Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Reecha - வியக்க வைக்கும் தமிழனின் முயற்சி..! Baskaran Kandiah

இலங்கையின் வடக்கில், இயக்கச்சி எனும் கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவிலான ஒரு காணியை புலம்பெயர் தமிழ்ச் செல்வந்தர் ஒருவர் வாங்குகிறார். 

அதில் பெரும்பண்ணை ஒன்றை உருவாக்குகிறார். பண்ணையில் ஆடு, மாடு, கோழி, பன்றி என ஆயிரக்கணக்கான விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் மற்றும் பல்வேறு பயன்தரு மரங்கள், தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. 

மேலும் உள்ளே ஹொட்டேல்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தரத்திலான உணவங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், சிறுவர் விளையாட்டுத்திடல்கள், நீச்சல் தடாகங்கள் என அத்தனை வசதிகளும் கொண்டுவரப்படுகின்றன. 

குறுகிய காலத்தில் இந்த நிறுவனம் பெரும்வளர்ச்சி காண்கிறது. REECHA என்பது நிறுவனத்தின் பெயர். 

இங்கு 200 வரையான ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். மேலும் பல்வேறு ஒப்பந்த நிறுவனங்கள் உள்ளே பல்வேறு கட்டுமானப்
பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். 

ஒரு பின்தங்கிய கிராமத்தில், சர்வதேச தரத்தில் ஒரு பண்ணையை அமைத்து, அதில் பலநூறுபேருக்கு வேலை வாய்ப்பை வழங்கி, புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறார் நமது கரன் அண்ணா. 

அவரிடம் இருக்கும் பணத்துக்கும் வசதிக்கும் இப்படி ஒரு வரண்ட பிரதேசத்தில் போய்நின்று ஆடு, மாடு, பன்றிகள் வளர்க்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் தாய் நாட்டின்மீதான பற்றும் காதலும் அங்கிருக்கும் எமது உறவுகளுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் எனும் உந்துதலுமே இந்த முயற்சியில் அவரை ஈடுபட வைத்திருக்கிறது. 

Reecha குறித்து நான் இங்கே எழுதியிருப்பது மிகச் சொற்பமே..! கரன் அண்ணாவின் YouTube க்குச் சென்று பாருங்கள். ‘BK in Reecha’ என்று ஒரு நிகழ்ச்சித் தொடர் இருக்கும். அதில் உங்களை ஆச்சரியப்படுத்தும் ஏராளமான தகவல்கள் உள்ளன. 

வெளிநாடுகளில் எத்தனையோ ஈழத்தமிழ் மில்லியனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தாயகத்தில் முதலிட தயங்குகிறார்கள். ஆனால் கரன் அண்ணா துணிந்து இறங்கியிருக்கிறார். அந்தத் துணிச்சலுக்கு முதலில் வாழ்த்துக்கள். 

Reecha வின் நோக்கமும் குறிக்கோளும் சிறப்பாக ஈடேற வேண்டும். எமது மக்கள் பொருளாதார ரீதியாக மேலும் முன்னேற வேண்டும். பொருளாதார முன்னேற்றமே ஏனைய அனைத்து முன்னேற்றங்களுக்கும் அடிப்படையாகும்..! 

‘வரப்புயர நீருயரும்..!

ReeCha வில் தமிழ் மன்னர்களின் கோட்டைகள்..! 

ReeCha வில் என்னைக் கவர்ந்த முக்கிய விடயமே தமிழுக்கும் தமிழர் வரலாற்றுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம்தான். இங்கே ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு தமிழ் மன்னனின் கோட்டையாகக் கருதி, பெயரிட்டு, குறித்த மன்னர்களின் உருவப்படங்களைப் பொறித்து, அவர்கள் குறித்த ஒரு சிறுகுறிப்பையும் எழுதி, அசத்தியிருக்கிறார்கள். 

எமது பிள்ளைகளுக்கு இவற்றைக் காட்டி ‘குளக்கோட்ட மன்னன் பல குளங்களைக் கட்டி விவசாயத்தை பெருக்கினார்’ என்றும் ‘பண்டாரவன்னியன் வீரத்தில் சிறந்தவர். அவர் போர்த்துக்கேயரை எதிர்த்து போரிட்டார்’ என்றும் அறிமுகம் செய்யும்போது அதில் பெருமையும் உரிமையும் இருக்கும்.  பிள்ளைகளுக்கும் அது மிகவும் பிடிக்கும். 

வெளிநாடுகளில் இதைத்தான் செய்கிறார்கள். இங்குள்ள கல்விமுறையின் அடிப்படையே நாட்டுப்பற்றையும் வரலாற்றையும் புகுத்துவதுதான். பூங்காக்களிலும் தெருக்களிலும் மற்றும் திரும்பும் திசை எல்லாம் சிலைகளையும் நினைவிடங்களையும் நிறுவி, வரலாற்று நாயகர்கள் அனைவரையும் பிள்ளைகள் மனதில் பதித்துவிடுவார்கள். 

இதே முயற்சியை, தமிழ் சார்ந்து ReeCha முன்னெடுப்பது பெருமைக்கும் போற்றுதலுக்குமுரிய விடயமாகும்.  தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி, உல்லாசப் பயணிகளாக வரும் வெள்ளையர்களையும் இந்த முயற்சி ஆச்சரியப்படுத்தும். காரணம் வரலாற்றை அறிவதிலும் அந்தக்கால ஆட்சிமுறைகளைத் தெரிந்துகொள்வதிலும் அவர்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். 

கூகுளிடம் போய் ஆனையும் அல்பேர்ட்டையும் தேடிய எமது பிள்ளைகள் இனி சங்கிலியனையும் இராவணனையும் தேடப்போவது நல்லதொரு மாற்றமாகும்.

ஒரு முகநூல் பதிவு 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, விசுகு said:

Reecha குறித்து நான் இங்கே எழுதியிருப்பது மிகச் சொற்பமே..! கரன் அண்ணாவின் YouTube க்குச் சென்று பாருங்கள். ‘BK in Reecha’ என்று ஒரு நிகழ்ச்சித் தொடர் இருக்கும். அதில் உங்களை ஆச்சரியப்படுத்தும் ஏராளமான தகவல்கள் உள்ளன. 

அண்மையில் கொஞ்சம் அரசியல் பேசுகிறார்.

இறங்கப் போகிறாரோ?

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

அண்மையில் கொஞ்சம் அரசியல் பேசுகிறார்.

இறங்கப் போகிறாரோ?

இப்போது இருக்கும் அரசியல்வாதிகளை விட செயலில் செய்பவரும் இத்தனை நூறு தாயக மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தது மட்டுமல்லாமல் அவர்களை மேலைத்தேச முறைப்படி  வேலை செய்ய பழக்குபவரும் மக்களின் தெரிவாக இருந்தால் மகிழ்ச்சி தானே அண்ணா. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இலங்கையில் முதலீடு செய்து அதனூடாக எமது பிடியை ஏற்படுத்த வேண்டும் என நான் கூறி வருவதற்கு எனக்கு கொடுக்கப்பட்ட பெயர் இலங்கை அரசின் முகவர்.

ஆனால் LYCA, BK எனும் செல்வந்தர்கள்  இலங்கையில் முதலீடு செய்யும்போது அதைக் கொண்டாடுகிறார்கள். 

இந்த முரண்பட்ட மனநிலையை என்ன சொல்வது? 

ஏதேனும் நோயாக இருக்குமோ? 

🤨

(யாரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை )

Edited by Kapithan
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Kapithan said:

இலங்கையில் முதலீடு செய்து அதனூடாக எமது பிடியை ஏற்படுத்த வேண்டும் என நான் கூறி வருவதற்கு எனக்கு கொடுக்கப்பட்ட பெயர் இலங்கை அரசின் முகவர்.

ஆனால் LYCA, BK எனும் செல்வந்தர்கள்  இலங்கையில் முதலீடு செய்யும்போது அதைக் கொண்டாடுகிறார்கள். 

இந்த முரண்பட்ட மனநிலையை என்ன சொல்வது? 

ஏதேனும் நோயாக இருக்குமோ? 

🤨

(யாரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை )

இது தான் அந்த நோய்

எல்லா இடங்களிலும் காவி காவி வம்புக்கு இழுத்தல். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
57 minutes ago, விசுகு said:

இது தான் அந்த நோய்

எல்லா இடங்களிலும் காவி காவி வம்புக்கு இழுத்தல். 

விசுகருக்கு தொப்பி அளவு போல,.... கோபம் வருகிறது? 😀

(யாரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை ) என மேலே குறிப்பிட்டிருப்பதை விசுகர் கவனிக்கவில்லையோ? 

ReeCha வின் முதலீட்டில் உங்களுக்கு பிடித்த விடயம் என்ன? 

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துபவர்கள் யாராக இருந்தபோதும் அவர்கள் வரவேற்கப் படவேண்டியவர்களே.......!  👍

நன்றி விசுகர்.......! 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kapithan said:

விசுகருக்கு தொப்பி அளவு போல,.... கோபம் வருகிறது? 😀

(யாரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை ) என மேலே குறிப்பிட்டிருப்பதை விசுகர் கவனிக்கவில்லையோ? 

ReeCha வின் முதலீட்டில் உங்களுக்கு பிடித்த விடயம் என்ன? 

2003 இல் இதே இடத்தில் 15 நாட்கள் கழித்து இருக்கிறேன். அதே இடத்தை இவர் எடுத்திருப்பது ஒருவிதத்தில் கவலையாக இருந்தாலும் இவர் செய்பவை நாம் செய்ய முடியாமல் போனதை செய்வது அல்லது அக்கனவுகளுக்கு ஒரு பலன் தருவதாக உள்ளது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, விசுகு said:

இப்போது இருக்கும் அரசியல்வாதிகளை விட செயலில் செய்பவரும் இத்தனை நூறு தாயக மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தது மட்டுமல்லாமல் அவர்களை மேலைத்தேச முறைப்படி  வேலை செய்ய பழக்குபவரும் மக்களின் தெரிவாக இருந்தால் மகிழ்ச்சி தானே அண்ணா. 

நானும் இதைத் தான் எண்ணினேன்.

7 hours ago, Kapithan said:

இலங்கையில் முதலீடு செய்து அதனூடாக எமது பிடியை ஏற்படுத்த வேண்டும் என நான் கூறி வருவதற்கு எனக்கு கொடுக்கப்பட்ட பெயர் இலங்கை அரசின் முகவர்.

எனது எண்ணம் தனியே முதலீடு அல்ல.

முதலீட்டுடன் சமாந்தரமாக அரசியலையையும் கொண்டு போகணும்.

தனியே முதலீட்டைப் போட்டு நாட்டை எழுப்பிவிட்டால்கதை கந்தல்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் இதைத் தான் எண்ணினேன்.

எனது எண்ணம் தனியே முதலீடு அல்ல.

முதலீட்டுடன் சமாந்தரமாக அரசியலையையும் கொண்டு போகணும்.

தனியே முதலீட்டைப் போட்டு நாட்டை எழுப்பிவிட்டால்கதை கந்தல்.

100%

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 1/3/2024 at 21:46, விசுகு said:

2003 இல் இதே இடத்தில் 15 நாட்கள் கழித்து இருக்கிறேன். அதே இடத்தை இவர் எடுத்திருப்பது ஒருவிதத்தில் கவலையாக இருந்தாலும் இவர் செய்பவை நாம் செய்ய முடியாமல் போனதை செய்வது அல்லது அக்கனவுகளுக்கு ஒரு பலன் தருவதாக உள்ளது. 

அண்மையில் பிரான்சில் இருந்து ஒருத்தர் நயினாதீவு கும்பாபிசேகத்தன்று தன் மகளின் திருமண நிகழ்வினை முன்னுறுத்தி கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு வேட்டியும் சேலையும் இலவசமாக.. கொடுத்தாராம். 23 கோடி செலவு.

ஓசி வேட்டிக்கும் சேலைக்கும் அலையுற அளவுக்கு எங்கட தாயக மக்கள் இல்லை... சில வருமானம் குறைந்த மக்கள் கூட தரமானதை கொடுத்தால் தான் வாங்குவினம். அது வரவேற்கப்படனும். 

ஆனால்... குறிக்கட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் ஓடும் பயணிகள் படகுகளில் கைவைச்சுப் பிடிக்க முடியாத அளவுக்கு கறள். ஆணி எல்லாம் கிளம்பி வெளில நிற்குது. ஆண்கள் பெண்கள் என்று அடசி குப்பை தொட்டி கொண்டு போற மாதிரி கொண்டு போறாங்கள் ஆக்களை.

இந்த 23 கோடியை வைச்சு இரண்டு தரமான சர்வதேச சந்தையில்.. பிரான்சில் இல்லாத பயணிகள் படகுளா.. வாங்கி.. ஓட்டிறவனின் வயித்திலும் அடிக்காமல்.. ஒரு 20% வருமானத்தை பாரமரிப்பு செலவுக்கு வங்கியில போடு மாதாமாதம்.. மிச்சத்தை நீங்க எடுங்க என்றால்.. சேவை சிறப்பாக நடக்குதோ இல்லையோ என்று பாருங்கள்.

அங்கால சொறீலங்கா நேவி செகுசுப் படகுகளில் வருகினம்.. போகினம். அவைக்கு மக்களின் வரிப்பணத்தில் உல்லாசம். வரி கட்டிற சனம் கறள் ஆணி குத்தி ஏற்பு வலி வந்து கிடக்கப் போகுதுகள். சேவையில் உள்ள எல்லாப் படகுகளும் மீள் அமைக்கப்படனும்.. நவீன வசதிகளுடன். அதையாவது செய்யுறாங்களா இல்லை. 

டக்கிளஸ் வாக்கை வாங்கிறான்.. ஆனால் மக்களின் வாழ்வாதாரம் பற்றி அவனுக்கு ஒரு சிந்தனையும் இல்லை. என்ன வாற வெற்றிடங்களுக்கு காசை வாங்கிக் கொண்டு தகுதி இல்லாததுகளை போட்டு போலிப் பெயர் வாங்கிக்கிறான். 

அந்த வகையில்..

லெபரா பாஸ்கியின் இந்த வெற்றிகரமான முயற்சிக்கு பாராட்டுதல் வேண்டும். அதன் வெற்றிக்குப் பின்னால்.. அவர் சந்தித்த சர்ச்சைகளும் பல. 

Edited by nedukkalapoovan
  • Like 1
  • Thanks 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.