Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, வாலி said:

ஏன் இந்த தேர்தல் நடக்குது?

அதுவா 🤣   அவருக்கு புதினுக்கு ரஷ்யாவிலும் தேர்தல் தான் நடத்துகிறேன், அதில் சென்ற தேர்தலில் 77 வீதம்  மக்கள் ஆதரவு இம் முறை 87 வீதம் மக்கள் ஆதரவு  தனது 100வது வயதில் நடைபெறுகின்ற தேர்தலில் 100 வீதம் ரஷ்ய மக்களின் ஆதரவை புதின் பெற்று கொண்டார் என்று உலகத்திற்கு காட்ட வேண்டும் என்பது அவரது ஆசை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, nedukkalapoovan said:

உலகில் போர் மூலம் அதிக அகதிகளை உருவாக்கிய பெருமை.. ஒபாமாவை சாரும்.. அவருக்கு உலக சமாதான நோபல் பரிசு.

அரபு வசந்தம் என கூறி நிம்மதியாக வாழ்ந்த மத்திய தரைக்கடல் சமூகங்களையும், வட ஆபிரிக்க சமூகங்களையும் நிர்க்கதியாக்கிய புகழும் பெருமையும் அவரையே சாரும்.

10 hours ago, nedukkalapoovan said:

உலகில் பேரழிவு ஆயுதம்.. அணு குண்டு வீசிய நாடு அமெரிக்கா. அதற்கு சனநாயக வேசம்.

கேட்டுக் கேள்வியில்லாமல் ஏனைய நாடுகள் மீது அணு குண்டையும் விமானத்தாக்குதல்களையும்  மேற்கொண்டவர்களுக்கு ஜனநாயவாதிகள் பட்டங்களும் நோபல் பரிசுகளும் சமர்ப்பணம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, வாலி said:

ஏன் இந்த தேர்தல் நடக்குது?

ஏனைய நாடுகளில் நடைபெறுவது போல் ரஸ்யாவிலும் தேர்தல் நடக்கிறது. ரஸ்யா ஒன்றும் செய்வாய் கிரகத்தில் இல்லையே???

33 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அதுவா 🤣   அவருக்கு புதினுக்கு ரஷ்யாவிலும் தேர்தல் தான் நடத்துகிறேன், அதில் சென்ற தேர்தலில் 77 வீதம்  மக்கள் ஆதரவு இம் முறை 87 வீதம் மக்கள் ஆதரவு  தனது 100வது வயதில் நடைபெறுகின்ற தேர்தலில் 100 வீதம் ரஷ்ய மக்களின் ஆதரவை புதின் பெற்று கொண்டார் என்று உலகத்திற்கு காட்ட வேண்டும் என்பது அவரது ஆசை

புட்டினின் 100 ஆவது வயதுக்கு இன்னும் 29 வருடங்கள் உள்ளது. சில வேளை உக்ரேனில் ஒரு தேர்தலை வைக்கலாம்.😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, nedukkalapoovan said:

உக்ரைன் ரஷ்சியாவின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத வரலாற்று உண்மை தெரியாதவர்களோடு ரஷ்சியா.. புட்டின் மட்டுமல்ல.. யாராலும் எந்த உண்மையான மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. உதாரணத்துக்கு சொறீலங்காவில் தமிழர் தாயக இருப்பை மறுப்பவர்களுக்கு ஒப்பானது.

இலங்கையின் தமிழர் பிரதேசங்களில் கிந்திய  ஊடுருவலை புரிந்து கொள்ள முடியாதவர்கள் உக்ரேன்/ரஷ்ய அரசியலை நன்கு புரிந்துள்ளார்களாம். நன்றி விசுவாசிகளாம்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, Kandiah57 said:

குறிப்பு,....நான் கேட்ட கேள்வி,...............க்கு,     பதில் எங்கே,. எங்கே,.... ???????????????????? 

நான் பதில் சொல்லி விட்டேன். 🤣

எங்கே உங்கள் பதில்....? 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

05e1c22_5943985-01-06-664x375.jpg

ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் : அபார வெற்றியுடன் மீண்டும் ஜனாதிபதியான விளாடிமிர் புடின்.

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புடின் 88% வாக்குகளுடன் அபார வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியாகியுள்ளார்.

ரஷ்யாவில் ஜனாதிபதிக்கான தேர்தல் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற நிலையில் நேற்று முடிவடைந்தது.

உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதில் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 87.8 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

இதன்மூலம் 71 வயதான புதின், அடுத்த 6 ஆண்டுக்கு ரஷியாவின் ஜனாதிபதியாக நீடிப்பார்.

அதன்மூலம் ரஷ்யாவை அதிக வருடங்கள் ஆண்டவர் என்ற பெருமையையும் விளாடிமிர் புட்டின் தனதாக்கிக்கொள்கின்றார்.

உக்ரைனுக்கு எதிராக இரண்டு வருடங்களாக தொடரும் யுத்தம், எதிர்க்கட்சி தலைவர் நவால்னியின் மரணம் போன்ற சம்பவங்கள், இந்த தேர்தலில் புட்டினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் மக்கள் திரண்டு வந்து விளாடிமிர் புட்டின் ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில், அவர் அபார வெற்றியுடன் மீண்டும் ஜனாதிபதி பதிவியை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், ரஷ்யாவில் நடைபெற்ற தேர்தல் சுதந்திரமாக மற்றும் நியாயமாக நடைபெறவில்லை என அமெரிக்கா விமர்சனம் செய்துள்ளது.

விளாடிமிர் புட்டின் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களை சிறையில் அடைத்தார். போராட்டங்களை நடத்த விடாமல் தடுத்தார். எனவே இந்த தேர்தல் சுதந்திரமாகவும் மற்றும் நியாயமாகவும் நடைபெறவில்லை என அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தேர்தல் நடைபெற்றபோது உக்ரைன் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எல்லையோர பகுதிகளில் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் என விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

கேஜிபி லெப்டினன்ட் கர்னல்(KGB lieutenant colonel) ஆக இருந்த விளாடிமிர் புடின் 1999 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆட்சிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1373804

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 17/3/2024 at 11:07, குமாரசாமி said:

வெளியேற மாட்டேன்.. ஏன் நான் வெளியேற வேண்டும்? 😂

ஆமாம் உண்மை ஏனெனில்  புதின். ஜேர்மனியை ஒருபோதும் ஆள முடியாது  ஜேர்மனி மக்களின் வாக்குகள் ஒவ்வொன்றும் பெறுமதி மிக்கவை   ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய பயன்படுத்துவதால்,...இங்கே சுதந்திரமான வாக்குப்பதிவு நடைபெறுகிறது  நான் நேரில் பார்த்து உள்ளேன்   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Kandiah57 said:

ஆமாம் உண்மை ஏனெனில்  புதின். ஜேர்மனியை ஒருபோதும் ஆள முடியாது  ஜேர்மனி மக்களின் வாக்குகள் ஒவ்வொன்றும் பெறுமதி மிக்கவை   ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய பயன்படுத்துவதால்,...இங்கே சுதந்திரமான வாக்குப்பதிவு நடைபெறுகிறது  நான் நேரில் பார்த்து உள்ளேன்   

அந்த சுதந்திரம்  Afd எனும் கட்சியில் வந்து நிற்கின்றது. கிழக்கு ஜேர்மனியில் பெருமளவு வளர்ந்து விட்டார்கள்.மேற்கு ஜேர்மனியிலும் வளர்ந்து கொண்டு வருகின்றார்கள்.  மக்கள் விரும்பி வாக்களித்து Afd ஐ பல இடங்களில் தங்கள் அபிமான வேட்பாளர்களை  சிறிய சிறிய அதிகார பீடங்களில் அமர்த்தியுள்ளார்கள். 

நண்பா!  சுதந்திரம் என்பது ஓரளவிற்குத்தான். அந்த சுதந்திரம் மீறினால் நாட்டையே உலுப்பி உன்னையே அழித்துவிடும். 

ஒரு ஹிட்லர் உருவாக வேண்டிய காரணமும் இதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, குமாரசாமி said:

அந்த சுதந்திரம்  Afd எனும் கட்சியில் வந்து நிற்கின்றது. கிழக்கு ஜேர்மனியில் பெருமளவு வளர்ந்து விட்டார்கள்.மேற்கு ஜேர்மனியிலும் வளர்ந்து கொண்டு வருகின்றார்கள்.  மக்கள் விரும்பி வாக்களித்து Afd ஐ பல இடங்களில் தங்கள் அபிமான வேட்பாளர்களை  சிறிய சிறிய அதிகார பீடங்களில் அமர்த்தியுள்ளார்கள். 

நண்பா!  சுதந்திரம் என்பது ஓரளவிற்குத்தான். அந்த சுதந்திரம் மீறினால் நாட்டையே உலுப்பி உன்னையே அழித்துவிடும். 

ஒரு ஹிட்லர் உருவாக வேண்டிய காரணமும் இதுதான்.

இந்த Afd இன் ஆரம்பித்தவர்களில். ஒருவர் இந்தியா வம்சத்தைச் சேர்ந்தவர்,.முன்னார் pds. க்கு இருந்த ஆதரவு  இப்போ குறைந்து Afd க்கு கூடியுள்ளது  ..இது ஒரு குறிப்பிட்ட வீதத்தை விட்டு கூடப்போவதில்லை     காரணம் நாட்டை கொண்டு நடத்த முடியாது  ...அப்போ வாக்களித்த மக்கள் வெறுப்பு அடைவார்கள்  எனவே… பயப்படவேண்டாம்.  . 🤣🙏  தொடர்ந்தும். புட்டினை ஆதரியுங்கள். வாழ்கையை அனுபவித்து வாழுங்கள். 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.