Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
முடிவிலி
-------------
சமீபத்தில் இங்கே ஒரு பாதிரியாருக்கு பெரிய மாரடைப்பு வந்து கொஞ்ச நேரம் இறந்து போய்விட்டார். பின்னர் அவருக்கு உயிர் திரும்பவும் வந்துவிட்டது. இப்படித்தான் வைத்தியசாலையில் சொன்னார்கள். இது செய்திகளிலும் வந்து இருந்தது. பாதிரியாரும் இடைப்பட்ட, அவர் இறந்திருந்த, நேரத்தில் அவர் வேறு ஒரு இடத்திற்கு போய் வந்ததாகச் சொன்னார். இதை Near Death Experience (NDE) என்று சொல்கின்றனர். இந்த வாழ்வின் முடிவில் இருந்து சாவின் விளிம்பு வரை போய் வருதல். அடிக்கடி உலகில் எங்காவது நடக்கும் ஒரு நிகழ்வு இது.
 
பொதுவாக இந்த அனுபவம் பெற்றவர்கள் அநேகமாக வெளிச்சமான, பிரகாசமான, பூந்தோட்டங்கள் நிறைந்த, வாசனைகள் பரவும், ஒளி சுற்றிச் சுழலும், தெரிந்தவர்கள் மற்றும் முன்னோர்கள் மிதந்து கொண்டிருக்கும் ஒரு இடத்திற்கே போய் வந்ததாகச் சொல்வார்கள். அவர்கள் போய்ப் பார்த்து வந்த இடம் சொர்க்கம் என்பதன் விளக்கம் இது போலும்.
 
ஆனால் இந்தப் பாதிரியார் தான் நரகத்திற்கு போய் வந்ததாகச் சொல்கின்றார். ஒரே இருட்டு, அதைத் தாண்டினால் மனிதர்கள் நான்கு கால்களில் நடக்கின்றார்கள், அவர்களின் கண்கள் வெளியே தள்ளப்பட்டிருக்கின்றன, சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கின்றார்கள், நெருப்பில் விழுகின்றனர் என்று பாதிரியார் அவர் போய் வந்த இடத்தை விபரித்திருந்தார்.
 
இதற்கு முன்னர் வாழ்வின் முடிவு வரை போய் வந்தவர்கள் சொன்னவற்றை வைத்து, இங்கே பூமியில் என்ன செய்தாலும், என்ன கூத்து ஆடினாலும், கடைசியில் எல்லோரும் சொர்க்கத்திற்கு தான் போவார்கள் போல என்று அசமந்தமாக இருந்துவிட்டேன். மற்ற இருட்டான இடத்திற்கும் ஆட்கள் அனுப்பப்படுகின்றனர் என்று இப்பொழுது தான் தெரிய வந்துள்ளது.
 
40 வயதிற்கு மேல் ஒருவரது விதிப்பயனை, ஊழ்வினையை மாற்றவே முடியாது என்று தமிழ்நாட்டின் இன்றைய முன்னணி சிந்தனையாளர், தத்துவஞானி, ஆன்மீக அறிஞர் ஒருவர் சமீபத்தில் சொல்லியிருக்கின்றார். இந்த அறிஞரைப் பார்த்து, 'என்ன உங்களின் தத்துவம் எல்லாம் ஒரே ஓட்டை ஒடிசலாக இருக்குதே. சுட்ட தோசையையே திருப்பி திருப்பி சுடுகிறீர்களே' என்று ஒரு சாதாரண மனிதன் கேட்டுவிட்டார். சினம் கொண்ட அந்த அறிஞர் அந்த சாதாரண மனிதன் நரகத்திற்கு போவார் என்பதையே இப்படிப் பூடகமாகச் சொன்னாராம்.
 
நரகம் போய் வந்த பாதிரியார் தான் இங்கு வாழ்க்கையில் விட்ட பிழைகள் என்ன என்னவென்று சொன்னதிலிருந்து அறிவது என்னவென்றால், நான் அங்கு போகும் பொழுது இந்த அறிஞர் கூட அங்கு நாலு கால்களில் நடந்து கொண்டிருப்பார் என்றே தெரிகின்றது. கிட்டத்தட்ட எனக்குத் தெரிந்த எல்லோரும் அங்கே தான் இருப்பார்கள் அல்லது எனக்குப் பின்னால் வரப் போகின்றார்கள். இதே கூட்டம் தான் அங்கேயும், முடிவற்ற ஒரே வாழ்க்கை.
 
இனிமேல் இதிலிருந்து தப்புவதற்கு வழியில்லை என்றாலும், இப்பவே கொஞ்சம் கொஞ்சமாக பழகிக் கொள்ளலாம். ஒரு கிழமைக்கு மூன்று தமிழ்ப் படங்களும் மூன்று தெலுங்குப் படங்களும் விடாமல் பார்த்து வந்தால், நரகத்தைக் கூட ஒரு கலைக் கண்ணோட்டத்தில் பார்க்கும் பக்குவம் வந்துவிடும்.
  
  • Like 4
  • Haha 9
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தக் கட்டுரையில் கடைசிப் பந்திதான் எனக்குப் பிடித்திருக்கு.......!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாதர் கூட அடித்துட்டு படுத்துட்டார்.

நானும் 83 கலவரத்தில் மரணத்தின் விழிம்புவரை போய் வந்தவன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

இந்தக் கட்டுரையில் கடைசிப் பந்திதான் எனக்குப் பிடித்திருக்கு.......!  😂

🤣🤣.....

இங்கு சப்வேயில் சாண்ட்விச் வாங்கப் போனால், உள்ளே என்ன என்ன போட வேண்டும் என்று கேட்பார்கள். எதைப் போடுவது, எதை விடுவது என்று தெரியாது, ஆதலால் எல்லாத்தையும் போடுங்கோ என்று சொல்லி விடுவது வழக்கம். அதே போலவே இந்தப் படம் பார்க்கிற பழக்கமும். எல்லாப் படத்தையும் பார்க்க முயற்சி செய்வது, பிறகு ஏன் தான் இதைப் பார்த்தோமோ என்று என்னை நானே நொந்து கொள்வது.....

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  படத்தை பார்த்தால் தானே தெரிகிறது அட ஏன் இதை பார்த்தோமென்று ....பட்டுத் தெளிவது அறிவு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது தந்தையாரும் ஒருநாள்  வல்லிபுர மாயவனுடன் சென்று ..மேலுலகம் பார்த்தபின் மீளவந்து..6வருடம் எம்முடன் இருந்துவிட்டுச் சென்றவர்...அங்கு கண்ட காட்சிகளை வருணித்த விதமே ஒரு அழகுதான்...சொர்க்கம் என்றுதான் சொன்னவர்..

  • Like 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/3/2024 at 18:25, suvy said:

இந்தக் கட்டுரையில் கடைசிப் பந்திதான் எனக்குப் பிடித்திருக்கு.......!  😂

எனக்கும் கூட ஆனால் நான் படம் பார்ப்பதில்லை 

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.