Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

spacer.png

அருணாச்சலப் பிரதேசத்சத்தை இந்திய பிராந்தியமாக அங்கீகரித்த அமெரிக்கா!

அருணாச்சலப் பிரதேசத்தை இந்திய பிராந்தியமாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.

அமெரிக்கா, எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு அப்பால் நடக்கும் எந்த ஒரு அத்துமீறலையும் எதிர்ப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் தங்களுடைய நிலப்பரப்பு என சீனா அடிக்கடி உரிமைக்கோரி வந்தது.

இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அருணாச்சலுக்கு சென்றபோது, சீனா தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

இதுதொடர்பாக நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் இணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல்,

“அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக நாங்கள் அங்கீகரிக்கின்றோம்.

அப்பிராந்தியத்தின் மீது உரிமைகோரும் நடவடிக்கையாக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே நடைபெறும் ஆக்கிரமிப்பு, இராணுவம், பொதுமக்கள் ஊடுருவல் போன்ற முன்னெடுப்புகளையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

அருணாச்சலப் பகுதிக்கு “ஜங்னான்” என பெயரிட்டுள்ள சீனா, அருணாச்சலப் பிரதேசத்துக்கு செல்லும் இந்தியத் தலைவர்களின் வருகைக்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1374245

  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, தமிழ் சிறி said:

இலங்கையையும். இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்து விடுங்கள்”  இல்லை என்றால் இலங்கை முழுவதும் சீனா வசமாகும். அதாவது சீனா ஆகி விடும்   இலங்கை மக்களும் தமிழர்கள் சிங்களவர்கள். வேறுபாடுகளின்றி ஆதரிக்கக்கூடும். எனவே… காலதாமதமின்றி  செயல் படவும். 😀

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனி வரும் காலங்களிலை  சீனாவை எதிர்த்து  எந்த கொம்பனாலையும் எதுவும் செய்ய முடியாது.

மேற்குலகுடன் நட்பாக இருந்த ரஷ்யாவை பகையாளியாக்கியதன் அருமை போகப்போக தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அது அங்கீகாரம் அல்ல.

அங்கீகரிப்பதற்கு ஒரு அதிகாரமுள்ள அமைப்பு வேண்டும். உதாரணமாக ஐக்கிய நாடுகள் சபை போன்ற உயர் அமைப்புக்களைக் கூறலாம்.

அமெரிக்கா அங்கீகரிப்பதால் இந்தியாவிற்கு ஏதேனும் நடைமுறை சார் அனுகூலம் இருக்கிறதா? அல்லது சீனாவுக்கு நடைமுறை சார் பிரதிகூலம் ஏதேனும் உண்டா? என்றால் சந்தேகமே. 

இந்தியாவின் ஒரு பாகமாகம் எனும் இந்தியாவின் கொள்கையை  ஏற்றுக்கொண்டது எனக் பொருள் கொள்வதே  சரியான பதமாக அமையும் என நம்புகிறேன். 

KEY QUOTES

"The United States recognizes Arunachal Pradesh as Indian territory and we strongly oppose any unilateral attempts to advance territorial claims by incursion or encroachments, military or civilian across the Line of Actual Control," a State Department spokesperson said in a press briefing.
 
சீனா: 👇
 
Washington has brewed a toxic drink for New Delhi: Global Times editorial
By Global Times Published: Mar 21, 2024 11:29 PM
Illustration: Chen Xia/Global Times

Illustration: Chen Xia/Global Times

On March 20, local time, a spokesperson for the US State Department claimed that the US government recognizes the so-called "Arunachal Pradesh" (China's Zangnan area) as Indian territory and "strongly opposes any unilateral attempts to advance territorial claims by incursions or encroachments, military or civilian, across the Line of Actual Control." This statement is extremely sinister and malicious, openly intervening in the China-India border issue, which is totally irrelevant to the US, and explicitly supporting India's claims. On the surface, it seems to be helping India, but in reality, it is handing India a tempting poison. Will India take it? We hope India will remain calm and sober.

Possibly due to the approaching elections, India has recently started to frequently exploit the China-India border issue. Indian Prime Minister Narendra Modi attended the inauguration ceremony of projects such as the Sela Tunnel in the so-called "Arunachal Pradesh" on March 9. The Indian military has increased its deployment of forces in border areas, and the Indian Ministry of External Affairs has repeatedly made cliches over the China-India border issue. It is worth noting that Indian Foreign Minister Subrahmanyam Jaishankar once again criticized India's first prime minister Jawaharlal Nehru's foreign policy stance toward China on March 20, questioning the concept of "Chindia," which clearly implies something.

From the perspective of political utilitarianism, the ruling Bharatiya Janata Party (BJP) in India wants to attract votes by taking a tough stance on the China-India border issue. Some analysis also suggests that "the BJP has needed to tear down some of Nehru's myths in order to build its own." However, regardless of their true intentions, these actions objectively treat China-India relations as a sacrificial lamb, complicating the China-India border issue.

https://www.globaltimes.cn/page/202403/1309314.shtml

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக நாங்கள் அங்கீகரிக்கின்றோம்.

அப்புறம் என்ன உலக பொலிசே சொல்லியாச்சே.

எல்லாம் போ,போ,போ மாறு,மாறு.

1 hour ago, Kapithan said:

அங்கீகரிப்பதற்கு ஒரு அதிகாரமுள்ள அமைப்பு வேண்டும். உதாரணமாக ஐக்கிய நாடுகள் சபை போன்ற உயர் அமைப்புக்களைக் கூறலாம்.

அமெரிக்கா சொன்னாலும்

ஐக்கிய நாடுகள் சபை

சொன்னாலும் ஒன்று தான்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்கா சொன்னாலும்

ஐக்கிய நாடுகள் சபை

சொன்னாலும் ஒன்று தான்.

ஆமாம் நிச்சயமாக,....ஆனால் அமெரிக்கா சொல்லும் பொது சீனாவால். வீட்டோ பாவிக்க முடியாது     ஆனால் 

ஐக்கிய நாடுகள் சபையில்   சீனா வீட்டோ பாவிக்க முடியும் 

4 hours ago, குமாரசாமி said:

மேற்குலகுடன் நட்பாக இருந்த ரஷ்யாவை பகையாளியாக்கியதன் அருமை போகப்போக தெரியும்.

புடின்.  தனக்கு பின்னர் ஒரு சிறந்த தலைவரை உருவாக்கவில்லை   உருவாக்கவுமாட்டார்    எனவே…  புடினின். மறைவின். பின்னர்  மேற்குலகு நினைத்தபடி  அனைத்தும் நடைபெறும் வாய்ப்புகள் அதிகமுண்டு   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kandiah57 said:

புடின்.  தனக்கு பின்னர் ஒரு சிறந்த தலைவரை உருவாக்கவில்லை   உருவாக்கவுமாட்டார்    எனவே…  புடினின். மறைவின். பின்னர்  மேற்குலகு நினைத்தபடி  அனைத்தும் நடைபெறும் வாய்ப்புகள் அதிகமுண்டு

நல்லாய் இருந்த புட்டினை தங்கள் எதிரியாக்கினதும் மேற்குலகம் தான்......
ஜேர்மனியிலை தானே இருக்கிறியள்? புட்டின் ஒருக்கால் ஜேர்மன் பாராளுமன்றத்திலை உரையாற்றினதை ஒருக்கால் கேட்டுப்பாருங்கோ கந்தையர்....

மற்றும் படி இனி புட்டினை விட கடுமையானவர்தான் ரஷ்ய நாட்டுக்கு வருவார். ஏனெனில் அந்தளவிற்கு ரஷ்ய மக்களை தேசிய வெறி கொள்ள வைத்து விட்டார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, Kandiah57 said:

புடின்.  தனக்கு பின்னர் ஒரு சிறந்த தலைவரை உருவாக்கவில்லை   உருவாக்கவுமாட்டார்    எனவே…  புடினின். மறைவின். பின்னர்  மேற்குலகு நினைத்தபடி  அனைத்தும் நடைபெறும் வாய்ப்புகள் அதிகமுண்டு

இப்ப தானே தேர்தலில் வென்றுள்ளார்.

அவருக்கேற்ற ஆளை உருவாக்க நீண்ட காவ அவகாசம் உள்ளது.

இல்லை என்றால் அவரின் இருப்பே கேள்விக் குறி தான்.

Edited by ஈழப்பிரியன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

இப்ப தானே தேர்தலில் வென்றுள்ளார்.

அவருக்கேற்ற ஆளை உருவாக்க நீண்ட காவ அவகாசம் உள்ளது.

இல்லை என்றால் அவரின் இருப்பே கேள்விக் குறி தான்.

அவர் 25 ஆண்டுகளுக்கு மேல் பதவியிலிருந்து இருக்கிறார்,..வயதும்  70 மேல் வரும்   எந்த நிமிடமும்.  இந்த உலகிலிருந்து சொல்லலாமால் கொள்ளாமல் போகலாம்   மேலும் அவர் எவரையும் நம்புவது கிடையாது   அவரைத் தான் நம்புகிறார்கள் 

இலங்கை இந்தியா  ரஷ்யா சீனா அமெரிக்கா,.........இந்த நாடுகளின் தலைவதலைவர்கள் வயோதிபர்கள்   தான் எந்த நேரமும்  பாசக்கயிறு கழுத்தில் விழும்  எனவே… காலம் நீண்ட காலம் கிடக்குறது   என்பது சரியான வாதமில்லை  😀  

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.