Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: SETHU    05 MAR, 2024 | 12:23 PM

image

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதை மாநிலங்கள் தடுக்க முடியாது என  என  அந்நாட்டு உயர்நீதிமன்றம் ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளது. 

2021 ஜனவரி 6 ஆம் திகதி அமெரிக்கப் பாராளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை ஆதரித்தார் என்ற குற்றச்சாட்டின் காரணமாக, கொலராடோ மாநில குடியரசுக் கட்சி உட்கட்சித் தேர்தல் வாக்குச்சீட்டுகளில் ட்ரம்பின் பெயர் இடம்பெற முடியாது என கொலராடோ மாநில நீதிமன்றம் கடந்த டிசெம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது. 

இது தொடர்பாக மேன்முறையீட்டு வழக்கு அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. 

இந்நிலையில்,  கொலராடோ உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக 9:0 விகிதத்தில் அமெரிக்க சமஷ்டி உச்சநீதிமன்ற நீதிபதிகள் திங்கட்கிழமை (04)  தீர்ப்பளித்தனர். 

மேற்படி குற்றச்சாட்டின் கீழ் போட்டியிடுவதை தடுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு கிடையாது எனவும், அமெரிக்கப் பாராளுமன்றத்துக்கே அத்தகைய அதிகாரம் உள்ளது எனவும் அமெரிக்க உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இத்தீர்ப்பானது அமெரிக்காவுக்கான ஒரு பெரும் வெற்றி என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கொலராடோ உட்பட 15 மாநிலங்களில் குடியரசுக் கட்சியின் உட்கட்சித் தேர்தல் இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/177943

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியின் இன்றைய ஆட்சி அரசியல்வாதிகளின் பதட்டங்களையும்,பேட்டிகளையும்/ தொலைக்காட்சி விவாதங்களையும் பார்க்கும் போது அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் நிருபணமாகின்றது.

டொனால்ட் ரம்ப் ஜனாதிபதியானால் ஜேர்மனிய வைச்சு செய்வார் 😂

  • கருத்துக்கள உறவுகள்

நிலமைகளை உன்னிப்பாக அவதானிக்கின்றோம்.  சிங்கன் மீண்டும் வந்தால்தான் உள்ளது மிச்சம் கதை எல்லாருக்கும். 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, நியாயம் said:

நிலமைகளை உன்னிப்பாக அவதானிக்கின்றோம்.  சிங்கன் மீண்டும் வந்தால்தான் உள்ளது மிச்சம் கதை எல்லாருக்கும். 😁

இன்று உலகை ஆள்வது அமெரிக்கா என்பது உலகறிந்த விடயம்.ஆகையால்  டரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்த நான்கு வருடங்களுக்குள் மாற்றுக்கருத்து சரித்திரங்கள் எழுதப்படலாம் என பலர் ஊகிக்கின்றனர். 😄

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

நிலமைகளை உன்னிப்பாக அவதானிக்கின்றோம்.  சிங்கன் மீண்டும் வந்தால்தான் உள்ளது மிச்சம் கதை எல்லாருக்கும். 😁

99.99 வீதம் அவர் தான் வருவார் என்கிறார்கள்.

இங்கு ஜனாதிபதிக்கு போட்டியிடுபவர் எமது நாடுகள் மாதிரி நீயா நானா என்று வர முடியாது.

அவர்களது கட்சிகளுக்கிடையே 5–6-7 பேர்வரை போட்டியிட்டு கடைசியில் வெல்பவர் தான் போட்டியில் குதிப்பார்.

ரம்புடன் போட்டி போட ஒரே ஒரு பெண் வேட்பாளர் இதுவரை போட்டியிட்டும் ஒரு இடங்களிலும் வெல்லவில்லை.

இன்று சுப்பர் ரியூஸ்டே கடைசி நாள்.

இனி இருவருக்கிடையில்த் தான் போட்டி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

ரம்புடன் போட்டி போட ஒரே ஒரு பெண் வேட்பாளர் இதுவரை போட்டியிட்டும் ஒரு இடங்களிலும் வெல்லவில்லை.

நிக்கி பின் வாங்கிவிட்டாராம் 😄
இனி சிங்கம் சிங்கிள்...😂

xzp2mc9weasa1.png

  • கருத்துக்கள உறவுகள்

பைடனுடன் அந்த ஒன்றுக்கும் லாய்க்கில்லாத கமலாவுக்கும் குட்பாய் சொல்லனும்.

அதோட சிலுங்கி.. நெஞ்சை புடுச்சிக்கிட்டே போயிடுவார். உக்ரைன் மக்கள் மீண்டும் தங்கள் ரஷ்சிய சகோதரர்களுடன் இணைந்து வாழும் காலம் உருவாகும். சொந்த சகோதரர்களை மோதவிட்டு பலவீனப்படுத்தி.. அதின் பின்.. ரஷ்சியா மீது... தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முனைந்த அமெரிக்க மேற்குலக நேட்டோ கூட்டணியின்.. உக்ரைன் நாட்டில் ஊடுருவி உருவான.. யூத ஏஜென்டு.. சிலுங்கி இப்பவே சிணுங்க தொடங்கிட்டார்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

xzp2mc9weasa1.png

பைடன் நிர்வாகத்தின் மிகக் கீழ்த்தர சனநாயக செயற்பாடுகளையும் அமெரிக்க சனநாயகத்தின் சாக்கடை தனத்தையும் இனங்காட்டிய சிங்கம்.

பெட்டை வழக்கு.. கிழவி வழக்கு.. பாலியல் வன்கொடுமை வழக்கு.. கப்பம் வழக்கு.. ஊழல் வழக்கு.. புட்டினுடன் சேர்த்து தேசத்துரோக வழக்கு.. ஆவண மோசடி வழக்கு.. இப்படிப் பல... கடைசியில்... தேர்தலில் நிற்கக் கூடாது வழக்கு வரை போட்டாங்கள். சிங்கம் சீறி பாய்ஞ்சடிச்சு வெளில வந்திட்டுது. 

ஆனால் என்ன ஒரு சனநாயக நாட்டில்... சட்டம் எப்படி எல்லாம் தவறாக ஒரு தனிமனிதனை முடக்க பாவிக்கப்பட முடியும் என்பதை.. இது இன்னும் அரைகுரை சனநாயக நாடுகளாக விளங்கும் நாடுகளுக்கு.. பாடமாக்கி இருப்பது தான் மிகப் பெரிய ஆபத்து. குறிப்பாக தெற்காசிய சன நாய் அகம்.. இதனை லபக் என்று அள்ளிக்கொள்ளும். 

ரம்புக்கு எதிராக அதிகம் மறைமுகமாக உழைப்பது அமெரிக்க ஊடகங்களை விட பிபிசி தான். பிபிசி மிக பக்கச்சார்பான ஊடகம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மேலே கருத்துக்களைப் பார்க்கையில் "இறைச்சிக் கடைக்காரனுக்கு வாக்குப் போடும் அப்பாவிக் கோழிகள்"என்ற கோசானின் வாக்கியம் நினைவில் வருகிறது.

ட்ரம்ப் வரக்கூடும். வந்தால், முன்னரை விட தீவிரமாக ஐரோப்பிய அமைப்புகளில் இருந்து அமெரிக்காவின் பங்களிப்பை வெட்டிக் கொள்வார். இதன் ஒரு அங்கமாக நேட்டோவில் அமெரிக்கப் பங்களிப்புக் குறைக்கப் படும். நேட்டோ இராணுவ ரீதியில் பலவீனமானால், அதனை பலப் படுத்தக் கூடிய ஒரு தலைமை நாடு இன்னும் ஐரோப்பாக் கண்டத்தில் இல்லை. புரின் உக்ரைனைத் தாண்டி பால்ரிக் நாடுகளையும் தட்டிப் பார்க்கக் கூடும். போலந்து, ஜேர்மனி கூட ஆக்கிரமிக்கப் படா விட்டாலும், மறைமுக அச்சுறுத்தல்களோடு போராட வேண்டிய நிலை வரலாம்.

ஆனால், இதெல்லாம் எங்கள் தமிழ் குடியேறிகளுக்குக் கவலை தரும் விடயங்களேயல்ல!

ஆக மிஞ்சிப் போனால், இருக்கவே இருக்கிறது அமெரிக்கனின் Ramstein airbase தளமும், C-17 Globe Master உம்! ஒரு ஷொப்பிங் பையோடு போய் வரிசையில் நின்றால் ஏறிப் பறந்து இங்கால வந்து விடலாம்😂!

பிறகு இங்க இருந்து "அமெரிக்க, ஏகாதிபத்திய, சுரண்டல் வாத..." என்று பொங்கி, உண்டு, உறங்கிக் கழிக்க வேண்டியது தான்!  

  • கருத்துக்கள உறவுகள்

பைடனுக்கு இருக்கும் பிரச்சனைகள்.

ரொம்பவும் மறதி.

அடுத்த நாட்டு தலைவர்கள் பெயரையே மாறிமாறி சொல்கிறார்.(சிலவேளை தனது மகனின் வழக்குகளில் இருந்து தான் தப்புவதற்காகவும் இருக்கலாம்).

அடிக்கடி விழுந்தெழும்புவது.

மிக முக்கியமாக எல்லைகளைத் திறந்துவிட்டு திக்குமுக்காடுவது.

இவைகள் தான் முன்னலையில் நிற்கின்றன.

எப்படி சமாளிப்பார் என பார்ப்போம்.

அடுத்து இவர் வென்றால் அடுத்த 4 வருடத்தை ஓடி முடிப்பாரா?

இல்லை கமலா கரீசுக்கு சாதனை படைக்க உதவுவாரா என்றும் ஒரு பரவலான எண்ணம்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

இன்று உலகை ஆள்வது அமெரிக்கா என்பது உலகறிந்த விடயம்.ஆகையால்  டரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்த நான்கு வருடங்களுக்குள் மாற்றுக்கருத்து சரித்திரங்கள் எழுதப்படலாம் என பலர் ஊகிக்கின்றனர். 😄

 

டிரம்ப் நமது நண்பனும் அல்ல.  பைடின் நமது எதிரியும் அல்ல.  ஆனால், சிங்கத்தின் சிளிர்ப்பை பார்த்துமெய்சிலிர்க்காமல் இருக்க முடியவில்லை. 😁

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

பைடனுக்கு இருக்கும் பிரச்சனைகள்.

ரொம்பவும் மறதி.

அடுத்த நாட்டு தலைவர்கள் பெயரையே மாறிமாறி சொல்கிறார்.(சிலவேளை தனது மகனின் வழக்குகளில் இருந்து தான் தப்புவதற்காகவும் இருக்கலாம்).

அடிக்கடி விழுந்தெழும்புவது.

மிக முக்கியமாக எல்லைகளைத் திறந்துவிட்டு திக்குமுக்காடுவது.

இவைகள் தான் முன்னலையில் நிற்கின்றன.

எப்படி சமாளிப்பார் என பார்ப்போம்.

அடுத்து இவர் வென்றால் அடுத்த 4 வருடத்தை ஓடி முடிப்பாரா?

இல்லை கமலா கரீசுக்கு சாதனை படைக்க உதவுவாரா என்றும் ஒரு பரவலான எண்ணம்.

அமெரிக்க ஜனாதிபதியை ஒலிம்பிக்கில் ஓடி பதக்கம் வெல்ல அல்லது திருக்குறள் மனனப் போட்டியில் வெல்ல அனுப்புவதானால் இவையெல்லாம் "முக்கிய பிரச்சினைகள்" தான் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்😂. ஆனால் இவையல்லவே அமெரிக்க அதிபரின் பணி?

சக்கர நாற்காலியில் இருந்த றூஸ்வெல்ட், தீராத கீழ் முதுகு நோவில் இருந்த கெனடி, தொடர்ந்த மன அழுத்தத்தினால் பாதிக்கப் பட்டவரான லிங்கன், இவர்களெல்லாம் அமெரிக்காவின் முக்கியமான காலகட்டங்களில் வெற்றிகரமாக நாட்டை வழி நடத்தியிருக்கிறார்கள். ஏனெனில், அதற்கேற்ப அமெரிக்க தலைமையும், அரச கட்டமைப்புகளும் உருவாக்கப் பட்டிருக்கின்றன.

 இத்தகைய கட்டமைப்புகளையும், நிறுவனங்களையும், சட்டங்களையும் சிதைக்க முனையும் ட்ரம்பினால் தான் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் பாதிப்புகள் இருக்கும். பைடனின் மறதியாலும், தடக்கி விழுகையாலும் நாட்டிற்கும், உலகிற்கும் பாதிப்புகள் இல்லை!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.