Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"நாடற்ற பெண்ணாக இருந்தேன்" - இந்திய தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர்
படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல்
  • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 18 ஏப்ரல் 2024
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார்.

இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா?

திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர்.

ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார்.

இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு

தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார்.

அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார்.

அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.

40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி

"நாடற்ற பெண்ணாக இருந்தேன்" - இந்திய தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர்

பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH

படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர்.

எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம்.

கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார்.

‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’

நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார்.

அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’

"நாடற்ற பெண்ணாக இருந்தேன்" - இந்திய தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர்
படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார்.

இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார்.

இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார்.

அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.

இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய்.

தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி.

தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.

"நாடற்ற பெண்ணாக இருந்தேன்" - இந்திய தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர்
படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி.

அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார்.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி.

இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது.

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி.

https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும்.

ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி.

[நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார்.
அதில் "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து]

இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும்  ஈழதமிழர்கள் மேற்க்கு நாட்டு குடிமக்கள் என்பது இங்கு சாதரணமான ஒன்று. இந்தியாவில் இதற்கு  கடுமையாக போராட வேண்டியுள்ளது.  இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் அனைத்து இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்கபட வேண்டும்.

4 hours ago, ஏராளன் said:

இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது.

பிரான்ஸ் யுகேயில்  கிரீன் காட் சிஸ்ரம் இருக்கின்றதா  அமெரிக்காவில் தான் என்று நினைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பிரான்ஸ் யுகேயில்  கிரீன் காட் சிஸ்ரம் இருக்கின்றதா  அமெரிக்காவில் தான் என்று நினைத்தேன்.

இல்லை - சென்னையில் இருக்கும் பிபிசி தமிழில் புதிதாக கண்டுபிடித்துள்ளார்கள்🤣.

5 வருடம் சட்டபூர்வமாக வாழ்ந்தால் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்....ம்...ம்

சொந்த மண்ணினத்தவெனையே பாகுபாடு பார்க்கும் தமிழ்நாட்டில்  இலங்கை பொண்ணு வாக்களிச்சு எத சாதிக்கப்போகுதாம்? 🤣

கவனம். உயிராபத்து நிறைந்த விடயம். 😎

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

ம்....ம்...ம்

சொந்த மண்ணினத்தவெனையே பாகுபாடு பார்க்கும் தமிழ்நாட்டில்  இலங்கை பொண்ணு வாக்களிச்சு எத சாதிக்கப்போகுதாம்? 🤣

கவனம். உயிராபத்து நிறைந்த விடயம். 😎

குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா?
25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா?
25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂

அடேங்கப்பா....ஒரு வாக்கு 25,000 எண்டால் அங்கை வாழுற சனமும் அந்த மண்ணும் எவ்வளவு முன்னேறி இருக்கும்? 🤣
 
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா?
25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂

ஓம் ஓம் திராவிட‌ம் எந்த‌ நிலைக்கும் போகும் என்று ஊர் உல‌க‌ம் அறிந்த‌ உண்மை....................இந்த‌ தேர்த‌லில் 300 , 500 , 2000
இதை தாண்ட‌ வில்லை
ப‌ல‌ர் கையும் க‌ள‌வுமாய் பிடி ப‌ட்டு த‌ப்பி ஓடி இருக்கின‌ம் நேற்று....................நீங்க‌ளும் காணொளி பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

அடேங்கப்பா....ஒரு வாக்கு 25,000 எண்டால் அங்கை வாழுற சனமும் அந்த மண்ணும் எவ்வளவு முன்னேறி இருக்கும்? 🤣

அதுதான்…. இல்லை.
அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌
இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000
2000ரூபாய் எடுப‌டாது......................
நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

ஓம் ஓம் திராவிட‌ம் எந்த‌ நிலைக்கும் போகும் என்று ஊர் உல‌க‌ம் அறிந்த‌ உண்மை....................இந்த‌ தேர்த‌லில் 300 , 500 , 2000
இதை தாண்ட‌ வில்லை
ப‌ல‌ர் கையும் க‌ள‌வுமாய் பிடி ப‌ட்டு த‌ப்பி ஓடி இருக்கின‌ம் நேற்று....................நீங்க‌ளும் காணொளி பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................

இந்தத் தேர்தலில் எவ்வளவு அதிகமாக போனது என்று தெரியவில்லை.
ஆனால் மறியலில் இருக்கும் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி ஒரு தேர்தலில் அந்தத் தொகுதி மக்கள் எல்லாருக்கும் லட்சக் கணக்கில் பணத்தை விநியோகித்தது தெரியும். 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

இந்தத் தேர்தலில் எவ்வளவு அதிகமாக போனது என்று தெரியவில்லை.
ஆனால் மறியலில் இருக்கும் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி ஒரு தேர்தலில் அந்தத் தொகுதி மக்கள் எல்லாருக்கும் லட்சக் கணக்கில் பணத்தை விநியோகித்தது தெரியும். 😎

தெரியும் ஆனால்
இந்த‌ தேர்த‌லில் ப‌ண‌ம் பெரிசா புகுந்து விளையாட‌ வில்லை
எல்லாம் சில்ல‌றை காசு தான் இந்த‌ முறை

ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் 2000ரூபாய் கொடுத்த‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ந்த‌து😏.................................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

தெரியும் ஆனால்
இந்த‌ தேர்த‌லில் ப‌ண‌ம் பெரிசா புகுந்து விளையாட‌ வில்லை
எல்லாம் சில்ல‌றை காசு தான் இந்த‌ முறை

ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் 2000ரூபாய் கொடுத்த‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ந்த‌து😏.................................

யார்….😎 தீம்காவா கொடுத்தது பையா…😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

யார்….😎 தீம்காவா கொடுத்தது பையா…😂🤣

ஒம் 1000ரூபாய்க்கு பிற‌ந்த‌வ‌ங்ள் என்று  திருட‌ர்க‌ளை பார்த்து சொல்லி விட்டா

ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் வென்று விட‌க் கூடாது என்று அந்த‌ தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................ப‌டிச்ச‌ அறிவுள்ள‌ ஜீவிக‌ள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுக‌ள்
ஏழை ம‌க்க‌ள் க‌ண்டிப்பாய் வேண்டி இருப்பின‌ம்......................ப‌ண‌ம் கொடுக்கும் முறைய‌ முற்றிலுமாய் இல்மாம‌ ப‌ண்ண‌னும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து காசு கொடுத்து ம‌க்க‌ளிட‌ன் ஓட்டை பெற‌ முடியாது...............கால‌ம் கால‌மாய் வேண்டின‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் கை நீட்டி வேண்டுங்க‌ள்.....................
சிறு கால‌ம் போக‌ காசு கொண்டு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூல‌ம் காண‌லாம் க‌ண்டு ரசிக்க‌லாம்😂😁🤣......................................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த வரை காளியம்மாள் கிட்டதட்ட வெல்லும் நிலையாம்….

பயந்து போன தீம்கா….ஒரு வாக்குக்கு ஒரு கோடி வரை கொடுத்ததாம்🤣

1 hour ago, தமிழ் சிறி said:

25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது

large.IMG_7407.jpeg.2d046be327472b494494c22a44f144bd.jpeg

🤣

  • கருத்துக்கள உறவுகள்

சராசரியாக ஒரு லோக்சபா தொகுதியில் 15 இலட்சம் வாக்குகள்.

வாக்குக்கு 25,000 கொடுத்தால் 🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்+

ஏது முதல் இலங்கைத் தமிழரா? 

டாய் இந்தியனே, பல தேர்தல்களின் வாக்குச் செலுத்திய எங்கடையாக்களைத் எனக்குத் தெரியும். 😁

இந்த அன்ரி, சட்டப்படி ஆதார் அடையாள அட்டையை எடுத்திருக்கா. அதனாலை படம் போட்டுக் காட்டுறாங்கள். அதனலை பெரிசா போடுராங்கள். 

வேறொன்டுமில்லை!

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

சராசரியாக ஒரு லோக்சபா தொகுதியில் 15 இலட்சம் வாக்குகள்.

வாக்குக்கு 25,000 கொடுத்தால் 🤣🤣🤣

வாக்குக்கு காசு பணம் மிக்ஸர் ரிவி வேலை குடுக்கிறதெல்லாம் பொய் எண்டுறன்....பிறகு ஏன் இதுக்கை நிண்டு கத்துறியள்? 😄

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

வாக்குக்கு காசு பணம் மிக்ஸர் ரிவி வேலை குடுக்கிறதெல்லாம் பொய் எண்டுறன்....பிறகு ஏன் இதுக்கை நிண்டு கத்துறியள்? 😄

மிக்ஸர், ரிவி, வேலை எல்லாம் வாக்குக்கு பணத்தோடு ஒப்பிட முடியாதவை.

அவை மேற்கில் நாம் welfare state, safety net, state benefit என பலவாறு விதந்துரைக்கும் ஏழைகள் நலத்திட்டங்களின் ஒரு வடிவமே.

எல்லாராலும் காளி முத்து சொத்தை ஆட்டைய போட்டு, வாக்கை பிரிக்க கமிசன் வாங்கி வாழ முடியாது. பலருக்கு அரசின் உதவி தேவை. அவை இலவசங்களோ, வாக்குக்கு இலஞ்சமோ அல்ல. நலத்திடங்கள்.

யாழ்கள பாசையில் சொன்னால் - சோசல்🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2024 at 22:53, goshan_che said:

இல்லை - சென்னையில் இருக்கும் பிபிசி தமிழில் புதிதாக கண்டுபிடித்துள்ளார்கள்🤣.

5 வருடம் சட்டபூர்வமாக வாழ்ந்தால் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னையில் இருக்கும் பிபிசி இதை  யாழ்பாண தமிழர்களை கொப்பி பண்ணி கண்டுபிடித்த மாதிரி தெரிகின்றது  சொக்லேற் எல்லாம் கன்டோஸ் என்பது போல்  தற்காலிக வதிவிட உரிமை, நிரந்தர வதிவிட உரிமை எல்லாமே  அமெரிக்கன் கிரீன் காட்😂

22 hours ago, goshan_che said:

சராசரியாக ஒரு லோக்சபா தொகுதியில் 15 இலட்சம் வாக்குகள்.

வாக்குக்கு 25,000 கொடுத்தால் 🤣🤣🤣

நானும் நினைத்தேன் யாழ்பாணத்து தொகுதிகளில் ஒரு 30 ஆயிரம் 40 ஆயிரம் வாக்காளர்கள் இருப்பார்கள் என்றார்கள் .அவர்களுக்கே வாக்குக்கு 25 000 கொடுக்க முடியாதே  ஜனதொகை வெடிக்கும் நிலையில் உள்ள இந்தியாவில் பல  இலட்சங்கள் வாக்குகள் கொண்ட தொகுதிக்கு வாக்குக்கு 25000 கொடுப்பது என்றால் சீமான்  எதை சொன்னாலும் நம்புவது என்ற பரவச நிலையை அடைந்துவிட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/4/2024 at 00:22, தமிழ் சிறி said:

இந்தத் தேர்தலில் எவ்வளவு அதிகமாக போனது என்று தெரியவில்லை.
ஆனால் மறியலில் இருக்கும் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி ஒரு தேர்தலில் அந்தத் தொகுதி மக்கள் எல்லாருக்கும் லட்சக் கணக்கில் பணத்தை விநியோகித்தது தெரியும். 😎

திமுக்கா கார‌ங்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு 

அந்த‌ ந‌ப‌ர் கேட்க்கிறார் நீங்க‌ள் எந்த‌ க‌ட்சி என்று தாங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி என்ற‌ 

உட‌ ஜ‌டி காட்ட‌ காட்டுங்கோ என்னு கேட்க்க‌ 

இல்லை நாங்க‌ள் திமுக்கா கார‌ங்க‌ள் என்று சொல்லி விட்டு வேக‌மாய் ந‌ட‌ந்து போன‌வை

அப்ப‌ அந்த‌ பெடிய‌ன் கேட்க்குது

இதில் ஏன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெய‌ரை சொன்னீங்க‌ள் என்று கேட்க்க‌ சும்மா விளையாட்டுக்கு சொன்னார்க‌ளாம் அந்த‌ காணொளி நீங்க‌ளும் பார்த்து இருப்பிங்க‌ள் பார்க்காட்டி வாட்ஸ் மூல‌ம் அனுப்பி வைக்கிறேன்😁............................

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

உண்மை சொல்லுகின்ற ஆட்கள், 
"தீம்கா"வாக  இருக்க சந்தர்ப்பமே இல்லை பையா. 😂
நான் இன்னும் அந்தக் கூத்தை பார்க்கவில்லை. 
எதுக்கும் அனுப்பி வையுங்க. பிற்காலத்துக்கு உதவும். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

உண்மை சொல்லுகின்ற ஆட்கள், 
"தீம்கா"வாக  இருக்க சந்தர்ப்பமே இல்லை பையா. 😂
நான் இன்னும் அந்தக் கூத்தை பார்க்கவில்லை. 
எதுக்கும் அனுப்பி வையுங்க. பிற்காலத்துக்கு உதவும். 🤣

ஹா ஹா அப்ப‌டியா

திமுக்கா என்றாலும் அடிக்கு மேல‌ அடி விழுந்தால் க‌ட‌சியில் உண்மையை ஒத்து கொண்டு தான் ஆக‌னும் த‌மிழ் சிறி அண்ணா🤣😁😂.........................அந்த‌ பெடிய‌ன் விட்டால் இர‌ண்டு அடி போட்டு இருப்பான் 

ப‌ம்பி கொண்டு அந்த‌ இட‌த்தை விட்டு போய் விட்டின‌ம்

ஆனால் அவை மூன்று பேரின் முக‌த்தை காணொளியில் தெளிவாய் தெரியுது😮..........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.