Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.   

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார்.

இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.

fuel crisis sri lanka

 

அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும்.

கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.

 

 

இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் எரிபொருளுக்கு  வரிசை கட்டியம் சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால்

வெளியில்  காட்டப்படும் விம்பம்????

ரூபாவின் எழுச்சி???

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

அப்படியானால்

வெளியில்  காட்டப்படும் விம்பம்????

ரூபாவின் எழுச்சி???

அது வயோதிபத்தில் வரும் எழுச்சி 😁

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நந்தன் said:

அது வயோதிபத்தில் வரும் எழுச்சி 😁

அது கூட இங்கே பரவாயில்லை ராசா😋

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் சரியாக ஒரு கிழமைக்கு பின் வந்து கருத்து எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

இந்த திரியில் சரியாக ஒரு கிழமைக்கு பின் வந்து கருத்து எழுதுகிறேன்.

ஏன் சம்பவம் நடந்து முடிந்த பின்னர் இப்படித்தான் நடக்கும் என்று முன்னரே தெரியும் என்று எழுதுவதற்காகவா?

 

என்னைப் பொறுத்தவரை 2022 இல் இருந்த நிலை வராது என்றே எண்ணுகிறேன். வழங்களில் பற்றாக்குறை வந்தாலும் QR கோட்டினை மீண்டும் அமுல்படுத்தி நிலமையை சமாளிப்பார்கள்.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, MEERA said:

ஏன் சம்பவம் நடந்து முடிந்த பின்னர் இப்படித்தான் நடக்கும் என்று முன்னரே தெரியும் என்று எழுதுவதற்காகவா?

 

என்னைப் பொறுத்தவரை 2022 இல் இருந்த நிலை வராது என்றே எண்ணுகிறேன். வழங்களில் பற்றாக்குறை வந்தாலும் QR கோட்டினை மீண்டும் அமுல்படுத்தி நிலமையை சமாளிப்பார்கள்.

இல்லை - இது கையிருப்பு சம்பந்தமான பிரச்சனை போல தெரியவில்லை. மாறாக விநியோகம் சம்பந்தமானது.

வட் வரி செலுத்துவது தொடர்பான பிரச்சனையில் பெற்றோல் விநியோகஸ்தர் - அரசினை நெருக்க, விநியோகத்தை வைத்து blackmail பண்ணுகிறார்கள்.

நான் அங்கு நிற்கும் போது இது புகைய தொடங்கியது. பெற்றோல் விநியோகத்தை அத்தியாவசிய சேவை என அறிவித்து அரசாணை வெளி வந்தது. 24 மணி நேரம், கியூ 5 கார் அளவுக்கு நீண்டு பின் அடங்கி விட்டது.

இதை நான் ஒரு trade union vs govt. பிணக்காகவே பார்க்கிறேன்.

ஆளை ஆள் மிரட்டி விட்டு பின் ஒரு compromise ற்கு வர வாய்புள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சித்தங்கேணி கோப்பிரட்டி பெற்றோல் செற்ல நேற்றிரவு சிறிய வரிசையைக் கண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

சித்தங்கேணி கோப்பிரட்டி பெற்றோல் செற்ல நேற்றிரவு சிறிய வரிசையைக் கண்டேன்.

தகவலுக்கு நன்றி.

2019 உடன் ஒப்பிடும் போது யாழில் மிக அதிக அளவில் பெற்ரோல் செட் டுகளை கண்டேன்.

சில இடங்களில் எதிரும் புதிருமாக இரெண்டு செட் அடித்துள்ளார்கள்.

அனதளவுக்கு எரிபொருளுக்கு கேள்வி உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, goshan_che said:

தகவலுக்கு நன்றி.

2019 உடன் ஒப்பிடும் போது யாழில் மிக அதிக அளவில் பெற்ரோல் செட் டுகளை கண்டேன்.

சில இடங்களில் எதிரும் புதிருமாக இரெண்டு செட் அடித்துள்ளார்கள்.

அனதளவுக்கு எரிபொருளுக்கு கேள்வி உள்ளதா?

மூத்திரம் பெய்யப் போறதெண்டாலும் மோட்டச் சைக்கிளில போறாங்கள் அண்ணை. அப்ப கேள்வி இருக்கும் தானே?!

நெருக்கடி வாறது நல்லது, 
ஏனெண்டா 
1) கறள் பிடிச்ச சைக்கிள்கள் கழுவிப் பூட்டி ஓடுவினம்
2) பணம் சேமிக்கப்படும்(பெற்றோல் செலவு)
3) சுற்றுச்சூழல் மாசுபடாது
4) சைக்கிளோடுவதால் ஆரோக்கியம் மேம்படும்

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஏராளன் said:

மூத்திரம் பெய்யப் போறதெண்டாலும் மோட்டச் சைக்கிளில போறாங்கள் அண்ணை. அப்ப கேள்வி இருக்கும் தானே?!

நெருக்கடி வாறது நல்லது, 
ஏனெண்டா 
1) கறள் பிடிச்ச சைக்கிள்கள் கழுவிப் பூட்டி ஓடுவினம்
2) பணம் சேமிக்கப்படும்(பெற்றோல் செலவு)
3) சுற்றுச்சூழல் மாசுபடாது
4) சைக்கிளோடுவதால் ஆரோக்கியம் மேம்படும்

🤣…. கனபேர் 2022 இல் அடிச்சு பிடிச்சு தமக்கும் பிள்ளைகளுக்கும் சைக்கிள் வாங்கி போட்டு, இப்ப அவை கிடந்து உக்குது என்ற ரீதியில் சொன்னார்கள்.

சைக்கிள் பாவனை வெகுவாக குறைந்து விட்டது போலத்தான் எனக்கும் தெரிந்தது.

கல்லுண்டாய், வல்லை, பொன்னாலை எதிர்காத்தில் சைக்கிள் உழக்கி போவதை இப்ப நினைத்தாலும் முதுகு நோவது போல் இருந்தாலும் - உடம்பு கொஞ்சமேனும் working condition இல் இருக்க அப்போ சைக்கிள் ஓடியது நிச்சயம் ஒரு காரணமே.

Edited by goshan_che

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.