக விலகும். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சரி புலம் பெயர் நாடுகளில் சுவீற் சிக்சீன் என்று கொண்டாடுகிறார்களே.இதற்கும் அதற்கும் என்ன வித்தியாசம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஈழப்பிரியன் அண்ணா!

ஆங்கிலேயர் என்ன சொன்னாலும் அதைப் பின்பற்ற வேணும். ***

கார்னிவெல் என்ற பெயரில் பெண்களை நிர்வாணமாக்கி வீதி விழாவெல்லாம் சில நாடுகளில் எடுக்கின்றார்கள். அது எல்லாம் மேற்கத்தியரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும்.

*** - நீக்கப்பட்டுள்ளது. பகுத்தறிவு பற்றி விமர்சிப்பதற்கு பெரியாரைப் பற்றிய வீண் கருத்துக்கள் தேவையில்லை - இணையவன்

Edited by இணையவன்

  • தொடங்கியவர்

***********

Edited by harikalan

மேலோட்டமாகப் பார்த்தால்... பூப்புனித நீராட்டுவிழா என்பது (புலத்தில்) பூப்படைந்த பெண் பிள்ளைகளை வைத்து செய்யப்படும் ஒருவகை வியாபாரம் தான். குறிப்பிட்டளவு முதலீட்டோடு குறிப்பிட்டளவு வருவாயைத் தேடித்தரும் வியாபாரம். சிறுவர்களைப் பொறுத்தவரை (விபரம் தெரியாதவரை) தங்களை முன்னிறுத்தி செய்யப்படுகிற போது மகிழ்ச்சியாகவே இருக்கும். குறிப்பாக பிறந்தநாள் விழாக்கள் போன்று. சில இடங்களில் பெண் பிள்ளைகள் இது போன்ற சடங்குகளை வெறுப்பவர்களாக, இப்படியான நிகழ்வை "அரியண்டமாக அல்லது அருவருப்பாக" கருதுபவர்களாகவே இருக்கிறார்கள். சில இடங்களில் அக்காவுக்கு சாமத்தியவீடு செய்தது, ஏன் எனக்கு செய்யவில்லை என்று பெற்றோரிடம் ஆதங்கப்படுகிற பெண்பிள்ளைகளும் இருக்கிறார்கள். இது சமூகம் சார்ந்து எழுப்பப்பட்டுள்ள போலிப் பிம்பங்களின் விளைவுகள் தான்.

என்ன காரணத்துக்காக முன்னர் பூப்புனித நீராட்டுவிழா செய்தார்கள் என்பதற்கு ஈழவன் சொன்ன விடயம் காரணமாக இருக்கலாம். அதே காரணத்துக்காகத் தான் இப்போதும் செய்கிறார்களா என்றால் சந்தேகமே. ஓம் அப்படித்தான் என்றால், கட்டாயமாக இந்த விழாக்களுக்கு செல்லும் வயதுக்கு வந்த ஆண்கள் "சாமத்தியப்பட்ட" பெண்ணுக்கு காதல் கடிதங்களைக் கொடுக்கலாம். அதுபோல புலத்துச் சூழலில் பூப்படைந்த பெண்களுக்கு அவசியமான பொருட்களை அன்பளிப்பாக கொடுக்கலாம் (சும்மா திரும்பத் திரும்ப நகைகளை அன்பளிப்பாகக் கொடுப்பதிலும் பார்க்க). உதாரணமாக... பெண்ணுறை, பாலியல் அறிவை வளர்க்கும் புத்தகங்கள் மற்றும் வேறும் பலவும்.

அதுபோன்று வானலைகளிலும், தொலக்காட்சிகளிலும் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்வதுபோல் இதற்கும் வாழ்த்துச் சொல்கின்ற நிகழ்வை அறிமுகப்படுத்தலாம். குழந்தைகள் மிகவும் மகிழ்வார்கள்.

புகைப்பிடித்தலில் இன்பம் கிடைக்கிறது பலருக்கு. மது அருந்துவதில் இன்பம் கிடைக்கிறது பலருக்கு. ஒரு கட்டத்தில் இவற்றுக்கு அடிமைப்பட்டுப் போகிறார்கள். இவை இன்றி பலரால் இருக்க முடிவதில்லை. இதற்கு பெயரும் அடிமைத்தனம் தான்.

இணையப்பாவனை, கணினிப் பாவனை, தொலைக்காட்சிப் பாவனை போன்றவற்றிலும் ஒரு கட்டத்துக்கு மேல் அடிமைத்தனம் வந்துவிடுகிறது. இவற்றின் பாவனையின் போது ஏதோ மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். இவை இன்றி வாழவே முடியாது போன்ற எண்ணப்பாடுகள் தோற்றம்பெறும்.

ஒன்றில் தங்கியிருத்தல் என்பது அடிமைத்தனம். கண்ணை மூடிக்கொண்டு ஒன்றை அல்லது ஒருவரை பின்பற்றுதல் என்பதும் அடிமைத்தனமே. எதையுமே கேள்விக்கும், ஆய்வுக்கும் உட்படுத்தாத நம்பிக்கை கூட அடிமைத்தனமே.

இன்று பிறந்தநாள் விழாக்களில் மெழுகுதிரி ஊதி கேக் வெட்டுவதும் கூட அடிமைத்தன வெளிப்பாடே. Nike சப்பாத்தும், Addidas சப்பாத்தும் போட்டால் தான் எங்கள் கால்கள் நடக்கும் என்பதுபோன்ற பல இளைஞர்களின் எண்ணங்களும் அடிமைத்தனத்தின் வெளிப்பாடே.

அடிமைத்தனத்துக்கு உதாரணங்களாய் ஆயிரம் சமூக விடயங்களை அடுக்கலாம். ஒருவன் தனது உடல் பலத்தால் இன்னொருவனை அடக்கியாள்வதால் மட்டும் தோன்றுவது தான் அடிமைத்தனம் என்று நினைத்தால் :lol: மூடநம்பிக்கை கூட அடிமைத்தன விளைவே. நாம் ஒரு விடயத்தை எதற்காக செய்கிறோம் என்ற தெளிவில்லாமல் எனது தாத்தா செய்தார், எனது அப்பா செய்தார், நானும் செய்யவேணும் என்றால் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

கலாசாரம் பண்பாடு அடையாளங்கள் என்பது அறிவியல் அடையாளங்கள் அல்ல. சில அறிவியலாகக் காட்டப்படலாம். அவை தொன்மைகளை இனங்காண இன்றும் காவப்படுபவை. காலத்தால் அவற்றை களைந்து எறிதல் என்பது இலகுவானது. ஆனால் காலத்தால் அழிந்ததை தேடல் என்பது மிகக் கடினமானது. கலாசாரம் பண்பாடு என்பது மனித ஆளுமையில் திறனில் செல்வாக்குச் செய்யாது அவனின் மன மகிழ்வோடு சம்பந்தப்படும் போது அதைக் காலத்துக்கும் காவுவதால் எந்தத் தீமையும் இல்லை.

பிரித்தானியா கூட பழமை பேணும் ஒரு நாடாக விளங்கிறது. ராணி.. அவரின் இருப்பு மாளிகை இவை எவையும் இன்றைய நடைமுறை உலகுக்கு அவசியமில்லை. இருந்தாலும் தக்க வைத்துள்ளனர். அப்படிப் பல நாடுகளிலும் பல உள்ளன.

மேற்குலகில் கூட மக்கள் பேய்களின் பண்டிகைகள் கொண்டாடுகின்றனர். கிறிஸ்மஸ் கொண்டாடுகின்றனர், ஈஸ்ரர் கொண்டாடுகின்றனர். மரணச் சடங்கு செய்கின்றனர். ஏன் சும்மா கொண்டு போய் புதைச்சால் புதைபடாத. எரித்தால் எரியாதா. ஏன் புதைக்க வேண்டும்..????!

யாரும் கேட்க முடியுமா.. ஜேசு உயிர்ந்தெழுந்ததுக்கு சான்று என்ன.. விஞ்ஞான விளக்கம் என்ன...ஜேசு உயிர்த்தெள என்ன குளோனிங் படிச்சவரா.. தன்னைப் போல இன்னொருவரை உருவாக்க..எந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்... இப்படியென்று. இவற்றுக்கு விடை இல்லை என்று தெரிந்தும் கேட்பது ஒரு வகை மூடத்தனமே. இப்படிக் கேட்டு விட்டதற்காக மக்கள் தங்கள் கிறிஸ்மஸ் கொண்டாடுதல் ஈஸ்ரர் கொண்டாடுதல் என்ற கலாசாரம் கலந்து வெளிப்படத்தக்க மத நிகழ்வை முடிவுறுத்தப் போவதில்லை. காரணம்.. அதில் மக்களைப் பொறுத்தவரை celebration for fun என்று அமைந்திருக்கிறது.

மக்கள் அந்தக் கொண்டாட்டங்களை அறிவியலாக்க முனையவில்லை. அதை கலாசார எல்லைக்குள் வைத்துக் கொள்கின்றனர்.

இங்கு சிலர் கலாசார மட்டத்துக்கும் சமூக அறிவியல் மட்டத்துக்கும் இடையில் வேறுபாடு புரியாமல்.. ஆட்டுக்குள் மாட்டைக் கலக்கும் வேலையைச் செய்கின்றனர். எல்லாச் சமூகங்களிலும் சில மூட நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவை மக்களின் ஆளுமை திறன் ஒற்றுமை ஒழுக்கம் நாகரிகம் இவற்றைப் பாதிக்காதவரை அவர்களின் மன மகிழ்வுக்கு என்று அனுமதிக்கப்படுகின்றன.

அதேபோல் தான்.. celebration for fun என்ற எல்லைக்குள் மக்கள் பூப்புனித நீராட்டு விழாவை நடத்தலாம்.. திருமணத்தை நடத்தலாம்.. அவற்றில் தங்களுக்கு என்று சில தனித்துவங்களைக் காட்டி.. தங்கள் cultural fun அவை என்று அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.

பூப்புனித நீராட்டு விழாவில் படம் பிடிப்பதால்.. பெண் ஒன்றும் உருக்குலைந்து மடியப் போவதில்லை. பூப்புனித நீராட்டு விழாவில் ஆண்கள் பார்த்து விடுவதால்.. அவள் மானம் இழந்து விடப் போவதில்லை. சங்கடமான சூழலுக்குள் அவள் பலருடன் கூடி ஒரு மன மகிழ்வைப் பெற செய்யப்படுகிறாள். அதுதான் அங்கு நோக்கமே தவிர.. அதற்கு ஆயிரம் மூடநம்பிக்கைகளால்... சோடணை வழங்கி.. அதை நிராகரிக்க முனைவது என்பது ஒன்றும் சாதனையன்று.

நிச்சயம் கலாசார அடையாள மன மகிழ்வு என்ற வகைக்குள்.. இதைத் தொடரலாம். அதில் தவறுகள் இருக்க வாய்ப்பில்லை. அதில் மன மகிழ்வல்ல... மன குழப்பம் என்று நினைப்பவர்கள்.. இதைச் செய்ய சந்தர்ப்பம் அற்றவர்கள் பேசாமல் விடலாம். அதற்கும் எங்கும் தடையில்லை. அதற்காக எவரையும் பெண் இல்லை என்று கருதப் போவதும் இல்லை. இப்படியான ஒரு பெரிய முக்கியமற்ற ஒன்றுக்கு... பெரிய தோற்றம் காட்டுவது.. யாழில் தொடர்கதை. கடந்த 10 வருடங்களில் இது பல தடவை இங்கு விவாதிக்கப்பட்டும்.. பலன் "0".

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

***********

Edited by harikalan

பெற்றோரே சிந்தியுங்கள்!

இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா..?

புலம்யெர் வாழ்வில் பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சனைகளின் காரணிகளில் இந்தச் சாமத்தியச்சடங்கும் ஒன்றாக இருக்கிறது.

ஒரு பெண் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப் படும் பருவம் அவள் பூப்பெய்தும் பருவம்தான். இது பற்றிய சரியான புரிந்துணர்வு புலத்தில் பல பெற்றோர்களிடம் இல்லை. இந்த நிலையில் நாம் இது பற்றிப் பேச வேண்டியதொரு கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்த 21ம் நூற்றாண்டில், இத்தனை தூரம் நாம் பல்வேறு துறைகளிலும் வளர்ந்து விட்ட நிலையில் சாமத்தியச் சடங்குகள் அவசியந்தானா? சாமத்தியச் சடங்கு எமது கலாசாரத்தில் ஏன் இடம் பிடித்துக் கொண்டது? என்பது போன்றதான கேள்விகளுக்கு மிகத் தெளிவான கருத்துக்களோ அல்லது விளக்கங்களோ எனக்கு இதுவரை சரியான முறையில் கிடைக்க வில்லை.

பல பெரியவர்களுடன் சாமத்தியச்சடங்கு பற்றிப் பேசிப் பார்த்த போது ஒவ்வொருவரும் சொன்ன அதற்கான காரணங்கள், ஒவ்வொரு விதமாகவே இருந்தன.

1 - ஆண் பெண் பாகுபாடின்றி விளையாடித் திரிந்தவளை ஆண்களில் இருந்து பிரித்து வைப்பதற்காக..

2 - எனது வீட்டில் ஒரு குமர் இருக்கிறாள். மணமகன்மார் பெண் கேட்டு வரலாம் என்பதைத் தெரியப் படுத்துவதற்காக..

3- ருதுவானால்தான் அவள் முழுமையான பெண் என்ற உடல் ரீதியான அங்கீகாரம் சமூகத்திடம் இருந்து கிடைக்கும் என்பதற்காக...

என்று காரணங்கள் நீண்டன.

இப்படியான கருத்துக்களின் மத்தியில்,

"இவள் இனி உங்கள் பிள்ளை நீங்கள்தான் அவளைக் காக்க வேண்டும்" என்று சொல்லி ஊர்மக்களிடம் பிள்ளையை ஒப்படைப்பதற்காக... சாமத்தியச் சடங்கு நடக்கிறது.

என்றும் ஒரு புலம் பெயர்ந்த பெரியவர் சொன்னார்.

இப்படியானதொரு கருத்தைக் கேட்க..., சிரிப்பாக இல்லை...! கற்றவர் ஆழ்ந்து ஆராய்ந்து ஆக்க பூர்வமானதொரு கருத்தை ஆணித்தரமாகத் தருவார் என்று தான் எதிர் பார்த்தேன். கருத்துக்கள் தருவது அவரவர் சுதந்திரம். ஆனால் எம்மத்தியில் உள்ள கற்றவர்கள் இப்படியான உப்புச் சப்பற்ற கருத்துக்களைத் தருவது எமது சமூகத்தை, எமது கலாசாரத்தை, எமது பண்பாட்டை நாமே அவமானப் படுத்துவதற்குச் சமானமாகிறது.

குறை பிடிக்கவும், குற்றம் பிடிக்கவும், பருவம் பார்த்துத் தருணம் தேடி பெண்ணைச் சீரழிக்கவுமே சமூகத்துள் ஒரு கழுகுக் கூட்டம் காத்திருக்கும். ஊரவர்தான் அப்படியென்றால் உள்ளுக்குள் அதைவிடக் கேவலம்.

அனேகமான பாலியல் வன்முறைகளும், பாலியல் துர்ப்பிரயோகங்களும் வீட்டுக்குள்தான் நடக்கின்றன. மாமாவால், சித்தப்பாவால், அக்காவின் கணவனால், அப்பாவின் நெருங்கிய நண்பனால்..... இப்படித்தான் பெரும் பான்மையான பாலியல் வன்முறைகளும், பாலியல் துர்ப்பிரயோகங்களும் அரங்கேறியுள்ளன. இன்னும் இன்னும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

வெளிநாட்டவர் மத்தியில் ஓரளவுக்காவது இவை வெளிச்சத்துக்கு வருகின்றன. ஆனால் எம்மவரிடையே இவை குமுறல்களாகவும், கோபங்களாகவும் ஆற்றாமையாகவும் பெண்களுக்குள் அடங்கிக் கிடக்கின்றன.

இவைகளை வெளியில் சொல்லி கலாச்சாரம், பண்பாடு, என்று வாயளவில் உச்சரித்து மனதுள் போலியாக வாழும் மனிதமல்லாதவர்களின் முகத்திரைகளைக் கிழித்தெறிய எம் பெண்களிடம் தைரியம் இல்லை. வெளியில் தெரிந்தால் சமூகமும், அதன் கலாச்சாரமும், அதன் பண்பாடும், பாதிக்கப் பட்ட பெண்ணையே பாழுங்கிணற்றில் தள்ளி விடும் என்ற பயம்.

இந்த நிலையில் நன்கு யோசித்துப் பாருங்கள்.

ஒரு பெண் தன்னைக் காத்துக் கொள்ள எமது கலாச்சாரமும் பண்பாடும் உதவுகிறதா? அல்லது விழிப்புணர்வும் தைரியமும் உதவுகிறதா?

என்று.

எமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் காத்து, எமது முகங்களை அழிய விடாது காப்பது ஆண், பெண் இருபாலாரதும் கடமை. அதற்காகப் போலிகளை, கலாச்சாரம், பண்பாடு என்று பொய்யாகப் பெயர் சூட்டி பெண்களில் திணித்து அவர்களை அடக்க நினைப்பது மடமை. இந்தப் பொய்களின் வேசம் புரியாது, போலிக் கலாச்சாரங்களில் தம்மைப் புதைத்துக் கொள்வது எம் பெண்களின் அறியாமை.

முதலில் எமது பெண்பிள்ளைகளிடம், எந்தப் பிரச்சனையையும் பெற்றோருடன் பேசி தம்மை நெருங்கும் துட்டர்களிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ளும் தைரியம் வர வேண்டும். பெற்றோர்களுடன் அவர்கள் இப்படியான விடயங்களை இயல்பாகப் பேசும் துணிவு ஏற்படும் படியாகப் பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்.

எமது முன்னோர்கள் வரையறுத்த அனேகமான கோட்பாடுகள் அர்த்தமுள்ள, அவசியமான விடயங்களுக்காகவே இருந்தன. அவைகள் ஒவ்வொன்றுக்குமான கரு ஆரோக்கியமானதாகவும் அழகியதாகவும் இருந்தது.

ஆனால் நீண்ட கால ஓட்டத்தில், காரணங்கள் திரிபு பட்டது மட்டுமல்லாது காரியங்களும் ஆணாதிக்க மேலோங்கலில் மிகுந்ததொரு சுயநல நோக்குடன் கட்டாயமாகத் திரிக்கப் பட்டு, இன்றைய கால கட்டத்தில் ஏன்? எதற்கு? என்ற சிந்தனைகளெதுவுமின்றி, உண்மையான, தேவையான விடயங்கள் புறக்கணிக்கப் பட்டு, கலாச்சாரம், பண்பாடு என்ற போர்வைக்குள் பொய்யான விடயங்கள் தொடர்கின்றன.

வருத்தமான விடயம் என்னவெனில் அனேகமான பெண்களுக்கு இந்தப் பொய்யான திணிப்புகளின் போலி வடிவம் புரிவதில்லை. தாம் போலிக் கலாசாரத்தில் பொசுங்கிக் கொண்டிருப்பது பற்றி அவர்கள் எந்த வித பிரக்ஞையும் கொள்வதுமில்லை.

உண்மையில் சாமத்தியச் சடங்கை கோலாகலமாக ஹோல் எடுத்து விழாவாகச் செய்யும் அனேகமான பெற்றோருக்கு சாமத்தியச் சடங்கு செய்வதற்கான காரணம் என்னவென்றே தெரியாது.

1 - வீடியோ கமராவில் எடுப்பதற்கும்,

2 - என் வீட்டுச் சாமத்திய வீடு மற்றையவர் வீட்டை விடப் பெரிதாக நடந்ததெனக் காட்டுவதற்கும்,

3 - இப்படிப் பெரிதாகச் செய்யாவிட்டால் என்ன நினைப்பார்கள் என்பதான போலி கௌரவத்துக்கும்,

4 - கொடுத்த மொய்யை திரும்பப் பெற்றுக் கடன் கழிப்பதற்கும்..,

என்றதான இன்னும் பல காரணங்களைக் காரணமாகக் கொண்டுதான், பூப்படைந்த பெண்ணைக் காட்சிப் பொருளாக வைத்து இன்று புலம்பெயர்மண்ணில் பெரும்பாலான சாமத்தியச்சடங்குகள் நடைபெறுகின்றன. இதற்கு வெறுமே கலாசாரம், பண்பாடு என்று போலி முலாம் பூசப் படுகிறது. அவ்வளவுதான்.

யேர்மனிய மருத்துவர்கள் கூறுகிறார்கள் -

ருதுவாகும் பருவத்தில், ஒரு பெண் பிள்ளையின் உளத்திலும், உடலிலும் பல் வேறு மாறுதல்கள் ஏற்பட்டு அவள் ஒரு அசாதாரண நிலைக்குத் தள்ளப் படுகிறாள். இந்த அசாதாரண நிலை அவள் மனதை மேலும் குழப்பாத வகையில், பெற்றோர்கள் "இது சாதாரண விடயந்தான்" என்பதை அவளுக்கு விளங்கப் படுத்த வேண்டும். தாழ்வு மனப்பான்மையோ தற்பயமோ அவளுக்கு ஏற்படாத வகையில் அவளுடன் நிறையப் பேச வேண்டும். ஆதரவுடன் நடக்க வேண்டும் என்றும்.

இந்த நேரத்திலான அவளின் உடலின் அதீத வளர்ச்சியினால் அவள் தோள்மூட்டுகளிலும், முதுகுப் பகுதியிலும் ஏற்படும் உபாதைகளின் தன்மையை உணர்ந்து அவளுக்குத் தாராளமான ஓய்வைக் கொடுக்க வேண்டும். அவளின் தோள்மூட்டுக்களும், முதுகும் வலுப்பெறக் கூடிய வகையில் சில உடற் பயிற்சிகளை அவள் செய்ய வழி சமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும்..

யேர்மனியப் பாடசாலை உளவியல் ஆசிரியர்கள் சொல்கிறார்கள் -

பூப்படையும் நிகழ்வை சாதாரண நிகழ்வாக எடுக்காமல் இப்படிப் பெருவிழாவாகக் கொண்டாடிப் பெரிது படுத்தும் போது, அது அந்தப் பெண்பிள்ளைகளின் மனதில் பல்வேறு பட்ட சலனங்களையும், உளவியற் தாக்கங்களையும் ஏற்படுத்தி அந்தப் பிள்ளைகளைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்ல வழி கோலுகின்றது என்று.

ஆனால் இங்கே புலத்தில் என்ன நடைமுறைப் படுத்தப் படுகிறது? பல அத்தியாவசியத் தேவைகளை பெண்பிள்ளைகள் எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில், அத்தனையையும் விடுத்து வெறுமே சாமத்தியச் சடங்கு என்ற பெருவிழா நடாத்தப் படுகிறது. இப்படிச் செய்வதால் அந்தப் பெண்பிள்ளைகள் என்ன பயனைப் பெறுகிறார்கள்?

இதைச் சண்டையாகவோ, ஆண் பெண் பாலாருக்கிடையிலான விவாதமாகவோ எண்ணாமல் யதார்த்தமாக எல்லாப் பெற்றோர்களும் சிந்தித்துப் பாருங்கள்.

யேர்மனிய மருத்துவர்கள் கூறிய இந்த ஆதரவுகள் பெற்றோர்களிடமிருந்து கிடைக்காத பட்சத்தில்தான் பெண்பிள்ளைகள் மற்றவர்கள் மேல் கோபப் படுபவர்களாகவும், எரிச்சால் படுபவர்களாகவும் காணப்படுகிறார்கள். அல்லாதுவிடில் அழுமூஞ்சிகளாகி விடுகிறார்கள்.

இந்த உடல் ரீதியான மாறுதல்கள் ஆண்களிடமும் ஏற்படுகிறதுதான். அது சற்று வேறுபாடானதாக இருந்தாலும் அவர்களுக்கும் இந்த நேரத்தில் அன்பு ஆறுதல் அரவணைப்பு என்பன தேவைப் படுகின்றன. அது கிடைக்காத பட்சத்தில்தான் அவர்களும் எரிச்சல், கோபம், மௌனம் என்பவற்றிற்கு ஆளாகிறார்கள். ஆனால் ஆண் பிள்ளைகளுக்கு வெளியில் செல்லவும் அவர்கள் விரும்பியதைச் செய்யவும் தாராளமான சுதந்திரம் இருப்பதால் பெண்பிள்ளைகளிடம் ஏற்படுமளவுக்கு பாதிப்பு ஆண்பிள்ளைகளிடம் ஏற்படுவதில்லை.

அதனால் முக்கியமாக, கட்டுப்பாடு என்ற பெயரில் பெண்பிள்ளைகளைக் கட்டி வைக்கும் எமது சமூக அமைப்பில் வளர்ந்து கொண்டிருக்கும் எமது பெண்பிள்ளைகளுக்கு இந்த சமயத்தில் பெற்றோரினது முழுஆதரவும் தேவை என்பதை தமிழ்ப் பெற்றோர்கள் மறந்து விடவோ அலட்சியப் படுத்தி விடவோ கூடாது.

சந்திரவதனா

யேர்மனி

நன்றி : http://pennkal.blogspot.com/

அது சரி இருகட்டும் ஏன் ஆண்களிற்கு இந்த வங்கசன் நடத்துறதில்லை!!நடத்தினா பம்பலா இருக்கும் தானே இதை பற்றி ஆண்கள் சிந்திக்கவில்லையா யாரும் சிந்தியுங்கோவேன்!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் ஒருவகை பணச்சடங்குகள்.

எல்லாம் ஒருவகை பணச்சடங்குகள்.

குமாரசாமி அண்ணா சொன்னதையே

நானும் நினைக்கிறேன்.

"பூப்புனித நீராட்டுவிழா என்பது பெண்களை போற்றும் ஒரு நிகழ்வு. தமிழர்கள் பெண்களுக்கு எவ்வாறாக மதிப்பைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதற்கு சான்று. தமிழரின் பண்பாட்டை கேள்விக்குள்ளாக்கி கேவலப்படுத்துவதே பலரது வேலையாகிவிட்டது. எல்லாவற்றையும் இழந்துவிட்டு தமிழரின் அடையாளம் தனித்துவம் என்று எதைக் காட்டப் போகிறீர்கள்? பகுத்தறிவு, பெண்ணியம் என்கிற போர்வையில் தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை அழித்து முடிவில் தமிழ்ச் சமூகத்தை இல்லாதொழிக்கும் சதித்திட்டத்தை நாம் அம்பலப்படுத்துவோம். b]" :rolleyes:

:lol: பூப்புனித நீராட்டுவிழா என்பது பெண்களை போற்றும் ஒரு நிகழ்வா??பெண்களை போற்றுவதுக்கு வேற நிகழ்வுகள் கிடைக்கவில்லையா?? இது தான் எங்கள் தமிழ் சமுதாயம் பெண்ணுக்கு மதிப்பு கொடுக்கும் சான்றா?? இது நான் எங்கள் பெண்களுக்கு கிடைத்த மதிப்பா,எங்கள் பாரம்பரிய பண்பாடுகள் எங்கின்றீகளே, ஆமா ஒவ்வொரு கண்ணும் அந்த பெண்னை எந்த விதமான கண்ணேட்டத்தில் பார்க்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா?மாதவிடாய் என்பது உலகத்தில் உள்ள அதைத்து பெண்ணுக்கும் வருகின்ற விடயம், இதை நாங்கள் show காட்டிக்கிட்டு திறியனும் என்று இல்லை!

இந்த காலக்கட்டத்தில் இப்படியான விழா நடப்பது நிச்சயமாக எங்கள் தமிழ் சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டை வழர்ப்பதுக்கில்லை, தனது பணத்திமிறைக்காட்டுவதுக்கு தான்!

எங்கள் தழிழீழத்தில் ,

பெண்களுக்கு எங்கள் தலைவர் என்ன மதிப்பை அழித்துள்ளார் என்பதை இங்குல்ல இளைஞர்கள் நன்றாக அறிந்தவர்கள்,இருந்தும் இப்படி பட்ட விடயத்தில் தான் பெண்களுக்கு அதிக மதிப்பை கொடுக்கப்பட்டுள்ளது என்ற கருத்துக்களை கேட்பது கவளைக்கிறிய விடயமாக அமைந்துள்ளது......

யார் மனதையும் புன்படுத்துவதுக்காக இதை எழுதவில்லை,

Edited by இனியவள்

  • கருத்துக்கள உறவுகள்

:o பூப்புனித நீராட்டுவிழா என்பது பெண்களை போற்றும் ஒரு நிகழ்வா??பெண்களை போற்றுவதுக்கு வேற நிகழ்வுகள் கிடைக்கவில்லையா?? இது தான் எங்கள் தமிழ் சமுதாயம் பெண்ணுக்கு மதிப்பு கொடுக்கும் சான்றா?? இது நான் எங்கள் பெண்களுக்கு கிடைத்த மதிப்பா,எங்கள் பாரம்பரிய பண்பாடுகள் எங்கின்றீகளே, ஆமா ஒவ்வொரு கண்ணும் அந்த பெண்னை எந்த விதமான கண்ணேட்டத்தில் பார்க்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா?மாதவிடாய் என்பது உலகத்தில் உள்ள அதைத்து பெண்ணுக்கும் வருகின்ற விடயம், இதை நாங்கள் show காட்டிக்கிட்டு திறியனும் என்று இல்லை!

இந்த காலக்கட்டத்தில் இப்படியான விழா நடப்பது நிச்சயமாக எங்கள் தமிழ் சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டை வழர்ப்பதுக்கில்லை, தனது பணத்திமிறைக்காட்டுவதுக்கு தான்!

எங்கள் தழிழீழத்தில் ,

பெண்களுக்கு எங்கள் தலைவர் என்ன மதிப்பை அழித்துள்ளார் என்பதை இங்குல்ல இளைஞர்கள் நன்றாக அறிந்தவர்கள்,இருந்தும் இப்படி பட்ட விடயத்தில் தான் பெண்களுக்கு அதிக மதிப்பை கொடுக்கப்பட்டுள்ளது என்ற கருத்துக்களை கேட்பது கவளைக்கிறிய விடயமாக அமைந்துள்ளது......

யார் மனதையும் புன்படுத்துவதுக்காக இதை எழுதவில்லை,

எனக்கு தெரிந்த மற்றும் உறவினர்கள் நடாத்திய பூப்புனித நீராட்டு விழாக்களுக்கு அப்பெண்ணின் அம்மா மற்றும் அக்காமார் தான் மிகவும் மும்மரமாக பெரிதாக/சிறப்பாக செய்ய விரும்பினார்கள். கூடுதலான அப்பாமாருக்கு பெரிதாக விருப்பம் இருந்ததை காணவில்லை. அவர்களின் காரணக்கள் கூடுதலாக வீண்பணச்செலவு, அலைச்சல், வந்தாக்கள் அவர்களின் கொண்டாட்டங்களுக்கு அழைக்கும் போது திரும்ப போகவேணும் போன்றனவாகவே இருந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.