Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று முதல் புதிய விசா முறை அமுல்

Published By: DIGITAL DESK 3    17 APR, 2024 | 09:48 AM

image
 
இன்று புதன்கிழமை (17) புதிய விசா  முறை மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணியை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்  நடைமுறைப்படுத்தவுள்ளது.

"புதிய விசா  நடைமுறைகள், அதற்கான கட்டணங்கள், பூர்த்தி செய்யவேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்க முடியுமான காலப் பிரிவு என்பன இலக்கம் 2360/24 மற்றும் 2023.11.27 ஆம் திகதி விசேட வர்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 

தற்போது நடைமுறையிலுள்ள ETA (Electronic Travel Authorization) முறைக்குப் பதிலாக அறிமுகம் செய்யப்படும் இணைய வழிமுறையான E-Visa முறைமை GBS Technology Service & IVS Global நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதோடு அந்த இணையத்தளத்தின் தொடர்பு கீழே தரப்பட்டுள்ளது. www.srilankaevisa.lk

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களை கவரும் வகையில், புதிய இணைய வழிமுறையை  அறிமுகப்படுத்துவதன் மூலம் விரைவான மற்றும் திறமையான விசா விண்ணப்ப செயல்முறையை வழங்க உத்தேசித்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

52.jpg

22.jpg

https://www.virakesari.lk/article/181269

  • கருத்துக்கள உறவுகள்

விசிட் வீசா கட்டணம் $50 இல் இருந்து - 75 ஆகியுள்ளது.

ஆனால் முன்னர் 1 மாதம். இப்போ 3 மாதம், 60 நாளைக்கு ஒரு தரம் வெளியே போய் வர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

விசிட் வீசா கட்டணம் $50 இல் இருந்து - 75 ஆகியுள்ளது.

ஆனால் முன்னர் 1 மாதம். இப்போ 3 மாதம், 60 நாளைக்கு ஒரு தரம் வெளியே போய் வர வேண்டும்.

கோசான் 6 மாதங்கள் - 180 days.

5 வருட இந்திய விசாவிற்கு $80 ஆனால் இவை $500 ஆம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

கோசான் 6 மாதங்கள் - 180 days.

5 வருட இந்திய விசாவிற்கு $80 ஆனால் இவை $500 ஆம்.

ஓம் மீரா கணக்கில் பிழை விட்டுள்ளேன்.

விசிட் வீசாவை தவிர மீதி எல்லாம் கொஞ்சம் ஓவராய்தான் தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

ஓம் மீரா கணக்கில் பிழை விட்டுள்ளேன்.

விசிட் வீசாவை தவிர மீதி எல்லாம் கொஞ்சம் ஓவராய்தான் தெரியுது.

கொஞ்சம் இல்லை ரெம்ப ஓவர்

  • கருத்துக்கள உறவுகள்

வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே. 

ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்

https://online.srilankaevisa.lk/

யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா?

எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம்

April 18, 2024
 
இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.

https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

ஓம் மீரா கணக்கில் பிழை விட்டுள்ளேன்.

விசிட் வீசாவை தவிர மீதி எல்லாம் கொஞ்சம் ஓவராய்தான் தெரியுது.

இங்கிருந்து செல்லும் சிறிய பென்சன்காரர்கள் இதனால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதா??

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

இங்கிருந்து செல்லும் சிறிய பென்சன்காரர்கள் இதனால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதா??

விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை.

உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்).

முன்பு இது 100/120 என நினைக்கிறேன். 

——————-

அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை.

ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்):

முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர்.

பிகு

தனி

மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும்.

போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான்.

கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும்.

ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர்.

ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது.

8 hours ago, ஈழப்பிரியன் said:

https://online.srilankaevisa.lk/

யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா?

எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.

எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை.

பிகு

50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை.

உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்).

முன்பு இது 100/120 என நினைக்கிறேன். 

——————-

அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை.

ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்):

முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர்.

பிகு

தனி

மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும்.

போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான்.

கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும்.

ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர்.

ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது.

எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை.

பிகு

50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.

எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?

ஓம்….இலங்கை டுயல் நேஷ்னாலிட்டி எடுத்தால் ஒரே செலவுடன் சமாளிக்கலாம். இல்லாட்டில் இந்த புதிய நடைமுறையின் கீழ் 9 மாதம் நிற்க இரு தடவையும், 6 மாதம் நிற்க ஒரு தரமும் வெளியே போய் வர வேண்டும் (ஒருதரம் சென்னை ரிட்டர்ண் மட்டும் £180). 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை.

முன்னர் சாதாரண விசா எடுத்த பின்பு மல்ரிபிள் விசா 100 டாலருக்கு (5 வருடம்) அமெரிக்காவில் மட்டும் தந்தார்கள்.

இனி எப்படியோ தெரியாது.

எத்தனை தடவை வேணுமானாலும் போகலாம்.

ஒரு தடவை போனால் 6 மாதம் நிற்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

முன்னர் சாதாரண விசா எடுத்த பின்பு மல்ரிபிள் விசா 100 டாலருக்கு (5 வருடம்) அமெரிக்காவில் மட்டும் தந்தார்கள்.

இனி எப்படியோ தெரியாது.

எத்தனை தடவை வேணுமானாலும் போகலாம்.

ஒரு தடவை போனால் 6 மாதம் நிற்கலாம்.

இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே.

SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன்.

(உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!)

—————

இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அறிவுறுத்தல்

visa-2-300x200.jpg

புதிய விசா முறைமைக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள www.srilankaevisa.lk இணையத்தளத்தினை போன்று போலி இணையத்தளம் ஊடாக சிலர் பணம் செலுத்துகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Online ஊடாக விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் e visa பகுதியை மாத்திரம் பயன்படுத்துமாறு திணைக்களம் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.

கடந்த 17 ஆம் திகதியில் இருந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் புதிய விசா முறைமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/300314

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைத்தரு வீசா மாத்திரமல்ல இணைய வீசா முறையும் வேண்டாம் : குடிவரவுத் திணைக்கள அதிகாரி

நாட்டிற்கு வரும் வழக்கமான வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை பாதிப்படைவதால், வருகைத்தரும் வீசா மட்டுமல்ல, இணையத்தின் ஊடான வீசா முறையும் நிறுத்தப்பட வேண்டும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

இணையத்தளப் பிரச்சினைகள் காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்(Bandaranaike International Airport) சுற்றுலாப் பயணிகளின் வருகை குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்துள்ளதாக தனது அடையாளத்தை வெளிப்படுத்த விருப்பம் கொள்ளாத இந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

புதிய முறை

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சில வெளிநாட்டினர் வணிக நோக்கத்திற்காக இலங்கைக்கு வருகை தருகிறார்கள், சுற்றுலா அமைச்சகம் நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த இலக்கு வைத்துள்ளது. எனினும் புதிய முறையால் நிலைமை மாற்றம் அடைந்துள்ளது.

வருகைத்தரு வீசா மாத்திரமல்ல இணைய வீசா முறையும் வேண்டாம் : குடிவரவுத் திணைக்கள அதிகாரி | Not Only Visit Visa But Also Online Visa System

இந்த வருகைத்தரும் (ஒன்-எரைவல்) மற்றும் இணையத்தள (ஒன்லைன்) வீசா முறைகளின் கீழ் பரிவர்த்தனைகள் முற்றிலும் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளன.

கடந்த 12 வருடங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் 52 அமெரிக்க டொலர்களுக்கு இந்த முறைமை செயற்படுத்தப்பட்டு 50 அமெரிக்க டொலர்கள் திறைசேரிக்கு அனுப்பப்பட்டது.

மேலும், ஸ்ரீ லங்கா டெலிகொம் வழங்கிய சேவைக்கான கட்டணமாக 2 அமெரிக்க டொலர்கள் அறவிடப்பட்டது.

புதிய முறையின்கீழ் நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணங்கள் துபாயில் உள்ள வங்கிக்கு அனுப்பப்படுவதாகவும், இரண்டு நாட்களுக்குப் பிறகு, உள்ளூர் அரச வங்கி ஒன்றின் மூலம் நிதி திறைசேரியில் வைப்புச் செய்யப்படுகிறது.

முன்னதாக, இந்தக் கட்டணங்கள்  இலங்கை மத்திய வங்கியின் பிரதி அரச செயலாளரின் கீழ் உள்ள கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளன. கட்டணங்கள் டொலர் பரிமாற்றத்தின் தினசரி புதுப்பித்தலுடன், ஒவ்வொரு நாளும் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு பற்று வைக்கப்படும்.

தகவல் மீறல் சம்பவங்கள்

ஆனால் புதிய முறையின் கீழ், இரண்டு நாட்களுக்குப் பின்னரே கட்டணங்கள் திறைசேரியில், பற்று வைக்கப்படும். ஒருவரின் கடவுச்சீட்டு தகவலை மற்றொரு தரப்பினர் பெற்றுக்கொள்ளும் தகவல் மீறல் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன எனவே, இந்த புதிய முறைக்கு சீனா உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

வருகைத்தரு வீசா மாத்திரமல்ல இணைய வீசா முறையும் வேண்டாம் : குடிவரவுத் திணைக்கள அதிகாரி | Not Only Visit Visa But Also Online Visa System

VFS GLOBAL நிறுவனத்திற்கு 75.5 டொலர்களை செலுத்திவிட்டு நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர், வீசாவைப் பெறும்போது அவர்களது கடவுச்சீட்டு எண் மற்றும் பிறந்த திகதியில் உள்ள பிழைகளை சரிசெய்ய மேலும் 50 செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, சிறு பிழைகளை சரி செய்ய குடிவரவுத் திணைக்களத்தால் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை.

இதேவேளை  VFS GLOBAL என்பது துபாயை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனமாகும். இது இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/not-only-visit-visa-but-also-online-visa-system-1715431733

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் தங்கள் வசதிக்கு, தங்கள் இஸ்டத்துக்கு மாற்றங்கள் செய்கின்றது. இலங்கைக்கு வருகை தருகின்ற மக்களில் கணிசமான தொகையினர் இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள். இவர்கள் புதிய வீசா நடைமுறையை எப்படி பார்ப்பார்கள் என்பது முக்கியமானது. 

வீசா இழுபறிகள், வெளி நிறுவனத்தின் கையாள்கையால் தகவல் பரிமாற்றத்தில் வரக்கூடிய மாற்றங்கள் போன்றவை பலர் இலங்கைக்கு பயணம் செய்வதை ஊக்குவிக்காது போகலாம். இது வருகையில் கணிசமான வீழ்ச்சியை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.