Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அன்றுபோல் இன்று இல்லையே!

***************************************

அதுவொரு கடல் சூழ்ந்த அழகிய கிராமம்

அதிகாலைப் பொழுதும் அந்திமாலையும்

அத்தியும்,இத்தியும் ஆலமரமும் அதிலிருந்து

கத்திடும்,கொஞ்சிடும் பறவை இனமும்

ஏரும் கலப்பையும் வண்டிலும் மாடும்

உழைப்போர் வியர்வையில் வளரும்

சாமையும்,வரகும்,குரக்கனும்,சோளனும்

பனையும்,தென்னையும் பனாட்டும்,ஒடியலும்.

 

வேலிகள் தோறும் கொவ்வையும்,குறிஞ்சாவும்

தரவை நிலமெங்கும் மூலிகைச் செடிகளும்

கடலும் காற்றும் மீன்களும்,இறாலும்

இயற்கை மாறாத மாரியும்,கோடையும்

இனிமை தருகின்ற கருப்பணிக் கள்ளும்

இனிக்க இனிக்க பேசிடும் தமிழும்

கொடுத்து கொடுத்தே மகிழ்திடும் மனிதரும்

குடும்பங்கள் பிரியா வாழ்ந்த இணையோரும்.

 

உறவும் உரிமையும் கூட்டுக் குடும்பமும்

உயிர்கள் அனைத்திலும் காட்டிடும் அன்பும்

பொருட்களை மாற்றும் பண்டமாற்றமும்

பொழுது முழுதும் உழைத்திடும் தன்மையும்

பள்ளியும் படிப்பும் உள்ளத்து தூய்மையும்

பண்பும் அடக்கமும் மரியாதைச்  சொற்களும்

பாயில் கிடக்காத பலமுள்ள தோற்றமும்

நோயில்லா உணவும் நூறாண்டு வாழ்வும்.

 

ஆயுள்வேதமும் ஆயாக்கள் மருந்தும்

வீட்டில் பிறந்தே விளையாடும் குழந்தையும்

தலைமுடி கொட்டாத ஆவரசுக் கொழுந்தும்

தாவணி மயில்களும் தமிழ் கலாச்சார உடையும்

கிட்டியும் புள்ளும் தாச்சியும் கொடியும்

கிராமத்து பேச்சும் கிளு கிளு கொஞ்சலும்

சுத்தக் காற்றும் சுதந்திரப் போக்கும்-எம்

பக்கத்தை விட்டு பறந்துமேன் போனதோ?

 

 -பசுவூர்க்கோபி.

  • Like 10
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மை தான் அன்று  போல் இன்று இல்லை. இழந்ததை நினைத்து வருந்துவதை விட இனி என்ன செய்யலாம் என சிந்திப்போம். கடந்துபோன காலமும் பேசிய வார்த்தைகளும் மீள வருவதில்லை. 
 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

அன்றங்கே ஒரு நாடிருந்ததே
அந் நாட்டில் ஆறிருந்ததே
ஆறு நிறைய மீனிருந்ததே
மீனும் முழுகிடக் குளிரிருந்ததே
அன்னமிட வயலிருந்ததே
வயல் முழுவதும் கதிருந்ததே
கதிர் கொத்திடக் கிளி வந்ததே
கிளிகள் பாடும் பாட்டிருந்ததே
அந் நாட்டில் நிழல் இருந்ததே
மண்வழியில் மரம் இருந்ததே
மரத்தடியில் பேசிச் சிரித்திட

நண்பர் கூட்டம் நூறிருந்ததே
நல்ல மழை பெய்திருந்ததே
நரகத் தீ சூடில்லையே
தீவட்டிக் கொள்ளை இல்லையே
தின்றது எதுவும் நஞ்சில்லையே

அன்றங்கே ஒரு நாடிருந்ததே

அந் நாட்டில் ஆறிருந்ததே

ஆறு நிறைய மீனிருந்ததே

மீனும் முழுகிடக் குளிரிருந்ததே

அன்னமிட வயலிருந்ததே

வயல் முழுவதும் கதிருந்ததே

கதிர் கொத்திடக் கிளி வந்ததே

கிளிகள் பாடும் பாட்டிருந்ததே

அந் நாட்டில் நிழல் இருந்ததே

மண்வழியில் மரம் இருந்ததே

மரத்தடியில் பேசிச் சிரித்திட நண்பர் கூட்டம் நூறிருந்ததே

நல்ல மழை பெய்திருந்ததே

நரகத் தீ சூடில்லையே

தீவட்டிக் கொள்ளை இல்லையே

தின்றது எதுவும் நஞ்சில்லையே

ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால் மறுவீட்டில் பசியில்லையே
ஒரு கண்ணு கலங்கி நிறைந்தால் ஓடி வரப் பலருண்டங்கே
நாடெங்கும் மதில்கள் இல்லையே

ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால் மறுவீட்டில் பசியில்லையே
ஒரு கண்ணு கலங்கி நிறைந்தால் ஓடி வரப் பலருண்டங்கே


நடைவெளி இடைவெளி நூறிருந்ததே
நாலுமணிப் பூவிருந்ததே
நல்லோர் சொல்லுக்கு விலையிருந்ததே
அன்றும் பல மதம் இருந்ததே
அதையும் தாண்டி அன்பிருந்ததே

அன்றும் பல மதம் இருந்ததே
அதையும் தாண்டி அன்பிருந்ததே


உன்னைப் படைத்தோன் என்னைப் படைத்தோன்
என்றதொரு சண்டை இல்லையே

உன்னைப் படைத்தோன் என்னைப் படைத்தோன்
என்றதொரு சண்டை இல்லையே


அந் நாட்டைக் கண்டவர் உண்டோ
எங்கே போனது தெளிவுண்டோ
அந் நாடு இறந்து போனதோ
அது வெறும் ஒரு கனவானதோ

அந் நாட்டைக் கண்டவர் உண்டோ
எங்கே போனது தெளிவுண்டோ

அந் நாடு இறந்து போனதோ
அது வெறும் ஒரு கனவானதோ


அந் நாடு இறந்து போனதோ
அது வெறும் ஒரு கனவானதோ
அன்றங்கே ஒரு நாடிருந்ததே

அந் நாட்டில் ஆறிருந்ததே
ஆறு நிறைய மீனிருந்ததே
மீனும் முழுகிடக் குளிரிருந்ததே

அன்னமிட வயலிருந்ததே
வயல் முழுவதும் கதிருந்ததே
கதிர் கொத்திடக் கிளி வந்ததே
கிளிகள் பாடும் பாட்டிருந்ததே
கிளிகள் பாடும் பாட்டிருந்ததே

நன்றி உடையார்.

Edited by ஈழப்பிரியன்
  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பசுவூர்க்கோபி said:

அன்றுபோல் இன்று இல்லையே!

உங்கள் கவிதையுடன் இந்தப் பாட்டு ஒத்துப் போவதால் இணைத்துள்ளேன்.

கவிதைக்கு பாராட்டுக்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல கவிதை..........பாராட்டுக்கள் கோபி ..........!  👍

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, நிலாமதி said:

உண்மை தான் அன்று  போல் இன்று இல்லை. இழந்ததை நினைத்து வருந்துவதை விட இனி என்ன செய்யலாம் என சிந்திப்போம். கடந்துபோன காலமும் பேசிய வார்த்தைகளும் மீள வருவதில்லை. 
 

30 வருடத்தின் பின் எனது ஊருக்குப் போயிருதேன் எல்லாமே மாறிவிட்டது.அந்தப்பழமையை நினத்து கவலையடைந்தேன். அப்பொழுது என்னுக்குள் வந்த வரிகள்தான் இவை தற்போது நீங்கள் சொல்வதுதான் உண்மை.

உளமார்ந்த       நன்றிகள் நிலாமதி அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, ஈழப்பிரியன் said:

உங்கள் கவிதையுடன் இந்தப் பாட்டு ஒத்துப் போவதால் இணைத்துள்ளேன்.

கவிதைக்கு பாராட்டுக்கள்.

அருமையான பாடல் நாம் வாழ்ந்த அன்றைய வாழ்வியலை நினைத்து கண்கலங்க வைத்துவிட்டது.
ஈழப்பிரியன் அவர்களுக்கு என் உளமாந்த நன்றிகள்.

9 hours ago, suvy said:

நல்ல கவிதை..........பாராட்டுக்கள் கோபி ..........!  👍

ஊக்கம் தரும் உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு உளமார்ந்த நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, பசுவூர்க்கோபி said:

அத்தியும்,இத்தியும் ஆலமரமும் அதிலிருந்து

கத்திடும்,கொஞ்சிடும் பறவை இனமும்

ரசித்த வரிகள்.

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/3/2024 at 23:49, suvy said:

நல்ல கவிதை..........பாராட்டுக்கள் கோபி ..........!  👍

 

On 12/3/2024 at 23:49, suvy said:

நல்ல கவிதை..........பாராட்டுக்கள் கோபி ..........!  👍

கிழ்வோடு நன்றிகள்

On 13/3/2024 at 09:35, Kavi arunasalam said:

ரசித்த வரிகள்.

 

மகிழ்வோடு நன்றிகள்

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.