Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
தோற்கும் விளையாட்டு
------------------------------------
விளையாட்டு வீரர்கள் என்றாலே ஆஸ்திரேலியர்கள் தான் அதன் வரைவிலக்கணம். ஒரு சாதாரண ஆஸ்திரேலியரே எந்த விளையாட்டையும் நன்றாக விளையாடுவார், அப்படியே அதிகமாக கோபப்பட்டு போட்டி போடுவார். இவர்கள் ஒரு பொழுதுபோக்கிற்காக விளையாடுவது கூட வெளியில் நின்று பார்க்கும் ஒருவருக்கு ஏதோ ஒரு தனிப்பட்ட பிரச்சனைக்கு இரண்டு பக்கங்கள் மல்லுக்கட்டி நிற்பது போலவே தெரியும். 
 
சில வருடங்களின் முன் சிட்னி நகர் பகுதியில் தனியாகவோ அல்லது பலவீனமாகவோ அகப்படும் இந்தியர்களை சில ஆஸ்திரேலியர்கள் தாக்கினார்கள். இது சில காலம் தொடர்ந்து அங்கு நடந்தது. இந்திய நண்பன் ஒருவனின் மனைவியின் தம்பிக்கு சிட்னியில் ஒரேயொரு குத்து ஓங்கி விழுந்தது. தம்பி மதுரை மருத்துவமனையில் பல நாட்கள் படுத்திருந்து, பின்னர் எழும்பி நடமாடினார். 
 
குத்துச் சண்டையும் இவர்கள் எல்லோருக்கும் தெரியுமா என்று வியக்க வைத்தது.
 
சிட்னியுடன் எனக்கு சில தொடர்புகள் இருப்பது தெரிந்திருந்த அதே நண்பன் ஆஸ்திரேலியாவிற்கு போகும் மற்றும் அங்கு குடியேறும் வழிவகைகளை என்னிடம் விசாரித்தான். மதுரைக்கார நண்பன் அங்கு போய் பழிக்கு பழி வாங்கப் போகிறார் போல என்ற அனுமானத்தில் இருந்த எனக்கு, 'இல்லை, மாமாவை (நண்பனின் அக்காவின் கணவர்) அங்கு அனுப்பலாம் என்று இருக்கின்றேன்' என்று பதில் வந்தது.
 
ஆஸ்திரேலியர்கள் விளையாட்டுகளில் ஏன் இவ்வளவு ஆக்ரோஷத்துடனும், ஆவேசத்துடனும் இருக்கின்றார்கள்  என்பது முதலில் புரியவில்லை. ஒரு விடயம் புரியாவிட்டால், அந்த விடயத்திற்கான காரணம் மரபணு அல்லது தலைவிதி அல்லது நெற்றியில் எப்பவோ எழுதப்பட்டு விட்டது என்ற வசனம் போன்றவை ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கங்கள். 
 
இவை மூன்றும் தக்காளிச்சாறு போல, எங்கும் ஊற்றலாம், எதனுடனும் தொடலாம். ஆஸ்திரேலியர்களின் மரபிலேயே கடும் போட்டி இருக்கின்றது என்றார்கள்.
 
விளையாட்டுகளில் பணம் கட்டுவது, பந்தயம் பிடிப்பது இன்று மிக வேகமாக எல்லா நாடுகளிலும் பரவி வருகின்றது. இது இன்று அமெரிக்காவில் மட்டும் பல பில்லியன் டாலர்கள் அளவிலான ஒரு வியாபாரம். கனடாவிற்கு என்று தனி வழி இல்லை, அமெரிக்காவின் வழியே அதன் வழியும் கூட. இந்தியாவில் கிரிக்கெட் மீதான சூதாட்டம் வெட்ட வெட்ட முளைக்கும் அசுரனின் தலை போல அழிக்கப்பட முடியாமல் இன்னும் இன்னும் வளர்கின்றது.
 
குதிரைப் பந்தயம் ஆரம்பமான நாட்களிலிருந்து, 1810 ம் ஆண்டு, இன்று வரை உலகிலேயே விளையாட்டுகளின் மேல் தலைக்கு அதிக பணம் பந்தயம் வைப்பவர்கள் யார் தெரியுமா? ஆஸ்திரேலியர்களே. சீன இன மக்களின் சூதாட்டத்தின் மீதான நாட்டம் வேறு வகையானது, பாரதத்தில் தர்மர் உருட்டிய தாயக்கட்டை வகை அது.
 
ஒரு விளையாட்டின் மேல் இருக்கும் விருப்பத்தில் அல்லது ஒரு அணியினது அல்லது ஒரு வீரரின் ரசிகராக இதுவரை நாளும் விளையாட்டுகளை பார்த்து வந்த பார்வை இன்று இந்தப் பந்தயங்களால் வெகுவாக மாறிவிட்டது. எண்களே இன்று முக்கியம். களத்தில் ஆடும் அணியை விட, என்னுடைய கணக்கு, என்னுடைய பந்தயம் வெல்கிறதா என்பதிலேயே பலரினதும் கவனம் இருக்கின்றது.
 
பந்தயங்களின் உலக தலைநகரான  லாஸ் வேகாஸ் பற்றிச் சொல்லும் போது, லாஸ் வேகாஸ் என்றும் தோற்பதில்லை என்பார்கள். பந்தயம் கட்டுபவர்களே என்றும் இறுதியில் தோற்று நிற்பார்கள் என்கின்றனர். ஒரு தனிமனிதன் தோற்றுப் போனால், அம்மனிதனுக்கு அடுத்த அடுத்த தடவைகள் ஆவேசம் கொஞ்சம் அதிகமாக வருவது இயற்கைதானே.
 
ஆஸ்திரேலியர்களுக்கும் அதுவே.
  • Like 7
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, ரசோதரன் said:

லாஸ் வேகாஸ் என்றும் தோற்பதில்லை

2021 இல் லாஸ்வேகஸ் போயிருந்தேன்.

சூது விளையாடும் போது கொடுக்கப்படும் மதுவை சுவைத்து சுவைத்து தோல்வியில் வெளியே வந்து பார்வைக்கு பணக்காரர் மாதிரி இருக்கும் பலர் வீதிக்கு வீதி வீழ்ந்து கிடந்தார்கள்.

நான் போனநேரம் 100-105 பாகை பரனைட் வெப்பநிலை.38-40 செல்சியஸ்.

இந்த வெக்கையில் பாதையோரம் பார்க்க மிகுந்த கஸ்டமாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, ஈழப்பிரியன் said:

2021 இல் லாஸ்வேகஸ் போயிருந்தேன்.

சூது விளையாடும் போது கொடுக்கப்படும் மதுவை சுவைத்து சுவைத்து தோல்வியில் வெளியே வந்து பார்வைக்கு பணக்காரர் மாதிரி இருக்கும் பலர் வீதிக்கு வீதி வீழ்ந்து கிடந்தார்கள்.

நான் போனநேரம் 100-105 பாகை பரனைட் வெப்பநிலை.38-40 செல்சியஸ்.

இந்த வெக்கையில் பாதையோரம் பார்க்க மிகுந்த கஸ்டமாக இருந்தது.

கோடை நாட்களில் நடுராத்திரியிலும் அதே அனல் காற்று அங்கே வீசும். குளிர் காலங்களில் அளவில்லா குளிர். அந்தக் கொடுமையில் உள்ளேயே இருந்து, கொண்டு வந்த காசு எல்லாவற்றையும் அங்கிருக்கும் மேசை விளையாட்டுகளிலோ அல்லது இயந்திரங்களில் இழந்து விட்டு வீடு திரும்ப வேண்டியது தான்.
 
முன்னர் பொதுவாக பார்க்கிங் இலவசம். உணவும் மிக மலிவு. ஆனால் இப்போது அங்கே பெரும்பாலான இடங்களில் எல்லாவற்றுக்கும் ஒரு விலை வைத்துவிட்டனர்.
 
ஒவ்வொரு வியாழன் இரவும் அங்கு போய், ஞாயிறு இரவு திரும்பி வருபவர்களும் உண்டு. எம்மக்களில், எனக்குத் தெரிந்த வரை, அப்படியானவர்கள் எவரும் இல்லை.   
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது கணனி யுகம்.....எல்லாவற்றிலும் கணனி உட்புகுந்து விட்டது....... சாதாரணமானவர்களினால் ஓரளவுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது.....ஏதோ பேருக்கு ஒரிருவருக்கு கிடைக்கும் ......அவ்வளவுதான்.....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்காவை விட இலங்கை நன்று போல இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, Kandiah57 said:

அமெரிக்காவை விட இலங்கை நன்று போல இருக்கிறது 

காலநிலையை சொல்கிறீர்கள் என்றால், நீங்கள் சொல்வது சரியே. அமெரிக்காவின் பெரும்பாலான இடங்களை விட இலங்கையின் காலநிலை வருடம் முழுவதும்  சிறந்தது.
 
லாஸ் வேகாஸ் பற்றி சொல்கிறீர்கள் என்றால், அதன் இன்னொரு பெயரே Sin City. பெயரிலேயே எல்லாம் அடங்கிவிட்டது......😀
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, ரசோதரன் said:
காலநிலையை சொல்கிறீர்கள் என்றால், நீங்கள் சொல்வது சரியே. அமெரிக்காவின் பெரும்பாலான இடங்களை விட இலங்கையின் காலநிலை வருடம் முழுவதும்  சிறந்தது.
 
லாஸ் வேகாஸ் பற்றி சொல்கிறீர்கள் என்றால், அதன் இன்னொரு பெயரே Sin City. பெயரிலேயே எல்லாம் அடங்கிவிட்டது......😀

நன்றிகள் பல. .   தொடர்ந்தும் எழுதுங்கள் வாசிக்கின்றேன் 🙏

  • Thanks 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆம் அவுஸ்ரேலியா நாட்ட‌வ‌ர்க‌ள் ப‌ல‌ விளையாட்டில் திற‌மைசாலிக‌ள்.............கிரிக்கேட்டில் ம‌க‌ளிர் கிரிக்கேட் அணியும் ஆண்க‌ள் கிரிக்கேட் அணியும் ச‌ரி ச‌ம‌ம்.............ம‌க‌ளிர் அணி அதிக‌ முறை உல‌க‌ கோப்பை தூக்கின‌து என்றால் அது அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணி

அதே போல் ஆண்க‌ள் கிரிக்கேட்டை எடுத்து கொண்டால் அவ‌ர்க‌ள் எல்லா கோப்பையும் கிரிக்கேட்டில் தூக்கி விட்டின‌ம்.........50ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் அதிக‌ முறை வென்ற‌ பெருமை அவுஸ்ரேலியாவுக்கு

Rugby League விளையாட்டில் அவுஸ்ரேலிய‌ தான்...... இன்னும் ப‌ல‌ விளையாட்டில் அவுஸ்ரேலியாவீன் ஆதிக்க‌ம் இருக்கு................

Bet365  உல‌கில் மிகப் பெரிய‌ சூதாட்ட‌ த‌ள‌ம்..........இது உல‌க‌ அள‌வில் எல்லா நாட்டிலும் இருக்குது.............பேர் ஆசை பெரும் நஷ்ட‌ம்...............சூதாட்ட‌ம் ந‌ல்ல‌ ம‌னித‌ர‌ கூட‌ ம‌ன‌நோயாளி ஆக்கி விடும்................

வெளி நாட்ட‌வ‌ர் ப‌ல‌ர் திரும‌ண‌ம் செய்து உந்த‌ சூதாட்ட‌த்துக்கை போய் காசை இழ‌ந்து விவ‌கார‌த்து செய்து போட்டு இருக்கின‌ம்.................சூதாட்ட‌த்தை விட்டு எவ‌ள‌வு தூர‌ம் த‌ள்ளி நிக்க முடியுமோ அவ‌ள‌வு தூர‌ம் த‌ள்ளி நின்றால் ம‌னித‌ வாழ்க்கை ந‌ல்ல‌ ப‌டியா இருக்கும்...............

ந‌ல்ல‌ ஒரு ப‌திவு................................................

 

 

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.