Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ள சிவகங்கை

adminMay 2, 2024

காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக மையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவைகளை மீள ஆரம்பிக்கும் வகையில் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பித்து வைத்தார்.

எனினும், இந்த சேவையைத் தொடர்வதில் இயற்கையான தொழில்நுட்ப விடயங்கள் சில தடைகளாக அமைந்திருந்தன. இந்நிலையில் தற்போது  படகுசேவை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீளவும் தொடரவுள்ளது.

நாகப்பட்டினத்துக்கும், காங்கேசன் துறைக்கும் இடையிலான கப்பல் சேவைக்காக ‘சிவகங்கை’ எனும் கப்பல் பயன்படுத்தப்படவுள்ளது. 150 பயணிகள் பயணிப்பதற்கான வசதிகளை கொண்ட இந்த கப்பலில் பயணிப்பதற்கு இருவழி கட்டணமாக வரிகள் உள்ளடக்கப்பட்டு 34,200ரூபாவை (8400இந்திய ரூபா) அறவிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கப்பலில் பயணிக்கும் பயணியொருவர் 60 கிலோகிராம் எடையுடைய பொருட்களை எடுத்துச்செல்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. எவ்வாறாயும், பொதியொன்றின் எடை 20 கிலோகிராமுக்கு உட்பட்டதாக அமைய வேண்டியது வரையறுக்கப்பட்ட விடயமாக உள்ளது.

 இதேவேளை, கப்பலின் மேற்தளத்தில் கடற்பரப்பினை பார்த்து இரசித்துச் செல்லும் வகையில் பிரேமியர் ஆசன ஒதுக்கீட்டுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இது விசேட அதிதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மையப்படுத்தியதாகும். அதற்காக விசேட கட்டணமும் அறவிடப்படவுள்ளதோடு பயணி ஒருவரின் எடையிலும் மாற்றங்கள் காணப்படும்.

மேலும், இந்தப் படகுசேவையானது காலம் தாழ்த்தப்பட்டமைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மையில் நாகப்பட்டினத் துறைமுகத்தினைப் பயன்படுத்துவதற்கான கட்டணத்தொகையை பயணிகளிடத்திலிருந்து அறவிடுவதற்கு தமிழக அரசாங்கம் முன்மொழிந்திருந்தது.

எனினும் அத்தொகையை பயணிகளின் பயணத்தொகையுடன் இணைக்கின்றபோது அது மேலும் அதிகரிப்பதற்கான நிலைமைகளே காணப்பட்டன.

இதனால் குறித்த விடயம் இந்திய மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அவதானிப்புக்களுக்கு அமைவாக நாகைப்பட்டின துறைமுகப் பயன்பாட்டுக் கட்டணத்தை மத்திய அரசாங்கம் மானியமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் மாதந்தோறும் 72இலட்சம் ரூபா துறைமுகப் பயன்பாட்டுக்கட்டணமாக மத்திய அரசாங்கம் 12மாதங்களுக்கு தமிழக அரசாங்கத்துக்கு வழங்கவுள்ளது. அந்த வகையில் மத்திய அரசாங்கத்தின் மேற்படி செயற்பாட்டின் காரணத்தினாலேயே தற்போது கப்பல்சேவை சாத்தியமாகியுள்ளது. அதற்கு மத்திய அரசாங்கத்துக்கு விசேடமாக எமது நிறுவனம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது என்றார்.
 

https://globaltamilnews.net/2024/202323/

  • கருத்துக்கள உறவுகள்

கங்கை காங்கேசந்துறை வந்தாலும், சிவகங்கை வாறது சந்தேகம்தான்🤣

8 hours ago, கிருபன் said:

இது விசேட அதிதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மையப்படுத்தியதாகும். அதற்காக விசேட கட்டணமும் அறவிடப்படவுள்ளதோடு பயணி ஒருவரின் எடையிலும் மாற்றங்கள் காணப்படும்.

உவயண்ட கப்பலில் போகவேணும் எண்டால் டயட்டில் இருக்க வேணும் போல கிடக்கு🤣

  • கருத்துக்கள உறவுகள்

நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது - இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை

05 MAY, 2024 | 04:25 PM
image
 

இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை மே 13ஆம் திகதி ஆரம்பமாகலாம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது :

இந்த கப்பல் சேவையை தனியார் நிறுவனமே இயக்கவுள்ளது. இந்தியாவின் ஷிப்பிங் கோர்ப்பரேசனும் இலங்கை அரசாங்கமும் இணைந்து இந்த நிறுவனத்தை தெரிவுசெய்துள்ளன.

இந்த சேவையை மலிவானதாகவும் பொதுமக்களுக்கு ஏற்ற விதத்திலும் வழங்குவதற்காக ஒரு வருடகாலத்துக்கு மாதத்துக்கு 25 மில்லியன் ரூபாய்க்கு மேல் பொருந்தும் இயக்கச் செலவை இந்திய அரசாங்கம் ஏற்க முடிவு செய்துள்ளது.

பயணிகள் கப்பல்கள் மூலம் இலங்கையிலிருந்து வெளியேறும் பயணிகளிடம் தற்போது அறவிடப்படும் வரியை குறைப்பதற்கு இலங்கை அரசாஙகம் தீர்மானித்துள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் 63.35 மில்லியன் டொலர்களை உதவித்தொகையாக வழங்க தீர்மானித்துள்ளது.

முன்னர் இந்த நிதியை கடனாக வழங்கவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் முன்னேற்றம் செழிப்புக்கான அதன் பயணத்துக்கான இந்தியாவின் வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் விதத்திலேயே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

ஜூலை 2023இல் இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது கூட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார பங்காளித்துவத்துக்கான தொலைநோக்கு ஆவணத்தின் முக்கிய அங்கமாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்சார் இணைப்பை வலுப்படுத்துதல் முக்கிய அம்சமாக காணப்படுகின்றது. 

கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவது இந்திய அரசின் மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகளை உறுதிப்படுத்துவதாகும்.

ஒக்டோபர் 2023இல் இந்த சேவையை அறிமுகப்படுத்தியபோது பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது கருத்துக்களில் இணைப்பு என்பது இரண்டு நகரங்களை நெருக்கமாகக் கொண்டுவருவது மட்டுமல்ல, நாடுகளையும் அதன் மக்களையும் நெருக்கமாகக் கொண்டுவருவதாகும். 2023 செப்டெம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள பு20 உச்சிமாநாட்டின்போது ஆரம்பிக்கப்பட்ட இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் மூலம் இலங்கை மக்கள் பயனடைவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/182742

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை ஒத்திவைப்பு

adminMay 12, 2024
 

நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை தவிர்க்க முடியாத சில சட்டரீதியான அனுமதிகள் தாமதமானமையால் கப்பல் சேவை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கப்பல் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

காங்கேசன் துறைக்கும் தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான கப்பல் சேவை நாளைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாக இருந்தது.இந்நிலையில் தவிர்க்க முடியாத சில சட்டரீதியான அனுமதிகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் கப்பலின் தாமதமான வருகையாலும் நாளைய தினம் கப்பல் சேவை இடம்பெறாது எனவும், 17 ஆம் திகதி முதலே சேவைகள் ஆரம்பமாகும்.

நாளைய தினம் கப்பல் பயணத்திற்கு பதிவு செய்த பயணிகள் 17ஆம் திகதிக்கு பின்னர் அவர்கள் விரும்பிய திகதிக்கு மாற்றம் செய்து பயணிக்க முடியும். அல்லது கப்பல் பயணத்திற்கு செலுத்திய கட்டணத்தை மீள பெறமுடியும். என கப்பல் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

 

https://globaltamilnews.net/2024/202734/

  • கருத்துக்கள உறவுகள்

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை நடைபெறாது : கட்டணத்தை மீளப்பெறமுடியும் !

Published By: DIGITAL DESK 3

16 MAY, 2024 | 03:56 PM
image
 

நாகப்பட்டினம் -  காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கப்பல் சேவை கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் 19ஆம் திகதிக்கு கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் சேவையை ஆரம்பிக்க சில சட்டரீதியான அனுமதிகள் உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்ட காரணத்தால் பிற்போடப்பட்டது.

அதனால்,  மே19 அல்லது அதற்குப் பின்னர் தாம் விரும்பிய திகதிகளில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லது செலுத்திய கட்டணத்தினை முழுமையாக மீளப்பெற விரும்பினால், customer.care@sailindsri.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும். செலுத்திய கட்டணத்தினை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/183699

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை நடைபெறாது : கட்டணத்தை மீளப்பெறமுடியும் !

இந்தியா இலவசமாக என்றாலும் கப்பல் விட எண்ணுகிறது.முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்டு யாரோ மே 19 ஆரம்பிக்குமாறு வைக்கிறார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை – இந்திய கப்பல் சேவை காலவரையின்றி ஒத்திவைப்பு

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக குறித்த கப்பல் சேவையை கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், சில சட்டரீதியான அனுமதிகள் உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டதுடன் மே மாதம் 19 வரையில் அந்த செயற்பாடு பிற்போடப்பட்டநிலையில் தற்போது மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.

பழைய கப்பல் என்பதால் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை சரி செய்தால் மட்டுமே உரிய அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவம் அறிவித்துள்ளது.

செலுத்திய கட்டணத்தினை முழுமையாக மீளப்பெற விரும்பினால், customer.care@sailindsri.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டு செலுத்திய கட்டணத்தினை மீளப்பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/301995

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாணம் ( Jaffna) காங்கேசன்துறை மற்றும் தமிழகத்தின் (Tamil Nadu) நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் - நாகை கப்பல் சேவையானது அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிவகங்கை கப்பல்

கடந்த வருடம் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை பல முறை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

யாழ். மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம் | Srilanka Jaffna To Chennai Ship Service Start

இந்நிலையில், அடுத்த வாரம் முதல் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தமானில் இருந்து ‘சிவகங்கை கப்பல்’ நாளை இலங்கைக்கு சோதனை பயணமாக வருகைத் தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

356023803.jpg

இந்தியாவின் நாகை – இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் சேவை அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.

கடந்த வருடம் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை பல முறை இடைநிறுத்தப்பட்ட நிலையில், அடுத்த வாரம் முதல் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பிக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தமானில் இருந்து நாக்கை வந்த ‘சிவகங்கை கப்பல்’ நாளை மறுநாள் இலங்கைக்கு சோதனை பயணமாக வருகைத் தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன
 

 

https://newuthayan.com/article/காங்கேசன்துறை_–_நாகப்பட்டினம்_கப்பல்_சேவை_மீண்டும்_ஆரம்பம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இருந்து வெள்ளோட்டத்திற்காக யாழ்ப்பாணம் வந்த பயணிகள் கப்பல்!

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பலானது எதிர்வரும் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடவுள்ளது.

அந்தவகையில், இந்தியா நாகப்பட்டினத்தில் இருந்து சிவகங்கை பயணிகள் கப்பலானது வெள்ளோட்டத்திற்காக இன்றையதினம்(10) 12 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.

பயணிகள் கப்பல் சேவை

கடந்த வருடம் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை பல முறை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து வெள்ளோட்டத்திற்காக யாழ்ப்பாணம் வந்த பயணிகள் கப்பல்! | Passenger Ship Came To Jaffna From India Sailing

இந்நிலையில்,  எதிர்வரும் 15ஆம் திகதி கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

https://tamilwin.com/article/passenger-ship-came-to-jaffna-from-india-sailing-1723284876

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இந்தியாவில் இருந்து வெள்ளோட்டத்திற்காக யாழ்ப்பாணம் வந்த பயணிகள் கப்பல்

இப்ப இரண்டு வருடமாக வெள்ளோட்டத்துடனே நிற்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை; பயணக் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பயணக்கட்டணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக சேவையில் இந்த கப்பல் சேவை ஈடுபடவுள்ளது.

சிவகங்கை கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பயணி ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. வணிக வகுப்பில் 27 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பயணிக்க ஒருவருக்கு 7,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த கப்பலில் பயணிகளுக்கு துரித உணவுகளை கட்டணத்துடன் பெற்றுக்கொள்ள உணவக வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவர் தம்முடன் 60 கிலோ வரையான பொதியை எடுத்துச் செல்லவும், 5 கிலோ வரை கைப்பையில் எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சோதனை ஓட்டம் முடிந்த பின்னர் பயணிகள் அனுமதி சீட்டுக்களை முன்பதிவுகளை செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/307689

  • கருத்துக்கள உறவுகள்

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை படகு சேவை; ஒன்லைன் பதிவுகள் ஆரம்பம்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், கப்பல் சேவைக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தற்போது முடியும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு இயக்கப்படும் இந்த பயணிகள் கப்பல் சேவையில் பயணிக்க ஒன்லைன் மூலம் இருக்கை முன்பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/307778

Passengers can book tickets on the passenger ferry service from midnight today. Visit http://sailindsri.com

  • கருத்துக்கள உறவுகள்

நாகபட்டினம் - காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து நாளை முதல் மீள ஆரம்பம்

Published By: VISHNU   15 AUG, 2024 | 01:29 AM

image
 

நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான கப்பல் போக்குவரத்து சேவை நாளை வெள்ளிக்கிழமை (16) முதல் ஆரம்பமாகவுள்ளது.

தமிழகத்தின் நாகபட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கான கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், புயல் மற்றும் வட, கிழக்கு பருவமழையைக் காரணங்காட்டி, அச்சேவை ஒக்டோபர் 23 ஆம் திகதி திடீரென இடைநிறுத்தப்பட்டது.

இக்கப்பல் போக்குவரத்து வெகுவிரைவில் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 10 ஆம் திகதி 'சிவகங்கை' பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதற்கமைய அன்றைய தினம் காலை 8 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட 'சிவகங்கை' பயணிகள் கப்பல், அன்று நண்பகல் 12.00 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.

இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், நாகபட்டினம் முதல் காங்கேசன்துறைக்கான கப்பல் போக்குவரத்து சேவை நாளைய தினத்திலிருந்து மீள ஆரம்பிக்கப்படவிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/191118

  • கருத்துக்கள உறவுகள்

பயணிகள் சேவை கப்பலானது சற்றுமுன் நாகையிலிருந்து காங்கேசன் துறையை வந்தடைந்தது!

Published By: VISHNU   16 AUG, 2024 | 07:24 PM

image

நாகபட்டினத்திலிருந்து காங்கேசன் துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது.

IMG-20240816-WA0290.jpg

அந்தவகையில் இந்தியாவின் - நாகபட்டினத்திலிருந்து நண்பகல் 12 மணியளவில் பயணத்தை ஆரம்பித்த பயணிகள் கப்பல் 5 மணியளவில் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையை வந்தடைந்தது.

IMG-20240816-WA0289.jpg

இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் 23 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது.

IMG-20240816-WA0288.jpg

கடந்த 10 ஆம் திகதி சிவகங்கை பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் அன்று காலை 8 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட சிவகங்கை பயணிகள் கப்பல், நண்பகல் 12 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.

IMG-20240816-WA0287.jpg

இந்நிலையில் இன்று மீண்டும் பயணிகள் கப்பல் சேவையானது உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

IMG-20240816-WA0286.jpg

IMG-20240816-WA0284.jpg

IMG-20240816-WA0283.jpg

IMG-20240816-WA0281.jpg

IMG-20240816-WA0237_1_.jpg

IMG-20240816-WA0291.jpg

https://www.virakesari.lk/article/191260

  • கருத்துக்கள உறவுகள்

Lower deck ₹5000 | Top deck ₹7500 | Nagai - Sri Lanka ship service started | Passengers happy

 

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறையிலிருந்து நாகபட்டினம் நோக்கி புறப்பட்ட பயணிகள் கப்பல்

காங்கேசன்துறை- நாகபட்டினம் பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று ஆரம்பமாகியது.

இன்று காலை 10.45 மணிக்கு காங்கேசந்துறை துறைமுகத்தில் இருந்து சிவகங்கை கப்பல் 25 பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்தது.

கப்பலில் செல்லும் பயணிகளுக்கு கப்பல் நிறுவனத் தலைவரால் வரவேற்பு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் இந்து சிறி கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் நிரஞ்சன் நந்தகோபன், காங்கேசன்துறை துறைமுகத்தின் அதிகாரிகள், கடற்படையினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

https://thinakkural.lk/article/308019

  • கருத்துக்கள உறவுகள்

images-3-2.jpg?resize=301,167

நாகப்பட்டினம் -காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பில் புதிய அறிவிப்பு!

நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்குமான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் இந்த நடைமுறை காணப்படும் எனவும், பயணிகள் வருகை அதிகரிப்பின் அடிப்படையில், எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் நாளாந்தம் கப்பல் சேவையை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது

இதற்கமைய, வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று தினங்களில் மாத்திரமே நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்குமான பயணிகள் கப்பல் சேவை முன்னெடுக்கப்படும்.

https://athavannews.com/2024/1396486

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பயணம் செய்ய எங்கே முற்பதிவு செய்யலாம் எனத் தெரியவில்லை!


இந்தியாவில் தொடர்பு கொள்ள தொலைபேசி இலக்கங்கள் 

Speak To Us

Call 24x7

Dial our number, and speak to us directly. Your journey with Sail IndSri matters to us.

India / International+91 744 886 3535 (whatsapp)

 

Write To Us

Reply within 24hrs

Drop us a line, and our dedicated team will get back to you in 24 hours.

All Queries   bookings@sailindsri.com
 

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நாகபட்டினத்திற்கு செல்லவிருந்த படகு திடீர் ரத்து

நாக பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையில் குழப்பகரமான நிலை ஏற்பட்டதுடன், பயணிகள் பெரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்தின் நாகபட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில்  நேற்று காலை நாகபட்டினத்தில் இருந்து புறப்பட்டு குறித்த கப்பல் காங்கேசன்துறையை வந்தடைந்தது.

இவ்வாறு வந்த கப்பலானது காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினத்திற்கான பயணத்தை ஆரம்பிப்பதற்கு தயாரான நிலையில் பயணிகளும் கப்பலில் ஏறி பயணத்திற்கு தயாராக இருந்தனர்.

இருப்பினும் கப்பலில் போதிய அளவு எரிபொருள் இன்மை காரணமாக குறித்த பயணமானது இடைநிறுத்தப்பட்டதாக கப்பலின் கப்டன் அறிவித்தார்.

இதனையடுத்து பயணத்திற்கு தயாராக இருந்த பயணிகள் மத்தியில் பெரும் குழப்ப நிலை உருவாகியது.

இந்நிலையில் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

https://thinakkural.lk/article/309042

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய - இலங்கை பயணிகள் கப்பல் சேவையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தமிழ் நாட்டின் நாகபட்டிணத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு நடத்தப்படும் பயணிகள் கப்பல் சேவை மேலும் ஒரு நாளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆகஸ்ட் 16 ஆம் திகதி ஆரம்பித்த, இந்த சிவகங்கை கப்பல் சேவை நாளாந்தம் நடைபெற்று வந்த நிலையில், குறைந்த பயணிகளின் வருகை காரணமாக செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் கப்பல் போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்பட்டு கிரமமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சனிக்கிழமைகளிலும் கப்பலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகளிடம் இருந்து விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

பயணிகளின் கோரிக்கையை ஏற்று செப்டெம்பர் 21 முதல் சனிக்கிழமைகளிலும் சிவகங்கை பயணிகள் கப்பல் இயக்கப்படும் என்று கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி வாரத்தில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் கப்பல் இயக்கப்படும். பயணிகள் பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

https://thinakkural.lk/article/309143

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.