Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
ஒரு கொய்யா மரத்தின் விவரம்
-----------------------------------------------
நான்கு சிறு துளிர் இலைகளுடன் நிற்கும் போதே அது ஒரு கொய்யா மரம் என்று தெரிந்துவிட்டது.  ஊரில் மரங்களோடும், நிலங்களோடும், கடலோடும் ஒட்டி ஒட்டியே வாழ்ந்ததால் கிடைத்த பயன் இது. மரங்களும், மண்ணும், கடலும் நன்கு பழகினவையாக, எது எது என்று தெரிந்தவையாக இருக்கின்றன.
 
ஒரு சிசு போல பரிசுத்தமாக, எந்தப் பயமும் இல்லாமல் அது அங்கே நின்று கொண்டிருந்தது. ஒவ்வொரு பறவையும் ஐந்நூறு மரங்களை உண்டாக்குகின்றன என்று சொல்வர். ஒரு பறவையின் ஐநூறில் ஒன்று இது. முன்னும் பின்னும் கான்கிரீட் சூழ்ந்த ஒடுக்கமான ஒரு மண் கீலத்தில் பறவை ஒன்று போட்ட வித்தில் இருந்து முளைத்திருந்தது.
 
எல்லாக் கொய்யா மரங்கள் போலவும் இதன் இலைகள் கூராக இல்லாமல், இதன் இலைகள் அகன்றதாக வந்து கொண்டிருந்தன. இளமரத்திலேயே பட்டைகள் உண்டாகி, அவை உரிந்து வீழ்ந்தன. அதனால் மரம் எப்போதும் வழுவழுப்பாக இருந்தது. அதன் காலம் வர, அது பூக்கத் தொடங்கியது.
 
மற்றவை போலவே பூக்கள் வெள்ளையாகவே இருந்தாலும், ஓரிரு நாட்களிலேயே பூக்கள் கருகிப் போயின. பூக்களின் காம்புகள், கொஞ்சம் வித்தியாசமாக, சின்ன விரல் அளவு தடிப்பில் இருந்தன. சில மரங்கள் பூப்பதில்லை. சில மரங்கள் வெறுமனே பூக்கும், காய்க்காது. இந்த மரம் பூக்கும், காம்புகள் வரும், பின்னர் கருகி விடும், அவ்வளவுதானாக்கும் என்று  விட்டுவிட்டேன். 
 
சில நாட்களின் பின் எதேச்சையாக அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தால் ஒவ்வொரு காம்பிலும் இரண்டு மூன்று காய்கள். நல்லையா மாஸ்டர் கீறும் வட்டங்கள் போல ஒழுங்கான உருவங்களில் நேர்த்தியான உருண்டையாகக் காய்த்திருந்தன.
 
காய்கள் கடும் பச்சையிலிருந்து வெளிர் பச்சையாகி, பின்னர் இளமஞ்சளாகி, கடைசியில் கடும் மஞ்சள் ஆகின. பழத்தின் வாசம் வீடெங்கும் பரவியது. அங்குதான் பிரச்சனையும் ஆரம்பம் ஆகியது. ஒருவருக்கு வாசம் என்பது இன்னொருவருக்கு மணமாகவோ அல்லது நாற்றமாகவோ ஆகலாம். இங்கு ஆகியது.
 
வேறு கொய்யா மரங்களும் வீட்டில் இருப்பதால் இந்த மரத்தை வெட்டி எறிவதென்ற முடிவு எடுக்கப்பட்டது. வீரம், விவேகம், அறம், தர்மம் என்று சதாகாலமும் படிப்பிக்கப்பட்டு, பலவீனமானவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்ற பாடப்புத்தக முடிவுடன் இருந்த என்னால், அதுவாகவே முளைத்து ஆளான அழகான ஒரு கொய்யா மரம் அநியாயமாக வெட்டப்படுவதை தடுக்க முடியவில்லை. ஆகக் குறைந்தது, அன்றைய முதல்வர் கருணாநிதி செய்தது போல ஒரு அடையாள உண்ணாவிரதம் கூட நான் இருக்கவில்லை.
 
வெட்டினாலும் அடி மரத்திலிருந்தும், அதன் வேர்களிலிருந்தும் மீண்டும் மரம் முளைக்கும் என்று ஒரு கறுப்பு இரசாயனம் அதன் அடிக்கட்டை மேல் கவிழ்த்து ஊற்றப்பட்டது. பல வல்லுநர்கள் சேர்ந்து இந்த முடிவை எடுத்து நடைமுறைப்படுத்தினர்.
 
பின்னர் இந்த ஊரில் நான்கு வருடங்கள் மழையே இல்லை. எங்கும் புழுதி எழும்பிப் பறக்கும் நிலங்கள். இரசாயனம் ஊற்றா விட்டால் கூட, அந்த மரம் வெட்டிய பின் பிழைத்திருக்கும் என்று நான் நம்பவில்லை. ஐந்தாவது வருடம் சேர்த்து வைத்தது போல மழை கொட்டியது. ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வழிந்தன. புழுதி பறந்த நிலங்களை பச்சை புற்கள் மூடி வளர்ந்தன.
 
மீண்டும் ஒரு நாள் எதேச்சையாக அந்தப் பக்கம் பார்த்தால், அதே அழகுடன், அகன்ற இலைகளுடன் அந்தக் கொய்யா மரம் மீண்டும் வளர்ந்து கொண்டிருந்தது. மொட்டும், பூவும் கூட இருந்தன. அருகே சென்றேன், 'நானும் தான் இங்கே வாழ்ந்து விட்டுப் போகின்றேனே' என்று சொல்வது போல அதன் சிறு கிளைகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன.
  • Like 10
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இயற்கையோடு இணைந்திருப்பதனால் சிலவற்றின் அருமைகள் சிலருக்கு விளங்குவதில்லை..✍️

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனிதரின் சிந்தனைகள் சிவப்பாய் இருப்பதால் அது கொல்லும் , மரங்களின் வேர்கள் பச்சையாய் இருப்பதால் அது வெல்லும்........!  😁

  • Like 1
Posted
4 hours ago, ரசோதரன் said:
 
பின்னர் இந்த ஊரில் நான்கு வருடங்கள் மழையே இல்லை. எங்கும் புழுதி எழும்பிப் பறக்கும் நிலங்கள். இரசாயனம் ஊற்றா விட்டால் கூட, அந்த மரம் வெட்டிய பின் பிழைத்திருக்கும் என்று நான் நம்பவில்லை. ஐந்தாவது வருடம் சேர்த்து வைத்தது போல மழை கொட்டியது. ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வழிந்தன. புழுதி பறந்த நிலங்களை பச்சை புற்கள் மூடி வளர்ந்தன.
 
மீண்டும் ஒரு நாள் எதேச்சையாக அந்தப் பக்கம் பார்த்தால், அதே அழகுடன், அகன்ற இலைகளுடன் அந்தக் கொய்யா மரம் மீண்டும் வளர்ந்து கொண்டிருந்தது. மொட்டும், பூவும் கூட இருந்தன. அருகே சென்றேன், 'நானும் தான் இங்கே வாழ்ந்து விட்டுப் போகின்றேனே' என்று சொல்வது போல அதன் சிறு கிளைகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன.
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றாற் போகா
  • Like 3
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாசிக்கவே மகிழ்ச்சியாக இருக்கு. மீண்டும் முளைத்ததில்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊரில் இருந்த காலம் கொய்யாமரம் தான் பக்கத்தில்.

பழைய நினைவுகளை மீட்டெடுத்துவிட்டீர்கள்.

மகளின் வீட்டிலும் ஒரு கொய்யா வளர்த்தெடுக்க ரொம்ப கஸ்டப்படுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வாசிக்கவே மகிழ்ச்சியாக இருக்கு. மீண்டும் முளைத்ததில்.

👍....

சில வேளைகளில் சில மனிதர்களின் வாழ்க்கையும் இவ்வாறே அமைந்து விடுகின்றது. எல்லாவற்றையும் தாண்டி மீண்டு வந்து விடுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஊரில் இருந்த காலம் கொய்யாமரம் தான் பக்கத்தில்.

பழைய நினைவுகளை மீட்டெடுத்துவிட்டீர்கள்.

மகளின் வீட்டிலும் ஒரு கொய்யா வளர்த்தெடுக்க ரொம்ப கஸ்டப்படுகிறேன்.

வட கலிபோர்னியாவில் உள்ள மகள் வீட்டிலா? அங்கு குளிர் காலங்களில் குளிர் கொஞ்சம் அதிகம். மரம் வளர்ந்து வர பெரும் சிரமப்படும். சிலர் ஒருவாறு, வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் என்று மாறி மாறி இடம் மாற்றி, வளர்த்தெடுத்து விட்டனர். ஆனால் அங்கு பூப்பதும், காய்ப்பதும் மிகக் குறைவு.

சில இந்திய நண்பர்கள் கொய்யா இலையை என்னிடம் வாங்கிச் செல்கின்றனர். தடிமன் வந்தால், கொய்யா இலையை கொதிக்க வைத்து அந்த ஆவியைப் பிடிக்கின்றனர். நாங்கள் ஊரில் சஞ்சீவி (யூக்கலிப்டஸ்), தேசி இலைகளைத்தான் இதற்குப் பயன்படுத்தினோம். கொய்யா இலையில் ஆவி பிடித்ததாக ஞாபகம் இல்லை.

 

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு தெரியாது பார்க்கவில்லை ......ஆனால் இங்கு அர்ச்சுனா குரல் கொடுப்பது பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சார்பாக   அது எனக்கு பிடித்து உள்ளது  இந்த மக்களுக்குகாக   இதுவரை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும்   பேசவில்லை   ஏன்?? அர்ச்சுனாவின். செயல்கள்  கோமாளித்தனமானது  தான்  100% ஒத்துக் கொள்கிறேன்  ஆனால் நான் அதை பார்க்கவில்லை   பார்க்க விரும்பவில்லை  ஏன்?   ஏனென்றால் எவருமே குரல் கொடுக்க விரும்பாத மக்களுக்குகாக. துணிந்து குரல் கொடுக்கிறார் யாரும் தட்டிக் கேட்கத,.....  கேட்க விரும்பதா. அநீதியையும் தட்டிக் கேட்கிறார்கள் மேலும்  வட்டுக்கோட்டையை சேர்ந்த ஒரு ஆசிரியை  தனது மாமியாரயை   திடீரென வீட்டில் விழுந்து மயங்கிய நிலையில்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தார்கள்  பலமணி நேரத்தின் பின்னர்  ஒரு மருத்துவர் பல மருத்துவ மாணவர்கள் புடை சூழ. வந்தார்  நோயாளியை. தொட்டுக்கூட. பார்க்கவில்லை  எட்ட நின்று  ஆக கொலோரேஸ்.  என்றாராம்   அவர் போய் விட்டார்  சரியான மருத்துவம் அளிக்கபடவில்லை  இடையில் நடந்த பல விடயங்களை நான் மறந்து போனேன்     அந்த பெண் இறந்து விட்டார்  அதன் பின்னர் உடலை வெட்டி பார்த்து உள்ளார்கள்,... உடல் தைக்காமல். வட்டுக்கோட்டை பொலிஸார் மூலம் மரணவிசாரனை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது  இங்கே ஜேர்மனியில் என்னுடன் வேலை செய்த தமிழ் இளைஞர் ஒருவருக்கு இதோ பிரச்சனை  வாய் மூலம் சிறுநீரகம் வரை  ஒரு சிறு குழாயை விட்டு  கொழுப்பை அகற்றிவிட்டுயுள்ளார்கள்.   மூன்று மாதம் மருத்துவ லீவும். கிடைத்தது  மீண்டும்   நன்றாக வேலை செய்தார்    யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் நடந்த பல விடயங்கள் நீதிக்கு பிறம்பானவை    அவற்றிற்கு குரல் கொடுக்க. எவருமில்லை    இதுவரை எவருமில்லை  இப்போது அர்ச்சுனா என்ற ஒருவன் வந்துட்டாரு அவரை ஒரு கை பார்த்து விடவேண்டும். என்பது மேல் மட்டத்தின். விருப்பம்   அதற்கு நாங்கள் துணை போகலாமா.  ???? 🙏
    • இதே வைத்தியர் அர்ச்சுனா ஒரு முறை தனது மேலதிகாரி தன்னை சார் என்று அழைக்கூமாறு கேட்டதே நக்கல் நையாண்டி செய்து பல வீடியோக்களை வெளியிடப்பட்டதாக ஞாபகம்lément blockquote
    • சங்கி என்றால் சக தோழன் என்று அர்ததம் என்று சமீபத்தில் சீமான் கூறினார். இப்போது உண்மையான சங்கி என்றால் திமுக தான் என்கிறார். அப்படியாயின்  திமுக என் உண்மையான சக தோழன் என்று கூற வருகிறாரா? 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.