Jump to content

தென்னாசிய பிராந்தியத்தில் அதிக நீரிழிவு நோயாளர்களைக் கொண்ட நாடாக இலங்கை ; சீனி, பால் மா பாவனையே பிரதான காரணம் - ரமேஷ் பத்திரன


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 MAR, 2024 | 05:22 PM
image
 

(எம்.மனோசித்ரா)

தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அதிகளவான நீரிழிவு நோயாளர்கள் காணப்படும் நாடாக இலங்கை இனங்காணப்பட்டுள்ளது. அளவுக்கதிகமான சீனி மற்றும் பால் மா பாவனையே இதற்கான பிரதான காரணமாகும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

சீனி இறக்குமதிக்காக 300 மில்லியன் டொலரும், பால் மா இறக்குமதிக்காக 350 - 400 மில்லியன் டொலரும் ஒதுக்கப்படுகிறது. எனவே இவற்றின் பாவனையைக் குறைப்பதன் மூலம் சுகாதாரத்துறைக்கு மாத்திரமின்றி பொருளாதாரத்துக்கும் பாரிய ஒத்துழைப்பினை வழங்க முடியும் என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன சுட்டிக்காட்டினார்.

தேசிய உள்சாட்டு மருத்துவ தினத்தை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் நாட்டு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இவை தொடர்பில் மக்களுக்கு தொடர்ந்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.

நாட்டில் சீனியின் பாவனை அதிகமாகக் காணப்படுகின்றமையே நீரிழிவு நோய்க்கான பிரதானமான காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

தாய்ப்பாலில் சீனி கிடையாது. எனினும் குழந்தைகள் பிறந்து சில மாதங்களின் பின்னர் பெற்றோர் குழந்தைகளுக்கு சீனி அடங்கிய உணவுகளை வழங்குகின்றனர். இதன் காரணமாக இன்று நீரிழிவு நோய் மட்டம் பாரியளவில் உயர்வடைந்துள்ளது. தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அதிகளவான நீரிழிவு நோயாளர்கள் காணப்படும் நாடாக இலங்கை இனங்காணப்பட்டுள்ளது.

அதிகளவான சீனி பாவனை உடல் நலத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, மறுபுறம் தேசிய பொருளாதாரத்திலும் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. காரணம் சீனி இறக்குமதிக்கு 300 மில்லியன் டொலர் ஒதுக்கப்படுகிறது. இதனைக் குறைத்துக் கொண்டால் எமது பொருளாதாரத்தைக் கூட வலுப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும்.

அத்தோடு பால் மாவையும் நாம் அதிகமாகப் பயன்படுத்துகின்றோம். உலகில் அதிகளவு பால் மாவினைப் பயன்படுத்தும் நாடாக இலங்கை காணப்படுகிறது. எம்மைப் போன்று பால் மாவினால் தயாரிக்கப்படும் பாலை அருந்துபவர்கள் உலகில் வேறு எவரும் இருக்கமாட்டார்கள். இந்தளவுக்கு பால் மாவை உபயோகிக்க வேண்டுமா என்பதை வைத்தியர்கள் தம்மிடம் வரும் நோயாளர்களிடம் கேட்க வேண்டும்.

இவ்வாறு பால் மா பாவனையைக் குறைத்தால் அது சுகாதாரத்துக்கும் பொருளாதாரத்துக்கும் நன்மையாகும். வேறு நாடுகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் 350 - 400 மில்லியன் டொலரை நாம் பால்மா இறக்குமதிகாக செலவிடுகின்றோம். இந்த தகவல்களை வைத்தியர்களும், ஊடகங்களும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

தென்னாசிய பிராந்தியத்தில் அதிக நீரிழிவு நோயாளர்களைக் கொண்ட நாடாக இலங்கை ; சீனி, பால் மா பாவனையே பிரதான காரணம் - ரமேஷ் பத்திரன | Virakesari.lk

Link to comment
Share on other sites

13 minutes ago, பிழம்பு said:

அத்தோடு பால் மாவையும் நாம் அதிகமாகப் பயன்படுத்துகின்றோம். உலகில் அதிகளவு பால் மாவினைப் பயன்படுத்தும் நாடாக இலங்கை காணப்படுகிறது. எம்மைப் போன்று பால் மாவினால் தயாரிக்கப்படும் பாலை அருந்துபவர்கள் உலகில் வேறு எவரும் இருக்கமாட்டார்கள். இந்தளவுக்கு பால் மாவை உபயோகிக்க வேண்டுமா என்பதை வைத்தியர்கள் தம்மிடம் வரும் நோயாளர்களிடம்

மேற்குக்கு வந்த எம்மவர்களும் பால் மாவை பாவிக்கிறார்கள். எமது  வியாபாரிகளால் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

Link to comment
Share on other sites

சீனி தவிர, நெட்டோ போன்ற பானங்களும் மா உணவுகளின் பாவனை (கொத்துரொட்டி, நூடில்ஸ், இடியப்பம்) அதிகரிப்பும் அதிகம் உடலை அசைத்து வேலை செய்யாமையும் முக்கிய காரணங்கள்.

இவற்றை விட்டு அப்பாவி பால்மாவுக்குக் கெட்ட பெயர். ஊட்டச் சத்துக் குறைந்த நாடுகளில் பால் இல்லாவிட்டால் பால்மாவை மாற்றீடாகப் பாவிப்பதில் பிரச்சனையில்லை (இதற்காகப் பால்மாவை முழுமையாக ஆதரிக்கவில்லை). 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டுக்குழல் ஐஸ் கிறீ ம் வந்திட்டுது...வடக்கில் அது சாப்பிட்டால்  கெத்து...இனி நீத்துப்பெட்டி ஐஸ் கிறீமும் வரும்....பலூடா வகை வகையாக....அப்ப சீனி வருத்தம் கூடுமோ கூடாதோ..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் தொடர்ச்சியாக மக்களை அறிவுறுத்தவேண்டும். 
சமவிகித உணவு, உடலுழைப்பு போன்றவை அருகிவருகிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, alvayan said:

புட்டுக்குழல் ஐஸ் கிறீ ம் வந்திட்டுது...வடக்கில் அது சாப்பிட்டால்  கெத்து...இனி நீத்துப்பெட்டி ஐஸ் கிறீமும் வரும்....பலூடா வகை வகையாக....அப்ப சீனி வருத்தம் கூடுமோ கூடாதோ..

இன்றைய மேலைத்தேய உணவுகள் எல்லாம் சீனி சேர்க்காமல் சமைப்பது குறைவு. அந்த உணவுகளை ஆசிய நாட்டவர்கள் மொடேர்ண் நாகரீகம் வேறு விதமான சுவை என அமுக்கித் தள்ளுகின்றார்கள். பார்க்க வடிவும் நல்ல மெது மெதுப்பாகவும் இருக்குதாம். பல்லுக்கும் கஷ்டமில்லை. 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ வரும் பால் மா வகைகளில் சீனியைும் கலந்து தானே பாவனைக்கு விடுகிறார்கள்..இப்படி இருந்தால் மக்களுக்கு வருத்தம் வராமல் என்ன செய்யும்........?அதே போல் விதம் விதமான உணவுகளை உட் கொள்வதும் தான்..நாம் சொல்லிக் கேட்கவா போகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

மேற்குக்கு வந்த எம்மவர்களும் பால் மாவை பாவிக்கிறார்கள். எமது  வியாபாரிகளால் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

 

எல்லாம் வியாபாரம்.

இலங்கையில்  சத்துணவு குறைபாட்டிற்காக இலவசமாக ஏழை எளிய கொடுக்கப்படும்  திரிபோஷா மாவையும் இறக்குமதி செய்து வியாபாரம் ஆக்குகின்றார்கள் என்றால் மிச்சம் மீதி இறக்குமதிகளை யோசித்து பாருங்கள். 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.