Jump to content

யுத்தம் முடிவுக்கு பின் இருண்ட யுகங்களை பேசும் ஊழி திரைப்படம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் முடிவுக்கு பின் இருண்ட யுகங்களை பேசும் ஊழி திரைப்படம்

273086671.jpg

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான தமிழர்களின் வாழ்வின் இருண்ட யுகங்களை பற்றி பேசும் படமாக ஊழி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் , எதிர்வரும் 10ஆம் திகதி உலகளவில் அத்திரைப்படத்தை திரையிடவுள்ளதாகவும் படத்தில் வசனகர்த்தாவாகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றிய ஈழத்து கவிஞர் தீபசெல்வன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
ஈழத்தில் உருவாக்கப்பட்ட ஈழ திரைப்படமே ஊழி ஆகும். நாட்டில்  இனவழிப்பு ஒன்று செய்யப்பட்ட பின்னர், தாம் நாட்டினை ஒன்றாகியதாக ஆட்சியாளர்கள் 2009ஆம் ஆண்டு கூறிய பின்னர் , கிழக்கு மாகாணத்தில் தொடங்கும் கதையே ஊழி திரைப்படம். இந்த திரைப்படம் போருக்குப் பிந்தைய சூழலில் ஒரு சிறுவனின் வாழ்வு பற்றியும், 2009ஆம் ஆண்டிற்கு பின்னர் தமிழர்களின் இருண்ட யுகங்களை பற்றியும் பேசுகின்றது. இந்த திரைப்படத்தில் ஈழ கலைஞர்கள் , தென்னிந்திய கலைஞர்கள் மற்றும் தென்னிலங்கை கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.

திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி இலங்கையில், யாழ்ப்பாணம், வவுனியா , மட்டக்களப்பு , திருகோணமலை உள்ளிட்ட பல திரையரங்குகளில் திரையிடவுள்ளோம். அதேவேளை 10ஆம் திகதியே கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா போன்ற 11 நாடுகளில் 70 திரையரங்குகளில்  திரையிடவுள்ளோம் என தெரிவித்தார்.

அதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சட்டத்தரணி கே, சுகாஷ் கருத்து தெரிவிக்கையில், இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக என்னை முதலில் படக்குழுவினர் நாடிய போது , எனக்கு படத்தில் நடிப்பதில் ஈடுபாடு இருக்கவில்லை. பின்னர் இந்த படத்தின் இயக்குனரான ரஞ்சித் ஜோசப் இயக்கத்தில் வெளியான " சினம் கொள்" திரைப்படத்தை பார்த்த பின்னர் , அவரின் இயக்கத்தில் நடிப்பதில் எனக்கு தயக்கம் இருக்கவில்லை.  இந்த திரைப்படம் தமிழர் வரலாற்றில் இடம்பிடிக்க கூடிய கலைப்படைப்பாக இருக்கும். இதனை வெற்றியடைய வைக்க வேண்டும். இதொரு நீதி கோரிய எமது பயணத்தின் வெற்றியாக அமைய வேண்டும். இந்த படத்தில் காதல் இருக்கும் காமம் இருக்காது. தமிழர்கள் அனைவரும் இப்படத்திற்கு பெருவரவேற்பு அளித்து படத்தினை வெற்றியடைக்க வைக்கவேண்டும் என தெரிவித்தார்.

அதேவேளை படக்குழுவில் பணியாற்றிய அருணாசலம் சத்தியானந்தன் தெரிவிக்கையில், இந்த திரைப்படம் முற்று முழுதான ஈழ சினிமாவாக இருக்கும். 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் போர்க்கால காதல்களை , வீரங்களை, தியாகங்களை கொண்ட படத்தை உலகத்திற்கு தந்தது எமது ஈழ சினிமா இந்த நிலையில் போருக்கு பின்னர் அப்படியொரு கதை களத்தோட இந்த திரைப்படம்  வெளிவர இருக்கிறது. இதொரு காத்திரமான திரைப்படமாக வெளிவரும் என்பதிலும் நம்பிக்கை உண்டு. தரமான படங்களை வரவேற்கும் பாங்கு, தமிழ் மக்களுக்கு உண்டு ஈழ சினிமா புதிய பரிமாணத்தில் புதிய அடையாளங்களோடு பயணிக்கும் என நம்பிக்கை உண்டு என தெரிவித்தார்.

படத்தில் கதாநாயகனாக நடித்த ஆகாஷ் தெரிவிக்கையில், படப்பிடிப்புகள் சுமார் 25 நாட்கள் நடைபெற்றன. இந்த திரைப்படம் தமிழர் தாயக பிரதேசங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிறைய படங்கள் வெளிவருகிறது. தொழினுட்ப ரீதியில் எமது கலைஞர்கள் வளர்ந்து வருகிறார்கள். எமது கலைஞர்களை அடையாளம் காண இப்படியான படைப்புகள் உந்து சக்தியாக அமையும். எனவே இந்த திரைப்படத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என தெரிவித்தார்.

 

https://newuthayan.com/article/யுத்தம்_முடிவுக்கு_பின்_இருண்ட_யுகங்களை_பேசும்__ஊழி_திரைப்படம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தின் டிரெயிலர், பாடல்கள், காட்சிகள் ஏதாவது காணொளி பகிருங்கள், பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று சிட்னி மண்ணில் திரையரங்கில் பார்த்தேன்.  எம்மவர்களின் படைப்புகளை நாம்தான் ஆதரிக்க வேண்டும்.   அழகாக படம் எடுத்திருக்கிறார்கள். திரை அரங்கில் சென்று பாருங்கள். 

On 22/4/2024 at 09:50, நியாயம் said:

படத்தின் டிரெயிலர், பாடல்கள், காட்சிகள் ஏதாவது காணொளி பகிருங்கள், பார்ப்போம்.

 

  • Like 2
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கந்தப்பு said:

இன்று சிட்னி மண்ணில் திரையரங்கில் பார்த்தேன்.  எம்மவர்களின் படைப்புகளை நாம்தான் ஆதரிக்க வேண்டும்.   அழகாக படம் எடுத்திருக்கிறார்கள். திரை அரங்கில் சென்று பாருங்கள். 

உண்மை, ஆனால் எமது இளையோரிடமோ அல்லது எம்போன்றோரிடமோ கொண்டு சென்று சேர்த்தல் இலகுவானதல்ல. தமிழகக் கதாநாயகக் கவர்ச்சிச்  திரைப்பட நுகர்வுகளுள் அமிழ்ந்துவிட்ட சூழலில் இதுபோன்ற முயற்சிகளைத் தமிழ்ப்பரப்பிலே நிறுவனப்பட்ட அமைப்புகள் ஊடாக விழிப்புநிலையேற்படுத்துதல் தேவைப்படுகிறது. அதற்கு யாழிலும் புலத்திலுமாகப் பல அண்மைய எடுத்துக்காட்டுகள் உள்ளன.

இணைப்புக்கு நன்றி!
 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

“Oozhi” (ஊழி) is a poignant portrayal of the aftermath of the war in Srilanka, where promises of peace crumble in the face of enduring injustice, directed by Ranjith Joseph who previously made the well acclaimed film “Sinam Kol”

2009 ஆண்டுக்கு முன்னர் போரின் மத்தியிலும் வாழ்க்கை தரத்திலும், கலாச்சார மேன்மையிலும் முன்னுதாரணமாக இருந்த தமிழர் நிலம் இலங்கை அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் இருண்ட ஊழிக்காலத்துக்குள் மூழ்கிப்போகும் ஊழியே இது.

Shows at Auburn reading cinemas, Sydney ,Australia 
May 12th Sunday- 3.30pm
May 25th Saturday - 3.30pm
May 26th Sunday - 3.30pm

Online booking - https://www.eventboss.com/
Tickets - Jana 0401842780 Siva 0424 757 814 Naventhira 0435 039 160 Ganesh 0430 050 051

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கந்தப்பு said:

இன்று சிட்னி மண்ணில் திரையரங்கில் பார்த்தேன்.  எம்மவர்களின் படைப்புகளை நாம்தான் ஆதரிக்க வேண்டும்.   அழகாக படம் எடுத்திருக்கிறார்கள். திரை அரங்கில் சென்று பாருங்கள். 

எந்தெந்த நாட்டில் எப்பெப்ப திரையிடுகிறார்கள் என்ற விபரம் எப்படி அறிவது?

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

எந்தெந்த நாட்டில் எப்பெப்ப திரையிடுகிறார்கள் என்ற விபரம் எப்படி அறிவது?

image.jpeg

சினிமா இன்று தேக்கத்தில் இருக்கிறது என்பதை தொடர்ந்து அத்தகைய படங்களைப் பார்த்து வந்திருப்போர் அறிவர். இதன் அரசியல், பொருளியல், கலாச்சாரப் பரிமாணத்தை அதில் ஈடுபட்டிருப்போர்தான் அனுபவங்களுடன் பேசமுடியும்.
 
என்றாலும், அண்மைக்காலத்தில் குறிப்பிடத்தக்க இரு படங்கள் வந்திருக்கின்றன. மதிசுதாவின் 'வெந்து தணிந்தது காடு' மற்றும் ரஞ்ஜித் ஜோசப்பின் 'ஊழி' அப்படங்கள். 2009 மே மாதத்தின் இறுதிப் போர்காலத்தின் அனுபங்களை மதிசுதாவின் படம் பேச, ரஞ்ஜித் ஜோசப்பின் 'ஊழி' 2009குப் பின் துவங்கி இன்றுவரையிலுமான ஈழத்து வாழ்வின் இருண்ட நினைவுகளைப் பேசுகிறது.
 
ஈழத்தின் முதல் நான்லீனியிர் வெகுஜனப் படம் என 'ஊழி'யைக் குறிப்பிடலாம். ரஞ்ஜித்தின் முதல் படமான 'சினம்கொள்' மிகமிக நேரடியான கதைசொல்லல் கொண்ட படம். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான ஈழத்தில் 'நிலம், கல்வி, காதலுறவு' போன்ற பிரச்சினைகள் குறித்த மிகுந்த இருண்ட சித்திரங்கள் மூன்று சமாந்தரக் கதைகளாக படத்தில் விரிகிறது.
 
இருண்ட காலத்திலும் துளிர்விடும் 'நம்பிக்கை' என்பதை நான்காவது பிரச்சினையாக அல்லது கதையாக எடுத்துக் கொள்ளும் 'ஊழி' அதனிலும் இருண்மையே விரவியிருக்கிறது என்பதையே சுட்டுகிறது. துயர இசை படமெங்கும் ஒலிக்கும் ஊழி ஈழத்தின் இருண்ட சமகாலம் குறித்த முகாரி ராகம்.
சினிமாவைப் பிரச்சாரமாக அல்லாமல், கலையாக அணுகும் அக்கறையுள்ள ஒருவர் ரஞ்ஜித் ஜோசப் என்பதை ஊழி மெய்ப்பிக்கிறது. நேர்மறை எதிர்மறை சமநிலை அலசல் விமர்சனத்திற்கு இது தருணம் அல்ல. பலரும் படத்தைப் பார்த்தபின் அதனைச் செய்யலாம் எனக் கருதுகிறேன்.
 
✍️ யமுனா ராஜேந்திரன் Yamuna Rajendran
  • Like 1
  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊழி திரைப்பட இயக்குனரின் பேட்டியில் கூறப்படும் விடயங்களை யாராலும் மறுக்கமுடியாது என்றுதான் கூறவேண்டும்.. 

சரியான கேள்விகளும் அதற்கான இயக்குனரின் பதில்களும் இந்தப் படத்தினை பார்க்கவேண்டும் என்ற நினைப்பை ஏற்படுத்துகிறது. 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Due to public demand, “Oozhi (ஊழி) is showing again in Sydney on Thursday June 20th at 6.45pm.
Venue- Auburn Reading Cinemas

“Oozhi” (ஊழி) is a poignant portrayal of the aftermath of the war in Srilanka, where promises of peace crumble in the face of enduring injustice, directed by Ranjith Joseph who previously made the well acclaimed film “Sinam Kol”

2009 ஆண்டுக்கு முன்னர் போரின் மத்தியிலும் வாழ்க்கை தரத்திலும், கலாச்சார மேன்மையிலும் முன்னுதாரணமாக இருந்த தமிழர் நிலம் இலங்கை அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் இருண்ட ஊழிக்காலத்துக்குள் மூழ்கிப்போகும் ஊழியே இது.

Online Tickets - www.eventboss.com

Tickets (by phone) - Jana 0401842780 Siva 0424 757 814 Naventhira 0435 039 160 Ganesh 0430 050 051

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.