Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
26 APR, 2024 | 01:25 PM
image
 

கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.  

பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது.

sdf.gif

குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

fghfdg.gif

இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/182011

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, ஏராளன் said:

பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது.

என்னதான் கோபதாபம் இருந்தாலும்  விவசாய பயிர்களை அழிக்காதீர்கள். 🙏🏼
கோபமிருந்தால் சம்பந்தப்பட்டவருக்கு கன்னத்தில் இரண்டு அறை  அறைந்து விட்டு செல்லுங்கள்.
பலன் தரும் பயிர்கள் உங்களுக்கு என்ன பாவம் செய்தது? 😠

  • Like 1
  • Thanks 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.